November 14, 2007

தொ(ல்)லைபேசி கச்சேரி - பகுதி 2

பகுதி - 1

ஃபோனை எடுத்த நவீன், யாரென்றே சொல்லாமால் வம்பிழுத்த சுகனிடமும், வந்தனாவிடமும் கடலை வறுத்தான். நவீனுடன் ஃபோனில் பேசுமாறு சைகை காட்டி வற்புறுத்தினாள் சுகன், தன் கோபப் பார்வையிலேயே ரேகா தன் மறுப்பை தெரிவித்தாள்.

இப்படியாக அவ்வப்போது விஜியின் வீட்டிலிருந்தும், சுகனின் வீட்டிலிருந்தும் இந்த ஃபோன் கச்சேரி தொடர்ந்தது.
"நவீன் ஃபோன்ல எவ்வளவு நல்லா பேசுறான் தெரியுமா? அவன் கிட்ட பேசினா நேரம் போறதே தெரில, சச் அ ஸ்வீட் பேர்ஸன் ஹீ இஸ்" என்று அங்கலாய்த்தாள் வந்தனா.


"ஓய் அந்த ஃபோன் கடலை மன்னன் பத்தி என்கிட்ட பேசாதே, நீங்க யாருன்னே தெரியாம இப்படி மணிகணக்கா பேசுறான், அவனுக்கு நீங்க யாராயிருந்த என்ன, ஒரு பொண்ணு கிட்ட பேசினா போதும்னு அல்பத்தனமா இருக்கிறான்" என்று நவீனை மட்டம் தட்டிய ரேகாவை சுகனும், வந்தனாவும் எதிர்த்து தர்கித்து அவளை ஒரு வழி பண்ணிவிட்டனர்.

ஸடடி ஹாலிடேஸ் முடிந்து செமஸ்டர் எக்ஸாம் வந்துவிட்டதால் இந்த ஃபோன் கச்சேரி தற்காலிகமாக குறைந்தது. எக்ஸாம் முடிந்ததும் ரேகா தன் குடும்பத்துடன் திருநெல்வேலிக்கு தன் உறவினர் திருமணத்திற்கு சென்றாள். சென்னையிலிருந்து நெல்லைக்கு புறப்படும் அன்று ரேகா விஜியிடம் லைப்ரரி புக்ஸ் கொடுக்க வந்தாள் அவள் வீட்டிற்கு, விஜியின் அப்பார்ட்மெண்ட் ப்ளாக்கிற்கு எதிரில் விளையாடிக்கொண்டிருந்த சிறுவன் ஒருவன் திடீரென ரேகாவின் ஸ்கூட்டியின் முன் ஓடிவர, ரேகா சடன் ப்ரேக் போடும்போது நிலைதடுமாறி கீழே சாய்ந்தாள் . கை முட்டியில் சிராய்ப்பு ஏற்பட்டு இரத்தம் கசிந்தது.
காய்காரனிடம் காய் வாங்கிக் கொண்டிருந்த நவீனின் அம்மா, விரைந்து வந்து, அவளுக்கு 'பேண்ட் ஏய்ட்' போட்டு உதவினார்." பார்த்து போம்மா" என்று பாசம் காட்டினார்.

ரேகா நெல்லைக்கு சென்றிருந்த ஒரு வாரத்தில் ஃபோன் கச்சேரி மீண்டும் கலை கட்டியது, விஜியும் அந்த கலாட்டாவில் கலந்துவிட்டிருந்தாள்.

சென்னைக்கு திரும்பிய ரேகா, தன் ஃபரண்ட்ஸ்காக வாங்கி வந்த 'திருநெல்வேலி அல்வா' கொடுப்பதற்காக விஜியின் வீட்டிற்கு சென்றாள். மாடி படியில் ஏற எத்தனிக்கும் போது தான் நவீனின் அம்மாவை ஏதேச்சையாக சந்தித்தாள். தன் கையிலிருந்த அல்வா பார்சலில் ஒன்றை நவீன் அம்மாவிடம் கொடுத்தாள் புன்னகையுடன். நவீனின் அம்மாவும் ரேகாவின் கையில் அடிப்பட்டது சரியாகிவிட்டதா என்று நலன் விசாரித்தாள்.
நவீன் அம்மாவிற்கு 'அல்வா' கொடுத்ததை தன் ஃபரண்ட்ஸிடம் சொன்னால் தன்னை ஓட்டி எடுத்துவிடுவார்கள், அதனால் அவர்களிடம் சொல்ல கூடாது எனற தீர்மானித்துடன் விஜியின் அபார்ட்மெண்டுக்கு சென்றாள்.

திருநெல்வேலி அல்வா அடிபிடியில் காலியானது. ரேகா ஊரில்லாத ஒரு வாரத்தில் தங்கள் ஃபோன் கச்சேரி எப்படி கலைகட்டியது என விவரித்தனர் மூவரும்.
இன்று ஃபோனில் நீ தான் பேசவேண்டும் என்றும் வற்புறுத்தினர் ரேகாவை,
நவீனிடம் பேச உனக்கு பயம் சும்மா இண்ரெஸ்ட் இல்லாத மாதிரி நடிக்கிற, என்று ரேகாவை வெறுப்பேத்தி, சவால் விட வைத்து ஃபோனை டயலும் செய்து ரேகாவிடம் ரீசிவரை கொடுத்தாள் சுகன்.
'சரி நாம பேசிடலாம், அவனுக்கு தான் நாம யாருன்னே தெரியாதே, எந்த பொண்ணு குரல் கேட்டாலும் பையன் பேசுவான், ஒரு 2 நிமிஷம் பேசிட்டா இவங்க அலம்பல்ல இருந்து தப்பிச்சுக்கலாம்' என்று நினைத்தவளாய்.."ஹலோ" என்றாள் ரேகா ஃபோனில்.

நவீன்: ஹலோ!

ரேகா: மே ஐ ஸ்பீக் டூ நவீன்....?

நவீன்:ஸ்பீக்கிங்

ரேகா: எப் ப டி............இருக்கிறீங்க?

நவீன்: நான் நல்லா இருக்கிறேன், நீ எப்படி இருக்கிற, கைல அடிப்பட்டது சரியா போச்சா?ரேகா: நா....ன் யாரு.....ன்னு உங்க....ளுக்கு.........


நவீன்:ஹே! உங்க ஊரு அல்வா சூப்பர்! செம டேஸ்டாயிருக்கு, நீ கொடுத்த அல்வா சாப்பிடுக்கிட்டே தான் உன் கிட்ட பேசுறேன்.

ரேகா:........................[அதிர்ச்சியில் உரைந்து போனாள்]

நவீன்: என்ன சவுண்டே காணோம்.........
ஏன் நீ என்கிட்ட இவ்வளவு நாள் பேசல......உன் ஃபரண்ட்ஸ் எல்லாம் பேசினாங்க, இப்போதான் என்கிட்ட பேசனும்னு தோனிச்சா? [ கொஞ்சலாக கேட்டான்!]


ரேகா: நான்...........நாங்க.......யாருன்னு தெரியுமா??


நவீன்:ஓ! நல்லாத்தெரியுமே!

ரேகா: எப்.......ப.........டி??


நவீன்:எங்க வீட்டுல 'காலர் ஐடி' இருக்கு ஃபோன்ல, ஸோ விஜி வீட்டு நம்பர் பார்த்து கண்டுபிடிச்சேன்.

ரேகா: அப்போ ஏன் தெரிஞ்ச மாதிரி இவ்வளவு நாள் காட்டிக்கல.......

நவீன்: எதேச்சையாக என்னை அபார்ட்மெண்ட் வெளியில பார்த்தா , கொஞ்சம் கூட உங்க ஃபோன் கச்சேரிய வெளிக்காட்டிக்காம ஆக்ட் விட்டாங்க உன் ஃபரெண்ட்ஸ், ஸோ நானும் அப்படியே மெயின்டேன் பண்ணிட்டேன்!!


ரேகா:இப்போ மட்டும் ஏன் காமிச்சுக்கிட்டீங்க தெரிஞ்ச மாதிரி........அதுவும் என் குரல் எப்படி கண்டு பிடிச்சீங்க?

நவீன்: மனசுக்கு பிடிச்சவங்க குரல் எப்படி தெரியாம போகும்?? அதுவும் நீ எப்போ கச்சேரியில கலந்துக்குவன்னு வெயிட் பண்ணிட்டு இருந்தேன்!!!!

ரேகா: ஹலோ இது ரொம்ப ஓவர்...............


இப்படியாக ரேகா, நவீன் ஃபோன் உரையாடல் நீண்டது, வளர்ந்தது. இருவருக்கும் ஒருவரை ஒருவர் பிடித்திருந்தாலும், மனம் விரும்பினாலும், அதை வெளிப்படுத்த இருவருமே தயங்கினர்...

நவீன் US க்கு திரும்பும் நாளும் வந்தது. அவன் புறப்படும் இரண்டு நாட்களுக்கு முன் ஃபோனில்,


ரேகா: ஹோய் என்ன மூட்டை முடிச்செல்லாம் பேக் பண்ணியாச்சா?

நவீன்: ஆமா ரேகா,ஒரளவுக்கு பேக்கிங் முடிஞ்சது.

ரேகா: அங்க போய்ட்டு, அம்மா அழுதாங்க ! ஆத்தா அழுதாங்கன்னு உடனே இந்தியாக்கு ஓடி வந்துடாதீங்க.

நவீன்: சரி

ரேகா: US போய் சேர்ந்ததும் எனக்கு ஒழுங்கு மரியாதையா இ-மெயில் பண்ணுங்க.

நவீன்:ஹும் சரி.

ரேகா: இனிமே என்னோட ஃபோன் தொல்லை இல்லாம ஜாலியா இருக்கலாம்னு மட்டும் கணவு காணாதீங்க..........ISD கால் போட்டும் கச்சேரி வைப்போம்ல நாங்க!


நவீன்: ஹும்

ரேகா: என்ன ஹும்........இ-மெயில்ல உங்க ஃபோன் நம்பர் எழுதலீனா நான் நேரா உங்க அம்மாகிட்டவே கேட்டிடுவேன் உங்க நம்பரை, ஜாக்கிரதை.


நவீன்: நான் கண்டிப்பா நம்பர் அனுப்புறேன்.
ரேகா: நவீன்.......

நவீன்: ஹும்


ரேகா: நவீன்.......


நவீன்: என்ன சொல்லு.....


ரேகா:எப்போ.........திரும்ப........இந்தியாவுக்கு வருவீங்க?நவீன்: இந்தியாக்கு திரும்ப வந்திடாதேன்னு சொன்ன, அப்புறம் என்ன இப்போ எப்ப வருவீங்கன்னு கேள்வி?ரேகா: இப்போ நான் சீரியஸா கேட்குறேன் நவீன், எப்போ திரும்பி வருவீங்க


நவீன்: கல்யாணத்துக்கு


ரேகா: எப்....போ கல்யாணம்?


நவீன்: அது நீ தான் சொல்லனும்


ரேகா:............


நவீன்: என்ன ஸலைண்ட் ஆகிட்ட.......எப்ப வைச்சுக்கலாம் நம்ம கல்யாணத்தை?


ரேகா:நி...ஜம்......மாவா சொல்றீங்க?


நவீன்:அதுல என்ன டவுட் உனக்கு, இந்த ஃபைனல் செமஸ்டர் படிச்சு முடி, நான் இன்னும் 6 மாசத்துல திரும்பி வரேன்...........அப்போ வைச்சுக்கலாம் நம்ம கல்யாண கச்சேரி.


ரேகா:ச.........ரி...........


வெட்கத்தில் முகம் சிவக்க, பூரிப்பில் நா தழு தழுக்க, தன் சம்மதத்தை தெரிவித்தாள் ரேகா!

ஃபோன் கச்சேரி....
நட்பாக வளர்ந்து,
காதலாக மலர்ந்து
கல்யாணத்தில் கனிந்தது!![முற்றும்]

43 comments:

said...

//ரேகா: இப்போ நான் சீரியஸா கேட்குறேன் நவீன், எப்போ திரும்பி வருவீங்க

நவீன்: கல்யாணத்துக்கு

ரேகா: எப்....போ கல்யாணம்?

நவீன்: அது நீ தான் சொல்லனும் //

திவ்யா சூப்பாரான முடிவு !!!
டையலாக்ல பின்னி எடுக்கறீங்க!!1

ரசிச்சேன் !! :)))

said...

ம்ம்ம்.

கல்யாணத்துக்கு வாழ்த்துக்கள் ரேகா.

said...

//
J K said...
ம்ம்ம்.

கல்யாணத்துக்கு வாழ்த்துக்கள் ரேகா.
//
@J K
பக்காவா பாயிண்ட் புடிச்சிட்டீங்க வாழ்த்துக்கள் ரேகா

said...

//
நவீன் அம்மாவிற்கு 'அல்வா' கொடுத்ததை தன் ஃபரண்ட்ஸிடம் சொன்னால் தன்னை ஓட்டி எடுத்துவிடுவார்கள்
//
சாதாரணமா பசங்களுக்குதானே பொண்ணுங்க 'அல்வா' குடுப்பாங்க இப்ப அவங்க பேமிலிக்கே குடுக்கறாங்களோ??

said...

//
எங்க வீட்டுல 'காலர் ஐடி' இருக்கு ஃபோன்ல, ஸோ விஜி வீட்டு நம்பர் பார்த்து கண்டுபிடிச்சேன்.
//
ச்ச செம டெக்னாலஜிங்க இது எப்ப இந்தியாக்கு வந்திச்சு?!?!

//
இனிமே என்னோட ஃபோன் தொல்லை இல்லாம ஜாலியா இருக்கலாம்னு மட்டும் கணவு காணாதீங்க..........ISD கால் போட்டும் கச்சேரி வைப்போம்ல நாங்க!
//
மொதல்ல மிஸ்ட் கால் குடுக்காம லோக்கல் கால் பன்ன சொல்லுங்க அப்புறம் ஐஎஸ்டி எல்லாம் பன்னட்டும் :-))))

//
ஃபோன் கச்சேரி....
நட்பாக வளர்ந்து,
காதலாக மலர்ந்து
கல்யாணத்தில் கணிந்தது!!
//
:-)))))

Anonymous said...

super ending :P
nalla vellai neega yaarume kolai pannama rendu peraiyum serthu vaichuthinga.big salute to you :D

said...

"நவீன்:அதுல என்ன டவுட் உனக்கு, இந்த ஃபைனல் செமஸ்டர் படிச்சு முடி, நான் இன்னும் 6 மாசத்துல திரும்பி வரேன்...........அப்போ வைச்சுக்கலாம் நம்ம கல்யாண கச்சேரி. "

ம்ம்ம் காலம் ரொம்ப கெட்டு போச்சு எல்லாம் படிக்கும் பொழுதே லவ் செய்ய ஆரம்பிச்சுடுதுங்க:(

ஆண்டவா நீதான் இந்த புள்ளைங்கள காப்பாத்தனும்.

said...

// ஃபோன் கச்சேரி....
நட்பாக வளர்ந்து,
காதலாக மலர்ந்து
கல்யாணத்தில் கணிந்தது//
சுபம்..
ஏன் இந்த அவசர முடிவு.. இன்னும் கலாட்டாவ கொஞ்சம் பதிவு தொடர்ந்திருக்கலாமே...நேரமில்லையா?..
ஆரம்பிச்ச வேகத்துலயே.. முடிஞ்சிருச்சே.. கலாட்டா... நல்லாயிருந்தது..

said...

// "ஓய் அந்த ஃபோன் கடலை மன்னன் பத்தி என்கிட்ட பேசாதே, நீங்க யாருன்னே தெரியாம இப்படி மணிகனக்கா பேசுறான், அவனுக்கு நீங்க யாராயிருந்த என்ன, ஒரு பொண்ணு கிட்ட பேசினா போதும்னு அல்பத்தனமா இருக்கிறான்" என்று நவீனை மட்டம் தட்டிய ரேகாவை//
இப்பிடி சொல்றவங்களைத்தான் மொதல்ல கவனிக்கனும்..ஏதோ மேட்டர் இருக்குன்னு.... ஹிஹி...

said...

adada! nalla happy ending:) i like it!

said...

short n sweet !!!!

பார்தேன்!!!
படித்தேன்!!!
ரசிதேன் !!!

said...

\\ஜொள்ளுப்பாண்டி said...
//ரேகா: இப்போ நான் சீரியஸா கேட்குறேன் நவீன், எப்போ திரும்பி வருவீங்க

நவீன்: கல்யாணத்துக்கு

ரேகா: எப்....போ கல்யாணம்?

நவீன்: அது நீ தான் சொல்லனும் //

திவ்யா சூப்பாரான முடிவு !!!
டையலாக்ல பின்னி எடுக்கறீங்க!!1

ரசிச்சேன் !! :)))\\


ஹாய் ஜொள்ளு, டயலாக்ஸ் பாராட்டினதிற்கு நன்றி!

said...

\\J K said...
ம்ம்ம்.

கல்யாணத்துக்கு வாழ்த்துக்கள் ரேகா\\

ஹாய் JK!
ரேகா விற்கு உங்கள் வாழ்த்துக்களை தெரிவித்துவிடுகிறேன்!!

said...

\\மங்களூர் சிவா said...
//
J K said...
ம்ம்ம்.

கல்யாணத்துக்கு வாழ்த்துக்கள் ரேகா.
//
@J K
பக்காவா பாயிண்ட் புடிச்சிட்டீங்க வாழ்த்துக்கள் ரேகா\\

சிவா, உங்கள் வாழ்த்துக்களும் கண்டிப்பா ரேகாவை போய் சேரும்!!

said...

\\மங்களூர் சிவா said...
//
நவீன் அம்மாவிற்கு 'அல்வா' கொடுத்ததை தன் ஃபரண்ட்ஸிடம் சொன்னால் தன்னை ஓட்டி எடுத்துவிடுவார்கள்
//
சாதாரணமா பசங்களுக்குதானே பொண்ணுங்க 'அல்வா' குடுப்பாங்க இப்ப அவங்க பேமிலிக்கே குடுக்கறாங்களோ??\\

ஹலோ சிவா, பசங்க பொண்ணுங்களுக்கு கொடுக்கிறதிற்கு பேர் 'அல்வா' இல்லீங்கோ!

இங்கே ரேகா கொடுத்தது ஒரிஜினல் திருநெல்வேலி அல்வா!!!

said...

\\துர்கா|thurgah said...
super ending :P
nalla vellai neega yaarume kolai pannama rendu peraiyum serthu vaichuthinga.big salute to you :D\

ஹாய் துர்கா, 'சுபமான முடிவு' பிடித்திருக்கிறதோ??
வருகைக்கு நன்றி!

said...

\\ரசிகன் said...
// ஃபோன் கச்சேரி....
நட்பாக வளர்ந்து,
காதலாக மலர்ந்து
கல்யாணத்தில் கணிந்தது//
சுபம்..
ஏன் இந்த அவசர முடிவு.. இன்னும் கலாட்டாவ கொஞ்சம் பதிவு தொடர்ந்திருக்கலாமே...நேரமில்லையா?..
ஆரம்பிச்ச வேகத்துலயே.. முடிஞ்சிருச்சே.. கலாட்டா... நல்லாயிருந்தது..\இன்னும் கொஞ்சம் கச்சேரி கலாட்டா பண்ணியிருக்கலாம்.......நேரமின்மை காரணமாக சீக்கிரம் 'சுபம்' போட்டாச்சு!
வருகைக்கு நன்றி ரசிகன்!!

said...

\\குசும்பன் said...
"நவீன்:அதுல என்ன டவுட் உனக்கு, இந்த ஃபைனல் செமஸ்டர் படிச்சு முடி, நான் இன்னும் 6 மாசத்துல திரும்பி வரேன்...........அப்போ வைச்சுக்கலாம் நம்ம கல்யாண கச்சேரி. "

ம்ம்ம் காலம் ரொம்ப கெட்டு போச்சு எல்லாம் படிக்கும் பொழுதே லவ் செய்ய ஆரம்பிச்சுடுதுங்க:(

ஆண்டவா நீதான் இந்த புள்ளைங்கள காப்பாத்தனும்.\\

அந்த கொடுப்பினை உங்களுக்கு கிடைக்கிலங்கிறதிற்காக இப்படி காலம் கெட்டு போச்சுன்னு சப்பு கட்டக் கூடாது!!

வருகைக்கு நன்றி குசும்பன்!

said...

\\ரசிகன் said...
// "ஓய் அந்த ஃபோன் கடலை மன்னன் பத்தி என்கிட்ட பேசாதே, நீங்க யாருன்னே தெரியாம இப்படி மணிகனக்கா பேசுறான், அவனுக்கு நீங்க யாராயிருந்த என்ன, ஒரு பொண்ணு கிட்ட பேசினா போதும்னு அல்பத்தனமா இருக்கிறான்" என்று நவீனை மட்டம் தட்டிய ரேகாவை//
இப்பிடி சொல்றவங்களைத்தான் மொதல்ல கவனிக்கனும்..ஏதோ மேட்டர் இருக்குன்னு.... ஹிஹி...\

ரொம்ப விவரமா தான் இருக்கிறீங்க ரசிகன்!!

said...

\\Dreamzz said...
adada! nalla happy ending:) i like it!
\\

நன்றி! நன்றி!.....Dreamz!!!

said...

\\Adiya said...
short n sweet !!!!

பார்தேன்!!!
படித்தேன்!!!
ரசிதேன் !!!\\

ரசித்தமைக்கு மிக்க நன்றி Adiya!

said...

டைலாக் எல்லாம் பின்னிட்டிங்க..
முடிவும் சுபமாக முடிச்சிட்டிங்க...

ஆனா ரொம்ப சீக்கிரம் முடிச்சிட்டிங்க...;)

said...

திவ்யா,

ஏரியால ஆளப் புடிச்சுப் போச்சுன்னா,
அந்த ஏரியால இருக்குற ஃப்ரெண்டு வீட்டுக்குப் போய்----லைப்ரரி புக்ஸ் கொடுக்குறேன்...கோவில்லயிருந்து பிரசாதம் கொடுக்குறேன்...அல்வா கொடுக்குறேன் அப்படியின்னு சுத்தி சுத்தி வர்ரதே இப்ப பொண்ணுங்களுக்கு வேலையாப் போச்சு.

நச்சுன்னு காதலை டக்குன்னு வெளிப்படுத்தியிருக்காரு நவீன். அப்படி சொல்லலைன்னா ரேகாவே ரோஸ் கொடுத்திருப்பங்க நவீனுக்கு.
அம்மாவுக்கு அல்வா
நவீனுக்கு லவ்வா?
ஆனாலும் அந்த போட்டோவில் ஃபாரின் சுகன்..ரேகா..விஜி..வந்தனா சூப்பர் தான்.
நல்லாயிருந்துதுங்க சுபமான கதை.

said...

இதை விடவும் நல்ல கதைகள் எழுத உன்னால் முடியும் என நம்புகிறேன் :-)

said...

சட்னு முடிச்சுட்டீங்க... நல்லா இருந்துச்சு..

பின்ன தலைப்பு ஏன் தொல்லை?

கலை கட்டுச்சா இல்ல களை கட்டுச்சானு எனக்கே இப்ப டவுட் வருது :)

& பை தி பை வாழ்த்துக்கள்

Anonymous said...

Hai Divya,

Marriage fix ayiduchaaa Divya.? Good .Congratulations. If the marriage is in coimbatore please send me a invitation. I will attend ( Surely with a gift)

said...

:))))

எங்க ஊரெல்லாம் இழுத்திருக்கீங்க... ஸோ ஒன் மோர் வாழ்த்துக்கள் :)))

said...

\\கோபிநாத் said...
டைலாக் எல்லாம் பின்னிட்டிங்க..
முடிவும் சுபமாக முடிச்சிட்டிங்க...

ஆனா ரொம்ப சீக்கிரம் முடிச்சிட்டிங்க...;)\\

பாராட்டுக்களுக்கு மிக்க நன்றி கோபிநாத்!

இன்னும் கொஞ்சம் கச்சேரி நீடிச்சிருக்கலாம் தான்........நேரமின்மை காரணமாக சீக்கிரம் சுபம் போட்டுவிட்டேன்.

said...

\\Raj said...
திவ்யா,

ஏரியால ஆளப் புடிச்சுப் போச்சுன்னா,
அந்த ஏரியால இருக்குற ஃப்ரெண்டு வீட்டுக்குப் போய்----லைப்ரரி புக்ஸ் கொடுக்குறேன்...கோவில்லயிருந்து பிரசாதம் கொடுக்குறேன்...அல்வா கொடுக்குறேன் அப்படியின்னு சுத்தி சுத்தி வர்ரதே இப்ப பொண்ணுங்களுக்கு வேலையாப் போச்சு.

நச்சுன்னு காதலை டக்குன்னு வெளிப்படுத்தியிருக்காரு நவீன். அப்படி சொல்லலைன்னா ரேகாவே ரோஸ் கொடுத்திருப்பங்க நவீனுக்கு.
அம்மாவுக்கு அல்வா
நவீனுக்கு லவ்வா?
ஆனாலும் அந்த போட்டோவில் ஃபாரின் சுகன்..ரேகா..விஜி..வந்தனா சூப்பர் தான்.
நல்லாயிருந்துதுங்க சுபமான கதை.\\

நன்றி ! நன்றி! ராஜ்!!!

அம்மாவுக்கு அல்வா!
நவீனுக்கு லவ்வா??
அடுக்கு மொழி எல்லாம் அசத்தல் ராஜ்,

உங்கள் பின்னூட்டம் எனக்கு மிகுந்த உற்ச்சாகத்தை தந்தது, நன்றி!

said...

\\நாகை சிவா said...
சட்னு முடிச்சுட்டீங்க... நல்லா இருந்துச்சு..

பின்ன தலைப்பு ஏன் தொல்லை?

கலை கட்டுச்சா இல்ல களை கட்டுச்சானு எனக்கே இப்ப டவுட் வருது :)

& பை தி பை வாழ்த்துக்கள்\\

வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி சிவா!

said...

\\padippavan said...
Hai Divya,

Marriage fix ayiduchaaa Divya.? Good .Congratulations. If the marriage is in coimbatore please send me a invitation. I will attend ( Surely with a gift)\\

ஹாய் படிப்பவன்,
ரொம்ப நாளைக்கு அப்புறம் என் வலைப்பதிவிற்கு வந்திருக்கிறீர்கள், மிக்க நன்றி!

எனக்கு கல்யாணம் முடிவானா, இப்படி கதையின் மூலமா எல்லாம் சொல்ல மாட்டேனுங்க,
" டும் டும் டும்........எனக்கு டும் டும் டும் " அப்படி தலைப்பு போட்டு பதிவுல சொல்லுவேன் எல்லாருக்கும்.

உங்களுக்கு பத்திரிக்கை வைக்காமலா?? கண்டிப்பா உங்களுக்கு அழைப்பிதழ் உண்டு, ஒரே ஊர் காரர் ஆச்சே நீங்க?

ஸோ கிஃப்டோட வந்திடுங்க , சரியா???

said...

\\ஜி said...
:))))

எங்க ஊரெல்லாம் இழுத்திருக்கீங்க... ஸோ ஒன் மோர் வாழ்த்துக்கள் :)))\

வாங்க ஜி !
கதை எழுதுங்கன்னு உற்ச்சாகப்படுத்திட்டு இப்படி தான் லேட்டா வந்து பின்னூட்டம் போடுறதா??
[ உங்க ஊர் அல்வா என்னோட ஃபேவரைட்!!!]

said...

I was expecting something one these lines but not such a dramatic end. Jollu paandi naa solla vandhadha apdiye sollitaaru.

said...

ஓ கதை முடிச்சிட்டீங்களா? பெருசா வளரும்னு நெனச்சேன். நல்லாருக்கு. கடைசீல கதாநாயகன் நாயகியச் சேத்து வெச்சுட்டீங்க. :)

said...

ஆஹா... என்னமா எழுதுறீங்க!! கலக்குறீங்க... வாழ்த்துகள்!! இது எதாச்சா சொந்த அனுபவமா? ஹாஹா... அடுத்த கதை எப்ப? வசனங்களில் கலக்கல் வரிகள்!!

said...

நெனச்சே மாஅதிரியே வந்திருக்கு. ஆனா, படு ஸ்பீட்ல நடந்திட்டுச்சு எல்லாமே>. நான் என்னமோ ஒரு 5--6 எபிசோட்போகும்ன்னுல்ல எதிர்ப்பார்த்தேன். ;-)

said...

\\தேவ் | Dev said...
இதை விடவும் நல்ல கதைகள் எழுத உன்னால் முடியும் என நம்புகிறேன் :-)\\

தேவ் அண்ணா, நீங்கள் என் மீது வைத்திருக்கும் நம்பிக்கை என்னை அசர வைத்தது,
நிச்சயம் நல்ல கதைகள் எழுத முயற்ச்சிப்பேன்,
நன்றி தேவ் அண்ணா!

said...

\\SierrA ManiaC said...
I was expecting something one these lines but not such a dramatic end. Jollu paandi naa solla vandhadha apdiye sollitaaru.\\

மிக்க நன்றி தங்கள் வருகைக்கும், தருகைக்கும்!

said...

\\G.Ragavan said...
ஓ கதை முடிச்சிட்டீங்களா? பெருசா வளரும்னு நெனச்சேன். நல்லாருக்கு. கடைசீல கதாநாயகன் நாயகியச் சேத்து வெச்சுட்டீங்க. :)\\

வாங்க ராகவன், இன்னும் பெருசா கதையை வளர்த்திருக்கலாம் தான், நேரமின்மை காரணமாக முடித்துவிட்டேன்!
வருகைக்கு நன்றி ராகவன்!

said...

\Thamizhmaagani said...
ஆஹா... என்னமா எழுதுறீங்க!! கலக்குறீங்க... வாழ்த்துகள்!! இது எதாச்சா சொந்த அனுபவமா? ஹாஹா... அடுத்த கதை எப்ப? வசனங்களில் கலக்கல் வரிகள்!!\\

வாங்க தமிழ் வாங்க!!!
சொந்த அனுபவம் எல்லாம் இல்லீங்க, எல்லாம் 100% கற்பனை மட்டுமே!!

அடுத்த கதை விரைவில்,

உங்கள் பின்னூட்டத்திற்கு மிக்க நன்றி தமிழ்!

said...

\\.:: மை ஃபிரண்ட் ::. said...
நெனச்சே மாஅதிரியே வந்திருக்கு. ஆனா, படு ஸ்பீட்ல நடந்திட்டுச்சு எல்லாமே>. நான் என்னமோ ஒரு 5--6 எபிசோட்போகும்ன்னுல்ல எதிர்ப்பார்த்தேன். ;-)\\

மை ஃபிரண்ட், நீங்க நினைச்ச மாதிரியே சுபமாக கதை முடிந்ததா??

நிறைய எபிசோட் எழுத ஆசை தான், அடுத்த முறை முயற்ச்சிக்கிறேன்!

said...

திவ்யா,


இரண்டு பாகத்தையும் ஒன்னா இப்போதான் சேர்த்து படிச்சேன்... :)

ரேகா போனை வாங்கி பேசினதும் முடிவை கணிக்க முடிச்சது... :) அடுத்த கதைக்கு ஆவலுடன் வெயிட்டிங்... :)

said...

//
இரண்டு பாகத்தையும் ஒன்னா இப்போதான் சேர்த்து படிச்சேன்... :)
//

repeatu...

ivalo seekiram kadhaiya mudichiteenga.. nalla irundadhu aana unga pazhaya stories-la irukkura oru punch illaye..