முத்துவின் அந்த சுட்டெரிக்கும் பார்வையை கண்டதும் கார்த்திக்கின் உள் மனதில் ஏதோ உறுத்தியது. இவனை சும்மா விடக்கூடாது என்று முடிவெடுத்துக்கொண்டான்.
மறுநாள் காலை தீபா ட்யூட்டியில் இருக்கும்போது கார்த்திக்கிடமிருந்து ஃபோன் வந்தது. மிகவும் முக்கியமான விஷயம், அதனால் உடனடியாக தன்னை தனது வீட்டில் வந்து சந்திக்கும்படி அவன் கூறியதும், அரைநாள் லீவிற்கு சொல்லிவிட்டு அவனை சந்திக்க சென்றாள் தீபா.
கார்த்திக்கின் வீட்டிற்கு சென்றதும்,ஹாலில் இருந்த கார்த்திக்கின் அம்மா தீபாவிடம்,
"வாம்மா தீபா.....நல்லாயிருக்கிறீயா..........ரொம்ப நாளா வீட்டு பக்கமே வரலியேமா"
"நல்லாயிருக்கிறேன்மா..........நீங்க நல்லாயிருக்கிறீங்களா?.......ஒரு வாரம் மெடிக்கல் கேம்ப்க்கு போயிருந்தேன், அதான் உங்களை வந்து பார்க்க முடியல........கார்த்திக்...இருக்...கா.."
"ஆங்.........கார்த்திக் முன்னாடி ஆஃபீஸ் ரூம்ல உனக்காக தான் வெயிட் பண்ணிட்டு இருக்கான், போய் பாருமா.......பேசிட்டு இருங்க நான் காஃபி எடுத்துட்டு வரேன்"
"சரிமா....."
கார்த்திக்கின் அறை கதவினை தட்டிவிட்டு, அனுமதி பெற்று உள்ளே சென்றாள் தீபா,
"வாங்க டாக்டர் மேடம்..........எப்படி இருக்கிறீங்க?"
"ம்ம் நல்லாயிருக்கிறேன்.......சரி எதுக்கு வர சொன்ன கார்த்திக்"
"சொல்றேன் ......சொல்றேன், முதல்ல உட்காரு இந்த சேர்ல"
" ம்........ஒகே....சரி இப்போ சொல்லு......என்ன விஷயம்?"
"நீ நேத்து பெயில்ல ஒருத்தனை கூட்டிட்டு போனியே ...அதான் அந்த சரஸ்வதியோட புருஷன்...முத்து...அவன் செத்துட்டான்"
"வாட்............முத்து செத்துட்டாரா???"
"என்ன தீபா ரொம்ப அதிர்ச்சியா இருக்க........இன்னொன்னு சொல்றேன் கேளு........அவன் சாவு சாதாரண சாவு இல்ல........கொலை....."
"கொ.......கொலையா..........."
"ஆமா.........சரஸ்வதியோட புருஷனை யாரோ கொலை செய்துட்டாங்க........போலீஸ் இன்வஸ்டிகேஷன் நடந்திட்டிருக்கு"
"யாருன்னு கண்டுபிடிச்சுட்டாங்களா??......"
"இன்னும் இல்ல.............ஆனா சில ஆதாரங்கள் போலீஸ் கையில கிடைச்சிருக்கு, அதை வைச்சு கண்டிப்பா குற்றவாளி யாருன்னு சீக்கிரம் கண்டு பிடிச்சிடும் எங்க டிபார்ட்மெண்ட்"
"................"
" இந்த கொலை விஷயமா...........உன்கிட்ட சில கேள்விகள் கேட்க வேண்டியிருக்கு........"
"எ......என்கிட்ட என்ன கேட்கனும்?"
"இந்த கொலைக்கும் உனக்கும் சம்பந்தம் இருக்கும்னு ..........நாங்க சந்தேகப்படுறோம்"
"புல்ஷிட்..........என்ன உளர்ற கார்த்திக்"
"ஏன் டென்ஷன் ஆகுற தீபா.............சந்தேகம்னு தானே சொன்னேன்.........இன்னும் இன்வெஸ்டிகேஷன் கேள்விகளே கேட்க ஆரம்பிக்கல அதுக்குள்ள டென்ஷன் ஆனா எப்படி?? கூல் டவுன் டாக்ட்டர் மேடம்"
"சந்தேகம் உன் டிபார்ட்மெண்டுக்கு இல்ல..........உனக்குதான் என் மேல சந்தேகம்.........நீ பொய் கேஸ் போட்டு முத்துவை உள்ள தள்ளினபோ, சரஸ்வதிக்காக நான் அவரை பெயில்ல எடுத்தது உனக்கு பிடிக்கல, என் மேல கோபம் உனக்கு, அதான் இப்படியெல்லாம் பேசுற"
"என்ன தீபா..........ரொம்ப சமார்த்தியமா பேசுறதா நினைப்பா??...............உன் மேல சந்தேகம் மட்டுமில்ல ........நீ தான் கொலை பண்ணினன்றதுக்கு என்கிட்ட ஆதாரமே இருக்கு"
".................."
தன் மேஜைக்கு அடியில் இருந்து ஒரு சிறு பாக்கெட்டை எடுத்து பிரித்து காண்பித்தவன்.........
"இது........என்னன்னு தெரியுதா டாக்டர்........."
"அ......து...........இது......ஸ்ரிஞ்ச்"
"நீ விஷ ஊசி போட பயன்படுத்தின ஸ்ரிஞ்ச்.............."
"கா.......கார்த்திக்........."
தன் இருக்கையில் இருந்து எழுந்து, எதிரில் அமர்ந்திருந்த தீபாவின் இருக்கையின் அருகில் வந்து நின்றான் கார்த்திக், தீபா மெதுவாக எழுந்து நின்று , தன் நெற்றி பொட்டில் பூர்த்திருந்த வேர்வை துளிகளை துடைத்துக்கொண்டாள்.
" ஏன்..........ஏன் தீபா இப்படி பண்ணின...........நீ பண்ணியிருக்கிறது எவ்வளவு பெரிய தப்பான முட்டாள்தனம்னு உனக்கு தெரியுமா??"
"கார்த்தி.........நான்.........."
"உன் மருத்துவ தொழிலுக்கு மிக மிக அவசியமான பொறுமையும், மனிதாபிமானமும் எங்க போச்சு தீபா............."
"கார்த்தி........சரஸ்வதிக்கு அவன் பண்ணின கொடுமையெல்லாம் பார்த்துட்டு என்னால சும்மா இருக்க முடியல"
"அதான் நான் போலீஸ் கவனிப்பு கவனிச்சுக்கிறேன்னு சொன்னேனே........அப்புறம் என்ன???"
"ஹும்.......ரெண்டு நாள் ஸ்டேஷன்ல வைச்சு முட்டிக்கு முட்டி தட்டினா இந்த மாதிரி ஆழுங்க திருந்திடுவாங்கன்னு நினைக்கிறியா??............நோ நாட் அட் ஆல் கார்த்தி"
"டோன்ட் பி எமோஷ்னல் தீபா...............இப்படி தப்பு பண்ற ஒவ்வொருத்தனையா கொலை பண்ணிட்டு இருக்க போறீயா??..........."
"கார்த்தி..........நான்........கோபத்துல...........அப்படி ஒரு காரியம்........."
அதற்கு மேல் வார்த்தைகள் வராமல் திக்கியது,
தொண்டை அடைத்தது,
அவளது இதயதுடிப்பு நொண்டி அடித்தபடி இருக்க,
பயத்தில் ஒருவித நடுக்கம் உடலெங்கும் பரவியது தீபாவிற்கு!!
"கார்த்திக்.........."
"ம்ம்....."
"நீ........நீ ......இந்த ஆதாரத்தை வைச்சு என்னை அரெஸ்ட் பண்ண போறீயா??"
"ஆமா.........கைது பண்ணத்தான் போறேன்......"
"கா......ர்த்.......திக்"
"கைதி பண்ணி..............ஆயுள் தண்டனை கொடுக்க போறேன்..........திருமதி தீபா கார்த்திக் குமாரா"
சிறு குறும்பு புன்னகையோட தீபாவிற்கு இன்னும் நெருக்கமாக வந்த கார்த்திக்,
"என்ன டாக்டரம்மா..........ரொம்ப பயந்துட்டீங்களோ??.........ஹா ஹா........விஷ ஊசி போடுற அளவுக்கு தைரியம் இருக்கு, அப்புறம் தடயத்தோடு மாட்டினதும் பேந்த பேந்த முழிச்சா எப்படி??"
"................"
"சரி........கூல் டவுன்.........சரஸ்வதி புருஷன் முத்து சாகல"
"நீ....நீ என்ன சொல்ற கார்த்திக்?"
"என்ன........நீ போட்ட விஷ ஊசி எப்படி வேலை செய்யாம போச்சுன்னு பார்க்கிறியா??"
"..............."
" நீ முத்துவுக்கு நேத்து ராத்திரி போட்டது வெறும் சத்து ஊசி............."
".............."
" நீ திடீருன்னு சரஸ்வதி புருஷன் மேல இரக்கப்பட்டு பெயில்ல எடுத்ததுமே எனக்கு ஒரு சின்ன டவுட்.........இப்படி ஏதாச்சும் தத்தக்கா பித்தக்கான்னு பண்ணிடுவியோன்னு நினைச்சேன், மோர் ஓவர்.........நீ முத்துவ பெயில்ல கூடிட்டு போறப்போ......அவன் உன்னையும் என்னையும் நம்பாம கோபமா முறைச்சுட்டே போனான், அவனால உனக்கு ஏதும் ஆபத்து வந்துடக்கூடாதுன்னு அவனை கண்கானிக்க ஒரு கான்ஸ்டபிளை அப்பாயிண்ட் பண்ணினேன், அப்படியே உன்னையும் நான் வாட்ச் பண்ணிட்டு இருந்தேன்"
".............."
"நான் எதிர் பார்த்த மாதிரியே நீ முத்துவை உன் ஃப்ரண்டோட க்ளினிக்ல அட்மிட் பண்ணின...........நைட் நீ நர்ஸ்கிட்ட போட கொடுத்த விஷ ஊசியையும் நான் தான் மாத்தினேன்......"
"கார்த்தி.......நான் தெரியாம.........ரொம்ப எமோஷனலாகி.........இப்படி பண்ணிட்டேன்..........."
"இந்த கோபம்..........தண்டிக்கனும்ன்ற உணர்வெல்லாம் இத்தோட விட்ரு தீபா.......சரஸ்வதியையும் முத்துவையும் எப்படி நல்ல படியா வாழவைக்கிறதுன்னு யோசிப்போம், இனியும் அவன் திருந்தலீனா............விஷ ஊசி எல்லாம் வேணாம்........என்கவுண்ட்ர்ல போட்டு தள்ளிடுறேன்"
" நீங்க போட்டு தள்ளினா மட்டும் ............நியாயமா?? தொழில் தர்மமா??..........இது நல்லா கதையா இருக்குதே"
படபடப்பு குறைந்து, மெல்லிய புன்னகை படர்ந்திருந்தது தீபாவின் முகத்தில்.
"சரி..சரி அதெல்லாம் இருக்கட்டும்......எப்போ அரஸ்ட் வாரண்டோட டாக்டரம்மாவை வந்து பார்க்கட்டும்......."
"..............."
"என்ன தீபா......பதிலே காணோம்"
"அரெஸ்ட் வாரண்ட் எதுக்கு கார்த்திக்...........அதான் நான் உன்கிட்ட சரணடைஞ்சுட்டேனே"
என்னை விழிகளால்
கைது செய்தவளை
நான் விலங்கினால்
கைது செய்ய முடியுமா??
என்னிதய சிறைக்குள்
குடியிருப்பவளை -இனி
எந்த சிறைக்குள்
சென்றடைக்க முடியும்???
கைதியிடமே சரணடைவது
காதலில் மட்டுமே சாத்தியம்!
உன்னிடத்தில் நான் சரணடைந்தேன்!
கைது செய்தவளை
நான் விலங்கினால்
கைது செய்ய முடியுமா??
என்னிதய சிறைக்குள்
குடியிருப்பவளை -இனி
எந்த சிறைக்குள்
சென்றடைக்க முடியும்???
கைதியிடமே சரணடைவது
காதலில் மட்டுமே சாத்தியம்!
உன்னிடத்தில் நான் சரணடைந்தேன்!
முற்றும்.
86 comments:
அருமையான முடிவு திவ்யா.. ரசிக்க வைக்கிறது... வாழ்த்துக்கள்...
இப்படி ஒரு த்ரில்லரான கதையை திவ்யாவிடமிருந்து எதிர்பார்க்கவில்லை..கொண்டு சென்ற விதம் சுவாரஸ்யம்..!!
ஆரம்பம் தவிர இந்தப் பகுதி முழுதுமே உரையாடல்களில்
நகர்த்தியிருந்தது அருமை..!!
//என்னிதய சிறைக்குள்
குடியிருப்பவளை -இனி
எந்த சிறைக்குள்
சென்றடைக்க முடியும்???
கைதியிடமே சரணடைவது
காதலில் மட்டுமே சாத்தியம்!
உன்னிடத்தில் நான் சரணடைந்தேன்! //
காதலான வரிகள் மேலும் அழகு சேர்க்கின்றன திவ்யா..
மிகவும் ரசித்தேன்... !!
அடுத்து என்ன திவ்யா..? ஒரு குறும்பான கதை எழுதேன்.. சரியா.? :))
இன்னைக்கு நீங்க சொல்லாமலேயே படிச்சுட்டேன். அருமையான முடிவு.
அதுக்குள்ளே முடிச்சிட்டீங்க
முடிவு கவிதையும்
கதையும் அழகு
எப்பவும் போலவே
சிறுகதை போட்டி ஒன்னு வைக்கிறாங்க. கட்டாயம் கலந்துக்கங்க அம்மணி. மேலும் விவரங்களுக்கு இதுல போய் பாருங்க.
http://www.luckylookonline.com/2009/05/30000.html
நல்ல முடிவு
கொஞ்சம் க்ரைம் மாதிரி போச்சு
சரஸ்வதிய பாதிலே விட்டுட்டீங்க?
அருமையான / வித்தியாசமான கிளைமாக்ஸ்
நல்லாயிருந்தது வாழ்த்துக்கள்
நல்ல திருப்பங்கள், அருமையான முடிவு !!
நீண்ட நாட்கள் எடுத்துக்கொண்டாலும்..நன்றாக வந்துள்ளது..
அடுத்த கதையை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்..
ஆஹா.. என்னதிது கடைசி பகுதி செம விறுவிறுப்பா.. ஆனா இனிமையா முடிஞ்சது.. நல்லதொரு திருப்பம்..
நல்ல திரில்லர் கதை திவ்யா.. வாழ்த்துகள்
குட் ;)
பட் எனக்கு என்னாமே ஒன்னு குறையுது...இன்னும் உழைச்சியிருக்கானும் போல இருக்கு.
பட் விஷ ஊசி எல்லாம் எதிர்பார்க்கல ;)
//இப்படி ஒரு த்ரில்லரான கதையை திவ்யாவிடமிருந்து எதிர்பார்க்கவில்லை..கொண்டு சென்ற விதம் சுவாரஸ்யம்..!//
நான் சொல்லனும் என்று நினைத்ததை ஏற்கனவே சொல்லிட்டாங்க!
//கைதியிடமே சரணடைவது
காதலில் மட்டுமே சாத்தியம்!//
வரிக்கோர்வை அழகு..
கொலையாளி என தெரிந்தும் கல்யாணம் செய்து கொள்ள கண்டிப்பா ஒரு தில் வேணுங்க திவ்யா!
நல்ல கதை! இதை போல இன்னொரு த்ரில்லர் ப்ளீஸ்!!
அதுக்குள்ள முடிச்சிட்டீங்க? இந்த கதை வழக்கம் போல இல்லாம வித்யாசமா இருந்துச்சு...ஆனா திவ்யா touch கொஞ்சம் missing ஓ? :))
நல்ல முடிவு .க்ரைம் த்ரில்லர் Continue ஆகும்னு பார்த்தா அதுக்குள்ள முடிச்சிட்டீங்களே?..கவிதை நல்லாயிருக்கு.
வாழ்த்துக்கள்!!
கைதியிடமே சரணடைவது
காதலில் மட்டுமே சாத்தியம்!
உன்னிடத்தில் நான் சரணடைந்தேன்
arumaiyaana varigal...
nalla oru thodar kadhai
soooper kalakiteenga...
adudha kadhaikku aavaludan edhir paarkirom...
நல்லா இருந்துச்சு! கொஞ்சம் சஸ்பென்ஸ் அப்படி இப்படின்னு ஒரு சூப்பர் கலவை!
அடுத்த தொடர்??
என்ன இது??? பொசுக்குன்னு முடிஞ்சுடுத்து :-)
ரொம்ப அவசர அவசரமா எழுதினீங்களா???
//கைதியிடமே சரணடைவது
காதலில் மட்டுமே சாத்தியம்!
//
Lovely!!
And very good mix of love and thrill - very good exp in reading it. please write more stories like this . very well writtern
அதுக்குள்ளே கதை முடிஞ்சு போச்சா...நான் இன்னும் இரண்டு பகுதி எதிர் பார்த்தேன்...
//"இது........என்னன்னு தெரியுதா டாக்டர்........."
"அ......து...........இது......ஸ்ரிஞ்ச்"
"நீ விஷ ஊசி போட பயன்படுத்தின ஸ்ரிஞ்ச்.............."
"கா.......கார்த்திக்........."//
திக்...திக்...திக்...நிமிடங்கள்...
கிரைம் நாவல் படிச்ச மாதிரி இருந்தது இந்த வரிகள்...
இந்த கதை உங்கள் முந்தய கதைகளில் இருந்து மிகவும் வித்தியாசமா அருமையா இருந்தது திவ்யா...
சரி...அடுத்த கதைய எப்ப ஆரம்பிக்கிறீங்க திவ்யா...?
very good.
Please have a look at my blog at
http://www.bharathinagendra.blogspot.com whenever you find time.
கதை ரொம்ப நல்ல இருக்கு..
ஆர்வத்துடன் முடித்து..
கவிதை அழகு..
ultimate...kalkitenga...title justify panra mathiri story :D rajeshkumar novel pola iruku..super
good :)
எதிர்பார்த்திறாத திருப்பம்... கவிதையும் நல்லா இருக்கு...
நானும் சரணடைந்தேன் ...
கதையில் ....
ஹி ஹி ஹி ஹி ..
late ha vanthaalum roamba thrilla irrunthathu pa i really enjoyed so many twists in this story i wasnt expect the heroine will try to kill that bas__________ but i really like superb work soon start another one but next time no crime story ok a love story plzzzzzzzzzzzzzzzz
என் இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்
அழகான பிறந்த நாள் வாழ்த்துகள் திவ்யா.. :)
piranthanaala solla vea illay ok ok happy birth day to you thriller story writter mis. divyaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaa
happy birthday to you happy birth day to you happy birth day to dear divya happy birth day to youuuuuuuuuuuuuuuu [read these lines again as a song ok] bye bye
NICE STORY DIVYA... VAZAKKAM POLA KALAKKALS
VAAZTHTHUKKAL
HAPPY BIRTHDAY DIVYA:)) MANY MORE HAPPY RETURNS OF THE DAY
Hey Divya...
Excellent Ending...
Mudivil kavithai alagu...
Keep rocking....
and belated Happy Birthday...
May the blessing of almighty be with you always...let all ur hopes and dreams come true...
couldn't get ur email id anywhere... sent u request in orkut...
நல்ல திரைக்கதை, நல்ல முடிவு!!
வாழ்த்துக்கள்!!
\\Blogger நவீன் ப்ரகாஷ் said...
அருமையான முடிவு திவ்யா.. ரசிக்க வைக்கிறது... வாழ்த்துக்கள்...\\
ரசிப்பிற்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி கவிஞரே:))
\\Blogger நவீன் ப்ரகாஷ் said...
இப்படி ஒரு த்ரில்லரான கதையை திவ்யாவிடமிருந்து எதிர்பார்க்கவில்லை..கொண்டு சென்ற விதம் சுவாரஸ்யம்..!!\\
வித்தியாசமாக முயற்சிக்கலாமே என்று நினைத்து எழுதியது இந்த தொடர்....கருத்திற்கு நன்றி நவீன்!
\\Blogger நவீன் ப்ரகாஷ் said...
ஆரம்பம் தவிர இந்தப் பகுதி முழுதுமே உரையாடல்களில்
நகர்த்தியிருந்தது அருமை..!!\\
பாராட்டிற்கு நன்றி:)))
\\Blogger நவீன் ப்ரகாஷ் said...
//என்னிதய சிறைக்குள்
குடியிருப்பவளை -இனி
எந்த சிறைக்குள்
சென்றடைக்க முடியும்???
கைதியிடமே சரணடைவது
காதலில் மட்டுமே சாத்தியம்!
உன்னிடத்தில் நான் சரணடைந்தேன்! //
காதலான வரிகள் மேலும் அழகு சேர்க்கின்றன திவ்யா..
மிகவும் ரசித்தேன்... !!\\
கவிஞரின் ரசிப்பிற்கு மிக்க நன்றி:))
\\Blogger நவீன் ப்ரகாஷ் said...
அடுத்து என்ன திவ்யா..? ஒரு குறும்பான கதை எழுதேன்.. சரியா.? :))\\
முயற்சிக்கிறேன் நவீன்...!
\\Blogger ஜோசப் பால்ராஜ் said...
இன்னைக்கு நீங்க சொல்லாமலேயே படிச்சுட்டேன். அருமையான முடிவு.\\
வருகைக்கும் பாராட்டிற்கும் நன்றி ஜோசஃப்:))
\\Blogger நட்புடன் ஜமால் said...
அதுக்குள்ளே முடிச்சிட்டீங்க
முடிவு கவிதையும்
கதையும் அழகு
எப்பவும் போலவே\\
உங்கள் வருகைக்கும், உற்சாகமளிக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி ஜமால்!
\\Blogger ஜோசப் பால்ராஜ் said...
சிறுகதை போட்டி ஒன்னு வைக்கிறாங்க. கட்டாயம் கலந்துக்கங்க அம்மணி. மேலும் விவரங்களுக்கு இதுல போய் பாருங்க.
http://www.luckylookonline.com/2009/05/30000.html\\
தகவலுக்கு மிக்க நன்றி ஜோசஃப்:))
\\Blogger தமிழ் said...
நல்ல முடிவு
கொஞ்சம் க்ரைம் மாதிரி போச்சு
சரஸ்வதிய பாதிலே விட்டுட்டீங்க?\
வாங்க தமிழ்,
வருகைக்கும் கருத்திற்கும் நன்றி:))
\\Blogger அபுஅஃப்ஸர் said...
அருமையான / வித்தியாசமான கிளைமாக்ஸ்
நல்லாயிருந்தது வாழ்த்துக்கள்\\
வாங்க அபுஅஃப்ஸர்,
உங்கள் தொடர் வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் என் மனமார்ந்த நன்றி!!
\\Blogger விமல் said...
நல்ல திருப்பங்கள், அருமையான முடிவு !!
நீண்ட நாட்கள் எடுத்துக்கொண்டாலும்..நன்றாக வந்துள்ளது..
அடுத்த கதையை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்..\\
வாங்க விமல்!!
உங்கள் வருகைக்கும், மனம்திறந்த கருத்துக்களுக்கும் மிக்க நன்றி:))
விரைவில் அடுத்த கதை எழுதிட முயற்சிக்கிறேன், மீண்டும் வருக!
\\Blogger Raghav said...
ஆஹா.. என்னதிது கடைசி பகுதி செம விறுவிறுப்பா.. ஆனா இனிமையா முடிஞ்சது.. நல்லதொரு திருப்பம்..
நல்ல திரில்லர் கதை திவ்யா.. வாழ்த்துகள்\\
தொடர்ந்து பின்னூட்ட ஊக்கமளித்ததிற்கும் வாழ்த்துக்களுக்கும் என் மனமார்ந்த நன்றி ராகவ்:)))
\\Blogger கோபிநாத் said...
குட் ;)
பட் எனக்கு என்னாமே ஒன்னு குறையுது...இன்னும் உழைச்சியிருக்கானும் போல இருக்கு.
பட் விஷ ஊசி எல்லாம் எதிர்பார்க்கல ;)\\
உங்கள் வெளிப்படையான கருத்திற்கும் விமர்சனத்திற்கும் நன்றி கோபி:))
அடுத்த முறை இன்னும் அதிகம் கவனம் செலுத்துகிறேன், நன்றி கோபி!
\\Blogger Surya said...
//இப்படி ஒரு த்ரில்லரான கதையை திவ்யாவிடமிருந்து எதிர்பார்க்கவில்லை..கொண்டு சென்ற விதம் சுவாரஸ்யம்..!//
நான் சொல்லனும் என்று நினைத்ததை ஏற்கனவே சொல்லிட்டாங்க!\\
அப்படியா??
வருகைக்கு நன்றி சூர்யா:)
\\Blogger Surya said...
//கைதியிடமே சரணடைவது
காதலில் மட்டுமே சாத்தியம்!//
வரிக்கோர்வை அழகு..\\
பாராட்டிற்கு நன்றி!!
\\Blogger Surya said...
கொலையாளி என தெரிந்தும் கல்யாணம் செய்து கொள்ள கண்டிப்பா ஒரு தில் வேணுங்க திவ்யா!\\
அடடே.......தீபா கொலையாளி இல்லீங்க, இப்படி சொல்லிட்டீங்களே:(
\\ நல்ல கதை! இதை போல இன்னொரு த்ரில்லர் ப்ளீஸ்!!\\
முயற்சிக்கிறேன்.....!
\\Blogger Divyapriya said...
அதுக்குள்ள முடிச்சிட்டீங்க? இந்த கதை வழக்கம் போல இல்லாம வித்யாசமா இருந்துச்சு...\\
போன பகுதியிலேயே முடிச்சிருக்கனும் திவ்யப்ரியா....இன்னும் ஒரு பகுதி போடும்படியா ஆகிடுச்சு:((
வித்தியாசமா இருந்ததுன்னு ஒரு கதாசிரியரின் கருத்தினை கேட்க ரொம்ப சந்தோஷமா இருக்கு:)
நன்றி திவ்யப்ரியா!
\\ஆனா திவ்யா touch கொஞ்சம் missing ஓ? :))\\
அதென்ன திவ்யா டச்???
விளக்கம் ப்ளீஸ்.......
\\Blogger Raj said...
நல்ல முடிவு .க்ரைம் த்ரில்லர் Continue ஆகும்னு பார்த்தா அதுக்குள்ள முடிச்சிட்டீங்களே?..கவிதை நல்லாயிருக்கு.
வாழ்த்துக்கள்!!\\
வாங்க ராஜ்:))
தொடர்ந்து அனைத்து பகுதிகளையும் படித்து, கருத்துக்களை கூறியதிற்கு என் மனமார்ந்த நன்றி!
\\Blogger JSTHEONE said...
கைதியிடமே சரணடைவது
காதலில் மட்டுமே சாத்தியம்!
உன்னிடத்தில் நான் சரணடைந்தேன்
arumaiyaana varigal...
nalla oru thodar kadhai
soooper kalakiteenga...
adudha kadhaikku aavaludan edhir paarkirom...\\
வாங்க சரவணன்,
தொடர் வருகைக்கும், மனம்திறந்த பாராட்டிற்கும் மிக்க நன்றி!!
\\Blogger Thamizhmaangani said...
நல்லா இருந்துச்சு! கொஞ்சம் சஸ்பென்ஸ் அப்படி இப்படின்னு ஒரு சூப்பர் கலவை!\\
பாராட்டிற்கு நன்றி தமிழ்மாங்கனி:))
\\ அடுத்த தொடர்??\\
தொடர் கதைகளுக்கு.....கொஞ்ச நாள் விடுமுறை விடலாம்னு இருக்கிறேன்:))
\\Blogger விஜய் said...
என்ன இது??? பொசுக்குன்னு முடிஞ்சுடுத்து :-)\\
பொசுக்குன்னு முடிஞ்சா மாதிரி இருந்துச்சா:((
\\ரொம்ப அவசர அவசரமா எழுதினீங்களா???\\
இல்ல விஜய் அவசரமா எழுதல....இதுக்கு மேல கதை நகர்த்த எதுவும் இல்லை, அதான் அப்படியே முடிச்சுட்டேன், அடுத்த முறை த்ரீல்லர் கதை முயற்சி பண்ணினா....இன்னும் கொஞ்சம் நிதானமா எழுத முயற்சி பண்றேன்:)
\\Blogger Srivats said...
//கைதியிடமே சரணடைவது
காதலில் மட்டுமே சாத்தியம்!
//
Lovely!!
And very good mix of love and thrill - very good exp in reading it. please write more stories like this . very well writtern\\
உங்கள் தொடர் வருகையும், பாராட்டுக்களும் மகிழ்ச்சி அளிக்கிறது Srivats!!
மிக்க நன்றி:)))
\\Blogger புதியவன் said...
அதுக்குள்ளே கதை முடிஞ்சு போச்சா...நான் இன்னும் இரண்டு பகுதி எதிர் பார்த்தேன்...\\
ஆஹா......என்ன புதியவன் கிண்டலா??
இதுவே அதிக பகுதிக்கு இழுத்துட்டேனோன்னு நான் நினைச்சேன்:(
\\Blogger புதியவன் said...
//"இது........என்னன்னு தெரியுதா டாக்டர்........."
"அ......து...........இது......ஸ்ரிஞ்ச்"
"நீ விஷ ஊசி போட பயன்படுத்தின ஸ்ரிஞ்ச்.............."
"கா.......கார்த்திக்........."//
திக்...திக்...திக்...நிமிடங்கள்...
கிரைம் நாவல் படிச்ச மாதிரி இருந்தது இந்த வரிகள்...\\
இப்படி கரெக்ட்டா குறிப்பிட்டு கருத்து சொல்றது உங்க ஸ்பெஷாலிட்டி புதியவன்:)
நன்றி!!
\\Blogger புதியவன் said...
இந்த கதை உங்கள் முந்தய கதைகளில் இருந்து மிகவும் வித்தியாசமா அருமையா இருந்தது திவ்யா...\\
அப்படியா, வித்தியாசமா இருந்ததா புதியவன்:))
பாராட்டிற்கு நன்றி!
\\ சரி...அடுத்த கதைய எப்ப ஆரம்பிக்கிறீங்க திவ்யா...?\\
ஹும்,அடுத்த கதை....... இப்போதிற்கு தொடர் கதை எழுதும் எண்ணம் எதுவும் இல்லை, சிறுகதை எழுதலாம் என இருக்கிறேன் புதியவன்.
\\Blogger Nagendra Bharathi said...
very good.
Please have a look at my blog at
http://www.bharathinagendra.blogspot.com whenever you find time.\\
வாங்க Nagendra Bharathi!
வருகைக்கும் பாராட்டிற்கும் நன்றி, உங்கள் வலைதளத்திற்கு அவசியம் வருகிறேன்:))
\\Blogger வியா (Viyaa) said...
கதை ரொம்ப நல்ல இருக்கு..
ஆர்வத்துடன் முடித்து..
கவிதை அழகு..\\
வாங்க வியா!!
உங்கள் வருகையும், பாராட்டும் மகிழ்ச்சியளிக்கிறது, நன்றி வியா!!
\\Blogger gils said...
ultimate...kalkitenga...title justify panra mathiri story :D rajeshkumar novel pola iruku..super\\
மனம்திறந்த கருத்திற்கும் பாராட்டிற்கும் நன்றி கில்ஸ்!!
\\Blogger sathish said...
good :)\\
நன்றி சதீஷ்:))
\\Blogger நாணல் said...
எதிர்பார்த்திறாத திருப்பம்... கவிதையும் நல்லா இருக்கு...\\
வாங்க நாணல்,
வருகைக்கும் பாராட்டிற்கும் மிக்க நன்றி!!
\\Blogger vinu said...
late ha vanthaalum roamba thrilla irrunthathu pa i really enjoyed so many twists in this story i wasnt expect the heroine will try to kill that bas__________ but i really like superb work soon start another one but next time no crime story ok a love story plzzzzzzzzzzzzzzzz\\
வாங்க வினு,
உங்கள் தொடர் வருகையும், பாராட்டும் மகிழ்ச்சியளிக்கிறது, மிக்க நன்றி!!
\\but next time no crime story ok a love story plzzzzzzzzzzzzzzzz\\
:))
\\Blogger reena said...
NICE STORY DIVYA... VAZAKKAM POLA KALAKKALS
VAAZTHTHUKKAL\\
முதல் முறையாக என் பதிவில் பின்னூட்டமிட்டிருக்கிறீங்க ரீனா.......மிக்க நன்றி!!
மீண்டும் வருக!
\\Blogger திகழ்மிளிர் said...
என் இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்\\
பிறந்த நாள் வாழ்த்திற்கு மனமார்ந்த நன்றி திகழ்மிளிர்!!
\\Blogger Raghav said...
அழகான பிறந்த நாள் வாழ்த்துகள் திவ்யா.. :)\\
பிறந்த நாள் வாழ்த்திற்கு மனமார்ந்த நன்றி ராகவ்!!
\\Blogger vinu said...
piranthanaala solla vea illay ok ok happy birth day to you thriller story writter mis. divyaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaa
happy birthday to you happy birth day to you happy birth day to dear divya happy birth day to youuuuuuuuuuuuuuuu [read these lines again as a song ok] bye bye\\
உங்கள் அழகான பிறந்த நாள் வாழ்த்திற்கு[பாட்டிற்கும்] மனமார்ந்த நன்றி வினு!!
\\Blogger reena said...
HAPPY BIRTHDAY DIVYA:)) MANY MORE HAPPY RETURNS OF THE DAY\\
பிறந்த நாள் வாழ்த்திற்கு மனமார்ந்த நன்றி ரீனா!!
\\Blogger Natchathraa said...
Hey Divya...
Excellent Ending...
Mudivil kavithai alagu...
Keep rocking....\\
வருகைக்கும் பாராட்டிற்கும் நன்றி நட்சத்திரா!!
\\ and belated Happy Birthday...
May the blessing of almighty be with you always...let all ur hopes and dreams come true...
couldn't get ur email id anywhere... sent u request in orkut...\\
பிறந்த நாள் வாழ்த்திற்கு மனமார்ந்த நன்றி நட்சத்திரா!!
ஆஹா...கொஞ்சம் தாமதமா திவ்யா வலைப்பூக்குள்ள வந்தால்......ஒரு கதையே முடிஞ்சாச்சா...
எப்பயும் சொல்றதுதான்..நல்ல கதை..கவிதைகளும் அருமை..
\\Blogger பாச மலர் said...
ஆஹா...கொஞ்சம் தாமதமா திவ்யா வலைப்பூக்குள்ள வந்தால்......ஒரு கதையே முடிஞ்சாச்சா...
எப்பயும் சொல்றதுதான்..நல்ல கதை..கவிதைகளும் அருமை..\\
வாங்க பாசமலர்,
ரொம்ப நாள் கழிச்சு என் வலைதளம் வந்திருக்கிறீங்க, மிக்க மகிழ்ச்சி:))
உங்கள் பாராட்டு உற்சாகமளித்தது, மனமார்ந்த நன்றி !
Thodarkathai Divya,
Chance less!! One month-al oru Series.. Your narration was simply superb!!
Good!! :)
உங்கள் சிறுகதை என்றாலே எனக்கு அலாதி பிரியம்!!, நானும் பலமுறை படிக்கிறேன், ஒவ்வொரு முறையும் ஒரு புது அனுபவம்!!, நீங்கள் நீங்கள் தான்!!!
Valthukkal
-Pravin
திவ்யா,
உங்கள் பதிவுகள் அனைத்தையும் மிக விரைவில் படித்து கருத்தும் வாழ்த்தும் கூறுகிறேன்...
நன்றி
தினேஷ்
aaha,nalla mudivunga.....kadaisi kavithai sooper....(Enaku tamil-la comment adika theriyaathu) Ini adikadi varraen...
Hello Divya eppavum pol oru nalla kathai , velai konjam athigam athanala blog pakkame vara mudiya villai ..
Mendum oru nalla kathai elutha en valtthukkal
கதைகளையே காணோம் ரெம்ப நாளாச்சு
Post a Comment