May 07, 2009

உன்னிடத்தில்.........சரணடைந்தேன்!!! - 4

பகுதி - 1
பகுதி - 2
பகுதி - 3


தன்னையும் தீபாவையும் ஹாஸ்பிட்டல் வராண்டாவில் கூர்ந்து கவனிக்கும் அந்த உருவம் யாராக இருக்கலாம் என்று கார்த்திக்கால் சரியாக யூகிக்க முடிந்தது.

"தீபா........சரஸ்வதியை பத்திரமா பார்த்துக்கோ.....அவ வாக்குமூலத்தில உண்மையை சொல்லலியேன்னு கோபப்படாதே, கான்ஸ்டபி்ள்ல இந்த அறைக்கு பாதுகாப்பா விட்டுட்டு போறேன்.."

"கான்ஸ்டபிள் எல்லாம் எதுக்கு கார்த்திக்......."

"அதெல்லாம் அப்புறமா சொல்றேன் தீபா........நான் இப்போ உடனடியா போகனும்" என்று அவளது பதிலுக்கு கூட காத்திராமல் அவ்விடம் விட்டு நகர்ந்தான் கார்த்திக்.

அவனது சீற்றமான முக மாறுதலும், பரப்பரப்பான நடையையும் சிறிது நேரம் குழப்பத்துடன் பார்த்துக்கொண்டுருந்த தீபா, மீண்டும் சரஸ்வதியின் அறையினுள் வந்தாள்.

தீபாவை கண்டதும், சரஸ்வதியின் கண்கள் தானாக வழிந்தன.

"டாக்டரம்மா......என்னை மன்னிச்சிடுங்க........நீங்க வந்துட்டு போன கொஞ்ச நேரத்துல என் புருஷன் வந்தாருமா........நடந்த உண்மையெல்லாம் உங்ககிட்ட சொன்னா, என்னைய மட்டுமில்ல உங்களையும் சேர்த்தே தீர்த்து கட்டிருவேன்னு மிரட்டினாரு.........அதான்........நான் போலீஸ் கிட்ட...அப்படி....என்னை மன்னிச்சிடுங்கமா"

முகம் சிவக்க அவள் தேம்பி தேம்பி அழுவதை கண்டதும் தீபாவின் மனம் இளகியது.


"ஹும் ....நான் மன்னிக்கிறதெல்லாம் இருக்கட்டும், நீ தைரியமா இரு...........உனக்கு இப்போ வேண்டியதெல்லாம் கம்ப்ளீட் ரெஸ்ட், எதையும் போட்டு மனசை குழப்பிக்காம இரு சரஸ்வதி"

தீபா அவளிடம் தான் அவளை தேடி அவளது வீட்டிற்கு சென்றதையும், அவளது மகன் நன்றாக இருக்கிறான் என்பதையும் கூறி அவளை தைரியப்படுத்தினாள்.

பின் ட்யூட்டியில் இருந்த நர்ஸிடமும், கான்ஸ்டபளிடமும் சரஸ்வதியை சந்திக்க யார் வந்தாலும் அனுமதிக்க வேண்டாம் என எச்சரித்து விட்டு, தனது அறைக்கு சென்றாள்.
ஒரு மணிநேரத்தில் கார்த்திக்கிடமிருந்து தீபாவிற்கு ஃபோன் கால் வந்தது, அதில் அவன் சொன்ன செய்தியை கேட்டு அதிர்ச்சி அடைந்த தீபா, உடனடியாக அவன் சொன்ன போலீஸ் ஸ்டேஷனுக்கு விரைந்தாள்.

அங்கு சென்றதும், கார்த்திக்கும் மற்றுமொரு போலீஸ்காரரும், சரஸ்வதியின் கணவனை அடி பிண்ணிக்கொண்டிருந்ததை கண்டதும்....

"கா..............கார்த்திக்................ஸ்டாப் இட்........."

தீபாவின் குரல் கேட்டு திரும்பிய கார்த்திக், மூச்சிரைக்க.....

"ஹாய் தீபா......வா......."

"வாட் இஸ் ஆல் திஸ் கார்த்தி..........இப்படி போட்டு அடிக்கிற??"


"இவனை மாதிரி ஆளுங்களை எல்லாம் இப்படி தான் கவனிக்கனும், ........பொண்டாட்டிய மிரட்டி உண்மையை மறைச்சுட்டா?? சும்மா விட்டுருவோமா...........ஏதாவது ஒரு கேஸ் போட்டு உள்ள தள்ளி இப்படி லாடம் கட்டினா தான் இவனுங்க எல்லாம் சரிபட்டு வருவானுங்க......"

சொல்லிக்கொண்டே சரஸ்வதியின் கணவன் மீது தன் பூட்ஸ் காலால் ஓங்கி ஒரு உதை விட்டான் கார்த்திக்.

"இப்படி காட்டுமிராண்டிதனமா போட்டு அடிக்கிறதை முதல்ல நிறுத்து கார்த்தி......."

"என்ன தீபா புரியாம பேசுற..........இது தான் போலீஸ் வே ஆஃப் ட்ரீட்மெண்ட்......."

"அதுக்காக இப்படியா...........பொய் கேஸ் போட்டு உள்ள தள்ளுர குறுக்கு வழில எல்லாம் கார்த்திக் ஐ.பி.எஸ் போவாருன்னு நான் எதிர்பார்க்கவே இல்லை"

"நீ தானே தீபா...........சரஸ்வதி புருஷன் மேல நடவடிக்கை எடுக்கனும்னு அவகிட்ட வாக்குமூலம் வாங்க கூட்டிட்டு போன.......அவளை மிரட்டி அப்படி வாக்குமூலம் மாத்தி கொடுக்க வைச்சதே இந்த கபோதி தான்.........அதான் இப்படி உள்ள தள்ளி நொறுக்கி எடுக்கிறேன்"

மீண்டும் சரஸ்வதியின் கணவனை கார்த்திக் அடிக்க எத்தனிக்க............தீபா....

"தட்ஸ் இட் கார்த்திக்.............ஜஸ்ட் ஸ்டாப் திஸ் ............நான் சரஸ்வதி புருஷனை பெயில்ல எடுக்க போறேன்"

"தீ.........தீபா.........அர் யூ ஜோக்கிங்??"

"நோ கார்த்திக்.............ஐ அம் நாட்........ஒன் மினிட் வெயிட்" என்று கூறிவிட்டு தன்னுடன் அவள் அழைத்து வந்திருந்த வைக்கீல் ஒருவரை வெளியில் சென்று அழைத்து வந்தாள்.

"அஸிஸ்டண்ட் கமீஷ்னர் சார்......இவர் என்னோட வக்கீல் மிஸ்டர்.நாராயணமூர்த்தி, சரஸ்வதி புருஷன் முத்துவை பெயில்ல ரிலீஸ் பண்ணுங்க"

"தீ.......தீபா..........."

"நான்....முத்துவை பெயில்ல எடுக்க வந்திருக்கிற டாக்டர் தீபா.......புருஞ்சுதா அஸிச்டண்ட் கமிஷ்னர் சார்??"

"ஸா....ஸாரி டாக்டர்........."

பெயில் பேப்பர்ஸில் கையெழுத்து வாங்கிவிட்டு, தன்னருகில் நின்றிருந்த கான்ஸ்டபளிடம் முத்துவை ரிலீஸ் பண்ண சைகை காட்டினான் கார்த்திக்.

போலீஸ் அடியில்........கசக்கி பிழியப்பட்ட நிலையில் இருந்த முத்து, தட்டு தடுமாறி எழுந்து தீபாவுடன் சென்றான்.

"வாங்க முத்து...........பக்கத்துல இருக்கிற என் ஃப்ரண்டோட க்ளீனிக்ல உங்க காயங்களுக்கு மருந்து போட்டுட்டு அப்புறமா உங்க வீட்ல கொண்டு போய் விடுறேன்" என்று தீபா அவனை போலீஸ் ஸ்டேஷனை விட்டு அழைத்து சென்றாள்.

தீபாவின் செய்கைகள் கார்த்திக்கின் கோபத்தை அதிகரித்தது, அவளுடன் சென்ற முத்துவை அனல் பறக்கும் பார்வை பார்த்தபடி.......

'இந்த தடவை டாக்டரம்மா சரஸ்வதி மேல வைச்சிருக்கிர பாச செண்டிமெண்ட்னால தப்பிச்சுட்ட.........வேற ஒரு கேஸ்ல மாட்டாமலா போய்டுவ........அப்போ வைச்சுக்கிறேன்டா உனக்கு கச்சேரி' என்று மனதிற்குள் நினைத்துக்கொண்டான் கார்த்திக்.

வாசல்வரை தீபாவுடன் மெதுவாக நடந்து சென்ற முத்து, கதவருகே நின்று கார்த்திக்கை கோப பார்வையுடன் திரும்பி பார்த்தான்.............

'டேய் போலீஸ்காரா.......நீயும் இந்த பொம்பளை டாக்டரும் சேர்ந்து போடுர ட்ராமா எனக்கு தெரியாதுன்னு நினைச்சியா?? வேணும்னே என்னை பொய் கேஸ்ல உள்ள போட வைச்சு, அடி பிண்ணி எடுத்துட்டு, இப்போ பெயில்ல எடுக்கிற மாதிரி அவளும் நீயும் சேர்ந்து ட்ராமாவாடா பண்றீங்க.........உங்க இரண்டு பேருக்கும் வைச்சிருக்கிறேன்டா ஆப்பு....."

முத்துவின் அந்த சுட்டெரிக்கும் பார்வையை கண்டதும் கார்த்திக்..........

[தொடரும்]


பகுதி - 5

25 comments:

நவீன் ப்ரகாஷ் said...

திவ்யா இந்த முறை சரியான நேரத்தில் அடுத்து அடுத்து பாகம் எழுதி
புல்லரிக்க வச்சுட்டே..:)))

நவீன் ப்ரகாஷ் said...

சரஸ்வதியின் பாத்திரத்தின் பரிதாப நிலையை உணர்த்தியதில்
கதாவின் கை வெற்றிபெற்றிருக்கிறது.... வாழ்த்துகள் திவ்யா..!! :))

நவீன் ப்ரகாஷ் said...

//பொய் கேஸ் போட்டு உள்ள தள்ளுர குறுக்கு வழில எல்லாம் கார்த்திக் ஐ.பி.எஸ் போவாருன்னு நான் எதிர்பார்க்கவே இல்லை"//


இதென்ன இந்த தீபாவை புரிஞ்சுக்கவே முடியலையே..!!!

நவீன் ப்ரகாஷ் said...

ஒவ்வொரு காட்சி நகர்வும் அப்படியே கண்முன் நிகழ்வதுபோல்
விவரித்திருப்பது மிகவும் அருமை திவ்யா...!!

நவீன் ப்ரகாஷ் said...

வேகமா அடுத்த பாகத்தையும் வெளியிட்டால் திவ்யாவுக்கு ஒரு
"ஓ" போடலாம்னு நெனைக்கறேன்.. என்ன சொல்றே..? :)))

புதியவன் said...

காவல் நிலையத்தில் நடக்கும் காட்சிகளை கண் முன் கொண்டு வந்தது போல் இருக்கு உரையாடல்கள் அனைத்தும்...

புதியவன் said...

//நான்....முத்துவை பெயில்ல எடுக்க வந்திருக்கிற டாக்டர் தீபா.......புருஞ்சுதா அஸிச்டண்ட் கமிஷ்னர் சார்??"

"ஸா....ஸாரி டாக்டர்........."//

நச்...வரிகள்...

புதியவன் said...

கதையின் இந்தப் பகுதி முழுதும் உணர்வுக் குவியல்...ஒரு காதல் கதைக்குள் சரஸ்வதியின் கதையை யதார்த்தமாக கொண்டு செல்வது அருமை...

கதையின் அடுத்த பகுதிக்காக காத்திருக்கிறோம் தொடருங்கள் திவ்யா...

FunScribbler said...

ஆஹா.. கதை நல்லா போகுது!! போலீஸ் கதாபாத்திரம் சூப்பர்!!

மணி said...

எனக்கு ஒரு சந்தேகம் எல்லா கதைக்கும் படத்தை தேடிட்டு கதை எழுதுவீங்களா இல்லை எழுதிட்டு தேடுவீங்களா?
படங்கள் காட்சியுடன் பொருந்திவருவது நல்ல அனுபவத்தை கொடுக்குது விசுவலா கற்பனை செய்யவும் தூண்டுது.
தொடருங்கள்

Nimal said...

சூப்பரா இருக்கு...

அவசரமா வாசிச்சேன்.. இப்ப flightஐ புடிக்கணும்... பிறகு ஆறுதலா படிக்கிறேன்... :-)

Vijay said...

ஒவ்வொரு பாகத்துலயும் பொளந்து கட்டறீங்க!!!! :-)

Divyapriya said...

இந்த தடவை கதை கொஞ்சம் சின்னதா இருந்த மாதிரி இருக்கே?

ஆனா கதை இப்படி தான் போகும்னு யூக்கிக்கவே முடியல...பயங்கரமா போகுது...வித்யாசமா இருக்கு...

sri said...

Endha herion ellam epdi dhaana purinjukkava mduiyama deepa kariyam panraangaley, paavam karthik

Raghav said...

ஆஹா.. என்னதிது கதை ரொம்பவே சீரியஸா போகுது.. ஹீரோ சார் நல்லாவே பின்னுறாரு (அடியும் தான்)..

கதைப்பின்னல்கள் நல்லாருக்கு

கோபிநாத் said...

அடுத்து!!

Karthik said...

ஹி..ஹி. எனக்கு ஜோசியம் ஒத்து வராதுன்னு நினைக்கிறேன்.

கதை நல்லா இருக்கு. :)

vinu said...

this is great but all seems like watching a weekly serial . good pa but it making me to check with curiously on each and every time whenever i am using net in a day itself i am checking the ur blog for the updation of this story great work divya

Unknown said...

நன்று!!! மீண்டும் அடுத்த பதிவுக்கு காத்திருக்கு வைச்சிட்டீங்க திவ்யா! சீக்கிரம் பதிக்கவும்!

Unknown said...

வழக்கம் போல் உங்கள் உரையாடல்களை (கதையின்) ரசித்தேன்!!

அன்புடன் அருணா said...

ம்ம்ம்ம்...அப்புறம்???
அன்புடன் அருணா

Bhuvanesh said...

அட போங்க உங்கள பாராட்டி டைப் அடுச்சு அடுச்சு கை வலிக்குது :)

Gajani said...

கதையோட்டம் ரொம்ப நல்ல இருக்கு:)

நட்புடன் ஜமால் said...

திவ்யா ரொம்ப அருமையா போகுது - சீக்கிரம் அடுத்த பாகத்தையும் எழுதிடுங்க.

JSTHEONE said...

Kadhai swarashiyamaa pogudhu kalakunga nalla nadai.... expecting for the next post... sooooper...