April 05, 2009

சந்தித்தவேளை - 2 [பகுதி 2]



பகுதி - 1

சத்யா காலிங் பெல்லை அழுத்திவிட்டு காத்திருந்தான், அவன் எதிர்பார்த்தபடி 'அவள்' தான் கதவை திறந்தாள்......

அவளை இதற்கு முன் பார்த்ததே இல்லாததுபோல் முகத்தை வைத்துக்கொண்டு, அவளிடம்....

"இந்த பில்டிங்ல மிஸ்டர் ராம்குமாரோட வீடு எதுன்னு கொஞ்சம் சொல்ல முடியுமா??" என்றான் சத்யா.

".............." அவள் பதலளிக்காமல் புருவமுயர்த்தி அவனை கூர்ந்து பார்த்தாள்.

"என்னங்க உங்களைத்தான் கேட்கிறேன்........மிஸ்டர் ராம்குமாரோட....."

"என்ன.......மிஸ்டர் சத்யா........... உங்க அண்ணா வீட்டுக்கே ....என்கிட்ட வழி கேட்கிறீங்களா????......வீட்டு சாவி வாங்க வந்துட்டு, இதுல லொள்ளு வேற" என்று கேலி புன்னகை சிந்தினாள் அவள்!

'தான் யார் என்பது இவளுக்கு எப்படி தெரியும்' என்று அவன் விழித்துக்கொண்டிருக்க, கிட்ச்சனில் வேலையாக இருந்த அவளது அம்மா....

"வாசல்ல ........யாருமா வைஷு" என்று கேட்டுக்கொண்டே வாசலுக்கு வந்தவர், சத்யாவை அங்கு கண்டதும்,

"வாங்க தம்பி.......வாங்க......உள்ள வாங்க" என்று முகம் மலர உபசரித்தார்.

"இல்ல..........சாவி வேணும்.............நான் யார்னு உங்களுக்கு........எப்படி?"

"நீங்க விடிய காலையில கிரிஜா வீட்டுக்காரர் கூட ரெயில்வே ஸ்டேஷன்ல இருந்து கார்ல வந்து இறங்கினதை, நானும் வைஷுவும் எங்க வீட்டு பால்கனியில இருந்து பார்த்தோம்............கிரிஜா ஏற்கெனவே நீங்க பெங்களுர்ல இருந்து இங்க ஒரு கல்யாணத்துக்கு வர்ரதா சொல்லியிருந்தாப்ல"

" ஓ.......அப்படீங்களா"


'அடப்பாவி........நான் யார்ன்னு உனக்கு முன்னமே தெரியுமா??........தெரிஞ்சுட்டுத்தான் இவ்ளோ பேச்சு பேசினியா???'
யோசித்தபடியே சத்யா.......தன் அம்மாவிற்கு பின் மறைவாக நின்றிருந்த வைஷு என்ற வைஷ்ணவியை பார்த்தான்,

தலையை லேசாக சாய்த்து, அதே நமட்டு சிரிப்பு அவளிடமிருந்து!!

"அண்ணி சாவி கொடுத்தாங்களா.........சாவி தர்ரீங்களா??"

"கிரிஜா இப்போ ஆஸ்பத்திரில இருந்து ஃபோன் பண்ணாப்ல........ஆஸ்பத்திரில ரொம்ப கூட்டமா இருக்குதாம், வீட்டுக்கு வர்ரதுக்கு லேட்டாகும்னு சொன்னாப்டி.......நீங்க உள்ளாற வாங்க தம்பி.......பத்து நிமிஷத்துல டின்னர் ரெடி ஆகிடும், எங்க வீட்ல சாப்பிடலாம்"

"இல்ல..........இல்லீங்க ப்ரவாயில்ல......நான் கிளம்ப்றேன்.....சாவி....." என்று சத்யா மறுத்துக்கொண்டிருக்க, கழுவிய முகத்தை மேல் துண்டால் துடைத்தபடி வைஷுவின் அப்பா உள்ளிருந்து வாசலுக்கு வந்தார்,

"உள்ள வாங்க.........உங்களுக்காகத்தான் வெயிட் ப்ண்ணிட்டு இருந்தோம்....நம்ம வீட்ல டின்னர் சாப்பிட்டுட்டு போலாம் வாங்க" என்று அவரும் சிரித்த முகத்துடன் வரவேற்க, மேலும் மறுக்க இயலாமல் அவருடன் உள்ளே சென்று ஸோஃபாவில் அமர்ந்தான் சத்யா.

சமையல் அறையில் உதவி செய்கிறேன் பேர்விழி என்று அம்மாவின் பின்னாடியே ஒட்டிக்கொண்டு உள்ளே சென்று மறைந்துக்கொண்டாள் வைஷ்ணவி!

அரசியல் , நாட்டு நடப்பு, பொருளாதாரம் என்று கலகலப்பாக தோழமையுடன் வைஷ்ணவியின் அப்பா பேசிக்கொண்டு இருந்தது, அவரிடம் நீண்ட நாட்கள் பழகிய ஒரு உணர்வையும் , மதிப்பையும் ஏற்படுத்தியது சத்யாவின் மனதில்.

இரண்டு நிமிடத்திற்கு ஒரு முறை, கிட்சனிலிருந்து வெளிவந்து,
"இன்னும் ரெண்டே நிமிஷத்துல டின்னர் ரெடி ஆகிடும் தம்பி" என்று பாசத்துடன் தம்பி......தம்பி என்று வைஷுவின் அம்மா அழைத்தது, அவனுக்குள்ளும் ஒரு பாசயுணர்வை உண்டாக்கியது.

டின்னர் சாப்பிட டைனிங் டேபிளில் அமர்ந்த வேளையில், டியூஷன் சென்றிருந்த வைஷ்ணவியின் தம்பி வீட்டிற்கு வந்தான், அவனும் 'நான் என் அப்பாவிற்கு சலைத்தவன் இல்லை' என்று நிரூபிக்கும் வன்னம் க்ரிக்கட், சினிமா என்று கலகலத்துக்கொண்டிருந்தான்.

முழு குடும்பத்தையும் சத்யாவிற்கு மிகவும் பிடித்துப்போனது!!

டின்னர் நேரத்தில், அவ்வப்போது சாப்பாடு பரிமாற டைனிங் டேபிள் வந்தாளே தவிர, அவனை நிமிர்ந்து பார்க்கவே இல்லை வைஷ்ணவி!

'என்கிட்ட மாட்டமலா போய்டுவா.......கள்ளி!' என்று நினைத்துக்கொண்டான் சத்யா.

அவர்கள் சாப்பிட்டு முடிக்கும் நேரம் வைஷுவின் அப்பாவிற்கு ஃபோன் வந்துவிட, அவளது தம்பி ட்ரஸ் சேஞ்ச் என்று அவனது அறைக்கு சென்றுவிட, அவளது அம்மா வைஷுவிடம்..........சத்யா கை கழுவ பாத்ரூம் எங்கு இருக்கிறது என்று காண்பிக்கும்படி கூறினார்.

சத்யா கைகழுவுவதற்காக பாத்ரூம்க்கு அருகிலிருந்த வாஷ்பேசினை காட்டிவிட்டு , அவ்விடம் விட்டு நகர எத்தனித்தாள் வைஷு......

"என்ன அம்மனி நைஸா நழுவுறீங்க......வெயிட் வெயிட்...உன்கிட்ட கொஞ்சம் பேசனும்"


அவன் வெயிட் பண்ண சொன்னதும், சுவரோடு ஒட்டிக்கொண்டு நின்றாள் வைஷு,
கைகழுவி விட்டு அங்கிருந்த டவலில் கைகளை துடைத்தபடி சத்யா அவளருகில் வந்து...

"ஸோ.......நான் யார்னு தெரிஞ்சுட்டேதான் இத்தனை கலாட்டாவும் பண்ணிருக்க...அப்படித்தானே???"

"அதான் இப்ப தெரிஞ்சுடுச்சில......தனியா வேற சொல்லனுமாக்கும்" என்று மெதுவான குரலில் முனுமுனுத்தாள் வைஷு. பண்ணின லூட்டி அப்பா அம்மாவிற்கு கேட்டுவிடுமோ என்ற பயம் அவளுக்கு.

"என்ன வாய்க்குள்ளே முனங்குற........பேரர் கெட்சப்ன்னு கேட்கிறப்போ மட்டும் ஃபுல் ஃபாஸ்ட் ஃபுட்டுக்கும் கேட்கிற மாதிரி குரல் கொடுத்தே......."

"..........."

"சரி....ஏன் அப்படி வம்பு பண்ணின?"

"அது.......அது வந்து....."

"ஹ்ம் வந்து........."

"..........."

"என்ன பேச்சே காணோம்...........சொல்லு.........."

தொண்டையை செறுமிக்கொண்டு குரலை சரி செய்து கொண்ட வைஷு, அவனிடம்....

"அது வந்து......போன வாரம் உங்க அண்ணி......அதான் கிரிஜா அக்கா, அவங்களும் என் அம்மாவும் பேசிட்டிருந்ததை நான் கேட்டேன்....."

"ம்ம்ம்........என்ன பேசிக்கிட்டாங்க?"

"வருணோட சித்தப்பா சத்யா பெங்களூர்ல இருந்து இங்க வர்ராங்க, நீங்க பையனை பாருங்க, பிடிச்சிருந்தா சொல்லுங்க......நானும் என் வீட்டுக்காரரும் அவர்கிட்ட நம்ம வைஷுவை பத்தி பேசுறோம், அவருக்கும் பிடிச்சிருந்தா........மேற்கொண்டு என் மாமனர் மாமியார்கிட்ட பேசி முடிச்சுடலாம்.........அப்படின்னு......"

"ஹா ஹா...!!! அடடா என் அண்ணி எனக்கு பொண்ணு பார்க்கிற வேலையை எனக்கே தெரியாம பண்றாங்களா, இது தெரியாம போச்சே"

"................'

"சரி.........மாப்பிள்ளை பையன்னு தெரிஞ்சுமா .......என்கிட்ட லொள்ளு பண்ணின?"

"ம்ம்.........ஆமா...."

"நீ பண்ணின வாலுத்தனம் பார்த்து ஒருவேளை எனக்கு உன்னைய பிடிக்காம போயிருந்துச்சுன்னா.......??"

"உங்களுக்கு கொடுத்து வைச்சது அவ்வளவுதான்னு ..........போய்ட்டே இருப்போம்ல" என்று குறும்பு புன்னகையுடன், இல்லாத காலரை தூக்கி விட்டுக்கொண்டாள் வைஷு.

"கவுத்திட்டியே .........கள்ளி!!" என்றபடி அவளுக்கு மிக அருகில் நின்று.....அவள் கண்களை ஊடுருவ பார்த்தபடி....

" பிடிச்சிருக்கு........ரொம்ப பிடிச்சிருக்கு.........உன்னையும் உன் குடும்பத்தையும்" என்றான் சத்யா.



அவனது அருகாமை,
காதல் மொழி பேசும் அவனது பார்வை.......
அனைத்தும் அவளது ரத்த நாளங்களுடன் விளையாட,
செவ்வானமாக சிவந்தது வைஷ்னவியின் முகம்!!

அவளது வெட்கி சிவந்த முகத்தை ரசிப்புடன் பார்த்த சத்யாவை....மீண்டும் உணர்வு தென்றல் வியாபித்தது!!

நீ கொஞ்சம் பேசினாலே
கொஞ்ச தோன்றுகிறதே..
மிச்சமும் பேசினால்
மிஞ்சவும் தோன்றுமோ?


இதற்கு மேல் தாங்காது என்று அவள் சட்டென்று அங்கிருந்து நகர, அவளை போகவிடாமல் சுவற்றில் கைவைத்து மறித்தபடி சத்யா.....

"ஹே வைஷு..........ஒன் மினிட் வெயிட்.......நமக்குள்ளே இன்னொரு கணக்கு முடிக்க வேண்டியிருக்கு"

"எ......என்னது?"

"பேரர்ன்னு கூப்பிட்டதுக்கு ........இன்னும் நீ ஸாரி கேட்கலியே"

தலையை லேசாக சாய்த்து , அவனை கூர்ந்து பார்த்த வைஷு.....

"சாதா ஸாரி வேணுமா.........ஸ்பேஷல் ஸாரி வேணுமா?" என்றாள்.

"அதென்ன ஸ்பெஷல் ஸாரி......"

"முகத்தை பாவமா வைச்சுட்டு........'ஐ அம் ஸாரி' அப்படின்னு சொன்னா, அது சாதா ஸாரி..........அதுவே ஜெயம் ரவி கிட்ட அசின் கேட்ட மாதிரி ஸாரி கேட்டா.........அது ஸ்பெஷல் ஸாரி"

"ஆஹா...........அப்போ எனக்கு சூப்பர் ஸ்பெஷல் ஸாரிதான் வேணும்"

"அய்யே.......ஆசைதான்"

"யாரும் வர்ரதுக்கு முன்னாடி ஸ்பேஷல் ஸாரி கேளு...கமான் க்விக், க்விக்!"

"அட அவசரபடாதீங்க சார்............எங்க அம்மா செய்த சப்பாத்தி& குருமாவை ஆஹா ஓஹோன்னு புகழ்ந்தீங்க இல்ல..........அதே ஸ்பீடோட கல்யாண சாப்பாடு ரெடி பண்ண ஏற்பாடு பண்ணுங்க.........அப்புறம் ஸ்பேஷல் ஸாரி மட்டுமில்ல...........அதோட சேர்த்து போனஸும் தரேன்"

அவள் குறும்புடன் கண்சிமிட்ட..........அவன் அவளது நாடியை பிடித்து நிமிர்த்தி, கண்ணோடு கண் பார்த்து.........

"ஷ்யுர் வைஷு.........சீக்கிரம் கட்டிக்கலாம்" என்று கிறங்கடிக்கும் குரலில் கூறியதும், மீண்டும் வைஷுவின் முகம் செவ்வண்ணம் பூசிக்கொண்டது.



பெரியவர்களின் சம்மதத்துடன், சத்யா-வைஷு வின் திருமணம் விரைவிலே நடைபெற்றது.

முற்றும்.

68 comments:

said...

திவ்யா...குட்டியா அழகா முடிஞ்சிருக்கு இந்த சந்தித்தவேளை... மிகவும் ரசித்துப் படித்தேன்...:)))

said...

//முழு குடும்பத்தையும் சத்யாவிற்கு மிகவும் பிடித்துப்போனது!!//

பின்னே இப்படி ஒரு அழகான பாப்பா இருக்கறப்போ புடிக்காம இருக்குமா திவ்யா..?? ;)))))

said...

// அவன் வெயிட் பண்ண சொன்னதும், சுவரோடு ஒட்டிக்கொண்டு நின்றாள் வைஷு,///

அதென்னா திவ்யா ஒட்டிகிட்டு நிக்கிறது...?? ;)))) ஒட்டிகிட்டு நிக்கிறப்போ வர்ற டயலாக்ஸ் எல்லாமே
குறும்பான ரொமான்ஸோட அழகா இருக்கு...!! :))

said...

//
நீ கொஞ்சம் பேசினாலே
கொஞ்ச தோன்றுகிறதே..
மிச்சமும் பேசினால்
மிஞ்சவும் தோன்றுமோ?//

கொஞ்சலும் மிஞ்சலும் காதலான உணர்வுகள் இல்லையா..?
கவிஞர் திவ்யாவின் கைவண்ணம் மெருகேறிக்கொண்டே வருகிறது...!!!

said...

அழகான கதைக்கு மேலும் அழகு சேர்க்கின்றன கதையில் வரும் உரையாடல்கள்...
ரசித்துப் படித்தேன்... வாழ்த்துக்கள் !! :)))

said...

\\பெரியவர்களின் சம்மதத்துடன், சத்யா-வைஷு வின் திருமணம் விரைவிலே நடைபெற்றது.\\

நல்ல முடிவு.

(மீண்டும் ஒரு முறை படிச்சிட்டு அப்பாலிக்கா வாறேன்)

said...

superp

said...

hey top 5la commentiten :D

said...

சுபம் :)

கவிதை நன்று.

கதைக் களம் நன்று.

said...

அழகான உரையாடல்களுடன் நல்லாருந்துச்சு திவ்யா..

said...

//பிடிச்சிருக்கு........ரொம்ப பிடிச்சிருக்கு.........உன்னையும் உன் குடும்பத்தையும்" என்றான் சத்யா.//

இப்புடிக் கவுந்துட்டானே...

எனக்கும் பிடிச்சுருக்கு ரொம்ப பிடிச்சுருக்கு கதை மொத்தமும் பிடிச்சுருக்கு.

said...

//நீ கொஞ்சம் பேசினாலேகொஞ்ச தோன்றுகிறதே..மிச்சமும் பேசினால்மிஞ்சவும் தோன்றுமோ?//

யக்கோவ், நீங்களாம் இப்படி சூப்ப்ப்ப்ப்ப்ரா எழுதினா, நாங்களாம் எழுதுறதுக்கு ஒன்னுமே இருக்காது யக்கோவ்!:)

கதை as usual ultimate kalakalz

said...

கதையைப் படிச்சுட்டு ஒரு பெரீஈஈஈய பெருமூச்சு தான் விட முடிகிறது. நம் வாழ்க்கையில் நடக்காததையெல்லாம் உங்க கதையைப் படிச்சுட்டு, அதிலுள்ள கதாபாத்திரத்தில் ஃபிட் பண்ணிக்க வேண்டியது தான் :-)

said...

கதை முழுதும் குறும்புடன் காதல் செல்கிறது

////நீ கொஞ்சம் பேசினாலே
கொஞ்ச தோன்றுகிறதே..
மிச்சமும் பேசினால்
மிஞ்சவும் தோன்றுமோ?////

கதையின் நடுவில் இந்த கவிதை ரொம்ப அருமை...

said...

//"உங்களுக்கு கொடுத்து வைச்சது அவ்வளவுதான்னு ..........போய்ட்டே இருப்போம்ல" என்று குறும்பு புன்னகையுடன், இல்லாத காலரை தூக்கி விட்டுக்கொண்டாள் வைஷு.
//

இந்த வரிகளை மிகவும் ரசித்தேன்...

வாழ்த்துக்கள் திவ்யா...

said...

என்ன பட்ன்னு முடிச்சிட்டிங்க...

செம ஸ்பீடு திவ்யா...கதையில தான் இந்த மாதிரி எல்லாம் முடியும்...ரசிக்கும் படியாக அருமையாக வந்திருக்கு கதை ;)

said...

\\"உங்களுக்கு கொடுத்து வைச்சது அவ்வளவுதான்னு ..........போய்ட்டே இருப்போம்ல" என்று குறும்பு புன்னகையுடன், இல்லாத காலரை தூக்கி விட்டுக்கொண்டாள் வைஷு.

"கவுத்திட்டியே .........கள்ளி!!" என்றபடி அவளுக்கு மிக அருகில் நின்று.....அவள் கண்களை ஊடுருவ பார்த்தபடி....

" பிடிச்சிருக்கு........ரொம்ப பிடிச்சிருக்கு.........உன்னையும் உன் குடும்பத்தையும்" என்றான் சத்யா.
\\

குறும்புகள் கரும்புகள்

said...

\\நீ கொஞ்சம் பேசினாலே
கொஞ்ச தோன்றுகிறதே..
மிச்சமும் பேசினால்
மிஞ்சவும் தோன்றுமோ?\\

நல்லாயிருக்கு.

said...

என்னாங்க கதைய முடிச்சிட்டீங்க‌

கல்யாணவாழ்க்கைப்பத்தி போடுங்க அப்புறம் டங்குவாரு கிழியுறது தெரியும்

said...

கதை அழகு! உங்கள் கதை flow is very good!

//உங்களுக்கு கொடுத்து வைச்சது அவ்வளவுதான்னு ..........போய்ட்டே இருப்போம்ல" என்று குறும்பு புன்னகையுடன், இல்லாத காலரை தூக்கி விட்டுக்கொண்டாள் வைஷு.

//

இதை யாராச்சும் அவுங்க சினிமால பிட் அடிக்க போறாங்க!

Ur Love stories are really nice!

said...

திவ்யா….நல்லா இருந்துச்சு கதை….super feel good story :)))

said...

felt the story and scenes.. kalakkitteenga...

//கல்யாணவாழ்க்கைப்பத்தி போடுங்க அப்புறம் டங்குவாரு கிழியுறது தெரியும்//

ha ha... Intha vendukolai consider pannumpadi kettu kolkiren :))

said...

திவ்யா (alias) தொடர்கதை திவ்யா,

Superb!! Excellent Narration and great writing style!! I have been a regular reader of your blog for a long time, but never commented so for, but anyways better late than never..

I read almost all your series. All of them were too good.. You are the queen of series wiritng. Almost all your stories has a romantic touch and woven around family circle.. Keep blogging!!

said...

//கதையில தான் இந்த மாதிரி எல்லாம் முடியும்//

:)) Amaam thala... Divya maathiri aatkalellaam ippadi oru kathaiya ezuthi usupeththi vittuduraanga.. atha nambi naamalum ovvoru restauranta eri erangunaalum oruththiyum nammala koopda maatengraalunga :((

said...

Super Romantic Kalakkareenga Divya Master Rock On :)

said...

நல்லாருக்குப்பா!!!
அன்புடன் அருணா

said...

Very nice picuture potta dhaaley, cinema partha effect - Trisha and the new hero acting good amma , appa rolea namaley horlicks aunty , hamam uncle ellam pottutom. Vivek dhaan missing :P

said...

//கல்யாணவாழ்க்கைப்பத்தி போடுங்க அப்புறம் டங்குவாரு கிழியுறது தெரியும்//

LOL !!!

said...

இனிமையான முடிவு திவ்யா.
உங்க கதைகள்ல வர்ற சுபமான முடிவுகள் பல நேரங்கள்ல பெரு மூச்சு விட வைக்குது.

விஜய் எனும் நண்பர் பின்னூட்டத்துல சொல்லியிருக்க மாதிரி உங்க கதையில வர்றத வாழ்க்கையில கற்பனை தான் செஞ்சுக்க வேண்டியிருக்கு.

said...

திவ்யா,

ரெண்டு பகுதிகளும் படிச்சேன்..தேவதைகள்..திருவிழா..ரொம்பப் பிடிச்சுது..

said...

//
நீ கொஞ்சம் பேசினாலே
கொஞ்ச தோன்றுகிறதே..
மிச்சமும் பேசினால்
மிஞ்சவும் தோன்றுமோ?//

வரிகள் கலக்குது :)

said...

வழக்கம் போல் கலக்கல் திவ்யா, குட்டியா கியூட்டா..

said...

\\Blogger நவீன் ப்ரகாஷ் said...

திவ்யா...குட்டியா அழகா முடிஞ்சிருக்கு இந்த சந்தித்தவேளை... மிகவும் ரசித்துப் படித்தேன்...:)))\\


ரசிப்பினை பகிர்ந்தமைக்கு நன்றி நவீன் ப்ரகாஷ்!

said...

\\Blogger நவீன் ப்ரகாஷ் said...

//முழு குடும்பத்தையும் சத்யாவிற்கு மிகவும் பிடித்துப்போனது!!//

பின்னே இப்படி ஒரு அழகான பாப்பா இருக்கறப்போ புடிக்காம இருக்குமா திவ்யா..?? ;)))))\\


பாப்பா வா??

அது சரி:))

said...

\\Blogger நவீன் ப்ரகாஷ் said...

// அவன் வெயிட் பண்ண சொன்னதும், சுவரோடு ஒட்டிக்கொண்டு நின்றாள் வைஷு,///

அதென்னா திவ்யா ஒட்டிகிட்டு நிக்கிறது...?? ;)))) ஒட்டிகிட்டு நிக்கிறப்போ வர்ற டயலாக்ஸ் எல்லாமே
குறும்பான ரொமான்ஸோட அழகா இருக்கு...!! :))\\


டயலாக்ஸெல்லாம் ரசித்து படித்ததிற்கு நன்றி !

said...

\\Blogger நவீன் ப்ரகாஷ் said...

//
நீ கொஞ்சம் பேசினாலே
கொஞ்ச தோன்றுகிறதே..
மிச்சமும் பேசினால்
மிஞ்சவும் தோன்றுமோ?//

கொஞ்சலும் மிஞ்சலும் காதலான உணர்வுகள் இல்லையா..?
கவிஞர் திவ்யாவின் கைவண்ணம் மெருகேறிக்கொண்டே வருகிறது...!!!\\


கவிஞரின் பாராட்டு உவகை அளிக்கிறது, நன்றி!

said...

\\Blogger நவீன் ப்ரகாஷ் said...

அழகான கதைக்கு மேலும் அழகு சேர்க்கின்றன கதையில் வரும் உரையாடல்கள்...
ரசித்துப் படித்தேன்... வாழ்த்துக்கள் !! :)))\\


வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் மிக்க நன்றி நவீன் ப்ரகாஷ்!

said...

\\Blogger நட்புடன் ஜமால் said...

\\பெரியவர்களின் சம்மதத்துடன், சத்யா-வைஷு வின் திருமணம் விரைவிலே நடைபெற்றது.\\

நல்ல முடிவு.

(மீண்டும் ஒரு முறை படிச்சிட்டு அப்பாலிக்கா வாறேன்)\\


பொறுமையுடன் பதிவினை படித்தமைக்கும், பின்னூட்டத்திற்கும் நன்றி ஜமால்!

said...

\\Blogger Gajani said...

superp\\


உங்கள் வருகைக்கும் பாராட்டிற்கும் நன்றி கஜனி!

said...

\\Blogger gils said...

hey top 5la commentiten :D\\


:))

வருகைக்கும் உற்சாகத்திற்கும் நன்றி கில்ஸ்!

said...

\\Blogger நாகை சிவா said...

சுபம் :)

கவிதை நன்று.

கதைக் களம் நன்று.\\


உங்கள் வருகைக்கும் மனம்திறந்த பாராட்டிற்கும் மிக்க நன்றி சிவா!!

said...

\\Blogger Raghav said...

அழகான உரையாடல்களுடன் நல்லாருந்துச்சு திவ்யா..\\

உரையாடல்கள் பிடிச்சுருந்ததா ராகவ்?
நன்றி:))

said...

\\Blogger Raghav said...

//பிடிச்சிருக்கு........ரொம்ப பிடிச்சிருக்கு.........உன்னையும் உன் குடும்பத்தையும்" என்றான் சத்யா.//

இப்புடிக் கவுந்துட்டானே...

எனக்கும் பிடிச்சுருக்கு ரொம்ப பிடிச்சுருக்கு கதை மொத்தமும் பிடிச்சுருக்கு.\\


வருகைக்கும், பின்னூட்ட பாராட்டுதலுக்கும் மிக்க நன்றி ராகவ்!

said...

\\Blogger Thamizhmaangani said...

//நீ கொஞ்சம் பேசினாலேகொஞ்ச தோன்றுகிறதே..மிச்சமும் பேசினால்மிஞ்சவும் தோன்றுமோ?//

யக்கோவ், நீங்களாம் இப்படி சூப்ப்ப்ப்ப்ப்ரா எழுதினா, நாங்களாம் எழுதுறதுக்கு ஒன்னுமே இருக்காது யக்கோவ்!:)

கதை as usual ultimate kalakalz\\


அம்மாடியோவ்.....நீங்க எம்மாம் பெரிய எழுத்தாளர்,நீங்களே இப்படி சொல்லலாமா??


வருகைக்கும் பாராட்டிற்கும் நன்றி காயத்ரி!!

said...

\\Blogger விஜய் said...

கதையைப் படிச்சுட்டு ஒரு பெரீஈஈஈய பெருமூச்சு தான் விட முடிகிறது. நம் வாழ்க்கையில் நடக்காததையெல்லாம் உங்க கதையைப் படிச்சுட்டு, அதிலுள்ள கதாபாத்திரத்தில் ஃபிட் பண்ணிக்க வேண்டியது தான் :-)\\


அதுக்காகத்தானே இப்படி கதை எழுதுறதே;)))

வருகைக்கும் கருத்திற்கும் நன்றி விஜய்!!!

said...

\\Blogger புதியவன் said...

கதை முழுதும் குறும்புடன் காதல் செல்கிறது

////நீ கொஞ்சம் பேசினாலே
கொஞ்ச தோன்றுகிறதே..
மிச்சமும் பேசினால்
மிஞ்சவும் தோன்றுமோ?////

கதையின் நடுவில் இந்த கவிதை ரொம்ப அருமை...\\


கவிஞரின் ரசிப்பிற்கும் பாராட்டிற்கும் மிக்க நன்றி!!

said...

\\Blogger புதியவன் said...

//"உங்களுக்கு கொடுத்து வைச்சது அவ்வளவுதான்னு ..........போய்ட்டே இருப்போம்ல" என்று குறும்பு புன்னகையுடன், இல்லாத காலரை தூக்கி விட்டுக்கொண்டாள் வைஷு.
//

இந்த வரிகளை மிகவும் ரசித்தேன்...

வாழ்த்துக்கள் திவ்யா...\\


வாழ்த்துக்களுக்கு நன்றி புதியவன்!!

said...

\\Blogger கோபிநாத் said...

என்ன பட்ன்னு முடிச்சிட்டிங்க...\\

இதுவே ரொம்ப நீளம்னு நான் நினைச்சேன்.....நீங்க பட்டுன்னு முடிஞ்சுடுச்சுன்னு சொல்றீங்களே கோபி:((

இதுக்கும் மேலே இழுவை போட்டா......பதிவு படிக்கிற நண்பர்கள் பாவம்:))

\\ செம ஸ்பீடு திவ்யா...கதையில தான் இந்த மாதிரி எல்லாம் முடியும்...ரசிக்கும் படியாக அருமையாக வந்திருக்கு கதை ;)\\

ரசிப்பிற்கும் பாராட்டிற்கும் மிக்க நன்றி கோபி!!

said...

\\Blogger நட்புடன் ஜமால் said...

\\"உங்களுக்கு கொடுத்து வைச்சது அவ்வளவுதான்னு ..........போய்ட்டே இருப்போம்ல" என்று குறும்பு புன்னகையுடன், இல்லாத காலரை தூக்கி விட்டுக்கொண்டாள் வைஷு.

"கவுத்திட்டியே .........கள்ளி!!" என்றபடி அவளுக்கு மிக அருகில் நின்று.....அவள் கண்களை ஊடுருவ பார்த்தபடி....

" பிடிச்சிருக்கு........ரொம்ப பிடிச்சிருக்கு.........உன்னையும் உன் குடும்பத்தையும்" என்றான் சத்யா.
\\

குறும்புகள் கரும்புகள்\\


நேரம் எடுத்து......மீண்டும் பதிவினை படித்து, நீங்க ரசிச்ச பகுதிகளை குறிப்பிட்டு பின்னூட்டமிட்டதிற்கு நன்றி ஜமால்!!

said...

\\Blogger நட்புடன் ஜமால் said...

\\நீ கொஞ்சம் பேசினாலே
கொஞ்ச தோன்றுகிறதே..
மிச்சமும் பேசினால்
மிஞ்சவும் தோன்றுமோ?\\

நல்லாயிருக்கு.\\


:))

நன்றி ஜமால்!

said...

\\Blogger அபுஅஃப்ஸர் said...

என்னாங்க கதைய முடிச்சிட்டீங்க‌

கல்யாணவாழ்க்கைப்பத்தி போடுங்க அப்புறம் டங்குவாரு கிழியுறது தெரியும்\\


LOL:))

கல்யாண வாழ்க்கைப்பத்தி போடுடலாம்.....விரைவில்!!


வருகைக்கும் கருத்திற்கும் நன்றி அபுஅஃப்ஸர்!!

said...

\\Blogger Surya said...

கதை அழகு! உங்கள் கதை flow is very good!

//உங்களுக்கு கொடுத்து வைச்சது அவ்வளவுதான்னு ..........போய்ட்டே இருப்போம்ல" என்று குறும்பு புன்னகையுடன், இல்லாத காலரை தூக்கி விட்டுக்கொண்டாள் வைஷு.

//

இதை யாராச்சும் அவுங்க சினிமால பிட் அடிக்க போறாங்க!

Ur Love stories are really nice!\\


வருகைக்கும் பின்னூட்ட பாராட்டுதலுக்கும் மிக்க நன்றி சூர்யா!!

said...

\Blogger Divyapriya said...

திவ்யா….நல்லா இருந்துச்சு கதை….super feel good story :)))\\\


ரொம்ப தாங்க்ஸ் திவ்யப்ரியா!

said...

\\Blogger ஜி said...

felt the story and scenes.. kalakkitteenga...\\


பாராட்டிற்கும் ரசிப்பிற்கும் மிக்க நன்றி கவிகதாரியரே!!


//கல்யாணவாழ்க்கைப்பத்தி போடுங்க அப்புறம் டங்குவாரு கிழியுறது தெரியும்//

ha ha... Intha vendukolai consider pannumpadi kettu kolkiren :))\\

:))))

said...

\\Blogger Ramya Ramani said...

Super Romantic Kalakkareenga Divya Master Rock On :)\\


பாராட்டிற்கு மிக்க நன்றி ரம்யா!!

said...

\\Blogger Mahalingam said...

திவ்யா (alias) தொடர்கதை திவ்யா,\\


தொடர்கதை திவ்யா வா??

முத்திரை குத்திடுவீங்க போலிருக்குதே:((

எனினும் மிக்க நன்றிங்க மகாலிங்கம்!!


\\
Superb!! Excellent Narration and great writing style!! I have been a regular reader of your blog for a long time, but never commented so for, but anyways better late than never..\\

தொடர்ந்து இவ்வளவு நாள் என் பதிவுகள் அனைத்தும் பொறுமையுடம் படித்து வந்தமைக்கு ரொம்ப ரொம்ப நன்றி!!


\\ I read almost all your series. All of them were too good.. You are the queen of series wiritng. Almost all your stories has a romantic touch and woven around family circle.. Keep blogging!!\\


உங்கள் விரிவான, மனம்திறந்த பாராட்டு பெரிதும் மகிழ்வித்தது;))

ஊக்கப்படுத்தியமைக்கு மிக்க நன்றி!!

தொடரட்டும் உங்கள் வருகை.....!

said...

\\Blogger ஜி said...

//கதையில தான் இந்த மாதிரி எல்லாம் முடியும்//

:)) Amaam thala... Divya maathiri aatkalellaam ippadi oru kathaiya ezuthi usupeththi vittuduraanga.. atha nambi naamalum ovvoru restauranta eri erangunaalum oruththiyum nammala koopda maatengraalunga :((\\


அச்சச்சோ.......ஜி ரொம்ப ஃபீல் பண்றாப்ல தெரியுதே,
கவலைப்படாதீங்க கதாரியரே, விரைவில் கெட்சப் ஆர்டர் கிடைக்க வாழ்த்துக்கள்:))

said...

\\Blogger அன்புடன் அருணா said...

நல்லாருக்குப்பா!!!
அன்புடன் அருணா\\

ரொம்ப நன்றிங்க அருணா!

said...

\\Blogger Srivats said...

Very nice picuture potta dhaaley, cinema partha effect - Trisha and the new hero acting good amma , appa rolea namaley horlicks aunty , hamam uncle ellam pottutom. Vivek dhaan missing :P\\

சினிமா டைரக்டர் ரேஞ்சுக்கு பின்னூட்டம் போட்டிருக்கிறீங்க ஸ்ரீவட்ஸ்:))

உங்கள் முதல் வருகைக்கு மிக்க நன்றி!!

said...

\\Blogger Srivats said...

//கல்யாணவாழ்க்கைப்பத்தி போடுங்க அப்புறம் டங்குவாரு கிழியுறது தெரியும்//

LOL !!!\\

:))

said...

\\Blogger ஜோசப் பால்ராஜ் said...

இனிமையான முடிவு திவ்யா.
உங்க கதைகள்ல வர்ற சுபமான முடிவுகள் பல நேரங்கள்ல பெரு மூச்சு விட வைக்குது.

விஜய் எனும் நண்பர் பின்னூட்டத்துல சொல்லியிருக்க மாதிரி உங்க கதையில வர்றத வாழ்க்கையில கற்பனை தான் செஞ்சுக்க வேண்டியிருக்கு.\\


பதிவு படிப்பவரின் முகத்தில் ஒரு சிறு புன்னகையாவது பிறப்பிக்கட்டுமே நான் எழுதும் கதை, என்பதே என் ஆசை:))
அதனாலதான்.....சுபமான கதைகள் எழுத விரும்புகிறேன்!

அதனால...பெருமூச்செல்லாம் விடாம, சந்தோஷமா பதிவை படிக்கனும் சரியா:))

வருகைக்கும் தருகைக்கும் நன்றி ஜோசஃப்!!

said...

\\Blogger பாச மலர் said...

திவ்யா,

ரெண்டு பகுதிகளும் படிச்சேன்..தேவதைகள்..திருவிழா..ரொம்பப் பிடிச்சுது..\\

பொறுமையுடன் இரண்டு பகுதிகளையும் படித்து பின்னூட்டமிட்டமைக்கு மிக்க நன்றிங்க பாசமலர்!!!

said...

\\Blogger Saravana Kumar MSK said...

வழக்கம் போல் கலக்கல் திவ்யா, குட்டியா கியூட்டா..\\

வருகைக்கும் பாராட்டிற்கும் மிக்க நன்றி சரவணா குமார்!!

said...

ungal kadhaigalum,kavithaigalum arumai..Happy to read all of those..nanbarin moolam ungaling arimugam kidaithathu mikka magizhchi.

Thanks and keep it up..

said...

\\Blogger Raj said...

ungal kadhaigalum,kavithaigalum arumai..Happy to read all of those..nanbarin moolam ungaling arimugam kidaithathu mikka magizhchi.

Thanks and keep it up..\\

உங்கள் வருகைக்கும், பொறுமையுடன் என் முந்தைய பதிவுகள் பலவற்றை படித்து, கருத்துக்களை பின்னூட்டமிட்டமைக்கும் என் மனமார்ந்த நன்றி ராஜ்!

said...

Chanceless Superb one.... awesome wonderful no words to explain....


nalla situation la story eduthu irukeenga....

kalakunga....

said...

தமிழ் பதிவுகளை பார்க்கும்போது உண்டாகும் மகிழ்வுக்கு இணையே இல்லைதான் ! எங்கு சென்றாலும் நம் தாய் மொழியை காணும்போது தோன்றும் அந்த சந்தோசமே ஒரு இன்பம் தான் ! கடந்த பத்து மாதங்களாக அமெரிக்காவில் என் பிள்ளைகளுடன் வசித்து வரும் எனக்கு தமிழ் பதிவுகள் தான் மனம் நிறையும் ஈடுபாடு. ஆங்கில உச்சரிப்பில் என் இரு பேத்திகளும் தமிழ் பாட்டு பாடுவதை கேட்கும்போது மெய் சிலிர்த்து போவது என்னுடைய அன்றாட பொழுது போக்காகிவிட்டது. வைரமுத்துவின் வரிகளில் சொல்ல வேண்டும் என்றால் "பதிவுக்கு தமிழ் அழகு "! வாழ்க தமிழ், வளர்க தமிழ் பதிவுகள்.

said...

hm romba nalla eruku ma