December 10, 2008

உயிரே!....உறவாகவா??? - 4



உயிரே!....உறவாகவா??? - 1

உயிரே!....உறவாகவா??? - 2

உயிரே!....உறவாகவா??? - 3



பானுவின் பிறந்தநாளான அன்று மட்டுமாவது இளமாறனிடம் பேசும்படி ரமேஷும் , பெற்றொரும் வற்புறுத்தவே பானுவும் சம்மதித்தாள்.

அவளது வீட்டினரின் சம்மதத்துடன் பானுவை வெளியில் அழைத்துச் சென்றான் இளமாறன்.

நீண்ட நாட்களுக்குப் பின் பானுவும் , இளாவும் அவனது காரில் சென்றனர்.

சாரல் மழையும்...
மெல்லத் தீண்டும் தென்றலும்...
மேனியை வருடிச் செல்ல…
அதுவே அன்றைய பொழுதில் ஒரு இனிய சுகத்தைக் கொடுத்தது.

அந்த சுகத்தை அனுபவித்தவாறு…
இருவரும் ...பயணத்தைத் தொடர்ந்தார்கள்.


நீண்ட நாட்களுக்கு பின்......அன்றைய கால நிலையும், சூழ்நிலையும் சேர்ந்து...
இளாவின் மனதுக்குள் புது வித ராகம் பாட…

அவளுடன் பயணிக்கும் ஒவ்வொரு கண நேரத்திலும்...
அவன் முகத்திலும், அகத்திலும்...
ஆயிரமாயிரம் உணர்ச்சி வெள்ளம்...
இன்பமாக பொங்கி எழத் தொடங்கின.


மழை சாரல்!
மாலை நேரம்!
அருகில் தேவதையாய் அவள்!

அந்தத் தேவதைக்குப் பக்கத்தில் இருந்ததால்…
இதுவரை அவனுள் புதைந்திருந்த காதல் தீ...
பட்டெனப் பற்றிக் கொண்டு...
சுவாலை விட்டு எரியத் தொடங்கியது.

சாரலாகவோ
நிரம்பவோ
எப்பொழுதும் நான்
ரசிக்கும் மழை நீ...
எப்போது மீண்டும்
திரண்டு வந்து
மழையாய்
பொழிவாய் உன்
காதலை....
நனையக் காத்திருக்கிறேனடி...!!!


எதிர்புறம் இருந்து வருகின்ற வாகனங்கள் அடித்த வெளிச்சத்திலும்…
தாண்டிச் செல்லும் மின் கம்பங்களில் இருந்து ஒளித்த...
மின் குமிழ்களின் வெளிச்சத்திலும்...

அவள் முகம் மறைந்து மறைந்து...
மீண்டும் தெரிந்தது,
மேகங்களுக்குள் ஒளிந்து ஒளிந்து விளையாடும் நிலவைப் போல!!


அந்த இருட்டான வாகனத்தில் வெளிச்சம் வந்து போகும் போது...
அவனுக்கு அவனது தேவதை தெரிந்தாள்.

அவனது இதயத்தின் அறைகளில் எல்லாம்...
மெல்லிய பூவாசம் அடித்தால் போல்...
சுகந்தமாய் வாசம் வீசத் தொடங்கியது!!

அமைதியாக யோசனையில் மூழ்கிய படி காரின் முன் இருக்கையில் அமர்ந்திருக்கும் பானுவை பார்க்கையில்........இளாவிற்கு அவர்கள் இருவரும் காதலிக்க தொடங்கிய காலக்கட்டத்தில் இளாவின் பிறந்தநாளை இருவரும் சேர்ந்து கொண்டாடியது நினைவிற்கு வந்தது......!!



இளாவின் பிறந்தநாள் அன்று அவனது விருப்பப்படி, அவனுக்கு மிகவும் பிடித்த கலரில் புடவை உடுத்தி வந்தாள் பானு.
இருவரும் கோவிலுக்கு சென்றுவிட்டு, காரில் வந்தமர்ந்ததும்......,

பானு அவனுக்கு அன்பளிப்புடன் ஒரு வாழ்த்து அட்டையும் கொடுத்தாள்.
வாழ்த்து அட்டையை பிரித்த இளா.......அதனுள் பானு எழுதியிருந்த கவிதையை படித்து அதிசயத்துப் போனான்.

"செல்லம்.......நீ கவிதை கூட எழுதுவியா?? சொல்லவே இல்ல....சூப்பரா இருக்குடி குட்டிமா"

"நன்றி.......நன்றி........"

"ஒவ்வொரு வரியும் செம கியூட்டா இருக்கு.......உன்ன மாதிரியே"

"போதும் போதும்.......ஜொள்ளு வலியுது,தொடச்சுக்கோங்க"

"ஹே.......நிஜம்மா தாண்டா சொல்றேன்.....ரொம்ப பிடிச்சிருக்கு உன்னையும், உன் கவிதையையும்"

"ஹும்........"

"என்ன.........ஹும் னு சலிச்சுக்கிறே"

"ம்ம்.......வெறும் விமர்சனம் மட்டும்தானா என் கவிதைக்கு??"

"ச்ச.....ச்ச........இவ்வளவு அழகா கவிதை எழுதின என் செல்லத்துக்கு பரிசு கொடுக்காம இருப்பேனா"

கண்சிமிட்டலுடன்.......அவளது கரங்களை எடுத்து, உள்ளங்கையில் அழுத்தமான முத்தமிட்டான் இளா!

"கவிதை எழுதிய கைகளுக்கு பரிசாக முத்தம்......போதுமாடி செல்லம்??"


"அட.....இந்த பரிசு கிடைக்கும்னு தெரிஞ்சிருந்தா........கவிதைக்கு பதில் 'பாட்டு' பாடியிருப்பேனே" என்று குறும்பு புன்னைகையுடன் பானு கண்சிமிட்ட,

ஒரு நிமிடம் அவள் என்ன கூற வருகிறாள் என்று புரியாத இளா........சற்று யோசித்து விட்டு, பின்....

"என் குறும்புகார வெல்லக்கட்டி........நீ பாட்டு பாடாமலே அந்த பரிசு தர நான் ரெடி..............நீ???" என்று கேட்டபடி அவள் முகத்தின் அருகில் செல்ல, பானுவின் முகம் நாணத்தால் சிவந்தது!!!

"ச்சீ........போடா"

"என்னது......போ 'டா' வா????????"


கோபப்படுவதுபோல் முகபாவத்தை மாற்றியபடி இளா இன்னும் அவளை நெருங்கி, அவள் காதில்.......


உன் வெட்கங்களை
என் இதழ்களால்
களவாடிவிட்டு
போ'டா' என்ற
இதழ்களுக்கு தண்டனையாக
என் இதழ்களுக்குள்
சிறைபிடிக்கப் போகிறேன் பார்......!!!


பழைய நினைவுகளை சுவைத்தபடி,
அவர்கள் வழக்கமாக செல்லும் பீச்சிற்கே காரைச் செலுத்தினான் இளா.
அவர்கள் பீச்சை சென்றடையும் போது மழை நின்றிருந்தது.

இருவருமே எதுவும் பேசிக்கொள்ளாமல் ஒர் இடத்தில் அமர்ந்தனர்.
அவன் பக்கம் திரும்பாமல் தூரத்தில் தெரிந்த அலைகளில் பார்வையை பதித்திருந்தாள் பானு.

"பாவி.. பக்கத்தில் உனது பார்வைக்கு ஏங்கும் ஜீவனை விட்டுட்டு.. அலைகளை பார்த்து கொண்டிருக்கிறாயே..?" என்று மனதுக்குள் செல்லமாய் பானுவை திட்டியவன்,கொஞ்சம் அசைந்தால் அவளை ஸ்பரிசிக்கலாம் என்ற அளவுக்கு இடைவெளி விட்டு அவளது அருகே அமர்ந்தான்.

பானு அவனை திரும்பி பார்த்தாள்.
பானுவின் முகத்தில் முன்பிருந்த பளபளப்பு இல்லை, இளமை இல்லை.
அவனது கண்களைக் கண்டதும் அவள் தன்னைக் கட்டுபடுத்திக் கொள்ள இயலாமல் ஓசைப்படுத்தாமல் அழுதாள்.

அவன் எதுவுமே சொல்லாமல் அவள் கைகளைத் தன் கைக்குள் வைத்துக் கொண்டு வெகு நேரம் உட்கார்ந்திருந்தான்.

மனசில் பொங்கிய உணர்ச்சிகளை வெளியே காட்டாமல் ரொம்ப கஷ்டப்பட்டு அடக்கிக் கொண்டிருக்கிறான் என்று சிவந்து போன அவன் முகத்திலிருந்து தெரிந்தது.
குனிந்திருந்த இளம் முகத்தைப் பார்க்க அவனுக்கு மிகவும் வேதனையாக இருந்தது.


பால் போலக் கபடமற்ற முகம்.
தாமரை மலர் போல அழகான அமைப்பு.
இப்போது வேதனையால் மொட்டுப் போலக் கூம்பி விட்டதைக் காண அவனுக்கு சகிக்கவில்லை.
மெதுவாக அவளது இடது கை விரல்களை தடவியபடியே பேச்சை அரம்பித்தான்.

"பானு...."

"ம்ம்.."

"பானு.......மதிமாறன் மறுபடியும் கதை எழுதனும்"

வியப்புடன் விழிகள் விரிய அவனைப் பார்த்தாள் பானு.

"ஆமாம் பானு.........நீ தொடர்ந்து எழுதனும்........நிறைய எழுதனும், உனக்குள்ள இவ்வளவு பெரிய எழுத்து திறமை வைச்சுட்டு நீ இப்படி இடிஞ்சு போய்ட கூடாதுமா செல்லம்"

" இளா.......நீங்க என்ன சொல்றீங்கன்னு புரிஞ்சு தான் சொல்றீங்களா.........எனக்கு தான்.........வலது கை......."

தனது வலது கரத்தை அவள் முன் நீட்டினான் இளா......

"இந்த கை எழுதும்.........பானு எழுத நினைக்கிற எண்ணங்களை மதிமாறனின் எழுத்துக்களாக்கும் இளமாறனின் இந்த வலதுகை"

"........"

பேச வார்த்தைகளின்றி.....விளித்தாள் பானு!!!

எனக்கு தெரியும் நீ
ஒரு ரோஷக்காரி என...
கை இல்லாவிட்டால்
என்னடி..
உன் தாயாக மட்டுமல்ல
உன் கையாகவும் இருப்பேன்
நான்...
நம்பிக்கை கொள்ளடி..
என் செல்லமே..


".........."

"என்னமா நம்ப மாட்டியா என்னை......."

"இல்ல...............எனக்கு.....என்ன சொல்றதுன்னு......"

"என்னடா இது இதுக்கெல்லாம் கண்கலங்கிக்கிட்டு.......கண் துடைச்சுக்கோ , "

"......."

"நான் ரசிச்சு பிரமிச்சுப்போன எழுத்துக்களுக்கு சொந்தகாரி நீன்னு தெரிஞ்சுப்போ.........சந்தோஷத்துல திக்கு முக்காடிட்டேன்டா பானு"

".........."

" என் செல்லதுக்குள்ளே இப்படி ஒரு எழுத்து திறமையான்னு மலைச்சுப்போய்ட்டேன் தெரியுமா??.........ஆனா கள்ளிடா நீ, வேணும்னே மதிமாறனோட எழுத்தை எவ்வளவு மட்டம் தட்டிருக்க என்கிட்ட"

செல்லமாய் அவள் கன்னங்களில் கிள்ளினான் இளமாறன்.

முன்பெல்லாம் இப்படி செல்லமாய் கிள்ளினால் கூட, உடனே பானு
செல்ல கோபத்தில்.. அழகாய் விழிகள் விரிய, அவளது உணர்ச்சிகளின் வெளிப்பாடாய், அவனது மார்பிலும்.. வயிற்றிலும்.. சரமாரியாய் அடிகளை குத்துகளை வாரிவழங்கி.. ஓய்ந்துபோய்.. கண்கள் கலங்க.. அவனது மார்பில் பானு சாய்ந்து கொள்வாள்…

இளா அவளை தனக்குள்ளே புதைத்து கொள்ளும் வேகத்தில்.. இறுக்கி அணைத்து.. அப்புறம்.. அப்புறம்.. முத்த மழை பொழிவான்!!!

ஆனால் இன்றோ வெறுமையான ஒரு புன்னகையுடன் அவனைப் பார்த்துக்கொண்டிருந்தாள் பானு.

"என்னமா பானு........ஏன் ஒரு மாதிரி இருக்கிறே?"

"உங்கள் கைகள் மதிமாறனோட கதைகள் மட்டும் எழுதினா போதும்"

" நீ என்ன சொல்ல வர்ரேன்னு புரியல......"

" கை ஒடைஞ்சு போன உங்க ஆத்மார்த்த எழுத்தாளராய் மட்டும் என்னை பாருங்கன்னு சொல்றேன்"

"பானு........பானுமா........."

விருட்டென்று எழுந்தவள் தன் கண்ணீரை மறைக்க முடியாதவளாய், சிறிது தூரம் நடந்துச் சென்று கடல் அலைகளில் கால் நினைத்தபடி நின்றாள் பானு.


சிறிது நேரம் அவளையே பார்த்துக்கொண்டிருந்த இளா........அவள் தன்னைவிட்டு விலகி விலகி செல்வதும் அவள் தன் மீது வைத்திருக்கும் 'காதலால்' தான் என்பதை உணர்ந்தவனாய், அவளுக்கு தன் மீதுள்ள காதலை எண்ணி பிரமித்தான்!!

இப்போதிற்க்கு அவளது அருகாமையே போதும்..........அவளது எழுத்தாற்றல் மறைந்து போக கூடாது, என் பானுவிற்காக பொறுமையாக காத்திருப்பேன் என்ற தீர்மானத்துடன் அவளுக்கு அருகில் நின்று அலைகளில் கால் பதித்தான்.

"பானுமா........நீ இப்போ ரொம்ப குழம்பி போய் இருக்கிற......இப்போ எந்த முடிவிற்கும் வரவேண்டாம்.....இப்போதிற்க்கு கதைகள் எழுதுவதில் கவனம் செலுத்து, நீ எழுத நினைக்கிறதை என்கிட்ட சொல்லு........நான் எழுதுறேன்......மத்ததெல்லாம் அப்புறம் பார்த்துக்கலாம் , சரியா???"

"ஹும்........"

" பெரிய எழுத்தாளர் மதிமாறனின் எண்ணங்களுக்கு வடிவம் கொடுக்க என் கைகள் கொடுத்து வைச்சிருக்கனும் "என்று கண் சிமிட்டினான்,


அவள் கட்டாயமாக புன்னகையை வரவழைக்க முயற்சித்தாள்.
அம்முயற்சி கூட அவன் கண்களுக்கு அழகாகவே தெரிந்தது.

சீறி வந்த அலை அவளது இடுப்பு வரையில் நனைத்து விட்டு ஓட....ஒரு கணம் தடுமாறி விழப்போனவளை கெட்டியாய் பிடித்துக்கொண்டான் இளமாறன்..
இதைச் சற்றும் எதிர்பாராத பானு, தன்னை உதறிக்கொள்ள முயற்சிக்க..அடுத்த அலையினால் தாக்கப் பட்டவளாய் மீண்டும் அவன் மீதே சாய்ந்தாள்.

நிமிர்ந்து விழிகளை விரித்து அவனைப் பார்த்தாள். அவ்வளவுதான் .....அந்தக்கண்களில் ஏதோ ஒரு காந்தவிசையீர்ப்பு அவள் இதயத்துள் ஏதேதோ பேசியது...

உன் நினைவுகள் மட்டும்
போதும் என்று
தள்ளி தள்ளிதான்
போனேன்...
அவை என்னவோ
என்னை தள்ளிக்
கொண்டுவந்து
என்னை நீ
அள்ளிக்கொள்ள
வைக்கின்றன...
உன்னையும்
உன் நினைவுகளையும்
என்ன செய்யவேன்..??
நானும்
அள்ளிக்கொள்வதைத்தவிர..!!!



அந்தப்பார்வை அவளுக்குள் ஓர் மின்னலை ஏற்படுத்தியதும் ........மறுகணம் அவனது வலிய கரங்களின் அணைப்பில் அவள் சங்கமம் ஆகியிருந்தாள்.


அதிகமான துயரமும், அதிகமான மகிழ்ச்சியும் மனிதர்களைத் தன்னிலையிலிருந்து பிறழவைத்து விடுகின்றன என்பது உண்மைதான்.

முற்றும்.

120 comments:

Anonymous said...

மிக அழகான கவித்துவமான முடிவு...
மிகவும் ரசித்துப் படித்தேன் திவ்யா..
வாழ்த்துக்கள்...

Anonymous said...

//சாரல் மழையும்...
மெல்லத் தீண்டும் தென்றலும்...
மேனியை வருடிச் செல்ல… //


இந்தப்பகுதியில் வரும்
வர்ணனைகள் ரொம்ப அழகா இருக்கு
திவ்யா..!! ரொம்ப அனுபவிச்சு
எழுதியிருப்பீங்க போல... :)))

Anonymous said...

//எதிர்புறம் இருந்து வருகின்ற வாகனங்கள் அடித்த வெளிச்சத்திலும்…
தாண்டிச் செல்லும் மின் கம்பங்களில் இருந்து ஒளித்த...
மின் குமிழ்களின் வெளிச்சத்திலும்...

அவள் முகம் மறைந்து மறைந்து...
மீண்டும் தெரியவும்…
மேகங்களுக்குள் ஒளிந்து ஒளிந்து விளையாடும் நிலவைப் போல!! //

கதை எழுத சொன்னா இப்படி அழகா
கவிதைதனமா யோசிச்சு எழுதினா
என்ன அர்த்தம்ங்கறேன்..?
இப்படியெல்லாம் ரொம்ப அழகா
எழுதக்கூடாது திவ்யா.. :))))

Anonymous said...

நாயகியின் மெல்லிய சோகம் எப்படியெல்லாம்
வெளிப்படும்னு பார்த்துப் பார்த்து சொல்லி
இருக்கும் இடங்கள் எல்லாம் கற்பனையை
இன்னும் அழகாக்குகின்றன திவ்யா..!! :))

Anonymous said...

//உன் வெட்கங்களை
என் இதழ்களால்
களவாடிவிட்டு
போ'டா' என்ற
இதழ்களுக்கு தண்டனையாக
என் இதழ்களுக்குள்
சிறைபிடிக்கப் போகிறேன் பார்......!!! //


அட்ரா சக்கை....அட்ரா சக்கை... திவ்யா கலக்கல் கவிதை...
இந்த கவிதைக்கு முன்னாடி எழுதியிருக்கும்
டயலாக் கவிதையை மிகவும் ரசித்துப் படித்தேன்
திவ்யா.. வர வர இவளோ அழகா எழுதினா என்ன
பண்ண நான்..?? பாராட்டுவதை தவிர.. :))))))

Anonymous said...

க்ரைம் சேர்ந்த கரம் மசாலாவில்
மிக அழகான உணர்வுகளை
தூவி மிக சுவையான கதை
விருந்து படைத்திருக்கிறீர்கள்
திவ்யா...

:))))

said...

அழகனா அருமையான முடிவு...

கதை பேசும் கவிதைகளும்... காதல் பேசும் வார்த்தைகளும் அழகு...

இறுதி பாகத்தை தாமதமானாலும் சிறப்பான ஒரு முடிவை கொடுத்திருக்கீங்க...

வாழ்த்துக்கள்...

said...

காதல் மழை, கவிதை மழை இரண்டும் கலந்த அருமையான கதை, ரெம்ப ரசித்தேன்

said...

//"அட.....இந்த பரிசு கிடைக்கும்னு தெரிஞ்சிருந்தா........கவிதைக்கு பதில் 'பாட்டு' பாடியிருப்பேனே" என்று குறும்பு புன்னைகையுடன் பானு கண்சிமிட்ட,//

இத தானோ சொல்லுவாங்க அனுபவிச்சி எழுதிறது என்று.... :)))

said...

//உன் நினைவுகள் மட்டும்
போதும் என்று
தள்ளி தள்ளிதான்
போனேன்...
அவை என்னவோ
என்னை தள்ளிக்
கொண்டுவந்து
என்னை நீ
அள்ளிக்கொள்ள
வைக்கின்றன...
உன்னையும்
உன் நினைவுகளையும்
என்ன செய்யவேன்..??
நானும்
அள்ளிக்கொள்வதைத்தவிர..!!!
//

அழகான கவி வரிகளோடு சங்கமித்த காதல்

நல்லா இருக்கு!

said...

good narration.

said...

\\மேகங்களுக்குள் ஒளிந்து ஒளிந்து விளையாடும் நிலவைப் போல!!\\

மிக அழகான வரிகள்.

மனசுக்கள் காதல் இருந்தால்,
கண் முன்னே நடக்கும் யாவும் கவிதையாகவே தோன்றும்.
(கதையின் நாயகனைச்சொன்னேன்)

said...

\\அட.....இந்த பரிசு கிடைக்கும்னு தெரிஞ்சிருந்தா........கவிதைக்கு பதில் 'பாட்டு' பாடியிருப்பேனே" என்று குறும்பு புன்னைகையுடன் பானு கண்சிமிட்ட,\\

ரொமான்ஸ்ஸ்ஸ் ...

said...

\\உன் நினைவுகள் மட்டும்
போதும் என்று
தள்ளி தள்ளிதான்
போனேன்...
அவை என்னவோ
என்னை தள்ளிக்
கொண்டுவந்து
என்னை நீ
அள்ளிக்கொள்ள
வைக்கின்றன...
உன்னையும்
உன் நினைவுகளையும்
என்ன செய்யவேன்..??
நானும்
அள்ளிக்கொள்வதைத்தவிர..!!!\\

அருமை...

said...

\\அதிகமான துயரமும், அதிகமான மகிழ்ச்சியும் மனிதர்களைத் தன்னிலையிலிருந்து பிறழவைத்து விடுகின்றன என்பது உண்மைதான்.\\

சூப்பர் சூப்பர் ஜூப்பர்

said...

nice story! kalakkal narration & dialogues.

said...

The best part of this story is the ending. Simple and cute.

\\"செல்லம்.......நீ கவிதை கூட எழுதுவியா?? சொல்லவே இல்ல....சூப்பரா இருக்குடி குட்டிமா"\\

அது என்ன கவிதைன்னு சொல்லவே இல்லையே :-)

\\உன் நினைவுகள் மட்டும்
போதும் என்று
தள்ளி தள்ளிதான்
போனேன்...
அவை என்னவோ
என்னை தள்ளிக்
கொண்டுவந்து
என்னை நீ
அள்ளிக்கொள்ள
வைக்கின்றன...
உன்னையும்
உன் நினைவுகளையும்
என்ன செய்யவேன்..??
நானும்
அள்ளிக்கொள்வதைத்தவிர..!!!\\

மனதை நெருடும் வரிகள் :-)

said...

\\"என் குறும்புகார வெல்லக்கட்டி........நீ பாட்டு பாடாமலே அந்த பரிசு தர நான் ரெடி..............நீ???" என்று கேட்டபடி அவள் முகத்தின் அருகில் செல்ல, பானுவின் முகம் நாணத்தால் சிவந்தது!!!\\

மைசூர் (!!) ஐயாம் சாரி காதல் ரசம் கறை புரடு ஓடுகிறது!!

\\அதிகமான துயரமும், அதிகமான மகிழ்ச்சியும் மனிதர்களைத் தன்னிலையிலிருந்து பிறழவைத்து விடுகின்றன என்பது உண்மைதான்.\\
தத்துவமெல்லாம் பேசறீங்க!! நீங்க சொன்னா உண்மை தான் !

said...

Subam......

Nalla kathai Divya.....

Valthukukkal


Puthu Rasigan
kannan

said...

Subam......

Nalla kathai Divya.....

Valthukukkal


Puthu Rasigan
kannan

Anonymous said...

நல்ல முடிவு திவ்யா , அருமையான வரிகள்!!
அதுவும் அந்த முடிவு கவிதை சூப்பர்!!

said...

கவித்துவமான காதல் கதை, நல்ல வரிகள்,அருமையான காதல் உணர்வுகலோடு, ரொம்ப ரசிச்சு எழுதி உள்ளிர். மிக அருமை

said...

enna vitruntha..rendu perum beachuku ponanga..thierumbavum lovea start pannanga :D ipdi mokkaiya potrupen :D aana nenga KB kanakka shot vachu..kadir kanakka set poatu..shankar mari brammandama songs vachu..maniratnam mathiri monlogues poatu..kadisila barathiraja "touch"oda mudichinga parunga..there u are nininngs :D poetic post, as usual :)

said...

//அதிகமான துயரமும், அதிகமான மகிழ்ச்சியும் மனிதர்களைத் தன்னிலையிலிருந்து பிறழவைத்து விடுகின்றன என்பது உண்மைதான்.

கலக்கல் மெசேஜ்..கலக்கல் முடிவு.
:)

said...

கடைசி பகுதியில் கற்பனை குதிரை கன்னாபின்னானு ஒடி வெற்றி கோப்பையை அள்ளி இருக்கு. :)

வாழ்த்துக்கள் :)

சுபமான முடிவு :)

மீண்டும் சிரித்த முகத்துடன் த்ரிஷா :)

said...

அருமை திவ்யா!!!!!

அழகா இருந்தது முடிவு.... அடுத்த கதையும் சீக்கரம் போடுங்க!!!!

said...

ஹ்ம்ம் கதைய சுபமா முடிச்சிட்டீங்க…
காதல் கதை, கவிதைகளோட படிக்க ரொம்ப ரொம்ப நல்லா இருந்துச்சு திவ்யா….குறிப்பா இந்த பகுதி கதையா, கவிதையான்னே தெரியல…ஆனா கதைய இவ்ளோ சீக்கரம் முடிச்சிட்டீங்களேன்னு சின்ன வருத்தம் தான் :(

said...

chanceless...
very good narration.
i am reading other stories in ur blog after reading ths....

keep rocking

said...

:))

said...

//உன் வெட்கங்களை
என் இதழ்களால்
களவாடிவிட்டு
போ'டா' என்ற
இதழ்களுக்கு தண்டனையாக
என் இதழ்களுக்குள்
சிறைபிடிக்கப் போகிறேன் பார்......!!! //

அழகான வரிகள்... ரசிக்கும் படியான... தண்டனை.

said...

காதலர்களுக்குரிய சம்பாஷணைகளை... கவிதையாய் சொன்ன விதம்... அழகு.

said...

//அதிகமான துயரமும், அதிகமான மகிழ்ச்சியும் மனிதர்களைத் தன்னிலையிலிருந்து பிறழவைத்து விடுகின்றன என்பது உண்மைதான்.//

சரிதாங்க...

said...

அழகான முடிவு ;))

said...

konjam different :) but good as usual...

kavithaikal vazhakkam pol nanru Divya :)

said...

//அவள் முகம் மறைந்து மறைந்து...
மீண்டும் தெரிந்தது,
மேகங்களுக்குள் ஒளிந்து ஒளிந்து விளையாடும் நிலவைப் போல!!//

அழகான உவமை...

said...

//உன் வெட்கங்களை
என் இதழ்களால்
களவாடிவிட்டு
போ'டா' என்ற
இதழ்களுக்கு தண்டனையாக
என் இதழ்களுக்குள்
சிறைபிடிக்கப் போகிறேன் பார்......!!!//

ரொம்ப அழகான குறும்பான வரிகள்...

said...

//அதிகமான துயரமும், அதிகமான மகிழ்ச்சியும் மனிதர்களைத் தன்னிலையிலிருந்து பிறழவைத்து விடுகின்றன என்பது உண்மைதான்.//

நெகிழ்வான முடிவு...

அழகிய நடையில் நல்ல உயிரோட்டமான கதை...
இவ்வளவு விரைவில் முடிந்ததில் ஒரு சிறிய வருத்தமும் தான்...வாழ்த்துக்கள் திவ்யா...

said...

பொறுமை இல்லாமல் போச்சு திவ்யா!
இவ்லோ எழுதியிருக்கீங்க, இடையிடையே ஏதோ ஒரு நடிகையும், அப்புறம் விக்ரமும் இருக்காங்க....நிறைய எழுதுவதை தவிர்த்துவிட்டு, சுருக்கமாகவும் சுவையாகவும் எழுதி வைத்தால் என்னைபோன்ற அவசர்க்குடுக்கைகளுக்கு ஏதுவாக இருக்கும்! அலுவலகத்தில் ஆயிரம் வேலைக்கு மத்தியில் உங்களை கவனிப்பதில் இடஞ்சல் வராமல் பார்த்துக்கொள்ளவும். பிளிஸ்...

said...

அழகான முடிவு..
//உன் வெட்கங்களை
என் இதழ்களால்
களவாடிவிட்டு
போ'டா' என்ற
இதழ்களுக்கு தண்டனையாக
என் இதழ்களுக்குள்
சிறைபிடிக்கப் போகிறேன் பார்......!!!

கவிதைகள் இன்னும் அழகாக இருக்கின்றது.. :)

said...

"என் குறும்புகார வெல்லக்கட்டி

ippai ellam kudava konjuvanga

said...

"என் குறும்புகார வெல்லக்கட்டி

ippai ellam kudava konjuvanga

said...

உன் நினைவுகள் மட்டும்
போதும் என்று
தள்ளி தள்ளிதான்
போனேன்...
அவை என்னவோ
என்னை தள்ளிக்
கொண்டுவந்து
என்னை நீ
அள்ளிக்கொள்ள
வைக்கின்றன...
உன்னையும்
உன் நினைவுகளையும்
என்ன செய்யவேன்..??
நானும்
அள்ளிக்கொள்வதைத்தவிர..!!!


kavithai varikal armai

said...

அழகான கதை...அழகான படங்கள்....அழகான கவிதை வரிகள்...கலந்து கட்டி கலக்கியிக்கிறீர்கள் திவ்யா.
அன்புடன் அருணா

said...

ஐயோ.. அட்டகாசம் திவ்யா... செம cripy.. :)

said...

//சாரலாகவோ
நிரம்பவோ
எப்பொழுதும் நான்
ரசிக்கும் மழை நீ...
எப்போது மீண்டும்
திரண்டு வந்து
மழையாய்
பொழிவாய் உன்
காதலை....
நனையக் காத்திருக்கிறேனடி...!!!//

அழகு..

said...

//"போதும் போதும்.......ஜொள்ளு வலியுது,தொடச்சுக்கோங்க"//

கொஞ்சம் பொய் சொன்னாலும் பொண்ணுங்க கண்டுபிடிச்சிடுவாங்க போல..

said...

//"அட.....இந்த பரிசு கிடைக்கும்னு தெரிஞ்சிருந்தா........கவிதைக்கு பதில் 'பாட்டு' பாடியிருப்பேனே" என்று குறும்பு புன்னைகையுடன் பானு கண்சிமிட்ட,

ஒரு நிமிடம் அவள் என்ன கூற வருகிறாள் என்று புரியாத இளா........சற்று யோசித்து விட்டு, பின்....

"என் குறும்புகார வெல்லக்கட்டி........நீ பாட்டு பாடாமலே அந்த பரிசு தர நான் ரெடி..............நீ???" என்று கேட்டபடி அவள் முகத்தின் அருகில் செல்ல, பானுவின் முகம் நாணத்தால் சிவந்தது!!!

"ச்சீ........போடா"

"என்னது......போ 'டா' வா????????" //


மூச்சி முட்டுது.. என்ன இதெல்லாம்..

said...

//உன் நினைவுகள் மட்டும்
போதும் என்று
தள்ளி தள்ளிதான்
போனேன்...
அவை என்னவோ
என்னை தள்ளிக்
கொண்டுவந்து
என்னை நீ
அள்ளிக்கொள்ள
வைக்கின்றன...
உன்னையும்
உன் நினைவுகளையும்
என்ன செய்யவேன்..??
நானும்
அள்ளிக்கொள்வதைத்தவிர..!!!//

fantastic.. :)

said...

//அந்தப்பார்வை அவளுக்குள் ஓர் மின்னலை ஏற்படுத்தியதும் ........மறுகணம் அவனது வலிய கரங்களின் அணைப்பில் அவள் சங்கமம் ஆகியிருந்தாள்.//

அவ்ளோதாங்க.. இதுதான் நச்சுன்னு முடித்தல் என்பது.. செம செம..

Anonymous said...

அடடா என்னங்க திவ்யா? அதுக்குள்ள முடிச்சிட்டீங்க சுவாரசியமா போச்சே.....

said...

//அதிகமான துயரமும், அதிகமான மகிழ்ச்சியும் மனிதர்களைத் தன்னிலையிலிருந்து பிறழவைத்து விடுகின்றன என்பது உண்மைதான்.

//

very true

said...

அக்கா சூப்பர்... :)) ரொம்ப அழகா முடிச்சிருக்கீங்க கதைய.. :))

said...

\ நவீன் ப்ரகாஷ் said...

மிக அழகான கவித்துவமான முடிவு...
மிகவும் ரசித்துப் படித்தேன் திவ்யா..
வாழ்த்துக்கள்...\\

உங்கள் ரசிப்பிற்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி நவீன்!!

said...

\\ நவீன் ப்ரகாஷ் said...

நாயகியின் மெல்லிய சோகம் எப்படியெல்லாம்
வெளிப்படும்னு பார்த்துப் பார்த்து சொல்லி
இருக்கும் இடங்கள் எல்லாம் கற்பனையை
இன்னும் அழகாக்குகின்றன திவ்யா..!! :))\\


குறிப்பிட்டு பாராட்டியதிற்கு மிக்க நன்றி நவீன்!!!

said...

\\நவீன் ப்ரகாஷ் said...

//எதிர்புறம் இருந்து வருகின்ற வாகனங்கள் அடித்த வெளிச்சத்திலும்…
தாண்டிச் செல்லும் மின் கம்பங்களில் இருந்து ஒளித்த...
மின் குமிழ்களின் வெளிச்சத்திலும்...

அவள் முகம் மறைந்து மறைந்து...
மீண்டும் தெரியவும்…
மேகங்களுக்குள் ஒளிந்து ஒளிந்து விளையாடும் நிலவைப் போல!! //

கதை எழுத சொன்னா இப்படி அழகா
கவிதைதனமா யோசிச்சு எழுதினா
என்ன அர்த்தம்ங்கறேன்..?
இப்படியெல்லாம் ரொம்ப அழகா
எழுதக்கூடாது திவ்யா.. :))))\\




ஹா ஹா!!

என்ன நவீன் கிண்டலா??

said...

\\நவீன் ப்ரகாஷ் said...

//சாரல் மழையும்...
மெல்லத் தீண்டும் தென்றலும்...
மேனியை வருடிச் செல்ல… //


இந்தப்பகுதியில் வரும்
வர்ணனைகள் ரொம்ப அழகா இருக்கு
திவ்யா..!! ரொம்ப அனுபவிச்சு
எழுதியிருப்பீங்க போல... :)))\\


நீங்க 'அனுபவிச்சு' கவிதை எழுதும் அளவுக்கு அனுபவிச்சு எல்லாம் எழுதலீங்க.......கற்பனையை எழுத்துக்களாக்கினேன் , அவ்வளவே!!!

said...

\ நவீன் ப்ரகாஷ் said...

//உன் வெட்கங்களை
என் இதழ்களால்
களவாடிவிட்டு
போ'டா' என்ற
இதழ்களுக்கு தண்டனையாக
என் இதழ்களுக்குள்
சிறைபிடிக்கப் போகிறேன் பார்......!!! //


அட்ரா சக்கை....அட்ரா சக்கை... திவ்யா கலக்கல் கவிதை...
இந்த கவிதைக்கு முன்னாடி எழுதியிருக்கும்
டயலாக் கவிதையை மிகவும் ரசித்துப் படித்தேன்
திவ்யா.. வர வர இவளோ அழகா எழுதினா என்ன
பண்ண நான்..?? பாராட்டுவதை தவிர.. :))))))\\



ஆஹா......கவிஞரே அட்ரா சக்கைன்னு பாராட்டிட்டாரே?
மிக்க மகிழ்ச்சி:))

உங்கள் பாராட்டு உற்சாகம் தந்தது.......ரொம்ப நன்றி கவிஞரே!!

said...

\\ நவீன் ப்ரகாஷ் said...

க்ரைம் சேர்ந்த கரம் மசாலாவில்
மிக அழகான உணர்வுகளை
தூவி மிக சுவையான கதை
விருந்து படைத்திருக்கிறீர்கள்
திவ்யா...

:))))\\


உங்கள் பின்னூட்ட பாராட்டுக்கள் அனைத்திற்கும் என் மனமார்ந்த நன்றிகள்!!!

said...

\\\\Blogger நிமல்-NiMaL said...

அழகனா அருமையான முடிவு...

கதை பேசும் கவிதைகளும்... காதல் பேசும் வார்த்தைகளும் அழகு...

இறுதி பாகத்தை தாமதமானாலும் சிறப்பான ஒரு முடிவை கொடுத்திருக்கீங்க...

வாழ்த்துக்கள்...\\


உங்கள் தொடர்வருகையும்,
ஊக்கமளிக்கும் பின்னூட்டங்களும் எனக்கு மிகுந்த உற்சாகத்தை தருகிறது தோழரே!!

நன்றி நிமல்!!!

said...

\\Blogger நசரேயன் said...

காதல் மழை, கவிதை மழை இரண்டும் கலந்த அருமையான கதை, ரெம்ப ரசித்தேன்\\


உங்கள் வருகைக்கும், ரசிப்பிற்கும் மிக்க நன்றி நசரேயன்!!!

said...

\\Blogger நிமல்-NiMaL said...

//"அட.....இந்த பரிசு கிடைக்கும்னு தெரிஞ்சிருந்தா........கவிதைக்கு பதில் 'பாட்டு' பாடியிருப்பேனே" என்று குறும்பு புன்னைகையுடன் பானு கண்சிமிட்ட,//

இத தானோ சொல்லுவாங்க அனுபவிச்சி எழுதிறது என்று.... :)))\\


:))))

said...

\\Blogger ஆயில்யன் said...

//உன் நினைவுகள் மட்டும்
போதும் என்று
தள்ளி தள்ளிதான்
போனேன்...
அவை என்னவோ
என்னை தள்ளிக்
கொண்டுவந்து
என்னை நீ
அள்ளிக்கொள்ள
வைக்கின்றன...
உன்னையும்
உன் நினைவுகளையும்
என்ன செய்யவேன்..??
நானும்
அள்ளிக்கொள்வதைத்தவிர..!!!
//

அழகான கவி வரிகளோடு சங்கமித்த காதல்

நல்லா இருக்கு!\\


வாங்க ஆயில்யன்!!

உங்கள் வருகைக்கும் பாராட்டிற்கும் மிக்க நன்றி!!

said...

\\Blogger இராம்/Raam said...

good narration.\\


ரொம்ப தாங்க்ஸ் ராம்!!

said...

\\Blogger அதிரை ஜமால் said...

\\மேகங்களுக்குள் ஒளிந்து ஒளிந்து விளையாடும் நிலவைப் போல!!\\

மிக அழகான வரிகள்.\\



நன்றி ஜமால்!!


\\ மனசுக்கள் காதல் இருந்தால்,
கண் முன்னே நடக்கும் யாவும் கவிதையாகவே தோன்றும்.\\\

நீங்க சொன்னா.....சரியா தான் இருக்கும்:)))



\\ (கதையின் நாயகனைச்சொன்னேன்)\\\

ஒஹோ:)))

said...

\\Blogger அதிரை ஜமால் said...

\\அட.....இந்த பரிசு கிடைக்கும்னு தெரிஞ்சிருந்தா........கவிதைக்கு பதில் 'பாட்டு' பாடியிருப்பேனே" என்று குறும்பு புன்னைகையுடன் பானு கண்சிமிட்ட,\\

ரொமான்ஸ்ஸ்ஸ் ...\\


:))))

said...

\\Blogger அதிரை ஜமால் said...

\\உன் நினைவுகள் மட்டும்
போதும் என்று
தள்ளி தள்ளிதான்
போனேன்...
அவை என்னவோ
என்னை தள்ளிக்
கொண்டுவந்து
என்னை நீ
அள்ளிக்கொள்ள
வைக்கின்றன...
உன்னையும்
உன் நினைவுகளையும்
என்ன செய்யவேன்..??
நானும்
அள்ளிக்கொள்வதைத்தவிர..!!!\\

அருமை...\\


நன்றி ...நன்றி!!

said...

\\Blogger அதிரை ஜமால் said...

\\அதிகமான துயரமும், அதிகமான மகிழ்ச்சியும் மனிதர்களைத் தன்னிலையிலிருந்து பிறழவைத்து விடுகின்றன என்பது உண்மைதான்.\\

சூப்பர் சூப்பர் ஜூப்பர்\\


உங்கள் வருகைக்கும்...பின்னூட்ட பாராட்டுதல்கள் அனைத்திற்கும் என் மனமார்ந்த நன்றி ஜமால்!!

said...

ஹே.......நிஜம்மா தாண்டா சொல்றேன்.....ரொம்ப பிடிச்சிருக்கு உன்னையும், உன் கவிதையையும்"//

அதாங்க யாரு அவங்க??? உண்மையாவா???

said...

\\Blogger கப்பி | Kappi said...

nice story! kalakkal narration & dialogues.\\


பாராட்டியதிற்கு மிக்க நன்றி கப்பி!!!

said...

\Blogger ஜி said...

:))\


வருகைக்கு நன்றி ஜி!!

said...

\\Blogger விஜய் said...

The best part of this story is the ending. Simple and cute.\\


வாங்க விஜய்!!!



\\"செல்லம்.......நீ கவிதை கூட எழுதுவியா?? சொல்லவே இல்ல....சூப்பரா இருக்குடி குட்டிமா"\\

அது என்ன கவிதைன்னு சொல்லவே இல்லையே :-)\\


அந்த கவிதையும் போட்டிருக்கலாம்தான்......ஆல்ரெடி இந்த பார்ட் ல கவிதை டோசேஜ் ஜாஸ்தியா இருக்கிற மாதிரி தோனுச்சு, அதான் அந்த கவிதை போடல:))))



\\உன் நினைவுகள் மட்டும்
போதும் என்று
தள்ளி தள்ளிதான்
போனேன்...
அவை என்னவோ
என்னை தள்ளிக்
கொண்டுவந்து
என்னை நீ
அள்ளிக்கொள்ள
வைக்கின்றன...
உன்னையும்
உன் நினைவுகளையும்
என்ன செய்யவேன்..??
நானும்
அள்ளிக்கொள்வதைத்தவிர..!!!\\
மனதை நெருடும் வரிகள் :-)\\\\


நன்றி விஜய்!!!

said...

\\Blogger விஜய் said...

\\"என் குறும்புகார வெல்லக்கட்டி........நீ பாட்டு பாடாமலே அந்த பரிசு தர நான் ரெடி..............நீ???" என்று கேட்டபடி அவள் முகத்தின் அருகில் செல்ல, பானுவின் முகம் நாணத்தால் சிவந்தது!!!\\

மைசூர் (!!) ஐயாம் சாரி காதல் ரசம் கறை புரடு ஓடுகிறது!!\\


உங்கள் அழகான ரசிப்பிற்கு நன்றி!!




\\அதிகமான துயரமும், அதிகமான மகிழ்ச்சியும் மனிதர்களைத் தன்னிலையிலிருந்து பிறழவைத்து விடுகின்றன என்பது உண்மைதான்.\\
தத்துவமெல்லாம் பேசறீங்க!! நீங்க சொன்னா உண்மை தான் !\\


:))))


உங்கள் விரிவான விமர்சனம் & பின்னூட்டத்திற்கு மிக்க நன்றி விஜய்!!

said...

\\Blogger கண்ணண் said...

Subam......

Nalla kathai Divya.....

Valthukukkal


Puthu Rasigan
kannan\\


வாங்க கண்ணன்,

உங்கள் வருகைக்கும் பாராட்டிற்கும் மிக்க நன்றி!!

said...

\\ suttapalam said...

நல்ல முடிவு திவ்யா , அருமையான வரிகள்!!
அதுவும் அந்த முடிவு கவிதை சூப்பர்!!\\


முடிவு கவிதை நல்லா இருந்ததா??

நன்றி !!!

said...

\\Blogger ராஜா முஹம்மது said...

கவித்துவமான காதல் கதை, நல்ல வரிகள்,அருமையான காதல் உணர்வுகலோடு, ரொம்ப ரசிச்சு எழுதி உள்ளிர். மிக அருமை\\


வாங்க ராஜா,

உங்கள் வருகைக்கும், மனம்திறந்த பாராட்டிற்கும் மிக்க நன்றி!!

said...

\\Blogger gils said...

enna vitruntha..rendu perum beachuku ponanga..thierumbavum lovea start pannanga :D ipdi mokkaiya potrupen :D\\

நீங்க மொக்கை போட்டா கூட சூப்பரா போடுறீங்களே கில்ஸ்..பின்ன என்ன??


\\ aana nenga KB kanakka shot vachu..kadir kanakka set poatu..shankar mari brammandama songs vachu..maniratnam mathiri monlogues poatu..kadisila barathiraja "touch"oda mudichinga parunga..there u are nininngs :D poetic post, as usual :)\\


ஆஹா.......பெரிய பெரிய ஆளுங்களை எல்லாம் இழுத்திருக்கிறீங்களே.....உச்சி குளிர்ந்து போச்சு கில்ஸ்!!

மிக்க நன்றி!!

said...

\\Blogger Karthik said...

//அதிகமான துயரமும், அதிகமான மகிழ்ச்சியும் மனிதர்களைத் தன்னிலையிலிருந்து பிறழவைத்து விடுகின்றன என்பது உண்மைதான்.

கலக்கல் மெசேஜ்..கலக்கல் முடிவு.
:)\\


ரொம்ப நன்றி கார்த்திக்!!!

said...

\\Blogger நாகை சிவா said...

கடைசி பகுதியில் கற்பனை குதிரை கன்னாபின்னானு ஒடி வெற்றி கோப்பையை அள்ளி இருக்கு. :)

வாழ்த்துக்கள் :)\\


பாராட்டிற்கும்,வாழ்த்துக்களுக்கும் நன்றி ஷிவா!!!



\\ சுபமான முடிவு :)

மீண்டும் சிரித்த முகத்துடன் த்ரிஷா :)\\


த்ரிஷா சிரிச்சதும் சந்தோஷமா சிவா??

said...

\\Blogger எழில்பாரதி said...

அருமை திவ்யா!!!!!

அழகா இருந்தது முடிவு.... அடுத்த கதையும் சீக்கரம் போடுங்க!!!!\\


வாங்க எழில்பாரதி!!

உங்கள் பாராட்டிற்கு ரொம்ப நன்றி!!

said...

\\Blogger Divyapriya said...

ஹ்ம்ம் கதைய சுபமா முடிச்சிட்டீங்க…
காதல் கதை, கவிதைகளோட படிக்க ரொம்ப ரொம்ப நல்லா இருந்துச்சு திவ்யா….குறிப்பா இந்த பகுதி கதையா, கவிதையான்னே தெரியல…\\


உங்கள் ரசிப்பிற்கும் பாராட்டிற்கும் நன்றி திவ்யப்ரியா!!



\\ஆனா கதைய இவ்ளோ சீக்கரம் முடிச்சிட்டீங்களேன்னு சின்ன வருத்தம் தான் :(\\


இரண்டே பகுதில சொல்ல வேண்டிய கதையை.....நான் 4 பகுதியா இழுத்திருக்கிறேன், இதுவே கம்மின்னு சொல்றீங்களே:((((


ரொம்ப வருத்த படாதீங்க திவ்யப்ரியா......அடுத்த தொடர் நிறைய பகுதி போட்டுடறேன்:))

said...

\\Blogger MayVee said...

chanceless...
very good narration.
i am reading other stories in ur blog after reading ths....

keep rocking\\


உங்கள் வருகைக்கும் பாராடுதலுக்கும் மிக்க நன்றி!!

நேரம் கிடைக்கையில் மற்றைய பதிவுகளை படித்து கருத்து கூறுங்கள்!!

said...

\\Blogger anbudan vaalu said...

:))\\


வருகைக்கு நன்றி!!

said...

\\Blogger அருள் said...

//உன் வெட்கங்களை
என் இதழ்களால்
களவாடிவிட்டு
போ'டா' என்ற
இதழ்களுக்கு தண்டனையாக
என் இதழ்களுக்குள்
சிறைபிடிக்கப் போகிறேன் பார்......!!! //

அழகான வரிகள்... ரசிக்கும் படியான... தண்டனை.\\


உங்கள் அழகான ரசிப்பிற்கு நன்றி அருள்!!!

said...

\\Blogger அருள் said...

காதலர்களுக்குரிய சம்பாஷணைகளை... கவிதையாய் சொன்ன விதம்... அழகு.\\


மிக்க நன்றி அருள்!!!

said...

\\Blogger அருள் said...

//அதிகமான துயரமும், அதிகமான மகிழ்ச்சியும் மனிதர்களைத் தன்னிலையிலிருந்து பிறழவைத்து விடுகின்றன என்பது உண்மைதான்.//

சரிதாங்க...\\


:)))

said...

\\Blogger கோபிநாத் said...

அழகான முடிவு ;))\\


நன்றி கோபி!!

said...

\\Blogger sathish said...

konjam different :) but good as usual...

kavithaikal vazhakkam pol nanru Divya :)\\


உங்கள் வருகைக்கும், பாராட்டிற்கும் நன்றி கவிஞர் சதீஷ்!!

said...

\\Blogger புதியவன் said...

//அவள் முகம் மறைந்து மறைந்து...
மீண்டும் தெரிந்தது,
மேகங்களுக்குள் ஒளிந்து ஒளிந்து விளையாடும் நிலவைப் போல!!//

அழகான உவமை...\\


வாங்க புதியவன்!!

நன்றி!!

said...

\\Blogger புதியவன் said...

//உன் வெட்கங்களை
என் இதழ்களால்
களவாடிவிட்டு
போ'டா' என்ற
இதழ்களுக்கு தண்டனையாக
என் இதழ்களுக்குள்
சிறைபிடிக்கப் போகிறேன் பார்......!!!//

ரொம்ப அழகான குறும்பான வரிகள்...\\


ரசிப்பிற்கு நன்றி !!

said...

\\Blogger புதியவன் said...

//அதிகமான துயரமும், அதிகமான மகிழ்ச்சியும் மனிதர்களைத் தன்னிலையிலிருந்து பிறழவைத்து விடுகின்றன என்பது உண்மைதான்.//

நெகிழ்வான முடிவு...

அழகிய நடையில் நல்ல உயிரோட்டமான கதை...
இவ்வளவு விரைவில் முடிந்ததில் ஒரு சிறிய வருத்தமும் தான்...வாழ்த்துக்கள் திவ்யா...\\

புதியவன்! உங்கள் வருகைக்கும், வாழ்த்துக்களுக்கும், விரிவான கருத்து பரிமாறுதலுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்!!

மீண்டும் வருக!!

said...

\\Blogger பிரியமுடன்... said...

பொறுமை இல்லாமல் போச்சு திவ்யா!
இவ்லோ எழுதியிருக்கீங்க, இடையிடையே ஏதோ ஒரு நடிகையும், அப்புறம் விக்ரமும் இருக்காங்க....நிறைய எழுதுவதை தவிர்த்துவிட்டு, சுருக்கமாகவும் சுவையாகவும் எழுதி வைத்தால் என்னைபோன்ற அவசர்க்குடுக்கைகளுக்கு ஏதுவாக இருக்கும்! அலுவலகத்தில் ஆயிரம் வேலைக்கு மத்தியில் உங்களை கவனிப்பதில் இடஞ்சல் வராமல் பார்த்துக்கொள்ளவும். பிளிஸ்...\\


உங்கள் வெளிப்படையான கருத்திற்கு நன்றி!!

நிச்சயம் நினைவில் கொள்கிறேன்!!

said...

\\Blogger சுபானு said...

அழகான முடிவு..
//உன் வெட்கங்களை
என் இதழ்களால்
களவாடிவிட்டு
போ'டா' என்ற
இதழ்களுக்கு தண்டனையாக
என் இதழ்களுக்குள்
சிறைபிடிக்கப் போகிறேன் பார்......!!!

கவிதைகள் இன்னும் அழகாக இருக்கின்றது.. :)\\


உங்கள் அழகான ரசிப்பிற்கு நன்றி சுபானு!!

said...

\\Blogger gayathri said...

"என் குறும்புகார வெல்லக்கட்டி

ippai ellam kudava konjuvanga\\


ஏன் இப்படி கொஞ்ச கூடாதா காயத்ரி??

said...

\\Blogger gayathri said...

உன் நினைவுகள் மட்டும்
போதும் என்று
தள்ளி தள்ளிதான்
போனேன்...
அவை என்னவோ
என்னை தள்ளிக்
கொண்டுவந்து
என்னை நீ
அள்ளிக்கொள்ள
வைக்கின்றன...
உன்னையும்
உன் நினைவுகளையும்
என்ன செய்யவேன்..??
நானும்
அள்ளிக்கொள்வதைத்தவிர..!!!


kavithai varikal armai\\

நன்றி காயத்ரி!!

said...

\\Blogger அன்புடன் அருணா said...

அழகான கதை...அழகான படங்கள்....அழகான கவிதை வரிகள்...கலந்து கட்டி கலக்கியிக்கிறீர்கள் திவ்யா.
அன்புடன் அருணா\\


உற்சாகமளிக்கும் உங்கள் பின்னூட்டத்திற்கு மிக்க நன்றி அருணா!!

said...

\\Blogger Saravana Kumar MSK said...

ஐயோ.. அட்டகாசம் திவ்யா... செம cripy.. :)\\


நன்றி ...நன்றி !!

said...

\\Blogger Saravana Kumar MSK said...

//சாரலாகவோ
நிரம்பவோ
எப்பொழுதும் நான்
ரசிக்கும் மழை நீ...
எப்போது மீண்டும்
திரண்டு வந்து
மழையாய்
பொழிவாய் உன்
காதலை....
நனையக் காத்திருக்கிறேனடி...!!!//

அழகு..\\


உங்கள் அழகான ரசிப்பிற்கு நன்றி!!

said...

\\Blogger Saravana Kumar MSK said...

//"போதும் போதும்.......ஜொள்ளு வலியுது,தொடச்சுக்கோங்க"//

கொஞ்சம் பொய் சொன்னாலும் பொண்ணுங்க கண்டுபிடிச்சிடுவாங்க போல..\\


பின்ன......பொண்ணுங்க உஷாரா இருக்கனுமில்ல:)))

said...

\\Blogger Saravana Kumar MSK said...

//"அட.....இந்த பரிசு கிடைக்கும்னு தெரிஞ்சிருந்தா........கவிதைக்கு பதில் 'பாட்டு' பாடியிருப்பேனே" என்று குறும்பு புன்னைகையுடன் பானு கண்சிமிட்ட,

ஒரு நிமிடம் அவள் என்ன கூற வருகிறாள் என்று புரியாத இளா........சற்று யோசித்து விட்டு, பின்....

"என் குறும்புகார வெல்லக்கட்டி........நீ பாட்டு பாடாமலே அந்த பரிசு தர நான் ரெடி..............நீ???" என்று கேட்டபடி அவள் முகத்தின் அருகில் செல்ல, பானுவின் முகம் நாணத்தால் சிவந்தது!!!

"ச்சீ........போடா"

"என்னது......போ 'டா' வா????????" //


மூச்சி முட்டுது.. என்ன இதெல்லாம்..\\


ஹா ஹா!!

மூச்சு முட்டுதா???

அது சரி......:))))))

said...

\\Blogger Saravana Kumar MSK said...

//உன் நினைவுகள் மட்டும்
போதும் என்று
தள்ளி தள்ளிதான்
போனேன்...
அவை என்னவோ
என்னை தள்ளிக்
கொண்டுவந்து
என்னை நீ
அள்ளிக்கொள்ள
வைக்கின்றன...
உன்னையும்
உன் நினைவுகளையும்
என்ன செய்யவேன்..??
நானும்
அள்ளிக்கொள்வதைத்தவிர..!!!//

fantastic.. :)\\

நன்றி!!

said...

\\Blogger Saravana Kumar MSK said...

//அந்தப்பார்வை அவளுக்குள் ஓர் மின்னலை ஏற்படுத்தியதும் ........மறுகணம் அவனது வலிய கரங்களின் அணைப்பில் அவள் சங்கமம் ஆகியிருந்தாள்.//

அவ்ளோதாங்க.. இதுதான் நச்சுன்னு முடித்தல் என்பது.. செம செம..\\


உங்கள் பின்னூட்ட பாராட்டுதல்கள் அனைத்திற்கும் மிக்க நன்றி சரவணன்!!

said...

\\Anonymous ஸ்ரீ said...

அடடா என்னங்க திவ்யா? அதுக்குள்ள முடிச்சிட்டீங்க சுவாரசியமா போச்சே.....\\

சீக்கிரம் முடிஞ்சுடுச்ச மாதிரி தோனுதா ஸ்ரீ??

அடுத்த தொடர்.....நிறைய பகுதி இருக்கிற மாதிரி எழுதிடலாம்:))

வருகைக்கு நன்றி!!

said...

\\Blogger முகுந்தன் said...

//அதிகமான துயரமும், அதிகமான மகிழ்ச்சியும் மனிதர்களைத் தன்னிலையிலிருந்து பிறழவைத்து விடுகின்றன என்பது உண்மைதான்.

//

very true\\


நன்றி முகுந்தன்!!!

said...

\\Blogger ஸ்ரீமதி said...

அக்கா சூப்பர்... :)) ரொம்ப அழகா முடிச்சிருக்கீங்க கதைய.. :))\\

ரொம்ப நன்றிங்க ஸ்ரீமதி!!

said...

கதை அருமை

said...

நல்ல முயற்சி திவ்யா.. அழகான முடிவு..
முதல் பகுதி படிச்சதும் த்ரில்லர்னு பார்த்தா ஒரே கவிதையா எழுதி களத்தையே மாத்திட்டீங்க..
நல்லாயிருந்தது..ஆனா வேகமா சொல்லி முடிச்சா மாதிரி தோனுதே..

said...

அட்டகாசம் திவ்யா

said...

வாவ் superb முடிவு திவ்யா...:) வழமை போலவே, கலக்கிட்டிங்க :)

said...

கதை முடிங்சிருக்கும்னு தெரியும் அந்த பதிவு போட்ட அன்னைக்கே கதையை படிச்சிட்டேன்...ஆனா பின்னூட்டங்களுக்கான தருணம் வாய்க்கவில்லை மாஸ்டர்..
இன்னொரு சந்தர்ப்பத்துல எழுதறேன் கதை நல்ல முடிவு!

said...

கடைசி வரில ஏதோ உள் குத்து இருக்கறா மாதிரி தெரியுது...:)

said...

அடுத்த கதை தயார் பண்ணுங்க...:)

said...

Superb story superb narration... chanceless...

screen play soooper o sooper dialogue in btwn kavidhai super

said...

உங்க‌ள் ப‌திவு மிக‌வும் அருமை.அழகான‌ ,ஆழமான‌ சிந்த‌னை.பாராட்டுக்க‌ள்.

said...

\\Blogger தமிழ் தோழி said...

கதை அருமை\\


மிக்க நன்றி தமிழ் தோழி!!

said...

\\Blogger நாடோடி said...

நல்ல முயற்சி திவ்யா.. அழகான முடிவு..
முதல் பகுதி படிச்சதும் த்ரில்லர்னு பார்த்தா ஒரே கவிதையா எழுதி களத்தையே மாத்திட்டீங்க..
நல்லாயிருந்தது..ஆனா வேகமா சொல்லி முடிச்சா மாதிரி தோனுதே..\\


வாங்க நாடோடி..!

உங்கள் வருகைக்கும், கருத்துக்களுக்கும் நன்றி!!

said...

\\Blogger தாரணி பிரியா said...

அட்டகாசம் திவ்யா\\

ரொம்ப நன்றிங்க தாரணி பிரியா!

said...

\\Blogger Mathu said...

வாவ் superb முடிவு திவ்யா...:) வழமை போலவே, கலக்கிட்டிங்க :)\\


ரொம்ப நன்றி மது!!

said...

\\Blogger தமிழன்-கறுப்பி... said...

கதை முடிங்சிருக்கும்னு தெரியும் அந்த பதிவு போட்ட அன்னைக்கே கதையை படிச்சிட்டேன்...ஆனா பின்னூட்டங்களுக்கான தருணம் வாய்க்கவில்லை மாஸ்டர்..
இன்னொரு சந்தர்ப்பத்துல எழுதறேன் கதை நல்ல முடிவு!\\


நேரம் எடுத்து பின்னூட்டம் போட்ட உங்க நல்ல உள்ளத்திற்கு என் மனமார்ந்த நன்றிகள் தமிழன்!

said...

\\Blogger JSTHEONE said...

Superb story superb narration... chanceless...

screen play soooper o sooper dialogue in btwn kavidhai super\\

ஒவ்வொரு பகுதியும் பொறுமையுடன் படித்து, பின்னூட்டமிட்டு ஊக்கபடுத்தியதிற்கு மிக்க நன்றி சரவணன்!

said...

\\Blogger Raj said...

உங்க‌ள் ப‌திவு மிக‌வும் அருமை.அழகான‌ ,ஆழமான‌ சிந்த‌னை.பாராட்டுக்க‌ள்.\\


உங்கள் முதல் வருகைக்கும், மனம்திறந்த பாராட்டிற்கும் மிக்க நன்றி ராஜ்!

மீண்டும் வருக!