December 19, 2008

காதலில் விழாமல் தப்பிப்பது எப்படி???
காதல் எப்படி?..... எங்கே?..... ஏன்?? வருதுன்னு யாராலயும் சொல்ல முடியாது. வரவேண்டிய நேரத்துல கண்டிப்பா வரும்னு சொல்ல முடியாது.


கண்டதும் காதல் வரலாம்.
கண்டதைப் பார்த்தும் காதல் வரலாம்.
கண்ணடிச்சா காதல் வரலாம்.
கன்னத்துல அடிச்சா கூட காதல் வரலாம்.
இப்படி தொறந்த வீட்டுல..ஸாரி.............., தொறந்த நெஞ்சுக்குள்ள காதல் படார்னு நுழைஞ்சு டூ மினிட்ஸ் நூடுல்ஸ் மாதிரி வேகமாக வெந்து நிக்கும்.


பசிக்கும், ஆனா சாப்பிட்டா ஏப்பம் வராது.
தூக்கம் வரும், ஆனா கொட்டாவி வராது.
நாய் கடிச்சாக் கூட கொசு கடிக்கிற மாதிரிதான் இருக்கும்.
ஆனா கொசு கடிச்சா நாய் கடிச்ச மாதிரி வலிக்கும்.
அழுக்கைப் பார்த்தாலும் அழகாத் தெரியும்.
எருமை கத்துனாக் கூட ஏ.ஆர்.ரஹ்மான் மியூசிக்கா கேட்கும்.
கூட்டத்துல இருக்கறப்ப மனசு தனியா இருக்குற மாதிரி மாஞ்சா தடவி பட்டம் விட்டுக்கிட்டிருக்கும்.
தனியா இருக்கிறப்ப சட்டசபையில இருக்கற மாதிரி மனசு கத்தும்.*காய்ஞ்சு கருவாடாப் போன ரோசாப்பூ,
*எப்பவோ எச்சில் பண்ணுன எட்டணா மிட்டாயைச் சுத்தியிருந்த பேப்பர்,
*கிழிஞ்சு போன பஸ் டிக்கெட்,
*லேசா செம்பட்டையான ஒரு முடி,
*குறைப் பிரசவத்தில் பிறந்த நிலா மாதிரி இருக்கிற நகத்துண்டுகள்,
*காது போன குட்டிக் கரடி பொம்மை,
*ரெண்டு சென்டிமீட்டர் துண்டு பேப்பர்ல எழுதுன மூணு வரிக் கவிதை - இப்படித் தேடித் தேடிச் சேர்த்து வைச்சிருக்கிற பொக்கிஷங்களைப் பல்லை இளிச்சுப் பார்த்துட்டே இருந்தா பரலோகத்துல இருக்குற ஃபீலிங் கிடைக்கும்.


இப்படி மருந்தே கண்டுபிடிக்க முடியாத உயிர்க்கொல்லி நோயான காதல்ல "ஸ்ஸரக்'குன்னு வழுக்கி விழுற இடங்கள் எதுன்னு ஒரு ஜொள்ளு+லொள்ளு ஆராய்ச்சிதான் இது.


* 23சி பஸ்ஸுக்காக 24 நிமிஷங்களாகக் காத்திருப்பீங்க. 25 வயசுள்ள ஒரு பையன் பஸ் வரலையேன்னு டென்ஷனோட 26 வது தடவையா நகத்தைக் கடிப்பான். 27 வது நிமிஷம் பஸ் வர, 28 பேர் முந்தி அடிச்சு ஏறுவோம். நீங்க முன்வாசல். அவன் பின்வாசல். நீங்க கொடுக்குற ரெண்டு ரூபா, 29 பேரைக் கடந்து முப்பதாவது ஆளா அவன் கைக்குப் போகும். அப்புறம் அவன் டிக்கெட் எடுத்துக் கொடுக்குறது தினமும் நடக்கும். அதுக்கு தாங்க்ஸ் சொல்லி ஒரு பார்வையால நன்றி சொல்லுவீங்க. அந்த டொக்கு விழுந்த லுக்கே அவனுக்கு ரொமாண்டிக் லுக்கா தெரியலாம். டிக்கெட்ல "டிக்' ஆகி காதல் விக்கெட் விழலாம். பி கேர் ஃபுல்!
* தொலைச்ச எதையோ தேடிக்கிட்டு வர்ற மாதிரியே ரெண்டு பேரும் எதிர் எதிர்த்தாப்ல வருவீங்க. ஒரு முட்டல், மோதல் நடக்கும். அடுத்த செகண்ட்ல நாலு உதடுகளும் துடிதுடிச்சு "ஸாரி'ன்னு சொல்லும். விலகி நடக்கறப்போ உசிரை எடுத்து வெளியே போட்டுட்டு நடக்குற மாதிரி தோணும். போறப்பவே ரெண்டு பேரும் ஒரே நேரத்துல திரும்பிப் பார்ப்பீங்க. வெட்கமெல்லாம் வேற வர்ற மாதிரி சிரிப்பு ஒண்ணு சிரிப்பீங்க.

அடுத்த நாள், "இந்தாங்க, இது உங்க முடி. நேத்து என் சட்டைப் பொத்தான்ல சிக்கிடுச்சு'ன்னு அவன் கொடுக்க, "பரவாயில்ல, அதை நீங்களே வைச்சுக்கோங்க'ன்னு ஏதோ சொத்து எழுதிக் கொடுக்குற மாதிரி நீங்க சொல்லிட்டுப் போக, அதுக்கு மேல என்ன நடக்குமுன்னு நான் வேற சொல்லணுமாக்கும்.* நீங்க கோயிலுக்குப் போறப்ப எல்லாம் பட்டை அடிச்சிட்டு, பக்தி மாம்பழமா ஒருத்தன் உங்க பின்னாலேயே வருவான். சந்நிதி முன்னால நின்னுட்டு , கண்களை மூடி வேகவேகமாக ஏதோ சொல்லுவான். ஸ்லோகம்னு நினைக்கக் கூடாது. காதைக் கூர்மையா வைச்சுக் கேட்டாத்தான் தெரியும். அது ஸ்லோகமில்ல, ஏதோ சினிமாப் பாட்டுன்னு!

திடீர்னு ஒரு நாள் யாரோ உடைச்ச தேங்காயைப் பொறுக்கிக்கிட்டு வந்து,"உன்னோட பூனைக் குட்டிக்கு இன்னிக்கு நட்சத்திரப்படி பிறந்தநாள். அதான் அர்ச்சனை பண்ணுனேன். ஆமா உன் பேரு என்ன?"ன்னு கேட்பான். இப்படி ஒரு வாசகமா ஆரம்பிக்கிறது திருவாசகமாப் பெருகி காதல் வெள்ளத்துல அடிச்சுட்டுப் போக அம்புட்டு சான்ஸ் இருக்கு. ஜாக்கிரதை!!* "எனக்கு கணக்குப் பாடத்துல ஒரு டவுட்".
"அசோகர் எத்தனை மரங்களை நட்டாரு?' அப்படின்னு சின்னப்புள்ளத்தனமா டவுட் கேட்க ஆரம்பிப்பாங்க.
"எனக்கு நேத்து சுண்டுவிரல் சுளுக்கிட்டதால கிளாஸ்ல நோட்ஸ எழுத முடியலடா. உன் நோட்ஸ் தாடா. ப்ளீஸ்டா'ன்னு உரிமை ஊஞ்சலாட கேப்பாங்க. நோட்ஸ் திரும்ப வர்றப்போ, ஏகப்பட்ட பின்குறிப்புகளோட லவ்வையும் அட்டாச்மெண்ட்டா அனுப்புவாங்க.


கால்குலேட்டரைக் கடனாக் கேப்பாங்க. திருப்பித் தர்றப்போ"143' ன்னு அதுல நம்பர் சிரிக்கும்.
அடிஸ்கேலை அன்பா வாங்கிட்டுப் போவாங்க. திருப்பித் தர்றப்போ, ஸ்கேலோட அடிப்பாகத்துல ஹார்ட்ல அம்பு விட்டுத் தருவாங்க. ஸ்கூலுக்கு ஸ்கூல் மன்மதன்ஸ், ரதிஸ் காதல் மார்க்கோட அலைஞ்சுக்கிட்டே இருக்காங்க. எச்சரிக்கை!!* "ஹலோ சுசீலா இருக்காங்களா? இல்லையா...ராங் நம்பரா..நீங்க யாரு? ஓ.. நீங்க சுப்புலட்சுமியா! பரவாயில்லை நீங்களே பேசுங்க. நீங்களும் நல்லாத்தான் பேசுறீங்க! ஸ்வீட் வாய்ஸ்!'ன்னு சில ராங் நம்பர்ஸ் கடலையைப் போட ஆரம்பிக்கும்."

ஆக்சுவலி, யு.எஸ்.போறதுதான் என் கனவு'ன்னு எஸ்.எம்.எஸ்.ல கடலை காவடி தூக்கும். போகப் போக காதல் கரகாட்டம் ஆடும். மெஸேஜ் அனுப்பி அனுப்பியே கட்டை விரல் கரைஞ்சு போயிடும்.* "மூணு சுழி "ண' க்கு எத்தனை சுழி வரும்.' "ம்' - முக்கு புள்ளி வைக்கணுமா' இந்த ரேஞ்சுல தமிழ் தெரிஞ்ச பசங்க ,லவ்வை ஜிவ்வுன்னு சொல்லுறாப்ல. நாலு வார்த்தைகளைக் கவ்வி, கிரீட்டிங் கார்டுல தெளிச்சு ,"உன்னப் பத்தி ஒரு கவித எழுதுனேன். பாரு'ன்னு நீட்டுவாங்க .

"பூக்கலுக்கு பல்கள் உண்டா?

உன் - ஐப் பாத்ததும்

டெட்டானது காட்று!'


- இந்த ரேஞ்சுல கவிதப் போக்குவரத்து டிராபிக் ஜாம் - ஆகி கிடக்கும்.


ரெண்டே வரியில் நச்சுன்னு காதல் கவிதை எழுதுறவுகளும் கவிதை அம்புகளை அனுப்புவாக, அதை படிச்சுப்புட்டு,
"நம்ம பேரு என்ன இவ்வளவு கவித்துவமாவா இருக்கு??"
"நாம என்ன அவ்வளவு அழகாவா இருக்கோம்'னு வார்த்தைகளில் வழுக்கி விழுந்தோட்டோம்னா அவ்ளோதான். எழுந்திரிக்கவே முடியாது. ஜாக்கிரதை!!!* "இன்னிக்கு என் ஆளு கூட மூவி போறேன்டினு' பந்தாவா ஒருத்தி முள்ளைத் தூவிட்டுப் போவா.
"இந்த சுடி என் லவ்வர் வாங்கித் தந்தான்டி. அவனுக்கு பஞ்சு முட்டாய்க் கலர்தான் பிடிக்கும். எப்படி இருக்குடி?'ன்னு தோழி ஒருத்தி தோரணம் கட்டி தூபம் போட்டுட்டுப் போவா.
"அரியர்ஸ் பார்ட்டியே லவ் பண்ணுறா. நமக்கென்ன குறைச்சல்'ன்னு தோணும்.
"அவளை விட பேரழகி நான். லவ் பண்ணுனா என்ன'ன்னு கொஸ்டின் வந்து மூளையைக் குடையும். இந்தக் கேள்விக்குறிகளை ஆச்சரியக்குறிகள் ஆக்கணும்னு கங்கணம் கட்டிட்டு காதலிக்க ஆரம்பிக்கலாமேன்னு சபலம் வரலாம். ஜாக்கிரதை!!!
* அடுத்த டேஞ்சரான நாள் பிப்ரவரி மாசம் வந்து பல்லைக் காட்டும். காதலர்களுக்கிடையில கீரிட்டிங் கார்ட்ஸ் கிரிக்கெட் ஆடும். காந்தி ஜெயந்தி என்னிக்குன்னு தெரியாதவங்ககூட காதலர் தினத்தை கடமையுணர்வோட கொண்டாடுவாங்க. "அட, எல்லாரும் கையில ஹார்ட்டைத் தூக்கிட்டு அலையறாங்களே, ஏன் நமக்குன்னு ஒரு லவ் இல்ல'ன்னு ஏக்கம் சுனாமியா வந்து நம்மள மூழ்கடிக்கும். வேணாம் ராசாத்தி வேணாம்.


பட்டாசு வெடிச்சாத்தான் தீவாளி,
கேக்குத் தின்னாத்தான் கிறிஸ்மஸ்,
ப்ரியாணி சாப்பிட்டாத்தான் ரம்ஜான்,
அதே மாதிரி காதலிச்சாத்தான் காதலர் தினம் கொண்டாட முடியும்னு தப்புத் தப்பா தத்துவம் பேசி எக்குத் தப்பா லவ்வுல சிக்கிச் சீரழிஞ்சிறாதீங்க!

(பின் குறிப்பு: ஈ-மெயிலில் வந்த கட்டுரையை, சில மாற்றங்களுடன் இப்பதிவில் பதிவிட்டிருக்கிறேன்!!!இந்தக் கட்டுரை 100 %ஜாலி கற்பனையே.)

94 comments:

Anonymous said...

ஹஹஹஹ..... ஏம்மா திவ்யா.. யார் எங்கே விழுந்தா உனக்கென்ன..? ஏற்கனவே துண்டு, பெட்சீட் எல்லாம் போட்டும் பிகரை மடக்க முடியாம முக்கிகிட்டு இருக்கற பசங்களை இப்படி பதிவெல்லாம் எழுதி இன்னமும் இறக்கினா எப்படி..? பாவம் பசங்க எல்லாம்.... :)))) அப்புறம் நாங்களே களம் இறங்கி பிகர் மடக்க ஐடியா கொடுப்போமாக்கும்... !!! ;))))

Anonymous said...

//பசிக்கும், ஆனா சாப்பிட்டா ஏப்பம் வராது.
தூக்கம் வரும், ஆனா கொட்டாவி வராது.//

:))))

சாப்டா வாயு தொல்லை இருந்தாதான் ஏப்பம் வரும் திவ்யா...
கொட்டாவி விட்டாதான் தூக்கம் வருமா என்ன.?? ;))))

ஆனாலும் உன் நக்கலுக்கு ஒரு அளவே இல்லாம போச்சு போ.... :))))

Anonymous said...

//அதுக்கு தாங்க்ஸ் சொல்லி ஒரு பார்வையால நன்றி சொல்லுவீங்க. அந்த டொக்கு விழுந்த லுக்கே அவனுக்கு ரொமாண்டிக் லுக்கா தெரியலாம். டிக்கெட்ல "டிக்' ஆகி காதல் விக்கெட் விழலாம். பி கேர் ஃபுல்! //
ஹேய்ய் திவ்யா எந்த காலத்திலே இருக்கே நீ..? இபப்டி டிக்கெட் எடுத்துக்கொடுத்து டிக்கு வாங்குறது எல்லாம் டி. ராஜேந்தர் காலத்து டெக்னிக்மா... அவனவன் 'பல்சர்'ல பிகர் மனசை பேத்துகிட்டு பேத்தனமா போய்கிட்டு இருக்கானுவ... ச்சும்மா டிக்கெட்டு விக்கெட்டுன்னுகிட்டு.... ;‍))))))))

Anonymous said...

//* "எனக்கு கணக்குப் பாடத்துல ஒரு டவுட்".
"அசோகர் எத்தனை மரங்களை நட்டாரு?' அப்படின்னு சின்னப்புள்ளத்தனமா டவுட் கேட்க ஆரம்பிப்பாங்க.//
ஹஹஹஹ.... அட அசோகருக்கும் கணக்குக்கும் இவ்ளோ சம்பந்தமா..?? ஆமா திவ்யா அசோகர் எத்தன மரத்தை நட்டாரு உனக்காச்சும் தெரியுமா..?? ஹிஹிஹிஹி எனக்கும் டவுட் வந்துடுச்சு.... ;))))) சரி சரி முறைக்காதீங்க மேடம்... ச்ச்சுமம்மா லுல்லுலாயி.... !!!:))))

Anonymous said...

//ஸ்வீட் வாய்ஸ்!'ன்னு சில ராங் நம்பர்ஸ் கடலையைப் போட ஆரம்பிக்கும்."

ஆக்சுவலி, யு.எஸ்.போறதுதான் என் கனவு'ன்னு எஸ்.எம்.எஸ்.ல கடலை காவடி தூக்கும். போகப் போக காதல் கரகாட்டம் ஆடும். மெஸேஜ் அனுப்பி அனுப்பியே கட்டை விரல் கரைஞ்சு போயிடும்.//
இதுதான் இப்போ சூப்பரா ஒர்க் அவுட் ஆகுது தெரியும்ல..??
நம்மா ஆளு தெனமும் உழவர் சந்தைக்கு போறதைக் கூட U.S
போறேன்னு சொல்லிகிட்டு பந்தாவா பேசி பல பொண்ணுக மனசுல காதல்
சாகுபடி பண்ணி மனாவாரியா வெளச்சலை அள்ளிகிட்டு அலையுறாவ... என்ன பண்ணி தொலைக்க.... !!
:))))

Anonymous said...

//"பூக்கலுக்கு பல்கள் உண்டா?

உன் - ஐப் பாத்ததும்

டெட்டானது காட்று!'

- இந்த ரேஞ்சுல கவிதப் போக்குவரத்து டிராபிக் ஜாம் - ஆகி கிடக்கும்.//:))))))) திவ்யா இது சூப்பரா இருக்கேய்ய்ய்ய்ய்ய்......

Anonymous said...

//"அரியர்ஸ் பார்ட்டியே லவ் பண்ணுறா. நமக்கென்ன குறைச்சல்'ன்னு தோணும்.
"அவளை விட பேரழகி நான். லவ் பண்ணுனா என்ன'ன்னு கொஸ்டின் வந்து மூளையைக் குடையும். இந்தக் கேள்விக்குறிகளை ஆச்சரியக்குறிகள் ஆக்கணும்னு கங்கணம் கட்டிட்டு காதலிக்க ஆரம்பிக்கலாமேன்னு சபலம் வரலாம். ஜாக்கிரதை//
அரியர்ஸ் பார்ட்டிகளைப் பற்றி தரக்குறைவாக எழுதும் திவ்யாவை வன்மையாகக் கண்ணடிக்கிறேன்... ஓஓ சாரி... கண்டிக்கிறேன்... ;))))

காதல் என்ன பர்ஸ்ட் க்ளாஸ் பசங்களுக்கு மட்டுமா நேர்ந்துவுட்டு இருக்காக..?? நோ நெவர்.... காதல் காட்டாரு மாதிரி.... அரியஸ் வச்சாலும் டிஸ்டிங்சன் வாங்கினாலும் சுதாரிக்கரதுக்குள்ள வாரிச்சுரிட்டிகிட்டு போகும் தெரியும்லா..??
அப்புற‌ம் அஞ்சலை.. வெத்தலைன்னு பாடிகிட்டு ஆடிகிட்டு இருகத்தான முடியும்... !!! ;)))))

Anonymous said...

//அதே மாதிரி காதலிச்சாத்தான் காதலர் தினம் கொண்டாட முடியும்னு தப்புத் தப்பா தத்துவம் பேசி எக்குத் தப்பா லவ்வுல சிக்கிச் சீரழிஞ்சிறாதீங்க!//
கரெட்டா சொன்னே திவ்யா.... இதை வழிமொழிகிறேன்.... :))))))

Anonymous said...

திவ்யா எங்கே விட்டா எனக்கு போட்டியா வந்துடுவே போல இருக்கே...
இப்படி பொண்ணுகளை எல்லாம் அலர்ட் பண்ணவே வேணாம்... ஏற்கனவே அப்படித்தானே இருக்காவ..? பசங்கதான் புது டெக்னிக் கண்டுபிடிக்கணும் போல.... கண்டுபுடிப்போம்ல.... ;))))))))

பதிவு சுனாமி கணக்கா சுத்தி சுத்தியடிக்குதே... சூப்பரு திவ்யா..... :))))

said...

hilarious....

said...

:))))))))))))))))))))))

said...

1ம் சொல்றதுக்கில்ல


நோ கமெண்ட்ஸ் :)))))))

said...

திவ்யா,
ஏன் ஏன் இந்த கொல வெறி...
நல்லா தானே போயிட்டு இருந்தது.. டிப்ஸ் தரேன்னு இப்படியெல்லாம் தப்பு தப்பா டிப்ஸ் தரப்படாது...

பாவம் பசங்க.. என்ன பண்ணுவோம் சொல்லு..

இதுக்கு பரிகாரமா.. அடுத்த போஸ்டு.. எப்படி நல்ல பசங்களா பாத்து லவ்ஸ் பண்றதூன்னு டிப்ஸ் குடுத்து பதிவுக்கு கீழ எ.கா ஜொள்ளுபாண்டி, சந்தோஷ், சரியா..

said...

நான் சொல்ல நினைத்ததையெல்லாம் பாண்டியன்னன் சொல்லி யிருப்பதால் அவர் இதுவரை சொல்லியிருப்பதற்கும் இதுக்கு அப்புறம் சொல்லப்போறதுக்கும் கன்னாபின்னாவென்று வழிமொழிகிறேன் :))..

said...

ஒரு பத்து வருசத்துக்கு முன்னாலா தெரியாம போச்சு. அடி வாங்காம தப்பிச்சு இருப்பேன்

Anonymous said...

//தனியா இருக்கிறப்ப சட்டசபையில இருக்கற மாதிரி மனசு கத்தும். //

ஆஹா உதாரணம் சூப்பரா இருக்கே..\
எப்படிங்க இதெல்லாம்...

said...

Unique suggestions திவ்யா. இதென்னவோ லவ் பண்ண டிப்ஸ் மாதிரி இருக்கு, விழாமல் தப்பிக்கும் டிப்ஸ் மாதிரி இல்லையே! :)

Anonymous said...

Erkanave ennaya madhiri aalunga ellam thaniya suthikittu irukom. idhula neenga vera velakkama padam pottu explain panniteengala????

sutham.

said...

கலக்கல்.... இதுக்கொரு எதிர்வினை பதிவை நம்ம பாண்டிண்ணே'கிட்டே இருந்து எதிர்பார்க்கிறேன்... :)

said...

நல்லா இருக்கு

said...

//"இந்தாங்க, இது உங்க முடி. நேத்து என் சட்டைப் பொத்தான்ல சிக்கிடுச்சு'ன்னு அவன் கொடுக்க, "பரவாயில்ல, அதை நீங்களே வைச்சுக்கோங்க'ன்னு ஏதோ
சொத்து எழுதிக் கொடுக்குற மாதிரி நீங்க சொல்லிட்டுப் போக //
//திடீர்னு ஒரு நாள் யாரோ உடைச்ச தேங்காயைப் பொறுக்கிக்கிட்டு வந்து,"உன்னோட பூனைக் குட்டிக்கு இன்னிக்கு நட்சத்திரப்படி பிறந்தநாள்//

இன்னமும்மா நம்ம பயளுக இத பண்ணிட்டு இருக்காங்க... (ஜொள்ளுப்) பாண்டி நாட்டுல, பசங்களுக்கு வேற ஐடியாவே கிடைக்கலையா?? என்ன கொடுமை!

// பின் குறிப்பு: ஈ-மெயிலில் வந்த கட்டுரையை, சில மாற்றங்களுடன் இப்பதிவில் பதிவிட்டிருக்கிறேன்!!!இந்தக் கட்டுரை 100 %ஜாலி கற்பனையே //
ஜாலி கற்பனையா?? சரி திவ்யா நம்பிட்டோம்.. :)

said...

ரொம்ப கொல வெறி பிடிச்ச ஆளா இருப்பீங்க போலிருக்கு, இந்த பசங்க பாவம் சும்மா விடாது ;)

said...

:)))

செம கலக்கல்! :))

said...

wat to do....
from lkg i am trying to get a girl friend..... but always getting bulb.
for me th love feeling is not coming... if i try hard means mokkai(blade) jokes are only coming.
if u alert girls like ths means...how can i propose...
if u want to know abt my bulb exp means read this http://mayvee.blogspot.com/2008/05/love-proposal.html
anyways nice post.

said...

முன்னாடியே மழை வரும்ன்னு
தெரிஞ்சா குடை எடுத்துட்டுப்
போகலாம்...திடீர்னு மழை
வந்தா முழுசா நனைஞ்சு தானே
ஆகணும்...சுனாமி எப்ப
வரும்ன்னு கூடக் கண்டு
பிடிச்சுடலாம் ஆனா இந்தக் காதல்...?

said...

அருமை

ஹா ஹா ஹா

எனக்கு கல்யானம் ஆயிடிச்சி

அதுவும் காதல் கல்யானம்.

நல்ல வேலை நீங்க இப்ப தான் எழுதிக்கிறீங்க

மிச்சம் பிறகு எழுதுகிறேன்

going abroad in another 1 hr.

said...

me the 25th

said...

கலக்கலா இருக்குங்க...
ஆமா இது எதற்கான டிப்ஸ்ங்க!!

said...

கலக்கல்... நல்லா இருக்கு...

//பின் குறிப்பு: ஈ-மெயிலில் வந்த கட்டுரையை, சில மாற்றங்களுடன் இப்பதிவில் பதிவிட்டிருக்கிறேன்!!!இந்தக் கட்டுரை 100 %ஜாலி கற்பனையே.//

அப்பிடியா... அப்ப இது உங்க அனுபவத்தில எழுதினது இல்லையா...?

:)

Anonymous said...

HI GUYS! FIRST WATCH THIS FILM
" A WALK TO REMEMBER"
THEN YOU GUYS CAN UNDERSTAND HOW MUCH DIFFICULT TO ESCAPE FROM "LOVE"...
LOVE ITS PAINFUL
ITS COME ANYTIME
ITS SELF FISH
ITS HAS MORE EXPECTATION
ITS BLIND
ITS GIVE HAPPY FOR FEW PEOPLE
(IF ITS TRUE LOVE)

said...

//அடுத்த நாள், "இந்தாங்க, இது உங்க முடி. நேத்து என் சட்டைப் பொத்தான்ல சிக்கிடுச்சு'ன்னு அவன் கொடுக்க, "பரவாயில்ல, அதை நீங்களே வைச்சுக்கோங்க'ன்னு ஏதோ சொத்து எழுதிக் கொடுக்குற மாதிரி நீங்க சொல்லிட்டுப் போக, அதுக்கு மேல என்ன நடக்குமுன்னு நான் வேற சொல்லணுமாக்கும்.//

எப்படிங்க இப்படியெல்லாம்....
அனுபவமோ திவ்யா....
ஆனா சட்டையில மாட்டுன அந்த முடிய பாத்தே..பசங்களுக்கு மண்டையில பாதி முடி போய்டும்...
கிறுக்கு பய மக்கா......


but anyways...ரொம்ம்ம்ம்ப‌ ந‌ல்லா இருந்த‌து...ரொம்ப‌வே ர‌சித்து சிரித்தேன்...

said...

// இந்தக் கட்டுரை 100 % ஜாலி கற்பனையே

கற்பனை என்று தெரியாத அளவுக்கு இருக்கிறது, வாழ்த்துக்கள் !!

அப்படியே பசங்களும் எப்படி தப்பிக்கறதுன்னு எழுதினா ரொம்ப உதவியாகவும் இருக்கும், நடுநிலை தவறாத எழுத்தாளர்னு உலகமும் உங்களை பாராட்டும் !!

தொடரட்டும் உங்கள் பயனுள்ள ஆலோசனைகள் !!

said...

ha..ha.
:)))

said...

ம்ம் டிப்ஸ் நல்லா இருக்கே.

சிரிச்சு சிரிச்சு வயிறெல்லாம் புண்ணாயிடுச்சு.

ஆனா நீங்க சொல்லறதெல்லாம் ரொம்பப சினிமாத்தனமான அப்ரோசஸ்.நிஜ வாழ்க்கையில் இதெல்லாம் எவ்வளவு தூரம் நடக்குத்துன்னு தெரியலை.

நீங்க சொல்லற இந்த முயற்சியெல்லாம் அப்படியே பசங்க பண்ணினாலும், கடைசியில் ஏமாந்து போறது பசங்க தான். “நான் உன் கூட நட்போட பழகினேன். இந்தா என் கல்யாணப் பத்திரிகை. .கண்டிப்பா வரணும்’னு பொண்ணுங்க கம்பியை நீட்டிருவாளுங்க.

said...

//////
காதல் எப்படி?..... எங்கே?..... ஏன்?? வருதுன்னு யாராலயும் சொல்ல முடியாது. வரவேண்டிய நேரத்துல கண்டிப்பா வரும்னு சொல்ல முடியாது.
///
ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ச்ச்


///
நீங்க கோயிலுக்குப் போறப்ப எல்லாம் பட்டை அடிச்சிட்டு, பக்தி மாம்பழமா ஒருத்தன் உங்க பின்னாலேயே வருவான். சந்நிதி முன்னால நின்னுட்டு , கண்களை மூடி வேகவேகமாக ஏதோ சொல்லுவான். ஸ்லோகம்னு நினைக்கக் கூடாது. காதைக் கூர்மையா வைச்சுக் கேட்டாத்தான் தெரியும். அது ஸ்லோகமில்ல, ஏதோ சினிமாப் பாட்டுன்னு!
//////

நல்லா எழுதுறிங்க

said...

super divya......

Anonymous said...

வாவ்..திவ்யா.. அருமையா இருக்கு :-)

said...

ஆஹா இதில நடுவில நான் எழுதின கவிதை போட்டு... ஏன் ஏன் இந்த கொலைவெறி??

said...

அமெரிக்கா போயும் மோகன், முரளி, கார்த்திக் போன்றவர்களின் தமிழ் சினிமா பாக்குற பழக்கமும், குப்புற படுத்து கவிதை எழுதுற(படிக்குற) பழக்கமும் இன்னும் போகல போல... ரொம்ப அவுட்டேட் டா இருக்கு....

செல்போன் மேட்டரு மட்டும் தான் இப்ப ஒர்க் அவுட் ஆகுது... :))

said...

இப்ப உள்ள கரெண்ட் டிரெண்ட் அறிய அந்த துறையில் ஆராய்ச்சி பட்டம் பெற்ற

ஜொள்ளின்செல்வர் பாண்டி
கயவன் கப்பி ராஜ்
ஆக்கா... சந்தோஷ்

போன்றவர்களை அணுகுமாறு கேட்டுக் கொள்கிறேன்.

said...

//*காய்ஞ்சு கருவாடாப் போன ரோசாப்பூ,
*எப்பவோ எச்சில் பண்ணுன எட்டணா மிட்டாயைச் சுத்தியிருந்த பேப்பர்,
*கிழிஞ்சு போன பஸ் டிக்கெட்,
*லேசா செம்பட்டையான ஒரு முடி,
*குறைப் பிரசவத்தில் பிறந்த நிலா மாதிரி இருக்கிற நகத்துண்டுகள்,
*காது போன குட்டிக் கரடி பொம்மை,
*ரெண்டு சென்டிமீட்டர் துண்டு பேப்பர்ல எழுதுன மூணு வரிக் கவிதை - இப்படித் தேடித் தேடிச் சேர்த்து வைச்சிருக்கிற பொக்கிஷங்களைப் பல்லை இளிச்சுப் பார்த்துட்டே இருந்தா பரலோகத்துல இருக்குற ஃபீலிங் கிடைக்கும்.//

அனுபவிச்சு சொல்லுற மாதிரி இருக்கு....

சரி அது போகட்டும்... காதலில் விழுவது எப்படினு கொஞ்சம் சொல்லி குடுத்தா நல்லா இருக்கும்ல... ;)))

said...

//தொறந்த நெஞ்சுக்குள்ள காதல் படார்னு நுழைஞ்சு டூ மினிட்ஸ் நூடுல்ஸ் மாதிரி வேகமாக வெந்து நிக்கும்//

திவ்யா! ஒரு முடிவோட தான் இறங்கி இருக்கீங்கன்னு தெரியுது :))

//குறைப் பிரசவத்தில் பிறந்த நிலா மாதிரி இருக்கிற நகத்துண்டுகள்,//

வாவ் வாவ் வாவ்! பிண்றீங்க திவ்யா!

நக்கல் விக்கலோட சூப்பர் பதிவு திவ்யா…கலக்குங்க :)

said...

கதை எழுதும் போது மட்டும், நல்லா காதல் கதை எல்லாம் எழுதிட்டு, இப்ப இந்த மாதிரி சூப்பர் அட்வைஸ் எல்லாம் வாரி வழங்கி இருக்குற திவ்யாவுக்கு எல்லாரும் சத்தமா ஒரு ஓ போடுங்க ;)

said...

Superb Dhivya!!!!!
anbudan aruNaa

said...

திவ்யா கலக்கறீங்க.

ஆனா இது எல்லாம் மீறியும் காதலிச்சு கல்யாணம் பண்ணின பிறகு என்ன செய்யறது :)

said...

;)))

கலக்கல் ;)

said...

Hehehe...neat divya!! Had fun reading it....loved it :))

said...

Awesome tips by the way...should be read by all the girls!!

said...

அட்டகாசம் திவ்யா.. செமையா சிரிச்சேன்.. :)))))))))))))))))))

said...

ஆனா இப்படி எல்லாருமே உஷாராயிட்டா, என்ன மாதிரி இன்னும் காதலியே கிடைக்காத பசங்க கதி???

said...

ஆனா இப்படி எல்லாருமே உஷாராயிட்டா, என்ன மாதிரி இன்னும் காதலியே கிடைக்காத பசங்க கதி???

said...

//ஜொள்ளுப்பாண்டி said...
அப்புறம் நாங்களே களம் இறங்கி பிகர் மடக்க ஐடியா கொடுப்போமாக்கும்... !!! ;))))//

அண்ணன்.. ஜொள்ளுபாண்டி வாழ்க..

said...

//அடுத்த நாள், "இந்தாங்க, இது உங்க முடி. நேத்து என் சட்டைப் பொத்தான்ல சிக்கிடுச்சு'ன்னு அவன் கொடுக்க, "பரவாயில்ல, அதை நீங்களே வைச்சுக்கோங்க'ன்னு ஏதோ சொத்து எழுதிக் கொடுக்குற மாதிரி நீங்க சொல்லிட்டுப் போக,//

ஹா..ஹா..ஹா..

said...

//பசிக்கும், ஆனா சாப்பிட்டா ஏப்பம் வராது.
தூக்கம் வரும், ஆனா கொட்டாவி வராது.
நாய் கடிச்சாக் கூட கொசு கடிக்கிற மாதிரிதான் இருக்கும்.
ஆனா கொசு கடிச்சா நாய் கடிச்ச மாதிரி வலிக்கும்.
அழுக்கைப் பார்த்தாலும் அழகாத் தெரியும்.
எருமை கத்துனாக் கூட ஏ.ஆர்.ரஹ்மான் மியூசிக்கா கேட்கும்.
கூட்டத்துல இருக்கறப்ப மனசு தனியா இருக்குற மாதிரி மாஞ்சா தடவி பட்டம் விட்டுக்கிட்டிருக்கும்.
தனியா இருக்கிறப்ப சட்டசபையில இருக்கற மாதிரி மனசு கத்தும்.//

ஏதோ பெரிய வியாதி போல.. ;)

said...

//ஜொள்ளுப்பாண்டி said...
அரியர்ஸ் பார்ட்டிகளைப் பற்றி தரக்குறைவாக எழுதும் திவ்யாவை வன்மையாகக் கண்ணடிக்கிறேன்... ஓஓ சாரி... கண்டிக்கிறேன்... ;))))//


ஹா..ஹா..ஹா.. ரிப்பீட்டேய்..

said...

பதிவும் சூப்பர்.. பின்னூட்டங்களும் சூப்பர்..

said...

hey thanks divya for following my blog.
due to some mokkai reasons, i will not be able to put something in my blog. but mokkai will prevail from jan 2009.

anyways... can you post something about " how to impress a spl person within a month?"

said...

oru 6 varusham munnaadi solli irunthaa naa escape aagi iruppen
:))

said...

49

Anonymous said...

!!! confirmed!! ammani engayo sikitanga :D

~gils

said...

\\தாரணி பிரியா said...

திவ்யா கலக்கறீங்க.

ஆனா இது எல்லாம் மீறியும் காதலிச்சு கல்யாணம் பண்ணின பிறகு என்ன செய்யறது :)
\\

வருத்தமா சொல்லுதீய ...

said...

காதலில் விழுவது தப்பல்ல

காதலில் வீழ்வதே ...


அட அட அடா ...

said...

நகைச்சுவையாய் இருந்தது திவ்யா..

பதிவு போட்டவுடனே படிச்சு, நல்லா சிரிச்சும் முடிச்சுட்டேன். பின்னூட்டம் போட மறந்துட்டேன். (ராகவா, பொய் சொன்னாலும் பொருத்தமா சொல்லுறியே.. சூப்பர்)

said...

//கண்டதும் காதல் வரலாம்.
கண்டதைப் பார்த்தும் காதல் வரலாம்.//

என்னே ஒரு தத்துவம்... ஆனாலும் இரண்டு வரிக்கும் அர்த்தம் ஒண்ணு தான்.

கண்டதும் = பார்த்ததும்
கண்டதை பார்த்ததும் = கண்டதும்..

கண்டதை என்றால் அஃறினை என்று நினைக்கலாம்... ஆனால் அப்படியல்ல,

கண்டதும் = கண்டு + அது + உம்...
ஆக, இங்கே கூட அது என்று தான் வருகிறது.

கண்டதை = கண்டு + அதை

இரண்டிலுமே அது என்று தான் சொல்கிறோம்... ஸோ.. இரண்டுமே சரி தான்.

said...

//தொலைச்ச எதையோ தேடிக்கிட்டு வர்ற மாதிரியே ரெண்டு பேரும் எதிர் எதிர்த்தாப்ல வருவீங்க. ஒரு முட்டல், மோதல் நடக்கும்.//

அத ஏன் கேக்குறீங்க ரெண்டு நாள் முன்னால கிருஷ்ணா கஃபேக்கு சாப்புட (கொட்டிக்க) போயிருந்தேனா.. அப்போ இதே மாதிரி ஒரு நிகழ்ச்சிய பாத்தேன்.. ரெண்டு பேரும் சிரிச்சிகிட்டே போயிட்டாங்க.. எனக்கு தான் சாப்புட்டதெல்லாம் செறிச்சுரிச்சு.

said...

ஹா ஹா ஹா

ரொம்ப நேரம் சிரிச்சேன் திவ்யா :D

(ஆமா.. இப்படி பொண்ணுங்களயெல்லாம் தண்ணி தெளிச்சு தெளியவிட்டுட்டீங்கன்னா பசங்களுக்கெல்லாம் யார் கிடைப்பா? :( )

said...

ஹஹஹஹ..... ஏம்மா திவ்யா.. யார் எங்கே விழுந்தா உனக்கென்ன..? ஏற்கனவே துண்டு, பெட்சீட் எல்லாம் போட்டும் பிகரை மடக்க முடியாம முக்கிகிட்டு இருக்கற பசங்களை இப்படி பதிவெல்லாம் எழுதி இன்னமும் இறக்கினா எப்படி..? பாவம் பசங்க எல்லாம்.... :))))

ah aah na....

said...

Divya.. back to jolly form from romantic mood huh?? nice post...

said...

என்ன திவ்யா 100% ஜாலியான கற்பனை மாதிரி தெரியலையே...

said...

hey divs...

epadi ipadilam....
super da...
un formku nee vanthutae..

so ini niraya post theirpatkalam....

(tamil font pblm)

said...

ஜொல்லு பையனா கார்த்திக் படத்தை போட்டதை நான் வன்மையாக கண்டிக்கிறேன்!:)

மத்தபடி மேட்டரு சூப்பரு!!

said...

//"காதலில் விழாமல் தப்பிப்பது எப்படி???//

நமக்கும் இதுக்கும் என்ன சம்பந்தம், எதோ பசங்க நல்ல இருந்தா சரி :-)

said...

Belated X'Mas wishes Divya

said...

:-))

said...

//"பூக்கலுக்கு பல்கள் உண்டா?

உன் - ஐப் பாத்ததும்

டெட்டானது காட்று!'

- இந்த ரேஞ்சுல கவிதப் போக்குவரத்து டிராபிக் ஜாம் - ஆகி கிடக்கும்.//

அடடடடா......நல்லாருக்கு..

said...

//பட்டாசு வெடிச்சாத்தான் தீவாளி,
கேக்குத் தின்னாத்தான் கிறிஸ்மஸ்,
ப்ரியாணி சாப்பிட்டாத்தான் ரம்ஜான்,
அதே மாதிரி காதலிச்சாத்தான் காதலர் தினம் கொண்டாட முடியும்னு தப்புத் தப்பா தத்துவம் பேசி எக்குத் தப்பா லவ்வுல சிக்கிச் சீரழிஞ்சிறாதீங்க!//

neenga sonna sariyaathaan irukum :)

jolly post is good

said...

திவ்யாவிற்கு இராகவனின் மகிழ்ச்சி பொங்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்.

என்றென்றும் புன்னகையுடன், நல்ல இதயத்துடன் பல்லாண்டு வாழ புத்தாண்டு வாழ்த்துக்கள்.

said...

happy new year...
let th year 2009 may bring you lots of joy and chocolates to u...
make th year colourful with ur happiness.

said...

ஹை அக்கா சூப்பர்... :))))))) ஆனா, இதுல எந்த கேட்டகிரிலையும் நான் வரலியே ஏன்?? ;))))))இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்.. :)))))

said...

இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் திவ்யா..

said...

//
பூக்கலுக்கு பல்கள் உண்டா?
உன் - ஐப் பாத்ததும்
டெட்டானது காட்று!'//

உண்மையில் அழகான ஹைக்கூ இது. எழுத்துபிழைகளை நீக்கி விட்டால்.

வாழ்த்துக்கள்.. புத்தாண்டுக்கும்.. காதலில் விழாமல் தப்பிக்கவும்!

said...

இனிய புத்தாண்டு வாழ்த்துகள் திவ்யா...

said...

Happy New Year...

// கவிதை வேண்டுமென
பேனா தூக்கினேன்
கைகள் தானாய்க்கிறுக்கியதடி
உன் பெயரை...


நல்லாயிருக்கு....

said...

// திடீர்னு ஒரு நாள் யாரோ உடைச்ச தேங்காயைப் பொறுக்கிக்கிட்டு வந்து,"உன்னோட பூனைக் குட்டிக்கு இன்னிக்கு நட்சத்திரப்படி பிறந்தநாள். அதான் அர்ச்சனை பண்ணுனேன். ஆமா உன் பேரு என்ன?

ஐடியா நல்லாயிருக்கே.... follow பண்ணிப்பாப்பம்... ஒருக்கா..

said...

// பசிக்கும், ஆனா சாப்பிட்டா ஏப்பம் வராது.
தூக்கம் வரும், ஆனா கொட்டாவி வராது.
நாய் கடிச்சாக் கூட கொசு கடிக்கிற மாதிரிதான் இருக்கும்.
ஆனா கொசு கடிச்சா நாய் கடிச்ச மாதிரி வலிக்கும்.
அழுக்கைப் பார்த்தாலும் அழகாத் தெரியும்.
எருமை கத்துனாக் கூட ஏ.ஆர்.ரஹ்மான் மியூசிக்கா கேட்கும்.
கூட்டத்துல இருக்கறப்ப மனசு தனியா இருக்குற மாதிரி மாஞ்சா தடவி பட்டம் விட்டுக்கிட்டிருக்கும்.
தனியா இருக்கிறப்ப சட்டசபையில இருக்கற மாதிரி மனசு கத்தும்..

:)

said...

காமடி கலந்த கலக்கல்... அருமை....

##
இந்த முறை எழுத்துப் பிழைகளை குறைத்திருக்கிறேன் என்று நினைக்கிறேன்...
http://ithyadhi.blogspot.com/2008/12/blog-post_31.html

said...

Tuesday, 6 January 2009
காதல்...........வகை

..........................................................
காதல் நான்கு வகை


1....காதலன் உறங்குகின்றான் அப்போது கொடிய பகைவன் எமற்றிஎதிரி இலக்காய் தான் மாறி காதலனை காத்து தன்னுயிர் கொடுக்கும் காதலி இது காதல் சுவர்க்கம்
2காதலன் மீது பாயும் எதிரிஇலக்கை தான் எந்தி மடிகின்ற அன்புடையது
3காதலனை எதிரி இலக்கில் இருந்து காத்து தானும் தப்பிக்கொள்ளுதல்
4...காதலன் மாடடிக்கொள்ள தான் விலகிக்கொள்ளும் நடைமுறைக்காதல்
5...முடியுமாயின் காதலனையே பலிக்கடாவாக்கி தான் மகிடம் +++++++++++++சூ+++++++ட்டும் விபச்சாரம் இதை காதல் என்று எண்ணும் இளைஞர் பலர்
..........................................................................http://kaathalinithe.blogspot.com/

said...

read ths post for 17th time.
still i cant control my laughter.

said...

"காதலில் விழாமல் தப்பிப்பது எப்படி???"நீங்க சொல்வது காதல் இல்லை போல இருக்கு
புது உலகம் காதலுக்கு அர்த்தம் கொஞ்சமும் தெரியாதது ....உண்மைசில் காதலில் வீழவேண்டும் புது உலகம் சொல்லும் காதலில் இருந்து தப்புவதுதான் சாலவும் சிறந்தது.....உண்மையில்...காதலின் தேவையை. அருமையை உணரும் காலமிது. மேலைத்தேய வாழ்க்கை முறையின் சாரலில் குடும்பம் என்ற கட்டுமானம் சிதைக்கப்பட்டு பொறுப்பற்ற விட்டுக்கொடுப்பு சகிப்புத்தன்மை புரிந்துணர்வு இவற்றை எல்லாம் புறம் தள்ளிய காமத் தீயிற்கு தீனிபோடும்… விலங்கணைய வாழ்க்கை சமுதாயத்தின்.. கட்டுமானம் சிதறுவதுடன்.. கால ஓட்டத்தில் அன்பு பாசம் என்ற உயரிய பொருட்கள் எல்லாம் எம் சமூகத்திலிருந்து தேய்ந்து போகின்றன.

said...

"தொறந்த நெஞ்சுக்குள்ள காதல் படார்னு நுழைஞ்சு டூ மினிட்ஸ் நூடுல்ஸ் மாதிரி வேகமாக வெந்து நிக்கும்"
திவ்யா இது சூப்பரா இருக்கே!

said...

ஏணுங் அம்ணி இப்டி ஒரு கொல வெறி?

விட்டா சிவசேனாவுல சேர்ந்து காதலர் தினக் கொண்டாட்டத்தையே எதிர்பீங்க போல இருக்கு?

said...

//
அரியர்ஸ் பார்ட்டிகளைப் பற்றி தரக்குறைவாக எழுதும் திவ்யாவை வன்மையாகக் கண்ணடிக்கிறேன்... ஓஓ சாரி... கண்டிக்கிறேன்... ;))))

காதல் என்ன பர்ஸ்ட் க்ளாஸ் பசங்களுக்கு மட்டுமா நேர்ந்துவுட்டு இருக்காக..?? நோ நெவர்....
//
கரீட்டு தலைவா..

said...

ha ha .. பசங்க தொழில் ரகசியத்தை எல்லாம் இப்படி போட்டு உடைக்காதீங்க ! :D

said...

yennanga bulb yerinchu mani adikkaratha vittutteengale.......... yen soldrenna nenga yezhuthunatha padichu mudichappo mobile sms vandhuchu........ browsing center la light yrinchuthu
>>>>-------->>hi hi<<--------<<<<