November 10, 2008

உயிரே!......உறவாக வா??? - 1

'ஆறு மணிக்கு புக் ஃபேர் போகனும், சீக்கிரம் காஃபி ஷாப் வந்திடு, அங்கிருந்து இரண்டு பேரும் சேர்ந்து புக் ஃபேர் போலாம்' என்று தன் காதல் தேவதை பானுவிற்க்கு ஃபோனில் கட்டளையிட்டுவிட்டு அவளுக்காக காஃபி ஷாப்பில் காத்திருந்தான் இளா.

அவள் வர தாமதிக்கும் ஒவ்வொரு நிமிடமும், பொறுமையிழந்தவனாய் தனது பற்களுக்கும் நகத்திற்கும் போர் தொடுத்தான்.

"ஹாய்" என்று கையசைத்துக் கொண்டே அவள் வர...........தூரத்தில் அவள் வருவதைப்
பார்த்த நொடியே அவனது கோபப்புயல் வலுவிழந்து கரையைக் கடந்தது.



அவனது தேவதை அவனை நெருங்கினாள்....!!!

என்ன அபாரமான அழகு! புதிதாய் பூத்த ரோஜாவைப்போல!!
தலையை பின்னுக்கு தள்ளி அவள் சிரித்தபோது..
அவனுக்குள் பூகம்பங்கள் வெடித்தன;
பெரிய கட்டான கண்கள்,
சற்றே அண்ணாந்த அழகமைப்பான நாசி,
கதகதப்பான உதடுகள்........!!

"ஸாரிங்க.......கொஞ்சம் லேட்டாயிடுச்சு........ஒரே டிராஃபிக்.........ரொம்ப ஸாரி"

"........."

"ம்ம்.........கோபமா???" கெஞ்சலுடன் அவள் அவனது முகத்தருகே குனிந்து காதில் சினுங்க,

காஃபி ஷாப் பொது இடம் என்பதையும் மறந்து, அவளது கன்னத்தில் 'இச்' சென்று முத்தம் பதித்தான்.

உன்னை பார்த்த களைப்பில்
ஒய்வெடுக்க விரும்புகிறது கண்கள்
உழைக்க விரும்புகிறது உதடுகள்..

முத்தத்தை முடித்து வைக்க
பிரம்மன் வைத்தான்
உன் உதட்டில்
ஒரு மச்சம்!!


எதிர்பாரா முத்தத்தில் அவளது மூக்கு நுனி, காது மடல் எல்லாம் சிவந்தது.

செல்ல சிணுங்களுடன் அவனுக்கு எதிரில் இருந்த இருக்கையில் அமர்ந்தாள்.


ஆறடிக்கு குறையாத உயரமும் அதற்கேற்ற கட்டான உடலும் முகத்தில் படிப்பின் தீட்சண்யமும்.. அலை அலையாய் படர்ந்த கேசமும்.. அளவான மீசையுமாய் … .. கூரிய கண்களுடன் உதட்டில் வளைந்த சிரிப்புடன் தன்னை பார்த்தவனை ஒரு கணம் நன்றாக உற்று பார்த்தாள் பானு.
தன் அண்ணனின் நண்பன், தன் வருங்கால கணவன் இளாவின் குறும்பு பார்வையை அதற்கு மேல் சந்திக்க இயலாதவளாய் பார்வையை தாழ்த்திக்கொண்டாள்.

அவளது வெட்கி சிவந்த முகத்தைப் பார்த்தபோது, அவனது காத்திருப்பின் அவஸ்தை காணாமலேயே போனது!!

நீ தாமதமாய் வந்தால் கூட
என்னால் கோபப்பட முடியவில்லை...
திட்டுவதைபோல நடிக்கத்தான் முடிகிறது...
அப்போது தானே என்னை விதம்
விதமாக கொஞ்சி சமாதனப்படுத்துவாய்...


சிறிது நேர மெளனமான இம்சைக்குப் பின், அவளே பேச்சை ஆரம்பித்தாள். அன்றைய நாள் இருவருக்கும் எப்படி சென்றது என்று பேசி இயல்பு நிலைக்கு வந்து, காஃபி அருந்திய பின்பு , புக்ஃபேர் போகலாம் என அவசரப்படுத்தினான்.

"டைம் ஆச்சு ....ஆல்ரெடி நீ வந்தது லேட்.....வா புக்ஃபேர் போலாம்"

"கண்டிப்பா போய்தான் ஆகனுமா??.............டயர்டா இருக்குது..........இன்னொருநாள் போலாமே......ப்ளீஸ்"

"என்ன விளையாடுறியா????..........புக் ஃபேர் ஒப்பன் பண்ணின இன்னிக்கே ஏன் நான் போக ஆசைப்படுறேன்னு ஃபோன்ல சொன்னதை மறந்துட்டியா??"

"ஆங்........மறக்கல,மறக்கல...........அந்த எழுத்தாளர் மதிமாறனோட முதல் நாவல் இந்த புக்ஃபேர்ல பப்ளிஷ் ஆகுது.........அதுக்காகத்தானே?"

"தெரிதில்ல.......அப்புறம் என்ன........சரி வா போகலாம்"
என்று கூறிக்கொண்டே தன் இருக்கையிலிருந்து எழுந்திருக்க முற்பட்டான்.

"நாளைக்கு போனா அந்த நாவல் கிடைக்காதா??.......இன்னும் 3 நாள் புக் ஃபேர் இருக்குதே.......ஸோ நாளைக்கு போகலாம் ..ப்ளீஸ்"

" என்னை டென்ஷன் ஆக்காதே சொல்லிட்டேன்.........எனக்கு மதிமாறனோட எழுத்து எவ்வளவு பிடிக்கும்னு உனக்கு நல்லாவே தெரியும், உனக்கு எப்பவுமே அவரோட எழுத்துனா பிடிக்கிறதே இல்ல, அதான் இப்ப......வேணும்னே நாளைக்கு போலாம், அப்புறமா போலாம்னு வம்பு பண்றே"

"ஹே..........கூல் டவுண்பா.......அந்த ஆளு பெரிய எழுத்தாராம் , அவர் எழுத்து மேல இவருக்கு ஒரே கிரேஸாம்.............முதநாவல் பப்ளிஷ் பண்ணினதும் உடனே வாங்கிடனுமாம்........ரொம்பதான் குதிக்கிறாரு"

"மறுபடியும் என் கோபத்தை கிளறாதே.....இன்னொரு தடவை அவரோட எழுத்து பத்தி கிண்டலா பேசாதே, அவர் வாரபத்திரிக்கைல எழுதின தொடர்கதையை நீ படிச்சுப் பார்த்திருக்கனும், .........என்னா ஒரு த்ரில், திருப்பம்.......சான்ஸே இல்ல, பெரிய டிடக்டிவா இருக்க வேண்டியவரு அவரு தெரிஞ்சுக்கோ"

"ஆமா நானும் தான் படிச்சேன் அந்தாள் எழுதின தொடர் கதை,கொள்ளைக்கார கும்பலோட சூழ்ச்சி, தந்திரம், கொலை எல்லாம் வெளிப்படையா எழுதிருந்தார் வன்முறையோட.........அது உங்களுக்கு த்ரில்லா??? அந்த கொலைக்காரனோட சூட்சமம் எல்லாம் எப்படி அப்படியே நேர்ல பார்த்த மாதிரி எழுதுறார்........கற்பனை கதை மாதிரியே தோணல, இந்தாளே ஒரு கொள்ளைக் கூட்ட தலைவனா இருந்திருபபாராயிருக்கும்,அதான் இப்படி பரபரப்பு ஏற்படுத்துற மாதிரி தொடர்கதை எழுதுறார்"

" உனக்கு அவரோட எழுத்து பிடிக்கலைன்ன கம்முனு இரு .....இப்படி விமர்சனம் பண்ணாதே அவரோட எழுத்தை, எவ்வளவு பெரிய புத்திசாலியா இருக்கனும் அவரு இப்படி ஒரு விறுவிறுப்பான தொடரை எழுத..........நீ ஒரு மக்கு, டீவி சீரியல் பார்த்துட்டு , மூக்கு சீந்தி அழுகுற சாதாரன தமிழ் பொண்ணு, ஞானசூன்யம் நீ.........உனக்கெங்கே புரியும் இதெல்லாம்....."

"இப்ப எதுக்கு என்னை ஞானசூன்யம்னு சொல்றீங்க?? என்னை விட உங்களுக்கு அந்த மதிமாறன் பெருசா போய்ட்டாரா??"

கண்கசக்கினாள் பானு.......அவனுக்கு கஷ்டமாக போனது...கெஞ்சி கொஞ்சி சமாதனப்படுத்தினான்.

சமாதானமானவளாக....குறும்பு பார்வை பார்த்தாள் பானு!!


விளையாட்டுக்கு கூட
உன் மேல் கோபப்பட
விடுவதாயில்லை

உன் விளையாட்டுத்தனம்!



"நானும் சும்மாதான் சீண்டி பார்த்தேன் உங்களை.......எனக்கு மதிமாறனோட எழுத்தில் அதிக ஈடுபாடு இல்லினாலும் உங்களுக்கு பிடிக்கும்னு ...புக் ஃபேர் போய், அவரோட நாவல் வாங்கிட்டுத்தான் இங்கே வந்தேன்........அதான் நான் வர்ரதுக்கு லேட்"

என்று கிஃப்ட் ராப் செய்யப்பட்ட நாவலை அவனிடம் கண்சிமிட்டியபடியே கொடுத்தாள்.

ஆச்சரியத்தில் விழித்தான்...!!!

"தாங்க்ஸ்டா........செல்லம்" என கூவிக்கொண்டே அவளிடமிருந்து கிஃப்ட்டை வாங்கி ஆசையாக பிரிக்கப்போனான்.

" நோ.......நோ......." என்று கீச்சிட்டாள் அவள்.

அவன் பதறிப்போய் அவளை நோக்க...

"பொறுமை சார்.........இந்த கிஃப்ட்டை இப்போ பிரிக்க கூடாது நீங்க. உங்களுக்கு பிடிச்ச நாவல் மட்டும் இந்த கிஃப்ட் பேக்கில் இல்ல.........அதுகூடவே இன்னொரு கிஃப்ட்டும் நான் வைச்சிருக்கிறேன்.........ஸோ இரண்டு கிஃப்ட்டையும் நீங்க வீட்ல போய்தான் பார்க்கனும்"


" ப்ளீஸ்....ப்ளீஸ்டா கண்ணம்மா............இப்பவே..........ஓபன் பண்றேன்டா" என அவன் கெஞ்சி கூத்தாடியும் அவள் சம்மதிக்கவில்லை.

நாவலை பார்க்கும் ஆவலில் அவன் உடனே வீட்டிற்கு போகலாம் என துரிதப்படுத்தினான்.

இருவரும் அவனது காரில் சென்றனர்.

அவளது வீட்டின் முன் காரை நிறுத்தவும் அந்த பகுதியில் மின் இணைப்பு துண்டித்தது.

"என்னடா கரெண்ட் போய்டுச்சு......கீழ் போர்ஷனில் வீட்டு ஓனர்ஸும் இல்ல, உங்க அப்பா அம்மாவும் ஊருக்குப் போயிருக்காங்கன்னு சொன்ன.......எப்படி நீ தனியா......"

"அதெல்லாம் ஒன்னும் ப்ரச்சனை இல்லை.........நாங்களெல்லாம் இருட்டை பார்த்து பயப்படுற பரம்பரையா??...போலீஸ்காரன் தங்கச்சியாக்கும் நான்"

" இருந்தாலும்..........ராத்திரி...........தனியா............ஒரு வயசுப் பொண்ணு........அதுவும் அழகான பொண்ணு.........தனியா வீட்ல.......நான் வேணா துணைக்கு...."

"அய்யே.......ஆசைய பாரு! ஒன்னும் வேணாம், அதெல்லாம் நாங்க பயப்படாம இருந்துப்போம். என் அண்ணாவும் டியூட்டி முடிஞ்சு வர்ர நேரம் தான்.......ஸோ நோ ப்ராப்ளம், நீங்க புறப்படுங்க"

"ஹும்......சரிடா.......டேக் கேர்...குட் நைட்!!!"

உன்னை நாளையும்
சந்திக்கலாம்
என்ற சந்தோஷத்தைவிட
இன்றும்
பிரிவதே கொடியதடி.....


தனது மொபைல்லிருந்த டார்ச் வெளிச்சத்தில் மாடிப்படி ஏறி தன் வீட்டிற்குள் அவள் செல்வதை பார்த்தபின் , அவனும் காரில் தன் வீடு நோக்கி புறப்பட்டான்.

வீட்டினுள் வந்தவள் எமர்ஜென்ஸி லைட்டை ஆன் செய்தாள்.....அதிலும் சார்ஜ் போதுமான அளவு இல்லாததால் மெழுகுவர்த்தியும் ஏற்றினாள், முகம் கழுவி விட்டு முன் அறைக்கு வந்தாள்.

தங்கள் காதலை தன் அண்ணனிடம் சொல்லிவிட இளா எவ்வளவோ வற்புறுத்தியும், பானு விஷயத்தை அண்ணனிடம் சொல்ல அருமையான சந்தர்ப்பம் தேடி கொண்டிருந்தாள். தன் நண்பனின் தங்கையையே காதலித்துக் கொண்டு, அதனை நண்பனிடம் மறைக்க ஏனோ இளாவிற்கு விருப்பமில்லை.
இன்று இளாவிற்கு சர்ப்ரைஸ் கிஃப்ட் கொடுத்த மாதிரி அண்ணாவிற்கும் காதல் விஷயத்தை இன்னிக்கு சொல்லிடனும், அம்மா அப்பா ஊரில் இல்லாத இந்த நேரத்தில் அண்ணனிடம் பக்குவமா விஷ்யத்தை சொல்றது நல்லது , என்று மனதிற்குள் நினைத்தவளாய் சோஃபாவில் தலை சாய்த்தாள் பானு.

சிறிது நேரத்தில் வீட்டின் கதவு தட்டப்பட்டது.

'பாவி!!! சஸ்பென்ஸ் தாங்காம........பாதி வழியிலேயே காரை ஓரங்கட்டிட்டு நான் கொடுத்த கிஃப்ட் பேக்கை ஓபன் பண்ணியிருப்பாங்க.......அதான் உடனே யூ டர்ன் போட்டு வந்திருப்பாங்க,
அச்சோ, .......என் ஸ்பெஷல் கிஃப்ட் பார்த்து .என்ன கலாட்டா பண்ண போறாங்களோ?
எப்படி சமாளிக்கப் போறேனோ தெரிலீயே!!
வெட்கம் பீறிக்கொண்டு வந்தது அவளுக்கு,
ரத்த நாளங்கள் துடித்தன!!

அவள் கதவினருகே செல்வதற்குள் மீண்டும் கதவு படபடப்புடன் தட்டப்பட்டது.

"ஒரு வேளை அண்ணா டியூட்டி முடிஞ்சு வந்துட்டாரோ.......இருட்டிலே தன் கிட்ட இருக்கிற வீட்டு சாவி எடுத்து திறக்க சோம்பல் பட்டு கதவு தட்டுறார் போலிருக்கு, என் நினைத்துக்கொண்டே கதவை திறந்தாள்.

அங்கு இருட்டில்..........அவள் இதுவரை கண்டிராத ஒரு உருவம்!
இருட்டில் அந்த கம்பீரமான கட்டுமஸ்தான உருவத்தோற்றம் திகிலை ஏற்படுத்தியது அவளுக்கு.



"யா......யாரது" என்றாள் தைரியத்தை வரவழைத்துக்கொண்டு.

பதலளிக்காமல் அவ்வுருவம் இரண்டடி எடுத்து வைத்து ,
அவளை நெருங்கியது!!

"யா........ர்.......நீங்......." என்று அவள் முடிப்பதற்குள்.......!!

[தொடரும்]

உயிரே!...உறவாக வா?? - 2


உயிரே!....உறவாக வா?? - 3


உயிரெ!....உறவாக வா??? - 4

121 comments:

said...

அட திவ்யா...!!!
மீண்டும் ஒரு அழகான
தொடர்கதையுடன்...

வாழ்த்துக்கள்...:)))

said...

//"ம்ம்.........கோபமா???" கெஞ்சலுடன் அவள் அவனது முகத்தருகே குனிந்து காதில் சினுங்க,

காஃபி ஷாப் பொது இடம் என்பதையும் மறந்து, அவளது கன்னத்தில் 'இச்' சென்று முத்தம் பதித்தான்.//

:)))

எடுத்தவுடனேயே கதையில் காதல்
ஆனந்த கூத்தாடுகிறது...

மிகவும் அழகு திவ்யா... :)))

said...

//விளையாட்டுக்கு கூட
உன் மேல் கோபப்பட
விடுவதாயில்லை
உன் விளையாட்டுத்தனம்! //


கூந்தலிலே வைத்த மல்லிச்சரம்போல‌
கதையிங்கும் விரவிக்கிடக்கும்
கவிதை மலர்கள் படிக்க படிக்க‌
அழகாக மணம்
வீசுகினறன...

எப்படி இப்படி திவ்யா..?? :)))

said...

குறும்பாக ஆரம்பித்து அசத்தலாக‌
நகர்கிறது கதை... சீக்கிரமே
அடுத்த பாகம்
எழுதும்மா திவ்யா.. !!!
:)))

said...

நீண்ட நாட்களின் பின் திவ்யாவைக் காண்பதில் மகிழ்ச்சி.

அழகான கதை. திகிலுடன் நிறுத்தியிருக்கிறீர்கள்.
அடுத்த பகுதி எப்பொழுது ?

said...

மீண்டும் திவ்யா கதைகளைப் படிக்க ஆரம்பிச்சிட்டேன்!

உயிரே! உறவாக வா!
or
உயிரே! உறவாகவா?
:)))

எதிர்பாராத முத்தத்தில் தொடங்கினீங்க சரி,
எதிர்பாராத ஆசாமியில் தொடரவச்சா எப்படி? நெக்ஸ்ட் பார்ட் எப்போ?

said...

வெகுநாட்களாக,, குறிப்பாக அக்டோபர் மாசம் முழுசும் ஒரு பதிவும் போடாததை மிக கடுமையாக கன்னா பின்னாவென்று கண்டிக்கிறேன்..

said...

//உன்னை பார்த்த களைப்பில்
ஒய்வெடுக்க விரும்புகிறது கண்கள்
உழைக்க விரும்புகிறது உதடுகள்..//

முடியல.. கலக்கலோ கலக்கல்..

said...

//"யா......யாரது" என்றாள் தைரியத்தை வரவழைத்துக்கொண்டு.
பதலளிக்காமல் அவ்வுருவம் இரண்டடி எடுத்து வைத்து ,அவளை நெருங்கியது!!
"யா........ர்.......நீங்......." என்று அவள் முடிப்பதற்குள்.......!!//

நெனச்சேன்..

//"ஆமா நானும் தான் படிச்சேன் அந்தாள் எழுதின தொடர் கதை,கொள்ளைக்கார கும்பலோட சூழ்ச்சி, தந்திரம், கொலை எல்லாம் வெளிப்படையா எழுதிருந்தார் வன்முறையோட.........அது உங்களுக்கு த்ரில்லா??? அந்த கொலைக்காரனோட சூட்சமம் எல்லாம் எப்படி அப்படியே நேர்ல பார்த்த மாதிரி எழுதுறார்........கற்பனை கதை மாதிரியே தோணல, இந்தாளே ஒரு கொள்ளைக் கூட்ட தலைவனா இருந்திருபபாராயிருக்கும்,அதான் இப்படி பரபரப்பு ஏற்படுத்துற மாதிரி தொடர்கதை எழுதுறார்"//

இந்த வரிகளை படிக்கும் போதே, மைல்டா ஒரு டவுட் வந்துது.. இது என்ன திகில் கதை தொடரா???

said...

இந்த பகுதி ரொம்ப அழகா குறும்போடு இருந்துது.. அடுத்த பகுதி எப்போ.. ரொம்ப வெயிட் பண்ண வைக்காமல் சீக்கிரம் போடவும்..

said...

/அட திவ்யா...!!!
மீண்டும் ஒரு அழகான
தொடர்கதையுடன்...

வாழ்த்துக்கள்...:)))

//

நினைச்சேன்! இவரு வந்து சொல்லிட்டாரு முதல்லே!

said...

//எதிர்பாராத முத்தத்தில் தொடங்கினீங்க சரி,
எதிர்பாராத ஆசாமியில் தொடரவச்சா எப்படி? நெக்ஸ்ட் பார்ட் எப்போ?
//

ரிப்பீட்டே!!

நல்ல காதல்மயமா இருந்தது. கவிதைகள மட்டும் இன்னும் ரெண்டு மூனு தடவ அடிச்சி திருத்தி எழுதிருக்கலாம்... :)) ஆஹா!! கவிகதாசிரியைக்கே கருத்துச் சொல்லிட்டேனா?? உங்களோட எத்தன ரசிக பெருமக்கள் வந்து என்னைய அடிக்கப் போறாங்களோ?? ;)))

said...

வாங்க திவ்யா!! ;))

காதலுடன் திகில் சூப்பர் கூட்டாணி ;)

said...

//உன்னை பார்த்த களைப்பில்
ஒய்வெடுக்க விரும்புகிறது கண்கள்
உழைக்க விரும்புகிறது உதடுகள்..//

குறும்பு

// இருந்தாலும்..........ராத்திரி...........தனியா............ஒரு வயசுப் பொண்ணு........அதுவும் அழகான பொண்ணு.........தனியா வீட்ல.......நான் வேணா துணைக்கு...."//

//அச்சோ, .......என் ஸ்பெஷல் கிஃப்ட் பார்த்து .என்ன கலாட்டா பண்ண போறாங்களோ?
எப்படி சமாளிக்கப் போறேனோ தெரிலீயே!!
வெட்கம் பீறிக்கொண்டு வந்தது அவளுக்கு,
ரத்த நாளங்கள் துடித்தன!!//

அழகான ஆரம்பம், ஆர்வத்தைத் தூண்டும் [தொடரும்] ! காத்திருக்கிறேன்... காத்திருக்கிறேன்...அடுத்த பகுதிக்காக
வாழ்த்துக்கள் திவ்யா

said...

suspense சூப்பர்!:))

said...

"I am Back" இப்படியல்லவோ ஒரு தலைப்பு போட்டு ஆரம்பித்திருக்கணும்.

\\பொறுமையிழந்தவனாய் தனது பற்களுக்கும் நகத்திற்கும் போர் தொடுத்தான்.\\
திவ்யாவைத் தவிர வேறு யாரால் இப்படி உவமை கொடுக்க முடியும்? இதுக்கு பெயர் உவமை தானே??

காதல் கதைக்கு நடுவில் இப்படி திகில் சஸ்பென்ஸா. ஆனா இந்த ஹைபர்னேஷன் மோடுக்குப் போகாமல் சீக்கிரம் அடுத்த பாகத்தை எழுதிடுங்க ப்ளீஸ்.

said...

NDTV flash newsla "no more serials..technicians strike and cost cuttings"nala inimay re runs thaannu solitruthan...neenga sidegapla unga kadaia thoranthu serialgaluku oxygen thanthuteenga :D :D enaku onlinela tamizh novels padika mudiatha kuraiya unga posts theethu vaikuthu :D nice writeup..atha vida..trish pics..avvvvvvvvvvv....cuteo cute..trishavay pesara mathiri kekuthu enaku :D posta ozhunga padichitu varen

Anonymous said...

//நல்ல காதல்மயமா இருந்தது. கவிதைகள மட்டும் இன்னும் ரெண்டு மூனு தடவ அடிச்சி திருத்தி எழுதிருக்கலாம்... :)) ஆஹா!! கவிகதாசிரியைக்கே கருத்துச் சொல்லிட்டேனா?? உங்களோட எத்தன ரசிக பெருமக்கள் வந்து என்னைய அடிக்கப் போறாங்களோ?? ;)))

vanthute iruku oru periya padai.........ungala adikurathuku jee tholanjeenga

Anonymous said...

திகிலுடன் கூடிய காதல் கதையா? ...மண்டைக்குள் வண்டு குடைச்சல் ஆரம்பமாகிடுத்து...!!!யார் அந்த வில்லன்?

said...

கதைக்கேத்தமாதிரி புகைபடங்கள்.

room போட்டு யோசிப்பீங்களோ.

நல்லா இருக்கு.

தொடருங்கள் சீக்கிரம்.

said...

திவ்யா வெகுநாட்கள் பிறகு பதிவு இட்டதற்கு மிக்க நன்றி பதிவைக்கண்டு
மகிழ்ந்தேன்!!!

said...

அருமையான கதை வர வர மேடம் வலைப்பூவில் கதையோட சேர்த்து கவிதைகளும் ஜொலிக்கிறது!!!!

வாழ்த்துகள் திவ்யா சீக்கரம் அடுத்த பகுதி போடுங்க!!!

said...

Welcome back!!!

//'ஆறு மணிக்கு புக் ஃபேர் போகனும், சீக்கிரம் காஃபி ஷாப் வந்திடு, அங்கிருந்து இரண்டு பேரும் சேர்ந்து புக் ஃபேர் போலாம்' என்று தன் காதல் தேவதை பானுவிற்க்கு ஃபோனில் கட்டளையிட்டுவிட்டு //

மவனே எல்லா கட்டளையும் கல்யாணம் வரைக்கும் தான்....


//ஹாய்" என்று கையசைத்துக் கொண்டே அவள் வர...........தூரத்தில் அவள் வருவதைப் பார்த்த நொடியே அவனது கோபப்புயல் வலுவிழந்து கரையைக் கடந்தது.//

அற்புதம்...


//கண்கசக்கினாள் பானு.......அவனுக்கு கஷ்டமாக போனது...கெஞ்சி கொஞ்சி சமாதனப்படுத்தினான்.//

போச்சுடா ... அவன் அம்பேல் :)

//உன்னை நாளையும்
சந்திக்கலாம்
என்ற சந்தோஷத்தைவிட
இன்றும்
பிரிவதே கொடியதடி.....
//

கொஞ்ச நாள் அப்படி தான் இருக்கும்...

said...

அடுத்த பதிவ சீக்கிரம் போடுங்க!

said...

super divya........

said...

இன்ப அதிர்ச்சி ன்னு சொல்லுவாங்களே, அது இது தானா? ரொம்ப நாளைக்கப்புறம் திவ்யா கிட்ட இருந்து ஒரு பதிவு…அதுவும் ஒரு சூப்பர் தொடர்கதை…கலக்குங்க.
வழக்கம் போல கவிதைகள் அருமையோ அருமை…
கடைசில எப்பயும் போல ஒரு ட்விஸ்ட், அதுக்கு தகுந்த மாதிரி திரிஷா படம் வேற…சூப்பர் :))

said...

அழகான தொடக்கம் திவ்யா !!!.......கவிதைகள் எல்லாமே ரொம்ப நல்ல இர்ருக்கு.....அதுத பார்ட் சிகிரம் போடுங்க:))))

said...

//விளையாட்டுக்கு கூட
உன் மேல் கோபப்பட
விடுவதாயில்லை

உன் விளையாட்டுத்தனம்!//

இனிமை! :)

முத‌ல் ப‌குதியில‌யே ச‌ஸ்பென்ஸா? ரொம்ப‌ ந‌ல்லா இருக்கு!

said...

super, naan expect panra suspense kadhai :) thanks (if you remembered my request a few mths ago)

said...

மிக நீண்ட நாட்களுக்கு பிறகு இந்த அழகான தொடர்கதையை தொடங்கி இருக்கிறீங்க...

வாழ்த்துக்கள்.

said...

good :)

said...

கலக்கல் போங்க ..
வெகு நாட்களுக்கு பிறகு ஒரு அருமையான பதிவு ..எப்பவும் போலவே
வாழ்த்துக்கள்

said...

சூப்பர் ஸ்டார் பதிவு எதுவும் வரலன்னா.. அவனவன் சூப்பர்ஸ்டார்னு சொல்லிக்குவான்னு சொல்லி முடியல.. ஒரு அட்டகாசமான கதையிருக்குற படத்தை கொடுத்துருக்கீங்க..

தூள் கிளப்புறீங்க..

said...

//அவனது தேவதை அவனை நெருங்கினாள்....!!!//

காலியாயிட்டேன்..

//சிறிது நேர மெளனமான இம்சைக்குப் பின், //

ம்ம்.. ஒண்ணும் சொல்றதுக்கில்லை

said...

//முகுந்தன் said...

மவனே எல்லா கட்டளையும் கல்யாணம் வரைக்கும் தான்.... //

ஏன் முதலாளி உங்க சொந்த அனுபவத்தை இங்க சொல்றீங்க.. :) பதிவா போட்டுறலாமே !

////கண்கசக்கினாள் பானு.......அவனுக்கு கஷ்டமாக போனது...கெஞ்சி கொஞ்சி சமாதனப்படுத்தினான்.//

போச்சுடா ... அவன் அம்பேல் :) //

நீங்க அம்பேல் ஆன கதையையும் சொல்லுங்க.. :)

said...

ஆரமிச்சுட்டாங்கய்யா.... ஆரமிச்சுடாங்க...


சுபா நாவல்ல வர்ணிக்குறாது மாதிரியே வர்ணிக்குறீங்களே. கலக்குங்க ;-)

said...

கலக்கல் ஆரம்பம், கலக்கல் கவிதைகள், கலக்கல் படங்கள், கலக்கல் கதை, அதே மாதிரி அடுத்த பதிவு எப்படா வரும்னு எதிர்பார்க்க வைக்கிறமாதிரி ஒரு திகில வைச்சு முடிக்கிறது எல்லாமே கலக்கல் திவ்யா.

அம்மணி, கொஞ்சம் சீக்கிரமா அடுத்தடுத்தப் பகுதிகள எழுதிடுங்க.

said...

அட மீண்டும் திவ்யாவா??? வாங்க வாங்க..
அன்புடன் அருணா

said...

////முகுந்தன் said...

மவனே எல்லா கட்டளையும் கல்யாணம் வரைக்கும் தான்.... //

ஏன் முதலாளி உங்க சொந்த அனுபவத்தை இங்க சொல்றீங்க.. :) பதிவா போட்டுறலாமே !

////கண்கசக்கினாள் பானு.......அவனுக்கு கஷ்டமாக போனது...கெஞ்சி கொஞ்சி சமாதனப்படுத்தினான்.//

போச்சுடா ... அவன் அம்பேல் :) //

நீங்க அம்பேல் ஆன கதையையும் சொல்லுங்க.. :)//


எனக்கு இந்த அனுபவம்
இல்லை என்று பெருமையுடன் சொல்லிகொள்கிறேன்....

said...

1

said...

2

said...

3

said...

கலக்கல் ஆரம்பம்...

said...

ரொம்ப நன்றி மாஸ்டர் கேட்ட உடனே கதை சொன்னதுக்கு...

said...

ஐ...)) திரிஷா...;)

said...

\
உன்னை பார்த்த களைப்பில்
ஒய்வெடுக்க விரும்புகிறது கண்கள்
உழைக்க விரும்புகிறது உதடுகள்..
\

ரொமான்ஸ் எகிறுது...:)

said...

\\
எதிர்பாரா முத்தத்தில் அவளது மூக்கு நுனி, காது மடல் எல்லாம் சிவந்தது.
\\

த்ரிஷாவுக்கு முகம் சிவந்தா அழகாருக்குமே...:)

said...

\\
" ப்ளீஸ்....ப்ளீஸ்டா கண்ணம்மா............இப்பவே..........ஓபன் பண்றேன்டா"
\\

அடடா இப்பவும் இப்படி பேசுகிற ஆண்கள் இருக்கிறார்களா சென்னைல நான் ஏதோ நினைச்சேன்...

கண்ணம்மா...

அழகான வார்த்தை/பெயர் திவ்யா...

said...

\\
"யா........ர்.......நீங்......." என்று அவள் முடிப்பதற்குள்.......!!
\\

"ஆஹா... வச்சுட்டாங்கய்யா.. சஸ்பென்சு"

நீங்க சஸ்பென்ஸ் வச்சசாலும் வைக்கலைன்னாலும் நாங்க கதை படிப்போம் மாஸ்டர்...:)

said...

Welcome Back !!!....attakasama irukku ......idu oru romantic kadhai ua thodaranum nu enaku aasai ..Pakklamenge poi mudiyudhu nu ....
Arumai ....valthukkal Divya
Note:office la velai pakkama Unga Blog padichittu iruken..Ellarum vithiyasama pakkuranga..ippodhaiku appitu..

said...

கவிதைக் கதை சூப்பர் திவ்யா.. அடுத்த பகுதி எப்போனு காத்துக் கிடக்கிறேன்..

said...

me the 50

said...

பல நாட்கள்ளுக்கு பிறகு மிகவும் அருமையான கதை... அடுத்த பகுதிக்காக ஆவலுடன் காத்திருக்கிறேன்.... சீகிரமாக வெளியிடுங்கள்.... அன்புடன் பூர்ணி...

said...

யக்கா சூப்பர் கலக்கிட்டீங்க... ஆரம்பமே அசத்தல்... :))))))))அந்த லாஸ்ட் த்ரில் தான் இன்னும் கிளாஸ்... அடுத்த பார்ட் க்கு வெய்டிங்... :)))))))

said...

கதை ரெம்ப நல்லா இருக்கு, அடுத்த பாகத்தை எதிர் பார்த்து காத்து இருக்கிறேன்

said...

\\Blogger நவீன் ப்ரகாஷ் said...

அட திவ்யா...!!!
மீண்டும் ஒரு அழகான
தொடர்கதையுடன்...

வாழ்த்துக்கள்...:)))\\



வாருங்கள் கவிஞரே!

வாழ்த்துக்களுக்கு நன்றி:)))

said...

\\Blogger நவீன் ப்ரகாஷ் said...

//"ம்ம்.........கோபமா???" கெஞ்சலுடன் அவள் அவனது முகத்தருகே குனிந்து காதில் சினுங்க,

காஃபி ஷாப் பொது இடம் என்பதையும் மறந்து, அவளது கன்னத்தில் 'இச்' சென்று முத்தம் பதித்தான்.//

:)))

எடுத்தவுடனேயே கதையில் காதல்
ஆனந்த கூத்தாடுகிறது...

மிகவும் அழகு திவ்யா... :)))\\



அழகான உங்கள் ரசிப்பிற்கு நன்றி!

said...

\\Blogger நவீன் ப்ரகாஷ் said...

//விளையாட்டுக்கு கூட
உன் மேல் கோபப்பட
விடுவதாயில்லை
உன் விளையாட்டுத்தனம்! //


கூந்தலிலே வைத்த மல்லிச்சரம்போல‌
கதையிங்கும் விரவிக்கிடக்கும்
கவிதை மலர்கள் படிக்க படிக்க‌
அழகாக மணம்
வீசுகினறன...

எப்படி இப்படி திவ்யா..?? :)))\\


கவிஞரின் மனம்திறந்த பாராட்டு மகிழ்ச்சியளிக்கிறது, நன்றி:)))

said...

\\Blogger நவீன் ப்ரகாஷ் said...

குறும்பாக ஆரம்பித்து அசத்தலாக‌
நகர்கிறது கதை... சீக்கிரமே
அடுத்த பாகம்
எழுதும்மா திவ்யா.. !!!
:)))\\


வருகைக்கும் பின்னூட்டங்களுக்கும் மீண்டும்.....நன்றி!!

விரைவில் அடுத்த பகுதியை பதிவிடுகிறேன் :)))

said...

\\Blogger எம்.ரிஷான் ஷெரீப் said...

நீண்ட நாட்களின் பின் திவ்யாவைக் காண்பதில் மகிழ்ச்சி.\\



பதிவெழுத இயலாதிருந்த காலத்தில் அக்கறையுடன் என்னை விசாரித்த உங்கள் அன்பிற்கு நன்றி ரிஷான்!




\\ அழகான கதை. திகிலுடன் நிறுத்தியிருக்கிறீர்கள்.
அடுத்த பகுதி எப்பொழுது ?\\


அடுத்த பகுதி...அடுத்த வாரம்.

அவசியம் படித்து உங்கள் கருத்தினை கூறுங்கள் கவிகதாரியரே:-)

said...

\\Blogger kannabiran, RAVI SHANKAR (KRS) said...

மீண்டும் திவ்யா கதைகளைப் படிக்க ஆரம்பிச்சிட்டேன்!\\\


நீண்ட இடைவெளிக்கு பின்....என் பதிவில் உங்கள் பின்னூட்டம் காண்பதில் மகிழ்ச்சி கே.ஆர்.எஸ்;))




\\ உயிரே! உறவாக வா!
or
உயிரே! உறவாகவா?
:)))\\


உயிரே! உறவாக வா????

:)))


\\ எதிர்பாராத முத்தத்தில் தொடங்கினீங்க சரி,
எதிர்பாராத ஆசாமியில் தொடரவச்சா எப்படி? நெக்ஸ்ட் பார்ட் எப்போ?\\

நெக்ஸ்ட் பார்ட் அடுத்த வாரம்....

வருகைக்கு மிக்க நன்றி!

said...

\\Blogger Saravana Kumar MSK said...

வெகுநாட்களாக,, குறிப்பாக அக்டோபர் மாசம் முழுசும் ஒரு பதிவும் போடாததை மிக கடுமையாக கன்னா பின்னாவென்று கண்டிக்கிறேன்..\\


உங்கள் கண்டிப்பில் 'அக்கறையை' காண்கிறேன் சரவணன், நன்றி!!!

said...

\Blogger Saravana Kumar MSK said...

//உன்னை பார்த்த களைப்பில்
ஒய்வெடுக்க விரும்புகிறது கண்கள்
உழைக்க விரும்புகிறது உதடுகள்..//

முடியல.. கலக்கலோ கலக்கல்..\\


நன்றி கவிஞரே!!

said...

\\Blogger Saravana Kumar MSK said...

//"யா......யாரது" என்றாள் தைரியத்தை வரவழைத்துக்கொண்டு.
பதலளிக்காமல் அவ்வுருவம் இரண்டடி எடுத்து வைத்து ,அவளை நெருங்கியது!!
"யா........ர்.......நீங்......." என்று அவள் முடிப்பதற்குள்.......!!//

நெனச்சேன்..

//"ஆமா நானும் தான் படிச்சேன் அந்தாள் எழுதின தொடர் கதை,கொள்ளைக்கார கும்பலோட சூழ்ச்சி, தந்திரம், கொலை எல்லாம் வெளிப்படையா எழுதிருந்தார் வன்முறையோட.........அது உங்களுக்கு த்ரில்லா??? அந்த கொலைக்காரனோட சூட்சமம் எல்லாம் எப்படி அப்படியே நேர்ல பார்த்த மாதிரி எழுதுறார்........கற்பனை கதை மாதிரியே தோணல, இந்தாளே ஒரு கொள்ளைக் கூட்ட தலைவனா இருந்திருபபாராயிருக்கும்,அதான் இப்படி பரபரப்பு ஏற்படுத்துற மாதிரி தொடர்கதை எழுதுறார்"//

இந்த வரிகளை படிக்கும் போதே, மைல்டா ஒரு டவுட் வந்துது.. இது என்ன திகில் கதை தொடரா???\\


திகில் கதை மாதிரின்னு வைச்சுக்கோங்களேன்........முதல் முறையாக ஒரு புது முயற்சி என் எழுத்தில்:))

said...

\\Blogger Saravana Kumar MSK said...

இந்த பகுதி ரொம்ப அழகா குறும்போடு இருந்துது.. அடுத்த பகுதி எப்போ.. ரொம்ப வெயிட் பண்ண வைக்காமல் சீக்கிரம் போடவும்..\\


ரொம்ப வெயிட் பண்ண வைக்க மாட்டேன் சரவணன்.....அடுத்த வாரம் அடுத்த பகுதி!!!

said...

\\Blogger நாமக்கல் சிபி said...

/அட திவ்யா...!!!
மீண்டும் ஒரு அழகான
தொடர்கதையுடன்...

வாழ்த்துக்கள்...:)))

//

நினைச்சேன்! இவரு வந்து சொல்லிட்டாரு முதல்லே!\\



அட....நீங்களும் இதே தான் சொல்ல நினைச்சீங்களா சிபி??

வருகைக்கு மிக்க நன்றி!!

said...

\\Blogger ஜி said...

//எதிர்பாராத முத்தத்தில் தொடங்கினீங்க சரி,
எதிர்பாராத ஆசாமியில் தொடரவச்சா எப்படி? நெக்ஸ்ட் பார்ட் எப்போ?
//

ரிப்பீட்டே!!

நல்ல காதல்மயமா இருந்தது. கவிதைகள மட்டும் இன்னும் ரெண்டு மூனு தடவ அடிச்சி திருத்தி எழுதிருக்கலாம்... :))\\



'கவி'குழந்தைகளை அடிச்சு....திருத்திருக்கலாம்தான், ஆனா மன்சு வரல:(

just kidding:))

நீங்க சொல்ல வர்ர கருத்து புரியுது ஜி, அவசியம் நினைவில் கொள்கிறேன் அடுத்த முறை கவிதை எழுதறப்போ.

உங்கள் மனம்திறந்த கருத்திற்கு மிக்க நன்றி!!


\\ஆஹா!! கவிகதாசிரியைக்கே கருத்துச் சொல்லிட்டேனா?? உங்களோட எத்தன ரசிக பெருமக்கள் வந்து என்னைய அடிக்கப் போறாங்களோ?? ;)))\\


என் வலையுலக நண்பர்களுக்கு வன்முறைன்னா என்னான்னே தெரியாது ஜி!!!

said...

\\Blogger கோபிநாத் said...

வாங்க திவ்யா!! ;))

காதலுடன் திகில் சூப்பர் கூட்டாணி ;)\\



உங்கள் தொடர் வருகைக்கும், உற்சாகமளிக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி கோபி!!

said...

\\Blogger புதியவன் said...

//உன்னை பார்த்த களைப்பில்
ஒய்வெடுக்க விரும்புகிறது கண்கள்
உழைக்க விரும்புகிறது உதடுகள்..//

குறும்பு

// இருந்தாலும்..........ராத்திரி...........தனியா............ஒரு வயசுப் பொண்ணு........அதுவும் அழகான பொண்ணு.........தனியா வீட்ல.......நான் வேணா துணைக்கு...."//

//அச்சோ, .......என் ஸ்பெஷல் கிஃப்ட் பார்த்து .என்ன கலாட்டா பண்ண போறாங்களோ?
எப்படி சமாளிக்கப் போறேனோ தெரிலீயே!!
வெட்கம் பீறிக்கொண்டு வந்தது அவளுக்கு,
ரத்த நாளங்கள் துடித்தன!!//

அழகான ஆரம்பம், ஆர்வத்தைத் தூண்டும் [தொடரும்] ! காத்திருக்கிறேன்... காத்திருக்கிறேன்...அடுத்த பகுதிக்காக
வாழ்த்துக்கள் திவ்யா\\


வாங்க புதியவன்,

உங்கள் வருகைகும், காத்திருப்பிற்கும் நன்றி!!

அடுத்த பகுதி விரைவில் பதிவிடுகிறேன், அவசியம் படித்து கருத்துக் கூறுங்கள்.

said...

\Blogger Thamizhmaangani said...

suspense சூப்பர்!:))\\


வாங்க அம்மனி,

பாராட்டிற்கு மிக்க நன்றி!!!

said...

\\Blogger விஜய் said...

"I am Back" இப்படியல்லவோ ஒரு தலைப்பு போட்டு ஆரம்பித்திருக்கணும்.\\\


ஒரு மாத இடைவெளிக்கு கூட இப்படி டைட்டில் போட்டு ரீ-எண்ட்ரி கொடுக்கனுமா விஜய்??? ....தெரியாம போச்சே:(((




\\ \\பொறுமையிழந்தவனாய் தனது பற்களுக்கும் நகத்திற்கும் போர் தொடுத்தான்.\\
திவ்யாவைத் தவிர வேறு யாரால் இப்படி உவமை கொடுக்க முடியும்? இதுக்கு பெயர் உவமை தானே??\\\



நீங்க சொன்னா கரெக்ட்தான் விஜய்.....உவமைதான்!!!

பாராட்டிற்க்கு நன்றி!!


\\ காதல் கதைக்கு நடுவில் இப்படி திகில் சஸ்பென்ஸா. ஆனா இந்த ஹைபர்னேஷன் மோடுக்குப் போகாமல் சீக்கிரம் அடுத்த பாகத்தை எழுதிடுங்க ப்ளீஸ்.\\

கண்டிப்பா அடுத்த பகுதி சீக்கிரம் போட்டுடறேன் விஜய்:))

said...

\\Blogger gils said...

NDTV flash newsla "no more serials..technicians strike and cost cuttings"nala inimay re runs thaannu solitruthan...neenga sidegapla unga kadaia thoranthu serialgaluku oxygen thanthuteenga :D :D \\

என்னாது.....சீரியல் எல்லாம் தடை பண்ணிட்டாங்களா??
ப்ளாக் ல தொடர்கதைகளுக்கு 'தடை' விதிக்காம இருந்தா சரிதான்:))



\\enaku onlinela tamizh novels padika mudiatha kuraiya unga posts theethu vaikuthu :D nice writeup..atha vida..trish pics..avvvvvvvvvvv....cuteo cute..trishavay pesara mathiri kekuthu enaku :D posta ozhunga padichitu varen\\

போஸ்ட படிக்காமலேதான் இவ்வளவு சவுண்ட் விட்டீங்களா???

வருகைக்கு நன்றி கில்ஸ்!!

said...

\\Anonymous Anonymous said...

//நல்ல காதல்மயமா இருந்தது. கவிதைகள மட்டும் இன்னும் ரெண்டு மூனு தடவ அடிச்சி திருத்தி எழுதிருக்கலாம்... :)) ஆஹா!! கவிகதாசிரியைக்கே கருத்துச் சொல்லிட்டேனா?? உங்களோட எத்தன ரசிக பெருமக்கள் வந்து என்னைய அடிக்கப் போறாங்களோ?? ;)))

vanthute iruku oru periya padai.........ungala adikurathuku jee tholanjeenga\\




பாவம் ஜி........அவரை இந்த ஒரு தடவை மன்னிச்சு விட்ருங்க அனானி:)))

said...

\\Blogger இனியவள் புனிதா said...

திகிலுடன் கூடிய காதல் கதையா? ...மண்டைக்குள் வண்டு குடைச்சல் ஆரம்பமாகிடுத்து...!!!யார் அந்த வில்லன்?\\


வாங்க புனிதா,

மண்டைக்குள்ள வண்டு குடையுதா?? ஹா ஹா!!

வில்லன் யார்னு தெரிஞ்சுக்க கொஞ்சம் வெயிட் பண்ணுங்க புனிதா.....

வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி புனிதா!!!

said...

\\Blogger அதிரை ஜமால் said...

கதைக்கேத்தமாதிரி புகைபடங்கள்.

room போட்டு யோசிப்பீங்களோ.

நல்லா இருக்கு.

தொடருங்கள் சீக்கிரம்.\\


வாங்க ஜமால்,

உங்கள் பாராட்டிற்கு் என் மனமார்ந்த நன்றிகள்!!

said...

\\Blogger எழில்பாரதி said...

திவ்யா வெகுநாட்கள் பிறகு பதிவு இட்டதற்கு மிக்க நன்றி பதிவைக்கண்டு
மகிழ்ந்தேன்!!!\\



எல்லாம் நீங்க கொடுத்த ஊக்கம்தான் கவியரசி......நான் தான் உங்களுக்கு நன்றி சொல்லனும்!!!

said...

\\Blogger எழில்பாரதி said...

அருமையான கதை வர வர மேடம் வலைப்பூவில் கதையோட சேர்த்து கவிதைகளும் ஜொலிக்கிறது!!!!

வாழ்த்துகள் திவ்யா சீக்கரம் அடுத்த பகுதி போடுங்க!!!\\


கவிதை 'ஜொலி'க்குதா?

கவியரசியின் பாராட்டு மகிழ்ச்சியளிக்கிறது!!!

said...

\\Blogger முகுந்தன் said...

Welcome back!!!\\



நன்றி....நன்றி முகுந்தன்!!



\\ //'ஆறு மணிக்கு புக் ஃபேர் போகனும், சீக்கிரம் காஃபி ஷாப் வந்திடு, அங்கிருந்து இரண்டு பேரும் சேர்ந்து புக் ஃபேர் போலாம்' என்று தன் காதல் தேவதை பானுவிற்க்கு ஃபோனில் கட்டளையிட்டுவிட்டு //

மவனே எல்லா கட்டளையும் கல்யாணம் வரைக்கும் தான்....\\



கூல் டவுன்......ஒவரு டென்ஷன் கூடாது முகுந்தன்:))





//ஹாய்" என்று கையசைத்துக் கொண்டே அவள் வர...........தூரத்தில் அவள் வருவதைப் பார்த்த நொடியே அவனது கோபப்புயல் வலுவிழந்து கரையைக் கடந்தது.//

அற்புதம்...\\\


நன்றி , நன்றி!!



\\ //கண்கசக்கினாள் பானு.......அவனுக்கு கஷ்டமாக போனது...கெஞ்சி கொஞ்சி சமாதனப்படுத்தினான்.//

போச்சுடா ... அவன் அம்பேல் :)\\


அனுபவம் இப்படி சொல்ல வைக்கிறதோ???




\\ //உன்னை நாளையும்
சந்திக்கலாம்
என்ற சந்தோஷத்தைவிட
இன்றும்
பிரிவதே கொடியதடி.....
//

கொஞ்ச நாள் அப்படி தான் இருக்கும்...\\


கொஞ்ச நாளைக்கு அப்புறம் என்ன ஆகும்??
சொன்னா நாங்களும் தெரிஞ்சுக்குவோம்;))



வருகைக்கும், விரிவான தருகைக்கும் மிக்க நன்றி முகுந்தன்!!

said...

\\Blogger ஜீவன் said...

அடுத்த பதிவ சீக்கிரம் போடுங்க!\\


வாங்க ஜீவன்,

உங்கள் வருகைக்கு நன்றி!

விரைவில் அடுத்த பகுதி பதிவிடுகிறேன்:)))

said...

\\Blogger anbudan vaalu said...

super divya........\\


மிக்க நன்றி அன்புடன் வாலு...!!!

said...

\\Blogger Divyapriya said...

இன்ப அதிர்ச்சி ன்னு சொல்லுவாங்களே, அது இது தானா? ரொம்ப நாளைக்கப்புறம் திவ்யா கிட்ட இருந்து ஒரு பதிவு…அதுவும் ஒரு சூப்பர் தொடர்கதை…கலக்குங்க.
வழக்கம் போல கவிதைகள் அருமையோ அருமை…
கடைசில எப்பயும் போல ஒரு ட்விஸ்ட், அதுக்கு தகுந்த மாதிரி திரிஷா படம் வேற…சூப்பர் :))\\


வாங்க திவ்யப்ரியா:)))

உற்சாகமளிக்கும் உங்கள் பின்னூட்ட பாராட்டுதலுக்கு என் மனமார்ந்த நன்றி!!

said...

\\Blogger "Its my world" said...

அழகான தொடக்கம் திவ்யா !!!.......கவிதைகள் எல்லாமே ரொம்ப நல்ல இர்ருக்கு.....அதுத பார்ட் சிகிரம் போடுங்க:))))\\


உங்கள் அழகான ரசிப்பினை பகிர்ந்துக்கொண்டதிற்கும், மனம்திறந்த பாராட்டிற்கும் மிக்க நன்றி!!

அடுத்த பார்ட் சீக்கிரம் பதிவிடுகிறேன்....அவசியம் படித்து கருத்து கூறுங்கள்!!

said...

\\Blogger Murugs said...

//விளையாட்டுக்கு கூட
உன் மேல் கோபப்பட
விடுவதாயில்லை

உன் விளையாட்டுத்தனம்!//

இனிமை! :)

முத‌ல் ப‌குதியில‌யே ச‌ஸ்பென்ஸா? ரொம்ப‌ ந‌ல்லா இருக்கு!\\


வாங்க முருக்ஸ்,

உங்கள் வருகைக்கும் பாராட்டிற்கும் மிக்க நன்றி!!

said...

\\Blogger Singari said...

super, naan expect panra suspense kadhai :) thanks (if you remembered my request a few mths ago)\\


வாங்க உஷா!!

உங்க request எனக்கு நல்லா ஞாபகம் இருக்கு உஷா!

நீங்க எதிர்பார்த்த அளவிற்கு கதை இருந்ததான்னு நீங்கதான்.....சொல்லனும்:))

உங்கள் வருகைக்கும்,நான் பதிவு எழுதாத நாட்களில் அன்புடன் விசாரித்ததிற்கும் மிக்க நன்றி!!

said...

\\Blogger நிமல்-NiMaL said...

மிக நீண்ட நாட்களுக்கு பிறகு இந்த அழகான தொடர்கதையை தொடங்கி இருக்கிறீங்க...

வாழ்த்துக்கள்.\\

உங்கள் வாழ்த்துக்கள் மகிழ்ச்சியளிக்கிறது நிமல், மிக்க நன்றி!!

said...

\\Blogger sathish said...

good :)\\



நன்றி சதீஷ்!!

said...

\\Blogger Raghav said...

சூப்பர் ஸ்டார் பதிவு எதுவும் வரலன்னா.. அவனவன் சூப்பர்ஸ்டார்னு சொல்லிக்குவான்னு சொல்லி முடியல.. ஒரு அட்டகாசமான கதையிருக்குற படத்தை கொடுத்துருக்கீங்க..

தூள் கிளப்புறீங்க..\\



நீங்க என்னை சூப்பர் ஸ்டார்ன்னு ஏத்தி விட்டதும்....எங்கேடா ஆவார்டுக்கு பின்னாடியே ஆப்பும் வைச்சுடுவீங்களோன்னு பயந்து போய் உடனே பதிவு போட்டுட்டேன் ராகவ்:(

said...

\\Blogger Raghav said...

//அவனது தேவதை அவனை நெருங்கினாள்....!!!//

காலியாயிட்டேன்..

//சிறிது நேர மெளனமான இம்சைக்குப் பின், //

ம்ம்.. ஒண்ணும் சொல்றதுக்கில்லை\\


உங்கள் ரசிப்பினை பகிர்ந்துக்கொண்டதிற்கு நன்றி ராகவ்!!

said...

\\Blogger கருப்பன்/Karuppan said...

ஆரமிச்சுட்டாங்கய்யா.... ஆரமிச்சுடாங்க...


சுபா நாவல்ல வர்ணிக்குறாது மாதிரியே வர்ணிக்குறீங்களே. கலக்குங்க ;-)\\


நீண்ட நாட்களுக்கு பின்.....உங்கள் பின்னூட்டத்தை என் பதிவில் பார்ப்பதில் மிக்க மகிழ்ச்சி கருப்பன்!!

வருகைக்கும் பாராட்டிற்கும் நன்றி!!

said...

\\Blogger ஜோசப் பால்ராஜ் said...

கலக்கல் ஆரம்பம், கலக்கல் கவிதைகள், கலக்கல் படங்கள், கலக்கல் கதை, அதே மாதிரி அடுத்த பதிவு எப்படா வரும்னு எதிர்பார்க்க வைக்கிறமாதிரி ஒரு திகில வைச்சு முடிக்கிறது எல்லாமே கலக்கல் திவ்யா.

அம்மணி, கொஞ்சம் சீக்கிரமா அடுத்தடுத்தப் பகுதிகள எழுதிடுங்க.\\



உங்கள் வருகைக்கும் ,கலக்கலான பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றி ஜோசஃப்!!!


அடுத்த பகுதி விரைவில்.....

said...

\\Blogger Aruna said...

அட மீண்டும் திவ்யாவா??? வாங்க வாங்க..
அன்புடன் அருணா\\


வாங்க அருணா,

என் பதிவு பக்கம் வந்தமைக்கும், அன்பான வரவேற்பிற்கும் மிக்க நன்றி!!

said...

\\Blogger முகுந்தன் said...

////முகுந்தன் said...

மவனே எல்லா கட்டளையும் கல்யாணம் வரைக்கும் தான்.... //

ஏன் முதலாளி உங்க சொந்த அனுபவத்தை இங்க சொல்றீங்க.. :) பதிவா போட்டுறலாமே !

////கண்கசக்கினாள் பானு.......அவனுக்கு கஷ்டமாக போனது...கெஞ்சி கொஞ்சி சமாதனப்படுத்தினான்.//

போச்சுடா ... அவன் அம்பேல் :) //

நீங்க அம்பேல் ஆன கதையையும் சொல்லுங்க.. :)//


எனக்கு இந்த அனுபவம்
இல்லை என்று பெருமையுடன் சொல்லிகொள்கிறேன்....\\



நம்பிட்டோம்:))

said...

\\ 3

10:53 PM
Delete
Blogger தமிழன்...(கறுப்பி...) said...

கலக்கல் ஆரம்பம்...\\

1..2...3...ஜூட் சொல்லிட்டு பின்னூட்டம் போட ஆரம்பிப்பீங்களோ தமிழன்??

said...

\\Blogger தமிழன்...(கறுப்பி...) said...

ரொம்ப நன்றி மாஸ்டர் கேட்ட உடனே கதை சொன்னதுக்கு...\\


உங்கள் அன்பான விசாரிப்பிற்கு நான் தான் உங்களுக்கு நன்றி சொல்லனும் தமிழன்....

said...

\\Blogger தமிழன்...(கறுப்பி...) said...

\\
" ப்ளீஸ்....ப்ளீஸ்டா கண்ணம்மா............இப்பவே..........ஓபன் பண்றேன்டா"
\\

அடடா இப்பவும் இப்படி பேசுகிற ஆண்கள் இருக்கிறார்களா சென்னைல நான் ஏதோ நினைச்சேன்...

கண்ணம்மா...

அழகான வார்த்தை/பெயர் திவ்யா...\\


முதல் முறையாக என் பதிவில் இந்த வார்த்தையை பயன் படுத்துகிறேன் தமிழன்....கதை எழுதிட்டு படிச்சுப்பார்க்கிறப்போ, இந்த வார்த்தை கியூட்டா இருந்த மாதிரி தோனுச்சு, ஸோ.....அப்படியே வைச்சுக்கிட்டேன்,

நீங்க இதை குறிப்பிட்டது....மகிழ்ச்சியளிக்கிறது!!

said...

\\Blogger தமிழன்...(கறுப்பி...) said...

\
உன்னை பார்த்த களைப்பில்
ஒய்வெடுக்க விரும்புகிறது கண்கள்
உழைக்க விரும்புகிறது உதடுகள்..
\

ரொமான்ஸ் எகிறுது...:)\\


:)))

said...

\\Blogger தமிழன்...(கறுப்பி...) said...

\\
"யா........ர்.......நீங்......." என்று அவள் முடிப்பதற்குள்.......!!
\\

"ஆஹா... வச்சுட்டாங்கய்யா.. சஸ்பென்சு"

நீங்க சஸ்பென்ஸ் வச்சசாலும் வைக்கலைன்னாலும் நாங்க கதை படிப்போம் மாஸ்டர்...:)\\


தெரியும் தமிழன்.....சஸ்பென்ஸ் இல்லைன்னாலும் படிப்பீங்கன்னு,

இருந்தாலும்....இந்த கதைக்கு சஸ்பென்ஸ் அவசியம்:)))


உங்கள் வருகைக்கும்,
அள்ளி தெளித்த பின்னூட்ட ஊக்கத்திற்கும் என் மனமார்ந்த நன்றி!!!

said...

\\Blogger kavidhai Piriyan said...

Welcome Back !!!....attakasama irukku ......idu oru romantic kadhai ua thodaranum nu enaku aasai ..Pakklamenge poi mudiyudhu nu ....
Arumai ....valthukkal Divya\\\\


வாங்க ப்ரவீன்!

உங்க ரசிப்பையும், எதிர்பார்ப்பையும் வெளிப்படுத்தியமைக்கு நன்றி!!


\\ Note:office la velai pakkama Unga Blog padichittu iruken..Ellarum vithiyasama pakkuranga..ippodhaiku appitu..\\

அட....ஆஃபீஸ் டைம்ல ப்ளாக் படிக்கிறீங்களா???
ஃப்ரீ டைம்ல லெஷர்லியா ப்ளாக் படிங்க ப்ரவீன்:)))


வருகைக்கு மிக்க நன்றி!!

said...

\\Blogger என் பதிவுகள்/En Pathivugal said...

கவிதைக் கதை சூப்பர் திவ்யா.. அடுத்த பகுதி எப்போனு காத்துக் கிடக்கிறேன்..\\


உங்கள் மனமார்ந்த பாராட்டு மகிழ்ச்சியளிக்கிறது!!

விரைவில் அடுத்த பகுதி பதிவிடுகிறேன்......உங்கள் வருகைக்கு மிக்க நன்றி!!!!

said...

\\Blogger என் பதிவுகள்/En Pathivugal said...

me the 50\


:)))

நன்றி!

said...

\\Blogger Poorni said...

பல நாட்கள்ளுக்கு பிறகு மிகவும் அருமையான கதை... அடுத்த பகுதிக்காக ஆவலுடன் காத்திருக்கிறேன்.... சீகிரமாக வெளியிடுங்கள்.... அன்புடன் பூர்ணி...\\



வாங்க பூர்ணி,

உங்கள் முதல் வருகைக்கும் பின்னூட்ட பாராட்டுதலுக்கும் மிக்க நன்றி!!

மீண்டும் வருக!!!!

said...

\\Blogger ஸ்ரீமதி said...

யக்கா சூப்பர் கலக்கிட்டீங்க... ஆரம்பமே அசத்தல்... :))))))))அந்த லாஸ்ட் த்ரில் தான் இன்னும் கிளாஸ்... அடுத்த பார்ட் க்கு வெய்டிங்... :)))))))\\


காதலையும் திருத்தம் செய்யும் 'காதல் கதாசிரியரே' வாங்க வாங்க!!!!

உங்கள் வருகைக்கும், பாராட்டிற்கும் மிக்க நன்றி!!!

said...

\\Blogger நசரேயன் said...

கதை ரெம்ப நல்லா இருக்கு, அடுத்த பாகத்தை எதிர் பார்த்து காத்து இருக்கிறேன்\\

வாங்க நசரேயன்,

முதன் முறையாக என் வலைதளம் வந்திருக்கிறீங்க...மிக்க நன்றி!!

அடுத்த பகுதி ......விரைவில்!!

பாராட்டிற்கு நன்றி!!

மீண்டும் வருக:)))

said...

மீண்டும் ஒரு காதல் கதையே என்று நினைச்சேன், சஸ்பென்ஸ் முடிச்சு இருக்கீங்க.. அடுத்த பகுதியில் தொடருகிறேன்

said...

மீண்டும் ஒரு காதல் கதையே என்று நினைச்சேன், சஸ்பென்ஸ் முடிச்சு இருக்கீங்க.. அடுத்த பகுதியில் தொடருகிறேன்

said...

ஆஹா..பயங்கர ஸஸ்பென்ஸ்ல கதையை ஸஸ்பென்டு (suspend)பண்ணிட்டீங்களே..

அடுத்த பாகம் எப்போ??????..

கதையின் இடையிடையே வரும் கவிதைகள் அறுமை.

said...

//கதையின் இடையிடையே வரும் கவிதைகள் அறுமை//

நீங்க அருமைன்னு சொல்ல நினைச்சீங்களா? அல்லது அறுவைன்னு சொல்ல நினைச்சீங்களா?

தயவு செய்து தெளிவா சொல்லிடுங்க!

திவ்யாக்கு தலை வெடிக்கொதோ இல்லையோ எனக்கு வெடிச்சிடும் அதைத் தெரிஞ்சிகாட்டி!

said...

//உன்னை நாளையும்
சந்திக்கலாம்
என்ற சந்தோஷத்தைவிட
இன்றும்
பிரிவதே கொடியதடி.....
//

அழகான வரிகள். கதையும் நன்றாக எழுதி இருக்கிறீர்கள்.

அடுத்த பகுதியை சீக்கிரம் பதிக்கவும்.

said...

\\Blogger நாகை சிவா said...

மீண்டும் ஒரு காதல் கதையே என்று நினைச்சேன், சஸ்பென்ஸ் முடிச்சு இருக்கீங்க.. அடுத்த பகுதியில் தொடருகிறேன்\\


வாங்க சிவா!!

நீண்ட இடைவெளிக்கு பின் உங்கள் பின்னூட்டத்தை என் பதிவில் காண்பதில் மகிஷ்ச்சி!!


அடுத்த பகுதியும் அவசியம் படிச்சு, கருத்து சொல்லுங்க,

வருகைக்கு நன்றி சிவா!!!

said...

\\Blogger galaata ammani said...

ஆஹா..பயங்கர ஸஸ்பென்ஸ்ல கதையை ஸஸ்பென்டு (suspend)பண்ணிட்டீங்களே..

அடுத்த பாகம் எப்போ??????..

கதையின் இடையிடையே வரும் கவிதைகள் அறுமை.\\


வாங்க அம்மனி........கலாட்டா அம்மனி!!

அடுத்த பாகம் நாளைக்கு பதிவிடுறேன்...:)))

பாராட்டிற்கும், வருகைக்கும் நன்றி அம்மனி!!

said...

\\Blogger நாமக்கல் சிபி said...

//கதையின் இடையிடையே வரும் கவிதைகள் அறுமை//

நீங்க அருமைன்னு சொல்ல நினைச்சீங்களா? அல்லது அறுவைன்னு சொல்ல நினைச்சீங்களா?

தயவு செய்து தெளிவா சொல்லிடுங்க!

திவ்யாக்கு தலை வெடிக்கொதோ இல்லையோ எனக்கு வெடிச்சிடும் அதைத் தெரிஞ்சிகாட்டி!\\


:)))

அறுவை ன்னு சொன்னதாவே வைச்சுக்கோங்களேன் சிபி.....இப்போ தலை வெடிக்காதில்ல???

said...

\\Blogger காண்டீபன் said...

//உன்னை நாளையும்
சந்திக்கலாம்
என்ற சந்தோஷத்தைவிட
இன்றும்
பிரிவதே கொடியதடி.....
//

அழகான வரிகள். கதையும் நன்றாக எழுதி இருக்கிறீர்கள்.

அடுத்த பகுதியை சீக்கிரம் பதிக்கவும்.\\


உங்கள் முதல் வருகைக்கும், பாராட்டிற்கும் மிக்க நன்றி காண்டீபன்!!!

said...

wow, this is called the real suspense! lol. Eppidi kathai eluthura innu unga kitta training edukkanum...divya miss :)
I just simply loved it!

said...

Awesome write up divya! AS USUAL :)

said...

\\Blogger Mathu said...

wow, this is called the real suspense! lol. \\

:)))



\\Eppidi kathai eluthura innu unga kitta training edukkanum...divya miss :)\\

நீங்க சூப்பரா கதை எழுதுறீங்களே மது.......மீன் குஞ்சுக்கு நீந்த கத்துக்கொடுக்கனுமா என்ன????




\\ I just simply loved it!\\

நன்றி மது!!

said...

\\Blogger Mathu said...

Awesome write up divya! AS USUAL :)\\



உங்கள் தொடர் வருகைக்கும் , பின்னூட்ட பாராட்டிற்கும் மிக்க நன்றி மது!!!

said...

சூப்பரா ஆரம்பிச்சிருக்கீங்க. ஆமாம், உங்களால மட்டும் எப்படி இப்படியெல்லாம் முடியுது?
:)

said...

\\Blogger Karthik said...

சூப்பரா ஆரம்பிச்சிருக்கீங்க. ஆமாம், உங்களால மட்டும் எப்படி இப்படியெல்லாம் முடியுது?
:)\\


உங்கள் தவறாத வருகைக்கும் பாராட்டிற்கும் நன்றி கார்த்திக்:)))

said...

////கதையின் இடையிடையே வரும் கவிதைகள் அறுமை//

நீங்க அருமைன்னு சொல்ல நினைச்சீங்களா? அல்லது அறுவைன்னு சொல்ல நினைச்சீங்களா?

தயவு செய்து தெளிவா சொல்லிடுங்க!

திவ்யாக்கு தலை வெடிக்கொதோ இல்லையோ எனக்கு வெடிச்சிடும் அதைத் தெரிஞ்சிகாட்டி//

..தப்பு தப்பு, திவ்யாவுடைய கவிதையை அறுவைன்னு சொல்வேனா???...அருமைன்னுதான் சொல்ல நினைச்சேன்,தமிழில் தட்டச்சு செய்கிறபோது தவறுதலா செய்த தவறு அது.
உங்க தலை வெடிக்கிறளவு நான் செய்ததற்கு என்னை மன்னிக்கனும் சிபி சார்.

said...

உன்னை நாளையும்
சந்திக்கலாம்
என்ற சந்தோஷத்தைவிட
இன்றும்
பிரிவதே கொடியதடி.....
/////////

அங்கங்கே இப்படி அழகாய் உள்ளது

said...

திவ்யா.....

றொம்ம அழக எழ்துறீங்கப்பா.....

மனமார்ந்த வாழ்த்துக்கள்.....


என்றும் அன்புடன்...
- கர்த்திக் -