September 30, 2008

மாமனாருக்கு மரியாதை....!!!



அப்பா-மகன் உறவுக்கு நடுவில் ஒரு விதமான இடைவெளி அந்த மகன் டீன் ஏஜ் பருவம் அடையும் போது ஏற்படுவது சகஜம்.
தன் தேவைகளை அம்மாவின் மூலமாகவே அப்பாவிடம் தெரிவிக்க ஆரம்பிப்பான் பையன் அந்த பருவத்தில், நாளடைவில் இந்த இடைவெளி அதிகமாகி, பேசிக்கொள்ளும் வார்த்தைகளும் அளவுடன் அமைந்துபோகும்.

அப்பாவின் மேல் மரியாதையும் பாசமும் இருந்தாலும் , 'சற்று' தள்ளியிருந்து உறவுகாக்கும் இந்த பையன், தனக்கு திருமணமாகும் போது, தன் மாமனாரோடு எப்படி பழகுவான்???

புது 'மாப்பிள்ளை' அந்தஸ்து , கவுரவம் எல்லாம் வேறு அவனுக்கு ஒரு புது கெத்து கொடுத்திருக்கும்போது, தகப்பன் வயதிலிருக்கும் தன் மாமனார் கொடுக்கும் மரியாதையை எப்படி கையாள வேண்டும்??

இதோ சில டிப்ஸ்.......

* தன் மகன் வயதில் இருக்கும் உங்களுக்கு உங்கள் மாமனார் தரும் மரியாதையை ஏற்றுக்கொள்வதோடு மட்டுமில்லாமல், திருப்பி செலுத்த தவற வேண்டாம்.

*உங்கள் மாமனாரோடு தொடர்ச்சியாக 5 நிமிடத்திற்கு மேல் பேச பொதுவானவை ஏதும் இல்லை என யோசிக்கிறீர்களா???......உங்கள் மனைவியிடம், அவளின் அப்பாவின் ரசனை, விருப்பு , வெறுப்புகள் பற்றி கேட்டு தெரிந்துக் கொள்ளுங்கள்.
அந்த வயதில் பெரும்பாலும் அரசியல், நாட்டு நடப்பு பற்றி பேச விரும்புவர்.

*எப்படி உங்கள் தாயாருடன் உங்கள் மனைவி ஒத்துப் போய் பேசி பழகுவது உங்களுக்கு ஒரு சந்தோஷத்தை, மன்நிறைவை கொடுக்குமோ,அதேபோன்ற எதிர்பார்ப்பு உங்கள் மனைவியின் மனதில்............... உங்களுக்கும் தன் தகப்பனுக்கு நடுவில் நல்லுறவு இருக்க வேண்டுமென இருக்குமில்லையா??......இதை நினைவில் கொண்டு உங்கள் மாமனாரோடு பழகுங்கள்!!

*உங்கள் மனைவியை பற்றி ஏதும் புகார் தெரிவிக்க விரும்பினால், அதனை உங்கள் மனைவியின் தாயாரிடம் கூறுவது மேல்.
தன் மகளை பற்றி தன்னிடமே தன் மருமகன் குறை கூறினால், அதை தாங்கிக்கொள்வதும், கையாளுவதும் எந்த தகப்பனுக்கும் கஷ்டமான காரியம்.
[உங்களால் சரி செய்துக்கொள்ள முடியாத பட்சத்தில் மட்டுமே புகார் துறை வரைக்கும் செல்வது சிறந்தது.......திருமண பந்தத்திற்கு உகந்ததும் கூட]

*நீங்கள் மாமனார் வீட்டிற்கு போகும்போதெல்லாம் கிடைக்கும் மாப்பிள்ளை கவனிப்பை பயன்படுத்தி 'ஒவரு' பந்தா பண்ணாதீங்க.
உங்களுக்கும் உங்கள் மனைவிக்கும் மனமுவந்து உங்கள் மாமனார் கொடுக்கும் வெகுமதிகளை ஏற்றுக்கொள்ளுங்கள்,
இளப்பமாக எண்ணி ஏற்க மறுப்பது,
அதிகமாக எதிர்பார்த்து டிமாண்ட்
செய்வதையும் தவிருங்கள்.

*எந்த தகப்பனுக்கும் செல்ல மகளை தன் மருமகன் நன்றாக கவனித்துக்கொள்கிறாரா?? என அறிந்துக்கொள்ள ஒரு ஆர்வமும் ஆசையும் இருக்கும், அதனால்.....
மாமனாருக்கு முன் உங்கள் மனைவியிடம் நெருக்கமாக நடந்துக்கொள்ளாவிட்டாலும்,

"என்னமா சாப்பாடு ரெடியா?"

"மாமாவுக்கு காஃபி கொண்டுவாமா"

"நீ சாப்பிட்டியாமா?"

இப்படி பேச்சில் 'மா' போட்டு உங்கள் மனைவியிடம் மாமனாருக்கு முன் பேசிப்பாருங்களேன்...

பெத்தவரின் மனம் குளிர்ந்து போகும்!!!

பொத்தி பொத்தி வளர்த்த மகளை
பத்திரமாக பார்த்துக் கொள்வாரா மாப்பிள்ளை...
என ஏங்கும் ஒரு தகப்பனுக்கு
தயக்கமின்றி அத்தருணத்தை
தருவதில் தவறொன்றுமில்லையே???

130 comments:

ஜொள்ளுப்பாண்டி said...

ஹேய் திவ்யா.. திரும்ப டிப்ஸா..?? அட அட அட ...
இப்பபோ மருமவனுகளுக்கா..?? இப்படியெல்லாம்
எப்படி சிந்திக்கிறீய தாய்க்குலங்களே.. ??? :)))
கலக்கறீய போங்க....!!

ஜொள்ளுப்பாண்டி said...

//அப்பாவின் மேல் மரியாதையும் பாசமும்
இருந்தாலும் , 'சற்று' தள்ளியிருந்து
உறவுகாக்கும் இந்த பையன்,
தனக்கு திருமணமாகும் போது,
தன் மாமனாரோடு எப்படி பழகுவான்??? //

பசங்க பொண்டாட்டி கூட பழகினா போதாதுங்களா
அம்மணி...?? அவுக அப்பா கூட எல்லாம்
பழக மிலிட்டரி ட்ரெய்னிங் எடுக்கணுமா..?
கல்யாணம் ரொம்ப கஷ்டம் போல இருக்கே.. !!! ;)))

ஜொள்ளுப்பாண்டி said...

// எப்படி உங்கள் தாயாருடன் உங்கள் மனைவி
ஒத்துப் போய் பேசி பழகுவது உங்களுக்கு
ஒரு சந்தோஷத்தை, மன்நிறைவை கொடுக்குமோ,//

அட என்னாங்க நீங்க..?? மாமியாரோட ஒத்துப்போற மனைவியா..?
என்ன ஜோக்கடிக்கிறீய திவ்யா..? :)))) அதெல்லாம்
கனவிலே வேணா நடக்கலாமா இருக்கும்.. !!! :)))

ஜொள்ளுப்பாண்டி said...

// உங்கள் மனைவியை பற்றி ஏதும் புகார் தெரிவிக்க
விரும்பினால், அதனை உங்கள் மனைவியின்
தாயாரிடம் கூறுவது மேல். //

அப்படீங்கறீயளா...?? மாமியார் இஸ் பெட்டர் தன் மாமனார்..?
ஒய் மேடம்..? :)))

ஜொள்ளுப்பாண்டி said...

//இப்படி பேச்சில் 'மா' போட்டு உங்கள் மனைவியிடம்
மாமனாருக்கு முன் பேசிப்பாருங்களேன்... //

அப்போ 'டி' போட்டு பேசக்கூடாதா..?? என்ன கொடுமை
இது..?? ;)))

ஜொள்ளுப்பாண்டி said...

டிப்ஸ் எல்லாம் சூப்பரு திவ்யா..!!!

ஆயில்யன் said...

//பொத்தி பொத்தி வளர்த்த மகளை
பத்திரமாக பார்த்துக் கொள்வாரா மாப்பிள்ளை...
என ஏங்கும் ஒரு தகப்பனுக்கு
தயக்கமின்றி அத்தருணத்தை
தருவதில்லை தவறொன்றுமில்லையே??? ///


கண்டிப்பாக தவறொன்றுமில்லை!

குறையென்றுமில்லாத வாழ்க்கையினை தம் மகள் பெற்றிருப்பதனை நினைத்து மனம் மகிழும் தந்தை! தந்தையின் சந்தோசத்தினை நினைத்து மகிழும் பெண் அதற்கு காரணமாய் அமையும் மருமகன் அனைத்துக்கும் அடிப்படையாய் அமையும் எளிய முறை அன்பில் வாழ்தல் !

சூப்பர் :)))))))

Nimal said...

சூப்பர் டிப்ஸ்...!!

//இப்படி பேச்சில் 'மா' போட்டு உங்கள் மனைவியிடம் மாமனாருக்கு முன் பேசிப்பாருங்களேன்...//

அப்படியா...? :)))

Anonymous said...

Intha kaalthile entha maamanaarum marumagana ozhunga mathikkarthu illa... only very few give respect..

MSK / Saravana said...

பின்றீங்களே திவ்யா..
:)

MSK / Saravana said...

டிப்ஸா கொடுக்கறீங்களே.. எப்படி???
எதாவது நடைமுறையில் உறவுமுறை - ரிசர்ச் பண்றீங்களா..

சீக்கிரமே டாக்டர் பட்டம் கிடைக்க வாழ்த்துக்கள்..
:)

MSK / Saravana said...

ஆமாம்.. தொடர்கதை அல்லது கதை எப்போ போடூவீங்க??

Raghav said...

என்னங்க, ரொம்ப நாளா காணோம்.. நல்லா இருக்கீகளா.. நல்லா சொல்லிருக்கீங்க.. வாழ்த்துக்கள்..

MSK / Saravana said...

எப்போதும் எல்லோர் மீதும் அன்போடும் கனிவோடும் பழகினால், பிரச்சினையே இல்லை.. சரியா..

அது மனைவியோ.. மாமனாரோ..

Rajesh Krishnamoorthy said...

இதே மாதிரி டிப்ஸ் ஏதாவது மாமனாருக்கு இருந்தா அதயும் போடுங்க ... வரதட்சனை பிரட்சனை -ல இருந்து தப்பிக்க மாமனாருக்கு உதவும் :)

எல்லாருக்கும் டிப்ஸ் அள்ளி கொடுக்கற உள்ளத்துக்கு (திவ்யா )... என் வாழ்த்துக்கள்.....

வல்லிசிம்ஹன் said...

அருமையா,அன்பாவே இருக்கச் சொல்லிக் கொடுத்திருக்கீங்க. திவ்யா ! வாழ்த்துகள்.

MyFriend said...

ஆஹா.. அருமை அருமை..

காதலுக்கு மரியாதை
மனைவிக்கு மரியாதை
தாய்க்கு மரியாதைன்னு எப்போதும் சொல்ற மேட்டரை விட்டுட்டு வெளியே வந்து மாமனாருக்கு மரியாதை சொல்றீங்களே.. something special and nice. :-)

Vijay said...

Return of the "Tips Divya"

சரி சரி, உங்க புருஷரு அவரு மாமனார் கிட்ட எப்படி நடந்துக்கணும்ங்கறதை இப்பவே பதிவா பொட்டு சொல்லீட்டீங்களாக்கும்.

\\"என்னமா சாப்பாடு ரெடியா?"

"மாமாவுக்கு காஃபி கொண்டுவாமா"

"நீ சாப்பிட்டியாமா?"\\

இப்படி அவரு முன்னாடி பேசினா, "நாம தான் ஏமாளியா இருந்துட்டோம்னு நினைச்சா, நம்ம மருமகனுக்கும் இதே வாழ்வு தானா"ன்னு ஏங்குவார். என்னருமை கணவன்மார்களே, மாமனார் முன்னாடிதான் பொண்டாட்டிய ரெண்டு அரட்டு போட முடியும். திவ்யா சொல்லற இந்த டிப்ஸ மட்டும் கேக்காதீங்க. மாமனார் முன்னாடி தான் பொண்டாட்டியை வாடி போடின்னு கூப்பிட முடியும். அதனால "என்ன டிஃபன் வர இவ்வளவு லேட்டாடீஈஈ" ரெண்டு அரட்டு போடுங்க.

Anonymous said...

ஆஹா அசத்துங்க திவ்யா!!!

Prabakar said...

ஹலோ திவ்யா டீச்சர் .. வர வர உங்க அட்வைஸ் மழை தாங்க முடியலை போங்க .. இந்த பொண்ணுங்களை சமாளிக்க முடியாம தான் மாமனார் வீட்டுக்கே போறான் [ ஒரு safe side தான் ] அங்கேயும் ,, இத்தனை சமாளிப்பு என்றால் .. தாங்க மாட்டங்க அம்மா இந்த பாவப்பட்ட பசங்க ...ஹி ஹி

இருந்தாலும் , அனைத்தும் கவனத்தில் கொள்ளவேண்டியதுதான் ..

Karthik said...

//தன் தேவைகளை அம்மாவின் மூலமாகவே அப்பாவிடம் தெரிவிக்க ஆரம்பிப்பான் பையன்

உண்மைதாங்க. இத்தனைக்கும் என்னுடைய அப்பா நான் என்ன கேட்டாலும் செய்வார். அம்மாதான் வேண்டாம்னுவாங்க.

Karthik said...

//மாமனாருக்கு மரியாதை

Kudos for the title.
:)

Subash said...

திரும்பவும் டிப்ஸா?
ம்ம்ம்
நல்லாதா இருக்கு!!!
அடி பின்னிட வேண்டியதுதான்

மனைவியின் / காதலியின் அண்ணன் தம்பியரிடம் எப்படியெல்லாம் நடக்கணும்னும் கொஞ்சம் டிப்ஸ்களை உங்க டிப்ஸ் பாங்கிலிருந்து எடுத்துகுடுக்க முடியுமா?
( இப்போதைக்கு எனக்கு இதுதா சிக்கல்!!! ஹிஹி)

Subash said...

ஃஃஉங்கள் மாமனார் தரும் மரியாதையை ஏற்றுக்கொள்வதோடு மட்டுமில்லாமல், திருப்பி செலுத்த தவற வேண்டாம்.ஃஃஃ

சரி. அடி உதை ரேஞ்சுக்கு குடுத்தாருனா என்ன பண்ணலாம்?
அதே மரியாதையோடு திரும்பி குடுத்திட வேண்டியதுதானே??
ம்ம் ஓகேனு சொல்றீங்க. ஓகே ஓகே

Subash said...

ஃஃஇப்படி பேச்சில் 'மா' போட்டு உங்கள் மனைவியிடம் மாமனாருக்கு முன் பேசிப்பாருங்களேன்...ஃஃ

குட்டி செல்லம் போட்டு பேசினால்?

Subash said...

ஃஃஉங்கள் மாமனாரோடு தொடர்ச்சியாக 5 நிமிடத்திற்கு மேல் பேச பொதுவானவை ஏதும் இல்லை என யோசிக்கிறீர்களா???ஃஃ

என்னென்ன பேசலாமுனும் ஒரு டிப்ஸ் குடுக்கறது

Subash said...

ஃஃஅந்த வயதில் பெரும்பாலும் அரசியல், நாட்டு நடப்பு பற்றி பேச விரும்புவர்.ஃஃ

நம்ம மாமனார் டைப்ப்ப்ப்ப்ப்பே வேற!!!!
கல்யாணமாகறதுக்கு முன்னாடியே என்ன எப்படி டைவர்ஸ் பண்ணவைக்கிறதுன்னு யோசிக்கிறார்.
இவருக்கு போயி நாவேற ஐடியா குடுக்கணுமா?

Subash said...

ஃஃ.....இதை நினைவில் கொண்டு உங்கள் மாமனாரோடு பழகுங்கள்!!
ஃஃ

மனுஷன கட்டிப்பிடிச்சி மோட்டார்பைக்ல ஏத்தி டெய்லி ரவுண்டடிக்கவேண்டியதுதா!!!

டெய்லி ஈவினிங் அவரு வீட்டுக்கு போய் ஸ்வீட் கூட குடுக்கலாமென இருக்கிறேன்
நல்ல ஐடியாதானே?

Subash said...

ஃஃமாப்பிள்ளை கவனிப்பை பயன்படுத்தி 'ஒவரு' பந்தா பண்ணாதீங்க.ஃஃ

நம்மளுக்கு மருவாத கிடைக்ககூடிய இடம் இது ஒன்னுதா.
அதயும் மிஸ் பண்ணா வேற எங்கதா பந்தா பண்றது.

என் விஷயத்துல கவனிப்பேங்கறது பந்தா பண்ற விடயமில்ல. திரும்பி பாக்காம ஓடர விஷயம்.
ஹிஹி

Subash said...

ஃஃமாமனார் கொடுக்கும் வெகுமதிகளை ஏற்றுக்கொள்ளுங்கள்,
இளப்பமாக எண்ணி ஏற்க மறுப்பது,
அதிகமாக எதிர்பார்த்து டிமாண்ட்
செய்வதையும் தவிருங்கள்.ஃஃஃ

எல்லாருக்கும் வெகுமதி குடுத்தா மனசுக்குள் மத்தாப்பு.
எனக்கு மாட்னா முதுபில மத்தாப்பு
அவ்வ்வ்வ்

Subash said...

:( ???????
ஒன்னியும் காணோம்!!!!1

மங்களூர் சிவா said...

testtu

மங்களூர் சிவா said...

//
ஜொள்ளுப்பாண்டி said...

//அப்பாவின் மேல் மரியாதையும் பாசமும்
இருந்தாலும் , 'சற்று' தள்ளியிருந்து
உறவுகாக்கும் இந்த பையன்,
தனக்கு திருமணமாகும் போது,
தன் மாமனாரோடு எப்படி பழகுவான்??? //

பசங்க பொண்டாட்டி கூட பழகினா போதாதுங்களா
அம்மணி...?? அவுக அப்பா கூட எல்லாம்
பழக மிலிட்டரி ட்ரெய்னிங் எடுக்கணுமா..?
//

avvvvvvvvvv

Divyapriya said...

கலக்கிட்டீங்க திவ்யா...நீங்க சொன்னது அத்தனையும் உண்மை.
எப்படி நேர்ல இருந்து பாத்த மாதிரியே எழுதி இருக்கீங்க?

கோபிநாத் said...

\\Raghav said...
என்னங்க, ரொம்ப நாளா காணோம்.. நல்லா இருக்கீகளா.. நல்லா சொல்லிருக்கீங்க.. வாழ்த்துக்கள்..
\\

ரீப்பிட்டே ;)

Santhosh said...

திவ்யா,
வழக்கம் போல கலக்கல்.. இன்னமும் என்ன டிப்ஸ் எல்லாம் வெச்சி இருக்கிங்க.. ரூம் போட்டு யோசிப்பிங்களோ?

அருள் said...

வ‌ண‌க்க‌ம் திவ்யா,

வ‌ழ‌க்க‌ம் போல‌ இன்னொரு யோச‌னை சொல்லி க‌ல‌க்கிட்டீங்க‌........

முகுந்தன் said...

divya back with a very good post:))

ஜோசப் பால்ராஜ் said...

வாங்க அம்ணி, அருமையான பதிவு.

Anonymous said...

அருமை :) வாழ்க உங்கள் மாமனார் தொண்டு :D

Unknown said...

Super tips akka..!! :))

ஜியா said...

//'ஒவரு' பந்தா பண்ணாதீங்க//

hmmmm... Romba kashtamache :(((

Ellaarukkum therinja visayamthaan.. Aana atha eduththu solva vithathulathaan Nikkareenga... kalakkunga :))

தாரணி பிரியா said...

திவ்யா உங்க டிப்ஸை எங்க வீட்டு புது மாப்பிள்ளைக்கு (தங்கச்சி வீட்டுக்காரர்) மெயில் செஞ்சேன். உங்களுக்கு ஒரு பெரிய தேங்க்ஸ் சொல்ல சொன்னார்.

Mathu said...

ஹா ஹா நல்ல விஷயம் எழுதி இருக்கீங்க திவ்யா.
ATTENTION Boys this is for u!

+Ve அந்தோணி முத்து said...

ஹ்ம்..!

என்னை மாதிரி (உறவுகளிடம் என்றென்றைக்கும் அட்டைப் பூச்சியாய், ஒட்டிக் கொண்டு வாழ்ந்தாக வேண்டிய) நிரந்தர ஒண்டிக்கட்டைகளுக்கு எதாவது Tips இருந்தா குடுங்க திவ்யா.

தமிழ் அமுதன் said...

நமக்கு மாமனார் மேல நிஜமாவே மரியாதை இருக்குங்க!

ஆனா! வீட்டுகாரம்மாவோட சண்டை ஏதும் வந்தா!
உங்கொப்பன் இருக்கானே! அப்படின்னுதான் முதல்ல வருது!(கவுண்ட மணி ஸ்டைல்ல)
அதோட அவருக்கு பட்ட பேருவேற வைச்சு இருக்கேன்.

அவரு வரும்போது அவர்கிட்ட மரியாதை கொடுத்து பேசினா?
நான் என்னமோ அவர கிண்டல் பண்ணுறதா, வீட்டுகாரம்மா நினைக்குது

ஆனா ஒன்னு மாமனார் வரும்போது, பொண்டாட்டிய நல்லா கவனிக்கிறமாதிரி
சூப்பரா நடிப்பேன்.
(நாங்கல்லாம் திருந்த மாட்டோம்ல..)

Hariks said...

க‌ல‌க்க‌ல் டிப்ஸ். எல்லாரும் மைண்ட்ல‌ வ‌ச்சுகோங்க‌பா!

Hariks said...

//இப்படி பேச்சில் 'மா' போட்டு உங்கள் மனைவியிடம் மாமனாருக்கு முன் பேசிப்பாருங்களேன்...//

எங்க‌ அப்பா அம்மாவ‌ "பா" போட்டு தானே கூப்பிடுவார். அவ‌ருகிட்ட‌ அந்த‌ இர‌க‌சிய‌த்த‌ கேக்க‌றேன் :)

காஞ்சனை said...

ந‌ல்லா உப‌யோக‌மான டிப்ஸ் எல்லாம் த‌ர்றீங்க திவ்யா. ந‌ன்றி

gils said...

nathanar..mamiyar..marumagal..bf.gfnu oruthar vidama mariathai solithantha ungal list inum kolunthanar..onu vita chithiyar..thoorathu sonthamar..endru palavaraga perugi valara vazhthukkal. mega serial magadevi vaazhga vazhga :D

gils said...

nalla tips..aana pasanga relation with mamanars is bit more too..avanga paakra velai angle vachu neenga solalaiye..usuala enna vela pakarangaragarathu oru crucial aspectla avanga conversationala??? i mean..i the asking..neenga thaan solanum :)

FunScribbler said...

நாங்களாம் இன்னும் 'காதலுக்கு மரியாதை' stageல தான் இருக்கோம்.. அதுக்குள்ள நீங்க மாமனார் வரைக்கும் போயிட்டீங்களா!! ம்ம்ம்... உங்க மாமனார் ரொம்ப கொடுத்துவச்சவர் தான் போங்க...:)

Muthusamy Palaniappan said...

nalla irukunga manam thirantha parattukkal...

ஜியா said...

Innumaa Maamanaarukku mariyaathai koduthuttu irukeenga??

priyamudanprabu said...

பொத்தி பொத்தி வளர்த்த மகளை
பத்திரமாக பார்த்துக் கொள்வாரா மாப்பிள்ளை...
என ஏங்கும் ஒரு தகப்பனுக்கு
தயக்கமின்றி அத்தருணத்தை
தருவதில் தவறொன்றுமில்லையே???
////////////////

சாரியா சொன்னீங்க...

புகழன் said...

மிக அழகான அவசியமான பதிவு

//
என்னமா சாப்பாடு ரெடியா?"

"மாமாவுக்கு காஃபி கொண்டுவாமா"

"நீ சாப்பிட்டியாமா?"

இப்படி பேச்சில் 'மா' போட்டு உங்கள் மனைவியிடம் மாமனாருக்கு முன் பேசிப்பாருங்களேன்...
//

எனக்கு விவரம் தெரிந்ததிலிருந்து என் அப்பா என் அம்மாவை “வாடி போடி” என்றோ தென் தமிழக வழக்கில் இருக்கும் “வாளா போளா” என்றோ அழைத்ததில்லை.

அதிக பட்சமாக மரியாதைக் குறைவான என் அப்பா பேசும் வார்த்தை என் அம்மாவின் பெயரைச் சொல்லி “வா“ “போ“ என்றுதான்.

இவன் said...

உங்களை ஒரு தொடருக்கு அழைச்சிருக்கேன்... வந்திடுங்க
-இவன்-

மே. இசக்கிமுத்து said...

ஆச்சரியமாக இருக்கிறது..பதிவை படிக்கும் போது... நல்ல நடை.. தொடரட்டும்!!!

Divya said...

@ஜொள்ளூப்பாண்டி

உங்கள் வருகைக்கும் , பின்னூட்டங்கள் அனைத்திற்கும் என் நன்றி.

Divya said...

\\ ஆயில்யன் said...
//பொத்தி பொத்தி வளர்த்த மகளை
பத்திரமாக பார்த்துக் கொள்வாரா மாப்பிள்ளை...
என ஏங்கும் ஒரு தகப்பனுக்கு
தயக்கமின்றி அத்தருணத்தை
தருவதில்லை தவறொன்றுமில்லையே??? ///


கண்டிப்பாக தவறொன்றுமில்லை!

குறையென்றுமில்லாத வாழ்க்கையினை தம் மகள் பெற்றிருப்பதனை நினைத்து மனம் மகிழும் தந்தை! தந்தையின் சந்தோசத்தினை நினைத்து மகிழும் பெண் அதற்கு காரணமாய் அமையும் மருமகன் அனைத்துக்கும் அடிப்படையாய் அமையும் எளிய முறை அன்பில் வாழ்தல் !

சூப்பர் :)))))))\


உங்கள் விரிவான கருத்துக்களை பகிர்ந்துக்கொண்டமைக்கு மிக்க நன்றி ஆயில்யன்:))

Divya said...

\ நிமல்-NiMaL said...
சூப்பர் டிப்ஸ்...!!\\


நன்றி நிமல்...!!!



//இப்படி பேச்சில் 'மா' போட்டு உங்கள் மனைவியிடம் மாமனாருக்கு முன் பேசிப்பாருங்களேன்...//

அப்படியா...? :)))\\


அப்படிதான்:)))

Divya said...

\Anonymous said...
Intha kaalthile entha maamanaarum marumagana ozhunga mathikkarthu illa... only very few give respect..\\


உங்கள் கருத்தினை பின்னூட்டமிட்டமைக்கு நன்றி அனானி:)))

Divya said...

\\Saravana Kumar MSK said...
டிப்ஸா கொடுக்கறீங்களே.. எப்படி???
எதாவது நடைமுறையில் உறவுமுறை - ரிசர்ச் பண்றீங்களா..

சீக்கிரமே டாக்டர் பட்டம் கிடைக்க வாழ்த்துக்கள்..
:)\\


உங்கள் பாராட்டுக்களுக்கும், வாழ்த்துக்களுக்கும் நன்றி சரவணகுமார்!!

Divya said...

\ Saravana Kumar MSK said...
ஆமாம்.. தொடர்கதை அல்லது கதை எப்போ போடூவீங்க??
\\


விரைவில்.......!

Divya said...

\\ Raghav said...
என்னங்க, ரொம்ப நாளா காணோம்.. நல்லா இருக்கீகளா.. நல்லா சொல்லிருக்கீங்க.. வாழ்த்துக்கள்..\


கொஞ்சம் பிஸியாகிட்டேன் ராகவ், அதான் ப்ளாக் பக்கம் வரயிலவில்லை:(

உங்கள் அன்பான விசாரிப்பிற்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி!!!

Divya said...

\\ Rajesh Krishnamoorthy said...
இதே மாதிரி டிப்ஸ் ஏதாவது மாமனாருக்கு இருந்தா அதயும் போடுங்க ... வரதட்சனை பிரட்சனை -ல இருந்து தப்பிக்க மாமனாருக்கு உதவும் :)

எல்லாருக்கும் டிப்ஸ் அள்ளி கொடுக்கற உள்ளத்துக்கு (திவ்யா )... என் வாழ்த்துக்கள்.....\\


உங்கள் வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் மிக்க நன்றி ராஜேஷ்:)))

Divya said...

\ வல்லிசிம்ஹன் said...
அருமையா,அன்பாவே இருக்கச் சொல்லிக் கொடுத்திருக்கீங்க. திவ்யா ! வாழ்த்துகள்.\


வாங்க வல்லிமா,
நல்லாயிருக்கிறீங்களா?

உங்கள் அன்பான வருகைக்கும் தருகைக்கும் என் மனமார்ந்த நன்றிகள்:)))

Divya said...

\ .:: மை ஃபிரண்ட் ::. said...
ஆஹா.. அருமை அருமை..

காதலுக்கு மரியாதை
மனைவிக்கு மரியாதை
தாய்க்கு மரியாதைன்னு எப்போதும் சொல்ற மேட்டரை விட்டுட்டு வெளியே வந்து மாமனாருக்கு மரியாதை சொல்றீங்களே.. something special and nice. :-)\\



உங்கள் மனம் திறந்த பாராட்டிற்கு,
என் மனமார்ந்த நன்றிகள் அனு:)))

Divya said...

\\ விஜய் said...
Return of the "Tips Divya"

சரி சரி, உங்க புருஷரு அவரு மாமனார் கிட்ட எப்படி நடந்துக்கணும்ங்கறதை இப்பவே பதிவா பொட்டு சொல்லீட்டீங்களாக்கும்.

\\"என்னமா சாப்பாடு ரெடியா?"

"மாமாவுக்கு காஃபி கொண்டுவாமா"

"நீ சாப்பிட்டியாமா?"\\

இப்படி அவரு முன்னாடி பேசினா, "நாம தான் ஏமாளியா இருந்துட்டோம்னு நினைச்சா, நம்ம மருமகனுக்கும் இதே வாழ்வு தானா"ன்னு ஏங்குவார். என்னருமை கணவன்மார்களே, மாமனார் முன்னாடிதான் பொண்டாட்டிய ரெண்டு அரட்டு போட முடியும். திவ்யா சொல்லற இந்த டிப்ஸ மட்டும் கேக்காதீங்க. மாமனார் முன்னாடி தான் பொண்டாட்டியை வாடி போடின்னு கூப்பிட முடியும். அதனால "என்ன டிஃபன் வர இவ்வளவு லேட்டாடீஈஈ" ரெண்டு அரட்டு போடுங்க.\\



உங்கள் அனுபவக்குறிப்புகளை அள்ளித்தெளிச்சிட்டீங்க பின்னூட்டத்தில்:))

நன்றி விஜய்!!

Divya said...

\\ இனியவள் புனிதா said...
ஆஹா அசத்துங்க திவ்யா!!!\


நன்றி புனிதா!!

Divya said...

\ பிரபாகர் சாமியப்பன் said...
ஹலோ திவ்யா டீச்சர் .. வர வர உங்க அட்வைஸ் மழை தாங்க முடியலை போங்க .. இந்த பொண்ணுங்களை சமாளிக்க முடியாம தான் மாமனார் வீட்டுக்கே போறான் [ ஒரு safe side தான் ] அங்கேயும் ,, இத்தனை சமாளிப்பு என்றால் .. தாங்க மாட்டங்க அம்மா இந்த பாவப்பட்ட பசங்க ...ஹி ஹி

இருந்தாலும் , அனைத்தும் கவனத்தில் கொள்ளவேண்டியதுதான் ..\\


கவனத்தில் வைத்துக்கொள்ளுங்கள் ப்ரபாஹர்:))

உங்கள் வருகைக்கும் பின்னூட்ட கருத்திற்கும் நன்றி!!

Divya said...

\\ Karthik said...
//தன் தேவைகளை அம்மாவின் மூலமாகவே அப்பாவிடம் தெரிவிக்க ஆரம்பிப்பான் பையன்

உண்மைதாங்க. இத்தனைக்கும் என்னுடைய அப்பா நான் என்ன கேட்டாலும் செய்வார். அம்மாதான் வேண்டாம்னுவாங்க.\\


அட....கார்த்திக் 'அப்பா' செல்லமா??

Divya said...

Karthik said...
//மாமனாருக்கு மரியாதை

Kudos for the title.
:)
\\


நன்றி கார்த்திக்!!

Divya said...

@சுபாஷ்,


உங்கள் வருகைக்கும் , விரிவான பின்னூட்டங்கள் அனைத்திற்கும் நன்றி சுபாஷ்!!

Divya said...

@மங்களுர் சிவா


உங்கள் வருகைக்கு நன்றி சிவா!!

Divya said...

\\ Divyapriya said...
கலக்கிட்டீங்க திவ்யா...நீங்க சொன்னது அத்தனையும் உண்மை.
எப்படி நேர்ல இருந்து பாத்த மாதிரியே எழுதி இருக்கீங்க?\\


என் அண்ணா அவனோட மாமனார்கிட்ட பழகுகிறதை பார்த்த எஃபெக்ட் தான் திவ்யப்ரியா:))


உங்கள் பாராட்டிற்கு நன்றி!!

Divya said...

\\ கோபிநாத் said...
\\Raghav said...
என்னங்க, ரொம்ப நாளா காணோம்.. நல்லா இருக்கீகளா.. நல்லா சொல்லிருக்கீங்க.. வாழ்த்துக்கள்..
\\

ரீப்பிட்டே ;)\\


ராகவ்க்கு சொன்ன அதே பதில்.....உங்களுக்கும் ரீப்பிட்டு கோபிநாத்:))))

Divya said...

\\ சந்தோஷ் = Santhosh said...
திவ்யா,
வழக்கம் போல கலக்கல்.. இன்னமும் என்ன டிப்ஸ் எல்லாம் வெச்சி இருக்கிங்க.. ரூம் போட்டு யோசிப்பிங்களோ?\\


உங்கள் பாராட்டிற்கு ரொம்ப ரொம்ப நன்றி சந்தோஷ்:))

Divya said...

\\ அருள் said...
வ‌ண‌க்க‌ம் திவ்யா,

வ‌ழ‌க்க‌ம் போல‌ இன்னொரு யோச‌னை சொல்லி க‌ல‌க்கிட்டீங்க‌........\\


வணக்கம் அருள்,

உங்கள் வருகைக்கும் பாராட்டிற்கும் மிக்க நன்றி!!

Divya said...

\\ முகுந்தன் said...
divya back with a very good post:))\\


ரொம்ப தாங்க்ஸ் முகுந்தன்:)))

Divya said...

\\ ஜோசப் பால்ராஜ் said...
வாங்க அம்ணி, அருமையான பதிவு.\\


பாராட்டிற்கு நன்றி ஜோசப்:)))

Divya said...

\ சேவியர் said...
அருமை :) வாழ்க உங்கள் மாமனார் தொண்டு :D\\


நன்றி.....நன்றி சேவியர்!!!

Divya said...

\\ ஸ்ரீமதி said...
Super tips akka..!! :))\\


நன்றி ஸ்ரீமதி:))

Divya said...

\\ ஜி said...
//'ஒவரு' பந்தா பண்ணாதீங்க//

hmmmm... Romba kashtamache :(((

Ellaarukkum therinja visayamthaan.. Aana atha eduththu solva vithathulathaan Nikkareenga... kalakkunga :))\\



கருத்திற்கும் பாராட்டிற்கும் மிக்க நன்றி ஜி!!

Divya said...

\\ தாரணி பிரியா said...
திவ்யா உங்க டிப்ஸை எங்க வீட்டு புது மாப்பிள்ளைக்கு (தங்கச்சி வீட்டுக்காரர்) மெயில் செஞ்சேன். உங்களுக்கு ஒரு பெரிய தேங்க்ஸ் சொல்ல சொன்னார்.\\



அடடே......உங்க வீட்டு புது மாப்பிள்ளைக்கு கொடுத்தாச்சா இந்த டிப்ஸ்? சூப்பர்!!

புதுமண தம்பதிகளுக்கு என் வாழ்த்துக்களை சொல்லிடுங்க தாரணி ப்ரயா:))

உங்கள் வருகைக்கு நன்றி!

Divya said...

\\ Mathu said...
ஹா ஹா நல்ல விஷயம் எழுதி இருக்கீங்க திவ்யா.
ATTENTION Boys this is for u!\\


தாங்க்ஸ் மது:)))

Divya said...

\\ அந்தோணி முத்து said...
ஹ்ம்..!

என்னை மாதிரி (உறவுகளிடம் என்றென்றைக்கும் அட்டைப் பூச்சியாய், ஒட்டிக் கொண்டு வாழ்ந்தாக வேண்டிய) நிரந்தர ஒண்டிக்கட்டைகளுக்கு எதாவது Tips இருந்தா குடுங்க திவ்யா.\\


ஒண்டிக்கட்டைகளுக்கு டிப்ஸா??

ஹும்.....எழுத முயற்சிக்கிறேன் :))


உங்கள் வருகைக்கு நன்றி!!

Divya said...

\\ ஜீவன் said...
நமக்கு மாமனார் மேல நிஜமாவே மரியாதை இருக்குங்க!

ஆனா! வீட்டுகாரம்மாவோட சண்டை ஏதும் வந்தா!
உங்கொப்பன் இருக்கானே! அப்படின்னுதான் முதல்ல வருது!(கவுண்ட மணி ஸ்டைல்ல)
அதோட அவருக்கு பட்ட பேருவேற வைச்சு இருக்கேன்.

அவரு வரும்போது அவர்கிட்ட மரியாதை கொடுத்து பேசினா?
நான் என்னமோ அவர கிண்டல் பண்ணுறதா, வீட்டுகாரம்மா நினைக்குது

ஆனா ஒன்னு மாமனார் வரும்போது, பொண்டாட்டிய நல்லா கவனிக்கிறமாதிரி
சூப்பரா நடிப்பேன்.
(நாங்கல்லாம் திருந்த மாட்டோம்ல..)\\




உங்கள் அனுபவத்தை சுவாரஸியமாக பகிர்ந்துக்கொண்டமைக்கு ரொம்ப நன்றி ஜீவன்:)))

Divya said...

\\ Murugs said...
க‌ல‌க்க‌ல் டிப்ஸ். எல்லாரும் மைண்ட்ல‌ வ‌ச்சுகோங்க‌பா!\\


:))

நன்றி முருக்ஸ்:)))

Divya said...

\\ Murugs said...
//இப்படி பேச்சில் 'மா' போட்டு உங்கள் மனைவியிடம் மாமனாருக்கு முன் பேசிப்பாருங்களேன்...//

எங்க‌ அப்பா அம்மாவ‌ "பா" போட்டு தானே கூப்பிடுவார். அவ‌ருகிட்ட‌ அந்த‌ இர‌க‌சிய‌த்த‌ கேக்க‌றேன் :)\\


:)))

Divya said...

\\ சகாராதென்றல் said...
ந‌ல்லா உப‌யோக‌மான டிப்ஸ் எல்லாம் த‌ர்றீங்க திவ்யா. ந‌ன்றி\\


உங்கள் பாராட்டிற்கு ரொம்ப நன்றிங்க சகாராதென்றல்:))

மீண்டும் வருக!

Divya said...

\\ gils said...
nathanar..mamiyar..marumagal..bf.gfnu oruthar vidama mariathai solithantha ungal list inum kolunthanar..onu vita chithiyar..thoorathu sonthamar..endru palavaraga perugi valara vazhthukkal. mega serial magadevi vaazhga vazhga :D\\


மெகா சீரியல் மகாதேவியா??

இப்படி நீங்க சொல்லி சொல்லியே நான் தொடர் கதை எழுத முடியாமலே போச்சு கில்ஸ்:((

Divya said...

\ gils said...
nalla tips..aana pasanga relation with mamanars is bit more too..avanga paakra velai angle vachu neenga solalaiye..usuala enna vela pakarangaragarathu oru crucial aspectla avanga conversationala??? i mean..i the asking..neenga thaan solanum :)\\


மாமனார் என்ன வேலை பார்க்கிறார் என்பதை மையமாக வைத்து மாமனாரிடம் உரையாடல் வளர்த்திக்கிறது மருமகனோட சமார்த்தியத்தை பொறுத்தது:))

\அந்த வயதில் பெரும்பாலும் அரசியல், நாட்டு நடப்பு பற்றி பேச விரும்புவர்.\

எனக்கு தெரிந்து இது தான் பொதுவான விருப்பமாக இருக்கும் அவ்வயதினருக்குன்னு நினைக்கிறேன்.

இதுக்கு மேல எனக்கும் தெரில கில்ஸ்:)

யாராச்சும் அனுபவஸ்தர்களிடம் கேட்டு பாருங்க:))))

Divya said...

\\ Thamizhmaangani said...
நாங்களாம் இன்னும் 'காதலுக்கு மரியாதை' stageல தான் இருக்கோம்.. அதுக்குள்ள நீங்க மாமனார் வரைக்கும் போயிட்டீங்களா!! ம்ம்ம்... உங்க மாமனார் ரொம்ப கொடுத்துவச்சவர் தான் போங்க...:)\\


வருகைக்கும் பாராட்டிற்கும் ரொம்ப நன்றி தமிழ்மாங்கனி:)))

Divya said...

\\AMIRDHAVARSHINI AMMA said...
super\


உங்கள் வருக்கைக்கு ரொம்ப தாங்க்ஸ்:))

Divya said...

\ Muthusamy said...
nalla irukunga manam thirantha parattukkal...\\


உங்கள் மனம்திறந்த பாராட்டுக்களுக்கு
என் மனமார்ந்த நன்றிகள் முத்துஸ்வாமி!!!

Santhosh said...

http://santhoshpakkangal.blogspot.com/2008/10/blog-post_18.html

தொடர் விளையாட்டுக்கு கூப்பிட்டு இருக்கேன் சீக்கிரமா வந்து பதிவை போடுங்க..

நாணல் said...

என்னோட blog பாருங்க...

புதியவன் said...

அருமையான பதிவு. உப‌யோக‌மான டிப்ஸ் எல்லாம் த‌ர்றீங்க திவ்யா.இப்போது தான் உங்கள் வலைப்பக்க அறிமுகம் கிடைதது. உங்கள் பழைய பதிவுகளையும் நேரம் கிடைக்கும் போது படித்து வருகிறேன் தொடர்ந்து எழுத வாழ்த்துக்கள்.

புதியவன்.

ராமலக்ஷ்மி said...

நூறு கருத்துப் பரிமாற்றங்கள் முடிந்த பின்னே வருகிறேன். யாரும் அதிகம் சிந்திக்காத அருமையான கருத்துக்களை வழங்கியிருப்பது கண்டு வியக்கிறேன். வாழ்த்திச் செல்கிறேன்.

Divya said...

\\ ஜி said...
Innumaa Maamanaarukku mariyaathai koduthuttu irukeenga??\\

amam jee:))

Divya said...

\ பிரபு said...
பொத்தி பொத்தி வளர்த்த மகளை
பத்திரமாக பார்த்துக் கொள்வாரா மாப்பிள்ளை...
என ஏங்கும் ஒரு தகப்பனுக்கு
தயக்கமின்றி அத்தருணத்தை
தருவதில் தவறொன்றுமில்லையே???
////////////////

சாரியா சொன்னீங்க...\\


நன்றிங்க பிரபு:))))

Divya said...

\\ புகழன் said...
மிக அழகான அவசியமான பதிவு

//
என்னமா சாப்பாடு ரெடியா?"

"மாமாவுக்கு காஃபி கொண்டுவாமா"

"நீ சாப்பிட்டியாமா?"

இப்படி பேச்சில் 'மா' போட்டு உங்கள் மனைவியிடம் மாமனாருக்கு முன் பேசிப்பாருங்களேன்...
//

எனக்கு விவரம் தெரிந்ததிலிருந்து என் அப்பா என் அம்மாவை “வாடி போடி” என்றோ தென் தமிழக வழக்கில் இருக்கும் “வாளா போளா” என்றோ அழைத்ததில்லை.

அதிக பட்சமாக மரியாதைக் குறைவான என் அப்பா பேசும் வார்த்தை என் அம்மாவின் பெயரைச் சொல்லி “வா“ “போ“ என்றுதான்.\\


வருகைக்கும் , அனுபவ பகிர்விற்கும் நன்றி புகழன்!!!

Divya said...

\\ இவன் said...
உங்களை ஒரு தொடருக்கு அழைச்சிருக்கேன்... வந்திடுங்க
-இவன்-\\


:(

Divya said...

\\ இசக்கிமுத்து said...
ஆச்சரியமாக இருக்கிறது..பதிவை படிக்கும் போது... நல்ல நடை.. தொடரட்டும்!!!
\


உங்கள் தொடர் வருகைக்கும் , மனம்திறந்த பாராட்டிற்கும் நன்றி !!!

Divya said...

\ சந்தோஷ் = Santhosh said...
http://santhoshpakkangal.blogspot.com/2008/10/blog-post_18.html

தொடர் விளையாட்டுக்கு கூப்பிட்டு இருக்கேன் சீக்கிரமா வந்து பதிவை போடுங்க..\\


:(

Divya said...

\\ நாணல் said...
என்னோட blog பாருங்க...\\

நீங்களுமா நாணல்:((

Divya said...

\ புதியவன் said...
அருமையான பதிவு. உப‌யோக‌மான டிப்ஸ் எல்லாம் த‌ர்றீங்க திவ்யா.இப்போது தான் உங்கள் வலைப்பக்க அறிமுகம் கிடைதது. உங்கள் பழைய பதிவுகளையும் நேரம் கிடைக்கும் போது படித்து வருகிறேன் தொடர்ந்து எழுத வாழ்த்துக்கள்.

புதியவன்.\


உங்கள் முதல் வருகைக்கும் தருகைக்கும் மிக்க நன்றி புதியவன்!!!

நேரம் கிடைக்கையில் என் மற்றைய பதிவுகளை படித்து உங்கள் மேலான கருத்துக்களை பின்னூட்டமிடுங்கள்:)))

மீண்டும் வருக!!!

Divya said...

\\ ராமலக்ஷ்மி said...
நூறு கருத்துப் பரிமாற்றங்கள் முடிந்த பின்னே வருகிறேன். யாரும் அதிகம் சிந்திக்காத அருமையான கருத்துக்களை வழங்கியிருப்பது கண்டு வியக்கிறேன். வாழ்த்திச் செல்கிறேன்.
\\


வாங்க ராமலக்ஷ்மி,

உங்கள் முதல் வருகைக்கு என் மனமார்ந்த நன்றி!!

வாழ்த்துக்களுக்கும் மிக்க நன்றி!!

மீண்டும் வருக!!

பாச மலர் / Paasa Malar said...

ஆஹா..திவ்யா..இன்னும் எத்தனை டிப்ஸ் கைவசம் இருக்கு....

Divya said...

\\Blogger பாச மலர் said...

ஆஹா..திவ்யா..இன்னும் எத்தனை டிப்ஸ் கைவசம் இருக்கு....\\


வாங்க பாச மலர்,

நீண்ட நாட்களுக்கு பின் உங்களை வலையுலகில் பார்க்கிறேன்....மகிழ்ச்சி:)))

வருகைக்கும் தருகைக்கும் நன்றி!!

கைவசம் டிப்ஸ் எதுவும் இப்போதிக்கு இல்லீங்க பாச மலர்:((

'Arnold' Bala said...

Fantastic article !!

Sanjai Gandhi said...

....ஹ்ம்ம்ம்ம்.. மைண்ட்ல வச்சிக்கிறேன்....எதிர்காலத்துல உதவும்.. :)

ஹே ஊர்ஸ்.. இந்த மாதிரி முக்கியமான டாபிக் எழுதினா சொல்ல மாட்டியா? சாப்ட்வேர் எஞ்சினியார் ஆனாலும் ஆன.. ஆளை மறந்துட்ட போ.. இப்போ கூட உங்க ஏரியா போய்ட்டு வந்தேன்.. நீ இல்லாம ஏரியாவே ரொம்ப அமைதியா இருக்கு :))

Karthik said...

திவ்யா,

எங்க காணாம போயிட்டீங்க???

Divya said...

\Blogger 'Arnold' Bala said...

Fantastic article !!\



Thanks 'Arnold' Bala!

Divya said...

\\Blogger பொடியன்-|-SanJai said...

....ஹ்ம்ம்ம்ம்.. மைண்ட்ல வச்சிக்கிறேன்....எதிர்காலத்துல உதவும்.. :)

ஹே ஊர்ஸ்.. இந்த மாதிரி முக்கியமான டாபிக் எழுதினா சொல்ல மாட்டியா? சாப்ட்வேர் எஞ்சினியார் ஆனாலும் ஆன.. ஆளை மறந்துட்ட போ.. இப்போ கூட உங்க ஏரியா போய்ட்டு வந்தேன்.. நீ இல்லாம ஏரியாவே ரொம்ப அமைதியா இருக்கு :))\\


வாங்க சஞ்சய்:))

டிப்ஸெல்லாம் மனசுல வைச்சுக்கோங்க....கண்டிப்பா உங்களுக்கு உதவும்!!

ஊர்காரங்களை எல்லாம் நான் மறக்கல .....வொர்க்ல கொஞ்சம் பிஸியாகிட்டேன், அவ்வளவுதான்:(

என் பதிவுபக்கம் வந்ததிற்கு ஒரு பெரிய நன்றி!!

Divya said...

\Blogger Karthik said...

திவ்யா,

எங்க காணாம போயிட்டீங்க???\

ஹாய் கார்த்திக்,

எங்கயும் காணாம போகல...வொர்க்ல கொஞ்சம் பிஸியா இருக்க்கிறேன் கார்த்திக், அதான் ப்ளாக் பக்கம் வரமுடியறதில்ல:(

உங்க படிப்ஸெல்லாம் எப்படி போகுது??

Karthik said...

//உங்க படிப்ஸெல்லாம் எப்படி போகுது??

திவ்யா,

சூப்பரா போகுது. காலைல எக்ஸாம், இப்ப உட்கார்ந்து கமெண்ட் போட்டுக்கிட்டு இருக்கேன்.

சீக்கிரம் ஏதாவது எழுதுங்க. பிஸிக்ஸ் போரடிக்குது.
:)

Divya said...

\Blogger Karthik said...

//உங்க படிப்ஸெல்லாம் எப்படி போகுது??

திவ்யா,

சூப்பரா போகுது. காலைல எக்ஸாம், இப்ப உட்கார்ந்து கமெண்ட் போட்டுக்கிட்டு இருக்கேன்.

சீக்கிரம் ஏதாவது எழுதுங்க. பிஸிக்ஸ் போரடிக்குது.
:)\



All the very best for your exams Karthik:)))


Exams time la kooda blog pakkamellam vareenga....??
to refresh urself aah??

anyways......do ur Physics exam well Karthik!

Will update my blog when I find time:)))

ரசிகன் said...

டிப்ஸ சிப்ஸ் கணக்கா வாரி வழங்கும் திவ்யாவுக்கு ஒரு ஓஹோ சொல்லிக்கிறேன்ப்பா...:)

ரசிகன் said...

எல்லாமே கலக்கல் டிப்ஸ்.உபயோகமான கருத்துக்கள். நன்றி & வாழ்த்துக்கள் திவ்யா:)

தமிழன்-கறுப்பி... said...

என்ன மேடம் ரொம்ப நாளா ஆளைப்பாக்க முடியலை...

தமிழன்-கறுப்பி... said...

திவ்யாவைக் காணலை...:(

Anonymous said...

திவ்யா,
டிப்ஸ்களை மட்டும் கேட்டு திருமண வாழ்க்கையை வெற்றிகரமாக நடத்தி விடமுடியும் என்றால் இந்த உலகில் எந்த பிரச்சினையும் இருக்காதே.

Divya said...

\\Blogger ரசிகன் said...

டிப்ஸ சிப்ஸ் கணக்கா வாரி வழங்கும் திவ்யாவுக்கு ஒரு ஓஹோ சொல்லிக்கிறேன்ப்பா...:)//

வாங்க ரசிகன்,

ரொம்ப நாட்களுக்கு அப்புறம் உங்களை வலையுலகில் பார்ப்பதில் மகிழ்ச்சி,
நலமா??

Divya said...

\\Blogger ரசிகன் said...

எல்லாமே கலக்கல் டிப்ஸ்.உபயோகமான கருத்துக்கள். நன்றி & வாழ்த்துக்கள் திவ்யா:)\\



வாழ்த்துக்களுக்கு நன்றி ரசிகன்!!

Divya said...

\\Blogger தமிழன்...(கறுப்பி...) said...

என்ன மேடம் ரொம்ப நாளா ஆளைப்பாக்க முடியலை...\\



வேலையில் கொஞ்சம் பிஸியாகிட்டேன் தமிழன்.......உங்கள் விசாரிப்பிற்கு மிக்க நன்றி!

Divya said...

\\Anonymous aanazagan said...

திவ்யா,
டிப்ஸ்களை மட்டும் கேட்டு திருமண வாழ்க்கையை வெற்றிகரமாக நடத்தி விடமுடியும் என்றால் இந்த உலகில் எந்த பிரச்சினையும் இருக்காதே.\\

வாங்க aanazagan,

உங்கள் கருத்துக்களுக்கு நன்றி!


மீண்டும் வருக:)))

அமுதா said...

நல்ல டிப்ஸ்...

JSTHEONE said...

Eppadi ippadi. kalakiteenga... nalla tips of course acceptable too..