August 12, 2008

நீ வேண்டும்.....நீ வேண்டும்.......என்றென்றும் நீ வேண்டும்!! - 6

பகுதி - 1

பகுதி - 2

பகுதி - 3

பகுதி - 4

பகுதி - 5


நந்தினியின் சித்தப்பாவின் பதற்றம் கார்த்திக்கின் மனதை உலுக்கியது.

கண்கள் இருண்டு........பூமி தன்னை சுற்றி வேகமாக சுற்றுவது போன்றிருந்தது.....



திரும்பும் திசை எங்கெங்கும்
உன் முகம்தான் தெரிகிறது....!

இதயத்தின் ஒவ்வொரு துடிப்பிலும்
உன் பெயர்தான் ஒலிக்கிறது....!

சுவாசத்தின் ஒவ்வொரு மூச்சுக்காற்றிலும்
உன் நினைவுகள்தான் வந்து போகிறது....!

வாழ்க்கையின் ஒவ்வொரு நிமிடமும்
உன் அருகாமையைத்தான் எதிர்பார்க்கிறது....!

பிரிவென்பது சில கணமானாலும்
தவிப்பென்பது மரண வலியாகிறது- அன்பே

உன்னை நீங்கும் போது எனக்கு
உலகமே இருண்டு போகிறது...!


நந்தினியின் சித்தப்பா பேசி முடிப்பதற்குள் நந்தினியின் அப்பாவிற்கு கார்த்திக்கின் வருகைக்குறித்து வாசலில் இருந்த உறவுக்காரர் தகவல் தர, அவர் வீட்டினுளிருந்து வேகமாக கார்த்திக்கை நோக்கி கலவரமான முகத்தோடு வந்தார்.....அவரது கண்களில் தழும்பிய சோகமும் திகிலும்.........கார்த்திக்கின் மனதில் "பூகம்பம்' வெடிக்கச் செய்தது.

கார்த்திக்கின் அருகில் வந்த நந்தினியின் அப்பா ,கார்த்திக்கின் தலையில் அடிபட்ட இடத்திலிருந்த கட்டைப் பார்த்ததும்,

"மாப்ள ........தலையில....அடிபட்டிருக்கு...என்னாச்சு மாப்ள?"

"அது....ஒன்னுமில்ல........நந்......தினிக்கு.........என்னாச்சு"

"மாப்ள ......நந்தினிக்கு......பிரசவ வலி வந்துடுச்சு........உள்ளூர் ஆஸ்பத்திரில டாக்டரம்மா இல்ல.....வெளியூருக்கும் அவளை கூட்டிட்டு போக முடியாத படி பிரசவத்துல சிக்கல்.........அதான் பட்டணத்துக்கு.......கார் அனுப்பிருக்கோம் டாக்டர கூட்டிட்டு வர"

"........"

" மாப்ள........என்.......புள்ள...........வலியில துடிக்கிறா..........மாப்ள......என் உசிரே நடுங்குது"

பெத்த பிள்ளை செத்து பிழைக்கும் வேதனையை பொறுக்க முடியாமல் பேச்சிற்கு நடுவே பலமுறை உடைந்துப் போனார் அந்த அப்பா.

பிரசவ தேதிக்கு இன்னும் மூன்று வாரங்கள் இருக்கையில்........நந்தினிக்கு பிரசவ வலியா??......அதுவும் சிக்கலுடன்..........

நந்தினி .......என் செல்லமே!
நான் இல்லாம
நீ வாழ
உன்னை
தயார் படுத்தின
எனக்கு
ஒரு நொடிக் கூட
நீ இல்லாம
வாழ முடியாதடி தங்கமே!!

நந்தினி..........நீ வேணும்டா..........எனக்கு.............நீ வேணும்.........கடவுளே என் நந்தினியை என்கிட்ட கொடுத்திடு!!

கார்த்திக்கின் சிந்தனையை வீட்டின் முன் வேகமாக வந்து நின்ற காரின் சத்தம் கலைத்தது.

பட்டணத்திலிருந்து பெண் மருத்துவரும் அவரது உதவியாளர்களாக இரண்டு நர்ஸும் வந்திறங்கினர்.

நந்தினி இருந்த அறைக்கு மருத்துவர் வேகமாக செல்ல, கார்த்திக் டாக்டரிடம்...

"டாக்டர்.....நான் நந்தினியோட.......ஹஸ்பெண்ட்......இந்த சமயத்துல அவ பக்கதுல இருக்கனும்னு விருப்பப்படுறேன்...ப்ளீஸ் டாக்டர்......அலோவ் மீ ப்ளீஸ்"

கண்களில் நீர் தழும்ப கைகூப்பி தன்னிடம் வேண்டும் ஒரு கணவனின் அன்பில் ஒரு நிமிடம் அதிசயத்துப் போனார் மருத்துவர்.

"அது........எப்படி......" என்று அவர் தயங்க.

"ப்ளீஸ் டாக்டர்.............ப்ளீஸ் அலோவ் மீ டாக்டர்"

"சரி.....உள்ள வாங்க"

மனைவியின் பிரசவத்தில் கணவன் உடனிருப்பது அவர்களின் உறவுப்பிணைப்பிற்கு மேலும் வலுச்சேர்கும் என்று கார்த்திக்கின் தாய் தன் மகனை ஆறுதலாக தோளில் தட்டிக்கொடுத்தார்.

மருத்துவருடன் பிரசவ அறைக்குள் ஓர் ஆணா???
வியப்பில் விளித்தது அங்கு குழுமியிருந்த பெண்கள் கூட்டம்!

"என்னாதிது........பட்டணத்து மாப்ள இப்படி சொல்றாரு"
"இது என்ன பழக்கம்"
"அதெப்படி.......ஆம்பள உள்ளே போகலாம்......."

பெண்களின் மத்தியில் சலசலப்பு......

இதை எல்லாம் எதையும் பொருட்படுத்தாமல் டாக்டருடன் கார்த்திக் அறைக்குள் சென்றான்.

வலியில் துடித்துக் கதறும் தன் நந்தினியை கண்டதும் நெஞ்சு விம்மிக் கொண்டு வந்தது கார்த்திக்கிற்கு.

அவனை சற்றும் எதிர்பாராத நந்தினி.......வேதனையின் மத்தியிலும் அதிர்ச்சியும் ஆனந்தமும் கலந்து புன்முறுவல் பூத்தாள்

அவளருகே சென்று....அவளது கரத்தை அழுத்திப் பிடித்த கார்த்திக்.....

"என்னை மன்னிச்சிருமா.......செல்லம்" என்று குரல் கம்ம கூறினான்.

அவனது அருகாமை........கையில் பதிந்த அழுத்தம், நந்தினிக்கு புத்துயிர் கொடுத்தது.

இவனது தலையிலிருந்த காயத்தை கவனித்தவள்,

சிவந்து கலங்கிய கண்களுடன்....."தலை.....யில் என்......னா....ச்சு" என்று தட்டு தடுமாறிக் கேட்டாள்.

"ஒன்னுமில்லடா............என்......னை......மன்.....னிச்சிடு.......மன்னி.....ச்........சிரு........" என்று மறுபடியும் விசும்பலுடன் அவள் கரத்தில் முகம் புதைத்தான்.

பிரசவம் பார்த்துக் கொண்டிருந்த மருத்துவர்,

"நீங்க....அவங்களுக்கு உறுதுணையா பக்கத்தில் இருப்பீங்கன்னு உள்ளே அலோவ் பண்ணினா..........இப்படி எமோஷனல் ஆகிறீங்க........கொஞ்சம் வெளில வெயிட் பண்ணுங்க ப்ளீஸ்"

":ஸா.......ரி.......ஸாரி......டாக்டர் ........ஐ வில் கண்ட்ரோல் மைசெல்ஃப்"

'அவர் இருக்கட்டும் டாக்டர்' என்பது போல் சைகையால் டாக்டரிடம் தெரிவித்தாள் நந்தினி.

மருத்துவரின் சிகிச்சை தொடர்ந்தது, அவரின் கட்டளைக்கு கட்டுப்பட்டு நர்சும் மும்முரமாக அங்கும் இங்கும் பரபரத்தபடி உதவி செய்தனர்.

நந்தினியின் கண்ணில் இருந்து கண்ணீர் கோடாக இருபக்கமும் இறங்கியிருந்தது.
அவளது வாய் ' வலிக்குதுப்பா' என்று முனுமுனுத்தபடி இருந்தது,
உதடுகள் வறண்டிருந்தன,
கார்த்திக்கிற்கு வேதனையாக இருந்தது.

மனதுக்குள், ' இவளே ஒரு குழந்தை என்று எண்ணுகிறேன்...........இவளோ என் குழந்தைக்காக வலி தாங்கிக் கொண்டிருக்கிறாளே!' என்று வியந்தான்!!!

அவள் கையை ஆறுதலாக பற்றிக்கொண்டான்.

அவர்களின் கண்கள் சந்தித்தபோது, உதடுகள் சொல்லாத எத்தனையோ சேதிகள் பரிமாறப்பட்டன.

வலி குறைய தான் ஏதும் செய்ய முடியுமா? என அப்பாவியாக டாக்டரிடம் கேட்டான் கார்த்திக்.

"பொறுங்க சார்...........இரண்டு உயிரையும் காப்பாத்த போராடிட்டு இருக்கிறோம்........நீங்க வலியை பத்தி கவலைப்படுறீங்க"

மருத்துவர் இப்படி கூறியதும்.........இனம் புரியா ஒரு வித பயம் கார்த்திக்கை தாக்கியது.

இறைவனிடம் நேரிடையாக பேசுவதுபோல் மனதுக்குள் வேண்டிக்கொண்டான்
' ஒரு உயிர் போய்த்தான் ஆகவேண்டுமெனின்..........அது மகனாகவே இருக்கட்டும்........என் மனைவி மிஞ்சட்டும்' என்று இறைஞ்சினான் கார்த்திக்.

அறையின் வெளியே அனைவரும் குழந்தையின் அழுகுரல் கேட்க ஆவலாய் காதுகளை தீட்டிவைத்து காத்திருந்தனர்.

பெண்மை, தாய்மை நிலையை அடைந்து குழந்தையை சுமக்கும் போது தான் பூரணமாகிறது!
தாய்மையடைந்த பெண், குழந்தையை பெற்றெடுக்கும் போது படும் கஷ்டத்தை உணர்ந்தால் தான் ஒரு ஆணால் பெண்மையை மதிக்க முடியும்!
என்பதை தெளிவாக உணர்ந்தான் கார்த்திக்.

பிரசவ நேரத்தில் ஏற்பட்ட இக்கட்டான சூழலை திறம்பட கையாண்ட மருத்துவரின் உதவியால் நந்தினி அழகான ஆண் குழந்தையை பெற்றெடுத்தாள்.

தரிசுத் தாய்
தவமிருந்து பெற்றெடுத்த
தங்க மகன்!!

நந்தினி தன் குழந்தையை உச்சி முகர்ந்தாள்.......


அவளது நெற்றியில் பூத்திருந்த முத்து முத்தான வேர்வைத்துளிகளை துடைத்து 'அப்பா'வான பெருமிதத்துடன் பார்த்தான் கார்த்திக்.

தங்கள் குழந்தையின் ஸ்பரிசம் உடலில் சில்லிட......
இருவரின் கண்களிலும்
ஆனந்த கண்ணீர் துளிகள்!
அது வார்த்தைகளால் விவரிக்க
முடியா மணி துளிகள்!!

தன் குடும்பம் தழைத்தோங்க உதித்த 'பேரனை' கண்ணாரக் கண்டு களித்தார் காத்திக்கின் அன்னை......

தன் தாயிடம் குழந்தையை கொடுத்த கார்த்திக்....

என் தாரத்தின்
மறுபிறவியில்
உணர்ந்துக்
கொண்டேன்
நான் பிறக்க
நீ தாங்கிய
பிரசவ வலியை.....!!



இனிதே தொடர்ந்தது கார்த்திக்-நந்தினியின் வாழ்க்கை பயணம்!!


முற்றும்.

161 comments:

said...

me the first!

said...

வந்துட்டேன்...:)

said...

கொஞ்சம் இருங்க பதிவை படிச்சுட்டு அப்புறமா வாறேன்...

said...

\\\
அவள் கையை ஆறுதலாக பற்றிக்கொண்டான்.

அவர்களின் கண்கள் சந்தித்தபோது, உதடுகள் சொல்லாத எத்தனையோ சேதிகள் பரிமாறப்பட்டன.
\\\
இப்போதைக்கு இந்த வரிதான் மேடம் அப்புறமா நாளைக்கு வாறேன் மிச்சத்துக்கு...

said...

இந்த அத்தியாயம் மழுக்க உணர்வு மயம்..

said...

இந்த அத்தியாயம் முழுக்க
உணர்வு மயம்..

said...

கலக்கல் மாஸ்டர் அப்புறமா வாறேன்...

said...

ஹப்பாடா சுபமா முடிச்சிட்டீங்களா கதைய..சூப்பரு :))

said...

\\பிரிவென்பது சில கணமானாலும்
தவிப்பென்பது மரண வலியாகிறது- அன்பே

உன்னை நீங்கும் போது எனக்கு
உலகமே இருண்டு போகிறது...!

\\

காதல்ல உருகுகிராறோ :)

\\தரிசுத் தாய்
தவமிருந்து பெற்றெடுத்த
தங்க மகன்!!
\\


இங்க நீங்க சொல்ல வரும் கருத்து அருமை திவ்யா!

"தரிசுத் தாய்" அப்படின்னா??

said...

\\பெண்மை, தாய்மை நிலையை அடைந்து குழந்தையை சுமக்கும் போது தான் பூரணமாகிறது!
தாய்மையடைந்த பெண், குழந்தையை பெற்றெடுக்கும் போது படும் கஷ்டத்தை உணர்ந்தால் தான் ஒரு ஆணால் பெண்மையை மதிக்க முடியும்!
என்பதை தெளிவாக உணர்ந்தான் கார்த்திக்.
\\

100% உண்மை :)

said...

அருமையா போச்சுங்க கதை..வாழ்த்துக்கள் மாஸ்டர் :)

said...

கதை அருமை திவ்யா..ஒரு நல்ல திரைப்படத்தைப் பார்த்தது போலக் காட்சிகள் மனதிலே விரிகின்றன.

said...

வழக்கம் போல இதுவும் சூப்பர். எதிர்ப்பார்க்காத திருப்பம்.
சீக்கிரம் முடிந்த மாதிரி இருந்தாலும் ரொம்ப அழகான முடிவு. வாழ்த்துக்கள்!

said...

உணர்வான மகிழ்ச்சி!!

நல்ல முடிவிற்கு நன்றி திவ்யா :))

said...

//நந்தினி .......என் செல்லமே!
நான் இல்லாம
நீ வாழ
உன்னை
தயார் படுத்தின
எனக்கு
ஒரு நொடிக் கூட
நீ இல்லாம
வாழ முடியாதடி தங்கமே!!
//

அன்பின் அழகான வெளிப்பாடு..

:)

said...

//பெண்மை, தாய்மை நிலையை அடைந்து குழந்தையை சுமக்கும் போது தான் பூரணமாகிறது!
தாய்மையடைந்த பெண், குழந்தையை பெற்றெடுக்கும் போது படும் கஷ்டத்தை உணர்ந்தால் தான் ஒரு ஆணால் பெண்மையை மதிக்க முடியும்!
என்பதை தெளிவாக உணர்ந்தான் கார்த்திக்.
//

மிக நல்ல கருத்து. எப்படிங்க உங்கனால மட்டும் இப்படி எழுத முடியுது? சான்ஸே இல்ல.

said...

//தரிசுத் தாய்
தவமிருந்து பெற்றெடுத்த
தங்க மகன்!!//

தரிசுத்தாய்னு முன்னாடி சொன்னதை இங்கே ஞாபகப்படுத்தீட்டீங்க..

நல்ல உவமை, நல்ல முடிவு.

said...

//தன் தாயிடம் குழந்தையை கொடுத்த கார்த்திக்....

என் தாரத்தின்
மறுபிறவியில்
உணர்ந்துக்
கொண்டேன்
நான் பிறக்க
நீ தாங்கிய
பிரசவ வலியை.....!!

[Photo]
இனிதே தொடர்ந்தது கார்த்திக்-நந்தினியின் வாழ்க்கை பயணம்!!
//

நல்ல முடிவு.

உங்கள் கதைகள் அனைத்திற்கும் மகிழ்ச்சியான முடிவை அளிப்பதற்கு நன்றி.

said...

அடடா..கதை முடிஞ்சிருச்சா..

6 பகுதி போனதே தெரியல. இப்ப கொஞ்சம் பிஸி ஆகீட்டீங்க போல.

நேரம் கிடைக்கிறப்போ அடுத்த பதிவு போடுங்க.


இந்த கதைகளையெல்லாம் தொகுத்து வெளியிடுங்களேன். வலையில் படிக்க முடியாத பலருக்கு படிக்க வசதியாக இருக்குமே.

Atleast create PDF with your Name and send to some friends. It would reach more peoples.

said...

மீண்டும் சொல்கிறேன் இந்தக்கதைகள் வலைப்பூவில் மட்டுமே இருக்க கூடாது பல பேரை சென்றடைய வேண்டும் என விரும்புகிறேன்.

said...

நல்ல முடிவு திவ்யா. பிள்ளை பெறும் அச்சமயத்திற்கு ஈடான ஒன்று உலகத்திலேயே இல்லை. மனைவி கணவனுக்கு பிள்ளையை பெற்றுத் தரவில்லை, அவனையே பெற்றவளாகிறாள்.

said...

:))))

said...

:))))

said...

Feel panna vatchitteenga... Night Ammakku oru calla podanum... :))

said...

kadhai super master....


happy ending-ku dankees :))

said...

கதை சூப்பர்... எதிர்பார்த்த மாதிரியே சோகமா முடிக்கல :-)

said...

கதை சூப்பர்....

கவிதைகளும்தான்

said...

//மீண்டும் சொல்கிறேன் இந்தக்கதைகள் வலைப்பூவில் மட்டுமே இருக்க கூடாது பல பேரை சென்றடைய வேண்டும் என விரும்புகிறேன்.//

வழிப்போக்கன் சொன்னதை நான் வழிமொழிகிறேன்

said...

மிக நன்று திவ்யா :)

said...

Wow...கதையை சூப்பரா முடிச்சிட்டீங்க! Happy! :D

said...

கவிதைகளே போதும் இந்த கதையை சொல்ல! அந்த அளவுக்கு கவிதை எழுதிறிங்க! I jut loved every single kavithai!

said...

**கை தட்டல்கள்**
**Claps Claps Claps** for the happy ending..
and Divya :))

said...

வணக்கம் திவ்யா,

//இந்த கதைகளையெல்லாம் தொகுத்து வெளியிடுங்களேன். வலையில் படிக்க முடியாத பலருக்கு படிக்க வசதியாக இருக்குமே.

Atleast create PDF with your Name and send to some friends. It would reach more peoples.//

ரிப்பீட்டேய்ய்ய்....


அருமையிலும் அருமை திவ்யா...

ஒரு விசயத்தை சுத்தமா இரசிக்கல்லன்னா, அவிங்கல்லாம்....

என்னப்பா இது இவன் ஏதோ இலூசு மாதிரி உலறுறான்னு, உதாசினப்படுத்திட்டுப் போயிடுவாங்க..

அதுவே பாதியா அரைகுறையா இரசிச்சவங்க, கவிஞன் மாதிரி, கவிதை வர்ணனை எல்லாம் போடுவாங்க....

முழுமையா இரசிக்கும் போது, அங்க மௌனம் மட்டும்தான் விஞ்சி நிற்கும்....


எனக்கு இப்ப மௌனம் மட்டும் தான் இருக்கு....

செம, செம, செம, செம, செம....n செம ;-)))

முகிலரசிதமிழரசன்

said...

திவ்யா மேடம் சாரி. கதை சுமார் தான் .. வழக்கமான திவ்யா டச் கொஞ்சம் மிஸ்ஸிங்...சில இடம் நாடகத்தனமா இருக்குற மாதிரி தோணுது...திவ்யா கதைல முதல்முறையா இதை ஃபீல் பண்றேன்...

Anonymous said...

romba nalla kadhaya mudichuttenga Divya...nedunaalaikku piragu avangavanga unarchiyai velapaduthardha romba azhaga vivarichuteenga...super super super :-)

Anonymous said...

prasavathin bodhu ovvoru thaayum padara vedhanaya rombave arumaiya sollirkeenga...subhamaana mudivu koduthadhukku mikka nandri :-)

said...

ரொம்ப அருமையான கதை. இது போல நிறைய கதைகலள் கொடுக்க வாழ்த்துக்கள்.

I like very much. Good.. Keep it up...

said...

மிக நல்ல கருத்துக்கள். ஆழமான சிந்தனைகள். அழகுக்கு அழகு சேர்க்கும் வரிகள். வாழுத்துக்கள் திவ்யா. இனிதாக முடிந்தது அற்புதமான கதை. படிக்கும் ஒவ்வொருத்தருக்கும் உணர்வு பூர்வமான அனுபவமாக இருந்திருக்கும் என்பது தீர்க்கம்.

said...

subama mudichathukku thanks divya

said...

niriya emotionalana 6th part. as usual super Dialogues super kavithaikalnu kalakittinga. neega eppa konjam busynu ninaikiren. so mudija varai seekiram adutha pathivai ethriparkirom

said...

சந்தோஷமான முடிவுக்கு நன்றி..

said...

// ஒரு உயிர் போய்த்தான் ஆகவேண்டுமெனின்..........அது மகனாகவே இருக்கட்டும்........என் மனைவி மிஞ்சட்டும்//

என்ன ஒரு காதல்.. பாசம்..
:)

said...

//தன் தாயிடம் குழந்தையை கொடுத்த கார்த்திக்....

என் தாரத்தின்
மறுபிறவியில்
உணர்ந்துக்
கொண்டேன்
நான் பிறக்க
நீ தாங்கிய
பிரசவ வலியை.....!!.//

டச் பண்ணிட்டீங்க..
:)

said...

//இனிதே தொடர்ந்தது கார்த்திக்-நந்தினியின் வாழ்க்கை பயணம்!!//

அப்பாடா.. ஓகே.. இனிமேல் எல்லோரும் போய் அவங்கவங்க வேலைய நிம்மதியா பார்க்கலாம்..
;)

said...

//வழிப்போக்கன் said...
இந்த கதைகளையெல்லாம் தொகுத்து வெளியிடுங்களேன். வலையில் படிக்க முடியாத பலருக்கு படிக்க வசதியாக இருக்குமே.

Atleast create PDF with your Name and send to some friends. It would reach more peoples.//

வழிமொழிகிறேன்..

said...

// சிநேகிதன்.. said...
திவ்யா மேடம் சாரி. கதை சுமார் தான் .. வழக்கமான திவ்யா டச் கொஞ்சம் மிஸ்ஸிங்...சில இடம் நாடகத்தனமா இருக்குற மாதிரி தோணுது...திவ்யா கதைல முதல்முறையா இதை ஃபீல் பண்றேன்...//

திவ்யாவை மிரட்டி வச்சிருக்காங்க.. இப்படி முடிக்கணும்னு..
வாசகர்கள் விருப்பம்..
;)

said...

//திரும்பும் திசை எங்கெங்கும்
உன் முகம்தான் தெரிகிறது....!

இதயத்தின் ஒவ்வொரு துடிப்பிலும்
உன் பெயர்தான் ஒலிக்கிறது....!

சுவாசத்தின் ஒவ்வொரு மூச்சுக்காற்றிலும்
உன் நினைவுகள்தான் வந்து போகிறது....!

வாழ்க்கையின் ஒவ்வொரு நிமிடமும்
உன் அருகாமையைத்தான் எதிர்பார்க்கிறது....!

பிரிவென்பது சில கணமானாலும்
தவிப்பென்பது மரண வலியாகிறது- அன்பே

உன்னை நீங்கும் போது எனக்கு
உலகமே இருண்டு போகிறது...!//

இத விடவா நான் சோகமா எழுதறேன்னு சொல்றீங்க..

said...

//பிரிவென்பது சில கணமானாலும்
தவிப்பென்பது மரண வலியாகிறது//

ரொம்ப வலிக்குது..
:(

said...

கதை சூப்பர். இந்த பார்ட்ட தனித்தனியா குறிப்பிட்டு சிலாகிக்க முடியல…ஏன்னா, மொத்தமுமே ரொம்ப அழகா இருந்துச்சு…இது வரைக்கும் நீங்க எழுதினத விட, இது வித்யாசமா இருந்துச்சு…வாழ்த்துக்கள்...

said...

ending ipdithaan irkumnu oraluku guess pana mudinjidichi..but still unga writing skills vachu athiayum azhaga kaatrikeenga..ithuku mela intha kathaia azhaga present panna mudiyumaanna doubt than :)

Anonymous said...

வாழ்த்துகள் திவ்யா சுபமான முடிவுக்கு...

//மருத்துவருடன் பிரசவ அறைக்குள் ஓர் ஆணா???//

அதிலொன்றும் ஆச்சரியமாய் தோன்றவில்லை...எங்க ஊரில் இது சகஜம்தான். அப்போதாவது மனைவியின் அருமை அவர்களுக்கு புரியும் என்று மருத்துவர்கள் நினைக்கின்றனர். ஒரு சில கணவன்மார்கள் மனைவியின் பிரசவத்தில் மயங்கி விழுந்த கதைகளும் உண்டு. :-))

said...

Divya,
nalla mudivu dhan .....aana..first 5 part la irundha unga way of writing idula rombave missing .Climax nala konjam sentimentaa poiteenga !!!
However one of the best story unga blog la !!Ezhudunga..Ezhudunga..Ezhudi kittey irunga

said...

திவ்ஸ், என்னது இவ்வளவு சீக்கிரமா முடிச்சுட்டீங்க...!

இன்னும் கொஞ்சம் மெழுகேத்தி இருக்கலாம். டக்கன்னு முடிந்த மாதிரி இருந்துச்சு.i think too much pressure from others to finish the story.:)

அவன் ஏன் அவள்மீது கோபம் காட்டினான், தண்ணி அடித்துவிட்டு செஞ்ச தப்ப பத்தி அவளிடம் சொல்வதுபோல், அதற்கு அவள் காட்டும் reactions, dialogues இப்படி சொல்லியிருந்திருக்கலாம்.

இருந்தாலும், இந்த கடைசியில் தாய்மை உணர்வை பத்தி ரொம்ப அழகா சொல்லியிருக்கீங்க. ரசித்தேன்.:)

said...

I thought I gave you 3 comments! Only 2 have been published here. anything wrong with the other comment?

Tc.

said...

திவ்யா,

கதைல இருந்த கவிதைகள் மிகவும் அருமைங்க. அதுவும் கடைசியில் அவன் தாய பத்தி நினைக்கிற கவிதை அமர்க்களம்.

முகிலரசிதமிழரசன்,

ஏனுங்க ? மௌனத்த சொல்ல இத்தன கஷ்டமா ?

said...

இன்னைக்குப் பார்த்து காலையில‌யே பார்க்காம‌ போய்ட்ட‌னே :(


மிக்க‌ ந‌ன்றி, சுப‌மாக‌ முடித்த‌த‌ற்கு!

//மனதுக்குள், ' இவளே ஒரு குழந்தை என்று எண்ணுகிறேன்...........இவளோ என் குழந்தைக்காக வலி தாங்கிக் கொண்டிருக்கிறாளே!' என்று வியந்தான்!!!//

‍அருமையான‌ வ‌ரிக‌ள்!

said...

சுபம்...! சூப்பர்...!

//ந்தக்கதைகள் வலைப்பூவில் மட்டுமே இருக்க கூடாது பல பேரை சென்றடைய வேண்டும் என விரும்புகிறேன்.//

வழிப்போக்கன் சொன்னதை நானும் வழிமொழிகிறேன்

எழுத்தில் திவ்யா டச், கவிதைகளும் அருமை. ஆனாலும் இப்போ கொஞ்சம் பிசி போல. அத்தியாயங்களுக்கிடையில் இடைவெளி குறைந்தால் நலம்.

வாழ்த்துகள்...!!!

said...

Great Ending :)

\\பெண்மை, தாய்மை நிலையை அடைந்து குழந்தையை சுமக்கும் போது தான் பூரணமாகிறது!
தாய்மையடைந்த பெண், குழந்தையை பெற்றெடுக்கும் போது படும் கஷ்டத்தை உணர்ந்தால் தான் ஒரு ஆணால் பெண்மையை மதிக்க முடியும்! \\

உண்மை உண்மை முற்றிலும் உண்மை. பெற்றெடுப்பதென்னவோ தாய். ஆனால் இனிஷியல் மட்டும் அப்பாவினுடையது.

\\பிரசவ நேரத்தில் ஏற்பட்ட இக்கட்டான சூழலை திறம்பட கையாண்ட மருத்துவரின் உதவியால் நந்தினி அழகான ஆண் குழந்தையை பெற்றெடுத்தாள்.\\

அப்பாடா. இப்போதான் நிம்மதியா இருக்கு.

திவ்யா,
நிஜமாகவே ஒரு பெண்ணின் பிரசவ வலியை கண் முன் கொண்டு வந்துட்டீங்க. கார்த்திக்கின் மன உளைச்சலும் அழகான வர்ணனை. கார்த்திக் நந்தினி தம்பதிக்கு எனது வாழ்த்துக்கள் :)

விஜய்

said...

fulla ah padichitu comment putting..

late ah vandhadhuku jorry...

next post la irundhu asathiduvomaaaaga:)

said...

என் தாரத்தின்
மறுபிறவியில்
உணர்ந்துக்
கொண்டேன்
நான் பிறக்க
நீ தாங்கிய
பிரசவ வலியை.....!!

நல்ல வரிகள். தொடர்ந்து எழுதுங்கள். என்னைப்போல் எழுதுவதை நிறுத்திவிடாதீர்கள்.

said...

என்ன திவ்யா, இவ்வளவு தாமதம்?
நந்தினிக்கு என்னாச்சோன்னு கார்த்திக்கோட சேர்ந்து நாங்களும்ல தவிச்சுக்கிட்டு இருந்தோம்?

அருமையா படைச்சிருக்கீங்க. வாழ்த்துக்கள்.
//என் தாரத்தின்
மறுபிறவியில்
உணர்ந்துக்
கொண்டேன்
நான் பிறக்க
நீ தாங்கிய
பிரசவ வலியை.....!!//


என் அம்மாவை நினைச்சுக்கிட்டேங்க, கண்ல நீரோட..
உள்ளத்த தொட்ட கதை.

சரி இன்னும் உங்களுக்கு ஒரு வேலை பாக்கி இருக்கு,
சீக்கிரம் அதையும் முடிங்க.
பல நண்பர்கள் இங்க சொல்லியிருக்க மாதிரி இதையெல்லாம் ஒரு தொகுப்பா வெளியிடுங்க.

said...

திவ்யா எப்போதும் போல அருமை!!!

said...

\
தமிழன்... said...
me the first!\


first attendence க்கு ஒரு ஸ்பெஷல் தாங்க்ஸ்!!

said...

\\
தமிழன்... said...
வந்துட்டேன்...:)\\

வாங்க வாங்க!!

said...

\\ தமிழன்... said...
கொஞ்சம் இருங்க பதிவை படிச்சுட்டு அப்புறமா வாறேன்...
\

:))

said...

\\ தமிழன்... said...
\\\
அவள் கையை ஆறுதலாக பற்றிக்கொண்டான்.

அவர்களின் கண்கள் சந்தித்தபோது, உதடுகள் சொல்லாத எத்தனையோ சேதிகள் பரிமாறப்பட்டன.
\\\
இப்போதைக்கு இந்த வரிதான் மேடம் அப்புறமா நாளைக்கு வாறேன் மிச்சத்துக்கு...
\\

வருகைக்கும் பின்னூட்டதிற்கும் நன்றி தமிழன்!!

said...

\\ தமிழன்... said...
இந்த அத்தியாயம் மழுக்க உணர்வு மயம்..\\

ஹ்ம்ம்....ஆமாம்:)

said...

\ தமிழன்... said...
கலக்கல் மாஸ்டர் அப்புறமா வாறேன்...\\


நன்றி உங்கள் உற்சாகமான பின்னூட்டங்களுக்கு!!

said...

\ Ramya Ramani said...
ஹப்பாடா சுபமா முடிச்சிட்டீங்களா கதைய..சூப்பரு :))\\


ஹப்பாட.....ஒருவழியா தொடர் கதையை முடிச்சா சரிதான்னு பெருமூச்சு விட்டாமாதிரி தெரியுதே;))
[just kidding!]

said...

\\ Ramya Ramani said...
\\பிரிவென்பது சில கணமானாலும்
தவிப்பென்பது மரண வலியாகிறது- அன்பே

உன்னை நீங்கும் போது எனக்கு
உலகமே இருண்டு போகிறது...!

\\

காதல்ல உருகுகிராறோ :)\\


ஆமாம்....உருகிட்டார் காதலில்!!


\\தரிசுத் தாய்
தவமிருந்து பெற்றெடுத்த
தங்க மகன்!!
\\


இங்க நீங்க சொல்ல வரும் கருத்து அருமை திவ்யா!

"தரிசுத் தாய்" அப்படின்னா??\\

தரிசு நிலம்னா....விளைச்சல் இல்லாத நிலம்னு சொல்லுவாங்க,
தரிசுத்தாய் அப்படின்னா.....குழந்தை பாக்கியம் கிட்டாத பெண்ணின்நிலையை குறிப்பிடுவது.
[infertility in women]

said...

\\ Ramya Ramani said...
\\பெண்மை, தாய்மை நிலையை அடைந்து குழந்தையை சுமக்கும் போது தான் பூரணமாகிறது!
தாய்மையடைந்த பெண், குழந்தையை பெற்றெடுக்கும் போது படும் கஷ்டத்தை உணர்ந்தால் தான் ஒரு ஆணால் பெண்மையை மதிக்க முடியும்!
என்பதை தெளிவாக உணர்ந்தான் கார்த்திக்.
\\

100% உண்மை :)\\


நன்றி ரம்யா:)

said...

\\ Ramya Ramani said...
அருமையா போச்சுங்க கதை..வாழ்த்துக்கள் மாஸ்டர் :)\


வாழ்த்துக்களுக்கு நன்றி ரம்யா!!

said...

\\ எம்.ரிஷான் ஷெரீப் said...
கதை அருமை திவ்யா..ஒரு நல்ல திரைப்படத்தைப் பார்த்தது போலக் காட்சிகள் மனதிலே விரிகின்றன.\\


வாங்க ரிஷான்,

உங்கள் பாராட்டிற்கு மிக்க நன்றி கதாசிரியரே!!

said...

\ நாடோடி said...
வழக்கம் போல இதுவும் சூப்பர். எதிர்ப்பார்க்காத திருப்பம்.
சீக்கிரம் முடிந்த மாதிரி இருந்தாலும் ரொம்ப அழகான முடிவு. வாழ்த்துக்கள்!


வாங்க விநய்,

அழகான உங்கள் வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி!!

said...

\\ வழிப்போக்கன் said...
உணர்வான மகிழ்ச்சி!!

நல்ல முடிவிற்கு நன்றி திவ்யா :))\\

உங்கள் மகிழ்வை பகிர்ந்தமைக்கு நன்றி வழிப்போக்கன்!

said...

\\ வழிப்போக்கன் said...
//நந்தினி .......என் செல்லமே!
நான் இல்லாம
நீ வாழ
உன்னை
தயார் படுத்தின
எனக்கு
ஒரு நொடிக் கூட
நீ இல்லாம
வாழ முடியாதடி தங்கமே!!
//

அன்பின் அழகான வெளிப்பாடு..

:)\\


கணவனின் மறைவிற்கு பிறகு, ஒரு பெண்ணால் வாழ்வது எத்தனை கடினமோ , அதே கஷ்டமும் வெறுமையும் மனைவியை இளந்த ஆணிற்கும் உண்டு.

ஆனால்......ஆண்கள் எளிதில் மனைவியின் இளப்பிலிருந்து மீண்டு விடுகிறார்கள் என்பது பொதுவான கருத்து.
ஆனால் உண்மை அதுவல்ல.
அதனை வெளிப்படுத்தவே இவ்வரிகளை எழுதினேன்.

said...

\\ வழிப்போக்கன் said...
//தரிசுத் தாய்
தவமிருந்து பெற்றெடுத்த
தங்க மகன்!!//

தரிசுத்தாய்னு முன்னாடி சொன்னதை இங்கே ஞாபகப்படுத்தீட்டீங்க..

நல்ல உவமை, நல்ல முடிவு.\\


:))

said...

Divya said...
\\ வழிப்போக்கன் said...
//தன் தாயிடம் குழந்தையை கொடுத்த கார்த்திக்....

என் தாரத்தின்
மறுபிறவியில்
உணர்ந்துக்
கொண்டேன்
நான் பிறக்க
நீ தாங்கிய
பிரசவ வலியை.....!!

[Photo]
இனிதே தொடர்ந்தது கார்த்திக்-நந்தினியின் வாழ்க்கை பயணம்!!
//

நல்ல முடிவு.

உங்கள் கதைகள் அனைத்திற்கும் மகிழ்ச்சியான முடிவை அளிப்பதற்கு நன்றி.\\



கதையின் முடிவினை பாராட்டியதற்கு நன்றி வழிப்போக்கன்!!

said...

\\ வழிப்போக்கன் said...
//பெண்மை, தாய்மை நிலையை அடைந்து குழந்தையை சுமக்கும் போது தான் பூரணமாகிறது!
தாய்மையடைந்த பெண், குழந்தையை பெற்றெடுக்கும் போது படும் கஷ்டத்தை உணர்ந்தால் தான் ஒரு ஆணால் பெண்மையை மதிக்க முடியும்!
என்பதை தெளிவாக உணர்ந்தான் கார்த்திக்.
//

மிக நல்ல கருத்து. எப்படிங்க உங்கனால மட்டும் இப்படி எழுத முடியுது? சான்ஸே இல்ல.\\


உங்கள் மனம்திறந்த பாராட்டிற்கு நன்றி வழிப்போக்கன்!!

said...

\\ வழிப்போக்கன் said...
அடடா..கதை முடிஞ்சிருச்சா..\\

ஆஹா....இந்த கிண்டல்தானே வேணாங்கிறது:)



\\6 பகுதி போனதே தெரியல. இப்ப கொஞ்சம் பிஸி ஆகீட்டீங்க போல.

நேரம் கிடைக்கிறப்போ அடுத்த பதிவு போடுங்க.\\


ஆமாம் வழிபோக்கன்.....கொஞ்சம் பிஸி ஆகிட்டேன்,ஆனாலும்......
தொடர்ந்து பதிவுகள் பதிவிட முயற்சிக்கிறென்.


\\\இந்த கதைகளையெல்லாம் தொகுத்து வெளியிடுங்களேன். வலையில் படிக்க முடியாத பலருக்கு படிக்க வசதியாக இருக்குமே.

Atleast create PDF with your Name and send to some friends. It would reach more peoples.\\



உங்கள் அன்பான ஆலோசனைக்கு நன்றி வழிப்போக்கன்,
நிச்சயம் நினைவில் கொள்கிறேன்.

said...

\\ வழிப்போக்கன் said...
மீண்டும் சொல்கிறேன் இந்தக்கதைகள் வலைப்பூவில் மட்டுமே இருக்க கூடாது பல பேரை சென்றடைய வேண்டும் என விரும்புகிறேன்.\\

உங்கள் விருப்பதை தெரிவித்தமைக்கு மிக்க நன்றி வழிப்போக்கன்.

said...

\\ Raghav said...
நல்ல முடிவு திவ்யா. பிள்ளை பெறும் அச்சமயத்திற்கு ஈடான ஒன்று உலகத்திலேயே இல்லை. மனைவி கணவனுக்கு பிள்ளையை பெற்றுத் தரவில்லை, அவனையே பெற்றவளாகிறாள்.\

வாங்க ராகவ்,

உங்கள் மேலான கருத்துக்களுக்கு மிக்க நன்றி!!

said...

\\ ஜி said...
:))))
\\

நன்றி:))

said...

\\ ஜி said...
Feel panna vatchitteenga... Night Ammakku oru calla podanum... :))\\


அம்மா நியாபகம் ஜாஸ்தி ஆகிடுச்சோ:)

வருகைக்கு நன்றி ஜி!!

said...

\\ Arunkumar said...
kadhai super master....


happy ending-ku dankees :))\\


வாங்க அருண்,

நீங்க எதிர்பார்த்தபடியே கதை சுபமா முடிஞ்சிடுச்சா? சந்தோஷம்தானே!
[Cleveland தாக்குதலுக்கு பயந்துட்டோம்ல நாங்க]

உங்கள் தொடர் வருகைக்கும், பாராட்டிற்கும் நன்றி அருண்!!

said...

\\ வெட்டிப்பயல் said...
கதை சூப்பர்... எதிர்பார்த்த மாதிரியே சோகமா முடிக்கல :-)
\\


வாங்க அண்ணா,
உங்கள் பாராட்டிற்கு நன்றி!!

said...

\\ இவன் said...
கதை சூப்பர்....

கவிதைகளும்தான்\\


வாங்க இவன்,

உங்கள் பாராட்டிற்கு மிக்க நன்றி!!

said...

\\ இவன் said...
//மீண்டும் சொல்கிறேன் இந்தக்கதைகள் வலைப்பூவில் மட்டுமே இருக்க கூடாது பல பேரை சென்றடைய வேண்டும் என விரும்புகிறேன்.//

வழிப்போக்கன் சொன்னதை நான் வழிமொழிகிறேன்\\


நன்றி!!

நிச்சயம் நினைவில் கொள்கிறேன்!!!

said...

\\ sathish said...
மிக நன்று திவ்யா :)
\\\\

மிக்க நன்றி சதீஷ்!

said...

\\ Mathu said...
Wow...கதையை சூப்பரா முடிச்சிட்டீங்க! Happy! :D\\

நன்றி மது:))

said...

\\ Mathu said...
கவிதைகளே போதும் இந்த கதையை சொல்ல! அந்த அளவுக்கு கவிதை எழுதிறிங்க! I jut loved every single kavithai!\\


கவிதாயினிக்கு கவிதைகள் பிடித்திருந்ததோ?நன்றி, நன்றி!!

[by mistake this comment was not published earlier Mathu,so sorry :(
thanks for reminding me the same]

said...

\\ Mathu said...
**கை தட்டல்கள்**
**Claps Claps Claps** for the happy ending..
and Divya :))\\


உங்கள் கைதட்டல்கள் எனக்கு உற்சாகமளித்தது மது, மிக்க நன்றி!!

said...

\\ Mukilarasi said...
வணக்கம் திவ்யா,

//இந்த கதைகளையெல்லாம் தொகுத்து வெளியிடுங்களேன். வலையில் படிக்க முடியாத பலருக்கு படிக்க வசதியாக இருக்குமே.

Atleast create PDF with your Name and send to some friends. It would reach more peoples.//

ரிப்பீட்டேய்ய்ய்....\\


வாங்க முகிலரசி,

ரீப்பிட்டுக்கு ஒரு சல்யூட்டு!!!


\\அருமையிலும் அருமை திவ்யா...\\

நன்றி நன்றி!!



\\ஒரு விசயத்தை சுத்தமா இரசிக்கல்லன்னா, அவிங்கல்லாம்....

என்னப்பா இது இவன் ஏதோ இலூசு மாதிரி உலறுறான்னு, உதாசினப்படுத்திட்டுப் போயிடுவாங்க..

அதுவே பாதியா அரைகுறையா இரசிச்சவங்க, கவிஞன் மாதிரி, கவிதை வர்ணனை எல்லாம் போடுவாங்க....

முழுமையா இரசிக்கும் போது, அங்க மௌனம் மட்டும்தான் விஞ்சி நிற்கும்....


எனக்கு இப்ப மௌனம் மட்டும் தான் இருக்கு....

செம, செம, செம, செம, செம....n செம ;-)))

முகிலரசிதமிழரசன்\\\\


உங்கள் விரிவான பின்னூட்டத்திற்கு நன்றி முகிலரசி.

குறிப்பாக இந்த பகுதி எழுதுவதற்கு ஊக்கமளித்த உங்களுக்கு இங்கு ஸ்பெஷல் நன்றிகள் சொல்ல நான் கடமைபட்டிருக்கிறேன் முகில்.......நன்றி....மனமார்ந்த நன்றிகள்!!

said...

\\ சிநேகிதன்.. said...
திவ்யா மேடம் சாரி. கதை சுமார் தான் .. வழக்கமான திவ்யா டச் கொஞ்சம் மிஸ்ஸிங்...சில இடம் நாடகத்தனமா இருக்குற மாதிரி தோணுது...திவ்யா கதைல முதல்முறையா இதை ஃபீல் பண்றேன்...\\



வாங்க சிநேகிதன்,

உங்கள் உள்ளம் திறந்த வெளிப்படையான விமர்சனத்திற்கு நன்றி!!

என் எழுத்தின் நடையின் மேல் இத்தனை எதிர்பார்பும் கணிப்பும் வைத்திருக்கிறீர்கள் என்பதை அறிகையில், மகிழ்ச்சியாக உள்ளது.




\\வழக்கமான திவ்யா டச் கொஞ்சம் மிஸ்ஸிங்\\

திவ்யா டச்??
அப்படி எல்லாம் பெருசா எனக்குன்னு ஏதும் டச்/ஸ்டைல் எல்லாம் இல்லீங்க,
இருந்தாலும் நீங்க இவ்வளவு வெளிப்படையா கருத்து சொன்னதால், நானும் யோசிச்சு பார்க்கிறேன்.......காரணம் என்னன்னு,

அதற்கான காரணம் , இறுதி பகுதியை பதிவிட காலதாமதமானதால் ஏற்பட்ட மன நெருக்கமாக இருக்கலாம் என்று நினைக்கிறேன்.

மற்றபடி, இறுதி பகுதியில்.......தாய்மையின் மேன்மையையும்,
அதில் கணவனின் பங்கையும் மட்டும் வலியுறுத்துவதே என் நோக்கமாக இருந்தது கதையை ஆரம்பிக்கும்போதே.




\\சில இடம் நாடகத்தனமா இருக்குற மாதிரி தோணுது...\\

காட்சி, இடம் இரண்டிலும் மாறுதல் இல்லாததும்....கதாபாத்திரங்களின் உணர்வுகள் மட்டுமே மையமாக இருந்ததும் அப்படி உணர வைத்திருக்கலாம்.





\\...திவ்யா கதைல முதல்முறையா இதை ஃபீல் பண்றேன்...\\

என்ன சொல்றதுன்னு தெரில.....நன்றியை தவிர:))

said...

\\ Janani said...
romba nalla kadhaya mudichuttenga Divya...nedunaalaikku piragu avangavanga unarchiyai velapaduthardha romba azhaga vivarichuteenga...super super super :-)
\\


வாங்க ஜனனி,

உங்கள் தொடர்வருகைக்கு என் மனமார்ந்த நன்றிகள் ஜனனி!

கதையை ரொம்ப ரசிச்சு படிச்சிருக்கிறீங்க போலிருக்கு:))

said...

\\ Janani said...
prasavathin bodhu ovvoru thaayum padara vedhanaya rombave arumaiya sollirkeenga...subhamaana mudivu koduthadhukku mikka nandri :-)\\

உங்கள் கருத்திற்கு நன்றி ஜனனி!!

said...

\\ ராஜா முஹம்மது said...
ரொம்ப அருமையான கதை. இது போல நிறைய கதைகலள் கொடுக்க வாழ்த்துக்கள்.

I like very much. Good.. Keep it up...\\


வாங்க ராஜா முஹம்மது,

உங்கள் வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் மிக்க நன்றி!!

மீண்டும் வருக!!

said...

\\ priyamanaval said...
மிக நல்ல கருத்துக்கள். ஆழமான சிந்தனைகள். அழகுக்கு அழகு சேர்க்கும் வரிகள். வாழுத்துக்கள் திவ்யா. இனிதாக முடிந்தது அற்புதமான கதை. படிக்கும் ஒவ்வொருத்தருக்கும் உணர்வு பூர்வமான அனுபவமாக இருந்திருக்கும் என்பது தீர்க்கம்.\\


வாங்க ப்ரியா,

கதையை அனுபவித்து படித்து, கருத்துக்களை பின்னூட்டமிட்டதிற்கு நன்றி ப்ரியா!!

said...

\ தாரணி பிரியா said...
subama mudichathukku thanks divya\\

You are mose welcome Dharani Priya!!

[kathaiya subama mudikanumnu......ethirpaarthutey iruntheenglo:)))]

said...

\\ தாரணி பிரியா said...
niriya emotionalana 6th part. as usual super Dialogues super kavithaikalnu kalakittinga. \\

நன்றி,நன்றி!!


\neega eppa konjam busynu ninaikiren. so mudija varai seekiram adutha pathivai ethriparkirom\\

ஆமாங்க.....கொஞ்சம்[நிறையவே] பிஸி:(

அடுத்து பதிவு போடுறேன் ப்ரியா,
tag posts எல்லாம் இன்னும் எழுதவேயில்லை, சீக்கிரம் எழுதனும்.

said...

\\ Divyapriya said...
கதை சூப்பர். இந்த பார்ட்ட தனித்தனியா குறிப்பிட்டு சிலாகிக்க முடியல…ஏன்னா, மொத்தமுமே ரொம்ப அழகா இருந்துச்சு…இது வரைக்கும் நீங்க எழுதினத விட, இது வித்யாசமா இருந்துச்சு…வாழ்த்துக்கள்...\\



வாங்க திவ்யப்ரியா!!

வித்தியாசமா இருந்ததா??

உங்கள் விரிவான பாராட்டிற்கும், வாழ்த்துக்களுக்கும் நன்றி ப்ரியா!!

said...

திவ்யா,அருமையான கதை:-)

said...

அக்கா நான் நல்லா எழுதறேன்னு பொய்யா சொல்றீங்க?? ;-) இருங்க உங்க கதையெல்லாம் படிச்சிட்டு வந்து சொல்றேன்....!! :-)))))

said...

Happy & beautiful ending , nice:)

said...

கதை நல்லா இருந்தது திவ்யா...

Keep Rocking... waiting for another LOVE STORY...

said...

நல்ல முடிவு திவ்யா :))

said...

\\என்ன சொல்றதுன்னு தெரில.....நன்றியை தவிர:))\\

ஆஹா!!!நன்றி மட்டும்தானா?? திவ்யா மேடம் பின்நவீனத்துவ ரேஞ்சில ஒரு சிறுகதை திவ்யா ஸ்டைலோட ,டச்சோட!!! ஒகேவா??

said...

En comment ku feed back innum varala :-(

said...

\\ M.Saravana Kumar said...
சந்தோஷமான முடிவுக்கு நன்றி..\\


You are welcome Saravana!!

said...

\\ M.Saravana Kumar said...
// ஒரு உயிர் போய்த்தான் ஆகவேண்டுமெனின்..........அது மகனாகவே இருக்கட்டும்........என் மனைவி மிஞ்சட்டும்//

என்ன ஒரு காதல்.. பாசம்..
:)\\


:))

said...

\\ M.Saravana Kumar said...
//தன் தாயிடம் குழந்தையை கொடுத்த கார்த்திக்....

என் தாரத்தின்
மறுபிறவியில்
உணர்ந்துக்
கொண்டேன்
நான் பிறக்க
நீ தாங்கிய
பிரசவ வலியை.....!!.//

டச் பண்ணிட்டீங்க..
:)\\

அப்படிங்களா?
நன்றி!!

said...

\\ M.Saravana Kumar said...
//இனிதே தொடர்ந்தது கார்த்திக்-நந்தினியின் வாழ்க்கை பயணம்!!//

அப்பாடா.. ஓகே.. இனிமேல் எல்லோரும் போய் அவங்கவங்க வேலைய நிம்மதியா பார்க்கலாம்..
;)\\


இந்த 'அப்பாடா' க்கு என்ன அர்த்தம்?
இதுக்கு மேலும் 'ஜவ்வா' இழுக்காம........ஒருவழியா கதை முடிந்ததுன்னு நிம்மதியோ??

:)))

said...

\ M.Saravana Kumar said...
//வழிப்போக்கன் said...
இந்த கதைகளையெல்லாம் தொகுத்து வெளியிடுங்களேன். வலையில் படிக்க முடியாத பலருக்கு படிக்க வசதியாக இருக்குமே.

Atleast create PDF with your Name and send to some friends. It would reach more peoples.//

வழிமொழிகிறேன்..\\


நன்றி சரவண குமார்!!

said...

\\ M.Saravana Kumar said...
// சிநேகிதன்.. said...
திவ்யா மேடம் சாரி. கதை சுமார் தான் .. வழக்கமான திவ்யா டச் கொஞ்சம் மிஸ்ஸிங்...சில இடம் நாடகத்தனமா இருக்குற மாதிரி தோணுது...திவ்யா கதைல முதல்முறையா இதை ஃபீல் பண்றேன்...//

திவ்யாவை மிரட்டி வச்சிருக்காங்க.. இப்படி முடிக்கணும்னு..
வாசகர்கள் விருப்பம்..
;)\\

அச்சோ...யாரும் மிரட்டலீங்க என்னை:)
கதைக்கு சுபமான முடிவுதான் என் மனதில் இருந்ததும்!!

said...

\\ M.Saravana Kumar said...
//திரும்பும் திசை எங்கெங்கும்
உன் முகம்தான் தெரிகிறது....!

இதயத்தின் ஒவ்வொரு துடிப்பிலும்
உன் பெயர்தான் ஒலிக்கிறது....!

சுவாசத்தின் ஒவ்வொரு மூச்சுக்காற்றிலும்
உன் நினைவுகள்தான் வந்து போகிறது....!

வாழ்க்கையின் ஒவ்வொரு நிமிடமும்
உன் அருகாமையைத்தான் எதிர்பார்க்கிறது....!

பிரிவென்பது சில கணமானாலும்
தவிப்பென்பது மரண வலியாகிறது- அன்பே

உன்னை நீங்கும் போது எனக்கு
உலகமே இருண்டு போகிறது...!//

இத விடவா நான் சோகமா எழுதறேன்னு சொல்றீங்க..\\



இது கார்த்திக் என்னும் கதாபாத்திரத்தின் மன உணர்வின் வெளிப்பாடு,
அதிலும் பிரிவின் தவிப்புதான் மேலோங்கி இருக்கிறதே அன்றி, சோகம் இல்லையே ,கவிஞரே!!

நீங்கதான் இப்போ சந்தோஷ 'கவி' ஆகிட்டீங்களே.....உங்கள் வாசகர்களின் வேண்டுகோளின் படி:))

said...

\\ M.Saravana Kumar said...
//பிரிவென்பது சில கணமானாலும்
தவிப்பென்பது மரண வலியாகிறது//

ரொம்ப வலிக்குது..
:(\


:(

வருகைக்கும், உங்கள் பின்னூட்டங்களுக்கும் மிக்க நன்றி சரவண குமார்!!

said...

\\ gils said...
ending ipdithaan irkumnu oraluku guess pana mudinjidichi..but still unga writing skills vachu athiayum azhaga kaatrikeenga..ithuku mela intha kathaia azhaga present panna mudiyumaanna doubt than :)\\


வாங்க கில்ஸ்,

உங்கள் விமர்சனத்திற்கும் கருத்திற்கும் மனமார்ந்த நன்றி!!

said...

\\ இனியவள் புனிதா said...
வாழ்த்துகள் திவ்யா சுபமான முடிவுக்கு...

//மருத்துவருடன் பிரசவ அறைக்குள் ஓர் ஆணா???//

அதிலொன்றும் ஆச்சரியமாய் தோன்றவில்லை...எங்க ஊரில் இது சகஜம்தான். அப்போதாவது மனைவியின் அருமை அவர்களுக்கு புரியும் என்று மருத்துவர்கள் நினைக்கின்றனர். ஒரு சில கணவன்மார்கள் மனைவியின் பிரசவத்தில் மயங்கி விழுந்த கதைகளும் உண்டு. :-))\\


வாங்க புனிதா,

வாழ்த்துக்களுக்கு நன்றி!

புனிதா,அயல்நாடுகளில் கணவர் மனைவின் பிரசவ நேரத்தில் உடன் இருப்பத்து அனுமதிக்கப்படுகிறது, இன்னும் இந்தியாவில் இந்த பழக்கம் முழுவதுமாக பரவிடவில்லை,
குறிப்பாக இந்த கதையில் நந்தினி ஊர் போன்ற கிராமபுறத்தில், கணவன் உடன் இருப்பது, வியப்பளிக்கும் விஷயமே!!


உங்கள் கருத்துக்களை பகிர்ந்தமைக்கு நன்றி புனிதா!!

said...

\\ kavidhai Piriyan said...
Divya,
nalla mudivu dhan .....aana..first 5 part la irundha unga way of writing idula rombave missing .Climax nala konjam sentimentaa poiteenga !!!
However one of the best story unga blog la !!Ezhudunga..Ezhudunga..Ezhudi kittey irunga\\

வாங்க ப்ரவீன்!!

உங்கள் மனம்திறந்த விமர்சனத்திற்கும் கருத்திற்கும் மிக்க நன்றி!!

மீண்டும் வருக!!

said...

\\ Thamizhmaangani said...
திவ்ஸ், என்னது இவ்வளவு சீக்கிரமா முடிச்சுட்டீங்க...!

இன்னும் கொஞ்சம் மெழுகேத்தி இருக்கலாம். டக்கன்னு முடிந்த மாதிரி இருந்துச்சு.i think too much pressure from others to finish the story.:)\\

வாங்க தமிழ்மாங்கனி,

சீக்கிரம் முடிஞ்சிடுச்சா கதை....6 பகுதியே நான் ஜாஸ்தியோன்னு ஃபீல் பண்ணினேன் காயத்ரி.

too much pressure னு எல்லாம் இல்ல காயத்ரி, கடைசி பகுதியில் இதற்கு மேல் எழுதிட தோணல அவ்வளவுதான்:)




\\அவன் ஏன் அவள்மீது கோபம் காட்டினான், தண்ணி அடித்துவிட்டு செஞ்ச தப்ப பத்தி அவளிடம் சொல்வதுபோல், அதற்கு அவள் காட்டும் reactions, dialogues இப்படி சொல்லியிருந்திருக்கலாம்.\



ஆஹா.....காயத்ரி, அழகா கதை எடுத்துக் கொடுக்கிறீங்களே, சூப்பரு!!

இந்த பகுதியில் தாய்மையை மையப்படுத்த நினைத்ததால்.....அத்தோடு கதை முடித்துவிட்டேன்:))

[ நீங்க சொல்லியிருக்கிற மாதிரி டயலாக் & சிடியூஷன் கொண்டு வந்தா.......இன்னும் 2 பகுதி கதை எழுதிடுவேன், படிக்க நீங்க ரெடியா காயத்ரி??->just kidding]




\\இருந்தாலும், இந்த கடைசியில் தாய்மை உணர்வை பத்தி ரொம்ப அழகா சொல்லியிருக்கீங்க. ரசித்தேன்.:)\

உங்கள் அழகான ரசிப்பிற்கும், மனம்திறந்த கருத்துக்களும் மிக்க நன்றி!!

said...

\ Mathu said...
I thought I gave you 3 comments! Only 2 have been published here. anything wrong with the other comment?

Tc.\\

Sorry Mathu,
missed publishing that comment,
did publish it after u reminded me,
again sorry about that:(

said...

\\ அவனும் அவளும் said...
திவ்யா,

கதைல இருந்த கவிதைகள் மிகவும் அருமைங்க. அதுவும் கடைசியில் அவன் தாய பத்தி நினைக்கிற கவிதை அமர்க்களம்.

முகிலரசிதமிழரசன்,

ஏனுங்க ? மௌனத்த சொல்ல இத்தன கஷ்டமா ?\\


வாங்க அவனும் அவளும்,

உங்கள் வருகைக்கும் பாராட்டிற்கும் நன்றி, நன்றி!!

said...

\\ Murugs said...
இன்னைக்குப் பார்த்து காலையில‌யே பார்க்காம‌ போய்ட்ட‌னே :(\\\


வாங்க Murugs,

நீங்க இந்த பகுதிக்காக ஆவலோடு காத்திட்டிருந்தீங்கன்னு தெரியும், நன்றிங்க:)))




\\மிக்க‌ ந‌ன்றி, சுப‌மாக‌ முடித்த‌த‌ற்கு!\\

you are most welcome Murugs!




//மனதுக்குள், ' இவளே ஒரு குழந்தை என்று எண்ணுகிறேன்...........இவளோ என் குழந்தைக்காக வலி தாங்கிக் கொண்டிருக்கிறாளே!' என்று வியந்தான்!!!//

‍அருமையான‌ வ‌ரிக‌ள்!\\



குறிப்பிட்டு பாராட்டியதற்கு மிக்க நன்றி!!

மீண்டும் வருக!!

said...

\\ நிமல்/NiMaL said...
சுபம்...! சூப்பர்...!\\


வாங்க நிமல்,

நன்றி உங்கள் பாராட்டிற்கு!!



//ந்தக்கதைகள் வலைப்பூவில் மட்டுமே இருக்க கூடாது பல பேரை சென்றடைய வேண்டும் என விரும்புகிறேன்.//

வழிப்போக்கன் சொன்னதை நானும் வழிமொழிகிறேன்\\


நன்றி!!



\எழுத்தில் திவ்யா டச், கவிதைகளும் அருமை. ஆனாலும் இப்போ கொஞ்சம் பிசி போல. அத்தியாயங்களுக்கிடையில் இடைவெளி குறைந்தால் நலம்.

வாழ்த்துகள்...!!!\\


புரிகிறது நிமல்,
இந்த இறுதி பகுதிக்கு நீண்ட இடைவெளி ஆகிவிட்டது, மன்னிக்கவும்.

இனிமேல் இவ்விதம் நிகழாவன்னம் பார்த்துக்கொள்கிறேன்.

உங்கள் கருத்திற்கும், வாழ்த்துக்களுக்கும் மிக்க நன்றி நிமல்!!

said...

\\ விஜய் said...
Great Ending :)\\


நன்றி விஜய்!!



\\பெண்மை, தாய்மை நிலையை அடைந்து குழந்தையை சுமக்கும் போது தான் பூரணமாகிறது!
தாய்மையடைந்த பெண், குழந்தையை பெற்றெடுக்கும் போது படும் கஷ்டத்தை உணர்ந்தால் தான் ஒரு ஆணால் பெண்மையை மதிக்க முடியும்! \\

உண்மை உண்மை முற்றிலும் உண்மை. பெற்றெடுப்பதென்னவோ தாய். ஆனால் இனிஷியல் மட்டும் அப்பாவினுடையது. \\


ஆமாம் விஜய்!!




\\பிரசவ நேரத்தில் ஏற்பட்ட இக்கட்டான சூழலை திறம்பட கையாண்ட மருத்துவரின் உதவியால் நந்தினி அழகான ஆண் குழந்தையை பெற்றெடுத்தாள்.\\

அப்பாடா. இப்போதான் நிம்மதியா இருக்கு.\\


நிம்மதியா இருக்கா??
சந்தோஷம்!!



\\திவ்யா,
நிஜமாகவே ஒரு பெண்ணின் பிரசவ வலியை கண் முன் கொண்டு வந்துட்டீங்க. கார்த்திக்கின் மன உளைச்சலும் அழகான வர்ணனை. கார்த்திக் நந்தினி தம்பதிக்கு எனது வாழ்த்துக்கள் :)\\


உங்கள் விரிவான விமர்சனத்திற்கும், பாராட்டிற்கும் என் மனமார்ந்த நன்றிகள் விஜய்!!

விஜய்\\

said...

\\ My days(Gops) said...
fulla ah padichitu comment putting..\\

நம்பிட்டேன்.....நம்பிட்டேன் Gops:))



\late ah vandhadhuku jorry...\

your apology is accepted!!



\\next post la irundhu asathiduvomaaaaga:)
\\

நன்றிங்க:))

said...

\ இரா.ஜெயபிரகாஷ் said...
என் தாரத்தின்
மறுபிறவியில்
உணர்ந்துக்
கொண்டேன்
நான் பிறக்க
நீ தாங்கிய
பிரசவ வலியை.....!!

நல்ல வரிகள். தொடர்ந்து எழுதுங்கள். என்னைப்போல் எழுதுவதை நிறுத்திவிடாதீர்கள்.\\


வாங்க ஜெயபிராகாஷ்,

உங்கள் தொடர் வருகையும் , உங்கள் மனம்திறந்த பாராட்டுக்களுக்கும் எனக்கு பெரிதும் உற்சாகமளிக்கிறது, மிக்க நன்றி!!

தொடர்ந்து வாருங்கள்:))

said...

\\ ஜோசப் பால்ராஜ் said...
என்ன திவ்யா, இவ்வளவு தாமதம்?
நந்தினிக்கு என்னாச்சோன்னு கார்த்திக்கோட சேர்ந்து நாங்களும்ல தவிச்சுக்கிட்டு இருந்தோம்?\\


வாங்க ஜோசப்,

ரொம்ப தவிச்சுக்கிட்டு இருந்தீங்களா?
ஸாரிங்க .....இறுதி பகுதி வெளியிட ரொம்ப தாமதாகிவிட்டது:(



\\அருமையா படைச்சிருக்கீங்க. வாழ்த்துக்கள். \\

வாழ்த்துக்களுக்கு நன்றி !!



//என் தாரத்தின்
மறுபிறவியில்
உணர்ந்துக்
கொண்டேன்
நான் பிறக்க
நீ தாங்கிய
பிரசவ வலியை.....!!//

என் அம்மாவை நினைச்சுக்கிட்டேங்க, கண்ல நீரோட..
உள்ளத்த தொட்ட கதை.\\


உணர்வுபூர்வமான உங்கள் ரசிப்பினை பகிர்ந்துக்கொண்டமைக்கு நன்றி ஜோசஃப்!!




\\சரி இன்னும் உங்களுக்கு ஒரு வேலை பாக்கி இருக்கு,
சீக்கிரம் அதையும் முடிங்க.\\

ஆங்.....நியாபகம் இருக்கு ஜோசப், அடுத்து அந்த தொடர் ஓட்டத்திற்கான பதிவுதான்....இப்போ ஓகே வா?




\\பல நண்பர்கள் இங்க சொல்லியிருக்க மாதிரி இதையெல்லாம் ஒரு தொகுப்பா வெளியிடுங்க.\\

நினைவில் கொள்கிறேன் ஜோசப், நன்றி!!

said...

\\ எழில்பாரதி said...
திவ்யா எப்போதும் போல அருமை!!!\\

வாங்க எழில்பாரதி,

உங்கள் பாராட்டிற்கு நன்றி!!

said...

\\ Naveen Kumar said...
திவ்யா,அருமையான கதை:-)\\

வாங்க நவீன் குமார்,
உங்கள் வருகைக்கும் பாராட்டிற்கும் நன்றி!

மீண்டும் வருக!

said...

\\ Sri said...
அக்கா நான் நல்லா எழுதறேன்னு பொய்யா சொல்றீங்க?? \

வாங்க ஸ்ரீ,
உங்கள் முதல் வருகைக்கு நன்றி,

நான் ஏங்க பொய் சொல்றேன்......நிஜம்மாகவே உங்கள் எழுத்து அருமையா இருந்தது.



;\\-) இருங்க உங்க கதையெல்லாம் படிச்சிட்டு வந்து சொல்றேன்....!! :-)))))\\

நேரம் கிடைக்கையில் நிச்சயம் என் பதிவுகளை படிங்க ஸ்ரீ!!

மீண்டும் வருக!!

said...

\\ Shwetha Robert said...
Happy & beautiful ending , nice:)\\

வாங்க ஷ்வேதா,
வருகைக்கும் பாராட்டிற்கும் நன்றி!!

said...

\\ Sen22 said...
கதை நல்லா இருந்தது திவ்யா...\\

வாங்க செந்தில்,

பாராட்டிற்கு நன்றி!!



\Keep Rocking... waiting for another LOVE STORY...\\

லவ் ஸ்டோரியா?
பார்க்கலாம்......விரைவில் பதிவில்!!

வருகைக்கு நன்ரி செந்தில்!

said...

\\ naanal said...
நல்ல முடிவு திவ்யா :))\



வாங்க naanal,

கதையின் முடிவை பாராட்டியதற்கு நன்றி!!

மீண்டும் வருக!!

said...

\\\ சிநேகிதன்.. said...
\\என்ன சொல்றதுன்னு தெரில.....நன்றியை தவிர:))\\

ஆஹா!!!நன்றி மட்டும்தானா?? திவ்யா மேடம் பின்நவீனத்துவ ரேஞ்சில ஒரு சிறுகதை திவ்யா ஸ்டைலோட ,டச்சோட!!! ஒகேவா??\\


ஆஹா....பின்நவீனத்துவ ரேஞ்சில கதையா??
அட என்னங்க......அந்த லெவலுக்கெல்லாம் என்னால எழுத முடியாதுங்க சிநேகிதன்:(

said...

\\ kavidhai Piriyan said...
En comment ku feed back innum varala :-(
\\

Pravin,
unga comment ku reply iniku panitein:))
ippo ok thana!

said...

இப்போது தான் உங்கள் எழுத்துக்களை படிக்க தொடங்கி இருக்கிறேன் ..
படித்தது வரை அருமையாக இருக்கிறது ...
தொடர்ந்து வருவேன்
இனியும் நிறையவே
படிக்க இருக்கிறது ...

படித்துவிட்டு மீதியை சொல்கிறேன்..

வாழ்த்துக்களுடன்

அன்புடன்
என்றும்
இனிய தோழன்
விஷ்ணு

said...

\\ Vishnu... said...
இப்போது தான் உங்கள் எழுத்துக்களை படிக்க தொடங்கி இருக்கிறேன் ..
படித்தது வரை அருமையாக இருக்கிறது ...
தொடர்ந்து வருவேன்
இனியும் நிறையவே
படிக்க இருக்கிறது ...

படித்துவிட்டு மீதியை சொல்கிறேன்..

வாழ்த்துக்களுடன்

அன்புடன்
என்றும்
இனிய தோழன்
விஷ்ணு
\\


வாங்க விஷ்னு,

உங்கள் முதல் வருகைக்கு என் மனமார்ந்த நன்றி!

நேரம் கிடைக்கையில் அனைத்து பதிவுகளையும் படித்து கருத்துக்களை தெரிவியுங்கள்.

மீண்டும் வருக!!

said...

unmaiya sollanumna naan muzhusa padikkale..the 1st part konjam, the final part konjam padichen..aana kathai puriyuthu.........

summa pinni pedaleduthirukke ninaikaren.... namma amir illena Cheran vitta ithai oru super hit padama aakuvanga.... Very good :)

btw...un ip2 widget poi solluthu... naan delhi la irunthu vanthirukkennu.... athai konjam gavani ;)

said...

திவ்யா,
நானும் ஆர்வத்தில் பதிவு எழுத ஆரம்பித்தேன், ஆனால் நேரமின்மையின் காரணமாக என்னால் தொடர்ந்து எழுத முடியவில்லை. இன்ஸா அல்லாஹ் கண்டிப்பாக மீண்டும் எழுதுவேன்...

said...

ஊருக்கு செல்வதற்கு முன் கடைசியாக ஒரு முறை உங்கள் தளத்தைப் பார்வையிட்டேன்.

மகிழ்ச்சி. ஆனால் அவசரத்தில் கமென்ட் கொடுக்க முடியவில்லை.

said...

கவிதைகள் இந்தப் பதிவிலும் சூப்பர்

said...

//" மாப்ள........என்.......புள்ள...........வலியில துடிக்கிறா..........மாப்ள......என் உசிரே நடுங்குது"
///

நான் சொன்னதுபோலவே யாரமே எதிர்பார்க்காத திருப்பத்தை வைத்து துவங்கியுள்ளீர்கள்.

said...

//ஒரு உயிர் போய்த்தான் ஆகவேண்டுமெனின்..........அது மகனாகவே இருக்கட்டும்........என் மனைவி மிஞ்சட்டும்'
//

உண்மையிலேயே உணர்ச்சி மயமான வரிகள்

said...

இறுதிப் பகுதி சூப்பர்
எனினும் சந்தோஷமாக முடிக்க வேண்டும் என்பதற்காக வலுக்கட்டாயமாக திரைக்கதையை நகர்த்தியிருப்பதுபோல் ஒரு செயற்கைத்தனம் தெரிகிறது.

ஆனாலும் ஏற்றுக் கொள்ளும் விதமாக நன்றாகவே உள்ளது.

படங்களும் நன்றாக இருந்தது.

தொடர்ந்து எழுதுங்கள்.

உங்கள் புதிய பதிவையும் படித்து விட்டு வந்து விடுகிறேன்.

said...

\\ rsubras said...
unmaiya sollanumna naan muzhusa padikkale..the 1st part konjam, the final part konjam padichen..aana kathai puriyuthu.........

summa pinni pedaleduthirukke ninaikaren.... namma amir illena Cheran vitta ithai oru super hit padama aakuvanga.... Very good :)\\


thanks for dropping in Subbu,
your appreciation made me feel so happy!
thanks again!



\\btw...un ip2 widget poi solluthu... naan delhi la irunthu vanthirukkennu.... athai konjam gavani ;)
\\

Sure will check it out!

said...

\\ ராஜா முஹம்மது said...
திவ்யா,
நானும் ஆர்வத்தில் பதிவு எழுத ஆரம்பித்தேன், ஆனால் நேரமின்மையின் காரணமாக என்னால் தொடர்ந்து எழுத முடியவில்லை. இன்ஸா அல்லாஹ் கண்டிப்பாக மீண்டும் எழுதுவேன்...\\


வாங்க ராஜா,

மீண்டும் ஆர்வத்துடன் எழுத ஆரம்பிங்க ராஜா:))

எழுத ஆரம்பித்ததும் அவசியம் சொல்லுங்க ராஜா.

said...

நல்ல தொடர் இது திவ்யா. தொடர்ந்து அனைத்து பகுதிகளையும் படித்தேன். ரொம்ப ரொமாண்டிக்

said...

\\ கயல்விழி said...
நல்ல தொடர் இது திவ்யா. தொடர்ந்து அனைத்து பகுதிகளையும் படித்தேன். ரொம்ப ரொமாண்டிக்\\

வாங்க கய்ல்விழி,

வருகைக்கும் பாராட்டிற்கும் மிக்க நன்றி,
மீண்டும் வருக!!!

said...

அக்கா சூப்பர்கா..!! :)) இப்போதான் எல்லா பகுதியையும் படிச்சு முடிச்சேன். சான்ஸே இல்ல சூப்பர்..!! :))

said...

\\ Sri said...
அக்கா சூப்பர்கா..!! :)) இப்போதான் எல்லா பகுதியையும் படிச்சு முடிச்சேன். சான்ஸே இல்ல சூப்பர்..!! :))\\


வாங்க ஸ்ரீ,

எல்லா பகுதியும் படிச்சீட்டீங்களா?? ரொம்ப தாங்க்ஸ் பொறுமையா எல்லா பகுதியும் படித்ததிற்கு!

மீண்டும் வருக ஸ்ரீ!

said...

இன்று தான் நேரம் கிடைத்தது ... முழுவதும் படித்தேன் திவ்யா ...

அருமையாக இருக்கிறது ...
அழகாக கதையை கொண்டு போய் இருக்குறீர்கள் ...

வாழ்த்துக்களுடன்

விஷ்ணு

said...

Expected, but very much emotional.... கைக்குட்டை நனைஞ்சிடிச்சுஞ்கோ....

said...

Expected, but very much emotional.... கைக்குட்டை நனைஞ்சிடிச்சுஞ்கோ....

said...

Expected, but very much emotional.... கைக்குட்டை நனைஞ்சிடிச்சுஞ்கோ

said...

adengappa.... oru muzhu padam paartha maathiri irukku!!!!

evalvu suspense and sentiments.... kalakiteenga ponga.....

said...

இந்த ஆறு பகுதிகளையு..இப்ப தான் பிரிண்ட் அவுட் எடுக்கிறேன்.. என்னோட லேட் ஆனா பின்னோட்டத்த நாளை சொல்கிறேன்

said...

\\Blogger Vishnu... said...

இன்று தான் நேரம் கிடைத்தது ... முழுவதும் படித்தேன் திவ்யா ...

அருமையாக இருக்கிறது ...
அழகாக கதையை கொண்டு போய் இருக்குறீர்கள் ...

வாழ்த்துக்களுடன்

விஷ்ணு\\


Thanks Vishnu!!

said...

\\Blogger Nanathini said...

Expected, but very much emotional.... கைக்குட்டை நனைஞ்சிடிச்சுஞ்கோ....\

Thanks Nanathini!!

said...

\\Blogger Rajesh Krishnamoorthy said...

adengappa.... oru muzhu padam paartha maathiri irukku!!!!

evalvu suspense and sentiments.... kalakiteenga ponga.....\\


Thanks a lot Rajesh!!

said...

\\Blogger அருள் said...

இந்த ஆறு பகுதிகளையு..இப்ப தான் பிரிண்ட் அவுட் எடுக்கிறேன்.. என்னோட லேட் ஆனா பின்னோட்டத்த நாளை சொல்கிறேன்\\


பொறுமையா படிச்சுட்டு சொல்லுங்க அருள்!!