April 25, 2008

எனக்கென ஏற்கெனவே...பிறந்தவள் இவளோ??? - பகுதி 3



பகுதி -1

பகுதி - 2

மீரா எங்கே .....என தவிப்புடன் தேடினேன்!

கட்டிலுக்கு அருகில் மயங்கி விழுந்திருந்ததை கவனித்து பதற்றமானேன்!

மீண்டும் பத்து நாள் ஆஸ்பத்திரி வாசம்....இந்த முறை டாக்டர் ஸ்ட்ரிக்ட்டாக மீரா complete rest எடுக்கவேண்டுமென சொல்லிவிட்டார்.

மீராவிற்கு சிறிது உடல்நிலை சரி ஆனதும், ரகு கொடுத்த ஆலோசனையைப் பற்றி நானே அவளிடம் சென்று பேசினேன். என் கண்களை சந்திக்கும் துணிவில்லாமல் தலை கவிழ்ந்தபடி படுக்கையில் அமர்ந்திருந்தாள் மீரா.

அவளது காதலனின் விபரங்களை கேட்டுத் தெரிந்துக் கொண்டேன். ஃபோன் நம்பர், மற்றும் அவனது அப்பா கோயம்பத்தூரில் ஒரு பிரபல Textile Showroom யின் அதிபர் என்ற விபரம் தவிர, மற்ற விபரங்கள் எதுவும் அவளுக்கு தெரிந்திருக்கவில்லை.
கோயம்பத்தூர் சென்று அவனை தேடி விபரம் அறிந்து வருவதாக மீராவிடம் கூறினேன்.
நன்றியுடன் கண்கலங்கினாள் மீரா!!

அலுவலக விஷயமாக பெங்களூர் செல்வதாக வீட்டில் கூறிவிட்டு கோவைக்குச் சென்றேன். என் கல்லூரி கால நண்பனின் உதவியுடன் மீராவின் காதலன் ஸ்ரீதரை தேடிவிடலாம் என திட்டம்.


இவள் கூறிய விபரங்கள உண்மையாகயிருக்குமாயின், பணக்கார பையன்.................பந்தாவுக்காக MBA படித்துவிட்டு,
பொழுது போக்கிற்காக பெண்களிடம் பழகுபவனாக இருக்க வாய்ப்பிருக்கிறது!!
Anyway, அவன் யார் என விசாரிக்கலாம் என்று நானும் என் கோயமுத்தூர் நண்பனும் முயன்றோம்.
ஸ்ரீதருடன் சென்னையில் பழக்கம் , அவனது நண்பர்கள் நாங்கள் என கூறியதால் அவனை பற்றி தகவல் சேகரிக்க எளிதாக இருந்தது.

கிடைத்த தகவல் மிகுந்த அதிர்ச்சியானது!!!

3 மாதங்களுக்கு முன் ஊட்டியிலிருந்து கோவை திரும்பும் வழியில் கார் விபத்தில் தலையில் பலத்த அடிகளுடன் இன்றுவரை சுயநினைவில்லாமல் கோமா நிலையில் ஆஸ்பத்திரியில் இருப்பதாக அறிந்து அங்குச் சென்றோம்.

கண்ணீர் வடிந்த கண்களுடன் ஸ்ரீதரின் தாயார், அருகில் அவருக்கு ஆறுதல் கூறியபடி ஒரு பெண்.
வசதி படைத்த குடும்பம் என்பதால், டாக்டர்கள் நம்பிக்கை தரும் பதில் ஏதும் கொடுக்காத போதிலும், சுயநினைவு திரும்பும், உயிர் பிழைத்துவிடுவான் தன் ஒரே மகன் என்று நம்பிக்கையுடன் முழுக்குடும்பமும் காத்திருப்பது தெரிந்தது!!

ஒரே வாரிசான
உங்கள் மகன்
தன் வாரிசை அங்கு
விதைத்துவிட்டு இங்கு
சலனமின்றி துயில்கிறான்!!
- ஸ்ரீதரின் தாயிடம் இதை கூறுவது எப்படி??


நீ
தாயானதை உணராமல்,
திருமதி ஆனதையும் அறியாமல்
தன் நினைவின்றி
எமனோடு நித்தம் போராடுகிறான்
உன் காதலன்!!
-மீராவிடம் கூறுவதெப்படி???

குழப்பமான மனதுடன், கணத்த இதயத்துடன் வீட்டிற்கு திரும்பினேன்.

என் வருகைக்காக ஆவலுடன் காத்திருந்தாள் மீரா, ஸ்ரீதரை பற்றின விபரம் தானாக என்னிடம் கேட்க துணிவில்லாமல், நானாக கூறவேண்டும் என என்னையே நோக்கினாள் மீரா.
தவிக்கும் அவள் கண்களின் தவிப்பு என்னை ஏதோ செய்தது, மனதை பிசைந்தது!!

மீராவிடம் கரகரத்த குரலில் அனைத்தையும் மெதுவாக கூறிமுடித்தேன்.

எனக்கும் மீராவிற்கும் திருமணமாகி 2 வாரமும் மீராவை கண்ணீருடன் தான் பார்த்திருக்கிறேன், ஆனால் அவள் இப்போது கதறிய கதறல் என் இதயத்தை உடைத்தது!!

மீண்டும் அவளது உடல் நிலை பாதிக்க படுமோ என்ற கவலை வேறு, அவளை எப்படி தேற்றுவது என்ற வழியும் அறியாமல் திணறினேன்.


தன் கண்ணீருக்கு நடுவினில் மீரா என்னிடம், விவாகரத்திற்கு தான் சம்மதிப்பதாகவும், ஸ்ரீதரின் குடும்ப வாரிசை பெற்றுக்கொடுக்கும் வரை தான் தங்கிக் கொள்ள ஒரு இடத்தையும், வேலையையும் பார்த்து தருமாறு கெஞ்சினாள்.

என் நண்பன் ரகுதான் இப்போதும் ஆலோசனை தந்தான்.அவனது யோசனைப்படி....

என் வேலையை புனேவிற்கு மாற்றிக்கொண்டு, புனேவிற்கு மீராவுடன் தனிக்குடித்தனம் சென்றேன்.

டைவர்ஸ் ஆகும் வரை என்னுடன் இருக்கலாம், குழந்தையையும் நல்ல முறையில் பெற்று ஸ்ரீதரின் குடும்பத்துக்கு கொடுத்து விடலாம் என்ற முடிவுடன் மீராவும் என்னுடன் புனேவிற்கு வந்தாள்.

புனேவில் நானும் மீராவும் ஒரே வீட்டில் வசிக்கும் நண்பர்கள் என்ற அளவில் கூட இல்லாமல், தனித்தே இருந்தோம்.

அதிர்ச்சி, கவலை, குழப்பம் என மீரா எப்போதும் எதையோ பறி கொடுத்தது போலவே இருந்தாள்.

பக்கத்து அப்பார்ட்மென்ட் சுமதியுடன் நட்பு ஏற்பட்டது மீராவிற்கு.
சுமதி கலகலப்பாக பேசிப்பழகும் தமிழ் பெண்.
கணவன் ஆஃபீஸிற்கும், குழந்தைகள் பள்ளிக்கும் சென்றபின மீராவுடன் அரட்டை அடிக்க வருவாள் சுமதி.

சுமதியின் நட்பு மீராவை சகஜ நிலைக்கு சீக்கிரமாகவே வரவைத்தது.
புது இடம், புது நட்பு, மீராவின் தாய்மை தந்த பொலிவு....மீராவிடம் ஒரு புத்துணர்ச்சியை அளித்தது.

புனேவிற்கு வரும்முன் என் அம்மாவிடம் எனக்கு என்ன என்ன பிடிக்கும் என கேட்டு தெரிந்துக் கொண்டிருப்பாள் போலிருக்கிறது.....என் டேஸ்டிற்கு ஏற்றபடி நன்றாக சமைத்தாள்,

இந்த கவனிப்பும், உபசரனையும்.....
அவளுக்கும் வயிற்றில் வளரும் குழந்தைக்கும்
நான் பாதுகாப்பாக இருப்பதாலா???
ஒரு வருடத்தில் முறியப்போகும் உறவிற்கு
இப்போதே சேர்த்து வைத்து நன்றியுணர்வை வெளிப்படுத்துகிறாளா????

ஏதோ ஒன்று....மீரா சந்தோஷமாக இருந்தாள்!!


எங்களுக்குள்ளான உரையாடல்கள்....

"காஃபி ...."

"டின்னர் டேபிள்ல இருக்கு..."

"பாத்ரூம்ல water heater work பண்ணல..."

"gorcery & vegetables வாங்கனும்..."

இவ்வளவுதான்!!!

ஆனால் மீராவின் அன்றாட வாழ்க்கை முறை எனக்கு மனதில் பதிய ஆரம்பித்தது.

காலையில் எழுந்ததும் பக்தி பாடல்களை முனங்கியபடி ஃபில்டர் காஃபி போடுவது........சினிமா பாடல்கள் முனுமுனுத்தபடி காலை டிபன் செய்வது.......நான் ஹாலில் இல்லை எனத்தெரிந்தால் சற்று சத்தமாகவே பாட்டு பாடுவது.......பால்கனியில் இருக்கும் ரோஜா செடியுடன் பேசுவது........ஜன்னல் கம்பிகள் வழியே கரம் நீட்டி மழைதுளிகளை தன் முகத்தில் தெரித்து சிலிர்த்துக்கொள்வது.......இப்படி அவளது நடவடிக்கைகள் எனக்குள் சேமிக்க ஆரம்பித்தன!!

அவள் இப்போது 6 மாதம் கர்ப்பம், எனினும் அவ்வளவாக அவளது வயிறு அதனை வெளிக்காட்டவில்லை.

இந்த நேரத்தில், கர்ப்பமாக இருக்கும் தன் மருமகளை பார்த்தே ஆகவேண்டும் என என் அப்பாவும் அம்மாவும் புனேவிற்கு வந்தனர்.
இன்முகத்துடன் அவர்களை வரவேற்று அவர்களுக்கு வேண்டியதை பார்த்து பார்த்து செய்தாள் மீரா.

இங்கு வந்த இடத்தில் என் அம்மாவிற்கு உடல்நிலை சரியில்லாமல் போகவே, மீரா முழு அக்கரையுடன் கவனித்துக்கொண்டாள்.

என் பெற்றோர் மட்டுமில்லாமல் நானும் பெரிதும் நெகிழ்ந்து போனேன்......மீராவின் அன்பான கவனிப்பால்!!

உடலநிலை சரியானதும் என் பெற்றோர் சென்னைக்கு புறப்பட்டார்கள். போகும் முன் அம்மா என்னிடம் தனியாக........

"டேய் விஷ்வா! உனக்கும் மீராவுக்கு என்னடா பிரச்சனை?? அவகிட்ட முகம் கொடுத்து கூட பேச மாட்டன்ர, பாவம்டா மீரா! புள்ளத்தாச்சி பொண்ணு, நல்லா பார்த்துக்கோடா, அவ தெரியாம என்ன தப்பு பண்ணிருந்தாலும் பக்குவமா எடுத்துச் சொல்லு, இப்படி பட்டும் படாமலும் இருந்தா என்னடா அர்த்தம்??? இந்த நேரத்துல அவ மனசு சந்தோஷமா இருக்கனும்டா விஷ்வா....பத்திரமா பார்த்துக்கோ மீராவை"

உண்மையை அறியாமல் அம்மா பேசினாலும்......அதில் இருந்த அர்த்தம் மனதில் பதிந்தது!!

அம்மா , அப்பா ஊருக்கு சென்றபின, எனக்கும் மீராவுக்கும் நடுவில் பேச்சுவார்த்தைகள் சற்றே அதிகமானது, பொதுவான .....சினிமா, அரசியல், சீதோஷன நிலை பற்றியாவது பேசிக்கொண்டோம்.
மாதங்களும் உருண்டோடின....


ஒரு நாள் சாயங்காலம் நான் ஆபீஸிலிருந்து வீட்டுக்கு வந்ததும், அவள் எனக்கு காஃபி கொடுக்கும் போது, தவறுதலாக என் கையில் வடிந்துவிட,
"அச்சோ" என்று பதறியபடி என் கைகளை அவள் பிடித்து காஃபியை துடைத்துவிட,

"சீ.....கை எடு" என டக்கென்று கத்திவிட்டேன்.

என் முகத்தின் கடுகடுப்பும், வார்த்தையில் தெரிந்த வெறுப்பும் அவளை வேதனைபடுத்தியிருக்க கூடும், அழுதபடி தன் அறைக்குள் சென்று தாளிட்டுக்கொண்டவள் இரவு முழுவதும் வெளியில் வரவேயில்லை.

நானும் கண்டுக்கொள்ளாமல் டேபிளில் இருந்த டின்னரை சாப்பிட்டுவிட்டு உறங்கிப்போனேன்.

காலையில் எப்போதும் கேட்கும் அவள் பாடல் சத்தம் சமயலறையில் இல்லை, அவள் அறையின் கதவு பூட்டியே இருந்தது......இன்னும் அழுது கொண்டிருக்கிறாள் போலிருக்கிறது என நினைத்து டிஸ்டர்ப் செய்யாமல் அலுவலகம் சென்று விட்டேன்.

அன்று வேலை நேரத்தில் மீட்டிங் இருந்ததால் அதில் மூழ்கி போனேன்.

வழக்கத்தைவிட அன்று சற்று தாமதமாக வீட்டிற்கு வந்தேன், அப்போதுதான் மீரா அழுது கொண்டிருந்தது ஞாபகம் வந்தது, 'ஸாரி' கேட்க வேண்டும் மீராவிடம் என்ற முடிவுடன் வீட்டிற்குள் என்னிடம் இருந்த சாவியை வைத்து திறந்து உள் நுழைந்தேன்.

Light போடாமல்.....வீடு கும் இருட்டாக இருந்தது.

மீரா எங்கே?? என தேடினேன்......அவள் அறையில் அவள் இல்லை.....வழக்கம் போல் என்கேயும் மயங்கி விழுந்து கிடக்கிறாளோ என எல்லா இடமும் தேடினேன், எங்கும் மீரா இல்லை....ஒரு வித பயம் எடுத்தது மனதில்.

பக்கத்துவீட்டு சுமதியிடம் கேட்கலாம் என அவர்கள் வீட்டிற்கு சென்றேன், அவர்கள் வீட்டு கதவு மூடப்பட்டு பூட்டு தொங்கியது.

அப்போதுதான், மீட்டிங்கிலிருந்ததால் ஃபோனை silent mode ல் வைத்திருந்தது நினைவிற்கு வர, என் மொபைல் எடுத்துப் பார்த்தேன், 5 missed call....... எல்லாமே மீராவின் மொபைலில் இருந்து......

மீராவின் நம்பருக்கு டயல் செய்தேன்.......சுமதிதான் ஃபோன் எடுத்தாள், மீராவிற்கு பிரசவ வலி ஏற்பட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்திருப்பதாகவும், உடனே வரும்படியாகவும் கூறினாள்.

சே, மொபைல் சைல்ட்ன் மோட் ல வைச்சது எவ்வளவு பெரிய தப்புன்னு நொந்த படி, ஆஸ்பத்திரிக்கு புறப்பட்டேன்.

இவ்வளவு பதற்றதுடன் நான் என் காரை இதுவரை ஓட்டினதில்லை.

ஏன் இந்த பரபரப்பு.......ஏன் எனக்கு இப்படி டென்ஷன் ஆகிறது....விடையளிக்க முடியாத கேள்விகளுடன் ஆஸ்பத்திரியை அடைந்தேன்.

பிரசவத்தில் சிக்கல் இருப்பதால் சிசேரியன் செய்ய வேண்டும் என் என்னிடம் கையெழுத்து வாங்கினார்கள்.
தவிப்புடன் ஆபரேஷன் தியேட்டர் வெளியில் காத்திருந்தேன். நல்லபடியாக ஆண்குழந்தை பிறந்தது மீராவிற்கு.

மீராவும் குழந்தையும் தனி அறைக்கு கொண்டுவரப்பட்டதும், என்னிடம் குழந்தையை கொடுத்துவிட்டு சென்றார் நர்ஸ்.

பிறந்து சில மணிதுளிகளே ஆன குழந்தை என் கையில், ஸ்பரிசத்தில் மனது குளிர்ந்தது.


கையில் குழந்தையை ஏந்தியபடி, பாதி மயங்கிய நிலையிலிருந்த மீராவை நோக்கினேன்.....

கண்களில் நீர் ததும்ப என்னை நன்றியோடு பார்த்து பேச முயன்றாள்....தன் இரு கரங்களையும் கூப்பி

"ந.....ன்....றி....."

என்று கூறி முடிப்பதற்குள் மூச்சு திணற ஆரம்பித்தது மீராவிற்கு,

'டா.....க்...டர்.........ந...ர்....ஸ்......டா...க்...டர்......."

என அலறினேன் உதவிக்காக,

மீராவின் மூச்சு.........மெது......மெதுவாக........??????

[தொடரும்..]

பகுதி - 4

111 comments:

நவீன் ப்ரகாஷ் said...

திவ்யா..:))))
பயங்கர சஸ்பென்ஸ் காட்சிகள் நிறைந்த மூன்றாம் பாகம்... அருமை.... :))))

நவீன் ப்ரகாஷ் said...

திவ்யா.....
ஹீரோவின் மனநிலையை மிக யதார்த்தமாக காட்டி இருக்கிறீர்கள்... கொஞ்சம் இரக்கம் உள்ளவர்தான் போல..... :)))))

நவீன் ப்ரகாஷ் said...

சம்பவங்கள் நிறைந்த மூன்றாம் பாகம் அடுத்து என்ன என கேட்க தூண்டுகிறது திவ்யா... எப்பொழுது அடுத்த பாகம்..? எனக்கு மட்டுமாவது சொல்லுங்க ப்ளீஸ்....;))))))

Nimal said...

சற்று நீண்டாலும் திருப்பங்களுடன் சிறப்பாக உள்ளது 3ம் பாகம்.

வாழ்த்துக்கள்...!!!

அடுத்த பாகம் விரைவாக போடவும் :)

சத்யா said...

வாவ்! நெக்ஸ்ட் பகுதி இதற்கு முந்தைய பகுதிய விடவும் சூப்பரு.

சத்யா said...

நீ
தாயானதை உணராமல்,
திருமதி ஆனதையும் அறியாமல்
தன் நினைவின்றி
எமனோடு நித்தம் போராடுகிறான்
உன் காதலன்!!
-மீராவிடம் கூறுவதெப்படி???

-- உங்க் எழுத்து நடை, வழக்கம் போல அசத்தல்!

சத்யா said...

கதைய ரொம்பவே சுவாரஸ்யமா நகர்த்தறீங்க! இந்த பகுதி இறுதியிலும் முடிச்சா! சீக்கிரம் அடுத்த பகுதி போடுங்க திவ்யா! போன முறை மாத்ரி இவ்ளோ நாழி விட வேண்டாம்.

எழில்பாரதி said...

திவ்யா தொடர் அருமையாய் பயணிக்கிறது.... அடுத்த பகுதியை சீக்கரம் பதியுங்கள்!!!

ரசிகன் said...

//. என் கல்லூரி கால நண்பனின் உதவியுடன் மீராவின் காதலன் ஸ்ரீதரை தேடிவிடலாம் என திட்டம்.
//

ஹலோ.. என்ன எல்லாரும் என்னிய பாக்கறிங்க? நான் அவன் இல்லை:P

ரசிகன் said...

//காலையில் எழுந்ததும் பக்தி பாடல்களை முனங்கியபடி ஃபில்டர் காஃபி போடுவது........சினிமா பாடல்கள் முனுமுனுத்தபடி காலை டிபன் செய்வது.......நான் ஹாலில் இல்லை எனத்தெரிந்தால் சற்று சத்தமாகவே பாட்டு பாடுவது.......பால்கனியில் இருக்கும் ரோஜா செடியுடன் பேசுவது........ஜன்னல் கம்பிகள் வழியே கரம் நீட்டி மழைதுளிகளை தன் முகத்தில் தெரித்து சிலிர்த்துக்கொள்வது.......//

அடடா..:)

ரசிகன் said...

//மீராவின் மூச்சு.........மெது......மெதுவாக........??????//

ஹலோ.. இதப் படிச்சுப்புட்டு எங்க மூச்சு வேக வேகமாக.. ,என்னங்க திவ்யா மாம்ஸ்டர்,இப்டியா சஸ்பென்ஸ்ல விடறது? அடுத்த பதிவு வர லேட்லாம் ஆக்கப்டாது. ஆமா..:)

Ramya Ramani said...

அட என்னங்க திவ்யா இப்படியா முடிக்கறது? காதல் கதைகள் எழுதிய திவ்யா இனி மர்ம கதைகளையும் எழுத முயற்சியோ?? நல்லா போகுது வாழ்த்துக்கள்!

Sen22 said...

மூன்று பாகமும் அதே வேகம்..
அருமையானஉரைநடை....

கலக்கறீங்க திவ்யா....

Waiting for next part...


Senthil,
Bangalore

தமிழ் said...

/ஒரே வாரிசான
உங்கள் மகன்
தன் வாரிசை அங்கு
விதைத்துவிட்டு இங்கு
சலனமின்றி துயில்கிறான்!!
- ஸ்ரீதரின் தாயிடம் இதை கூறுவது எப்படி??/

/நீ
தாயானதை உணராமல்,
திருமதி ஆனதையும் அறியாமல்
தன் நினைவின்றி
எமனோடு நித்தம் போராடுகிறான்
உன் காதலன்!!
-மீராவிடம் கூறுவதெப்படி???/

அருமையான வரிகள்

/மீரா எங்கே?? என தேடினேன்......
அவள் அறையில் அவள் இல்லை.....
வழக்கம் போல்
என்கேயும் மயங்கி விழுந்து கிடக்கிறாளோ என
எல்லா இடமும் தேடினேன/

என்னை அறியாமல் சிரித்துவிட்டேன்

/மீராவின் மூச்சு.........
மெது......மெதுவாக........??????/

அடுத்த
அத்தியாயத்தை
ஆவலுடன் எதிர்ப்பார்க்கிறேன்

CVR said...

Interesting!
Nicely narrated...

eagerly waiting for the next part.. ;)

கோபிநாத் said...

திவ்யா..கலக்குறிங்க...சினிமா பார்த்த மாதிரி இருக்கு...;))

ஒவ்வொரு பகுதிக்கும் பொறுத்தமான (அந்த தாடி வச்ச சேரன் படம்) படங்கள் போட்டு மிக நன்றாக கொண்டு போறிங்க ;)

கோபிநாத் said...

\\மீராவின் மூச்சு.........மெது......மெதுவாக........??????

[தொடரும்..]\\

போன பகுதி மாதிரி ஒரு வாரம் போகுமா மூச்சு!!! ;)))

சீக்கிரம் போடுங்க ;)

Syam said...

asusual kalakkal narration...sema interesting ah potchu...takkunu thodarum potuteengalae... :-)

FunScribbler said...

கலக்கலா போகுது கதை. சூப்பர்!

//என் கண்களை சந்திக்கும் துணிவில்லாமல்//

சூப்பர் வர்ணனை.

ரொம்ப விறுவிறுப்பா போகுது. suspense தாங்கல.. சீக்கிரம் அடுத்த பகுதிய போடுங்க.

FunScribbler said...

மீனாவின் அன்றாட செயல்களை பட்டியலிட்டது ரொம்ப அழகாக இருக்கு.

அப்பரம் அவங்களுக்கிடையே இருக்கும் ஒரு வரி பேச்சு வார்த்தைகள் ரொம்ப ரொம்ப யதார்த்தம். இருவரின் கதாபாத்திரங்களை கண் முன் நிறுத்துறீங்க. great work. keep going!

FunScribbler said...

//எனக்கு மட்டுமாவது சொல்லுங்க ப்ளீஸ்....;))))))//

அப்பரம் நாங்கலாம்? சும்மாவா? :)) ஹிஹி..

FunScribbler said...

//ஹலோ.. என்ன எல்லாரும் என்னிய பாக்கறிங்க? நான் அவன் இல்லை:P//

ஹாஹா..actually படிக்கும்போது உங்க ஞாபகம்தான் வந்துச்சு. அவ்வ்வ்...:))

Unknown said...

திவ்யா
கதை மிகவும் நன்றாக இருக்கின்றது... உங்கள் எழுத்து நடை மிக நன்றாக உள்ளது...
தமிழ் பான்டில் மிக பொருமையுடன் எழுதுவதற்கு என் பாரட்டுகள்...

கருப்பன் (A) Sundar said...

பின்னிட்டீங்க, கதைல பல சிக்கலான மேட்டர்களை ரெம்ப லாவகமாக கையாண்டிருக்கிறீர்கள், பாராட்டுக்கள்!!

தினேஷ் said...

//மீராவை கண்ணீருடன் தான் பார்த்திருக்கிறேன், ஆனால் அவள் இப்போது கதறிய கதறல் என் இதயத்தை உடைத்தது!!//--

இது போன்ற வரிகள் கதையின் உணர்வுடன் மிகவும் ஓன்றி படிக்கவைக்கிறது திவ்யா... மிக அருமையான வார்த்தை கோர்வைகளை கொண்டு பின்னப்பட்ட கதை...

வாழ்த்துக்களுடன்,
தினேஷ்

Prabakar said...

கலக்கல் கதை ,, திவ்யா பேசாமல் நீங்கள் சினிமாவிற்கு கதை எழுதலாம் .. மிக அருமை .. ஒரு சிக்கலான கதை ஐ அருமை ஆக துளிகுட பிசகாமல் எடுத்து செல்லும் உங்கள் திறமைக்கு என் பாராட்டு ..

வாழ்த்துக்கள் ...

Divya said...

\\
நவீன் ப்ரகாஷ் said...
திவ்யா..:))))
பயங்கர சஸ்பென்ஸ் காட்சிகள் நிறைந்த மூன்றாம் பாகம்... அருமை.... :))))\\

வாங்க நவீன் ப்ரகாஷ்,

பாராட்டிற்கு நன்றி!!

Divya said...

\\ நவீன் ப்ரகாஷ் said...
திவ்யா.....
ஹீரோவின் மனநிலையை மிக யதார்த்தமாக காட்டி இருக்கிறீர்கள்... கொஞ்சம் இரக்கம் உள்ளவர்தான் போல..... :)))))\\


ஹீரோவுக்கு கொஞ்சம் மனிதாபிமானமும் இருக்கும் இல்லியா?
அவரது மனநிலையின் யதார்த்தை பாராட்டியதற்கு நன்றி!

Divya said...

\\ நவீன் ப்ரகாஷ் said...
சம்பவங்கள் நிறைந்த மூன்றாம் பாகம் அடுத்து என்ன என கேட்க தூண்டுகிறது திவ்யா... எப்பொழுது அடுத்த பாகம்..? எனக்கு மட்டுமாவது சொல்லுங்க ப்ளீஸ்....;))))))\\

அடுத்த பாகம் விரைவில் பதிவிடுவேன் நவீன்......அதுவரை காத்திருங்கள்!

உங்களுக்கு மட்டும் கதை சொல்ல வேண்டுமா?? ஹா ஹா ஹா!, அப்படி எல்லாம் தனிச்சலுகை இல்லீங்க கவிஞரே!!

Divya said...

\\ நிமல்/NiMaL said...
சற்று நீண்டாலும் திருப்பங்களுடன் சிறப்பாக உள்ளது 3ம் பாகம்.

வாழ்த்துக்கள்...!!!

அடுத்த பாகம் விரைவாக போடவும் :)\\

ஆமாம் நிமல்...இந்த பகுதி சற்று நீண்டுவிட்டது,
குறைக்க முயன்றும் சம்பவங்களை கூற வேண்டிய கட்டாயத்தால் நீண்டுதான் போனது!

வாழ்த்துக்களுக்கு நன்றி நிமல்!!

Divya said...

\
சத்யா said...
வாவ்! நெக்ஸ்ட் பகுதி இதற்கு முந்தைய பகுதிய விடவும் சூப்பரு.\\

நன்றி .

Divya said...

\\ சத்யா said...
நீ
தாயானதை உணராமல்,
திருமதி ஆனதையும் அறியாமல்
தன் நினைவின்றி
எமனோடு நித்தம் போராடுகிறான்
உன் காதலன்!!
-மீராவிடம் கூறுவதெப்படி???

-- உங்க் எழுத்து நடை, வழக்கம் போல அசத்தல்!
\\

நன்றி.

Divya said...

\\ சத்யா said...
கதைய ரொம்பவே சுவாரஸ்யமா நகர்த்தறீங்க! இந்த பகுதி இறுதியிலும் முடிச்சா! சீக்கிரம் அடுத்த பகுதி போடுங்க திவ்யா! போன முறை மாத்ரி இவ்ளோ நாழி விட வேண்டாம்.\\

விரைவில் பதிவிட முயற்சிக்கிறேன்.

Divya said...

\\ எழில்பாரதி said...
திவ்யா தொடர் அருமையாய் பயணிக்கிறது.... அடுத்த பகுதியை சீக்கரம் பதியுங்கள்!!!\\

வாங்க எழில்பாரதி!

வருகைக்கும் உற்சாகமளிக்கும் பின்னூட்டதிற்கும் நன்றி!!

Divya said...

\\ ரசிகன் said...
//காலையில் எழுந்ததும் பக்தி பாடல்களை முனங்கியபடி ஃபில்டர் காஃபி போடுவது........சினிமா பாடல்கள் முனுமுனுத்தபடி காலை டிபன் செய்வது.......நான் ஹாலில் இல்லை எனத்தெரிந்தால் சற்று சத்தமாகவே பாட்டு பாடுவது.......பால்கனியில் இருக்கும் ரோஜா செடியுடன் பேசுவது........ஜன்னல் கம்பிகள் வழியே கரம் நீட்டி மழைதுளிகளை தன் முகத்தில் தெரித்து சிலிர்த்துக்கொள்வது.......//

அடடா..:)\\

:))

Divya said...

\\ ரசிகன் said...
//. என் கல்லூரி கால நண்பனின் உதவியுடன் மீராவின் காதலன் ஸ்ரீதரை தேடிவிடலாம் என திட்டம்.
//

ஹலோ.. என்ன எல்லாரும் என்னிய பாக்கறிங்க? நான் அவன் இல்லை:P\\

நீங்களே உங்களை காட்டிக்கொடுத்துடுவீங்க போலிருக்கு ரசிகன்!!

Divya said...

\\ ரசிகன் said...
//மீராவின் மூச்சு.........மெது......மெதுவாக........??????//

ஹலோ.. இதப் படிச்சுப்புட்டு எங்க மூச்சு வேக வேகமாக.. ,என்னங்க திவ்யா மாம்ஸ்டர்,இப்டியா சஸ்பென்ஸ்ல விடறது? அடுத்த பதிவு வர லேட்லாம் ஆக்கப்டாது. ஆமா..:)\\

அடுத்த பகுதி சீக்கிரம் பதிவிடுகிறேன் ரசிகன்!

வருகைக்கும் பின்னூட்டதிற்கும் நன்றி!!

ஜி said...

Neththu naan potta commenta Irutadippu seitha Divyaavai Naan vanmaiyaaga Kandikkiren

Praveena said...

திவ்யா,

கதாபாத்திரங்களின் மனநிலையை எப்படி இவ்வளவு அழகாக வெளிப்படுத்துகிறீர்கள்,
உங்கள் எழுத்தின் மேல் பொறாமை பட வைக்கிறீர்கள் ஒவ்வொரு முறையும்:))

பொருத்தமான பட தேர்வுகளுக்கு உங்களை தனியாக பாராட்டியே ஆக வேண்டும்,திரைப்படம் பார்க்கும் உணர்வை தருகின்றன அவை.

வழக்கம்போல் அருமையான நடை, எதிர்பார்பை தூண்டும் சஸ்பன்ஸோடு முடித்திருக்க்கிறீர்கள் இந்த பகுதியும் , பாராட்டுக்கள் திவ்யா:))

'நவிரன்' சதீஷ் - 'Naveran' Sathish said...

interesting and different!! awaiting next part :))

ஸ்ரீ said...

ரொம்ப நல்லா இருக்கு கதை :)

தமிழன்-கறுப்பி... said...

திவ்யா வந்துட்டாங்க...:)

தமிழன்-கறுப்பி... said...

மீராவும் வந்துட்டாங்க....

தமிழன்-கறுப்பி... said...

கால் கதை தான்னு சொன்னேன்தானே...:)

தமிழன்-கறுப்பி... said...

உரை நடைகள் நன்று...

தமிழன்-கறுப்பி... said...

எப்படி திவ்யா இப்படி எல்லாம சரளமாக எழுத வருகிறது உங்களுக்கு
good ...

தமிழன்-கறுப்பி... said...

அடுத்த பகுதிஅவசரப்படாம எழுதுங்க...

உங்களால இன்னும் நல்லா இந்த அத்தியாயத்தை கொடுத்திருக்க முடியும்...

அடுத்தடுத்த பகுதிகளில் நீங்கள் நிறைய எழுத வேண்டும்....

தமிழன்-கறுப்பி... said...

////காலையில் எழுந்ததும் பக்தி பாடல்களை முனங்கியபடி ஃபில்டர் காஃபி போடுவது........சினிமா பாடல்கள் முனுமுனுத்தபடி காலை டிபன் செய்வது.......நான் ஹாலில் இல்லை எனத்தெரிந்தால் சற்று சத்தமாகவே பாட்டு பாடுவது.......பால்கனியில் இருக்கும் ரோஜா செடியுடன் பேசுவது........ஜன்னல் கம்பிகள் வழியே கரம் நீட்டி மழைதுளிகளை தன் முகத்தில் தெரித்து சிலிர்த்துக்கொள்வது.......இப்படி அவளது நடவடிக்கைகள் எனக்குள் சேமிக்க ஆரம்பித்தன!!///

அட அட அடடடா...

(திவ்யாவின் மனது...)

தமிழன்-கறுப்பி... said...

///வழக்கம் போல் என்கேயும் மயங்கி விழுந்து கிடக்கிறாளோ என எல்லா இடமும் தேடினேன்///

என்ன இப்படி சொல்லிட்டிங்க...:)

தமிழன்-கறுப்பி... said...

////இவ்வளவு பதற்றதுடன் நான் என் காரை இதுவரை ஓட்டினதில்லை.

ஏன் இந்த பரபரப்பு.......ஏன் எனக்கு இப்படி டென்ஷன் ஆகிறது....விடையளிக்க முடியாத கேள்விகளுடன் ஆஸ்பத்திரியை அடைந்தேன்.////

இன்னுமா புரியலை...

தமிழன்-கறுப்பி... said...

///பிறந்து சில மணிதுளிகளே ஆன குழந்தை என் கையில், ஸ்பரிசத்தில் மனது குளிர்ந்தது.///

ஒரு தனி பாராட்டு இந்த வரிகளை எழுதியதற்கு.

தமிழன்-கறுப்பி... said...

/////மீராவின் மூச்சு.......மெது......மெதுவாக........??????////

ஆஹா... இன்னொரு சஸ்பென்சு :)!

(இதே வேலையாப்போச்சு...)

தேன்மொழி said...

muthal paathi la veru sila padangalin saayal therintha maathiri oru feel , aana second paathi arumai ...

M.Rishan Shareef said...

வாவ்...பொருத்தமான படங்களோட அழகான கதை திவ்யா..
அடுத்த பகுதி எப்பொழுது?
ஆவலுடன் காத்திருக்கிறேன் !

தமிழன்-கறுப்பி... said...

நான்தான் னொன்னேன்...

///கால் கதை தான்னு சொன்னேன்தானே...:)///


காதல் கதைதான்னு சொன்னேன் தானே...:)

Divya said...

\\ Ramya Ramani said...
அட என்னங்க திவ்யா இப்படியா முடிக்கறது? காதல் கதைகள் எழுதிய திவ்யா இனி மர்ம கதைகளையும் எழுத முயற்சியோ?? நல்லா போகுது வாழ்த்துக்கள்!\\

அட என்ன ரம்யா....ஒரு சஸ்பன்ஸோட தொடரை முடிச்சாதானே ஒரு திரில் இருக்கும்!!
மர்ம கதை எல்லாம் எழுத ஆரம்பிக்கலீங்க ரம்யா!!

வாழ்த்துக்களுக்கு நன்றி!!

Divya said...

\\ Sen22 said...
மூன்று பாகமும் அதே வேகம்..
அருமையானஉரைநடை....

கலக்கறீங்க திவ்யா....

Waiting for next part...


Senthil,
Bangalore\

வாங்க செந்தில்,

தொடர்ந்து உங்களை போன்ற நண்பர்கள் அள்ளித்தரும் உற்சாகம் தான் இதற்கெல்லாம் காரணம்!

மிக்க நன்ரி செந்தில்!!!

Divya said...

\\ திகழ்மிளிர் said...
/ஒரே வாரிசான
உங்கள் மகன்
தன் வாரிசை அங்கு
விதைத்துவிட்டு இங்கு
சலனமின்றி துயில்கிறான்!!
- ஸ்ரீதரின் தாயிடம் இதை கூறுவது எப்படி??/

/நீ
தாயானதை உணராமல்,
திருமதி ஆனதையும் அறியாமல்
தன் நினைவின்றி
எமனோடு நித்தம் போராடுகிறான்
உன் காதலன்!!
-மீராவிடம் கூறுவதெப்படி???/

அருமையான வரிகள்

/மீரா எங்கே?? என தேடினேன்......
அவள் அறையில் அவள் இல்லை.....
வழக்கம் போல்
என்கேயும் மயங்கி விழுந்து கிடக்கிறாளோ என
எல்லா இடமும் தேடினேன/

என்னை அறியாமல் சிரித்துவிட்டேன்

/மீராவின் மூச்சு.........
மெது......மெதுவாக........??????/

அடுத்த
அத்தியாயத்தை
ஆவலுடன் எதிர்ப்பார்க்கிறேன்\\

அட.....சிரிச்சுட்டீங்களா திகழ் மிளிர்,அடிக்கடி மீரா காணாமல் போய் ஹீரோ அவளை தேடுவது போல் வந்ததும்.....அப்படி எழுதினேன், அது கொஞ்சம் நகைச்சுவையாக ஆகிவிட்டது போலிருக்கிறது!!

அடுத்த பகுதி விரைவில்....

வருகைக்கு மிக்க நன்றி திகழ்மிளிர்!

Divya said...

\\ CVR said...
Interesting!
Nicely narrated...

eagerly waiting for the next part.. ;)\\

நன்றி...நன்றி.....மிக்க நன்றி சிவிஆர்!!

Divya said...

\\ கோபிநாத் said...
திவ்யா..கலக்குறிங்க...சினிமா பார்த்த மாதிரி இருக்கு...;))

ஒவ்வொரு பகுதிக்கும் பொறுத்தமான (அந்த தாடி வச்ச சேரன் படம்) படங்கள் போட்டு மிக நன்றாக கொண்டு போறிங்க ;)\\

படங்கள் பொறுத்தமாக இருக்கிறதா கோபி.....அப்படி அமைந்தது ஆச்சரியமே!!

பாராட்டிற்கு நன்றி கோபி!!

Divya said...

\\ கோபிநாத் said...
\\மீராவின் மூச்சு.........மெது......மெதுவாக........??????

[தொடரும்..]\\

போன பகுதி மாதிரி ஒரு வாரம் போகுமா மூச்சு!!! ;)))

சீக்கிரம் போடுங்க ;)\\

போன தடவை மாதிரி இல்லாமல் .....சீக்கிரத்தில் அடுத்த பகுதி வெளிவரும்!!

Divya said...

\\ Syam said...
asusual kalakkal narration...sema interesting ah potchu...takkunu thodarum potuteengalae... :-)\\

ஆஹா......டக்குன்னு தொடரும் போட்டுட்டேனா??
இந்த கிண்டல் தான வேணாம்ங்கிறது, இந்த பகுதி சற்று நீண்டு விட்டது என நான் ரொம்ப யோசிச்சுட்டு இருந்தேன், நீங்க இப்படி சொல்றீங்களே நாட்டாமை????

Divya said...

\\ Thamizhmaangani said...
கலக்கலா போகுது கதை. சூப்பர்!

//என் கண்களை சந்திக்கும் துணிவில்லாமல்//

சூப்பர் வர்ணனை.

ரொம்ப விறுவிறுப்பா போகுது. suspense தாங்கல.. சீக்கிரம் அடுத்த பகுதிய போடுங்க.\\

கரெக்ட்டா பாயிண்ட் பண்ணி விமிர்சிக்கும் என் அருமை தோழி காயத்திரிக்கு ஒரு ஸ்பெஷல் தாங்க்ஸ்!!

Divya said...

\\ Thamizhmaangani said...
மீனாவின் அன்றாட செயல்களை பட்டியலிட்டது ரொம்ப அழகாக இருக்கு.

அப்பரம் அவங்களுக்கிடையே இருக்கும் ஒரு வரி பேச்சு வார்த்தைகள் ரொம்ப ரொம்ப யதார்த்தம். இருவரின் கதாபாத்திரங்களை கண் முன் நிறுத்துறீங்க. great work. keep going!\\

உங்கள் மனம்திறந்த விமர்சனம் மிகுந்த உற்சாகத்தை அள்ளித்தருகிறது தமிழ்மாங்கனி!! நன்றி!!

Divya said...

\\ Thamizhmaangani said...
//எனக்கு மட்டுமாவது சொல்லுங்க ப்ளீஸ்....;))))))//

அப்பரம் நாங்கலாம்? சும்மாவா? :)) ஹிஹி..\\

அதானே.....!!!

Divya said...

\\ Thamizhmaangani said...
//ஹலோ.. என்ன எல்லாரும் என்னிய பாக்கறிங்க? நான் அவன் இல்லை:P//

ஹாஹா..actually படிக்கும்போது உங்க ஞாபகம்தான் வந்துச்சு. அவ்வ்வ்...:))\\

:))))

Divya said...

\\ Priya said...
திவ்யா
கதை மிகவும் நன்றாக இருக்கின்றது... உங்கள் எழுத்து நடை மிக நன்றாக உள்ளது...
தமிழ் பான்டில் மிக பொருமையுடன் எழுதுவதற்கு என் பாரட்டுகள்...\\

ஆஹா...ப்ரியா தமிழில் டைப் பண்ண கத்துக்கிட்டீங்களா, ரொம்ப மகிழ்ச்சி!!

உங்கள் பாராட்டிற்கு நன்றி ப்ரியா!!

Divya said...

\\ கருப்பன்/Karuppan said...
பின்னிட்டீங்க, கதைல பல சிக்கலான மேட்டர்களை ரெம்ப லாவகமாக கையாண்டிருக்கிறீர்கள், பாராட்டுக்கள்!!\\

வாங்க கருப்பன்,

உங்கள் மனமார்ந்த பாராட்டிற்கு நன்றி!!

Divya said...

\\தினேஷ் said...
//மீராவை கண்ணீருடன் தான் பார்த்திருக்கிறேன், ஆனால் அவள் இப்போது கதறிய கதறல் என் இதயத்தை உடைத்தது!!//--

இது போன்ற வரிகள் கதையின் உணர்வுடன் மிகவும் ஓன்றி படிக்கவைக்கிறது திவ்யா... மிக அருமையான வார்த்தை கோர்வைகளை கொண்டு பின்னப்பட்ட கதை...

வாழ்த்துக்களுடன்,
தினேஷ்\\

வாங்க தினேஷ்,

வரிகளை குறிப்பிட்டு உங்கள் கருத்தினை கூறியமைக்கு மிக்க நன்றி!!

உங்கள் வாழ்த்துக்கள் உற்சாகமளித்தது தினேஷ்!!

Divya said...

\\Prabakar Samiyappan said...
கலக்கல் கதை ,, திவ்யா பேசாமல் நீங்கள் சினிமாவிற்கு கதை எழுதலாம் .. மிக அருமை .. ஒரு சிக்கலான கதை ஐ அருமை ஆக துளிகுட பிசகாமல் எடுத்து செல்லும் உங்கள் திறமைக்கு என் பாராட்டு ..

வாழ்த்துக்கள் ...\\

வாங்க ப்ரபாஹர்,

தமிழில் பின்னூட்டம்.......மகிழ்ச்சி!

சிக்கலான கதைதான், கையாள்வதற்கு சிரமாக தான் உள்ளது .

சினிமாவிற்கு கதை எழுதுற அளவிற்கெல்லாம் நான் இன்னும் எழுதலீங்க,
எனினும் உங்கள் பாராட்டிற்கும் கருத்திற்கும் நன்றி!!

Divya said...

\\ ஜி said...
Neththu naan potta commenta Irutadippu seitha Divyaavai Naan vanmaiyaaga Kandikkiren\\

no tensions jee,
unga comment varaleenga,
comment moderation kooda illa en post ku,
so neenga 'vera' engayo comment potutu.....ingey vanthu thedina epdi???

Divya said...

\\ Praveena Jennifer Jacob said...
திவ்யா,

கதாபாத்திரங்களின் மனநிலையை எப்படி இவ்வளவு அழகாக வெளிப்படுத்துகிறீர்கள்,
உங்கள் எழுத்தின் மேல் பொறாமை பட வைக்கிறீர்கள் ஒவ்வொரு முறையும்:))

பொருத்தமான பட தேர்வுகளுக்கு உங்களை தனியாக பாராட்டியே ஆக வேண்டும்,திரைப்படம் பார்க்கும் உணர்வை தருகின்றன அவை.

வழக்கம்போல் அருமையான நடை, எதிர்பார்பை தூண்டும் சஸ்பன்ஸோடு முடித்திருக்க்கிறீர்கள் இந்த பகுதியும் , பாராட்டுக்கள் திவ்யா:))\\

வாங்க ப்ரவீனா,

உங்கள் விரிவான விமர்சனத்திற்கு நன்றி!!

Divya said...

\\ sathish said...
interesting and different!! awaiting next part :))\\

Thanks Sathish.

நிஜமா நல்லவன் said...

///மீராவின் மூச்சு.........மெது......மெதுவாக........??????///



அய்யோ மாஸ்டர் என்னாச்சு? இப்படி சஸ்பென்ஸ் வச்சிட்டீங்களே?

Anonymous said...

Unbelievable style of writing:))

Hv read few of your posts lately,cudnt resist myself from commenting you, keep going Divya.....you can do much more better, all the best :))))

BTW y dont you try to write diff theme of story other than love& marriage, hp u r capable in doing it, try it out Divya.

Praveen,
Bangalore.

Divya said...

\\ ஸ்ரீ said...
ரொம்ப நல்லா இருக்கு கதை :)\\

வாங்க ஸ்ரீ,
பாராட்டிற்கு நன்றி.

Divya said...

\\ தமிழன்... said...
கால் கதை தான்னு சொன்னேன்தானே...:)\\

அப்படியா...எப்போ சொன்னீங்க??

Divya said...

\\ தமிழன்... said...
உரை நடைகள் நன்று...
\\

நன்றி தமிழன்!!

Divya said...

\\ தமிழன்... said...
எப்படி திவ்யா இப்படி எல்லாம சரளமாக எழுத வருகிறது உங்களுக்கு
good ...\\

:)))

Divya said...

\\ தமிழன்... said...
அடுத்த பகுதிஅவசரப்படாம எழுதுங்க...

உங்களால இன்னும் நல்லா இந்த அத்தியாயத்தை கொடுத்திருக்க முடியும்...

அடுத்தடுத்த பகுதிகளில் நீங்கள் நிறைய எழுத வேண்டும்....\\

உங்கள் கருத்துக்களுக்கு நன்றி தமிழன்,
என் எழுத்தின் மீது தாங்கள் வைத்திருக்கும் எதிர்பார்ப்பு வியக்க வைத்தது!!

Divya said...

\\ தமிழன்... said...
////காலையில் எழுந்ததும் பக்தி பாடல்களை முனங்கியபடி ஃபில்டர் காஃபி போடுவது........சினிமா பாடல்கள் முனுமுனுத்தபடி காலை டிபன் செய்வது.......நான் ஹாலில் இல்லை எனத்தெரிந்தால் சற்று சத்தமாகவே பாட்டு பாடுவது.......பால்கனியில் இருக்கும் ரோஜா செடியுடன் பேசுவது........ஜன்னல் கம்பிகள் வழியே கரம் நீட்டி மழைதுளிகளை தன் முகத்தில் தெரித்து சிலிர்த்துக்கொள்வது.......இப்படி அவளது நடவடிக்கைகள் எனக்குள் சேமிக்க ஆரம்பித்தன!!///

அட அட அடடடா...

(திவ்யாவின் மனது...)\\

ஆஹா.......!!!

Divya said...

\\ தமிழன்... said...
///வழக்கம் போல் என்கேயும் மயங்கி விழுந்து கிடக்கிறாளோ என எல்லா இடமும் தேடினேன்///

என்ன இப்படி சொல்லிட்டிங்க...:)\\

அப்போ அப்போ மீரா காணாம போனா ....இப்படி தான மயங்கியிருப்பா, அதான் அப்படி நினைச்சுட்டார் ஹீரோ!!

Divya said...

\\ தமிழன்... said...
////இவ்வளவு பதற்றதுடன் நான் என் காரை இதுவரை ஓட்டினதில்லை.

ஏன் இந்த பரபரப்பு.......ஏன் எனக்கு இப்படி டென்ஷன் ஆகிறது....விடையளிக்க முடியாத கேள்விகளுடன் ஆஸ்பத்திரியை அடைந்தேன்.////

இன்னுமா புரியலை...\\

உங்களுக்கு என்ன புரிந்தது???

Divya said...

\\ தமிழன்... said...
///பிறந்து சில மணிதுளிகளே ஆன குழந்தை என் கையில், ஸ்பரிசத்தில் மனது குளிர்ந்தது.///

ஒரு தனி பாராட்டு இந்த வரிகளை எழுதியதற்கு.\\

ரொம்ப ரொம்ப நன்றி தமிழன்.....குறிப்பிட்டு இவ்வரிகளை பாராட்டியதற்கு!!

Divya said...

\\ தமிழன்... said...
/////மீராவின் மூச்சு.......மெது......மெதுவாக........??????////

ஆஹா... இன்னொரு சஸ்பென்சு :)!

(இதே வேலையாப்போச்சு...)\\

அட.......தொடர்கதைன்னா அப்படிதாங்க சஸ்பென்ஸ் இருக்கும்!!

Divya said...

\\ தேன்மொழி said...
muthal paathi la veru sila padangalin saayal therintha maathiri oru feel , aana second paathi arumai ...\\

வாங்க தேன்மொழி,

உங்கள் விமர்சனத்திற்கு ரொம்ப நன்றி!!

Divya said...

\\ எம்.ரிஷான் ஷெரீப் said...
வாவ்...பொருத்தமான படங்களோட அழகான கதை திவ்யா..
அடுத்த பகுதி எப்பொழுது?
ஆவலுடன் காத்திருக்கிறேன் !\\

வாங்க ரிஷான்,

என் வலைதளம் வந்தமைக்கு நன்றி!

அடுத்த பகுதி விரைவில்........

பொருத்தமான படங்கள் என குறிப்பிட்டு பாராட்டியதற்கு மற்றுமொரு நன்றி!!

Divya said...

\\ தமிழன்... said...
நான்தான் னொன்னேன்...

///கால் கதை தான்னு சொன்னேன்தானே...:)///


காதல் கதைதான்னு சொன்னேன் தானே...:)\\

எழுத்துப்பிழையை திருத்தம் செய்தீர்களோ????

ஒகே ஒகே,

உங்கள் யூகம் சரியா என அடுத்த பகுதியில் பார்க்கலாம்!!

Divya said...

\\ நிஜமா நல்லவன் said...
///மீராவின் மூச்சு.........மெது......மெதுவாக........??????///



அய்யோ மாஸ்டர் என்னாச்சு? இப்படி சஸ்பென்ஸ் வச்சிட்டீங்களே?\\

வாங்க நல்லவன்.......நிஜம்மா நல்லவன்!!

வருகைக்கு நன்றி!!

மாஸ்டர் யாரு.....எவங்களுக்கு என்னாச்சு???

Divya said...

\\ Anonymous said...
Unbelievable style of writing:))

Hv read few of your posts lately,cudnt resist myself from commenting you, keep going Divya.....you can do much more better, all the best :))))

BTW y dont you try to write diff theme of story other than love& marriage, hp u r capable in doing it, try it out Divya.

Praveen,
Bangalore.\\

ஹாய் ப்ரவீன்,

உங்கள் முதன் முறை பின்னூட்டதிற்கு நன்றி,

என் பதிவுகளை படித்து வருவது அறிந்து மிக்க மகிழ்ச்சி!

உங்கள் கருத்துக்களுக்கும், பாராட்டிற்கும் மிக்க நன்றி!!

வித்தியாசமான கண்ணோட்டங்களிலிலும் கதைகள் படைக்கு முயல்கிறேன்.

Udhayakumar said...

next part eppo?

புகழன் said...

த்ரில் நாவல் திவ்யாவுக்கு வாழ்த்துகள்.
மூன்றாம் பகுதியை நீங்கள் பதிவிட்டவுடனேயே படித்துவிட்டேன்.
தேர்வு நேரமாக இருந்ததால் எந்த வலைக்குள்ளும் சிக்கிவிடக்கூடாதென்று நெட் பக்கமே வரக்கூடாது என்று நினைத்திருந்தேன். ஆனால் சஸ்பென்ஸ் நிறைந்த இரண்டாம் பகுதியைப் படித்து விட்டு மூன்றாம் பகுதிக்காக காத்திருக்க வைத்துவிட்டீர்கள். தினமும் ஒரு நிமிடமாவது நெட்டில் நுழைந்து உங்கள் பதிவு வந்து விட்டதா என்று பார்த்து விடுவேன். அப்படித்தான். நீங்கள் பதிவிட்ட முதல் நாளே படித்தும் விட்டேன்.
இப்போது தேர்வு முடிந்து ரெம்பவே ரிலாக்ஸாக இருப்பதால் இந்தப் பின்னூட்டம்

விஷ்வாவுன் மீராவின் புனே நாட்கள் மௌன ராகம் படத்தை நினைவூட்டுகிறது.

//கண்களில் நீர் ததும்ப என்னை நன்றியோடு பார்த்து பேச முயன்றாள்....தன் இரு கரங்களையும் கூப்பி

"ந.....ன்....றி....."
//

இந்த வரிகளைப் படித்ததும் தொடர்முடிவடையப் போகிறது என்று நினைக்கத் தோன்றியது. ஆனால் நாங்கள் எதிர்பார்த்தவாரே மீண்டும் சஸ்பன்ஸ்....


சீக்கிரம் திவ்யா

ரெம்பவே காக்க வைக்கிறீர்கள்.
அதிக பட்சம் ஒரு வாரத்திற்குமேல் டைம் எடுத்துக் கொள்ள வேண்டாம்.

விரைவில் அடுத்த பகுதியை எதிர்பார்த்து
மனதோடு மனதாய்
உங்கள் புகழன்

Divya said...

\Udhayakumar said...
next part eppo?\\

hi Udhay,
glad to c ur comment after a very long time......thanks!!

Will post the next part very soon!!

Divya said...

\ புகழன் said...
த்ரில் நாவல் திவ்யாவுக்கு வாழ்த்துகள்.
மூன்றாம் பகுதியை நீங்கள் பதிவிட்டவுடனேயே படித்துவிட்டேன்.
தேர்வு நேரமாக இருந்ததால் எந்த வலைக்குள்ளும் சிக்கிவிடக்கூடாதென்று நெட் பக்கமே வரக்கூடாது என்று நினைத்திருந்தேன். ஆனால் சஸ்பென்ஸ் நிறைந்த இரண்டாம் பகுதியைப் படித்து விட்டு மூன்றாம் பகுதிக்காக காத்திருக்க வைத்துவிட்டீர்கள். தினமும் ஒரு நிமிடமாவது நெட்டில் நுழைந்து உங்கள் பதிவு வந்து விட்டதா என்று பார்த்து விடுவேன். அப்படித்தான். நீங்கள் பதிவிட்ட முதல் நாளே படித்தும் விட்டேன்.
இப்போது தேர்வு முடிந்து ரெம்பவே ரிலாக்ஸாக இருப்பதால் இந்தப் பின்னூட்டம்\\

தேர்வு நேரத்திலும் என் பதிவினை ஆவலுடன் படித்தமைக்கு மிக்க நன்றி புகழன்!!!





\\விஷ்வாவுன் மீராவின் புனே நாட்கள் மௌன ராகம் படத்தை நினைவூட்டுகிறது.\\


அப்படியா???





//கண்களில் நீர் ததும்ப என்னை நன்றியோடு பார்த்து பேச முயன்றாள்....தன் இரு கரங்களையும் கூப்பி

"ந.....ன்....றி....."
//

இந்த வரிகளைப் படித்ததும் தொடர்முடிவடையப் போகிறது என்று நினைக்கத் தோன்றியது. ஆனால் நாங்கள் எதிர்பார்த்தவாரே மீண்டும் சஸ்பன்ஸ்....\\


இதற்கு மேலும் தொடரை இழுக்க வேண்டாம் என தோன்றியதோ.....இவ்வரிகளை படித்ததும்??






\\\சீக்கிரம் திவ்யா

ரெம்பவே காக்க வைக்கிறீர்கள்.
அதிக பட்சம் ஒரு வாரத்திற்குமேல் டைம் எடுத்துக் கொள்ள வேண்டாம்.

விரைவில் அடுத்த பகுதியை எதிர்பார்த்து
மனதோடு மனதாய்
உங்கள் புகழன்
\\\\



புகழன்,
உங்கள் விரிவான விமர்சனத்திற்கும்....கருத்துக்களுக்கும் நன்றி!

தேர்வு முடிந்தபின் நேரம் எடுத்து பின்னூட்டமிட்டதை பாராட்டுகிறேன், அதற்கு ஒரு ஸ்பெஷல் தாங்க்ஸ்!!

விரைவில் அடுத்த பகுதி பதிவிடுகிறேன்!!

தமிழன்-கறுப்பி... said...

நாங்களும் இருக்குறோமுங்க...

தமிழன்-கறுப்பி... said...

காதல் தொடர் புகழ் திவ்யா சொன்னது...


////\ தமிழன்... said...
/////மீராவின் மூச்சு.......மெது......மெதுவாக........??????////

ஆஹா... இன்னொரு சஸ்பென்சு :)!

(இதே வேலையாப்போச்சு...)\\

அட.......தொடர்கதைன்னா அப்படிதாங்க சஸ்பென்ஸ் இருக்கும்!!////

விளம்பர இடைவேளை வைக்கமாட்டிங்களோ அதாங்க கொமர்ஷியல் பிறேக்கு....

தமிழன்-கறுப்பி... said...

"எனக்கென ஏற்கனவே பிறந்தவள் இவளோ" தொடர் எத்தனை பகுதிகளாக வரும்...அது மனசுக்குள் மத்தாப்பு வலைப்பூவின் நிர்வாகியால் அறிவிக்கப்பட்ட பரிசுக்குரிய கேள்வி...

:):):)

தமிழன்-கறுப்பி... said...

காதல் தொடர் புகழ் திவ்யா சொன்னது...

////\ தமிழன்... said...
////இவ்வளவு பதற்றதுடன் நான் என் காரை இதுவரை ஓட்டினதில்லை.

ஏன் இந்த பரபரப்பு.......ஏன் எனக்கு இப்படி டென்ஷன் ஆகிறது....விடையளிக்க முடியாத கேள்விகளுடன் ஆஸ்பத்திரியை அடைந்தேன்.////

இன்னுமா புரியலை...\\

உங்களுக்கு என்ன புரிந்தது???///


இத நான் வேற சொல்லணுமோ...

தமிழன்-கறுப்பி... said...

தடங்கலுக்கு வருந்துகிறோம் எனக்கென "ஏற்கனவே பிறந்தவள் இவளோ" தொடர் வெகுவிரைவில் பதியப்படும்...
:):):)

தமிழன்-கறுப்பி... said...

நிதானமா எழுதுங்க திவ்யா...
அடிக்கடி நம்ம பக்கமும் வாங்க...

Syam said...

101

moi vechaachu...next part pls...:-)

Anonymous said...

aniyayamana kathiaya unga nyayamana screenplayala nalla nagathiteenga...herova kathi mela nadakka vitrukeenga..konjam marinalum villain role aidum..seran semma apt :) srikanthum apt for that mba paiyan role..ipo sneha foto oknu thonuthu :)

Divya said...

\\தமிழன்... said...
காதல் தொடர் புகழ் திவ்யா சொன்னது...


////\ தமிழன்... said...
/////மீராவின் மூச்சு.......மெது......மெதுவாக........??????////

ஆஹா... இன்னொரு சஸ்பென்சு :)!

(இதே வேலையாப்போச்சு...)\\

அட.......தொடர்கதைன்னா அப்படிதாங்க சஸ்பென்ஸ் இருக்கும்!!////

விளம்பர இடைவேளை வைக்கமாட்டிங்களோ அதாங்க கொமர்ஷியல் பிறேக்கு....\\


இந்த கிண்டல்தான வேணாம்கிறது((-:

Divya said...

\\தமிழன்... said...
காதல் தொடர் புகழ் திவ்யா சொன்னது...

////\ தமிழன்... said...
////இவ்வளவு பதற்றதுடன் நான் என் காரை இதுவரை ஓட்டினதில்லை.

ஏன் இந்த பரபரப்பு.......ஏன் எனக்கு இப்படி டென்ஷன் ஆகிறது....விடையளிக்க முடியாத கேள்விகளுடன் ஆஸ்பத்திரியை அடைந்தேன்.////

இன்னுமா புரியலை...\\

உங்களுக்கு என்ன புரிந்தது???///


இத நான் வேற சொல்லணுமோ...\\

:))) வேணாம்....சொல்லவே வேணாம், உங்களுக்கு புரிஞ்சதே போதும்!!

Divya said...

\\தமிழன்... said...
தடங்கலுக்கு வருந்துகிறோம் எனக்கென "ஏற்கனவே பிறந்தவள் இவளோ" தொடர் வெகுவிரைவில் பதியப்படும்...
:):):)\\

கொடுத்த காசுக்கு மேல விளம்பரப்படுத்திறீங்களே தமிழன்......!!!!

Divya said...

\ தமிழன்... said...
நிதானமா எழுதுங்க திவ்யா...
அடிக்கடி நம்ம பக்கமும் வாங்க...\\

ஸாரிங்க தமிழன்..கொஞ்சம் பிஸியாக இருந்துட்டேன்,
நிச்சயம் உங்கள் வலைத்தளம் வருகிறேன்!!

Divya said...

\\ Syam said...
101

moi vechaachu...next part pls...:-)\\

ரொம்ப நாளைக்கப்புறம் நாட்டாமை 101 மொய் வைச்சிருக்கிறீங்க....தாங்க்ஸ் நாட்டாமை!!!

அடுத்த பகுதி சீக்கிரம் பதிவிடுகிறேன்!!

Divya said...

\\Anonymous said...
aniyayamana kathiaya unga nyayamana screenplayala nalla nagathiteenga...herova kathi mela nadakka vitrukeenga..konjam marinalum villain role aidum..seran semma apt :) srikanthum apt for that mba paiyan role..ipo sneha foto oknu thonuthu :)\\

வாங்க அனானி,

சினிமா விமர்சன பாணியிலேயே ரொம்ப அழகா பின்னூட்டம் போட்டிருக்கிறீங்க , மிக்க நன்றி!

கதாபாத்திரங்களுக்கான புகைபடத்தேர்வுகளை குறிப்பிட்டதிற்கு ஒரு ஸ்பெஷல் தாங்க்ஸ்!!

G.Ragavan said...

கதையச் சோகமா முடிச்சீங்கன்னா.. அமெரிக்காவுக்கே ஆட்டோ வரும்னு இப்பவே எச்சரிக்கிறேன் :)

கானகம் said...

உங்களின் இந்த தொடர் கதையை படித்தேன். மிக மிக அருமை. எப்படி இவ்வளவு சரளமாக எழுத வருகிறது.?? ஒரு தமிழ் சினிமாவின் கதையை இவ்வளவு ஈசியாக எழுதிவிட்டீர்கள். தற்செயலாகத்தான் உங்கள் வலைப்பதிவை பார்க்க நேர்ந்தது. உடனே ரீடரில் சேர்த்துக் கொண்டு விட்டேன்.. வாழ்த்துக்கள் அன்புடன் ஜெயக்குமார்

கானகம் said...

அதே போல படங்கள் அனைத்தும் மிகப் பொருத்தமாய் கதை நகரும் விதத்திற்கு ஏற்றாற்போல் இட்டிருந்தீர்கள். அதற்கு தனியாக ஒரு வாழ்த்து.