January 22, 2008
லவ் பண்றீங்களா???
[படித்ததில் பிடித்திருந்தது......இங்கே பெண்களின் பார்வைக்கு!]
நீங்கள் பழகிக்கொண்டிருக்கும் நபர் உங்களிடம் ஐ லவ் யூ சொல்லும் நாள் வெகு தூரத்தில் இல்லையா?
நீங்களும் அதை ஆவலுடன் எதிர் பார்த்துக்கொண்டிருக்கிறீர்களா?
காதலிக்கத் தொடங்கும் முன் உங்களுக்கு சில முன்னெச்சரிக்கை ஆலோசனைகள்.
நண்பராக இருக்கும் வரை ஆண்களது குணம் வேறாக இருக்கும். காதலராக மாறியதும் குணமும் மாறும். எனவே அவர் நண்பராக இருக்கும் போதான குணங்களைக் கண்டு நல்லவர் என அவசரப்பட்டு மனதை பறிகொடுத்து விடாதீர்கள்.
அவரைக் காதலராக ஏற்கலாம் என்று உங்கள் மனப்பட்சி சொல்லி விட்டதா? ஆசையை வளர்த்துக் கொள்வதற்கு முன்பாக அவரது குடும்ப விவரங்களைத் தெரிந்து கொள்ளுங்கள்.காதல் திருமணத்தைப்பற்றி அவரது குடும்பத்தாரின் அபிப்ராயம் என்ன என்பதையும் மறைமுகமாகக் கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள்.
உங்களவரை சந்திக்கச் செல்லும்போது மேக்கப், கவர்ச்சியான உடை என எக்ஸ்ட்ரா பிட்டிங்குகளை தவிர்த்து விடுங்கள். இயல்பாகவே இருங்கள்.
உங்கள் காதலர் நம்பர் ஒன் நல்ல நண்பராகவே இருக்கட்டும், ஆனாலும் எந்தச் சூழ்நிலையிலும் அவர் தனியே அழைக்கும் எந்த இடங்களுக்கும் தனியே போகாதீர்கள்.
தனிமையும், இளமையும் எப்பேர்ப்பட்ட நல்லவரையும் மோசமாக்கலாம், ஜாக்கிரதை!.
Subscribe to:
Post Comments (Atom)
111 comments:
ஆஹா அம்மணி திவ்யா ஆரம்பிச்சுட்டீயளா ...?? :))))
//காதலிக்கத் தொடங்கும் முன் உங்களுக்கு சில முன்னெச்சரிக்கை ஆலோசனைகள்.//
ஹஹஹஹஹ அம்மணி இதென்னாங்க காதல் என்ன உங்ககிட்டே சொல்லிகிட்டு May I come In? அப்படீன்னு கேட்டுகிட்டு வாராப்பல சொல்லி இருக்கீய...?? :))))
இல்லீங்கோ.... அது சுனாமி மாதிரி.. சொல்லாம கொள்ளாம வந்து வாரிட்டு பூடும்...:))))
//நண்பராக இருக்கும் வரை ஆண்களது குணம் வேறாக இருக்கும். காதலராக மாறியதும் குணமும் மாறும்.//
இதென்னாங்க குணம்???... காதலரா மாறும்போது கொஞ்சம் கொஞ்சிகிட்டு இருப்பாரு அதுக்கு முன்ன நண்பனா கெஞ்சிகிட்டு இருப்பாரு அதைய தானே சொல்லுறீய...? ;))))
// எனவே அவர் நண்பராக இருக்கும் போதான குணங்களைக் கண்டு நல்லவர் என அவசரப்பட்டு மனதை பறிகொடுத்து விடாதீர்கள்.//
ஹஹஹஹ திவ்யா அம்மணி
காதல் ஒரு பிக்பாக்கெட் திருடன் மாதிரிங்கோ.... உங்க மனசை அப்படியே உங்களுக்கே தெரியாம லவட்டிகிட்டு போய்டும்... இதிலே அவசரப்பட்டு அனுபவப்பட்டு எல்லாம் யாரும் பறிகொடுக்கறது இல்லீங்கோ... :)))))))
என்ன ஒத்துக்குறீயளா...??
இப்போதைக்கு அட்டென்டன்ஸ்
\\ ஜொள்ளுப்பாண்டி said...
ஆஹா அம்மணி திவ்யா ஆரம்பிச்சுட்டீயளா ...?? :))))\\
வாங்க பாண்டியண்ணே!!
முதல் attendence போட்டுடீங்க, நன்றி!!
//அவரைக் காதலராக ஏற்கலாம் என்று உங்கள் மனப்பட்சி சொல்லி விட்டதா? ஆசையை வளர்த்துக் கொள்வதற்கு முன்பாக...///
ஹஹஹஹ அம்மணி திவ்யா
அதான் பட்சி சொல்லிடுச்சில்ல...??? அப்புறம் என்ன வளர்த்துக்கறதுக்கு முன்ன.... பின்ன .... ன்னு கிமு கிபி ரேஞ்சுக்கு ஒரு 'பிட்'டு?? மனப்பட்சி சொல்லிடுச்சுன்னா அப்புறம் அப்பீல் ஏதுங்கம்மணி..?? ;)))))
\\ ஜொள்ளுப்பாண்டி said...
//காதலிக்கத் தொடங்கும் முன் உங்களுக்கு சில முன்னெச்சரிக்கை ஆலோசனைகள்.//
ஹஹஹஹஹ அம்மணி இதென்னாங்க காதல் என்ன உங்ககிட்டே சொல்லிகிட்டு May I come In? அப்படீன்னு கேட்டுகிட்டு வாராப்பல சொல்லி இருக்கீய...?? :))))
இல்லீங்கோ.... அது சுனாமி மாதிரி.. சொல்லாம கொள்ளாம வந்து வாரிட்டு பூடும்...:))))\\
சுனாமிக்கு வேணா முன்னெச்சரிக்கை இல்லாமல் இருக்கலாம், ஆனால்.....காதல் வருவதுக்கு முன் நிச்சயம் தெளிவாக தெரியும்,
'கண்டதும் காதல்' போன்ற இனக்கவர்ச்சி காதலுக்கு வேணா சுனாமி எஃப்க்ட் இருக்கும்,
இந்த பகுதியில் சொல்லியிருக்கும் காதல், நன்கு தெரிந்த, பழகிய நண்பனின் காதலை ஏற்கும் முன் தெரிந்துக்கொள்ள வேண்டியவை.
காதல் எப்படி வரும்? 'may I come in?' அப்படின்னு கேட்டுட்டு வருமா என்பதல்ல முக்கியம்,
காதலிக்க ஆரம்பிக்கும் முன் தெரிந்துக்கொள்ள வேண்டிய/ புரிந்துக் கொள்ள வேண்டிய விஷயங்களை தான் பதிவில் குறிப்பிட்டிருக்கிறேனுங்க பாண்டிண்ணா!!
புரியுதுங்களாண்ணா??
//ஜொள்ளுப்பாண்டி said...
ஹஹஹஹஹ அம்மணி இதென்னாங்க காதல் என்ன உங்ககிட்டே சொல்லிகிட்டு May I come In? அப்படீன்னு கேட்டுகிட்டு வாராப்பல சொல்லி இருக்கீய...?? :))))
இல்லீங்கோ.... அது சுனாமி மாதிரி.. சொல்லாம கொள்ளாம வந்து வாரிட்டு பூடும்...:)))) //
கரீட்டா சொன்னீங்க பாண்டிணே.
ஏனுங்க திவ்யா அதென்ன May I come In? கேட்டா வரும்.
\\ ஜொள்ளுப்பாண்டி said...
//நண்பராக இருக்கும் வரை ஆண்களது குணம் வேறாக இருக்கும். காதலராக மாறியதும் குணமும் மாறும்.//
இதென்னாங்க குணம்???... காதலரா மாறும்போது கொஞ்சம் கொஞ்சிகிட்டு இருப்பாரு அதுக்கு முன்ன நண்பனா கெஞ்சிகிட்டு இருப்பாரு அதைய தானே சொல்லுறீய...? ;))))\\
ஹலோ பாண்டியண்ணே, இங்கே 'கொஞ்சல்' , 'கெஞ்சல்' பத்தி சொல்லல,
நண்பனாக இருக்கும் வரை இல்லாத சில குணங்கள், காதலனானதும் வெளிப்படும்.
உதாரணமாக, ஆதிக்கம் செலுத்துவது, ஒவரா அதிகாரம் பண்றது, ரொம்ப பொஸசிவாக பிகேவ் பண்றது, இது மாதிரி சில சில விஷயங்கள்.
\\ ஜொள்ளுப்பாண்டி said...
// எனவே அவர் நண்பராக இருக்கும் போதான குணங்களைக் கண்டு நல்லவர் என அவசரப்பட்டு மனதை பறிகொடுத்து விடாதீர்கள்.//
ஹஹஹஹ திவ்யா அம்மணி
காதல் ஒரு பிக்பாக்கெட் திருடன் மாதிரிங்கோ.... உங்க மனசை அப்படியே உங்களுக்கே தெரியாம லவட்டிகிட்டு போய்டும்... இதிலே அவசரப்பட்டு அனுபவப்பட்டு எல்லாம் யாரும் பறிகொடுக்கறது இல்லீங்கோ... :)))))))
என்ன ஒத்துக்குறீயளா...??\
ஒத்துக்க முடியாதுங்கண்ணோவ்!
அவசரபட்டு மனசை பறிக்கொடுக்கிற காதல் எல்லாம், அவசரமாகவே முடிஞ்சிடும், கசந்தும் போய்டும் சீக்கிரம்!
அந்த 'அவசரக் காதல் ' எல்லாம் வேணாம்னு தானே இப்படி யோசனை சொல்றாங்க, கேட்குக்கோங்கண்ணா!!
\\ Dreamzz said...
இப்போதைக்கு அட்டென்டன்ஸ்\
Attendence noted down!
// ஜொள்ளுப்பாண்டி said...
இதென்னாங்க குணம்???... காதலரா மாறும்போது கொஞ்சம் கொஞ்சிகிட்டு இருப்பாரு அதுக்கு முன்ன நண்பனா கெஞ்சிகிட்டு இருப்பாரு அதைய தானே சொல்லுறீய...? ;))))//
எப்படிணே கரெக்டா பாயிண்ட புடிச்சீக.
:):)
ஏனுங்க திவ்யா நீங்க சொல்ற பாயிண்ட எல்லாத்தையும் வீட்ல சொன்னாலே போது அவங்களா நல்ல பையனா கட்டிவச்சிடுவாங்க.
என்னோட மொதல் கமெண்ட் எங்கே???
//உங்கள் காதலர் நம்பர் ஒன் நல்ல நண்பராகவே இருக்கட்டும், ஆனாலும் எந்தச் சூழ்நிலையிலும் அவர் தனியே அழைக்கும் எந்த இடங்களுக்கும் தனியே போகாதீர்கள்.//
இத நல்ல நண்பருக்கு சொல்றீங்களா? இல்ல காதலருக்கு சொல்றீங்களா?
//இங்கே 'கொஞ்சல்' , 'கெஞ்சல்' பத்தி சொல்லல,
நண்பனாக இருக்கும் வரை இல்லாத சில குணங்கள், காதலனானதும் வெளிப்படும்.//
ஹஹஹஹஹ அப்படியா..?? நான் அப்படித்தானே நெனச்சேன்..??
//உதாரணமாக, ஆதிக்கம் செலுத்துவது, ஒவரா அதிகாரம் பண்றது, ரொம்ப பொஸசிவாக பிகேவ் பண்றது, இது மாதிரி சில சில விஷயங்கள்.//
ஓஓஓஓ உதாரணம் எல்லாம் கொடுத்து இருக்கீய....??? :))))
அன்பால ஆதிக்கம் செலுத்துவாங்க தான்... அதெல்லாம் பெரிய மேட்டருங்களா...?? ;)))))
அதிகாரம் பண்ணினாதான் கொஞ்சம் பிடிச்சிருக்குன்னு சொல்லுறாகளே இந்த பொம்மளைப்பசங்க... அதிகாரம் பண்ணாட்டியும் தப்பு சொல்லுறாகளே... என்ன கொடுமை இது....??
பொசஸிவ் .... ஆஹா ஏண்டா இவ்ளோ சொல்றேன் உனக்கு பொசஸிவ்னெஸ்ஸே இல்லையாடான்னு பாவப்பட்ட பசங்களை சீண்டி விட்டு இப்டி வேற அந்தர் பல்டிஅடிச்சுகிட்டு சொல்லிகிட்டு இருப்பாகளா இந்தப் பொண்ணுங்க...??? :))))
//அவசரபட்டு மனசை பறிக்கொடுக்கிற காதல் எல்லாம், அவசரமாகவே முடிஞ்சிடும், கசந்தும் போய்டும் சீக்கிரம்!
அந்த 'அவசரக் காதல் ' எல்லாம் வேணாம்னு தானே இப்படி யோசனை சொல்றாங்க, கேட்குக்கோங்கண்ணா!!//
இதெல்லாம் அப்பவே முடிஞ்சுடுது. நாங்க 4 வருசம் லவ் பண்ணினோம், ரொம்ப டீப் லவ். நான் இல்லாம் அவ இல்ல, அவ இல்லாம நான் இல்ல-இந்த காதல் தான் பேப்பர் வரை வருது.
பாண்டியண்ணே இங்கன தான் இருக்கியளா???
சொகந்தான???
\\ வினையூக்கி said...
:):)\\
வருகைக்கு நன்றி வினையூக்கி!
//ஜொள்ளுப்பாண்டி said...
அன்பால ஆதிக்கம் செலுத்துவாங்க தான்... அதெல்லாம் பெரிய மேட்டருங்களா...?? ;)))))
அதிகாரம் பண்ணினாதான் கொஞ்சம் பிடிச்சிருக்குன்னு சொல்லுறாகளே இந்த பொம்மளைப்பசங்க... அதிகாரம் பண்ணாட்டியும் தப்பு சொல்லுறாகளே... என்ன கொடுமை இது....?? //
நல்லா கேளுங்கண்ணே.
எதுவும் கேக்காம விட்டா, ஏண்டா நான் எது பண்ணினாலும் கேக்க மாட்டியானு கேக்கறாங்க. கேட்டா அதிகார துஷ்பிரயோகம் அப்படினு சொல்றாங்க. இந்த பொம்பளபசங்கள புரிஞ்சுக்கவே முடியல. :P
\\ J K said...
ஏனுங்க திவ்யா நீங்க சொல்ற பாயிண்ட எல்லாத்தையும் வீட்ல சொன்னாலே போது அவங்களா நல்ல பையனா கட்டிவச்சிடுவாங்க.\\
ஹாய் JK,
வருகைக்கு நன்றி!
அப்போ இந்த பாயிண்ட்ஸெல்லாம் வீட்டுல சொல்லிடலாம்ன்றீங்களா??
ஆலோசனைக்கு ஒரு ஸ்பெஷல் நன்றி JK!
//J K said...
// ஜொள்ளுப்பாண்டி said...
இதென்னாங்க குணம்???... காதலரா மாறும்போது கொஞ்சம் கொஞ்சிகிட்டு இருப்பாரு அதுக்கு முன்ன நண்பனா கெஞ்சிகிட்டு இருப்பாரு அதைய தானே சொல்லுறீய...? ;))))//
எப்படிணே கரெக்டா பாயிண்ட புடிச்சீக.//
ஆஹா வாங்க JK வாங்க :))))
இந்த அநியாத்தை தட்டிகேட்க யாராச்சும் வரணும்ல... நீங்களாச்சும் தோள் கொடுத்தீயளே.. :))))
\\ J K said...
என்னோட மொதல் கமெண்ட் எங்கே???\\
JK, நீங்க அனுப்பின எல்லா கமெண்டும் பப்ளீஷ் பண்ணிட்டேனே??
ஏதும் மிஸ் ஆகுதா??
\\ J K said...
//உங்கள் காதலர் நம்பர் ஒன் நல்ல நண்பராகவே இருக்கட்டும், ஆனாலும் எந்தச் சூழ்நிலையிலும் அவர் தனியே அழைக்கும் எந்த இடங்களுக்கும் தனியே போகாதீர்கள்.//
இத நல்ல நண்பருக்கு சொல்றீங்களா? இல்ல காதலருக்கு சொல்றீங்களா?\\
காதலனாகிய நண்பனிடமும் தனிமையில் எச்சரிக்கை தேவை என்று 'பெண்ணுக்கு' சொல்லப்பட்டது இவ்வரிகள்!!
//J K said...
பாண்டியண்ணே இங்கன தான் இருக்கியளா???
சொகந்தான???//
ஆமாங்க JK :)))
எங்க எல்லாம் நம்ம இனம் உதைபடுதோ அங்கே நாங்களும் இருப்போம்ல..?? வல்லிய சொகம்...:))))) நீங்க..?
//நண்பராக இருக்கும் வரை ஆண்களது குணம் வேறாக இருக்கும். காதலராக மாறியதும் குணமும் மாறும். எனவே அவர் நண்பராக இருக்கும் போதான குணங்களைக் கண்டு நல்லவர் என அவசரப்பட்டு மனதை பறிகொடுத்து விடாதீர்கள்.//
கணவரான பின் குணம் மாறினா என்னா பண்ணுவீங்க?. அல்லது இது காதலுக்கு(திருமணத்துக்கு முன்) உள்ள அட்வைஸ் மட்டுமா?
//அவரைக் காதலராக ஏற்கலாம் என்று உங்கள் மனப்பட்சி சொல்லி விட்டதா? ஆசையை வளர்த்துக் கொள்வதற்கு முன்பாக அவரது குடும்ப விவரங்களைத் தெரிந்து கொள்ளுங்கள்.காதல் திருமணத்தைப்பற்றி அவரது குடும்பத்தாரின் அபிப்ராயம் என்ன என்பதையும் மறைமுகமாகக் கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள்.//
அவங்க குடும்பத்துல ஓ.கே சொல்லலைனா அம்போனு விட்டுடூவீங்க தானே. அப்போ உங்க மனபட்சி சொன்னது என்னாச்சு???
//உங்களவரை சந்திக்கச் செல்லும்போது மேக்கப் என எக்ஸ்ட்ரா பிட்டிங்குகளை தவிர்த்து விடுங்கள்.//
அவர் பாத்துட்டு பயப்பட மாட்டாரா???
\\ J K said...
//அவசரபட்டு மனசை பறிக்கொடுக்கிற காதல் எல்லாம், அவசரமாகவே முடிஞ்சிடும், கசந்தும் போய்டும் சீக்கிரம்!
அந்த 'அவசரக் காதல் ' எல்லாம் வேணாம்னு தானே இப்படி யோசனை சொல்றாங்க, கேட்குக்கோங்கண்ணா!!//
இதெல்லாம் அப்பவே முடிஞ்சுடுது. நாங்க 4 வருசம் லவ் பண்ணினோம், ரொம்ப டீப் லவ். நான் இல்லாம் அவ இல்ல, அவ இல்லாம நான் இல்ல-இந்த காதல் தான் பேப்பர் வரை வருது.\\
எவ்வளவு நாட்கள்/வருடங்கள் காதிலிக்கிறார்கள் என்பது முக்கியமல்ல காதலின் ஆழத்தை உணர்த்த,
நிதானத்துடன் முழுமையாக ஒருவரையொருவர் புரிந்துக்கொள்ளுதலின் அடிப்படையில் உருவாகும் காதல் வலுவானது!!
// ஜொள்ளுப்பாண்டி said...
// எனவே அவர் நண்பராக இருக்கும் போதான குணங்களைக் கண்டு நல்லவர் என அவசரப்பட்டு மனதை பறிகொடுத்து விடாதீர்கள்.//
ஹஹஹஹ திவ்யா அம்மணி
காதல் ஒரு பிக்பாக்கெட் திருடன் மாதிரிங்கோ.... உங்க மனசை அப்படியே உங்களுக்கே தெரியாம லவட்டிகிட்டு போய்டும்... இதிலே அவசரப்பட்டு அனுபவப்பட்டு எல்லாம் யாரும் பறிகொடுக்கறது இல்லீங்கோ... :)))))))
என்ன ஒத்துக்குறீயளா...??//
மாம்ஸ் நச்சின்னு சொன்னிங்க..
ரிப்பீட்டேய்...
//ஜொள்ளுப்பாண்டி said...
//நண்பராக இருக்கும் வரை ஆண்களது குணம் வேறாக இருக்கும். காதலராக மாறியதும் குணமும் மாறும்.//
இதென்னாங்க குணம்???... காதலரா மாறும்போது கொஞ்சம் கொஞ்சிகிட்டு இருப்பாரு அதுக்கு முன்ன நண்பனா கெஞ்சிகிட்டு இருப்பாரு அதைய தானே சொல்லுறீய...? ;))))//
அடடா.. நம்ம ஜொள்ளு மாம்ஸ் சொன்ன எல்லா பின்னூட்டத்துக்கும் சேத்தே இந்த
ரிப்பீட்டேய்..
//உங்களவரை சந்திக்கச் செல்லும்போது மேக்கப், கவர்ச்சியான உடை என எக்ஸ்ட்ரா பிட்டிங்குகளை தவிர்த்து விடுங்கள்.
-- இயல்பாகவே இருங்கள் -- //
நச்!
பதிவிலேயே எனக்குப் பிடித்த வரிகள் திவ்யா! :-)
இயல்பே இனிமை சேர்க்கும்!
இதை நீங்கள் பெண்களுக்குச் சொன்னது விழிப்போட பொறுப்பாவும் இருக்கணும்னு!
ஆனா -- இந்த இயல்பாகவே இருங்கள் -- ஆண்களுக்கும் ரொம்பவும் பொருந்தும்!
தாம் தூம் என்று செலவு செய்யும் ஆண்களே, திவ்யா சொல்லுறதைக் கேட்டுக்கோங்க! :-)
//தனிமையும், இளமையும் எப்பேர்ப்பட்ட நல்லவரையும் மோசமாக்கலாம், ஜாக்கிரதை!.//
கேர்ஃபுலா இருக்கனும்கறீங்க.
மக்களே உசாரா இருந்துக்கோங்க. அம்புட்டுதேன் சொல்லமுடியும்.
//உதாரணமாக, ஆதிக்கம் செலுத்துவது, ஒவரா அதிகாரம் பண்றது, ரொம்ப பொஸசிவாக பிகேவ் பண்றது, இது மாதிரி சில சில விஷயங்கள்.//
நேசிக்கறவங்க மேல ,கொஞ்சம் உரிமை எடுத்துக்கிட்டா தப்பா?.. அதே உரிமை அந்தப்பக்கத்துலயிருந்தும் எடுத்துக்கிட்டாலும் ஆண்கள் வழிஞ்சுக்கிட்டு விட்டுக்கொடுக்கறாய்ங்கல்ல..:P
என்னோட 3 கமெண்ட் மிஸ் ஆகுது.
//ஆண்களுக்கும் ரொம்பவும் பொருந்தும்!
தாம் தூம் என்று செலவு செய்யும் ஆண்களே, திவ்யா சொல்லுறதைக் கேட்டுக்கோங்க! :-)//
ஹலோ யாருங்க இது சேம் side கோல் அடிக்கிறது...?? ;))))))
திவ்யா மாஸ்டர்,நீங்களும் ஆண்களை தப்பா புரிஞ்சுக்கலாமா?..
ஆண்கள் மட்டும் ,ஒரு பொண்ணை புடிச்சுட்டா,மத்த விடயங்கள் எல்லாத்தையும் ரெண்டாவது பட்சமா தள்ளிட்டு,எல்லா பிரச்சனைகளையும் சமாளிச்சு அவளுக்காக முழுமையா இறங்கறாய்ங்க..
பெண்கள் மட்டும் (அவசியமானதெல்லாம் யோசிக்கலாம் வேணாங்கலை ) ஓவரா வியாபார ரீதிலல்லெல்லாம் யோசிச்சு.த்னக்கு கொஞ்சம் கூட சிரமமே வராம,பிஸினஸ் ஒத்து வந்தா மட்டும் காதலிக்கலாம்ன்னு முடிவெல்லாம் எடுத்தா.. அதுபேர் காதலில்லைங்க.. :)))))))))))))))))

//எவ்வளவு நாட்கள்/வருடங்கள் காதிலிக்கிறார்கள் என்பது முக்கியமல்ல காதலின் ஆழத்தை உணர்த்த,
நிதானத்துடன் முழுமையாக ஒருவரையொருவர் புரிந்துக்கொள்ளுதலின் அடிப்படையில் உருவாகும் காதல் வலுவானது!!//
நெசந்தான் இந்த நேசம்... திவ்யா நீங்க சொல்லற இந்த பாய்ண்டை அப்ஜெக்ஷன் இல்லாம முழுசா ஒத்துக்கறேன்... :)))))
//நேசிக்கறவங்க மேல ,கொஞ்சம் உரிமை எடுத்துக்கிட்டா தப்பா?.. அதே உரிமை அந்தப்பக்கத்துலயிருந்தும் எடுத்துக்கிட்டாலும் ஆண்கள் வழிஞ்சுக்கிட்டு விட்டுக்கொடுக்கறாய்ங்கல்ல..:P//
அட அதானே !!!! கமான் ரசிகன்... அப்படித்தான்... டாப் கியரைபோட்டு கெளப்புங்கப்பு...
:)))))
\\ kannabiran, RAVI SHANKAR (KRS) said...
//உங்களவரை சந்திக்கச் செல்லும்போது மேக்கப், கவர்ச்சியான உடை என எக்ஸ்ட்ரா பிட்டிங்குகளை தவிர்த்து விடுங்கள்.
-- இயல்பாகவே இருங்கள் -- //
நச்!
பதிவிலேயே எனக்குப் பிடித்த வரிகள் திவ்யா! :-)
இயல்பே இனிமை சேர்க்கும்!
இதை நீங்கள் பெண்களுக்குச் சொன்னது விழிப்போட பொறுப்பாவும் இருக்கணும்னு!
ஆனா -- இந்த இயல்பாகவே இருங்கள் -- ஆண்களுக்கும் ரொம்பவும் பொருந்தும்!
தாம் தூம் என்று செலவு செய்யும் ஆண்களே, திவ்யா சொல்லுறதைக் கேட்டுக்கோங்க! :-)\\
ஹாய் ரவி,
நீங்க சொன்னா மாதிரி, அந்த பாயிண்ட் ஆண்களுக்கும் பொருந்தும்!
காதலனாக இருக்கும் போது, பீஸா கார்னருக்கு, ஐஸ் க்ரீம் பார்லருக்கும் நல்லா செலவு பண்ணிட்டு,
அப்புறம் கல்யாணம் ஆனதும் எல்லாத்துக்கும் ஃபுல் ஸ்டாப் வைக்கிறப்போ,
அந்த மாறுதலை பெண்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை!!
காதலிக்கும் போது இயல்பாக இருப்பதே நல்லது!
வருகைக்கும், கருத்து பரிமாற்றத்துக்கும் நன்றி ரவி!!
\\ J K said...
//தனிமையும், இளமையும் எப்பேர்ப்பட்ட நல்லவரையும் மோசமாக்கலாம், ஜாக்கிரதை!.//
கேர்ஃபுலா இருக்கனும்கறீங்க.
மக்களே உசாரா இருந்துக்கோங்க. அம்புட்டுதேன் சொல்லமுடியும்.\
புரிதலுக்கு நன்றி JK!!
//kannabiran, RAVI SHANKAR (KRS) said...
//உங்களவரை சந்திக்கச் செல்லும்போது மேக்கப், கவர்ச்சியான உடை என எக்ஸ்ட்ரா பிட்டிங்குகளை தவிர்த்து விடுங்கள்.
-- இயல்பாகவே இருங்கள் -- //
நச்!
பதிவிலேயே எனக்குப் பிடித்த வரிகள் திவ்யா! :-)
இயல்பே இனிமை சேர்க்கும்!//
இதுவும் ரிப்பீட்டு
\\ ரசிகன் said...
//உதாரணமாக, ஆதிக்கம் செலுத்துவது, ஒவரா அதிகாரம் பண்றது, ரொம்ப பொஸசிவாக பிகேவ் பண்றது, இது மாதிரி சில சில விஷயங்கள்.//
நேசிக்கறவங்க மேல ,கொஞ்சம் உரிமை எடுத்துக்கிட்டா தப்பா?.. அதே உரிமை அந்தப்பக்கத்துலயிருந்தும் எடுத்துக்கிட்டாலும் ஆண்கள் வழிஞ்சுக்கிட்டு விட்டுக்கொடுக்கறாய்ங்கல்ல..:P\\
ஹாய் ரசிகன்,
உரிமை எடுத்துகிறது தப்பில்லீங்க,
ஆதிக்கத்திற்கும் உரிமை நிலைநாட்டுவதற்கும் நிறைய வித்தியாசம் இருக்குங்க.
நண்பனாக இருக்கும் வரை இல்லாத இந்த உரிமை பாராட்டல், காதலனாக ஆனதும் 'ஓவரா' போகும் போது தான் பிரச்சனையே,
அளவோடு இருந்தா ரசிக்காமலா போய்டுவாங்க பெண்கள்??
பெருமைபடக்கூடிய ரசனையல்லவா அது!!
திவ்யா மாஸ்டர்,என்னதிது?.. என்னோட மொதல் பின்னூட்டம் எங்க?ன்ன்னு கேட்ட ஒரு கேள்விக்கு,3 முறை வெளியிட்டிருக்கிங்க...
ஆஹா... உங்க நட்பை நெனச்சு ரொம்ப பெருமைப் படறேன்.. நன்றிகள் மாஸ்டர்..:P (தவறிப்போய் மூனுமுறை வந்துருச்சிங்கறத எப்படியெல்லாம் சொல்ல வேண்டியிருக்கு:)) பரவாயில்லை..பாயிண்ட அழுத்தமா 3 முறை சொன்ன மாதிரி மக்கள்ஸ் நெனச்சுக்கிட்டுமே:P
(ஆட்டோ அனுப்பாம இருந்தா சரி..:)))
.
\\ J K said...
என்னோட 3 கமெண்ட் மிஸ் ஆகுது.\\
3 கமெண்ட் மிஸ் ஆகுதா?
எனக்கு வந்த எல்லாக் கமெண்டும் பப்ளீஷ் பண்ணிட்டேனே JK!!!
//நண்பனாக இருக்கும் வரை இல்லாத இந்த உரிமை பாராட்டல், காதலனாக ஆனதும் 'ஓவரா' போகும் போது தான் பிரச்சனையே,
அளவோடு இருந்தா ரசிக்காமலா போய்டுவாங்க பெண்கள்??//
அதென்னாங்க ஓவரா போகறது..?? அதுக்கு ஏதாச்சும் ஆல்டொ மீட்டர் மாதிரி உரிமையோ மீட்டர் னு இருக்கா..??? சில சமயம் அப்படி அப்படி இப்படி அப்படி ஆய்டுது அவ்ளோ தான்... ;))))))
//பெருமைபடக்கூடிய ரசனையல்லவா அது!!//
இத்தனையும் சொல்லிட்டு இப்படி வேற மாத்தி மாத்தி 'பிட்'டைப் போட்டு மானாவாரியா பசங்களை ஏத்திவிட்டா என்ன அர்த்தங்கறேன்..??ஆண்டவா... இந்த பாவப்பட பசங்களை காப்பாத்தப்பா.... ;))))))
//ஜொள்ளுப்பாண்டி said...
//நண்பனாக இருக்கும் வரை இல்லாத இந்த உரிமை பாராட்டல், காதலனாக ஆனதும் 'ஓவரா' போகும் போது தான் பிரச்சனையே,
அளவோடு இருந்தா ரசிக்காமலா போய்டுவாங்க பெண்கள்??//
அதென்னாங்க ஓவரா போகறது..?? அதுக்கு ஏதாச்சும் ஆல்டொ மீட்டர் மாதிரி உரிமையோ மீட்டர் னு இருக்கா..??? சில சமயம் அப்படி அப்படி இப்படி அப்படி ஆய்டுது அவ்ளோ தான்... ;))))))
//பெருமைபடக்கூடிய ரசனையல்லவா அது!!//
இத்தனையும் சொல்லிட்டு இப்படி வேற மாத்தி மாத்தி 'பிட்'டைப் போட்டு மானாவாரியா பசங்களை ஏத்திவிட்டா என்ன அர்த்தங்கறேன்..??ஆண்டவா... இந்த பாவப்பட பசங்களை காப்பாத்தப்பா.... ;))))))//
ஆண்டவா என்னோட பிராத்தனையையும் கூட சேத்துக்கோப்பா..:)))
\\ ரசிகன் said...
திவ்யா மாஸ்டர்,நீங்களும் ஆண்களை தப்பா புரிஞ்சுக்கலாமா?..
ஆண்கள் மட்டும் ,ஒரு பொண்ணை புடிச்சுட்டா,மத்த விடயங்கள் எல்லாத்தையும் ரெண்டாவது பட்சமா தள்ளிட்டு,எல்லா பிரச்சனைகளையும் சமாளிச்சு அவளுக்காக முழுமையா இறங்கறாய்ங்க..
பெண்கள் மட்டும் (அவசியமானதெல்லாம் யோசிக்கலாம் வேணாங்கலை ) ஓவரா வியாபார ரீதிலல்லெல்லாம் யோசிச்சு.த்னக்கு கொஞ்சம் கூட சிரமமே வராம,பிஸினஸ் ஒத்து வந்தா மட்டும் காதலிக்கலாம்ன்னு முடிவெல்லாம் எடுத்தா.. அதுபேர் காதலில்லைங்க.. :)))))))))))))))))\\
ஹலோ ரசிகன்,
காதலனிடம் 'கார் இருக்கா' ,'பைக் இருக்கா?' எவ்வளவு சம்பாதிக்கிறான்னு தெரிஞ்சுட்டு பிஸினஸ் ரீதியில் காதலை கையாள இந்த பகுதியில் சொல்லவே இல்லீங்க.
காதலனின் குடும்பம் மற்றும் இயற் குணங்களையும், தெரிந்துக்கொள்ளுதலின் அவசியத்தை மட்டுமே வலியியுறுத்துகிறது.
\\ ஜொள்ளுப்பாண்டி said...
//எவ்வளவு நாட்கள்/வருடங்கள் காதிலிக்கிறார்கள் என்பது முக்கியமல்ல காதலின் ஆழத்தை உணர்த்த,
நிதானத்துடன் முழுமையாக ஒருவரையொருவர் புரிந்துக்கொள்ளுதலின் அடிப்படையில் உருவாகும் காதல் வலுவானது!!//
நெசந்தான் இந்த நேசம்... திவ்யா நீங்க சொல்லற இந்த பாய்ண்டை அப்ஜெக்ஷன் இல்லாம முழுசா ஒத்துக்கறேன்... :)))))\\
ஒத்துக்கொண்டதிற்கு நன்றி பாண்டி!
\\ ரசிகன் said...
//kannabiran, RAVI SHANKAR (KRS) said...
//உங்களவரை சந்திக்கச் செல்லும்போது மேக்கப், கவர்ச்சியான உடை என எக்ஸ்ட்ரா பிட்டிங்குகளை தவிர்த்து விடுங்கள்.
-- இயல்பாகவே இருங்கள் -- //
நச்!
பதிவிலேயே எனக்குப் பிடித்த வரிகள் திவ்யா! :-)
இயல்பே இனிமை சேர்க்கும்!//
இதுவும் ரிப்பீட்டு\\
நன்றி ரசிகன்!
\\ ஜொள்ளுப்பாண்டி said...
//நண்பனாக இருக்கும் வரை இல்லாத இந்த உரிமை பாராட்டல், காதலனாக ஆனதும் 'ஓவரா' போகும் போது தான் பிரச்சனையே,
அளவோடு இருந்தா ரசிக்காமலா போய்டுவாங்க பெண்கள்??//
அதென்னாங்க ஓவரா போகறது..?? அதுக்கு ஏதாச்சும் ஆல்டொ மீட்டர் மாதிரி உரிமையோ மீட்டர் னு இருக்கா..??? சில சமயம் அப்படி அப்படி இப்படி அப்படி ஆய்டுது அவ்ளோ தான்... ;))))))
//பெருமைபடக்கூடிய ரசனையல்லவா அது!!//
இத்தனையும் சொல்லிட்டு இப்படி வேற மாத்தி மாத்தி 'பிட்'டைப் போட்டு மானாவாரியா பசங்களை ஏத்திவிட்டா என்ன அர்த்தங்கறேன்..??ஆண்டவா... இந்த பாவப்பட பசங்களை காப்பாத்தப்பா.... ;))))))\\
ஹலோ பாண்டியண்ணே,
காதல் சுனாமி மாதிரின்றீய,
மீட்டர் கணக்கெல்லாம் உரிமைக்கு இல்லன்றீய...
என்ன பொண்ணுங்களை சிந்தித்து செயல் படவே கூடாதுன்றியளா??
என்ன கொடுமை இது பாண்டியண்ணே???
[ பாண்டி,உங்கள் ஸ்டைல் தமிழில் பின்னூட்டமிட ஒரு சிறு முயற்சி, எப்படி இருக்குதுங்கோ??]
//காதல் சுனாமி மாதிரின்றீய,
மீட்டர் கணக்கெல்லாம் உரிமைக்கு இல்லன்றீய...
என்ன பொண்ணுங்களை சிந்தித்து செயல் படவே கூடாதுன்றியளா??
என்ன கொடுமை இது பாண்டியண்ணே???//
ஸ்டெயிலு சூப்பருங்க திவ்யா மாஸ்டர்..
(ஸ்டெயிலு மட்டும் தான்... மாத்தி மாத்தி பேசி குழப்பும் பெண்களுக்கான உங்க சப்போர்ட்டுக்கு இல்லைங்கோ:P
//
அவரைக் காதலராக ஏற்கலாம் என்று உங்கள் மனப்பட்சி சொல்லி விட்டதா? ஆசையை வளர்த்துக் கொள்வதற்கு முன்பாக அவரது குடும்ப விவரங்களைத் தெரிந்து கொள்ளுங்கள்.காதல் திருமணத்தைப்பற்றி அவரது குடும்பத்தாரின் அபிப்ராயம் என்ன என்பதையும் மறைமுகமாகக் கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள்.//
எல்லாம் கேட்டு தெரிஞ்சதுக்கப்புறம் தானே மனப்பட்சி சொல்லனும்.
மனம் ஒரு குரங்குனு உங்களுக்கே தெரியுமில்லையா?
//ஹலோ பாண்டியண்ணே,
காதல் சுனாமி மாதிரின்றீய,
மீட்டர் கணக்கெல்லாம் உரிமைக்கு இல்லன்றீய...
என்ன பொண்ணுங்களை சிந்தித்து செயல் படவே கூடாதுன்றியளா??
என்ன கொடுமை இது பாண்டியண்ணே??? //
ஆஹா எனக்கேவா ??? :))))
அட அம்மணீக எல்லாம் நல்லா சிந்திக்கட்டுங்க.... ஆனா சில சமயம் ஓவரா சிந்திச்சா எல்லாமே 'புஸ்' ஸாய்டுங்கோவ்.... காதல் இதயம் சம்பந்தப்பட்டதுங்கோ... அதிலே ஓவரா மூளைய கொண்டுவரக்கூடாது... புரியுதுங்களா..?? ;))))
அப்போ காதலிக்கறவுக எல்லாம் மூளைய கழட்டிவச்சுட்டுத்தான் காதலிக்கணுமான்னு நீங்க அடுத்து கேள்வி கேட்பீக...:)))) வேணா மூளை சொல்றது 25% மனசு 75% வச்சுக்கலாம்.. சரியா..??
//[ பாண்டி,உங்கள் ஸ்டைல் தமிழில் பின்னூட்டமிட ஒரு சிறு முயற்சி, எப்படி இருக்குதுங்கோ??]//
அட திவ்யா என்னோட ஸ்டைலா??? அப்படி ஒன்னு இருக்கா..?? ;)))) சும்மா பிச்சு உதர்றீயளே... :)))) கலக்குங்க....:)))
ஓகே.. கமெண்ட் நேரம்..
முதல்ல இந்த பதிவுல இருக்கும் Subtle பெண்ணாதிக்கத்துக்கு எதிர்ப்புகளை பதிவு செய்துக்கிறேன்...
காதல்ங்கரது..ஒரு மென்மையான உணர்வு,அற்புதமான கெமிஸ்டிரி... ஏற்றத் தாழ்வுகளை சமப்படுத்தறதாலதான் அதுக்கு இம்புட்டு மதிப்பு..
இதுலபோய் அறிவு,புத்தி,ஒப்பீடு,தேர்ந்தெடுப்பு அது இதுன்னு கலந்து 100% லாஜிக்கலா மாற்ற முடியும்ன்னு தோனலை..
ஆயிரம் முட்களுக்கு நடுவே இருக்குற மலரை அடையாளம் புரிஞ்சுக்கிட்டு நேசிக்க ஆரம்பிக்கறது அன்பு..:)
அதை விட்டுட்டு.. ஒவ்வொரு குத்தமா பாத்து குறை சொல்லிக்கிட்டிருந்தா.. உங்க வாழ்க்கையில உங்களுக்காகவே கெடச்ச,உங்களை நேசிக்கறவங்களை நிச்சயமா இழந்துருவிங்க...குறையே இல்லாதவங்களை உங்களுக்காக ஸ்பெசலா ஆர்டர் பண்ணித்தான் தயாரிக்கனும் :))))))))))))
பாக்க வேண்டியது,உங்களை உண்மையா நேசிக்கறாங்களான்னு மட்டும். அது இருந்தாலே அதை வைச்சே மத்த எல்லா குணங்களையும் நல்ல விதமா மாத்த முடியும். அப்படி முழுசா மாறின நெறய உதாரணங்கள் ஆண்கள் சைடுல நெறய இருக்கு.. ஆனா பெண்கள் சைடுல .ஹீஹூம்.. :P
\\ ரசிகன் said...
//காதல் சுனாமி மாதிரின்றீய,
மீட்டர் கணக்கெல்லாம் உரிமைக்கு இல்லன்றீய...
என்ன பொண்ணுங்களை சிந்தித்து செயல் படவே கூடாதுன்றியளா??
என்ன கொடுமை இது பாண்டியண்ணே???//
ஸ்டெயிலு சூப்பருங்க திவ்யா மாஸ்டர்..
(ஸ்டெயிலு மட்டும் தான்... மாத்தி மாத்தி பேசி குழப்பும் பெண்களுக்கான உங்க சப்போர்ட்டுக்கு இல்லைங்கோ:P\\
ஸ்டைலை பாராட்டியதற்கு நன்றி ரசிகன் சார்!
\\ Anonymous said...
//
அவரைக் காதலராக ஏற்கலாம் என்று உங்கள் மனப்பட்சி சொல்லி விட்டதா? ஆசையை வளர்த்துக் கொள்வதற்கு முன்பாக அவரது குடும்ப விவரங்களைத் தெரிந்து கொள்ளுங்கள்.காதல் திருமணத்தைப்பற்றி அவரது குடும்பத்தாரின் அபிப்ராயம் என்ன என்பதையும் மறைமுகமாகக் கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள்.//
எல்லாம் கேட்டு தெரிஞ்சதுக்கப்புறம் தானே மனப்பட்சி சொல்லனும்.
மனம் ஒரு குரங்குனு உங்களுக்கே தெரியுமில்லையா?\\
வாங்க அநானி!
மனப்பட்சியே எல்லாம் தெரிஞ்சுக்கிட்டதுக்கப்பறம் தான் வரனுமா?? இதுவும் சரிதான்!
நன்றி அநானி!
\\ ஜொள்ளுப்பாண்டி said...
//ஹலோ பாண்டியண்ணே,
காதல் சுனாமி மாதிரின்றீய,
மீட்டர் கணக்கெல்லாம் உரிமைக்கு இல்லன்றீய...
என்ன பொண்ணுங்களை சிந்தித்து செயல் படவே கூடாதுன்றியளா??
என்ன கொடுமை இது பாண்டியண்ணே??? //
ஆஹா எனக்கேவா ??? :))))
அட அம்மணீக எல்லாம் நல்லா சிந்திக்கட்டுங்க.... ஆனா சில சமயம் ஓவரா சிந்திச்சா எல்லாமே 'புஸ்' ஸாய்டுங்கோவ்.... காதல் இதயம் சம்பந்தப்பட்டதுங்கோ... அதிலே ஓவரா மூளைய கொண்டுவரக்கூடாது... புரியுதுங்களா..?? ;))))
அப்போ காதலிக்கறவுக எல்லாம் மூளைய கழட்டிவச்சுட்டுத்தான் காதலிக்கணுமான்னு நீங்க அடுத்து கேள்வி கேட்பீக...:)))) வேணா மூளை சொல்றது 25% மனசு 75% வச்சுக்கலாம்.. சரியா..??
//[ பாண்டி,உங்கள் ஸ்டைல் தமிழில் பின்னூட்டமிட ஒரு சிறு முயற்சி, எப்படி இருக்குதுங்கோ??]//
அட திவ்யா என்னோட ஸ்டைலா??? அப்படி ஒன்னு இருக்கா..?? ;)))) சும்மா பிச்சு உதர்றீயளே... :)))) கலக்குங்க....:)))\\
மூளை உபயோகிக்க ஒரு அளவு,
இதயத்துக்கு ஒரு அளவு என்று எல்லாத்துக்கும் அளவு கோல் வைச்சுக்க முயற்ச்சிக்க கூடாதுங்க பாண்டியண்ணே!!
இதயத்தில் ஏற்படும் உணர்வை, மூளையை கொண்டு சிந்தித்து, தெளிவான முடிவெடுக்க வேண்டும்.
ஏற்படும் எல்லா உணர்வுகளையும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்ற அவசியமில்லை, அம்புட்டுத்தேன் பாண்டியண்ணே!!
//ரசிகன் said...
காதல்ங்கரது..ஒரு மென்மையான உணர்வு,அற்புதமான கெமிஸ்டிரி... ஏற்றத் தாழ்வுகளை சமப்படுத்தறதாலதான் அதுக்கு இம்புட்டு மதிப்பு..//
WOWWWW,.... ரிபீட்டேய்.... ரசிகன் ச்ச்ச்சும்மா பீளிங்ஸ்ல பிளிறி இருக்கீயளே.... :)))))
//அறிவு,புத்தி,ஒப்பீடு,தேர்ந்தெடுப்பு அது இதுன்னு கலந்து 100% லாஜிக்கலா மாற்ற முடியும்ன்னு தோனலை..
ஆயிரம் முட்களுக்கு நடுவே இருக்குற மலரை அடையாளம் புரிஞ்சுக்கிட்டு நேசிக்க ஆரம்பிக்கறது அன்பு..:)
அதை விட்டுட்டு.. ஒவ்வொரு குத்தமா பாத்து குறை சொல்லிக்கிட்டிருந்தா.. உங்க வாழ்க்கையில உங்களுக்காகவே கெடச்ச,உங்களை நேசிக்கறவங்களை நிச்சயமா இழந்துருவிங்க...குறையே இல்லாதவங்களை உங்களுக்காக ஸ்பெசலா ஆர்டர் பண்ணித்தான் தயாரிக்கனும் :))))))))))))//
அட்ரா சக்கை !!!
அட்ரா சக்கை !!!
அட்ரா சக்கை !!!
அட்ரா சக்கை !!!
அட்ரா சக்கை !!!
அட்ரா சக்கை !!!
அட்ரா சக்கை !!!
அட்ரா சக்கை !!!
அட்ரா சக்கை !!!
:)))))))))))
//மூளை உபயோகிக்க ஒரு அளவு,
இதயத்துக்கு ஒரு அளவு என்று எல்லாத்துக்கும் அளவு கோல் வைச்சுக்க முயற்ச்சிக்க கூடாதுங்க பாண்டியண்ணே!!//
ஓஹோ அப்படீங்களா ...?? ;)))) அளவு வச்சது யாருன்னு சிந்திங்கோ ப்ளீஸ்... ;)))
//இதயத்தில் ஏற்படும் உணர்வை, மூளையை கொண்டு சிந்தித்து, தெளிவான முடிவெடுக்க வேண்டும்.//
அட இதென்னா..??? மூளையோட tricky யான idea மாதிரி இருக்கே இது..?? ;))))
//ஏற்படும் எல்லா உணர்வுகளையும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்ற அவசியமில்லை, அம்புட்டுத்தேன் பாண்டியண்ணே!!//
அது சரி !!!! :))))) இப்படி பொத்தாம் பொதுவா சொல்லிட்டா என்ன ஆவறது..?? ;))))
\\ ரசிகன் said...
காதல்ங்கரது..ஒரு மென்மையான உணர்வு,அற்புதமான கெமிஸ்டிரி... ஏற்றத் தாழ்வுகளை சமப்படுத்தறதாலதான் அதுக்கு இம்புட்டு மதிப்பு..
இதுலபோய் அறிவு,புத்தி,ஒப்பீடு,தேர்ந்தெடுப்பு அது இதுன்னு கலந்து 100% லாஜிக்கலா மாற்ற முடியும்ன்னு தோனலை..
ஆயிரம் முட்களுக்கு நடுவே இருக்குற மலரை அடையாளம் புரிஞ்சுக்கிட்டு நேசிக்க ஆரம்பிக்கறது அன்பு..:)
அதை விட்டுட்டு.. ஒவ்வொரு குத்தமா பாத்து குறை சொல்லிக்கிட்டிருந்தா.. உங்க வாழ்க்கையில உங்களுக்காகவே கெடச்ச,உங்களை நேசிக்கறவங்களை நிச்சயமா இழந்துருவிங்க...குறையே இல்லாதவங்களை உங்களுக்காக ஸ்பெசலா ஆர்டர் பண்ணித்தான் தயாரிக்கனும் :))))))))))))
பாக்க வேண்டியது,உங்களை உண்மையா நேசிக்கறாங்களான்னு மட்டும். அது இருந்தாலே அதை வைச்சே மத்த எல்லா குணங்களையும் நல்ல விதமா மாத்த முடியும். அப்படி முழுசா மாறின நெறய உதாரணங்கள் ஆண்கள் சைடுல நெறய இருக்கு.. ஆனா பெண்கள் சைடுல .ஹீஹூம்.. :P\\
ஹாய் ரசிகன்,
குற்றம் குறை பார்த்து காதலிங்கன்னு சொல்ல வரவில்லை,
எச்சரிக்கையுணர்வில்லாமல் எத்தனையோ பெண்கள் தவறான தேர்வுக்குள்ளாகிறார்கள் என்று உங்களுக்கு தெரியவில்லை போலும்.
அவசர முடியும், உணர்ச்சிவசப்பட்ட முடிவும் எந்த விஷயத்திலும் நல்லதல்ல என்பதையே இந்த பகுதியில் குறிப்பிட பட்டிருக்கிறது.
ஆணின் குறைவுகளை நிறைவாக்கும் திறன் பெண்ணுக்கும் உண்டு ரசிகன்!
குறையற்ற மனிதனை காணயிலாது என்பதை ஒத்துக்கொள்கிறேன், அடிப்படையான சில நல்குணங்களைக் கூட ஒரு பெண் தன் காதலினிடம் எதிர்பார்க்காமல் முடிவெடுக்க வேண்டுமா என்ன??
'காதல்' மென்மையானதொரு உணர்வுதான், அந்த உணர்வுடன் மட்டும் வாழ்ந்துவிட முடியுமா??
உணர்ச்சிவசப்பட்டு முடிவெடுக்காமல், சிந்தித்து தெளிவானதொரு முடிவெடுக்காவிட்டால், இருவரின் வாழ்க்கையையும் அது பாதிக்கும்.
//குற்றம் குறை பார்த்து காதலிங்கன்னு சொல்ல வரவில்லை,
எச்சரிக்கையுணர்வில்லாமல் எத்தனையோ பெண்கள் தவறான தேர்வுக்குள்ளாகிறார்கள்//
உண்மைதான் திவ்யா.... :))))
எச்சரிக்கை உணர்வு கண்டிப்பா இருக்கணும் தான்.... ஒத்துக்கறேன்.... :))))
\\ ஜொள்ளுப்பாண்டி said...
//குற்றம் குறை பார்த்து காதலிங்கன்னு சொல்ல வரவில்லை,
எச்சரிக்கையுணர்வில்லாமல் எத்தனையோ பெண்கள் தவறான தேர்வுக்குள்ளாகிறார்கள்//
உண்மைதான் திவ்யா.... :))))
எச்சரிக்கை உணர்வு கண்டிப்பா இருக்கணும் தான்.... ஒத்துக்கறேன்.... :))))\
கருத்துக்களை ஒத்துக்கொண்டதிற்கு நன்றிங்கண்ணோவ்!!
ஆணின் குறைவுகளை நிறைவாக்கும் திறன் பெண்ணுக்கும் உண்டு ரசிகன்!
குறையற்ற மனிதனை காணயிலாது என்பதை ஒத்துக்கொள்கிறேன், அடிப்படையான சில நல்குணங்களைக் கூட ஒரு பெண் தன் காதலினிடம் எதிர்பார்க்காமல் முடிவெடுக்க வேண்டுமா என்ன??
உண்மைதான். ஆனா ஏற்றுக் கொண்ட பிறகும் யோசிக்கறேன் பேர்வழின்னு மறுபடி மறுபடி மனம் குழப்பக் கூடாதுன்னு தான் சொல்லறேன்.
நீங்க சொன்ன பெரும்பாலான நச் கருத்துக்கள்,பாராட்டுக்குறியவை.. வாழ்த்துக்கள் திவ்யா மாஸ்டர்...
அவ்வ்வ்வ்...என்னதிது..இதுக்குத்தான் அதிகமா தமிழ்ப் படம் பாத்துக்கிட்டு பின்னூட்டம் போடப்படாதுங்கறது...ரொம்ப ஓவரா தத்துவம்ஸ் கொட்டுது..
நான் எஸ்கேப்புங்கோ... (படம் முடிஞ்சிருச்சே:))))))))))))) )
அடுத்து.. நீங்க பொதுவா நல்ல மாதிரி சொன்னாலும்.. காதல் என்பது முழுவதும்.. Magic உம் இல்ல... முழுவதும் balance உம் இல்ல.. இரெண்டுக்கும் நடுவில.. சோ....
You never "plan" to love... U "fall" in love... என்பது என் கருத்தாகும்... அவ்ளவே...
\\ Dreamzz said...
You never "plan" to love... U "fall" in love... என்பது என் கருத்தாகும்... அவ்ளவே...\\
யாரும் ப்ளான் பண்ணிட்டு லவ் பண்றதில்லீங்க,
தெரிந்துக்கொள்ள வேண்டிய சில விஷயங்களை தெரிந்திருந்தால்....'விழுந்தால்' அடிபடாமல் இருக்கும்!
உங்கள் கருத்துக்களுக்கு நன்றி Dreamzz!
இதுல வர்ற பாலை (ஆண் & பெண்) மாற்றினால் இதே தலைப்பில் இன்னொரு இடுகை போடலாம்.
@திவ்யா
//யாரும் ப்ளான் பண்ணிட்டு லவ் பண்றதில்லீங்க,
தெரிந்துக்கொள்ள வேண்டிய சில விஷயங்களை தெரிந்திருந்தால்....'விழுந்தால்' அடிபடாமல் இருக்கும்!//
விழுந்தால் அடிபட தான் செய்யும்.. ஆன சில காயங்கள் கூட சுகம் தான்.
தெரிந்து கொண்டாலும், புரிந்து கொண்டாலும்.. தீய தொட்டா சுட தான செய்யும்? விழுந்தா வலிக்க தான செய்யும்.. :P
\\ உமையணன் said...
இதுல வர்ற பாலை (ஆண் & பெண்) மாற்றினால் இதே தலைப்பில் இன்னொரு இடுகை போடலாம்.\\
வருகைக்கும், கருத்தினை பகிர்ந்துக்கொண்டமைக்கு மிக்க நன்றி உமையணன்!
இருபாலருக்கும் பொருந்தும் கருத்துக்கள் தான் இவை!!
//உங்களவரை சந்திக்கச் செல்லும்போது மேக்கப்என எக்ஸ்ட்ரா பிட்டிங்குகளை தவிர்த்து விடுங்கள். //
பயந்துடுவாங்களே! :P
//...இங்கே பெண்களின் பார்வைக்கு!]//
ஆஹா... ஆனா...
//ஆசையை வளர்த்துக் கொள்வதற்கு முன்பாக அவரது குடும்ப விவரங்களைத் தெரிந்து கொள்ளுங்கள்.//
விவரமாதான் இருக்கிறீங்க, ஆனா சரிவருமா...?
//தனிமையும், இளமையும் எப்பேர்ப்பட்ட நல்லவரையும் மோசமாக்கலாம், ஜாக்கிரதை!.//
ஆண்களை மட்டும் தானா, பெண்களை...?? :)))
நல்ல ஆலோசனைகள் தான்... :)
Divya,
PadikkumPothu Kaathalil sikkamal,
Ananthamaaka adakkamaaka alavaaka sight atithu Youth days il Happy yaaka irukka ventum.
Velaiyil sernthuvittu allathu self-employed business arampitha pin , namaakkup pidiththavarai or appa amma paarkkum partnerai kalyaanam seithu kondu
Kaalam Poora...................................................................................................................Love pannik kondu irukkalaam.
Athu thaan Best.
Raj.
விவரமான பதிவு வாழ்த்துக்கள்
என்னங்க திவ்யா இப்படியா விவரந்தெரியாத புள்ளயா இருக்குறது? நம்ம வாழுறது கலியுகம்மா!!
காதலுக்கும் கல்யாணத்துக்கும் என்ன சம்மந்தமும் இல்லைனு நம்மூர் ஐயாக்களுக்கும் அம்மணிகளுக்கும் ரெம்பநல்லாவே தெரியும்?
இன்னும் ரெம்பப்பேரு Pirates of the Silicon Valley-ல Steve Jobs கேக்குற இன்டர்வியூவ் கேள்விய மனசுல நல்லா பதிய வச்சிறுக்கானுவ!!
Hi Divaya ,
Your view is not good on this topic -- By the way it's my view on your topic .
But truly say " If you start having a check list and clicking each one of them to decide upon whether to love him or not .... That's not actual love ... I could say that 's one way of selecting a man as you wish .
After you have an affection and a Wish on a person you can truly try to get his/her details and characters, But that should not affect your decision 100 % , it can contribute , less than 10% .
However you select you are enternig into 100% risk in life .
Wish you a happy Star Days .
:))
\\ நிமல்/NiMaL said...
//...இங்கே பெண்களின் பார்வைக்கு!]//
ஆஹா... ஆனா...
//ஆசையை வளர்த்துக் கொள்வதற்கு முன்பாக அவரது குடும்ப விவரங்களைத் தெரிந்து கொள்ளுங்கள்.//
விவரமாதான் இருக்கிறீங்க, ஆனா சரிவருமா...?
//தனிமையும், இளமையும் எப்பேர்ப்பட்ட நல்லவரையும் மோசமாக்கலாம், ஜாக்கிரதை!.//
ஆண்களை மட்டும் தானா, பெண்களை...?? :)))
நல்ல ஆலோசனைகள் தான்... :)\\
தனிமையில் எச்சரிக்கை இருபாலருக்கும் தேவை!
வருகைக்கும், கருத்துக்களுக்கும் நன்றி நிமல்!!
\\ J K said...
//உங்களவரை சந்திக்கச் செல்லும்போது மேக்கப்என எக்ஸ்ட்ரா பிட்டிங்குகளை தவிர்த்து விடுங்கள். //
பயந்துடுவாங்களே! :P\\
வெளிப்புற அழகை 'மட்டுமே' கண்டு காதல் வயப்படும் காதலன் பயந்து தான் போவான்!
\\ Raj said...
Divya,
PadikkumPothu Kaathalil sikkamal,
Ananthamaaka adakkamaaka alavaaka sight atithu Youth days il Happy yaaka irukka ventum.
Velaiyil sernthuvittu allathu self-employed business arampitha pin , namaakkup pidiththavarai or appa amma paarkkum partnerai kalyaanam seithu kondu
Kaalam Poora...................................................................................................................Love pannik kondu irukkalaam.
Athu thaan Best.
Raj.\\
ஹாய் ராஜ்,
கொள்கையோடு தான் இருக்கிறீங்க போலிருக்கு??
வருகைக்கும் , உங்கள் கருத்துக்களை பின்னூட்டமிட்டமைக்கும் மிக்க நன்றி ராஜ்!!
\\ தேவ் | Dev said...
விவரமான பதிவு வாழ்த்துக்கள்\
உங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி தேவ் அண்ணா!!
\\ கருப்பன்/Karuppan said...
என்னங்க திவ்யா இப்படியா விவரந்தெரியாத புள்ளயா இருக்குறது? நம்ம வாழுறது கலியுகம்மா!!
காதலுக்கும் கல்யாணத்துக்கும் என்ன சம்மந்தமும் இல்லைனு நம்மூர் ஐயாக்களுக்கும் அம்மணிகளுக்கும் ரெம்பநல்லாவே தெரியும்?
இன்னும் ரெம்பப்பேரு Pirates of the Silicon Valley-ல Steve Jobs கேக்குற இன்டர்வியூவ் கேள்விய மனசுல நல்லா பதிய வச்சிறுக்கானுவ!!\
கலியுக காதல் கல்யாணத்திற்காக அல்லன்னு உங்க கருத்தை சொன்னதிற்கு நன்றி கருப்பன்!!!
ஜொள்ளுப்பாண்டி said...
ஹஹஹஹஹ அம்மணி இதென்னாங்க காதல் என்ன உங்ககிட்டே சொல்லிகிட்டு May I come In? அப்படீன்னு கேட்டுகிட்டு வாராப்பல சொல்லி இருக்கீய...?? :))))
இல்லீங்கோ.... அது சுனாமி மாதிரி.. சொல்லாம கொள்ளாம வந்து வாரிட்டு பூடும்...:))))
பேஸ் பேஸ் நன்னா இருக்கு. சும்மா சொல்லக் காடாது பாண்டி சரியா சொன்னீங்க.
காதல்லை ஏதாவது டிப்புளோம் செய்தீங்களா. இப்படி அசத்திறீங்க பாண்டி.
\\ சுந்தர் / Sundar said...
Hi Divaya ,
Your view is not good on this topic -- By the way it's my view on your topic .
But truly say " If you start having a check list and clicking each one of them to decide upon whether to love him or not .... That's not actual love ... I could say that 's one way of selecting a man as you wish .
After you have an affection and a Wish on a person you can truly try to get his/her details and characters, But that should not affect your decision 100 % , it can contribute , less than 10% .
However you select you are enternig into 100% risk in life .
Wish you a happy Star Days .\\
Hi Sundar,
Thanks for your 'star week' wishes!
Having a check list to fall/accept a love is not the point mentioned in this post.
Having a wide& good knowledge about the person, with whom you love to live the rest of your life is very important rather than taking a decision based on the 'feelings' towards him.
Thanks for sharing your views Sundar, I appreciate it!!!
\\ நளாயினி said...
காதல்லை ஏதாவது டிப்புளோம் செய்தீங்களா. இப்படி அசத்திறீங்க பாண்டி.\\
வாங்க நளாயினி,
உங்கள் வருகைக்கு நன்றி!
டிப்ஸ் பத்தலையே தோழி.. இல்ல இல்ல.. "டிப்ஸ்" திவ்யா. :-)
ஆஹா. 86 பின்னூட்டமா?
வாரேவா திவ்யா. :-)
பெண்களே!!
காதலிக்காதீர்கள்...என்று சொன்னால்; நச் சென்று இருந்திருக்கும்...
\\ .:: மை ஃபிரண்ட் ::. said...
டிப்ஸ் பத்தலையே தோழி.. இல்ல இல்ல.. "டிப்ஸ்" திவ்யா. :-)\\
ஹாய் மை ஃபிரண்ட்,
இந்த டிப்ஸ் போதலியா??
இன்னும் டிப்ஸ் வேணும்னா....தனியா இ-மெயில் பண்றேன், ஒகே வா??
\ .:: மை ஃபிரண்ட் ::. said...
ஆஹா. 86 பின்னூட்டமா?
வாரேவா திவ்யா. :-)\
இவ்வளவு பின்னூட்டம் வந்ததிற்கு டாபிக் தான் காரணம் என்று நினைக்கிறேன், மை ஃபிரண்ட்!!
"உங்கள் காதலர் நம்பர் ஒன் நல்ல நண்பராகவே இருக்கட்டும், ஆனாலும் எந்தச் சூழ்நிலையிலும் அவர் தனியே அழைக்கும் எந்த இடங்களுக்கும் தனியே போகாதீர்கள்.
தனிமையும், இளமையும் எப்பேர்ப்பட்ட நல்லவரையும் மோசமாக்கலாம், ஜாக்கிரதை!."
ennanga idhu??? naan edhuvum solla virumbala. I seriously oppose. pazhi oru edam paavam oru edama? Kaadhala anavasiya izhukka venam idhula. oru kai thattuna satham varadhaam engayo padicha nyaabagam avlodhaan solluven.
\\ யோகன் பாரிஸ்(Johan-Paris) said...
பெண்களே!!
காதலிக்காதீர்கள்...என்று சொன்னால்; நச் சென்று இருந்திருக்கும்...\\
வாங்க யோகன் பாரிஸ்,
வருகைக்கு நன்றி!
'பெண்களே காதலிக்காதீர்கள்' என சொல்வதல்ல இப்பதிவின் நோக்கம், அப்படி சொன்னால் 'நச்'சென்றிருக்காது
'சப்'பென்று தான் இருக்கும்!
\\ ஸ்ரீ said...
"உங்கள் காதலர் நம்பர் ஒன் நல்ல நண்பராகவே இருக்கட்டும், ஆனாலும் எந்தச் சூழ்நிலையிலும் அவர் தனியே அழைக்கும் எந்த இடங்களுக்கும் தனியே போகாதீர்கள்.
தனிமையும், இளமையும் எப்பேர்ப்பட்ட நல்லவரையும் மோசமாக்கலாம், ஜாக்கிரதை!."
ennanga idhu??? naan edhuvum solla virumbala. I seriously oppose. pazhi oru edam paavam oru edama? Kaadhala anavasiya izhukka venam idhula. oru kai thattuna satham varadhaam engayo padicha nyaabagam avlodhaan solluven.\\
ஹாய் Sri!
உங்கள் கருத்துக்களை பகிர்ந்த கொண்டதிற்கு நன்றி.
//
நண்பராக இருக்கும் வரை ஆண்களது குணம் வேறாக இருக்கும். காதலராக மாறியதும் குணமும் மாறும். எனவே அவர் நண்பராக இருக்கும் போதான குணங்களைக் கண்டு நல்லவர் என அவசரப்பட்டு மனதை பறிகொடுத்து விடாதீர்கள்
//
குணமே மாறும் என்று கண்டிப்பாக கூறுவதர்க்கில்லை ஆனால் மாற்றங்கள் கண்டிப்பாக உண்டு.
உண்மை நண்பனின் அன்பு என்பது காமம் இல்லா 100% காதல் அதுதான் நட்பிற்க்கு மரியாதை!
உண்மை காதலனின் அன்பு என்பது சற்று காமம் கலந்த காதல் அதுதான் முழுமையான காதல்!
(இங்கே காமம் என நான் கூறியிருப்பது ஒரு ஈர்ப்பை மட்டுமே)
//
ஆசையை வளர்த்துக் கொள்வதற்கு முன்பாக அவரது குடும்ப விவரங்களைத் தெரிந்து கொள்ளுங்கள்.காதல் திருமணத்தைப்பற்றி அவரது குடும்பத்தாரின் அபிப்ராயம் என்ன என்பதையும் மறைமுகமாகக் கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள்
//
இதனை யோசிக்கும் அளவிற்க்கு பக்குவம் இருக்கும் போதா காதலிக்க தோடங்குகிறார்கள் இல்லை இதையெல்லாம் யோசித்துபார்த்துதானா காதல் தோடங்குகிறது? :)
//இங்க நீங்க சொல்லியிருக்குற தெளிவு எல்லோர்கிட்டயும் இருந்துதுனா எந்த குழப்பமும் இல்லையே! இல்லாமல் போவதுதான் வருத்தம் என்ன செய்ய அதுதான் இயல்பு!
சிந்தனைகள் அற்புதம் திவ்யா!
//
அப்படி சொன்னால் 'நச்'சென்றிருக்காது
'சப்'பென்று தான் இருக்கும்!
//
எப்படி இப்படி பின்னுறீங்க :))
:)) நல்லாதாங்க டிப்ஸ் கொடுக்கீறிங்க...
Hopefully......
And this makes 100?
ஒன்னு நூறு... இல்லை அதையும் தாண்டி.. எதுனாலும் மதி :)
ம் பயனுள்ள எச்சரிக்கைதான்..
காதலராக இருக்கும்பொழுது அவனிடம் /அவளிடம் தன்னுடைய பாஸிட்டிவ் பாயிண்ட் மட்டும்தான் காட்டுவார்கள்
திருமணத்திற்குப் பிறகுதான் அவனுடைய/ அவளுடைய நெகடிவ் பக்கமும் தெரிய வரும்
gud post...but i hav few contradiction in this...:)
but keep going :)
Post a Comment