January 14, 2008

அவள் வருவாளா??? - பகுதி 3பகுதி -1

பகுதி -2
பெண்கள் பாத்ரூம் கதவை திறந்து வெளியில் வந்தது 'ராஜா',
ஒரு நிமிடம் அதிர்ச்சியில் உறைந்தாள் ராஹினி, அவனும் திகைப்புடன் முழித்துக்கொண்டிருக்க, அவனை தொடர்ந்து அவன் பின்னாலிருந்து அவனுடன் படிக்கும் கல்பனா வெளிவந்தாள்.இருவரையும் கண்கொட்டாமல் பார்த்து மேலும் அதிர்ந்தாள் ராஹினி.

கல்பனா அணிந்திருந்தது ராஜாவின் ஊனிஃபார்ம் பேண்ட், ராஜா அவனது ஸ்போர்ட்ஸ் ஷார்ட்ஸில், இது ராஹினியின் குழப்பத்தையும் அதிர்ச்சியையும் பல மடங்கு அதிகரித்தது.
கல்பனாவும் ராஜாவும் என்ன சொல்வதென்று தெரியாமல் தடுமாற,
"சீ" என்று அருவருப்புடன் சொல்லிவிட்டு வேகமாக அங்கிருந்து ஒடிவிட்டாள் ராஹினி, ராஜா கூப்பிட்டும் அவள் நிற்கவில்லை.

ராஹினி வீட்டில் அனைவரிடமும் என்ன உளறி வைக்கப்போகிறாளோ, இவள் போட்டுக்கொடுக்கும் முன் இவளை தடுக்க வேண்டும் என விரைவாக ராஹினியின் வீட்டிற்கு சென்றான் ராஜா.

"அத்தை........ராகு.....எங்கே?" -ராஜா.

"ஸ்கூல்ல இருந்து பேய் அரைஞ்சாப்பல மிரண்டு போய் வந்தா, ரூம்ல போய் கதவு சாத்தினவதான், இன்னும் டிபன் சாப்பிட கூட வெளில வரலபா ராஜா, நீ போய் என்னாச்சுன்னு கேட்டு, அவளை கூப்பிட்டுட்டு வா, நீயும் இங்கேயே டிபன் சாப்பிடலாம், நான் ரெடி பண்றேன்" - ராஹினியின் அம்மா.

வெகு நேரம் கதவை தட்டின பிறகு ராஹினி ரூம் கதவு திறந்தாள்.

"இப்ப எதுக்கு..........இங்க வந்த நீ....." - ராஹினி

"ராகு , நான் சொல்றத கேளு....ஆக்சுவலா என்ன நடந்துச்சுன்னா......." - ராஜா

"சீ......பேசாதே, உன்னை பார்க்க கூட எனக்கு பிடிக்கல" - ராஹினி.

"ப்ளீஸ் ராகு, ஒரு நிமிஷம் என்ன நடந்துச்சுன்னு நான் சொல்றத கேளு, அப்புறம் கத்து" - ராஜா.

"அதான் நானே கண்ணாலே பார்த்தேனே....சீ.......நினைக்கவே அருவருப்பாயிருக்கு, ஏன் உனக்கு இப்படி போகுது புத்தி........ஸ்கூல்லயே இதெல்லாம்.....சே" - ராஹினி.

"என்னைப்பத்தி நீயே எப்படி இப்படி நினைச்சுட்டே ராகு " - ராஜா.

"யாராச்சும் இப்படிப்பட்டவன் ராஜான்னு என்கிட்ட சொல்லிருந்தா,'என் ராஜா' அப்படிபட்டவன் இல்லன்னு அடிச்சு சொல்லிருப்பேன், ஆனா நானே பார்த்துட்டேன் .....சே.........எப்படி...........எப்படி ராஜா..........நீ இப்படி, என்கிட்ட ஒருநாள் கூட நீ அத்துமீறி நடந்துக்கிட்டதில்லையே........அப்ப........அதெல்லாம் வேஷமா???" - ராஹினி.

"ராகு, என்ன நடந்ததுன்னு ஃபர்ஸ்ட் கேளு........நீயே எதாச்சும் உளறாதே" -ராஜா
"இதுக்கு மேல நீ பண்ண கன்றாவிய விளக்கமா என்கிட்ட சொல்லவேற போறியா, ஒன்னும் தேவை இல்ல போ" - ராஹினி.

"அங்க என்ன சண்டை, எதுக்கு ரெண்டு பேரும் கத்திட்டு இருக்கிறீங்க?" - ராஹினியின் அம்மா கிட்சனிலிருந்து.

"ராகு......நீயா.....ஏதோ நினைச்சுட்டு வீட்ல அம்மாகிட்ட உளறி வைக்காதே....ப்ளீஸ்" - ராஜா.

"ஒன்னும் கவலைப்படாதே....நீ பண்ணின அசிங்கத்தை என் வாயால யார்கிட்டவும் சொல்ல மாட்டேன். தெரியாத்தனமா உன் மேல இத்தனை வருஷம் வைச்ச அன்புக்காக.......இதையாச்சும் பண்ணி தொலைக்கிறேன்" - ராஹினி.

"தாங்க்ஸ் ராகு.........." - ராஜா.

"ஹலோ, இந்த ராகுன்னு கூப்பிடுறத இத்தோடு விட்டுரு, இனிமெ உனக்கும் எனக்கும் எதுவும் கிடையாது. நானும் உன்கிட்ட பேச போறதில்ல.................நீயும் என்கிட்ட பேச ட்ரை பண்ணாதே" - ராஹினி.

"ராகு...........ஸாரி.......ராஹினி,ஒரு மினிட் என்ன சொல்றேன்னு......." - ராஜா.
"தட்ஸ் இட்.......எண்ட் ஆஃப் அவர் ஸ்டோரி" - ராஹினி.

அன்றோடு ராஜா - ராஹினிக்குள் விரிசல் விழுந்தது.

கல்பனா ராஹினியிடம் தனியாக பேச முயற்ச்சித்த போதும் ராஹினி காச்சு மூச்சென்று கத்தி கலபனாவை அலட்ச்சியப்படுத்தினாள்.

இரண்டு வருட பிரிவுக்குப்பின் இப்போது கல்லூரி நடனப்போட்டியில் அவனுடன் சேர்ந்து ஆட மனம் ஒப்பாத ராஹினி கல்லூரியில் வகுப்பிலிருக்கையில், டிபார்ட்மெண்ட் H.O.D அழைப்பதாக தெரிவித்தார் லெக்ச்சுரர்.

H.O.D யை பார்க்க அவர் அறையினுள் நுழைந்தாள் ராஹினி. அங்கு அவளுக்கு முன்பாகவே ராஜா நின்றுக்கொண்டிருந்தான் பவ்யமாக. H.O.D பேச ஆரம்பித்தார்..

"ஸோ யு ஆர் ராஹினி ஃப்ரம் ஃப்ர்ஸ்ட் இயர்?"

"யெஸ் ஸார்" - ராஹினி

" நீ ரொம்ப நல்லா டான்ஸ் ஆடுவேன்னு ஸ்டுடன்ஸ் சொன்னாங்க. நெக்ஸ்ட் மன்த் நடக்கப்போற கல்ச்சுரல் காம்பிடேஷன் ல நீ டான்ஸ் இவண்ட்ல பார்டிஸிபேட் பண்ணு.
This is Raja from 3rd year, very good dancer. Join him in the dance group. Hope you both will do your level best and bring honour to our department, Good luck, you may go to your classes now" - H.O.D

H.O.D யை எதிர்த்து மறுப்பேதும் சொல்ல முடியாமல் " யெஸ் சார்" என்று ஆமோதித்துவிட்டு, இருவரும் அவ்வறையை விட்டு வெளியேறினர். வெளியில் வராண்டாவில் கைக்கட்டியபடி வெற்றிப்புன்னகையுடன் கவிதா,"கவி, பெருசா எதையோ சாதிச்சுட்டதா நினைப்பா, இதுவும் உன் வேலைதானா?" - ராஹினி.

"Shhh........ஹலோ மேடம் இது H.O.D ரூம், மெதுவா பேசு" - கவிதா.

"ஒ.கே ஃபைன், நான் டான்ஸ் ஆட ஒத்துக்கிறேன். ஆனா இந்த ஒரு தடவை மட்டும் தான். இந்த டான்ஸ் ப்ராக்டீஸ் பண்ற டைம்ல என்கிட்ட எந்த வம்பும் வைச்சுக்க வேணாம்னு சொல்லிவை அவன்கிட்ட" - ராஹினி.

ப்ராக்டீஸ் நடக்கிற ஒரு மாத டைம் எனக்கு போதும் உனக்கு ஒரு பாடம் கத்துக்கொடுக்க என்று மனதுக்குள் நினைத்துக்கொண்டே.....

"டான்ஸ்ல ஜோடியே தவிர வேற எந்த சம்பந்தமும் அவ கூட வைச்சுக்க போறதில்லைன்னு சொல்லு கவி" - ராஜா.

ஹப்பா, ஒரு வழியா ரெண்டு பேரையும் சம்மதிக்க வச்சாச்சு என்று நிம்மதி பெருமூச்சுவிட்டாள் கவிதா.

டான்ஸ் ப்ராக்டீஸ் படு ஸ்பீடாக நடந்தது. ராஜா- ராஹினி இருவரின் நடனத்திறமையைப் பார்த்து டான்ஸ் மாஸ்டர் மோஹன் அசந்துப்போனார்.

ராஜாவின் இளமை துள்ளும் ஆடலும்,
ராஹினியின் அழகிய முகபாவனைகளும்,
இருவருக்குள்ளும் மறைந்திருக்கும் 'கெமிஸ்டிரி'யின் வெளிப்பாடும் அவர்களது நடனத்தை, குழுவில் உள்ள அனைவரும் வியக்கும் வண்ணம் இருந்தது.

நடனப்போட்டிக்கு முன்பே இந்த ஜோடியின் நடனம் பற்றி ஒரு பரபரப்பு கல்லூரியில் பரவ ஆரம்பித்தது.

"இந்த ஆண்டு 'டேலண்ட்ஸ் நைட்' மற்றும் 'ஹார்மனி' கலைநிகழ்ச்சியிலும் இந்த ஜோடிதான் தூள் கிளப்ப போகுது என்று மாணவர்களுக்குள் ஒரு எதிர்பார்ப்பு எழுந்தது.

இவ்வாறு பெரும் பரபரப்பை உருவாக்கிக்கொண்டு நடனப்போட்டிக்காக் பயிற்ச்சி மேற்கொண்டிருந்த ஒரு நாள் மாலையில் ராஹினியினால் ராஜாவுக்கு ஈடுகொடுத்து ஆடமுடியவில்லை. அவளுக்கே உரித்தான நளினமும், வேகமும் அவளது நடனத்தில் தவறியது அன்று, ராஜாவும் அதனை கவனித்தான்.

அனைவரும் கேன்டீனுக்குச் சென்று டீ குடித்துவிட்டு வந்து, பின் நடனப்பயிற்ச்சியை தொடரலாம் என மாஸ்டர் அறிவிக்க்க, அனைவரும் மாஸ்டருடன் டான்ஸ் ஹாலிலிருந்து வெளியேறினர்.

ராஹினி மட்டும், தான் கேன்டீனுக்கு வர விரும்பவில்லை என கூறிவிட்டாள்.
அனைவரும் ஹாலிலிருந்து சென்ற சிறிது நேரத்தில், ராஹினி தன் ஹாண்ட் பேக்கில் ' எதையோ' தேடிக்கொண்டிருந்தாள்,

டான்ஸ் ஹாலின் கதவு சாத்தப்படும் சத்தம் கேட்டு திரும்பிய ராஹினி அங்கு ராஜாவைப் பார்த்து திடுக்கிட்டாள்.

டான்ஸ் ஹாலில் ராஹினியும் ராஜாவும் மட்டும்..........திகைப்பும் சிறிது பயமும் நிறைந்தவளாய் ராஹினி விழிக்க,

ராஜா ராஹினியை நோக்கி வந்தான்.....


[தொடரும்]

பகுதி - 4

32 comments:

said...

நல்லா இருக்கு கதை.

said...

சுவாரஸ்யமா தான் போகுது !!
சீக்கிரம் அடுத்த பகுதி போடுங்க மேடம்!! ;)

said...

அந்த ராஜா உண்மையாவே ஏதாச்சும் விவகாரமா பண்ணுறதா இருந்தா அந்த கல்பனாவுக்கு தன்ன்னுடைய பேண்ட்டை மாட்டி விட்டு கிட்டு இருக்க மாட்டான்!!

அப்போ தெரியாவிட்டாலும் கொஞ்ச நேரம் கழிச்சாவது எல்லா பொண்ணுக்கும் புரியும்!!
ஏதோ சொல்றீங்க!!
பாப்போம்!!! ;)

said...

திவ்யா அம்மணி !!!
சண்டைன்னா உங்களுக்கு ரொம்ப பிடிக்குமோ..?? :)))
அந்த சீன் எல்லாம் சூப்பரா டெவலப் பண்ணி இருக்கீங்க... ;))))
கதை ரெக்கை கட்டிகிட்டு பறக்குதுங்கோ... சூப்பர்ர்ர்ர்ர்ர்ர்....

said...

மீண்டும் பொருத்தமான படங்கள் கண்டெடுத்துப் போட்டிருக்கீங்க..
அவர்கள் சண்டை முடியட்டும் சீக்கிரம்..

said...

பொங்கல் வாழ்த்துக்கள்..!

கதை நன்றாக வளர்கிறது, இனிமையான எழுத்துக்கள், நீங்களே பெண் என்பதாலோ பெண் கதாபத்திரங்களும் உரையடல்களும் இயல்பாகவும் சுவாரசியமாகவும் இருக்கின்றன.

அடுத்த பாகத்தில் சந்திக்கலாம்...!

said...

//அப்போ தெரியாவிட்டாலும் கொஞ்ச நேரம் கழிச்சாவது எல்லா பொண்ணுக்கும் புரியும்!!
:)///

பொண்ணுங்க கிட்ட ரொம்ப எதிர் பாக்குறீங்கன்னு சொன்னா திவ்யா அடிக்க வருவாங்க அதனால நான் எதுவும் சொல்ல மாட்டேன்!!!

said...

கதை சூப்பர்:)

said...

மக்கா,
நீங்க ரொம்ப டிவீ சீரியல் பார்ப்பீங்க போல? எதுக்கு சொன்னேன்'னா, தொடரும் போடுற இடம் அடுத்து என்னவோ அப்படி'னு ஆர்வத்தை வரவைக்குது :)....

சீக்கிரம் அடுத்த பதவ போட்டுறுங்க :D

said...

சுவாரஸ்யமாக நகருது கதை இதே நிலை தொடர வாழ்த்துக்கள். படங்கள் அருமை, கிடைக்குமிடம்???? :)

said...

வந்தான்..வந்துட்டான்...கிட்ட வந்துட்டான்...சீக்கிரம் அடுத்த பதிவை போடுங்க மக்கா ;)

said...

:)))

waiting for next part... :))

said...

\\ Dreamzz said...
நல்லா இருக்கு கதை.\\

நன்றி Dreamzz.

said...

\\ CVR said...
சுவாரஸ்யமா தான் போகுது !!
சீக்கிரம் அடுத்த பகுதி போடுங்க மேடம்!! ;)\\

அடுத்த பகுதி சீக்கிரம் போட்டுரேனுங்க சார்!

said...

\\ CVR said...
அந்த ராஜா உண்மையாவே ஏதாச்சும் விவகாரமா பண்ணுறதா இருந்தா அந்த கல்பனாவுக்கு தன்ன்னுடைய பேண்ட்டை மாட்டி விட்டு கிட்டு இருக்க மாட்டான்!!

அப்போ தெரியாவிட்டாலும் கொஞ்ச நேரம் கழிச்சாவது எல்லா பொண்ணுக்கும் புரியும்!!
ஏதோ சொல்றீங்க!!
பாப்போம்!!! ;)\\

பொறுத்திருந்து பாருங்கள் சிவிஆர்!

said...

\\ ஜொள்ளுப்பாண்டி said...
திவ்யா அம்மணி !!!
சண்டைன்னா உங்களுக்கு ரொம்ப பிடிக்குமோ..?? :)))
அந்த சீன் எல்லாம் சூப்பரா டெவலப் பண்ணி இருக்கீங்க... ;))))
கதை ரெக்கை கட்டிகிட்டு பறக்குதுங்கோ... சூப்பர்ர்ர்ர்ர்ர்ர்....\

ஜொள்ளு பாண்டிண்ணா, வாங்கோ, வாங்கோ!
சண்டைன்னா எனக்கு ரொம்ப பயமுங்கண்ணா, சண்டை போடவே தெரியாதுங்கோ!
கதையை தொடர்ந்து படித்து கருத்து தெரிவிக்கிறீங்க, ரொம்ப தாங்க்ஸுங்கண்ணா!

said...

நல்லா போகுது!!

said...

romba swarasyamaa pogudhu !!!

said...

\\ பாச மலர் said...
மீண்டும் பொருத்தமான படங்கள் கண்டெடுத்துப் போட்டிருக்கீங்க..
அவர்கள் சண்டை முடியட்டும் சீக்கிரம்..\\

வாங்க பாசமலர்!
அவங்க சண்டையை சீக்கிரம் முடிப்பதி அப்படியென்ன அவசரம்?

படங்களை குறிப்பிட்டு பாராட்டியதிற்கு நன்றி பாசமலர்.

said...

\\ நிமல்/NiMaL said...
பொங்கல் வாழ்த்துக்கள்..!

கதை நன்றாக வளர்கிறது, இனிமையான எழுத்துக்கள், நீங்களே பெண் என்பதாலோ பெண் கதாபத்திரங்களும் உரையடல்களும் இயல்பாகவும் சுவாரசியமாகவும் இருக்கின்றன.

அடுத்த பாகத்தில் சந்திக்கலாம்...!\\

நிமல், பொங்கல் வாழ்த்துக்களுக்கு மனமார்ந்த நன்றி!

அடுத்த பகுதியையும் அவசியம் படியுங்கள்!

உங்கள் வருகைக்கும், உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும் நன்றி நிமல்!

said...

\\ குசும்பன் said...
//அப்போ தெரியாவிட்டாலும் கொஞ்ச நேரம் கழிச்சாவது எல்லா பொண்ணுக்கும் புரியும்!!
:)///

பொண்ணுங்க கிட்ட ரொம்ப எதிர் பாக்குறீங்கன்னு சொன்னா திவ்யா அடிக்க வருவாங்க அதனால நான் எதுவும் சொல்ல மாட்டேன்!!!\\

ஆஹா! குசும்பன் இவ்வளவு பயமா?
இன்னும் நீங்க 'பின்னூட்ட சண்டையை' மறக்கல போலிருக்கு!

said...

\\ குசும்பன் said...
கதை சூப்பர்:)
\\

ரொம்ப நாள் கழிச்சு என் வலைதளத்திற்கு வந்திருக்கிறீங்க, நன்றி குசும்பன்!

said...

\\ My days(Gops) said...
மக்கா,
நீங்க ரொம்ப டிவீ சீரியல் பார்ப்பீங்க போல? எதுக்கு சொன்னேன்'னா, தொடரும் போடுற இடம் அடுத்து என்னவோ அப்படி'னு ஆர்வத்தை வரவைக்குது :)....

சீக்கிரம் அடுத்த பதவ போட்டுறுங்க :D\\

கோப்ஸ், டிவி சீரியல் எனக்கு பிடிக்காத ஒன்று, கதையை படிச்சுட்டு இப்படி சொல்லிடீங்களே!
ஒருவேளை டிவி சீரியல் பார்த்தா இன்னும் நல்லா தொடர் கதை எழுதலாமோ?

அடுத்த பகுதி......நாளை!

நன்றி கோப்ஸ்!

said...

\\ ஸ்ரீ said...
சுவாரஸ்யமாக நகருது கதை இதே நிலை தொடர வாழ்த்துக்கள். படங்கள் அருமை, கிடைக்குமிடம்???? :)\\

உங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி Shree!

said...

\\ கோபிநாத் said...
வந்தான்..வந்துட்டான்...கிட்ட வந்துட்டான்...சீக்கிரம் அடுத்த பதிவை போடுங்க மக்கா ;)\

அஹா....செம எஃபக்ட் கொடுக்கிறீங்க கோபி!
அடுத்த பதிவு விரைவில் !

said...

\\ ஜி said...
:)))

waiting for next part... :))\\

அடுத்த பகுதிக்காக காத்திருப்பதிற்கு நன்றி ஜி!

said...

\\ வினையூக்கி said...
நல்லா போகுது!!
\\

நன்றி வினையூக்கி!

said...

\\ Arunkumar said...
romba swarasyamaa pogudhu !!!\\

நன்றி அருண்!!

said...

கதை நல்லா இருக்குங்க திவ்யா ! :)

காணும் பொங்கல் வாழ்த்துக்கள் :)

Anonymous said...

good story Divya, Expecting the next part soon :)

said...

\\ பொன்வண்டு said...
கதை நல்லா இருக்குங்க திவ்யா ! :)

காணும் பொங்கல் வாழ்த்துக்கள் :)\\

வாங்க பொன்வண்டு,முதல் முறையா வந்திருக்கிறீங்க, நன்றி.

உங்களுக்கும் எனது பொங்கல் வாழ்த்துக்கள்!

said...

\\ Gayathri said...
good story Divya, Expecting the next part soon :)\\

Thanks for ur visit & comments Gayathri!
Do read the next part too & share ur views!