January 10, 2008

அவள் வருவாளா??? - பகுதி 2
பகுதி -1

ராஹினியை டான்ஸ் ஆட சம்மதிக்க வைக்க வேண்டுமென்றால், அவள் அம்மாவிடம் 'ஐஸ்'போட்டு தாஜா பண்ணிட வேண்டியது தான், ராஜாவுடன் சேர்ந்து ஆடப்போகிறாள் என்பதை இப்போதிக்கு சொல்லாமல் அவளை சம்மதிக்க வைச்சு, முதல் நாள் ப்ராக்டிஸுக்கு மட்டும் அவளை வரவைச்சுட்டா போதும் , அப்புறம் அப்படியே மாட்டி விட்டுடலாம் என்று திட்டம் தீட்டிக் கொண்டே ராஹினியின் வீட்டை அடைந்தாள் கவிதா.

"ஆன்டி ,ஆன்டி, எங்க டிபார்ட்மென்ட் கல்ச்சுரல் காம்பிடேஷன்ல வின் பண்றதே இந்த டான்ஸலதான் இருக்கு, ஸ்கூல்ல எவ்ளோ பெரிய டான்ஸர் இவ, ப்ளீஸ் ஆன்டி இந்த ஒருதடவை எங்க டிபார்ட்பெண்டுக்காக இவளை டான்ஸ் ஆட சொல்லுங்க ஆண்டி. சீனியர்ஸ் இருக்காங்களே, பசங்க ரவுசு பண்ணுவாங்களேன்னு எல்லாம் கவலை பட வேணாம் ஆன்டி, நானும் அந்த டான்ஸ் குரூப்ல இருக்கிறேன், பொண்ணுங்க மட்டும் தான் ஆடுறோம் ஆன்டி, எல்லாரும் என்னோட ஃப்ரண்ட்ஸ் தான் ஆன்டி, ப்ளீஸ் ஆன்டி, அவளை நாளிக்கு ப்ராக்டிஸூக்கு வர சொல்லுங்க ஆன்டி!" ஒரு ஆயிரம் 'ஆன்டி'யும்,'ப்ளீஸ்' என்று கெஞசலும் போட்டு ஆன்டியை கவுத்தி, ஒருவழியாக ராஹினியை சம்மதிக்க வைத்தாள் கவிதா.

மறுநாள் ஈவினிங் க்ளாஸ் முடிந்ததும், கவிதா சொன்னபடி ஆடிடோரியத்துக்கு பின்னால் இருக்கும் டான்ஸ் ஹாலுக்கு வந்தாள் ராஹினி.

ராஜா அங்கு இருப்பான், அவனுடன் தான் சேர்ந்து தான் டான்ஸ் ஆட போகிறோம் என்றும் சற்றும் தெரியாமல் மெதுவாக டான்ஸ் ஹால் கதவை திறந்தாள் ராஹினி.

அவளுக்கு முன்பே அங்கு வந்து சேர்ந்திருந்த சீனியர்ஸ் அனைவரும், கவிதா செய்திருந்த ஏற்பாட்டின்படி பலத்த வரவேற்பு கொடுத்தனர் ராஹினிக்கு. அவர்கள் அன்பில் திக்கு முக்காடி போன ராஹினியின் கண்களில், எதையும் கண்டுக்கொள்ளாமல் தள்ளி நின்ற ராஜா தென்பட்டான்.


இவன் எதுக்கு இங்க வந்திருக்கிறான்? சே, இவன் மூஞ்சியை பார்த்துட்டேதான் டான்ஸ் ப்ராக்டிஸ் பண்ணனுமா? என்று ராஹினி யோசித்துக்கொண்டிருந்த போது, கோபாலின் அண்ணன் டான்ஸ் மாஸ்டர் மோஹன் தன் இரு சகாக்களுடன் அங்கு நடனப்பயிற்சி அளிப்பதற்காக வந்தார். அனவரின் கவனமும் அவர் மேல் திரும்பியது.

எந்த பாட்டிற்க்கு நடனம் ஆடலாம், யார் யார் எல்லாம் ஆடப்போகிறார்கள், தினமும் எந்த நேரத்தில் ப்ராக்டீஸ் ஆரம்பிக்கும் ,எவ்வளவு நேரம் பயிற்ச்சி நடக்கும் என்று டான்ஸ் மாஸ்டர் அடிக்கிக் கொண்டே போனப்போதுதான் ராஹினிக்கு தெரிந்தது தான் ராஜாவுடன் செர்ந்து ஆடப்போகிறோம் என்று, அதிர்ந்தாள்.

அனைவரின் முன்பும் தன் மறுப்பை தெரிவிக்க முடியாமல் தினறியவள், கவிதா தான் இதுக்கெல்லாம் காரணம், எங்கே அவ என்று தேடினாள், அவள் யார் பின்பாகவோ மறைந்துக்கொண்டாள்.

ஒருவழியாக டான்ஸ் இன்ஸ்டரக்ஷனோடு முதல் நாள் ப்ராக்டீஸ் முடிந்தது. அனைவரும் கலைந்துச் சென்றனர். கவிதாவை தேடி அவசரமாக வெளியில் வந்தாள் ராஹினி, தன் ஸ்கூட்டியில் எஸ்கேப் ஆக பைக் ஸ்டாண்டில் ரெடியாக இருந்த கவிதாவிடம் சென்றாள் ராஹினி.

ராஹினி கத்தி தீர்க்க போகிறாள் என திட்டவட்டமாக உணர்த்தியது அவளது வேகநடையும், கோபத்தில் சிவந்திருந்த அவளது முகமும். 'கடவுளே! காப்பாத்து' என்று கவிதா வேண்டி முடிப்பதற்குள் ராஜாவும் கவிதாவை தேடி அங்கு வந்து சேர்ந்தான்.
"ஐயோ! கடவுளே , இரண்டு பேருகிட்டவும் ஒரே நேரத்தில் மாட்டிக்கிட்டேனா!!" என்று மிரண்டு விழித்தாள் கவி.

"ஹே கவி, என்ன கொழுப்பா உனக்கு, நீயும் அவனும் சேர்ந்து டிராமா போடுறீங்களா? பொண்ணுங்க மட்டும் ஆடுற டான்ஸ்ன்னு பீலா விட்டே நேத்து, இங்க பார்த்தா கண்டவனும் டான்ஸ் ஆட வந்திருக்கான்" - ராஹினி.

"ஹலோ, மைண்ட் யுவர் வர்ட்ஸ்" என்று ராஹினியிடம் கூறிவிட்டு,
" கவிதா, நான் ஃப்ர்ஸ்டே சொன்னேன் இதெல்லாம் ஒத்துவராதுன்னு, அப்புறம் எதுக்கு நீ சாமி ஆடுறவள எல்லாம் டான்ஸ் ஆட கூப்பிட்டுட்டு வரே?" - ராஜா.

"இவன் பெரிய 'நடனப் புயல்'ன்னு நினைப்பு, இவன் சங்காத்தமே வேணாம்னு நான் ஸ்கூல்லயே ஒதுங்கிட்டேன், திரும்பவும் வம்பு பண்ண வேணாம்னு சொல்லிவை கவி" - ராஹினி.

"இவகிட்ட வம்பு பண்ணனும்னு இங்க யாரும் அலையல, எல்லாம் உன்னால வந்தது கவி" - ராஜா சீறினான் கவியிடம்.

"ஹெ, ரெண்டு பேரும் ஏன் இப்படி கத்துறீங்க, கூல் டவுன் ப்ளீஸ்! ஒரு நிமிஷம் ப்ளீஸ் வெயிட் பண்ணுங்க ரெண்டு பெரும், டான்ஸ் மாஸ்டர்கிட்ட ஒரு முக்கியமான விஷயம் சொல்ல மறந்துட்டேன், இதோ வந்துடுறேன்" என்று நைஸாக அவ்விடம் விட்டு நகர்ந்தாள் கவி.


"ஹே, லிஸன், கவிகிட்ட நான் ஆல்ரெடி சொல்லிட்டேன் என்னால உன்கூட ஆட முடியாதுன்னு. ஸோ நான் ஏதோ டிராமா போட்டேன்னு நினைச்சுட்டு குதிக்காதே" - ராஜா.

"நீ டிராமா போட்டாலும் சரி, டால்டா போட்டாலும் சரி, நான் உன்கூட ஆடமாட்டேன், நீ ஸ்கூல்ல பண்ணின கன்றாவியெல்லாம் மறந்துட்டேன்னு நினைச்சியா, சீ......உன்னைப்பார்த்தாவே அருவருப்பா இருக்கு எனக்கு" - ராஹினி.

"இதான்.....இந்த அவசர புத்தி தான் எல்லாத்துக்கும் காரணம். உன் திமிரு, வாயாடிதனம், கோபம் எல்லாம் எப்போ உன்னைவிட்டு போகுதோ, அப்பதான் நீ உருப்படுவ, அதுவரைக்கும் உன்கிட்ட நான் என்ன எக்ஸ்ப்ளேன் பண்ணினாலும் உன் மரமணடைல ஏறாது" - ராஜா.

"என்னைப்பத்தி, என் புத்தியை பத்தி பேச உனக்கு எந்த ரைட்ஸும் கிடையாது. உன் வேலை பார்த்துட்டு போடா" - ராஹினி.

" ஏய்....'டா' போட்டு பேசினா, மூஞ்சியப் பேத்துருவேன் , ஜாக்கிரதை" - ராஜா.

"என்ன ஓவரா மிரட்டுர? போடா.......பொறுக்கி" - ராஹினி.

"என்னடி சொன்ன..........??" - ராஜா.

"ஏன் நான் இன்னொருவாட்டி சொல்லிக்கேட்கனும் ஆசையா?................பொறுக்கி.........பொம்பளை பொறுக்கி!!" - ராஹினி.

"ஷட் யுவர் பிளடி மவுத், சீ.........நீ திருந்தவே இல்ல, திருந்தவும் மாட்டே.........உன்னை பார்த்தாலே வெறுப்பாயிருக்கு" - ராஹினி சொன்ன கணல் வார்த்தைகள் அவன் நெஞ்சை சுட, அவளை 'பளார்' என அரைய துடித்த கரங்களை கட்டுப்படுத்திக்கொண்டு தன் பைக்கில் வேகமாக பறந்தான் ராஜா.

சீறிக்கொண்டு புறப்பட்ட அவன் பைக் சென்ற திசையை பார்த்துக்கொண்டிருந்த ராஹினிக்கு, இரண்டு வருடங்களுக்கு முன் ஸ்கூல்லில் நடந்த அந்த சம்பவம் நினைவுக்கு வந்தது...

ராஹினி ராஜாவின் மாமா மகள், இருவரது வீடும் சில தெருக்கள் தள்ளி அருகாமையில் இருந்தது. சிறு வயதிலிருந்தே தங்கள் மனதில் ஒருவர் மேல் ஒருவருக்கு இருக்கும் பிரியத்தை தங்கள் கிண்டல் , கேலி, சண்டைகள் மூலம் பரிமாறிக்கொண்டனரே தவிர வெளிப்படையாக இருவரும் தங்கள் விருப்பத்தை வெளிப்படுத்திக்கொண்டதில்லை. எப்படியும் இவர்களது திருமணத்திற்கு பிற்காலத்தில் இருவரது வீட்டிலும் நிச்சயம் 'க்ரீன் சிக்னல்' தான் என்ற நம்பிக்கைதான் இதற்கு காரணம்.

ராஹினி, 10வது படிக்கும் போது ராஜா அதே பள்ளியில் 12 வது படித்தான். இருவருக்கும் அவ்வருடம் அரசு தேர்வு இருந்ததால், சாயங்காலம் அவ்வப்போது ஸ்பெஷல் க்ளாஸ் இருக்கும்.
அவ்வாறு ஒரு நாள் ஸ்பெஷல் க்ளாஸ் முடிந்து ராஹின் தன் வீட்டிற்கு திரும்பும் முன் பெண்கள் பாத்ரூமிற்கு தனியாக சென்றாள். யாருமற்ற வராண்டாவில் தன்க்கு பிடித்த பாடல் ஒன்றை சத்தமாக முனுமுனுத்தப்படி சென்றாள்.
பெண்கள் பாத்ரூமின் மெயின் கதவு உள்ளிருந்து பூட்டப்பட்டிருப்பது தெரியாமல், கதவை முழுபலத்தோடு திறக்க முயன்றாள் ராஹினி.
அதே வேளையில், உள்ளிருந்து யாரோ கதவை திறந்து வெளியில் வந்தார்கள், அப்போது...........


[தொடரும்]

அவள் வருவாளா?? - பகுதி 3

அவள் வருவாளா??? - பகுதி 4

46 comments:

said...

கதை சுவாரசியமா போகுதுங்க மாஸ்டர்!

said...

//என்னைப்பத்தி, என் புத்தியை பத்தி பேச உனக்கு எந்த ரைட்ஸும் கிடையாது. உன் வேலை பார்த்துட்டு போடா" - ராஹினி.

" ஏய்....'டா' போட்டு பேசினா, மூஞ்சியப் பேத்துருவேன் , ஜாக்கிரதை" - ராஜா.

"என்ன ஓவரா மிரட்டுர? போடா.......பொறுக்கி" - ராஹினி.

"என்னடி சொன்ன..........??" - ராஜா.//
ரசிக்க வைச்ச உரையாடல்கள்! காலேஜ் சண்டைகளை எல்லாம் நியாபகம் படுத்துது!

said...

அப்போது???

////Dreamzz said...

//என்னைப்பத்தி, என் புத்தியை பத்தி பேச உனக்கு எந்த ரைட்ஸும் கிடையாது. உன் வேலை பார்த்துட்டு போடா" - ராஹினி.

" ஏய்....'டா' போட்டு பேசினா, மூஞ்சியப் பேத்துருவேன் , ஜாக்கிரதை" - ராஜா.

"என்ன ஓவரா மிரட்டுர? போடா.......பொறுக்கி" - ராஹினி.

"என்னடி சொன்ன..........??" - ராஜா.//
ரசிக்க வைச்ச உரையாடல்கள்! காலேஜ் சண்டைகளை எல்லாம் நியாபகம் படுத்துது!//////


:-ஸ்
ஓஹோ!!!
கதை அப்படி போகுதா???
சூப்பரு!!!

said...

\\ Dreamzz said...
கதை சுவாரசியமா போகுதுங்க மாஸ்டர்!\\

நன்றி மிஸ்டர்!

said...

\\ Dreamzz said...
//என்னைப்பத்தி, என் புத்தியை பத்தி பேச உனக்கு எந்த ரைட்ஸும் கிடையாது. உன் வேலை பார்த்துட்டு போடா" - ராஹினி.

" ஏய்....'டா' போட்டு பேசினா, மூஞ்சியப் பேத்துருவேன் , ஜாக்கிரதை" - ராஜா.

"என்ன ஓவரா மிரட்டுர? போடா.......பொறுக்கி" - ராஹினி.

"என்னடி சொன்ன..........??" - ராஜா.//
ரசிக்க வைச்ச உரையாடல்கள்! காலேஜ் சண்டைகளை எல்லாம் நியாபகம் படுத்துது!\\

Dreamzz, மலரும் காலேஜ் நினைவுகளா???

said...

\\ CVR said...
அப்போது???\\

வருகைக்கு நன்றி சிவிஆர்,

அப்போது என்ன ஆச்சுன்னு பகுதி -3 ல் தெரிஞ்சுக்கலாம், சரியா!

said...

superb... really superb style of sriting... engayo poitinga divya.. adutha part eppo?

said...

\\"ஹே கவி\\

சீனியர்ன்னு ஒரு மரியாதை கூடவா இல்ல...

எல்லாம் நம்மளை மாதிரியே இருக்காங்க...வாழ்க வளர்க ;))

said...

@ Dreamzz

/\ரசிக்க வைச்ச உரையாடல்கள்! காலேஜ் சண்டைகளை எல்லாம் நியாபகம் படுத்துது!\\

ஆகா..ஆகா..தல உங்களுக்குமா...சூப்பரு ;))

\\நீ டிராமா போட்டாலும் சரி, டால்டா போட்டாலும் சரி, நான் உன்கூட ஆடமாட்டேன், நீ ஸ்கூல்ல பண்ணின கன்றாவியெல்லாம் மறந்துட்டேன்னு நினைச்சியா, சீ......உன்னைப்பார்த்தாவே அருவருப்பா இருக்கு எனக்கு" - ராஹினி.

"இதான்.....இந்த அவசர புத்தி தான் எல்லாத்துக்கும் காரணம். உன் திமிரு, வாயாடிதனம், கோபம் எல்லாம் எப்போ உன்னைவிட்டு போகுதோ, அப்பதான் நீ உருப்படுவ, அதுவரைக்கும் உன்கிட்ட நான் என்ன எக்ஸ்ப்ளேன் பண்ணினாலும் உன் மரமணடைல ஏறாது" - ராஜா.\\


இந்த சண்டை எதுல போய் முடியுமோ தெரியலியே..!.;)

said...

அப்போது????

என்னது இது.. படம் மாதிரி போகுது... நீங்களும் அந்த கடைசி நிமிச சஸ்பென்ஸ் வைக்க ஆரம்பிச்சிட்டீங்களா???

அவுங்க ரெண்டு பேரும் எவ்வளவு ப்ரியமா இருக்காங்கன்னு கொஞ்சம் சீன்ஸ் போட்டீங்கன்னா நல்லா இருக்கும்...

said...

ஓ பிளாஷ்பேக் வந்தாச்சா குட். நல்லா போது கதை. தொடருங்கள்... விளக்கமான கருத்து கதை முடிந்த பின் :)

said...

Hmm....

kadhai nala pogudhu ..appadiye nadakura madhiriye en manasula teriyudhu ..good ..Thodarndhu kalakunga ...

said...

அழகான நடை திவ்யா...சுவாரசியமாக நகர்த்துகிறீர்கள் கதையை.

said...

\\ Arunkumar said...
superb... really superb style of sriting... engayo poitinga divya.. adutha part eppo?\\

நன்றி அருண்!
அடுத்த பகுதி அடுத்த வார துவக்கத்தில்,அவசியம் படித்திவிட்டு உங்கள் கருத்துக்களை பின்னூட்டமிடுங்கள்!!

said...

எப்போதும் போலவே...
உங்கள் கதை நகர்த்தலும் உரையாடல்லளும் நன்றாக இருக்கிறது...

கதாபாத்திரங்களுடன் எங்களையும் உலாவ விடும் உணர்வு எற்படுகிறது...

Simple, but Sweet என்பது இது தான்...

"அவள் வருவாளா??? - பகுதி 3" வரும்வரை...
வாழ்த்துக்களுடன், நிமல்...!

said...

\\ கோபிநாத் said...
\\"ஹே கவி\\

சீனியர்ன்னு ஒரு மரியாதை கூடவா இல்ல...

எல்லாம் நம்மளை மாதிரியே இருக்காங்க...வாழ்க வளர்க ;))\

வாங்க கோபி,
சீனியர்னு ஒரு அன்பு கலந்த மரியாதையில் அப்படி செல்லமா கூப்பிடுறதெல்லாம் கண்டுக்ககூடாது!!

said...

@கோபிநாத்
\\இந்த சண்டை எதுல போய் முடியுமோ தெரியலியே..!.;)\\

சண்டை எங்கு போய் முடியுதுன்னு பொறுத்திருந்து பாருங்க கோபி!

வருகைக்கும் பின்னூட்டத்திர்க்கும் நன்றி!

said...

\\ ஜி said...
அப்போது????

என்னது இது.. படம் மாதிரி போகுது... நீங்களும் அந்த கடைசி நிமிச சஸ்பென்ஸ் வைக்க ஆரம்பிச்சிட்டீங்களா???

அவுங்க ரெண்டு பேரும் எவ்வளவு ப்ரியமா இருக்காங்கன்னு கொஞ்சம் சீன்ஸ் போட்டீங்கன்னா நல்லா இருக்கும்...\\

கதாசிரியர் 'ஜி' உங்கள் விமர்சனத்திற்கும் கருத்துக்களுக்கும் ரொம்ப நன்றி!

அவங்க ப்ரியத்தை வெளிப்படுத்துற சீன்ஸ் வேணுமா ஜி க்கு?
நினைவில் கொள்கிறேன் ஜி!

said...

\\ ஸ்ரீ said...
ஓ பிளாஷ்பேக் வந்தாச்சா குட். நல்லா போது கதை. தொடருங்கள்... விளக்கமான கருத்து கதை முடிந்த பின் :)\\

ஹாய் Shree,
தொடர்ந்து கதையை படித்து வருவதற்காக ஒரு ஸ்பெஷல் தாங்க்ஸ்!

தொடர் முடிந்ததும் ,உங்கள் விளக்கமான கருத்துக்களை நிச்சயம் தெரிவியுங்கள்!

said...

\\ kavidhai Piriyan said...
Hmm....

kadhai nala pogudhu ..appadiye nadakura madhiriye en manasula teriyudhu ..good ..Thodarndhu kalakunga ...\\


கவிதை ப்ரியன்,
கதையோடு இனைந்துப்போய் ரசித்திருக்கிறீர்கள், மிக்க மகிழ்ச்சி!

நீங்க கொடுத்து வரும் பின்னூட்ட உற்ச்சாகத்திற்க்கு மிக்க நன்றி!

said...

\\ பாச மலர் said...
அழகான நடை திவ்யா...சுவாரசியமாக நகர்த்துகிறீர்கள் கதையை.
\\

பாச மலர், உங்கள் பாராட்டிற்க்கு ரொம்ப நன்றி!

said...

\\ நிமல்/NiMaL said...
எப்போதும் போலவே...
உங்கள் கதை நகர்த்தலும் உரையாடல்லளும் நன்றாக இருக்கிறது...

கதாபாத்திரங்களுடன் எங்களையும் உலாவ விடும் உணர்வு எற்படுகிறது...

Simple, but Sweet என்பது இது தான்...

"அவள் வருவாளா??? - பகுதி 3" வரும்வரை...
வாழ்த்துக்களுடன், நிமல்...!\\

நிமல்,
நீங்கள் தரும் ஊக்கம் எனது ஆக்கம்!
உங்கள் தருகை எனது உவகை!

கதாப்பாத்திரங்களுடன் ஒன்றி போய் கதையை ரசித்தமைக்கு மிக்க நன்றி நிமல்!

said...

என்னைய மாதிரியே எதோ அஜால் குஜாலா எழுத போறீங்கன்னு தெரியுது!!!

said...

ச்சின்ன பையன் ரொம்பா எதிர்பாக்கிறேன் ஏமாத்தீறாதீங்க!!!!

said...

டான்ஸ் ப்ராக்டீஸ்னதும் குஷி படம் மாதிரி தோணுது!!

மூச்சு விடற டயலாக் எதும் இருக்குமா??
அவ்வ்வ்வ்

said...

வழக்கம் போல் ஒரு இளமை துடிப்போடு இருக்கிறது.

இந்த கல்லூரி, இளைங்கரகள் என்ற சுற்றத்தில் எழுதுவதால் தமில்ழில் நிறைய வீட்டுக் கொடுத்தல் (compromise) இருப்பதாக உணர்கிறேன். இந்த பேச்சு வழக்கில் மாற்றம் செய்தால் அதன் நெருக்கம் குறைந்து விடும் என்று நினைப்பதாலா அல்லது பேசுவது மாதிரியே எழுதுவதில் தவறில்லை என்று இன்று பத்திரிக்கை களே இப்படி தான் எழுதி வருகின்றன என்ற காரணத் தலா?

அப்புறம் இந்த ராஜா என்ற பெயர் தமிழ் சினிமாவின் ராசியோடு தொடர்புடைய பெயராக ரொம்ப காலம் இருந்தது. வேறு பெயரே தமிழ் நாட்டில் இல்லையா அல்லது ராஜா என்ற பெயர் கொண்டவர்கள் மட்டுமே காதல் செய்வார்களோ என்று எண்ண வைக்கும் அளவு கொடி கட்டி பறந்த பெயர்.

அடுத்த பகுதி வெளியிட்டதும் சொல்லுங்க.

said...

//அப்போது???

////Dreamzz said...

//என்னைப்பத்தி, என் புத்தியை பத்தி பேச உனக்கு எந்த ரைட்ஸும் கிடையாது. உன் வேலை பார்த்துட்டு போடா" - ராஹினி.

" ஏய்....'டா' போட்டு பேசினா, மூஞ்சியப் பேத்துருவேன் , ஜாக்கிரதை" - ராஜா.

"என்ன ஓவரா மிரட்டுர? போடா.......பொறுக்கி" - ராஹினி.

"என்னடி சொன்ன..........??" - ராஜா.//
ரசிக்க வைச்ச உரையாடல்கள்! காலேஜ் சண்டைகளை எல்லாம் நியாபகம் படுத்துது!//////


:-ஸ்
ஓஹோ!!!
கதை அப்படி போகுதா???
சூப்பரு!!!//

repeetayyyyy

said...

kathai romba nallaa aarambichi irukkunga master.. kalakkunga..

said...

வார்ரே வா.... திவ்யா..
அப்படியே படம் பார்க்கிற ஒரு Effect ...

டயலாக் எல்லாம் ரொம்ப நேர்த்தி போங்க.. எப்படிங்க திவ்யா இப்படி கலக்குறீங்க.. நமக்கும் கொஞ்ச கத்துக்கொடுக்கறதுதானே... ;)))))) usefulaa இருக்கும்.. கதை எழுததாங்க.. சரியா ...?? :))))

said...

@ மங்களூர் சிவா

வருகைக்கும் பின்னூட்டமிட்டதிற்கும் நன்றி சிவா!

said...

\ Mangai said...
வழக்கம் போல் ஒரு இளமை துடிப்போடு இருக்கிறது.

இந்த கல்லூரி, இளைங்கரகள் என்ற சுற்றத்தில் எழுதுவதால் தமில்ழில் நிறைய வீட்டுக் கொடுத்தல் (compromise) இருப்பதாக உணர்கிறேன். இந்த பேச்சு வழக்கில் மாற்றம் செய்தால் அதன் நெருக்கம் குறைந்து விடும் என்று நினைப்பதாலா அல்லது பேசுவது மாதிரியே எழுதுவதில் தவறில்லை என்று இன்று பத்திரிக்கை களே இப்படி தான் எழுதி வருகின்றன என்ற காரணத் தலா?

அப்புறம் இந்த ராஜா என்ற பெயர் தமிழ் சினிமாவின் ராசியோடு தொடர்புடைய பெயராக ரொம்ப காலம் இருந்தது. வேறு பெயரே தமிழ் நாட்டில் இல்லையா அல்லது ராஜா என்ற பெயர் கொண்டவர்கள் மட்டுமே காதல் செய்வார்களோ என்று எண்ண வைக்கும் அளவு கொடி கட்டி பறந்த பெயர்.

அடுத்த பகுதி வெளியிட்டதும் சொல்லுங்க.\\

வாங்க மங்கை,
விரிவான கருத்து பரிமாற்றத்திற்கு மிக்க நன்றி,

அடுத்த பகுதி வெளியிட்டதும் அவசியம் தெரிவிக்கிறேன், படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை பின்னூட்டமிடுங்கள்!!

said...

\\ ரசிகன் said...
kathai romba nallaa aarambichi irukkunga master.. kalakkunga..\\

ரொம்ப நன்றி ரசிகன்.

said...

\\ ஜொள்ளுப்பாண்டி said...
வார்ரே வா.... திவ்யா..
அப்படியே படம் பார்க்கிற ஒரு Effect ...

டயலாக் எல்லாம் ரொம்ப நேர்த்தி போங்க.. எப்படிங்க திவ்யா இப்படி கலக்குறீங்க.. நமக்கும் கொஞ்ச கத்துக்கொடுக்கறதுதானே... ;)))))) usefulaa இருக்கும்.. கதை எழுததாங்க.. சரியா ...?? :))))\

பாண்டிண்ணே, உங்களுக்கு டயலாக் சொல்லிக்கொடுக்கிற அளவுக்கு இன்னும் நாங்க தேரலீங்க குருவே!

உங்கள் ஊக்கமளிக்கும் பின்னூட்டத்திற்க்கு நன்றிங்கண்ணா!

said...

:):):)

நல்லா இருக்கு. அடுத்த பாகம் சீக்கிரம் போடுங்க

said...

hmm அப்புறம் என்னங்க ஆச்சு?

said...

படிக்கும் போதே ஒரு மகிழ்ச்சியை ஏற்ப்படுத்தி நல்ல மிகிழ்ச்சியான மனநிலையில் கதையை படிக்க வைக்கிறது உங்கள் எழுத்து நடை...

வாழ்த்துக்கள்..

தினேஷ்

said...

Divya,

Lady Bhagyaraj aakittingalee..
avar thaan screen play specialist..twist and turns ellam kodupparu...
nalla interesta poguthu divya kathai...

Raj.

said...

aah aah... kadhai arumai.. waiting for the next episode..

koooti kalichi paaartha, sumtimes neraiah perutu college life orey maadhiri ah thaaaan irukum pola.. :D

said...

///"இதான்.....இந்த அவசர புத்தி தான் எல்லாத்துக்கும் காரணம். உன் திமிரு, வாயாடிதனம், கோபம் எல்லாம் எப்போ உன்னைவிட்டு போகுதோ, அப்பதான் நீ உருப்படுவ, அதுவரைக்கும் உன்கிட்ட நான் என்ன எக்ஸ்ப்ளேன் பண்ணினாலும் உன் மரமணடைல ஏறாது" - ராஜா./////

இதுக்கு நான் வழக்கம் போல் கமெண்ட் போட்டால் நீங்க திரும்ப சண்டைக்கு வருவீங்க:)) அதனால் இதுக்கு நான் எதுவும் கருத்து சொல்ல மாட்டேன்!!!

said...

\ வினையூக்கி said...
:):):)

நல்லா இருக்கு. அடுத்த பாகம் சீக்கிரம் போடுங்க\

நன்றி வினையூக்கி!

said...

\\ தினேஷ் said...
படிக்கும் போதே ஒரு மகிழ்ச்சியை ஏற்ப்படுத்தி நல்ல மிகிழ்ச்சியான மனநிலையில் கதையை படிக்க வைக்கிறது உங்கள் எழுத்து நடை...

வாழ்த்துக்கள்..

தினேஷ்\\

உங்கள் அழகான பின்னூட்டமளிக்கும் உற்சாகம் எனது ஆக்கம்!
ரொம்ப நன்றி தினேஷ்!

said...

\\ Raj said...
Divya,

Lady Bhagyaraj aakittingalee..
avar thaan screen play specialist..twist and turns ellam kodupparu...
nalla interesta poguthu divya kathai...

Raj.\\

ஹாஹா!
என்ன ராஜ், பாக்கியராஜ் ரேஞ்சுக்கு கொண்டு போய்ட்டீங்க!

நன்றி ராஜ்!

said...

\\ My days(Gops) said...
aah aah... kadhai arumai.. waiting for the next episode..

koooti kalichi paaartha, sumtimes neraiah perutu college life orey maadhiri ah thaaaan irukum pola.. :D\\

உங்கள் கல்லூரி நினைவுகளை ஞாபகப்படுத்தியதா இந்த கதை?

வருகைக்கு நன்றி கோப்ஸ்!

said...

\\ குசும்பன் said...
///"இதான்.....இந்த அவசர புத்தி தான் எல்லாத்துக்கும் காரணம். உன் திமிரு, வாயாடிதனம், கோபம் எல்லாம் எப்போ உன்னைவிட்டு போகுதோ, அப்பதான் நீ உருப்படுவ, அதுவரைக்கும் உன்கிட்ட நான் என்ன எக்ஸ்ப்ளேன் பண்ணினாலும் உன் மரமணடைல ஏறாது" - ராஜா./////

இதுக்கு நான் வழக்கம் போல் கமெண்ட் போட்டால் நீங்க திரும்ப சண்டைக்கு வருவீங்க:)) அதனால் இதுக்கு நான் எதுவும் கருத்து சொல்ல மாட்டேன்!!!\\

பரவாயில்லை குசும்பன், சும்மா தைரியமா உங்க கருத்து சொல்லுங்க!
நான் இனிமே சண்டைக்கெல்லாம் 'அவசியம்' இல்லாம வரமாட்டேன்!

said...

திவ்யாக் கண்ணு,
தமிழ்மண நட்சத்திரமானதற்கு வாழ்த்துக்கள்.

தொடர்கதை அருமை.

ரொம்ப நீ....ளமா எழுதறே.
தமிழ்ல Type பண்ணுவது எவ்வளவு கஷ்டம்னு எனக்குத் தெரியும். (அச்சசோ...
கை வலிக்குமேடா)

எல்லோரும் போகிற போக்கில், படிக்கப் பொறுமையின்றி...
முழுசா படிப்பாங்களா?

இளசுங்களுக்கு Sharp editing கலை பற்றி,
நன்குத் தெரியும்.
இது அவசர யுகம்.
ஏதோ தாத்தா உரிமையோட சொல்றேன்.
தப்புன்னா மன்னிச்சுடுடாக்
கண்ணு.

உன் பதிவுகள் அத்தனையும் மொத்தமா படிச்சுட்டு...அடுத்த வாரம்,
என் கருத்தைச் சொல்றேன்.

சரியா..

எல்லாத்தையும் கட்டாயம் படிப்பேண்டாக் கண்ணு.

said...

\\ சாம் தாத்தா said...
திவ்யாக் கண்ணு,
தமிழ்மண நட்சத்திரமானதற்கு வாழ்த்துக்கள்.

தொடர்கதை அருமை.

ரொம்ப நீ....ளமா எழுதறே.
தமிழ்ல Type பண்ணுவது எவ்வளவு கஷ்டம்னு எனக்குத் தெரியும். (அச்சசோ...
கை வலிக்குமேடா)

எல்லோரும் போகிற போக்கில், படிக்கப் பொறுமையின்றி...
முழுசா படிப்பாங்களா?

இளசுங்களுக்கு Sharp editing கலை பற்றி,
நன்குத் தெரியும்.
இது அவசர யுகம்.
ஏதோ தாத்தா உரிமையோட சொல்றேன்.
தப்புன்னா மன்னிச்சுடுடாக்
கண்ணு.

உன் பதிவுகள் அத்தனையும் மொத்தமா படிச்சுட்டு...அடுத்த வாரம்,
என் கருத்தைச் சொல்றேன்.

சரியா..\

சாம் தாத்தா,
நமஸ்காரம்!

உங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி!

சிறுகதை எழுதுவது கடினமாக இருப்பதால் தான், தொடர் கதை எழுதினேன்......அதுவும் நீளம் ஜாஸ்தியாயிருக்கா தாத்தா??

இனிமே இன்னும் கொஞ்சம் சிறிய பகுதிகளா எழுத முயற்ச்சிக்கிறேன்,

பேத்திக்கு அலோசனைகளை அள்ளித்தந்திருக்கிறீங்க, மிக்க நன்றி தாத்தா!!

தொடர் கதை முழுவதையும் படிச்சுட்டு கருத்து சொல்லுங்க!