![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgatnNE7SG78Dy2JT9CXOUIhXyY7PMQ5UPmUhInVlXjSgieJi51TZOBlqjRJPHtWDeS2PLo9GfeYCVzPJ5eKJ1YRreQCPtwttMk9_jm-wDTUPcHBglcdBKgEzRS0GRR-JWIzJ7l/s320/Madhumathi0704_006.jpg)
'மது' என்று செல்லமாக அழைக்கப்படும் 'மதுமிதா' சென்னை எத்திராஜ் கல்லூரியில் பி,காம் இறுதியாண்டு படிக்கும் சுட்டிப்பெண். +2 வில் அறிவியல் பாடப்பிரிவு தேர்ந்தெடுத்தால் தன்னையும் தன் அண்ணன் சுந்தரைப் போல் சாஃப்ட்வேர் இஞ்சினியராக்கி கம்பியூட்டர் முன்னாடியே காலம் தள்ள வைச்சிருவாங்க என்று முன்னெச்சரிக்கையுடன் காமர்ஸ் குரூப்பில் சேர்ந்தாள் மது.
வாழ்க்கையை அதன் போக்கில் ஜாலியாக அனுபவிக்க நினைக்கும் ஓர் இளஞ்சிட்டு மது.
மதுவின் பெரியம்மா மகன் சுரேஷ் ஹைதரபாத்திலிருந்து வேலை மாறுதலாகி சென்னைக்கு தன் மனைவி சுபாஷினி, இரண்டு வயது குழந்தை அனுவுடன் வந்தான். மதுவின் வீட்டிற்கு இரண்டு தெரு தள்ளியிருந்த அபார்ட்மெண்டில் குடியேறினார்கள் சுரேஷின் குடும்பம்.
சுபாஷினி என்ற 'சுபா' மதுவைப்போன்றே மிகவும் கலகலப்பான ஜாலி டைப். அவளும் பி.காம் பட்டதாரி என்பதால், மது அவளிடம் பாட சம்பந்தமாக டவுட் கேட்கப்போவதாக தன் அம்மாவிடம் டூப் விட்டு விட்டு, சுபாவுடன் அரட்டை அடிக்கச் செலவாள்.ஒத்த அலைவரிசையிலிருந்த அண்ணி சுபாவுடன் மிக எளிதாக பழகிவிட்டாள் மது.
சுரேஷ்-சுபா வின் திருமணம் சுபாவின் ஊரான திருச்சியில் நடைபெற்றபோது மதுவிற்க்கு ஸ்கூல் எக்ஸாம் இருந்ததால் அவள் செல்ல முடியவில்லை. சுபாவை சந்திக்க அதன்பின் மதுவிற்க்கு சந்தர்ப்பமே கிட்டவில்லை. இப்போதுதான் மதுவிற்க்கு சுபாவின் அறிமுகம், பழக்கம் எல்லாம், அதனால் அவர்களது திருமண ஆல்பத்தை பார்க்கவேண்டும் என நச்சரித்து சுபாவை அந்த கணமான ஆல்பத்தை மேல் அலமாரியிலிருந்து எடுக்க வைத்தாள் மது.
சுபா சமையலறையில் வேலையாக இருந்ததால், ஆல்பத்தில் புகைபடங்களிலிருந்த சுபாவின் சொந்தங்களை விவரித்து சொல்ல இயலவில்லை. மது தன் குடும்பத்தினரை மட்டும் புகைப்படங்களில் அடையாளம் கண்டுக்கொண்டு பார்த்துக்கொண்டிருந்தாள்.
அந்த வயதிற்கே உரிய ஆர்வத்தில், 'எவனாவது பார்க்கிற மாதிரி நச்சுன்னு இருப்பானா கல்யாண கும்மலில்' என்று கண்களை அலைபாய விட்டாள்.
'பளிச்சென்று' அவன் முகம்...............சாதாரனமாக சைட் அடிக்கும் எண்ணத்துடன் புகைப்படங்களை துலாவிய கண்களில் அவன் பிம்பம் பட்டதும், ஏன் இந்த உணர்வு என்னுள் என வியந்தவளாக, சிறிது நேரம் அவனையே உற்றுப் பார்த்துக்கொண்டிருந்தாள்.
' சே, எல்லாம் வயசுக் கோளாறு' என்று தன்னைத்தானே திட்டிக்கொண்டு, அடுத்த பக்கத்தை புரட்டினாள், அங்கும் அவன் ஃபோட்டோ...........இதில் அழகானதொரு சிரிப்புடன்.
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEicgPJYEIZ9IsebGitD4ivzHVwecW2b4dQzjCWiEYmwwGR6JIg4x0FF-CSxNb8XdYZ-oE_Z59L3Vyhv_E2CE1mzXQXwQq94smn03tTbpZvInbdqKNKOAeH9c1bjCF2_iN0G8-wb/s320/SELVAM120805_1.jpg)
அவனைவிட்டு கண்கள் விலக மறுத்தது.
ஆண்களின் சராசரி உயரத்திற்கும் சற்று கூடுதலான உயரம்,
உயரத்திற்க்கு ஏற்ற உடல் எடை,
பரந்து விரிந்த தோள்கள் ஒரு கம்பீரத்தை கொடுத்தது,
மாநிறமான சருமம்,
தீர்க்கமான கண்களில் ஒரு காந்தம்,
புன்னகைக்கும் உதடுகள் ' புகைத்ததில்லை நான்' என சான்று தந்தது,
ஆணின் ஆசைகளின் அளவு கோலான 'மீசை' அளவான அளவுடன்....
மதுவின் ரசனையில் ஃபோட்டோவில் இன்னும் சிரித்துக்கொண்டிருந்தான் 'அவன்'.
"ஏய் மது , யாரடி அப்படி சைட் அடிக்கிற" கேட்டுக்கொண்டே சுபா வந்தாள்.
"அண்...ணி, இது ..........யாரு?" அவனை சுட்டிக்காட்டிக்கொண்டே, அவன் படத்திலிருந்து கண்களை விலக்காமல் கேட்டாள் மது.
சுபாவின் குரல் கம்மியது, முகம் மாறியது...
"அது என் தம்பி......அருண்"
"உங்க தம்பியா, நம்பவே முடியல அண்ணி, எப்படி உங்க தம்பியாயிருந்துட்டு அவரு மட்டும் இவ்வளவு அழகாயிருக்காரு?" என்று கண் சிமிட்டி கிண்டலடித்தாள் மது.
ஆனால் அண்ணி அதை ரசிக்காமல் வெறித்துப் பார்த்துக்கொண்டிருப்பது மதுவுக்கு என்னவோ மாதிரி இருந்தது.
" என்னாச்சு அண்ணி........ஏன் ஒருமாதிரி ஆகிட்டீங்க?"
பாணுப்பிரியாவின் சாயல், அவளது அதே பெரிய அழகு விழிகள் சுபாவிற்கு, அவ்விழிகளில் நீர் துளிகள் தெரித்தன.
ஆல்பத்தை மூடி வைத்துவிட்டு அண்ணியின் கரம்பிடித்து,
"ஆழாதீங்க அண்ணி, என்கிட்ட சொல்லலாம்னா சொல்லுங்க.......அழாதீங்க ப்ளீஸ், யாராச்சும் அழுதா கூட சேர்ந்து அழத்தான் எனக்கு தெரியும், ஆறுதல் படுத்த தெரியாது......" என்று தன் அப்பாவியான குழந்தைத்தனத்துடன் கேட்க்கும் 'புன்னகை பூ' மதுவின் புன்னகையற்ற முகத்தைப் பார்க்க சுபாவிற்கு பரிதாபமாக இருந்தது.
தன் தம்பி அருணுக்கும், தன் தாய்மாமன் மகள் பவித்திராவுக்கும் வீட்டில் பெரியவர்களால் திருமணம் செய்து வைக்க முடிவெடுத்ததையும்,
அவர்கள் இருவரும் ஒருவரையொருவர் விரும்பியதையும்,
சுபாவின் தலை தீபாவளியன்று அருணும், பவித்திராவும் பைக்கில் செல்லும்போது விபத்தில் பவித்திரா பலியானதும்,
சில மாதங்கள் அருண் பித்தம் பிடித்தவன்போல் தன்னை மறந்து இருந்ததையும்,
குணமான பின் பெங்களூரில் அவன் வேலைப்பார்த்த கம்பெனியின் மூலம் அமெரிக்கா சென்று மூன்று வருடங்களாகியும் இந்தியா வர மறுப்பதையும் சொல்லி முடித்தாள் சுபா.
மதுவின் கன்னங்களில் நீர்தாரைகள் வழிந்தது. லூட்டி அடிக்கும் சிட்டிற்கு மனம் கணமானது.
கற்பனையில் கருவாக உருவான கனவு ஒன்று மறைந்து போகவா? வேண்டாமா? என்று தடுமாறியது மதுவின் நெஞ்சுக்குள்.
ஆல்பத்தில் பவித்திராவின் புகைப்படத்தை அண்ணி காண்பித்துக்கொடுக்க கண்டாள் மது...
கருப்பு ரோஜா..
கவர்ச்சி கண்கள்..
கட்டுடல் மேனி..
கிரங்கடிக்கும் புன்னகை
என்று பட்டுப் புடவையில் பளிச்சென்று 'இன்னுமொருமுறை திரும்பிப்பார்' என பார்க்கதூண்டும் அழகுடன் இருந்தாள் பவித்திரா.
-----------*----------*--------------*----------------
மதுவுக்கு செம்ஸ்டர் எக்ஸாம், வீட்டில் அப்பா அம்மா சொந்த ஊருக்கு போக வேண்டிய நிர்ப்பந்தம், அதனால் மது சுரேஷ் அண்ணா வீட்டில் தங்கினாள்.
" அவளோட சேர்ந்து நீயும் ஆட்டம்போடாம , அவளை ஒழுங்கா எக்ஸாமுக்கு படிக்கவை" என்று அண்ணிக்கு கட்டளையிட்டு விட்டு அண்ணன் ஆஃபீஸிற்க்கு சென்றான்.
அண்ணி குழந்தையை குளிப்பாட்ட பாத்ரூம் சென்று விட்டாள்.
சிறிது நேரத்தில் ஃபோன் மணி அடித்தது.
"அண்ணி, ஃபோன்..........கார்ட்லஸ் எடுத்துட்டு வரவா??" என்று கேட்டாள் மது.
" வேண்டாம் மது, அனு ரொம்ப அழறா, என்னால இப்போ பேச முடியாது, நீயே யாருன்னு ஃபோன்லன்னு கேளு" என்றாள் சுபா.
ரீசிவரை எடுத்த மது,
" ஹலோ " என்றாள்
"ஹலோ" ஆணின் அடிக்குரல்.......
"ஹலோ"
"ஹலோ, யார் இது"
"ஹலோ, ஃபோன் பண்ணினது நீங்க,யாருன்னு நீங்கதான் சொல்லனும்"
"ஹலோ, நான்........நீங்க யாருங்க" ஆண்குரலில் சிறிது எரிச்சல் இப்போது.
"ஹலோ, நீங்க யாரு, யாருகிட்ட பேசனும்னு சொல்லுங்க, நீங்க ஃபோன் பண்ணிட்டு , என்னை யாரு யாருன்னு கேட்டா என்ன அர்த்தம்?" பொரிந்தாள் மது..
"நான் .....என் அக்காகிட்ட பேசனும்"
"அக்காகிட்டனா, அவங்களுக்கு பேரு எல்லாம் இல்லியா? உங்களுக்காச்சும் பேரு இருக்கா, என்ன பேரு சொல்லுங்க???"
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiZXqM5LdZZO3Zn29iXAwtEL_7pJNdxHM65_iBNjjpywqdGI6zYrMV4JSwwKd0ineOCYzrnX9CEnEZDi9hD0zWkQ4K3sby7H3Yf37PZT87s9ZR0uE-0FTQins2lyhgGaZhE8kQW/s320/kudaikul18pg.jpg)
"யாருங்க நீங்க, கேள்வி மேல கேள்வி கேட்குறீங்க, என் அக்கா சுபாகிட்ட ஃபோன் கொடுங்க, நான் அருண் பேசுறேன்னு கூப்பிடுங்க அவளை" என்று படபடத்தான்.
ஆஹா...........இது அருண்.............அமெரிக்காவிலிருந்து!! எரிச்சலும் கோபமும் கலந்து பேசினாலும் நல்லாத்தான் இருக்கு அவன் வாய்ஸ். சரி நம்ம கலாட்டாவை ஆரம்பிக்கலாம் என்று முடிவெடுத்தவளாக,
"சுபாவோட தம்பி அருணாப்பா நீ, எப்படிப்பா இருக்க, அமெரிக்கா நல்லாயிருக்காப்பா?"
"ஹலோ நீங்க யாரு, நான் அமெரிக்காவுல இருக்கேன்னு உங்களுக்கு எப்படி தெரியும்"
"உன் அக்கா சுபாதான் சொல்லிச்சுப்பா, நீ நல்லாயிருக்கியா ராசா??"
"நீங்க யாருன்னு முதல்ல சொல்லுங்க ப்ளீஸ்"
**இப்பத்தான் பையனோட குரல் 'ப்ளீஸ்' அப்படின்னு கொஞ்சம் இறங்கி வந்திருக்கு, விடாதே மது கண்டினியு** என்றது மதுவிற்க்குள் ஒரு குரல்!
"யப்பா அருணு, நான் இங்க உன் அக்கா வீட்டுல வேலை செய்யுற பாட்டி ராசா, அக்கா உள்ள குழந்தையை குளிப்பாட்டிட்டு இருக்கு, அதான் நான் ஃபோன் எடுத்தேன். அக்காகிட்ட ஏதாச்சும் சொல்லனும்னா என்கிட்ட சொல்லுப்பா, நான் சொல்லிடுறேன்"
"நீங்க.............நிஜம்மா..........வயசான பாட்டியா? உங்க பேச்சு கேட்டா அப்படி தெரியலியே?"
" என்னய்யா பண்றது, காலம் செல்ல செல்ல என் இளமையை மறைய வைச்சு முதுமை கொடுத்த கடவுள் என் குரலிலுள்ள இளமையை மட்டும் எடுத்துக்க மறந்துட்டான்பா"
"ஒஹோ...சரிங்க, நான் அப்புறமா பேசுறேன்னு அக்காகிட்ட சொல்லிடுங்க"
"சரிப்பா ராசா, உடம்ப பார்த்துக்க, நேரத்துக்கு சாப்பிடுப்பா சரியா?"
"சரிங்க"
"ஒரு நிமிசம் இருப்பா, உன் அக்கா வந்தாச்சு..........."
யாரு ஃபோன்ல என்று சைகையிலியே கேட்டப்படி அங்கு சுபா குழந்தையுடன் வர, ரீசிவரை கை வைத்து பொத்திக்கொண்டு தன் 'பாட்டி' டிராமாவை அருணிடம் காட்டிக்கொடுக்க வேண்டாமென கெஞ்சியபடி ஃபோனை சுபாவிடம் தந்தாள் மது.
மதுவின் குறும்பை ரசித்தபடியே, சுபா தன் தம்பி அருணிடம் ' பாட்டி' டிராமாவை காட்டிக்கொடுக்காமல், வீட்டில் வேலை செய்கிற பாட்டிதான் ஃபோன் பேசியதாக சொல்லி சமாளித்தாள்.
அதன்பின் மது, அருண் எப்போதெல்லாம் ஃபோன் பண்ணுவான் என்று நச்சரிக்க அரம்பித்தாள் சுபாவை. மதுவின் தொல்லை தாங்காமல் சுபாவும் அருணின் ஃபோனை முதலில் ' பாட்டி' எடுக்கவும் , பின் தான் பேசுவதுமாக வழக்கமாக்கிக் கொண்டாள்.
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhisbgQcziqOwEcqru_bR6Jgz1XltaOsQwt2GgR79YgyIAWpePu2UfZcqgkw0RRyQKr7HjFbsQlNUjwbjqowlYNOrfuCfWAYQDS-1McjB2zsgriKxckAmCEQcub-gX9w_q-FcPK/s320/k2.jpg)
இவ்வாறாக மூன்று மாதங்கள் ஓடிவிட்டது. அன்று ஒரு நாள் 'பாட்டி' ஃபோனில் தன் பாசத்தை பொழிந்தபோது அருண் ......
[தொடரும்]
மதுமிதா-2
மதுமிதா-3
63 comments:
அடுத்த பதிவு போட்டாச்சா! சூப்பரு :)
//தன் அண்ணன் சுந்தரைப் போல் சாஃப்ட்வேர் இஞ்சினியராக்கி கம்பியூட்டர் முன்னாடியே காலம் தள்ள வைச்சிருவாங்க என்று முன்னெச்சரிக்கையுடன் காமஸ் குரூப்பில் சேர்ந்தாள் மது.//
காமர்ஸ் குரூப்போ ;)
மதுபாட்டி கதை நன்னா தானுங்க இருக்குது.. சீக்கிரன் நெக்ஸ்ட் ப்ளீஸ்!
நல்ல தொடக்கம். அப்படியே சினிமா பாக்குறாப்புல எழுதீருக்கீங்க :) நல்ல நடை.
கம்ப்யூட்டர்னா அந்த அளவுக்கு ஆயிருச்சுல்ல :))))))))))))))))))))
ஆர்வம் கொப்புளிக்கும் நேரத்தில் தொடரும்-ன்னு போட்டா என்ன அர்த்தம்?
நட்சத்திர வாரத்தில் வரும் "தொடரும்" எல்லாம்
"எப்போது தொடரும்"-ன்னு சேர்த்தே போடுங்க - சொல்லிப்புட்டேன்! :-)
//புன்னகைக்கும் உதடுகள் ' புகைத்ததில்லை நான்' என சான்று தந்தது//
ஓ...இதையெல்லாம் வேற சந்தடி சாக்குல நோட் பண்ணறாங்களோ? :-)
//இப்பத்தான் பையனோட குரல் 'ப்ளீஸ்' அப்படின்னு கொஞ்சம் இறங்கி வந்திருக்கு, விடாதே மது கண்டினியு** என்றது மதுவிற்க்குள் ஒரு குரல்//
இயல்பான குறுகுறு வர்ணனை! நல்லா இருக்கு!
ஆகா - போட்டோ ஆல்பத்தில் சைட் அடிக்கற மதுவின் குறும்பு அட்டகாசம்.
கேயாரெஸ்ஸின் மறு மொஅழிக்கு ஒரு ரிப்பீட்டும்.
தொடரும் என்று போட்டு சடன் பிரேக் போட்டிருக்கிறது. எப்போது அடுத்து ?
மதுப் பாட்டி சூப்பர் -படங்களும் அருமை. கடைசிப் படம் என்ன குழப்பத்தைட்க் காட்டுகிறது. மனம் படபடக்கிறது. சீக்கிரம் என்ன என்று சொல்லுங்கள்.
சூப்பர் கதை.
ம்ம்ம்ம் அப்புறம்?
கூடுதல் மகிழ்ச்சி என் மகள் பெயரும் மதுமிதாதான்.
எல்லாம் சுஜாதாவின் பாதிப்பு.
பிரிவோம் சந்திப்போம் வந்த சமயம்
பிறந்தவள்:-)
\\ Dreamzz said...
அடுத்த பதிவு போட்டாச்சா! சூப்பரு :)\
நன்றி !!!
\ Dreamzz said...
மதுபாட்டி கதை நன்னா தானுங்க இருக்குது.. சீக்கிரன் நெக்ஸ்ட் ப்ளீஸ்!\\
அடுத்த பகுதி....புதன் கிழமை வெளிவரும்!
\\ G.Ragavan said...
நல்ல தொடக்கம். அப்படியே சினிமா பாக்குறாப்புல எழுதீருக்கீங்க :) நல்ல நடை.
கம்ப்யூட்டர்னா அந்த அளவுக்கு ஆயிருச்சுல்ல :))))))))))))))))))))\\
எல்லாரும் கம்ப்யூட்டர் முன்னாடி போய் உட்கார்ந்துட்டா என்னவாகுறது,??
உங்கள் வருகைக்கும், கதையின் நடையை பாராட்டியமைக்கும் மிக்க நன்றி ராகவன்!
\\ kannabiran, RAVI SHANKAR (KRS) said...
ஆர்வம் கொப்புளிக்கும் நேரத்தில் தொடரும்-ன்னு போட்டா என்ன அர்த்தம்?
நட்சத்திர வாரத்தில் வரும் "தொடரும்" எல்லாம்
"எப்போது தொடரும்"-ன்னு சேர்த்தே போடுங்க - சொல்லிப்புட்டேன்! :-)
//புன்னகைக்கும் உதடுகள் ' புகைத்ததில்லை நான்' என சான்று தந்தது//
ஓ...இதையெல்லாம் வேற சந்தடி சாக்குல நோட் பண்ணறாங்களோ? :-)
//இப்பத்தான் பையனோட குரல் 'ப்ளீஸ்' அப்படின்னு கொஞ்சம் இறங்கி வந்திருக்கு, விடாதே மது கண்டினியு** என்றது மதுவிற்க்குள் ஒரு குரல்//
இயல்பான குறுகுறு வர்ணனை! நல்லா இருக்கு!\\
வாங்க ரவி!
அடுத்த பகுதி வரும் புதன் கிழமை வெளிவரும்,அவசியம் படிச்சுட்டு கருத்து சொல்லுங்க!
[சந்தடி சாக்குல 'இத' கூட நோட் பண்ணலீனா எப்படி??}]
\\ cheena (சீனா) said...
ஆகா - போட்டோ ஆல்பத்தில் சைட் அடிக்கற மதுவின் குறும்பு அட்டகாசம்.
கேயாரெஸ்ஸின் மறு மொஅழிக்கு ஒரு ரிப்பீட்டும்.
தொடரும் என்று போட்டு சடன் பிரேக் போட்டிருக்கிறது. எப்போது அடுத்து ?
மதுப் பாட்டி சூப்பர் -படங்களும் அருமை. கடைசிப் படம் என்ன குழப்பத்தைட்க் காட்டுகிறது. மனம் படபடக்கிறது. சீக்கிரம் என்ன என்று சொல்லுங்கள்.\\
வாங்க சீனா சார்!
பதுவின் படங்களையும் பாராட்டியதற்கு மிக்க நன்றி.[இந்த கதைகு நடிகை மதுமிதாவின் பொறுத்தமான புகைப்படங்கள் கிடைப்பது அரிதாகத்தான் இருந்தது, அதனால் உங்கள் பாராட்டிற்க்கு இன்னுமொரு ஸ்பெஷல் தாங்க்ஸ்]
அடுத்த பகுதி, வரும் புதன்கிழமை வெளியிடுவேன் சீனா சார்!
\\ துளசி கோபால் said...
சூப்பர் கதை.
ம்ம்ம்ம் அப்புறம்?
கூடுதல் மகிழ்ச்சி என் மகள் பெயரும் மதுமிதாதான்.
எல்லாம் சுஜாதாவின் பாதிப்பு.
பிரிவோம் சந்திப்போம் வந்த சமயம்
பிறந்தவள்:-)\
வாங்க துளசிம்மா,
உங்கள் மகள் பெயரும் மதுமிதாவா?? வாவ்!!
அப்படினா இந்த கதையை ரொம்ப ரசிச்சு படிப்பீங்கன்னு சொல்லுங்க!
நீங்க , ம்ம்ம்ம்...ன்னு கதை கேட்பது எனக்கு ரொம்ப பிடித்திருக்கிறது,
நன்றி!
//'எவனாவது பார்க்கிற மாதிரி நச்சுன்னு இருப்பானா கல்யாண கும்மலில்' என்று கண்களை அலைபாய விட்டாள்.//
ஆஹா ஆரம்பமே அசத்தலா இருக்கே திவ்யா...:)))
ஆமா நம்ம வேலைய பொண்ணுங்க கூட வாரண்ட் இல்லாம பண்ணுறாக போல இருக்கே... ;)))))
ஹீரோ நம்ம நந்தா மாதிரியே இருப்பாங்கறீங்களா..?? ;))) ஆமா மீசைக்கும் ஆசைக்கும் ஏதோ ஒரு தொடர்பு இருக்குங்கறீங்களே என்னாங்க அது..?? கொஞ்சம் வெளக்கம் ப்ளீஸ்.... ;)))
கதை வழக்கம் போல திவ்யா 'டச்' ல வழுக்கிட்டு போகுதுங்கோவ்... கண்டினியூ...;))))
நடை மற்றும் வர்ணிப்பு சூப்பரு மேடம்!
அடுத்த பகுதிக்கான ஆவலை கச்சிதமாக கூட்டி விட்டது இந்த பகுதி!! :-0
வாழ்த்துக்கள்!! :-)
\\ ஜொள்ளுப்பாண்டி said...
//'எவனாவது பார்க்கிற மாதிரி நச்சுன்னு இருப்பானா கல்யாண கும்மலில்' என்று கண்களை அலைபாய விட்டாள்.//
ஆஹா ஆரம்பமே அசத்தலா இருக்கே திவ்யா...:)))
ஆமா நம்ம வேலைய பொண்ணுங்க கூட வாரண்ட் இல்லாம பண்ணுறாக போல இருக்கே... ;)))))\\
என்ன பாண்டியண்ணா, நீங்க மட்டுந்தேன் சைட் அடிப்பீகன்னு நினைச்சீகளா??
பாராட்டுக்களுக்கு நன்றி!
\\ ஜொள்ளுப்பாண்டி said...
ஹீரோ நம்ம நந்தா மாதிரியே இருப்பாங்கறீங்களா..?? ;))) ஆமா மீசைக்கும் ஆசைக்கும் ஏதோ ஒரு தொடர்பு இருக்குங்கறீங்களே என்னாங்க அது..?? கொஞ்சம் வெளக்கம் ப்ளீஸ்.... ;)))
கதை வழக்கம் போல திவ்யா 'டச்' ல வழுக்கிட்டு போகுதுங்கோவ்... கண்டினியூ...;))))\\
மீசையின் அளவு = ஆணின் ஆசையின் அளவு,
அப்படின்னு சொல்லிக்கிறாங்க பாண்டியண்ணா!!
\\ CVR said...
நடை மற்றும் வர்ணிப்பு சூப்பரு மேடம்!
அடுத்த பகுதிக்கான ஆவலை கச்சிதமாக கூட்டி விட்டது இந்த பகுதி!! :-0
வாழ்த்துக்கள்!! :-)\\
வர்ணிப்பு சூப்பரா?? நன்றி...நன்றி.....நன்றி!!!!
வாழ்த்துக்களுக்கு மற்றுமொரு நன்றி சிவிஆர்!
கதை சூப்பரா போகுது...
அடுத்த பகுதிக்கு ஆவலுடன் ;-)
தமிழ் மண நட்சத்திரம்ன்னு ஒரு வார்த்தை சொன்னீங்களா?so sad :(
இருந்தாலும் வந்துட்டேன் :D
அதுக்கு முதலில் எனது வாழ்த்துகள்
என்னமா கதை எழுதுறீங்க.உங்கள் கதையில் இருக்கும் குறும்பை எல்லாம் ரொம்ப ரசிச்சேன்.
அடுத்த பகுதிக்கு ஆவலுடன் காத்துகிட்டு இருக்கேன்.
//ஏன் இந்த உணர்வு என்னுள் என வியந்தவளாக, சிறிது நேரம் அவனையே உற்றுப் பார்த்துக்கொண்டிருந்தாள்.
' சே, எல்லாம் வயசுக் கோளாறு'//
இப்படி வரலைன்னா தான் கோளாறு..:-)))
கண்டின்யூ
நட்சத்திர வாழ்த்துக்கள்.
கதையை படிக்கவில்லை. முற்றும் போட்டதும் முழுமையாய் படிக்கிறேன்.
ஆமா போட்டோவில இருக்கறவங்க யாரு... :)
உங்களுடைய பழைய பதிவுகளை அவ்வளவாக படித்ததில்லை. எனினும் இக்கதையின் பெயர் பிடித்ததால் படித்தேன்.:-)) பிடித்துவிட்டது கதை. பகுதி இரண்டு எப்போ?
நட்சத்திர வாழ்த்துக்கள்
அடுத்த பதிவுக்கு வெயிட்டிங் :)
Divya,
Unka ella kathaiyilayum oru nalla positive approach theriyuthu...
How to enjoy the life to the fullest,by being a good natured man or girl?
Inthak kelvikku ungaloda ella kathaiyoda herovum,heroineum pathil sollalaam.Yenna avanga appadith thaan irukkangka,Valraangka...
Unga Mathu...Arun...also
Raj..
மதுமிதா முதல் பகுதியிலே மனசில் இடம் பிடிச்சாச்சு... அடுத்து என்ன?
எப்பவும் போல கதை ரொம்ப ஆர்வமா போகுது திவ்யா :)
இயல்பான கதை நடை மிகவும் அழகு.
Visit the following link
http://andhimazhai.com/blogs/viewmoreblogs.php?id=6415
Andhimazhai.com Editorial team wish to contact you if possible Share ur contact details.
Saraswathy
\\ வெட்டிப்பயல் said...
கதை சூப்பரா போகுது...
அடுத்த பகுதிக்கு ஆவலுடன் ;-)\
நன்றி வெட்டி!
அடுத்த பகுதி.....புதன் கிழமை!
\\ துர்கா said...
தமிழ் மண நட்சத்திரம்ன்னு ஒரு வார்த்தை சொன்னீங்களா?so sad :(
இருந்தாலும் வந்துட்டேன் :D
அதுக்கு முதலில் எனது வாழ்த்துகள்
என்னமா கதை எழுதுறீங்க.உங்கள் கதையில் இருக்கும் குறும்பை எல்லாம் ரொம்ப ரசிச்சேன்.
அடுத்த பகுதிக்கு ஆவலுடன் காத்துகிட்டு இருக்கேன்.\
ஹாய் துர்கா!
தமிழ்மணம் நட்சத்திர வாரம் உங்களுக்கு ஒரு சர்ப்ரைஸா இருக்கட்டும்ன்னு தான் ஆர்குட்ல சொல்லவில்லை! மன்னிக்கவும்!
வருகைக்கும் , ஊக்கமளிப்பதற்கும் மிக்க நன்றி!
\\ மங்கை said...
//ஏன் இந்த உணர்வு என்னுள் என வியந்தவளாக, சிறிது நேரம் அவனையே உற்றுப் பார்த்துக்கொண்டிருந்தாள்.
' சே, எல்லாம் வயசுக் கோளாறு'//
இப்படி வரலைன்னா தான் கோளாறு..:-)))
கண்டின்யூ\\
அப்படி வரலைன்னாதான் கோளாறா?? அதுவும் சரிதான் !
வருகைக்கு நன்றி மங்கை!
\\ அரை பிளேடு said...
நட்சத்திர வாழ்த்துக்கள்.
கதையை படிக்கவில்லை. முற்றும் போட்டதும் முழுமையாய் படிக்கிறேன்.
ஆமா போட்டோவில இருக்கறவங்க யாரு... :)\\
வாழ்த்துக்களுக்கு நன்றி அரை பிளெடு!
கதையை முழுவதும் படித்துவிட்டு கருத்துக்களை தெரிவியுங்கள்!
போட்டோவில் இருப்பது நடிகை மதுமிதா!
\\ U.P.Tharsan said...
உங்களுடைய பழைய பதிவுகளை அவ்வளவாக படித்ததில்லை. எனினும் இக்கதையின் பெயர் பிடித்ததால் படித்தேன்.:-)) பிடித்துவிட்டது கதை. பகுதி இரண்டு எப்போ?\
வாங்க தர்சன்,
கதையின் பெயருக்காக படித்தமைக்கு மிக்க நன்றி!
அடுத்த பகுதி...புதன் கிழமை.
\\ பொன்வண்டு said...
நட்சத்திர வாழ்த்துக்கள்
அடுத்த பதிவுக்கு வெயிட்டிங் :)\
வாங்க பொன்வண்டு,
வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் மிக்க நன்றி!
அடுத்த பகுதி விரைவில்!
///**இப்பத்தான் பையனோட குரல் 'ப்ளீஸ்' அப்படின்னு கொஞ்சம் இறங்கி வந்திருக்கு, விடாதே மது கண்டினியு** என்றது மதுவிற்க்குள் ஒரு குரல்!///
ஒரு பையன் பிளீஸ் என்று சொன்னா போதுமே அவனை உண்டு இல்லை என்று ஆக்கிடுவீங்க:)
\\ Raj said...
Divya,
Unka ella kathaiyilayum oru nalla positive approach theriyuthu...
How to enjoy the life to the fullest,by being a good natured man or girl?
Inthak kelvikku ungaloda ella kathaiyoda herovum,heroineum pathil sollalaam.Yenna avanga appadith thaan irukkangka,Valraangka...
Unga Mathu...Arun...also
Raj..\\
ஹாய் ராஜ்,
உங்கள் விரிவான பின்னூட்டதிற்கு ரொம்ப ......ரொம்ப நன்றி!
கதையின் கதாபாத்திரங்களை இவ்வளவு கூர்ந்து கவனிக்கிறீர்கள் என்பது எனக்கு மிகுந்த சந்தோஷத்தை அளித்தது!
\\ தேவ் | Dev said...
மதுமிதா முதல் பகுதியிலே மனசில் இடம் பிடிச்சாச்சு... அடுத்து என்ன?\
வாங்க தேவ் அண்ணா,
ரொம்ப நாள் கழிச்சு என்னோட கதைக்கு பின்னூட்டமிட்டிருக்கிறிங்க, ரொம்ப ......ரொம்ப நன்றி அண்ணா!
அடுத்த பகுதி விரைவில்....!
\\ Gayathri said...
எப்பவும் போல கதை ரொம்ப ஆர்வமா போகுது திவ்யா :)
இயல்பான கதை நடை மிகவும் அழகு.\
உங்கள் பாராட்டிற்கு மிக்க நன்றி காயத்ரி!
//இவ்வாறாக மூன்று மாதங்கள் ஓடிவிட்டது. அன்று ஒரு நாள் 'பாட்டி' ஃபோனில் தன் பாசத்தை பொழிந்தபோது அருண் ......///
இப்படி எல்லாம் தொடரும் போட்டால் ஆபிசில் வேலை செய்வதா இல்லையா? (ஹலோ அங்க என்னா இல்லேன்னா மட்டும் வேலை செஞ்சுட போறீயான்னு சொல்றீங்க)
First of all my best wishes for the star week
Wednesday is toooooo far Divys. Next release immediatly please.
In general I do not read stories and skip those pages in the magazines. First I read the feedback and thereafter the story. Rather than the story I like the way you write. It is nice
நட்சத்திர வாழ்த்துகள். திவ்யா,மகா ரொமாண்டிக்கா போகிறதே.
வெகு சுவை.
உற்சாகம் ததும்பும் போக்கு,நடை. நல்லா இருக்குப்பா.
நல்லாயிருக்கு...அடுத்த பகுதிக்கு வெயிட்டிங் ;)
//யாராச்சும் அழுதா கூட சேர்ந்து அழத்தான் எனக்கு தெரியும், ஆறுதல் படுத்த தெரியாது......"//
--நல்ல உணர்வுள்ள வரிகள் மட்டும் அல்ல கதையில் கதாப்பாத்திரம் பற்றி ஒர் நல்ல உணர்வையும் ஏற்ப்படுத்துகிறது ...
//தீர்க்கமான கண்களில் ஒரு காந்தம்...//
--வர்னணை வரிகள் வாவ்...
//"ஹலோ, நான்........நீங்க யாருங்க" ஆண்குரலில் சிறிது எரிச்சல் இப்போது//
--கதாப்பாத்திரங்களைப் பற்றி புரிந்து கொள்ளகூடிய சரியான இடத்தில் சரியான வரிகள்...
--நந்தாவின் புகைப்படத்தை மட்டும் அல்லாமல் அவர் நடித்த ‘புன்னகைப் பூ'வே படத்தின் பெயரையும் பயன்படுத்தி எழதிருந்த விதம் உங்கள் எழுத்திலுள்ள கற்பனைத்திறனை காட்டுக்கிறது...
வாழ்த்துக்களுடன்,
தினேஷ்
//சாஃப்ட்வேர் இஞ்சினியராக்கி கம்பியூட்டர் முன்னாடியே காலம் தள்ள வைச்சிருவாங்க என்று முன்னெச்சரிக்கையுடன் காமர்ஸ் குரூப்பில் சேர்ந்தாள் மது.
//
அட்ரா அட்ரா, நம்ம கட்சி...:)
(ஆனாலும் கம்ப்யூட்டர் விட்ட பாடு இல்லை)
எடுத்த எடுப்பிலேயே சும்மா அதிருது கதை :)...சூப்பர்..
மதுமிதா 2 சீக்கிரம்...
நல்ல இடத்துல வச்சீங்க தொடரும்ங்கற வார்த்தையை .. இந்த தொடர்கதைன்னாலே இதான் த்ரில்லே.. ம் .. அப்பறம்..
கதை ரொம்ப எதார்த்தமா சூப்பரா வழக்கம் போல கலக்கலா குறும்பா எழுதி இருக்கிங்க... அடுத்த பகுதிக்கு புதன் கிழமை வரைக்கும் wait பண்ணனுமா ? :(((((((((((
அப்பறம் நம்ம ராயல்டிய மறக்காம அனுப்பிடுங்க திவ்யா :-)
நட்சத்திர வாரத்தை ஒரு அசத்தலான கதையுடன் தொடங்கீட்டீங்க்க... உங்களின் ஆர்வத்தை தூண்டும் அசத்தலான வர்ணனைகளுன் பொருத்தமான படங்களும்... நட்சத்திர வாரத்தில் ஒரு நட்சத்திர கதை தான்...
தொடருக்கும்... தொடரவும்... வாழ்த்துக்கள்...
நல்ல ஆரம்பம் திவ்யா வழ்த்துக்கள். முடிக்கும் வரை இது தொடரட்டும் ;)
\\ குசும்பன் said...
//இவ்வாறாக மூன்று மாதங்கள் ஓடிவிட்டது. அன்று ஒரு நாள் 'பாட்டி' ஃபோனில் தன் பாசத்தை பொழிந்தபோது அருண் ......///
இப்படி எல்லாம் தொடரும் போட்டால் ஆபிசில் வேலை செய்வதா இல்லையா? (ஹலோ அங்க என்னா இல்லேன்னா மட்டும் வேலை செஞ்சுட போறீயான்னு சொல்றீங்க)\\
ஹாய் குசும்பன்,
தொடர் கதையின் அடுத்த பாகத்தை படிக்கும் ஆவலை ஏற்படுத்ததான் அப்படி கதையை முடித்தேன்.
ப்ராக்கட்டில் நீங்க எழுதியிருப்பது 100% கரெக்ட்!
\\ Anonymous said...
First of all my best wishes for the star week
Wednesday is toooooo far Divys. Next release immediatly please.
In general I do not read stories and skip those pages in the magazines. First I read the feedback and thereafter the story. Rather than the story I like the way you write. It is nice\\
ஹாய் அநானி,
வருகைக்கு மிக்க நன்றி,
பொறுமையுடன் என் பதிவையும், பின்னூட்டங்களையும் படித்திருக்கிறீர்கள், நன்றி!
அடுத்த பகுதியையும் அவசியம் படிப்பீர்கள் என நம்புகிறேன்!
\\ வல்லிசிம்ஹன் said...
நட்சத்திர வாழ்த்துகள். திவ்யா,மகா ரொமாண்டிக்கா போகிறதே.
வெகு சுவை.
உற்சாகம் ததும்பும் போக்கு,நடை. நல்லா இருக்குப்பா.\\\
வாங்க வல்லிசிம்ஹன்,
ரொம்ப நாள் ஆச்சு நீங்க என் வலைத்தளம் வந்து,
வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி!
அடுத்த பகுதிகளையும் படித்துவிட்டு கருத்துக் கூறுங்கள்!
\\ கோபிநாத் said...
நல்லாயிருக்கு...அடுத்த பகுதிக்கு வெயிட்டிங் ;)\\
வாங்க கோபி,
பாராட்டிற்கு நன்றி!
அடுத்த பகுதியும் படிச்சுட்டு சொல்லுங்க!
\\ தினேஷ் said...
//யாராச்சும் அழுதா கூட சேர்ந்து அழத்தான் எனக்கு தெரியும், ஆறுதல் படுத்த தெரியாது......"//
--நல்ல உணர்வுள்ள வரிகள் மட்டும் அல்ல கதையில் கதாப்பாத்திரம் பற்றி ஒர் நல்ல உணர்வையும் ஏற்ப்படுத்துகிறது ...
//தீர்க்கமான கண்களில் ஒரு காந்தம்...//
--வர்னணை வரிகள் வாவ்...
//"ஹலோ, நான்........நீங்க யாருங்க" ஆண்குரலில் சிறிது எரிச்சல் இப்போது//
--கதாப்பாத்திரங்களைப் பற்றி புரிந்து கொள்ளகூடிய சரியான இடத்தில் சரியான வரிகள்...
--நந்தாவின் புகைப்படத்தை மட்டும் அல்லாமல் அவர் நடித்த ‘புன்னகைப் பூ'வே படத்தின் பெயரையும் பயன்படுத்தி எழதிருந்த விதம் உங்கள் எழுத்திலுள்ள கற்பனைத்திறனை காட்டுக்கிறது...
வாழ்த்துக்களுடன்,
தினேஷ்\\
ஹாய் தினேஷ்,
என் பதிவில் நான் ரசித்து எழுதிய சில வரிகளை நீங்கள் குறிப்பிட்டு பாராட்டியிருப்பது எனக்கு மட்டில்லா மகிழ்ச்சியை தந்தது!
விரிவான உங்கள் பின்னூட்டத்திற்கு மிக்க நன்றி!
தொடர்ந்து உங்கள் விமர்சனம் எனக்கு தேவை!
நன்றி தினேஷ்!!!
\\ My days(Gops) said...
//சாஃப்ட்வேர் இஞ்சினியராக்கி கம்பியூட்டர் முன்னாடியே காலம் தள்ள வைச்சிருவாங்க என்று முன்னெச்சரிக்கையுடன் காமர்ஸ் குரூப்பில் சேர்ந்தாள் மது.
//
அட்ரா அட்ரா, நம்ம கட்சி...:)
(ஆனாலும் கம்ப்யூட்டர் விட்ட பாடு இல்லை)
எடுத்த எடுப்பிலேயே சும்மா அதிருது கதை :)...சூப்பர்..
மதுமிதா 2 சீக்கிரம்...\\
ஹாய் கோப்ஸ்,
மதுவும் உங்க கட்சியா??
கதையை பாராட்டியதற்கு நன்றி!
அடுத்த பகுதி, விரைவில்...
\\ முத்துலெட்சுமி said...
நல்ல இடத்துல வச்சீங்க தொடரும்ங்கற வார்த்தையை .. இந்த தொடர்கதைன்னாலே இதான் த்ரில்லே.. ம் .. அப்பறம்..\
வாங்க, வாங்க முத்துலெட்சுமி!
தொடரும்ன்னு இப்படி போட்டது த்ரில்லா இருந்ததா?? மிக்க மகிழ்ச்சி!
...ம்ம்ம்.....அப்புறம் அடுத்த பகுதியில்!
\\ Arunkumar said...
கதை ரொம்ப எதார்த்தமா சூப்பரா வழக்கம் போல கலக்கலா குறும்பா எழுதி இருக்கிங்க... அடுத்த பகுதிக்கு புதன் கிழமை வரைக்கும் wait பண்ணனுமா ? :(((((((((((
அப்பறம் நம்ம ராயல்டிய மறக்காம அனுப்பிடுங்க திவ்யா :-)\
ஹாய் அருண்,
இப்படி 'ராயல்டி' எல்லாம் கேட்பீங்கன்னு தெரியாம போச்சே!!!
உங்கள் பாராட்டிற்கு நன்றி அருண்!
\\ நிமல்/NiMaL said...
நட்சத்திர வாரத்தை ஒரு அசத்தலான கதையுடன் தொடங்கீட்டீங்க்க... உங்களின் ஆர்வத்தை தூண்டும் அசத்தலான வர்ணனைகளுன் பொருத்தமான படங்களும்... நட்சத்திர வாரத்தில் ஒரு நட்சத்திர கதை தான்...
தொடருக்கும்... தொடரவும்... வாழ்த்துக்கள்...\
ஹாய் நிமல்,
உங்கள் பின்னூட்டத்தை ஆவலுடன் எதிர்பார்த்தேன்....நன்றி!
உங்கள் வாழ்த்துக்கள் எனக்கு உற்ச்சாகமளித்தது!
\\ ஸ்ரீ said...
நல்ல ஆரம்பம் திவ்யா வழ்த்துக்கள். முடிக்கும் வரை இது தொடரட்டும் ;)\
வாழ்த்துக்களுக்கு நன்றி Shri!!
:)) பாட்டின்னு சொல்லி இப்படித்தான் பல பேரு ஏமாத்துறாங்க போல... :))
நல்லதொரு ஆரம்பம்...
எங்கள் பதிவை முன்பு படித்ததில்லை. கதை நல்லாயி்ருக்கு..
முக்கியமா படங்கள் ஒரு சினிமா பார்க்கிறமாதிரி கிடக்கு
\\ ஜி said...
:)) பாட்டின்னு சொல்லி இப்படித்தான் பல பேரு ஏமாத்துறாங்க போல... :))
நல்லதொரு ஆரம்பம்...\
வாங்க ஜி!
'பாட்டின்னு' சொல்லி உங்களை 'யாரோ' ஏமாத்தினாப்ல சலிச்சிக்கிறீங்க??
வருகைக்கும், பாராட்டிற்கும் நன்ரி ஜி!!
\\ தனு said...
எங்கள் பதிவை முன்பு படித்ததில்லை. கதை நல்லாயி்ருக்கு..
முக்கியமா படங்கள் ஒரு சினிமா பார்க்கிறமாதிரி கிடக்கு\
வாங்க தனு,
பதிவினை படித்தமைக்கு நன்றி!
கதையின் படங்கள் சினிமா பார்க்கும் உணர்வை உங்களுக்கு ஏற்படுத்தியிருப்பதை அறிந்து மகிழ்ச்சி!
Post a Comment