உன்னிடத்தில்...சரணடைந்தேன்!!!- 1
ரோட்டில் சரஸ்வதி குழந்தையுடன் ஓடுவதை கண்ட டாக்டர் தீபா காரிலிருந்து இறங்க முற்படுவதை கவனித்த அவளது கார் ட்ரைவர்,
"அம்மா.........நீங்க இறங்காதீங்க........இந்த ஊர்ல இப்படி தெரு சண்டை எல்லாம் சாதாரணம்......அதுவும் இந்த ஏரியா ஒருமாதிரிமா, நீங்க ஒரு டாக்டர்.......தெரு சண்டையை எல்லாம் சமரசம் பண்ண இறங்கனுமாமா......."
ட்ரைவர் இப்படி சொன்னதும், ஒரு நிமிடம் தயங்கினாள் தீபா,காரிலிருந்து அவள் இறங்குமுன், அங்கு ரோட்டில் நின்று கொண்டிருந்த சிலர், சரஸ்வதியின் கணவரை பிடித்து நிறுத்த முயன்று கொண்டிருந்தனர்.அப்போது, அவனை பின் தொடர்ந்து அங்கு வந்த சேர்ந்த அவனது நண்பன், முரண்டுக்கொண்டிருந்த அவனிடம்,
"ஏம்ல உன் புத்தி இப்படி போவுது.........அந்த புள்ள என் தங்கச்சி மாதிரிடா........அத போய் இப்படி அசிங்கமா பேசுதியே......."
இப்போது சரஸ்வதியின் கணவனின் கோபம் முழுவதும், அந்த நண்பனின் மேல் திரும்ப, அவனை தாக்க முற்பட்டான்.உடனே கூடியிருந்த ஆண்கள் சிலர் அவனை தடுத்து, சண்டையை விலக்கி,சரஸ்வதியை அங்கிருந்த பெண்களின் பாதுகாப்பில் வீட்டிற்கு அனுப்பினர்.
அனைத்தையும் காரிலிருந்தபடி கவனித்துக்கொண்டிருந்த தீபா.............வீட்டிற்கு வந்ததும், மனதில் ஏதோ அழுத்துவதாகவே உணர்ந்தாள்.
'என் கண் முன்னாடியே அந்த பொண்ணு தலைதெறிக்க ரோட்ல ஓடினாளே.......அவளை காப்பாத்த நான் ஏன் காரில் இருந்து இறங்கல??........படிச்சவன்ற பெருமையா??.....டாக்டர்ன்ற அந்தஸ்தா?? .........எது தடுத்தது என்னை???'
மனசுக்குள்ளே யோசித்து யோசித்து குற்ற உணர்வோடு புழுங்கிக் கொண்டிருந்தாள் தீபா.
அந்த நேரம் அவளது செல்ஃபோன் அழைக்க..........கார்த்திக்கின் நம்பர் பளிச்சிட்டது,
கார்த்திக்கிடம் ஃபோனில் பேசியபோது, அன்று ரோட்டில் அவள் பார்த்த சம்பவத்தை கூறி, தன் மனநிலையையும் கூறினாள். அவளுக்கு ஆறுதல் கூறிய கார்த்திக், அந்த பெண் சரஸ்வதியின் பத்தாம் வகுப்பு சான்றிதழை தன்னிடம் தந்தால், கல்வி அதிகாரிகளிடன் பேசி, எந்த முறையில் மேற்கொண்டு அவள் படிப்பை தொடரலாம் என்பதை கேட்டறிந்து சொல்வதாக கூறினான்.
கார்த்திக்கிடம் சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்தது, தீபாவிற்கு இதமாக இருந்தது.
அவன் சொன்னதுபோலவே, அவனிடம் சரஸ்வதியின் சான்றிதழ்களை கொடுத்து உதவி கோரினாள் தீபா. அவனும் அதற்கான முயற்சியில் இறங்கினான்.
சரஸ்வதி ஆஸ்பத்ரிக்கு வந்த போது, தனது நண்பன் கார்த்திக், சரஸ்வதியின் படிப்பிற்கு உதவி செய்யவிருப்பதை அவளிடம் தெரிவித்தாள் தீபா.இருவரும் தனது மேற்படிப்பிற்கு உறுதுணையாக இருக்கிறார்கள் என்றரிந்த சரஸ்வதி, தன் கணவனின் கொடுமைகளுக்கு நடுவிலும், தைரியமாக , உறுதியுடன் இருந்தாள்.
அன்று ரோட்டில் சரஸ்வதியை அந்த நிலையில் பார்த்தும், தான் உதவி செய்ய முடியாமல் போனதே என்ற குற்ற உணர்வினால்.........தீபா சரஸ்வதியின் எதிர்காலத்திற்கு எப்படியும் ஏதாவது ஒருவகையில் உதவி செய்தே ஆக வேண்டும் என்று நினைத்துக்கொண்டாள்.
நாட்கள் உருண்டோடின.அடிக்கடி ஃபோனிலும், வாரயிறுதிகளில் நேரிலும் , கார்த்திக்கும் தீபாவும் சந்தித்து நிறைய பேசிக்கொண்டார்கள். பள்ளி படிப்பிற்கு பின், கார்த்திக்கின் அப்பாவிற்கு வேலை இடமாற்றமானதால், தாங்கள் சென்னையை விட்டு திருச்சி சென்றுவிட்ட பிறகு, ஸ்கூல் டேய்ஸ் நண்பர்களுடன் தொடர்பே அற்று போனது என்றும் கூறினான் கார்த்திக்.
நீண்ட நாட்களுக்கு பின் , ஒரு நல்ல நட்பு கிடைத்தது போன்ற உணர்வு தீபாவிற்கு உற்சாகமளித்தது.
ஒரு நாள் தீபாவின் வீட்டிற்கு டின்னருக்கு கார்த்திக் வந்திருந்தபோது, பேச்சின் நடுவே, கார்த்திக் தீபாவிடம்.........
"தீபா..........கேட்கிறேன்னு தப்பா நினைச்சுக்காதே...........நீ ஸ்கூல் படிக்கிறப்போவே நம்ம காலனில பாப்புளர் ஃபிகர், நான் நீன்னு அவனவன் உனக்கு லெட்டர் கொடுக்கவே போட்டி போட்டுவாங்க..........இன்ஃபாக்ட் நானே உனக்கு லெட்டரெல்லாம் கொடுத்திருக்கிறேன்......ஞாபகமிருக்கா??"
"ம்ம்.........ஞாபகமிருக்கு கார்த்தி......."
"அப்பேர்பட்ட அழகு தேவதை நீ.........அழகு மட்டுமில்ல......அறிவு, அமைதி, அந்தஸ்துன்னு எல்லாமே உனக்கு இருந்தும், ஏன் இன்னும் கல்யாணம் ஆகல............இல்ல கல்யாணம் பண்ணிக்கல??"
"............."
"அச்சோ..........ஸாரி தீபா........உன் பெர்ஸனல் விஷயத்துல தலையிட்டுட்டேன்ல.........ஸாரி......."
"ச்ச ச்ச.......அதெல்லாம் ஒன்னுமில்ல கார்த்தி......."
சிறிது நேர மெளனத்திற்கு பின்.........
மருத்துவ கல்லூரியில் படிக்கும்போது தனது ஸீனியரை அவள் காதலித்ததையும், அவனது படிப்பிற்கு பின் இருவரது வீட்டிலும் சம்மதம் தெரிவித்து திருமணம் நிச்சயமானதையும், வெளிநாட்டிற்கு அவன் மேற்படிப்பிற்கு சென்று திரும்பியதும் நடக்க இருந்த திருமணம்........வெளிநாட்டு மோகம் மற்றும் அங்குள்ள தோழியோடு ஏற்பட்ட காதல் காரணமாக அவளது காதலனாலயே நிறுத்தப்பட்டதையும், சுருக்கமாக கூறி முடித்து தன் விழியோரம் பூத்த நீரை கஷ்டப்பட்டு கட்டுப்படுத்திக்கொண்டாள் தீபா.
அவளது மனநிலையை உணர்ந்து கொண்ட கார்த்திக், பேச்சை திசை திருப்பி..........கிண்டலும் கேலியுமாக பேசி அவளை சகஜ நிலைக்கு கொண்டு வந்தான்.
பின் தீபாவின் பாட்டி தயார் செய்திருந்த டின்னரை சிரித்து பேசியபடி சாப்பிட்டு முடித்து, கார்த்திக் தன் வீடு திரும்ப தனது காருக்கு சென்றான், அவனை வாசல் வரை வந்து வழியனுப்ப தீபாவும் வெளியில் வந்தாள்.
கார்த்திக் காரில் ஏறும் முன் தீபாவிடம்..........
"தீபா.............ஒரு விஷயம் சொல்லனும் உன்கிட்ட..........இப்ப சொல்லவா?"
"சொல்லு கார்த்தி........."
"தீபா........ரோட் ஸைட் ரோமியோ போட்ட அப்பளிக்கேஷனை தான் ரிஜக்ட் பண்ணிட்ட.........இந்த கார்த்திக் ஐ.பி.எஸ் கொடுக்கிற அப்பளிக்கேஷனை கன்ஸிடர் பண்ணுவியா??"
"கார்த்தி...........நீ .........."
"யெஸ் தீபா.........ஐ லைக் டூ மேரி யூ.........வில் யூ??"
"............."
"யோசிச்சு பதில் சொல்லு............பதில் எதுவா இருந்தாலும் இந்த நண்பனோட நட்பு மட்டும் மாறாது தீபா"
பதிலளிக்காது வியப்புடன் விழித்துக்கொண்டிருந்த தீபாவிற்கு கையசைத்துவிட்டு,தனது காரில் சென்றான் கார்த்திக்.
அதன்பின் வந்த நாட்களில்,அம்பாசமுத்திரத்தில் நடந்த மெடிக்கல் காம்பிற்கு ஒருவார காலம் சென்றுவிட்டதால் , தீபா மிகவும் பிஸியாக இருந்தாள். மெடிக்கல் காம்ப் முடிந்து தனது அறைக்கு வந்ததும், நர்ஸிடம் தன்னை தேடி சரஸ்வதி வந்தாளா என விசாரித்தாள். அவள் வரவில்லை என அறிந்ததும், தானே சென்று சரஸ்வதியை அவளது வீட்டில் சந்திப்பது என்ற முடிவுடன், நர்ஸிடம் அவளது விலாசத்தை பெற்றுக்கொண்டு சரஸ்வதி குடியிருக்கும் பகுதிக்கு சென்றாள் தீபா.
ட்ரைவரிடம் காரை மெயின் ரோட்டில் நிறுத்த சொல்லிவிட்டு, சரஸ்வதியின் வீடு இருக்கும் குறுகிய சந்துக்குள் நுழைந்த தீபா, சிறிது தூரம் சென்றதும், ஒரு வீட்டின் முன்வாசலில் உட்கார்ந்திருந்த வயதான பாட்டியின் மடியில் சரஸ்வதியின் மகன் உட்கார்ந்திருப்பதை கண்டதும்,
"ஹே குட்டி........எப்படிடா இருக்க??" என்று குழந்தையின் கன்னம் வருடினாள்.
குழந்தை தீபாவை அடையாளம் கண்டுக்கொண்டு , சிரித்தது.
முடமுடக்கும் காட்டன் புடவையில், தீர்க்கமான அழகுடன், இந்த தெருவிற்கு வந்திருக்கும் இளம்பெண் யார்?? என்று தீபாவை பார்த்து வியந்தபடி நெற்றியை சுருக்கிய அந்த பாட்டியிடம் தீபா....
"பாட்டி இது சரஸ்வதி பையன் தானே.........நான் அவளைதான் பார்க்க வந்திருக்கிறேன்.......அவ வீடு எது??"
"ஐயோ.........." என்று கதறிய அந்த மூதாட்டி,
"அந்த புள்ள சரஸ்வதி மருந்து குடிச்சுடுச்சுமா..........இந்த பச்ச புள்ளைய கூட நினைக்காம........பாவி மவ.........இப்படி பண்ணிட்டா......."
அதிர்ச்சியில் முகம் இரத்த சிவப்பானது தீபாவிற்கு,
அடிவயிறு புரட்டி கொண்டு வந்தது,
ஏதோ ஒருவித திகிலும் கலவரமும் ஒருசேர
தீபா பேச்சற்று விக்கித்து நின்றாள்......!
'ஐய்யோ........கடவுளே..........கருவை கலைக்க வந்த பொண்ணுக்கிட்ட , படிக்க வைக்கிறேன்னு ஆசை காட்டி, நானே அவளை கொன்னுட்டேனே'
தீபாவின் கண்களில் நீர் கசிந்தது.......
[தொடரும்]
பகுதி - 3
April 23, 2009
Subscribe to:
Post Comments (Atom)
67 comments:
அட பரவாயில்லையே திவ்யா...உடனே அடுத்த பாகம் போட்டுட்டே...!! :)))
கலக்குமா நீ..!! :)))
திவ்யா சம்பவங்கள் நிறைந்த இந்தப் பகுதியும் ரொம்ப நல்லா இருக்கு...!!
அட நம்ம கதாநாயகியோட சோகத்துக்கு இப்படி ஒரு காரணமா..? :((
சோகத்தை சுருக்கமாக சொன்ன விதம் பிடிச்சிருக்கு திவ்யா..!!
வழக்கமான கதையா இல்லாம இப்படி வித்தியாசமா எழுதினதுக்கு
ஒரு ஸ்பெஷல் வாழ்த்துகள் திவ்யா..!! :)))
எப்பவுமே ஒரு பரபரப்புலயே கதையக் கொண்டுபோய் நிறுத்தினா
என்ன அர்த்தம் திவ்யா.? இப்படி ஒரு சந்தோசமா..? சரி சரி
சீக்கிரம் இப்போ மாதிரியே அடுத்த பகுதிய எழுது.. !! :))))
//"ஏம்ல உன் புத்தி இப்படி போவுது.........அந்த புள்ள என் தங்கச்சி மாதிரிடா........அத போய் இப்படி அசிங்கமா பேசுதியே......."//
எந்த ஊர் தமிழ் இது...எங்கேயோ கேட்ட மாதிரி இருக்கே...
//என் கண் முன்னாடியே அந்த பொண்ணு தலைதெறிக்க ரோட்ல ஓடினாளே.......அவளை காப்பாத்த நான் ஏன் காரில் இருந்து இறங்கல??........படிச்சவன்ற பெருமையா??.....டாக்டர்ன்ற அந்தஸ்தா?? .........எது தடுத்தது என்னை???'//
யதார்த்தமான வரிகள்...சில நேரத்தில் நம்மில் நிறைய பேருக்கு இந்த குற்றவுணர்வு ஏற்படுவதுண்டு...
//தீபா........ரோட் ஸைட் ரோமியோ போட்ட அப்பளிக்கேஷனை தான் ரிஜக்ட் பண்ணிட்ட.........இந்த கார்த்திக் ஐ.பி.எஸ் கொடுக்கிற அப்பளிக்கேஷனை கன்ஸிடர் பண்ணுவியா??"//
ரசித்த வரிகள்...
வழக்கம் போல சஸ்பென்ஸோட இந்தப் பகுதிய முடிச்சுட்டீங்களே...கதையின் அடுத்த பகுதிக்காக வெயிட்டிங்...வாழ்த்துக்கள் திவ்யா...
achichu enna achu , cut pannittu thodaramnu potuteentgaley . Ada kadavuley , eppo onnukku rendu suspense a pochey.
Ava tharkulai senjikittala ellai purusan konnutana, karthikku divya enna padhil solla porannu therliye
weekend pura manda kaaya pogudhu
Chance ellai super kadhai, neenga oru cinema kadhai ezhudhalam. :)
nice story. infact all your stories are really nice, soft stories from a women point of view. why dont you try to write from a guys point of view??
kalakkireenga :)
intha kathia konjam different twistoda pogthu...kalakreenga divs
unga fav site srikantha?? neria postla varaaru
ada naan thaan seconda..avvvvvvvvv....treat treat
Good one!
ஆஹா... விறுவிறுப்பான இடத்தில் தொடரும்னு போட்டீங்களா! ச்சே.. நீங்க ரொம்ப மோசம் குருவே!:( அப்பரம் ஆர்யா படத்தை என்னை குஷியாக்கியதற்கு நன்றி:)
கதை ஜெட் வேகம்..
போன பாகத்துல இருந்து தீபாக்கு ஒரு பெரிய பிளாஷ் பேக் இருக்குனு நினச்சேன்.. அத இப்படி Assualta சொல்லுவீங்கன்னு நினைகல!!
நல்லா இருக்கு. நான் நினைச்ச(அதாவது ரூம் போட்டு யோசிச்ச) மாதிரி இல்லை. :)))
அட அடுத்த பார்ட் போட்டாச்சா!!!அருமை கலக்குங்க மாஸ்டர்..
வெகு உன்னிப்பாக கவனமாக படித்து வருகிறேன் :))
தொடரட்டும் :))
அம்மணி,
வழக்கமா காதல் கதையா சொல்லுவீங்க, இந்தக் கதை ரொம்ப நல்லா இருக்கு, வித்தியாசமா இருக்கு. சமூக சிந்தனையோட எழுதியிருக்கீங்க. வாழ்த்துக்கள்.
ஒரே சோகமா போச்சு... !!
ஆனாலும் மென்மையான காதல் கதை என்பதை தாண்டி ஒரு நல்ல வித்தியாசமான கதையாக இருக்கிறது. அதுவும் கதை விரைவாக விறுவிறுப்பாக நகர்கிறது...
நல்லவேளை.. போன பகுதி நல்லா ஞாபகம் இருக்கும்போதே இரண்டாவது பகுதி...
தீபா கதாபாத்திரம் அருமையா இருக்கு.. போலீஸ் டிரெஸ்ல வர்றவரு இன்னும் நல்லா பெர்ஃபார்ம் பண்ணுவாருன்னு நினைக்கிறேன் :)
அதுக்குள்ள ரெண்டாவது பகுதியா திவ்யா? அதான், இங்க மழை ஊத்துது :)
ஆனாலும் உங்க ஹீரோயின் பண்றது அலும்பு…கார்த்திக்கு பதில் சொல்லாம கிளம்பி அம்பா சமுத்திரம் கேம்ப் போனா என்ன அர்த்தம்?
சீக்கரமா அடுத்த பகுதியையும் போட்டுடுங்க திவ்யா…
different'a pohuthu madam :) great Divya!
நல்லா போயிக்கிட்டு இருக்கு...அந்த பையனை தீபா எடுத்துப்பாங்களா!!!??
கதையில் எழுத்தோட்டம் நல்லயிருக்கு
தொடர்ந்து எழுதுங்க
திருநெல்வேலியைக் களமாகக் கொண்டு ஒரு கதை. ஹைகிகரவுண்டு ஆஸ்பத்திரி, அம்பாசமுத்திரம் (எங்க அப்பா பிறந்து வளர்ந்து எனக்கு மிகவும் பிடித்த் ஊர்) இப்படியெல்லாம் கதை போகும் போது, ,ஏதோ என் கண் முன்னே நடப்பது மாதிரி இருக்கு.
கதை ரொம்ப அருமையாப் போகிறது. அதிலும் இரண்டு பாகங்கள் வெகு சீக்கிரத்தில்.... நடத்துங்க.....
Chanceless nalla kadhai...nalla flow....
karthik oda repeat proposal soooper....
screen play soooper kalakiteenga...
அடடா, என்ன ஆச்சு திவ்யா உங்களுக்கு? நெறைய mega serial பாக்க ஆரம்பிச்சுடீங்களா? ஏன் இவ்வளவு சோகம்? ஒரு "feel good" கதை எதிர் பார்த்து வந்தேன். சந்தோசமா முடிங்க ப்ளீஸ்...
//தீபா........ரோட் ஸைட் ரோமியோ போட்ட அப்பளிக்கேஷனை தான் ரிஜக்ட் பண்ணிட்ட.........இந்த கார்த்திக் ஐ.பி.எஸ் கொடுக்கிற அப்பளிக்கேஷனை கன்ஸிடர் பண்ணுவியா??"//
பாவம் கார்த்திக். ரெண்டாவது இன்னிங்க்ஸ்லயாவது அவரு நெனச்சபடியே நடக்கட்டும். அந்த சீனியர் மறுபடியும் வராம இருக்கட்டும்.
\\ நவீன் ப்ரகாஷ் said...
அட பரவாயில்லையே திவ்யா...உடனே அடுத்த பாகம் போட்டுட்டே...!! :)))
கலக்குமா நீ..!! :)))\\
இந்த தொடர் கதையின் பகுதிகளை [வழக்கம் போல்]மிகவும் தாமதமாக்காமல் பதிவிட வேண்டும் என நினைத்திருந்தேன்:)
பார்க்கலாம் அடுத்த பகுதிகளையும் இப்படி சீக்கிரமாக பதிவிட இயலுகிறதாவென:)
\\Blogger நவீன் ப்ரகாஷ் said...
திவ்யா சம்பவங்கள் நிறைந்த இந்தப் பகுதியும் ரொம்ப நல்லா இருக்கு...!!\\
நன்றி நவீன்!
\\Blogger நவீன் ப்ரகாஷ் said...
அட நம்ம கதாநாயகியோட சோகத்துக்கு இப்படி ஒரு காரணமா..? :((
சோகத்தை சுருக்கமாக சொன்ன விதம் பிடிச்சிருக்கு திவ்யா..!!\\
கருத்திற்கு நன்றி நவீன்:)
\\Blogger நவீன் ப்ரகாஷ் said...
வழக்கமான கதையா இல்லாம இப்படி வித்தியாசமா எழுதினதுக்கு
ஒரு ஸ்பெஷல் வாழ்த்துகள் திவ்யா..!! :)))\\
உங்கள் ஸ்பெஷல் வாழ்த்து மகிழ்ச்சி அளித்தது, மிக்க நன்றி!!
\\Blogger நவீன் ப்ரகாஷ் said...
எப்பவுமே ஒரு பரபரப்புலயே கதையக் கொண்டுபோய் நிறுத்தினா
என்ன அர்த்தம் திவ்யா.? இப்படி ஒரு சந்தோசமா..? சரி சரி
சீக்கிரம் இப்போ மாதிரியே அடுத்த பகுதிய எழுது.. !! :))))\\
தொடர்கதை படிக்க ஒரு த்ரில் இருக்க வேணாமா, அதுக்காகத்தான்:)
விரைவில் அடுத்த பகுதி பதிவிடுகிறேன், படித்து கருத்து கூறுங்கள்.
\\Blogger புதியவன் said...
//"ஏம்ல உன் புத்தி இப்படி போவுது.........அந்த புள்ள என் தங்கச்சி மாதிரிடா........அத போய் இப்படி அசிங்கமா பேசுதியே......."//
எந்த ஊர் தமிழ் இது...எங்கேயோ கேட்ட மாதிரி இருக்கே...\\
திருநெல்வேலி தமிழ் மாதிரி இருக்குதா??
\\Blogger புதியவன் said...
//என் கண் முன்னாடியே அந்த பொண்ணு தலைதெறிக்க ரோட்ல ஓடினாளே.......அவளை காப்பாத்த நான் ஏன் காரில் இருந்து இறங்கல??........படிச்சவன்ற பெருமையா??.....டாக்டர்ன்ற அந்தஸ்தா?? .........எது தடுத்தது என்னை???'//
யதார்த்தமான வரிகள்...சில நேரத்தில் நம்மில் நிறைய பேருக்கு இந்த குற்றவுணர்வு ஏற்படுவதுண்டு...\\
உங்கள் கருத்தினை பகிர்ந்தமைக்கு நன்றி புதியவன்!!
\\Blogger புதியவன் said...
//தீபா........ரோட் ஸைட் ரோமியோ போட்ட அப்பளிக்கேஷனை தான் ரிஜக்ட் பண்ணிட்ட.........இந்த கார்த்திக் ஐ.பி.எஸ் கொடுக்கிற அப்பளிக்கேஷனை கன்ஸிடர் பண்ணுவியா??"//
ரசித்த வரிகள்...
வழக்கம் போல சஸ்பென்ஸோட இந்தப் பகுதிய முடிச்சுட்டீங்களே...கதையின் அடுத்த பகுதிக்காக வெயிட்டிங்...வாழ்த்துக்கள் திவ்யா...\\
ரசிப்பிற்கும் வாழ்த்துக்களுக்கும் மிக்க நன்றி புதியவன்!
\\Blogger Srivats said...
achichu enna achu , cut pannittu thodaramnu potuteentgaley . Ada kadavuley , eppo onnukku rendu suspense a pochey.\\
ரெண்டு சஸ்பென்ஸ் வைச்சது ஒரு த்ரில்காக:))
\\ Ava tharkulai senjikittala ellai purusan konnutana, karthikku divya enna padhil solla porannu therliye\\
கார்த்திக்கிற்கு பதில் சொல்ல வேண்டியது தீபா:))
பெயரை மாத்திட்டீங்களே:(
\\
weekend pura manda kaaya pogudhu
Chance ellai super kadhai, neenga oru cinema kadhai ezhudhalam. :)\\
கருத்திற்கும் மனம்திறந்த பாராட்டிற்கும் மிக்க நன்றி!!
\\Blogger DHANS said...
nice story. infact all your stories are really nice, soft stories from a women point of view. why dont you try to write from a guys point of view??\\
வாங்க DHANS!
உங்கள் வருகைக்கும் பாராட்டிற்கும் நன்றி.
உங்கள் கருத்தினை நினைவில் கொள்கிறேன்:)
[If you have not read this post
http://manasukulmaththaapu.blogspot.com/2008/04/1.html, do read it.....its written in guy's point of view]
\\Blogger Gajani said...
kalakkireenga :)\\
நன்றிங்க கஜனி!
\\Blogger gils said...
intha kathia konjam different twistoda pogthu...kalakreenga divs\\
நன்றி கில்ஸ்!
\\Blogger gils said...
unga fav site srikantha?? neria postla varaaru\\
போலீஸ் காஸ்டியூம்ல கதைக்கு பொறுத்தமா இருந்ததால தான் ஸ்ரீகாந்த் செலக்ட் பண்ணினேன், மத்தபடி ஏதும் இல்ல கில்ஸ்:)
\\Blogger gils said...
ada naan thaan seconda..avvvvvvvvv....treat treat\\
:))
\Blogger நாகை சிவா said...
Good one!\\
நன்றி சிவா!
\\Blogger Thamizhmaangani said...
ஆஹா... விறுவிறுப்பான இடத்தில் தொடரும்னு போட்டீங்களா! ச்சே.. நீங்க ரொம்ப மோசம் குருவே!:( அப்பரம் ஆர்யா படத்தை என்னை குஷியாக்கியதற்கு நன்றி:)\\
:)))
வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி காயத்ரி:)
\\Blogger Bhuvanesh said...
கதை ஜெட் வேகம்..
போன பாகத்துல இருந்து தீபாக்கு ஒரு பெரிய பிளாஷ் பேக் இருக்குனு நினச்சேன்.. அத இப்படி Assualta சொல்லுவீங்கன்னு நினைகல!!\\
வாங்க புவனேஷ்,
வருகைக்கும், கருத்திற்கும் மிக்க நன்றி!!
\\Blogger Karthik said...
நல்லா இருக்கு. நான் நினைச்ச(அதாவது ரூம் போட்டு யோசிச்ச) மாதிரி இல்லை. :)))\\
நீங்க யூகம் பண்ணின மாதிரி இல்லையா?
தொடர்ந்து படிச்சுட்டு கருத்து சொல்லுங்க கார்த்திக்:)
\\Blogger Ramya Ramani said...
அட அடுத்த பார்ட் போட்டாச்சா!!!அருமை கலக்குங்க மாஸ்டர்..
வெகு உன்னிப்பாக கவனமாக படித்து வருகிறேன் :))
தொடரட்டும் :))\\
உங்கள் தொடர் வருகையும் , ஆர்வமும் மகிழ்ச்சியளிக்கிறது ரம்யா, நன்றி!!
\\Blogger ஜோசப் பால்ராஜ் said...
அம்மணி,
வழக்கமா காதல் கதையா சொல்லுவீங்க, இந்தக் கதை ரொம்ப நல்லா இருக்கு, வித்தியாசமா இருக்கு. சமூக சிந்தனையோட எழுதியிருக்கீங்க. வாழ்த்துக்கள்.\\
வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி ஜோசஃப்:))
\\Blogger நிமல்-NiMaL said...
ஒரே சோகமா போச்சு... !!
ஆனாலும் மென்மையான காதல் கதை என்பதை தாண்டி ஒரு நல்ல வித்தியாசமான கதையாக இருக்கிறது. அதுவும் கதை விரைவாக விறுவிறுப்பாக நகர்கிறது...\\
கருத்திற்கும் விமர்சனத்திற்கும் மன்மார்ந்த நன்றிகள் நிமல், மீண்டும் வருக!
\\Blogger Raghav said...
நல்லவேளை.. போன பகுதி நல்லா ஞாபகம் இருக்கும்போதே இரண்டாவது பகுதி...\\
:((((
\\ தீபா கதாபாத்திரம் அருமையா இருக்கு.. போலீஸ் டிரெஸ்ல வர்றவரு இன்னும் நல்லா பெர்ஃபார்ம் பண்ணுவாருன்னு நினைக்கிறேன் :)\\
உங்கள் பாராட்டிற்கும் , கருத்துக்களுக்கும் மிக்க நன்றி ராகவ்!
\\Blogger Divyapriya said...
அதுக்குள்ள ரெண்டாவது பகுதியா திவ்யா? அதான், இங்க மழை ஊத்துது :)\\
கிண்டலு:(
\\ ஆனாலும் உங்க ஹீரோயின் பண்றது அலும்பு…கார்த்திக்கு பதில் சொல்லாம கிளம்பி அம்பா சமுத்திரம் கேம்ப் போனா என்ன அர்த்தம்?\\
கார்த்திக்கிற்கு செம சப்போர்ட் போல:))
\\ சீக்கரமா அடுத்த பகுதியையும் போட்டுடுங்க திவ்யா…\\
கண்டிப்பா....
\\Blogger sathish said...
different'a pohuthu madam :) great Divya!\\
உங்கள் தொடர் வருகை உற்சாகமளிக்கிறது சதீஷ், மிக்க நன்றி!
\\Blogger கோபிநாத் said...
நல்லா போயிக்கிட்டு இருக்கு...அந்த பையனை தீபா எடுத்துப்பாங்களா!!!??\\
உங்கள் யூகம் சரியான்னு பொறுத்திருந்து பாருங்க கோபி:))
பாராட்டிற்கு நன்றி!
\\Blogger அபுஅஃப்ஸர் said...
கதையில் எழுத்தோட்டம் நல்லயிருக்கு
தொடர்ந்து எழுதுங்க\\
வாங்க அபுஅஃப்ஸர்,
உங்கள் வருகைக்கும், பாராட்டிற்கும் என் மனமார்ந்த நன்றி!
\\Blogger விஜய் said...
திருநெல்வேலியைக் களமாகக் கொண்டு ஒரு கதை. ஹைகிகரவுண்டு ஆஸ்பத்திரி, அம்பாசமுத்திரம் (எங்க அப்பா பிறந்து வளர்ந்து எனக்கு மிகவும் பிடித்த் ஊர்) இப்படியெல்லாம் கதை போகும் போது, ,ஏதோ என் கண் முன்னே நடப்பது மாதிரி இருக்கு.
கதை ரொம்ப அருமையாப் போகிறது. அதிலும் இரண்டு பாகங்கள் வெகு சீக்கிரத்தில்.... நடத்துங்க.....\\
ஊர் வாசம் வீசுகிறதா....இத்தொடரில்:))
உங்கள் வருகைக்கும், கருத்துக்களுக்கும் ரொம்ப நன்றி விஜய்!
\\Blogger JSTHEONE said...
Chanceless nalla kadhai...nalla flow....
karthik oda repeat proposal soooper....
screen play soooper kalakiteenga...\\
உங்கள் தொடர் வருகைக்கும் பாராட்டிற்கும் மிக்க நன்றி சரவணன்!
\\Blogger சரவணா said...
அடடா, என்ன ஆச்சு திவ்யா உங்களுக்கு? நெறைய mega serial பாக்க ஆரம்பிச்சுடீங்களா? ஏன் இவ்வளவு சோகம்? ஒரு "feel good" கதை எதிர் பார்த்து வந்தேன். சந்தோசமா முடிங்க ப்ளீஸ்...\\
வாங்க சரவணா......ரொம்ப நாளைக்கு அப்புறம் என் ப்ளாக் பக்கம் வந்திருக்கிறீங்க, நன்றி:))
\\Blogger சரவணா said...
//தீபா........ரோட் ஸைட் ரோமியோ போட்ட அப்பளிக்கேஷனை தான் ரிஜக்ட் பண்ணிட்ட.........இந்த கார்த்திக் ஐ.பி.எஸ் கொடுக்கிற அப்பளிக்கேஷனை கன்ஸிடர் பண்ணுவியா??"//
பாவம் கார்த்திக். ரெண்டாவது இன்னிங்க்ஸ்லயாவது அவரு நெனச்சபடியே நடக்கட்டும். அந்த சீனியர் மறுபடியும் வராம இருக்கட்டும்.\\
கார்த்திக் மேல ரொம்பத்தான் அக்கறை:))
"உன்னிடத்தில்........சரணடைந்தேன்”
:)))))))))))))
:(( En ippadi??
//அந்த பையனை தீபா எடுத்துப்பாங்களா!!!??//
eduththukirathukku avan enna thattula vacha jaangiriyaa?? nalla kekkuraangaiyaa detailu.. ;))
\\Blogger Subbu said...
"உன்னிடத்தில்........சரணடைந்தேன்”
:)))))))))))))\\
வாங்க subbu,
உங்கள் முதல் வருகைக்கும், புன்னகைக்கும் நன்றி!!
\\Blogger ஜி said...
:(( En ippadi??\\
எது எப்படி??
\\Blogger ஜி said...
//அந்த பையனை தீபா எடுத்துப்பாங்களா!!!??//
eduththukirathukku avan enna thattula vacha jaangiriyaa?? nalla kekkuraangaiyaa detailu.. ;))\\
அந்த குழந்தையை தீபா தத்தெடுத்துப்பாங்களான்னு நல்ல எண்ணத்துல தானே கேட்கிறார், அதை ஏன் கதாசிரியரே கிண்டல் அடிக்கிறீங்க:)
வருகைக்கும் பின்னூட்டங்களுக்கும் நன்றி ஜி!
கலந்து கட்டிய உணர்வுகளுடன் பயணிக்கின்றது தொடர் ...
Post a Comment