April 20, 2009
உன்னிடத்தில்.........சரணடைந்தேன்!!! - 1
சென்னையிலுள்ள பிரபல மருத்துவரின் ஒரே மகளான டாக்டர் தீபா, அரசாங்க மருத்துவருக்கான தேர்வில் தேர்ச்சியாகி, திருநெல்வேலி ஹைகிரவுண்ட் அரசாங்க மருத்துவமனையில் பணிபுரிவதற்கான அனுமதிப் பெற்றாள்.
தனது க்ளினிக்கில் பணிபுரியாமல், வெளியூரில் சென்று மகள் பணிபுரிய விரும்புவது மனதிற்கு கஷ்டமாக இருந்தாலும், மகள் தீபாவிற்கு இந்த இடமாறுதல் மன ஆறுதலை தரும் என்ற நம்பிக்கையில், தீபாவின் அப்பா மகளின் முடிவிற்கு சம்மதித்தார்.
திருநெல்வேலி செல்லும் தீபாவிற்கு துணையாக அவளது பாட்டியும் தாத்தாவும் உடன் வந்திருந்தனர்.
நெல்லை ஹைகிரவுண்ட் ஜி.ஹெச்சில் தன் முதல் நாள் பணியினை தொடங்கினாள் தீபா.
காலை பத்து மணியளவில், மகப்பேறு பிரிவில் அவுட் பேஷண்ட்ஸை ஒவ்வொருவராக அவள் பரிசோதித்துக் கொண்டிருந்தபோது, 20 வயதிற்குள் மதிக்க தக்க ஓர் இளம்பெண் தனது மூன்று வயது மகனுடன் அறையினுள் வந்தாள். தீபா அவளிடம்.......
"சொல்லுங்கம்மா.......உங்க பேர் என்ன?"
"ச....சரஸ்வதி"
"உடம்புக்கு என்ன???"
"எனக்கு.........அபார்ஷன் பண்ணனும் டாக்டர்....."
"எத்தனை மாசம் இப்போ....."
"இரண்டு...."
"ஏன்மா........இந்த குழந்தை வேணாம்னு கலைக்க சொல்ற"
பதில் சொல்லவில்லை சரஸ்வதி, மாறாக சிறு விசும்பலுடன் அழ ஆரம்பித்தாள்.
"ஆழாதேமா.........என்ன காரணம்னு சொல்லு என்கிட்ட"
"டாக்டரம்மா......இந்த குழந்தை வேணாம்......கலைச்சிருங்க....."
"அதான் ஏன்னு கேட்கிறேன்.......உன் முத குழந்தைக்கு ரெண்டு அல்லது மூணு வயசு இருக்குமா இப்போ?......அப்புறம் ஏன் இரண்டாவது குழந்தை வேணாம்னு சொல்ற"
"என்....என் வீட்டுக்காரர் இந்த குழந்தையை அவரோடதில்லைன்னு சந்தேகப்படுறார்"
"சந்தேகப்படுறாரா???...............இது அவர் குழந்தைதானே?"
"அய்யோ......டாக்ட்டரம்மா......சத்தியமா இது அவர் குழந்தைதாம்மா, ஆனா அந்த மனுஷன் தான் என்னையும் அவரோட கூட்டாளியையும் சேர்த்து வைச்சு அசிங்கமா பேசி..........தினத்திக்கும் அடிக்கிறார்மா"
இப்போது சரஸ்வதியின் அழுகை அதிகரித்தது.
அவளை கூர்ந்து நோக்கினாள் தீபா.......நல்ல படித்த , வசதியான குடும்பத்து பெண்ணிற்கு, ஏழை பெண்ணாக மாறுவேஷம் போட்டது போன்று ஒரு தோற்றம் அவளிடம்.
சரஸ்வதியின் முகத்தில் ஒரு வெகுளித்தனம்,
அழகான வட்ட முக அமைப்பு,
மினுமினுப்பான தங்க நிறம்...ஏழ்மையினால் மங்கியிருந்தது,
அவளது நூல் புடவையையும், வெற்று கழுத்தையும் மீறி அவளது அழகு பார்ப்பவர்களை பிரமிக்க வைக்கும் வண்ணமிருந்தது.
"உன் புருஷன் அடிக்கிறார்னா........நீ உன் அப்பா அம்மாகிட்ட சொல்லு, அவங்க சொல்லியும் கேட்கலீனா......குழந்தை பிறக்கிற வரைக்கும் உன் அப்பா அம்மா வீட்ல இரு, இப்படி அவசரப்பட்டு கர்பத்தை கலைக்க கூடாதுமா"
டாக்டர் தீபா ............அப்பா, அம்மா என்று வார்த்தைக்கு வார்த்தை கூறவும், "ஓ!!" வென தலையில் அடித்துக்கொண்டு அழுதாள் சரஸ்வதி....
பதற்றதுடன் தீபா அவளிடம் என்னவென்று விசாரிக்க, அழுகையினுடனே பேச ஆரம்பித்தாள் சரஸ்வதி.....
"அப்பா அம்மா பேச்சை கேட்காம......பதினொன்னாங் க்ளாஸ் படிக்கிறப்போ, இந்த ஆட்டோகாரரோட ஓடி வந்துட்டேன்......எல்லாம் வயசு கோளாறுமா........என்னைய என் வீட்ல தலைமூழ்கிட்டாங்க......இப்போ நாதி அத்து போய் இந்த குடிகார பயலோட கொச்சையான பேச்சையும்,ஏச்சையும் கேட்டுக்கிட்டு, அடியும் வாங்கிக்கிட்டு..........நான் பெத்த இந்த பையனுக்காக உசிரோட இருக்கேன்"
அவளுக்கு குடிக்க தண்ணீர் கொடுத்து, ஆசுவாசப்படுத்திய தீபா, அவளுக்கு ஆறுதல் கூறியதோடு நிறுத்தாமல், அவளது பத்தாம் வகுப்பு சான்றிதளை தன்னிடம் தந்தால், சரஸ்வதி பன்னிரெண்டாம் வகுப்பு பரீட்ச்சை எழுத உதவி செய்வதாகவும்,பின் தட்டச்சு படித்து ஏதாவது ஒரு நல்ல வேலைக்கு செல்லலாம், புருஷனுக்கும் உறுதுணையாக இருந்து, இருவரும் நல்ல நிலைமைக்கு வரலாம் என்று அறிவுரை கூறினாள்.
தன் கரம் கூப்பி தீபாவுக்கு நன்றி கூறிய சரஸ்வதி, முகத்தில் ஒரு தெளிவுடன் அவ்வறையைவிட்டு வெளியேறினாள்.
இரண்டு நாள் கழித்து , முகத்திலும் கையிலும் சிறு சிறு காயங்களுடன் தீபாவை சந்திக்க வந்தாள் சரஸ்வதி.
தனது பத்தாம் வகுப்பு சான்றிதழை தேடியபோது, தான் தொடர்ந்து படிக்க போவது அறிந்து, தன்னை தன் கணவன் அடித்ததாகவும், எப்படியோ அவனுக்கு தெரியாமல் பரணிலிருந்த சான்றிதழை எடுத்து வந்ததாகவும் கூறி, தன் சான்றிதழ்களை தீபாவிடம் கொடுத்தாள் சரஸ்வதி.
சரஸ்வதியின் கண்களில் , எப்படியும் மேற்கொண்டு படித்து முன்னேற வேண்டும் என்ற ஆர்வமும், விருப்பமும் இருப்பதை தீபாவால் உணர முடிந்தது.
இனிமேலும் மேற்படிப்பிற்கு சரஸ்வதியின் கணவன் எதிர்ப்பு தெரிவித்தால், அவனை தன்னிடம் அழைத்துவருமாறும், தான் அவருக்கு பெண்களுக்கு படிப்பு எத்தனை முக்கியமென்பதை எடுத்துக் கூறுவதாகவும் அவளுக்கு வாக்களித்து, அவளை அனுப்பி வைத்தாள் தீபா.
அதன்பின் டாக்டர் தீபா, ஆப்ரேஷன் தியேட்டரில் ஒரு பெண்ணிற்கு சிசேரியன் முறையில் டெலிவரி செய்துவிட்டு, தனது அறைக்கு திரும்பியபோது...........எதேச்சையாக வராண்டாவில் தன் எதிரில் வந்த நபர் மீது மோதிக்கொண்டாள்.
தலை நிமிர்ந்த தீபா, தான் மோதியது ஒரு காவல் துறை அதிகாரியின் மேல் என்பதை அவரது சீருடையின் மூலம் அறிந்துக்கொண்டு,
"ஸாரி........ஸாரி சார்" என்றாள்.
"இட்ஸ் ஓகே...." என்று அவர் பதலளித்ததும், தீபா அவரை கடந்து சென்றாள்.
இரண்டு அடிதான் அவள் எடுத்து வைத்திருப்பாள், திடீரென "தீபா........" என்று ஒருமையில் தன் பெயரை யாரோ மிக அருகாமையில் அழைத்ததும், நின்று திரும்பிய தீபா, அவள் மோதிய் அந்த போலீஸ்காரர், தன் போலீஸ் தொப்பியை கழற்றிவிட்டு சிரித்த முகத்துடன் தன்னை நோக்கி வருவதை குழப்பத்துடன் பார்த்தாள்.
"தீபா............என்னை யார்ன்னு தெரியுதா??"
"............"
" தீபா............நான் கார்த்திக்.............கார்த்திக் குமார், +2 படிக்கிறப்போ உன் கூட கெமிஸ்ட்ரி டியூஷன் படிச்சேனே.........ஞாபகமிருக்கா??"
"ஏ..........கார்த்தி............நீ.........நீயா...........சட்டுன்னு இந்த கெட்டப்ல உன்னை அடையாளமே தெரில"
"ஹலோ டாக்டர் மேடம்..........இது என் யூனிஃபார்ம், ........கெட்டப் செட்டப்னு சொல்லிட்டீயே.......இப்போ நான் கார்த்திக் ஐ.பி.எஸ்" என்று காலரை தூக்கிவிட்டு குறும்பு புன்னகை புரிந்தான்.
"ஹையோ.........ஸோ ஸாரி..........ஐ.பி.எஸ் சார்............தெரியாம சொல்லிட்டேன் மன்னிச்சுடுங்க" என்று பதிலுக்கு அவளும் சிரிப்புடன் பதிலளித்தாள்.
"ச்சே.....ச்சே......எதுக்கு ஸாரி எல்லாம் கேட்கிறீங்க டாக்டர் மேடம்" என்று கண்சிமிட்டியவன்,
"நாம மீட் பண்ணி ஒரு 6 அல்லது 7 வருஷம் இருக்குமா??......ஸ்கூல் டேய்ஸ்ல ரோட் ஸைட் ரோமியோ கெட்டப்ல பார்த்த ஒருத்தனை, போலீஸ் யூனிஃபார்மல இப்போ பார்த்தா நிச்சயம் அடையாளம் தெரியாது............"
"ஐ.பி.எஸ்...........படிச்சிருந்தாலும்........இன்னும் உன்னோட அந்த குறும்பு பேச்சும், சிரிப்பும் மாறவே இல்ல கார்த்தி"
பின் இருவரது பேச்சும் தங்கள் தொழில் சம்பந்தமாக சென்றது, ஒரு கொலை கேஸ் விஷயமாக, இன்வெஸ்டிகேஷனுக்காக தான் அரசு மருத்துவமனைக்கு வந்ததாக கூறினான் கார்த்திக்.
இருவரும் சிறிது நேரம் பேசியிருந்து விட்டு, தங்கள் மொபைல் எண்களை பரிமாறிக்கொண்டு விடைபெற்றனர்.
அன்று சாயந்திரம் ஹாஸ்ப்பிட்டல் ட்யூட்டி முடிந்து தனது காரில் டாக்டர் தீபா வீடு திரும்பிக்கொண்டிருக்கையில்..........ஒரு வளைவில் கார் திரும்பும் போது, எதிரில் கையில் சிறு குழந்தையுடன் ஒரு பெண் கதறிக்கொண்டு ரோட்டை வேகமாக க்ராஸ் செய்ய, தீபாவின் கார் ட்ரைவர் சடன் ப்ரேக் போட்டார், தீபா அதிர்ச்சியுடன் அந்த பெண்ணை கூர்ந்து நோக்கினாள்,
'இது........இது.........சரஸ்வதிதானே' இவ ஏன் இப்படி ஓடுறா ரோட்ல............தீபா யோசித்துக்கொண்டிருக்கும்போதே, அவளை துரத்திக்கொண்டு கையில் ஒரு பெரிய கட்டையுடன் ஒரு ஆள் சந்திலிருந்து பின்னால் ஓடி வந்தான், அது அவளது கணவனாக இருக்க வேண்டும் என்று நொடியில் யூகித்துக்கொண்டாள் தீபா.
"ஓ..........மை காட்...!"
சரஸ்வதியை காப்பாற்ற வேண்டும் என்று தீபா தன் காரிலிருந்து இறங்குவதற்குள்...........
[தொடரும்]
பகுதி - 2
Subscribe to:
Post Comments (Atom)
62 comments:
அட... அதற்குள்ளாக அமர்களமான அடுத்த தொடர்கதையா திவ்யா... ??
தலைப்பே கவிதையா இருக்கு...:))
இந்த முறை கதையும் களமும் வித்தியாசமாக இருக்கிறது திவ்யா... புதிய
முயற்சியா..? வாழ்த்துகள்..!!
அட இந்த கதையில் வரும் சம்பவங்களுக்கு ஏற்றார்போல எப்படி இவ்ளோ
பொருத்தமா படங்கள் எடுக்கிறே திவ்யா..?? ரொம்ப நல்லாருக்கு...!! :)))
அறைகுறை வயசுல காதல் வேணாம்னு ஒரு சமுதாய கண்ணோட்டத்தோட முதல் பகுதியே
அமர்க்களமா இருக்கு திவ்யா..!!
அட அதுக்குள்ள முடிச்சுட்டியே இந்த பகுதிய... இன்னும் கொஞ்சம்
எழுதியிருக்கலாம்ல..? :)))) சரி சரி சீக்கிரம் அடுத்த பாகம் எழுது
திவ்யா..காத்துகிட்டு இருக்கோம்...!!
ahaa.. officela vela odadhey eppo.. epdi paniteengaley divya.. :P
epdi endha maari correcta padam podreenga.. chance ellai - ana kadhai konjam ugikka mudiyara maari erukku :)
Bharath ungalukku pidikadho- he he
Karthik name for thuru thuru character has become very usual mam.
waiting for the next post
superb :)
hiiiiii top ten comment
chaancela..apdye kalignar tvku anupidunga :)) mega seriala eduthuruvanga :)) toppppu
aama pona kathaiya mudihceeengala?? ending padichapola nyabgamay ilaye
அருமையா.. அமர்க்களமா ஆரம்பிச்சுருக்கு.
கவிதைகள், காதல் மொழிகள் இல்லாம திவ்யாகிட்டருந்து வித்யாசமான கதை.. கலக்கல்..
காதல் கதைக்குள் இன்னொரு காதல் கதையை கொண்டு வந்து தவிர்க்கப் பட வேண்டிய பதின்ம வயது காதலை சொன்ன விதம் அருமை...
//"ஹலோ டாக்டர் மேடம்..........இது என் யூனிஃபார்ம், ........கெட்டப் செட்டப்னு சொல்லிட்டீயே.......இப்போ நான் கார்த்திக் ஐ.பி.எஸ்" என்று காலரை தூக்கிவிட்டு குறும்பு புன்னகை புரிந்தான்.//
திவ்யா டச்...அதே குறும்பு ரசித்தேன்...
//இருவரும் சிறிது நேரம் பேசியிருந்து விட்டு, தங்கள் மொபைல் எண்களை பரிமாறிக்கொண்டு விடைபெற்றனர்.//
இந்த மொபைல் எண்களின் பரிமாற்றத்தில் தான்
எண்ணங்களின் பரிமாற்றமும் நடக்குமோ...?
கதையின் அடுத்த பகுதிக்கு காத்திருக்கிறோம்...
வாழ்த்துக்கள் திவ்யா...
தொடர்கதை, அதுவும் வித்தியாசமாக இரு வேறு கதைகள் இணையும் ஒரு கதை போல் இருக்கிறது. தொடர்ந்து படிக்க ஆர்வமாக இருக்கிறது.
டீன் ஏஜ் காதலை பற்றி டிப்ஸ், இப்ப அதை சார்ந்த ஒரு கதை, நல்ல முயற்சி...
வாழ்த்துகள்...!
தொடங்கியாச்சா உங்க திக் திக் திருப்பம் கொண்ட தொடர்கதையை..ஆனா எனக்கு ஒரு ஆசை ஒரு ஃபாஸ்ட் பார்வேர்ட் இருக்கனும் உங்க எல்லா கதையையும் அடுத்த அடுத்த பாகங்களை வேகமா படிக்க..
But For Now Waiting for Next Part :)
அட்டகாசம்.. வரிக்கு வரி சுவாரஸ்யம் கூடுது!!
காதல் சந்தியா குரல் அப்படியே ஒலிச்சது வசனங்களில். நல்ல சாய்ஸ்!!
ஆனா ஸ்ரீகாந்த் தான்...இட்ஸ் ஓகே.. i will adjust. but story as usual kalakalz!
அருமையான தொடக்கம்.சீக்கிரம் அடுத்த பாகத்தை பதிவிடுங்கள்.வாழ்த்துக்கள்..
\\Blogger நவீன் ப்ரகாஷ் said...
அட... அதற்குள்ளாக அமர்களமான அடுத்த தொடர்கதையா திவ்யா... ??
தலைப்பே கவிதையா இருக்கு...:))\\
வாங்க கவிஞரே,
தலைப்பே கவித்துவமா இருக்கா, நன்றி நன்றி:))
\Blogger நவீன் ப்ரகாஷ் said...
இந்த முறை கதையும் களமும் வித்தியாசமாக இருக்கிறது திவ்யா... புதிய
முயற்சியா..? வாழ்த்துகள்..!!\\
வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி !
\\Blogger நவீன் ப்ரகாஷ் said...
அட இந்த கதையில் வரும் சம்பவங்களுக்கு ஏற்றார்போல எப்படி இவ்ளோ
பொருத்தமா படங்கள் எடுக்கிறே திவ்யா..?? ரொம்ப நல்லாருக்கு...!! :)))\\
குறிப்பிட்டு பாராட்டியதிற்கு ஒரு ஸ்பெஷல் தாங்க்ஸ்:))
\\Blogger நவீன் ப்ரகாஷ் said...
அறைகுறை வயசுல காதல் வேணாம்னு ஒரு சமுதாய கண்ணோட்டத்தோட முதல் பகுதியே
அமர்க்களமா இருக்கு திவ்யா..!!\\
கருத்தினை பின்னூட்டத்தில கோடிட்டு காட்டியதிற்கு நன்றி!
\\Blogger நவீன் ப்ரகாஷ் said...
அட அதுக்குள்ள முடிச்சுட்டியே இந்த பகுதிய... இன்னும் கொஞ்சம்
எழுதியிருக்கலாம்ல..? :)))) சரி சரி சீக்கிரம் அடுத்த பாகம் எழுது
திவ்யா..காத்துகிட்டு இருக்கோம்...!!\\
விரைவில் அடுத்த பகுதியும் பதிவிடுகிறேன்:)
\\Blogger Srivats said...
ahaa.. officela vela odadhey eppo.. epdi paniteengaley divya.. :P\\
ஆஃபீஸ் நேரத்துல என் ப்ளாக் படிச்சீங்களா?? டபுள் நன்றி:)
\\ epdi endha maari correcta padam podreenga.. chance ellai - ana kadhai konjam ugikka mudiyara maari erukku :)\\
எல்லா பகுதியும் படிச்சுட்டு சொல்லுங்க....உங்க யூகம் கரெக்ட்டா இல்லியான்னு:)
\\ Bharath ungalukku pidikadho- he he\\
அப்படியெல்லாம் இல்ல, கதைக்கு பொருத்தமா இருந்ததால, பரத் படம் போட்டேன்:)
\ Karthik name for thuru thuru character has become very usual mam.
waiting for the next post\\
உங்கள் தொடர் வருகைக்கும், பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றி!!
\\Blogger Gajani said...
superb :)\\
வருகைக்கும் பாராட்டிற்கும் நன்றி கஜனி!!
\\Blogger gils said...
hiiiiii top ten comment\\
:))
\\Blogger gils said...
chaancela..apdye kalignar tvku anupidunga :)) mega seriala eduthuruvanga :)) toppppu\\
நீங்க சொல்லிட்டீங்க இல்ல.....அனுப்பிடலாம்:))
\\Blogger gils said...
aama pona kathaiya mudihceeengala?? ending padichapola nyabgamay ilaye\
சுபமா முடிச்சாச்சே, சரியா பார்க்கலியோ நீங்க?
\\Blogger Raghav said...
அருமையா.. அமர்க்களமா ஆரம்பிச்சுருக்கு.\\
ரொம்ப நன்றி ராகவ்!!
\\Blogger Raghav said...
கவிதைகள், காதல் மொழிகள் இல்லாம திவ்யாகிட்டருந்து வித்யாசமான கதை.. கலக்கல்..\\
ஆஹா, இவ்ளோ நுணுக்கமா கவினிச்சீங்களா?
கருத்திற்கும் பாராட்டிற்கும் நன்றி ராகவ்!!
\\Blogger புதியவன் said...
காதல் கதைக்குள் இன்னொரு காதல் கதையை கொண்டு வந்து தவிர்க்கப் பட வேண்டிய பதின்ம வயது காதலை சொன்ன விதம் அருமை...\\
உங்கள் பாராட்டு உவகை அளித்தது புதியவன், மிக்க நன்றி!!
\\Blogger புதியவன் said...
//"ஹலோ டாக்டர் மேடம்..........இது என் யூனிஃபார்ம், ........கெட்டப் செட்டப்னு சொல்லிட்டீயே.......இப்போ நான் கார்த்திக் ஐ.பி.எஸ்" என்று காலரை தூக்கிவிட்டு குறும்பு புன்னகை புரிந்தான்.//
திவ்யா டச்...அதே குறும்பு ரசித்தேன்...\\
ரசிப்பினை குறிப்பிட்டு சொன்னதிற்கு நன்றி:))
\\Blogger புதியவன் said...
//இருவரும் சிறிது நேரம் பேசியிருந்து விட்டு, தங்கள் மொபைல் எண்களை பரிமாறிக்கொண்டு விடைபெற்றனர்.//
இந்த மொபைல் எண்களின் பரிமாற்றத்தில் தான்
எண்ணங்களின் பரிமாற்றமும் நடக்குமோ...?
கதையின் அடுத்த பகுதிக்கு காத்திருக்கிறோம்...
வாழ்த்துக்கள் திவ்யா...\\
வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி புதியவன்!!
\\Blogger நிமல்-NiMaL said...
தொடர்கதை, அதுவும் வித்தியாசமாக இரு வேறு கதைகள் இணையும் ஒரு கதை போல் இருக்கிறது. தொடர்ந்து படிக்க ஆர்வமாக இருக்கிறது.
டீன் ஏஜ் காதலை பற்றி டிப்ஸ், இப்ப அதை சார்ந்த ஒரு கதை, நல்ல முயற்சி...
வாழ்த்துகள்...!\\
உங்கள் வாழ்த்துக்கள் என் முயற்சியினை ஊக்கப்படுத்துகிறது, மிக்க நன்றி நிமல்!!
\\Blogger Ramya Ramani said...
தொடங்கியாச்சா உங்க திக் திக் திருப்பம் கொண்ட தொடர்கதையை..ஆனா எனக்கு ஒரு ஆசை ஒரு ஃபாஸ்ட் பார்வேர்ட் இருக்கனும் உங்க எல்லா கதையையும் அடுத்த அடுத்த பாகங்களை வேகமா படிக்க..
But For Now Waiting for Next Part :)\\
உங்க ஆசையை நிறைவேத்திடலாம் ரம்யா, இந்த தடவை ரொம்ப தாமதமில்லாமல், அடுத்த பகுதிகளை பதிவிடலாம்னு நினைச்சிருக்கிறேன், சந்தோஷம் தானே?
\\Blogger Bhuvanesh said...
அட்டகாசம்.. வரிக்கு வரி சுவாரஸ்யம் கூடுது!!\\
பாராட்டிற்கு மிக்க நன்றி புவனேஷ்!!
\\Blogger Thamizhmaangani said...
காதல் சந்தியா குரல் அப்படியே ஒலிச்சது வசனங்களில். நல்ல சாய்ஸ்!!
ஆனா ஸ்ரீகாந்த் தான்...இட்ஸ் ஓகே.. i will adjust. but story as usual kalakalz!\\
கருத்திற்கும் பாராட்டிற்கும் மிக்க நன்றி காயத்ரி:))
\\Blogger Raj said...
அருமையான தொடக்கம்.சீக்கிரம் அடுத்த பாகத்தை பதிவிடுங்கள்.வாழ்த்துக்கள்..\\
வாங்க ராஜ்,
உங்கள் தொடர் வருகையும், பின்னூட்டமும் உவகை அளிக்கிறது!
மீண்டும் வருக!!
காதல் கதைகளை கலக்கிக் கொண்டு இருந்தீங்க! இப்ப வித்தியாசம முயற்சி செய்யறீங்க! வாழ்த்துக்கள்!
கதை நன்றாக இருக்கு! சீக்கிரம் அடுத்த பாகம் போடுங்க!
//திருநெல்வேலி செல்லும் தீபாவிற்கு துணையாக அவளது பாட்டியும் தாத்தாவும் உடன் வந்திருந்தனர்./
திருநெல்வேலியா! :)
//இனிமேலும் மேற்படிப்பிற்கு சரஸ்வதியின் கணவன் எதிர்ப்பு தெரிவித்தால், அவனை தன்னிடம் அழைத்துவருமாறும், தான் அவருக்கு பெண்களுக்கு படிப்பு எத்தனை முக்கியமென்பதை எடுத்துக் கூறுவதாகவும் அவளுக்கு வாக்களித்து, அவளை அனுப்பி வைத்தாள் தீபா.
/
கருத்துள்ள கதையாக இருக்கு :)
room pottu ukkanthu yosichirukken. kathai eppadi pogumnu. paarkalam. :)
great start.. pretty diff one too. :)
\\Blogger Surya said...
காதல் கதைகளை கலக்கிக் கொண்டு இருந்தீங்க! இப்ப வித்தியாசம முயற்சி செய்யறீங்க! வாழ்த்துக்கள்!
கதை நன்றாக இருக்கு! சீக்கிரம் அடுத்த பாகம் போடுங்க!\\
உங்கள் வாழ்த்துக்களுக்கும் பாராட்டிற்கும் நன்றி சூர்யா:)
\\Blogger Surya said...
//திருநெல்வேலி செல்லும் தீபாவிற்கு துணையாக அவளது பாட்டியும் தாத்தாவும் உடன் வந்திருந்தனர்./
திருநெல்வேலியா! :)\\
ஏன் இவ்வளவு ஆச்சரியமா கேட்கிறீங்க?
\\Blogger Surya said...
//இனிமேலும் மேற்படிப்பிற்கு சரஸ்வதியின் கணவன் எதிர்ப்பு தெரிவித்தால், அவனை தன்னிடம் அழைத்துவருமாறும், தான் அவருக்கு பெண்களுக்கு படிப்பு எத்தனை முக்கியமென்பதை எடுத்துக் கூறுவதாகவும் அவளுக்கு வாக்களித்து, அவளை அனுப்பி வைத்தாள் தீபா.
/
கருத்துள்ள கதையாக இருக்கு :)\\
நன்றி சூர்யா!
\\Blogger Karthik said...
room pottu ukkanthu yosichirukken. kathai eppadi pogumnu. paarkalam. :)
great start.. pretty diff one too. :)\\
ஆஹா.......ரூம் போட்டு யோசிச்சீங்களா?
பார்க்கலாம் கார்த்திக், உங்கள் யூகம் கரெக்ட்டான்னு:)
வருகைக்கும் பாராட்டிற்கும் நன்றி கார்த்திக்!
சஸ்பென்ஸ் முடிச்சு இருக்கீங்க, சினேகாவுக்கும் ஏதோ கதையும் இருக்கும் போல, முதல் பத்தியிலே தெரியுது!
சரி பொருத்து இருந்து பாப்போம்!
எபோஅ சொல்லாம விட்டுட்டேன் பாருங்க!
இருந்தாலும் உங்க கதாநாயகி ரொம்ப பாஸ்ட் போல +2 முடிச்சு 6,7 வருசத்திலே அரசு மருத்தவர் ஆகும் அளவுக்கு வந்துட்டாங்களே! சூப்பர் ஆள் தான் போல ;)
50! ???
:)))
திருநெல்வேலியா??
Naanum eththanaiyo thadava Medical college pakkam round adichirukken... Sneha maathiri oru ponna kooda ithu varaikkum naan paathathillaiye.. athaan enakkum oru doubtu ;))
ரொம்ப வித்யாசமான கதைக்களனா இருக்கே!!! கதையும், படங்களும் வழக்கம் போல அருமை…சஸ்பென்ஸோட முடிச்சிட்டீங்க :) சீக்கரம் அடுத்த பகுதிய போடுங்க…
\\Blogger நாகை சிவா said...
சஸ்பென்ஸ் முடிச்சு இருக்கீங்க, சினேகாவுக்கும் ஏதோ கதையும் இருக்கும் போல, முதல் பத்தியிலே தெரியுது!
சரி பொருத்து இருந்து பாப்போம்!
எபோஅ சொல்லாம விட்டுட்டேன் பாருங்க!
இருந்தாலும் உங்க கதாநாயகி ரொம்ப பாஸ்ட் போல +2 முடிச்சு 6,7 வருசத்திலே அரசு மருத்தவர் ஆகும் அளவுக்கு வந்துட்டாங்களே! சூப்பர் ஆள் தான் போல ;)\\
வாங்க சிவா,
உங்கள் கருத்திற்கும் பாராட்டிற்கும் மனமார்ந்த நன்றி சிவா!
\\எபோஅ சொல்லாம விட்டுட்டேன் பாருங்க!\\
:)) இதுக்கு ஒரு ஸ்பெஷல் தாங்க்ஸ்.
\\Blogger நாகை சிவா said...
50! ???\\
Yes.....thanks:)
\\Blogger ஜி said...
:)))
திருநெல்வேலியா??
Naanum eththanaiyo thadava Medical college pakkam round adichirukken... Sneha maathiri oru ponna kooda ithu varaikkum naan paathathillaiye.. athaan enakkum oru doubtu ;))\\
ஹலோ கதாசிரியரே! பொண்ணு வேலை பார்க்க வந்திருக்கிறது தான் திருநெல்வேலியில, படிச்சதெல்லாம் சென்னையில்:))
\\Blogger Divyapriya said...
ரொம்ப வித்யாசமான கதைக்களனா இருக்கே!!! கதையும், படங்களும் வழக்கம் போல அருமை…சஸ்பென்ஸோட முடிச்சிட்டீங்க :) சீக்கரம் அடுத்த பகுதிய போடுங்க…\\
வாங்க திவ்யப்ரியா,
வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி!!
விரைவில் அடுத்த பகுதி...பதிவிடுகிறேன், படித்து கருத்து சொல்லுங்க.
mikavum nalla kadhai....
nalla flow...
sooper...
i will get back to u at part 2...
\\Blogger JSTHEONE said...
mikavum nalla kadhai....
nalla flow...
sooper...
i will get back to u at part 2...\\
Thanks for your visit & comments Saravanan:))
காதல் கலந்த நல்ல ஒரு விருவிருப்பான தொடரின் துவக்கம் நல்லாயிருக்கு.
அப்பாடா...
தொடர் முழுவதையும் ஒரே நேரத்தில் படிக்கும் வாய்ப்பு கிடைத்தது.
கதை நன்றாக உள்ளது.
ஆனால் ரெம்பவே சினிமாத்தனம் இருப்பதால் மீண்டும் ஒரு முறை உங்களிடம் நாங்கள் கேட்டுக் கொள்வது என்னவென்றால்
“சினிமாவுக்கு கதை, வசனம் எழுதப் போங்கள். கண்டிப்பாக படம் 100 நாள் தாண்டி ஒடும்.”
வாழ்த்துகள்
\\Blogger நட்புடன் ஜமால் said...
காதல் கலந்த நல்ல ஒரு விருவிருப்பான தொடரின் துவக்கம் நல்லாயிருக்கு.\\
Thanks Jamal!
\\Blogger புகழன் said...
அப்பாடா...
தொடர் முழுவதையும் ஒரே நேரத்தில் படிக்கும் வாய்ப்பு கிடைத்தது.
கதை நன்றாக உள்ளது.
ஆனால் ரெம்பவே சினிமாத்தனம் இருப்பதால் மீண்டும் ஒரு முறை உங்களிடம் நாங்கள் கேட்டுக் கொள்வது என்னவென்றால்
“சினிமாவுக்கு கதை, வசனம் எழுதப் போங்கள். கண்டிப்பாக படம் 100 நாள் தாண்டி ஒடும்.”
வாழ்த்துகள்\\\
வாங்க புகழன்,
நீண்ட நாட்களுக்கு பின் என் வலைதளம் வந்திருக்கிறீர்கள், மகிழ்ச்சி:)
உங்கள் மனம்திறந்த கருத்திற்கும், வாழ்த்துக்களுக்கும் நன்றி புகழன்!
Post a Comment