March 16, 2009

சந்தித்தவேளை - 1



கோயம்புத்தூர் நிர்மலா கல்லூரியில் பி.காம் படித்து முடித்துவிட்டு, சென்னையிலுள்ள தன் சித்தியின் வீட்டில் தங்கியிருந்து பட்டபடிப்பினை தொடர,அங்குள்ள ஒரு பிரபல கல்லூரியில் எம்.பி.ஏ அட்மிஷனிற்காக தன் பெற்றோருடன் சென்னைக்கு சென்றாள் அபிநயா.

ஒரு வாரம் சென்னையில் தங்கியிருந்து, தூரத்து உறவினர் இல்லத்திருமண விழாவிற்கும் சென்றுவிட்டு, அபியும் கல்லூரிக்கு செல்ல ஆரம்பித்ததும் கோயம்புத்தூர் திருமபலாம் என முடிவு செய்திருந்தனர் அவளது பெற்றோர்.

அபிநயாவின் சித்தி மகள் மாலினி, எத்திராஜ் கல்லூரியில் முதலாமாண்டு பி.ஏ படித்துக்கொண்டிருக்கும் சுட்டி பெண்.சிறுவயதிலிருந்தே அபியும் மாலினியும் அக்கா தங்கை என்பதற்கும் மேலாக நல்ல தோழிகள்.மாலினியின் தம்பி வருண் பள்ளியில் +1 படித்துக்கொண்டிருந்தான்.

மூவரும் நீண்ட நாட்களுக்கு பின் ஒருவரை ஒருவர் சந்தித்துக்கொண்டதால், லூட்டி அடித்துக்கொண்டிருக்க, வீட்டிலுள்ள பெரியவர்கள் மட்டும் உறவினரின் திருமண வரவேற்பிற்கு சென்றனர்.
திருமண விழாவில் தன் பள்ளிகால நண்பரான நடராஜனை சந்தித்தார் அபியின் அப்பா பாலு.
பல வருடங்களுக்கு பின் ஏதேச்சையாக சந்தித்துக்கொண்டதும், நண்பர்கள் இருவரும் உற்சாகமாக அரட்டை அடித்துக்கொண்டனர்.

நடராஜ் தன் மனைவி மற்றும் மகன் கிஷோரை பாலுவின் குடும்பத்திற்கு அறிமுகப் படுத்தினார்.பெரியவர்களுக்கு மரியாதையுடன் வணக்கம் தெரிவித்த கிஷோர், தன் நண்பர்களின் கூட்டத்தோடு மீண்டும் கலந்துவிட்டான்.

தன் மகள் அபிநயா தங்களுடன் வராததால், தனது மணிபர்ஸலிருந்த குடும்ப புகைப்படத்தை நண்பனுக்கும், அவரது மனைவிக்கும் காட்டினார் பாலு.


அபி எனும் அழகு தேவதையை புகைப்படத்தில் கண்டதும், நடராஜும் அவரது மனைவியும் ஒரு அர்த்த புன்னகை உதிர்த்தனர்.
பின், தங்கள் மகன் கிஷோருக்கு 3 மாதத்துக்குள் திருமணம் செய்துவிடுவது அவனது ஜாதகப்படி நல்லது, என கடந்த வாரம் ஜோசியர் தங்களிடம் சொல்லியதை தெரிவித்து, நண்பர்கள் சம்பந்திகளாவது குறித்து பேசினர்.
பாலுவின் குடும்பத்திற்கும் முழு விருப்பமாக இருந்ததால், அபியிடம் ஒரு வார்த்தை கூட கேட்காமலே , வெள்ளிக்கிழமை பெண் பார்க்க வீட்டுற்கு அழைத்தனர்.

திருமண வைபவம் முடிந்து வீட்டிற்கு வந்த பெற்றோர், பெண் பார்க்க வரும் செய்தியை அபியிடம் சொன்னதும், அவள் முழுவதுமாய் உடைந்து போனாள்.
தனது எம்.பி.ஏ கணவு ஒரு சில மணி நேரத்தில் சிதைக்கபட்டுவிட்டதை உணர்ந்த அபி, தன் அம்மாவிடமும் சித்தியிடமும் அழுது கெஞ்சியும், எதுவும் பலிக்கவில்லை.அவளது அப்பா முடிவு என்று ஒன்று எடுத்துவிட்டால்.....யார் சொன்னாலும் மாற்றிக்கொள்ள மாட்டார் என்பது குடும்பத்தில் அனைவரும் அறிந்திருந்தபடியால், அபியின் கெஞ்சுதல் அர்த்தமற்று போனது.

இவ்வளவு நேரம் தங்களுடன் சிரித்து பேசி கும்மாளமடித்து கொண்டிருந்த அபி, இப்படி உடைந்து போய் அழுவது கண்டு, மாலினியும் வருணும் அவளை சமாதனப்படுத்தினர்.

"அபி அக்கா........உனக்கு இந்த கல்யாணத்துல இஷ்டமில்லைன்னா......அந்த மாப்பிள்ளை பையன் பொண்ணு பார்க்க வர்ரப்போ, தனியா 10 நிமிஷம் பேசனும்னு கூப்பிட்டு, உனக்கு இஷ்டமில்லன்னு சொல்லி கல்யாணத்தை நிறுத்திடு, அப்படியும் மாப்பிள்ளை பையன் கேட்கலைன்னு வை..........என்கிட்ட சொல்லு நான் பாத்துக்கிறேன்" என்று பெரிய மனுஷன் மாதிரி பேசினான் வருண்.



"அப்படி தனியா பேச அப்பா......சம்மதிப்பாரா தெரியல......அதுவும் மாப்பிள்ளை பையன் கேட்காம நான் எப்படிடா தனியா பேசனும்னு சொல்ல முடியும்"என்றாள் அபி பாவமான முகத்துடன். அவள் கண்களில் தன் அப்பாவின் மீது வைத்திருந்த பயம் அப்பட்டமாக தெரிந்தது.

"அபி சொல்றதும் சரிதான்டா வருண்......பெரியப்பாகிட்ட இதெல்லாம் செல்லாது..............ஒரே வழிதான் இருக்கு அபி இதுல இருந்து தப்பிக்க"

"என்னடி அது........."

"நேரா மாப்பிள்ளை பையனையே போய் அபி அக்கா மீட் பண்ணிடுறதுதான்........."

"என்னடி உளர்ற......."

"நான் சொல்றதை கேளு அபி............மாப்பிள்ளை பையன் ஃபோடோ கூட நம்மகிட்ட காட்டல, பட் இட்ஸ் ஒகே.........நான் நைஸா மாப்பிள்ளை பையன் எங்கே வேலை பார்ர்கிறார்ன்னு என் அம்மா கிட்ட கேட்டு தெரிஞ்சுட்டு வரேன், வெள்ளிக்கிழமை பொண்ணு பார்க்க வர்றதால.....ப்யூட்டு பார்லர்ல ஃபேஷியல் பண்ணனும்னு சொல்லி உன்னை நான் வெளியில கூட்டிட்டு போறேன், நாம இரண்டு பேரும் போய் அந்த பையனை நேர்ல மீட் பண்ணி, எப்படியாச்சும் இந்த கல்யாணத்தை நிறுத்திடுங்கன்னு கேட்டுப்பார்க்கலாம்"

"ஹை........இது சூப்பர் ஐடியா மாலு.........உனக்கு கூட அப்பப்போ மூளை வேலை செய்யுதே" என கிண்டலடித்தான் வருண்.

எப்படியாவது இந்த கல்யாணம் நடக்க கூடாது, தன் எம்.பி.ஏ படிப்பும் கெட கூடாது என்ற ஆசையில் அபியும் சம்மதித்து, மாலினியுடன் மறுநாள் சென்றாள்.

சென்னையிலுள்ள ஒரு பிரசித்தமான ஃப்ர்னிச்சர் கடையின் சொந்தக்காரர் தான் திரு.நடராஜ் என்பதையும், ராயப்பேட்டையிலுள்ள கிளையினை அவரது மகன், மாப்பிள்ளை பையன் கிஷோர் பார்த்துக்கொள்வதையும் மாலினி தன் அம்மாவிடம் கேட்டு தெரிந்து வைத்திருந்தாள்.

இருவரும் கடையினை நெருங்கியதும் , அதன் பிரமாண்டத்தை கண்டு ஒரு நிமிடம் ஆச்சரியத்தில் மலைத்துபோயினர்.
பின் கடையின் கீழ்தளத்தில் இருந்த கடை பையனிடம் , கடையின் ஓனர் திரு,கிஷோரை பார்க்கவேண்டும் என்று கூறி, மேல் தளத்தில் இருக்கும் அவனது அறையில் இருப்பதை அறிந்துக்கொண்டு அங்கு சென்றனர்.

சிறிது திறந்திருந்த கதவை , லேசாக தட்டிவிட்டு,

" எஸ்கூஸ்மீ......." என்றாள் மாலினி.

"யெஸ்......கம் மின்" என்ற பதிலுக்கு பின் இருவரும் அறையினுள் சென்றனர்.

யார் இந்த இரு பெண்களும்??என்பதுபோல் அவன் புருவமுயர்த்தி யோசிப்பதை பார்த்ததும்,
அட! பையனுக்கும் பொண்ணு ஃபோட்டோ காட்டலியா?
என்று நினைத்துக்கொண்டாள் மாலினி.

"ஹாய் மிஸ்டர் கிஷோர்............ஐ அம் மாலினி, இவ என்னோட அக்கா அபிநயா........இவளைத்தான் நீங்க வெள்ளிக்கிழமை எங்க வீட்டுக்கு பொண்ணு பார்க்க வர்ரீங்க"

'அடடே!!! இது தான் கிஷோர் அப்பா அவனுக்கு பார்த்து வைச்சிருக்கிற பொண்ணா!! இந்த கல்யாணத்தை பெண் பார்க்கும் படலத்துக்கு முன்னமே எப்படியாச்சும் நிறுத்தனும்னு இவ்வளவு நேரம் என்கிட்ட கிஷோர் புலம்பிட்டு, கொஞ்ச நேரம் கடையை பார்த்துக்கோடான்னு சொல்லிட்டு, இப்ப......இப்பத்தான் அவனோட லவ்வரை பார்க்க போனான், அந்நேரம் பார்த்து இந்த பொண்ணுங்க வந்திருக்காங்களே.....!' என்று யோசித்தவன்,

அவன் கிஷோர் இல்லை, அமெரிக்காவிலிருந்து 1 மாத விடுமுறையில் தன் அக்காவின் கல்யாணத்திற்கு இந்தியா வந்திருக்கும் சூர்யா என்பதை சொல்ல வாய்திறக்கும் முன்னே......

"இங்க பாருங்க கிஷோர்........அபிக்கு இந்த கல்யாணத்தில இஷ்டமில்ல, நீங்க பெண் பார்க்க வர்றதுக்கு முன்னமே உங்ககிட்ட சொல்லி, இந்த கல்யாணத்தை நிறுத்த தான் நாங்க இங்க வந்திருக்கிறோம்" என படபடத்தாள் மாலினி.



'அப்படி போடு!!! பொண்ணுக்கும் இஷ்டமில்லையா??? சரி பொண்ணுக்கு ஏன் இந்த கல்யாணத்தில் இஷ்டமில்லைன்னு தெரிஞ்சுக்கிற வரைக்கும் நான் யார்ன்னு சொல்லாமலே பேச்சு கொடுக்கலாம், டைம் பாஸ் ஆன மாதிரி இருக்கும்!' என்று நினைத்த சூர்யா,

"ஓ.......அப்படியா.......ஏ......ஏன் உங்களுக்கு இந்த கல்யாணதுல இஷ்டமில்லைன்னு நான் தெரிஞ்சுக்கலாமா மிஸ் அபிநயா?"

"அவளுக்கு எம்.பி.ஏ படிக்க அட்மிஷன் கிடைச்சிருக்கு........அவ படிக்க போறா........ஸோ அவளுக்கு இதுல இஷ்டமில்ல"

"என்ன மாலினி.......வந்ததுல இருந்து நீயே பேசிட்டு இருக்க, உங்க அக்கா பேசமாட்டாங்களா?? ........அவங்க இப்போ பேசாலீனா.....நாளைக்கு பொண்ணு பார்க்க வர்றப்போ, பாட்டு பாட சொல்லுவேன்" என்று குறும்பாக சிரித்தான்.

"என்ன ஓவரா கிண்டல் பண்றீங்க........அதான் நான் அவ சார்ப்ல சொல்றேன்ல"

"ஒரு நிமிஷம் இரு மாலு.......நானே பேசுறேன்" என்று அவள் கை பிடித்து நிறுத்தினாள் அபி.

"என்னங்க பேசதானே சொன்னேன்...........பாட்டாவே பாடிட்டீங்க" என்று அவன் கண்சிமிட்ட,

".........." அவன் என்ன சொல்கிறான் என புரியாமல் விழித்தாள் அபி.

"என்னங்க அப்படி முழிக்கிறீங்க..........நீங்க ரெண்டு வார்த்தை பேசினதே பாட்டு பாடினா மாதிரி அழகா இருக்குதுங்க, அதைதான் சொன்னேன்......தப்பா நினைச்சுக்காதீங்க, இட்ஸ் ஜஸ்ட் மை காம்பிளிமென்ட்ஸ் டு யுவர் ஸ்வீட் வாய்ஸ்"

அவனது குறுகுறு பார்வையும், நகைச்சுவை பேச்சும் அபிக்கு ஜொள்ளாக தெரியவில்லை.......மாறாக ஏதோ ஒருவித மின் அதிர்வு ஏற்படுத்தியது!!

"சரி........நான் கேட்ட கேள்விக்கு இன்னும் நீங்க பதில் சொல்லல அபிநயா"

"ஆங்.......எனக்கு மேல படிக்கனும், ஸோ......கல்யாணம் பண்ணிக்க இஷ்டமில்ல"

"இதை நீங்க உங்க வீட்ல உள்ளவங்க கிட்ட சொல்லிருக்கலாமே அபிநயா"

"சொன்னேங்க.........ஆனா கேட்க மாட்டென்றாங்க,அதான்........"

"நான் என்ன பண்ணனும்னு எதிர்பார்க்கிறீங்க.........?"

"நீங்.......நீங்க இந்த கல்யாணத்துல இஷ்டமில்லைன்னு சொல்லிட்டா மட்டும் போதும், கல்யாணம் நின்னிடும்....."

"நான் சொல்றது இருக்கட்டும்.........இப்படி உங்களை பொண்ணு பார்க்க வர்ற ஒவ்வொரு மாப்பிள்ளை கிட்டயா போய் சொல்லி, கல்யாணத்தை நிறுத்திட்டு இருக்க போறீங்களா?? "

"இல்லீங்க........எனக்கு மாப்பிள்ளை பார்க்க எங்க வீட்ல ஆரம்பிக்கவே இல்ல.......உங்க வீட்ல ரொம்ப விரும்பி கேட்டதால தான்.......இந்த ஏற்பாடே நடக்குது...இது மட்டும் நிறுத்திட்டா.......நான் என் ஸ்டடீஸ் கண்டினியூ பண்ணிடுவேன்........ஸோ........"

"ஜஸ்ட் ஒன் மோர் கொஷ்டியன் அபி.........கல்யாணம் பண்ணிகிட்டா மேல படிக்க முடியாதுன்னு ஏன் நினைக்கிறீங்க??"

"................"இந்த கேள்விக்க்கு தன்னிடம் பதிலிள்ளாமல்.......விழித்தாள் அபி.

"என்ன சார் இது.........அதான் கல்யாணத்துல இஷ்டமில்லைன்னு பொண்ணே வந்து சொல்றாயில்ல.........பொண்ணு பிடிக்கலன்னு சொல்லிட்டு போக வேண்டியதுதானே...அதை விட்டுட்டு குண்டக்க மண்டக்கான்னு கேள்வி மேல கேள்வி கேட்கிறீங்க" என்று சலித்துக்கொண்டாள் மாலு.

"என்ன........சொல்லி கல்யாணத்தை நிறுத்த சொன்னீங்க.........." என்று திருப்பி கேள்வி கேட்டான் மாலினியிடம்.

ஒரு நிமிடம் யோசித்த மாலினி......

"பொண்ணு பிடிக்கலைன்னு சொல்லி..........நிறுத்த......சொன்...."

"என்னால அப்படி பொய் எல்லாம் சொல்ல முடியாது..........."

டக்கென்று பதிலளித்த சூர்யாவை நிமிர்ந்து பார்த்த அபி, அவனது பார்வையின் அர்த்தம் புரியாவிட்டாலும், மீண்டும் ஒரு மின் அதிர்வை தனக்குள் உணர்ந்தாள்!!

"என்ன அப்படி பார்க்கிறீங்க.....உங்களை போய் பிடிக்கலன்னு சொன்னா எங்க அம்மா ஏன்டா நீ என்ன குருடா?? அப்படின்னு திட்டமாட்டாங்களா.....????" மீண்டும் அவனிடமிருந்து அதே வசீகரமான சிரிப்பு.

அவனது கிண்டல் பேச்சு மாலினிக்கு மேலும் எரிச்சலூட்டியது, டக்கென்று தன்னிருக்கையிலிருந்து எழுந்துக்கொண்டவள்,

"வா அபி.......இனியும் இவர்கிட்ட பேசி ப்ரயோஜனம் இல்ல.....வேற ஏதாச்சும் ஐடியா பண்ணலாம்"

"ஹலோ........ஹலோ........ஒரு நிமிஷம்......வேற ஐடியாவெல்லாம் பண்ணி உங்க கொஞ்சூண்டு மூளையும் கசக்க வேணாம்..........நீங்க தேடி வந்த மாப்பிள்ளை பையன் நானில்ல....."

அவன் என்ன சொல்கிறான் என்று புரியாமல், திகைப்புடன் விழித்த இருவரிடமும்.......

தான் யார் என்ற விபரமும், தன் நண்பன் கிஷோரின் காதல் விவகாரத்தினால் இந்த திருமணத்தில் அவனுக்கும் விருப்பமில்லததையும் விரிவாக கூறி முடித்தான் சூர்யா.

அபிநயாவிடம் சூர்யா......

"மிஸ் அபிநயா.......உங்க கிட்ட ரெண்டு நிமிஷம் பெர்ஸனலா பேசலாமா??"

"ஓ.......ஓகே...."

"அபி.....நீங்க ரெண்டு பேரும் தேடி வந்தது கிஷோரைத்தான்னு தெரிஞ்சதும், உண்மை சொல்லிட தான் நினைச்சேன், ஏனோ இந்த கல்யாணத்தில உங்க விருப்பமின்மைக்கு காரணம் தெரிஞ்சுக்கனும்னு தோனினதால..........ஒரு விளையாட்டுத்தனத்தோடு உங்ககிட்ட உண்மைய சொல்லாம பேச்சுக்கொடுத்தேன்"

"............."

"ஆனா ஜஸ்ட் லைக் தட் உங்க கிட்ட பேச ஆரம்பிச்சதும்........என்னன்னு தெரிலீங்க அபிநயா....ஏதோ ஒருவித உள்ளுணர்வு.....'ஷீ இஸ் மைன் 'அப்படின்னு ஒரு டப் டப் என் ஹார்ட்குள்ள, இந்த உணர்வு ஏன் வந்துச்சு, எப்படி வந்துச்சுன்னு நீங்க கேட்டா.......கண்டிப்பா எனக்கு சொல்ல தெரில"

"......."

"கண்டதும் காதல்.......பொண்ணு பார்க்க போய் பத்து நிமிஷம் பஜ்ஜி சொஜ்ஜி சாப்பிட்டுட்டே பிடிச்சுப்போறது இதெல்லாம் சுத்த பேத்தல்ன்னு அலப்பறை விட்டவந்தான் நான்........பட்.......நெள ஐ ஃபீல் இட் வித்தின் மீ..........."

"................"

"நீங்க இப்போ உடனே உங்க பதிலை சொல்லனும்னு அவசியமில்ல.......நல்லா யோசிச்சு உங்க பதிலை இன்னும் பத்து நாள்ல நான் யூ.எஸ் போறதுக்கு முன்னாடி சொன்னா போதும், நீங்க விருப்பபட்ட மாதிரியே உங்க ஸ்டடீஸ் கண்டினியூ பண்ணுங்க, உங்க கோர்ஸ் முடிஞ்சதும்............நான்.....நாம........."

அதற்கு மேல் பேச வார்த்தைகளின்றி.......ஒரு தவிப்புடன் அபியை பார்த்தான் சூர்யா.


அபியின் மனதில்........
அவனது குறும்பு பார்வை ஒரு அதிர்வை ஏற்படுத்தியதுன்னா......
இந்த தவிப்பு பார்வை வேறுவிதமான தாக்கத்தை ஏற்படுத்துதே!!
ஒரு ஆணுக்குள் இத்தனை காந்தமா!!!


அந்நேரத்தில் வெளியில் சென்றிருந்த கிஷோர் அங்கு வந்தான். சுருக்கமாக நடந்ததனைத்தையும் சூர்யாவும் மாலினியும் அவனிடம் சொல்லி முடித்தனர்.

எதுவும் பேசாமல் அமைதியாக ஆழ்ந்த யோசனையில் இருந்த அபியிடம் கிஷோர்,

" நீங்க இங்கே என்னை சந்திக்க வந்தது பற்றி உங்க வீட்ல சொல்லாமலே, இந்த கல்யாண ஏற்பாடை நான் நிறுத்திடுறேன் அபிநயா......டோண்ட் வொர்ரி, ஆனா.......சூர்யாவோட ப்ரோபஸல் பத்தி யோசிச்சு பதில் சொல்லுங்க அபி, நானே உங்க வீட்லயும் இவனோட வீட்லயும் பேசுறேன்"

பதில் சொல்ல தெரியாமல் அபி விழித்தாள்!
அவளது தடுமாற்றத்தை புரிந்துக்கொண்ட சூர்யா..........மேஜையிலிருந்த ஒரு துண்டு காகிதத்தில்,

'என் கை தினம் கட்டித்தழுவும் மெளபைலின் எண் xxxxxxxxxx '
என்று எழுதி அபியிடம் கொடுத்தான்.

வீட்டுக்கு ஆட்டோவில் செல்லும் வழியில் அபி எதுவும் பேசவில்லை மாலினியிடம், அக்கா ஆழ்ந்த சிந்தனையில் இருக்கிறாள் என்பதை உணர்ந்து மாலுவும் எதுவும் நோண்டி நோண்டி கேட்காமல் இருந்தாள்.

வீட்டிற்கு வந்த பின் அபிநயா......அமைதியாக யோசித்துப்பார்த்தாள்.

அப்பா தனக்கு பார்த்திருக்கும் மாப்பிள்ளை சூர்யாதான் என்று நினைத்து பேசிய போது மனதில் ஏதோ ஒரு மூலையில், 'அப்பா ஸெலக்ஷ்ன் சூப்பர்!!' என்று நினைத்ததை மறுப்பதிற்கில்லை!


அவனது துறு துறு கண்கள்,
குறு குறுக்கும் பார்வை,
வசீகரமான சிரிப்பு மாறா முகம்,
நகைச்சுவையுணர்வு........
எல்லாவற்றிற்கும் மேலாக அவளிடம் மிக மரியாதையுடன் அவளது கண்கள் பார்த்து தெளிவாக பேசியது.......
என அனைத்துமே அவளை கவராமல் இல்லை!!


இதெல்லாம் தன்னை மறுநாள் பெண் பார்க்க வரும் மாப்பிள்ளை என்ற கோணத்தில் தான் அவனைப் பார்த்ததால் ஏற்பட்ட உணர்வு என வைத்துக்கொண்டாலும்.........

தாங்கள் தேடி வந்த மாப்பிள்ளை பையன் அவனில்லை என்று சூர்யா சொன்னதும்..........மனசுக்குள்ள பறந்துக்கொண்டிருந்த ஒவ்வொரு இதய வடிவ பலூனும் பட் பட்டென்று உடைந்தது போன்று ஏமாற்றம் தன்னுள் ஏற்பட்ட உணர்விற்கு என்ன பெயர்??

தனிப்பட்ட முறையில் தான் சூர்வின் மேல் ஈர்க்க பட்டிருப்பதை உணர முடிந்தது அபிநயாவிற்கு!!

தப்பிக்க முயன்றேன்..
உன்
வசீகர புன்னகையால்
வீழ்த்தி விட்டாய்!!

எழ முயன்றேன்...
காந்த பார்வையால்
கட்டி பிடித்து
சிறைவைத்துக் கொண்டாய்!!

இனி....
தப்பிக்க முயலபோவதில்லை
தயவுசெய்து..
விடுதலை மட்டும்
செய்துவிடாதே ப்ளீஸ்....!!!

ஆனால் இந்த ஒரு சந்திப்பை வைத்து முடிவெடுக்க கூடியதா வாழ்க்கை.........??

யோசித்து யோசித்து களைத்துப்போன அபி, சூர்யாவின் தொலைப்பேசிக்கு அழைத்தாள், மனதில் உள்ளதை வெளிப்படையாக தெரிவித்தாள்.
அவள் படித்து முடிக்கும் வரை நட்புடன் பேசி,ஒருவரை ஒருவர் நன்கு புரிந்துக்கொள்ளலாம் என முடிவு செய்தனர் இருவரும்.



சூர்யா அமெரிக்கா சென்ற பின்பும், கிஷோரின் உதவியோடு, பெற்றோரின் சம்மதத்துடன்........... ஃபோன் , இமெயிலில் தொடர்ந்து, நல்லதொரு புரிதலுடன் வளர்ந்த அவர்களது அன்பு, அபியின் பட்டப்படிப்பிற்கு பின் ,இரு வீட்டாரின் சம்மத்ததுடன் திருமணத்தில் முடிந்தது.

முற்றும்.

சந்தித்தவேளை என்ற தொடரில்.......ஒவ்வொரு பகுதியிலும், ஒரு சுவாரஸியமான சந்திப்பு வெளியிடப்படும்!!!

மீண்டும் அடுத்த சந்தித்த வேளையில் சந்திப்போம்!!!

118 comments:

said...

Welcome Back திவ்யா....!! :)))

said...

அட சிறுகதையா..? ரொம்ப நாளைக்கு அப்புறம் சிறுகதை திவ்யாகிட்டே
இருந்து...!! ரொம்ப நல்லா இருக்கு...!!

said...

படிக்கனும்னு இந்த பொண்ணுக்கு இவ்ளோ ஆசையா..??? என்ன திவ்யா இது..? :))))

said...

//'என் கை தினம் கட்டித்தழுவும் மெளபைலின் எண் xxxxxxxxxx ' //


அட இப்படி ஒரு மொபைல் நம்ப‌ரை நான் என் வாழ்கைல பார்த்ததே இல்லையே திவ்யா..!!! :))))))))))))))))

said...

//
இனி....
தப்பிக்க முயலபோவதில்லை
தயவுசெய்து..
விடுதலை மட்டும்
செய்துவிடாதே ப்ளீஸ்....!!! //

இது ரொம்ப நல்லா இருக்கு திவ்யா..!! :))))

said...

அழகான கதை... மிக அழகான வர்ணனைகளில்...
மிகவும் அருமை... வாழ்த்துக்கள்...!!

said...

Welcome Back Divya!!
Nice story...
anbudan aruna

said...

:))) post evening padichutu..naalaiku comment poduren kannu :))

lovely pics da.. surya kalakal ;)

said...

//
இனி....
தப்பிக்க முயலபோவதில்லை
தயவுசெய்து..
விடுதலை மட்டும்
செய்துவிடாதே ப்ளீஸ்....!!! //

இது ரொம்ப நல்லா இருக்கு திவ்யா..!! :))))

ரிப்பீட்டேய்!

said...

நல்ல சிறுகதை!

said...

//அட இப்படி ஒரு மொபைல் நம்ப‌ரை நான் என் வாழ்கைல பார்த்ததே இல்லையே திவ்யா..!!! :))))))))))))))))//

நவீன் பிரகாஷ் அவர்களுக்கு மட்டும் அந்த தொலைபேசி எண்ணை தனி மடலில் அனுப்பிவிடவும்!

9840466092

said...

அட தமனா...!!!

said...

சந்தித்தவேளையில்... சிந்திக்கவேயில்லை...
தந்துவிட்டேன் என்னை...

இருங்க பதிவை படிச்சுட்டு வந்திடறேன்.. :)

said...

சூப்பர் ஃபாஸ்ட் ரயிலில் ஏறி சில்லென்று ஒரு பயணத்தைச் சந்தோஷமாச் செய்த உணர்வு.
வாழ்த்துகள்.

said...

மீண்டும் ஒரு அழகான சிறுகதையுடன் சந்திப்பதில் மகிழ்ச்சி... !

தொடர்கதை என்றுதான் நினைத்தேன், ஆனால் வித்தியாசமாக கதைகளின் தொடராக இருக்கிறது.

வாழ்த்துகள் திவ்யா...:)

said...

நல்ல சந்திப்பு...

said...

அடுத்த சந்திப்பு எப்ப நிகழும்...

said...

நல்லாயிருக்கு திவ்யா.... :)

said...

Welcome back!
//தப்பிக்க முயன்றேன்..
உன்
வசீகர புன்னகையால்
வீழ்த்தி விட்டாய்!!

எழ முயன்றேன்...
காந்த பார்வையால்
கட்டி பிடித்து
சிறைவைத்துக் கொண்டாய்!//

கவிதை அழகு! கதையும் அழகு.
வழக்கம் போல கதையும் கவிதையும்
அதற்கேற்ற "கவிதை படங்களும்"

சூப்பர்!

said...

கதை நல்லா இருந்ததுங்க.
நல்ல பொருத்தமான படங்களை போட்டு இருக்கிறீர்கள்.

said...

'என் கை தினம் கட்டித்தழுவும் மெளபைலின் எண் xxxxxxxxxx '
என்று எழுதி அபியிடம் கொடுத்தான்.//

அட புதுமாதிரி பேன்ஸி நம்பரா? அப்ப எனக்கு yyyyyyyyyyyyன்னு ஒரு நம்பர் வேண்டும்:)

said...

கதை அருமையா இருக்கு திவ்யா...
கவிதை அசத்தலோ அசத்தல்... :)))


//அவனது குறும்பு பார்வை ஒரு அதிர்வை ஏற்படுத்தியதுன்னா......
இந்த தவிப்பு பார்வை வேறுவிதமான தாக்கத்தை ஏற்படுத்துதே!!
ஒரு ஆணுக்குள் இத்தனை காந்தமா!!!//

ரொம்ப நல்லா இருக்கு... :)))

said...

ithu sirukathaia...samalikaatheenga...rendu parta poda sombal patukitu oray parta kathaiya mudichiteega :D mega serial magadevinu summava title vachirukom

said...

nice to c the mathaapu back in action :))

said...

tamannaa!!!! hamara tamanna poori ho gayi :D

said...

Welcome back.

நல்ல சிறுகதை

said...

keep rocking...
we are with u...
will comment after reading th story

said...

//தன் அம்மாவிடமும் சித்தியிடமும் அழுது கெஞ்சியும், எதுவும் பலிக்கவில்லை.அவளது அப்பா முடிவு என்று ஒன்று எடுத்துவிட்டால்.....யார் சொன்னாலும் மாற்றிக்கொள்ள மாட்டார் என்பது குடும்பத்தில் அனைவரும் அறிந்திருந்தபடியால், அபியின் கெஞ்சுதல் அர்த்தமற்று போனது.//

என்ன ஒரு கொடுமை :(

வித்யாசமான தொடரா இருக்கே திவ்யா...தொடருங்க...அப்படியே சூர்யா மொபைல் நம்பர் குடுத்திருந்தீங்கன்னா நல்லா இருந்துருக்கும்...

said...

கவித்துமான கதை.
காதல் கதை எழுதுறவங்க பலர் காதலர்கள கஷ்டப்படுத்திடுவாங்க. உங்க எழுத்துப் போலவே கதையும் மென்மையா இருக்கு திவ்யா.
வாழ்த்துக்கள்.
தொடர்ந்து கலக்குங்க அம்மணீ.

said...

அட்டகாசம் திவ்யா. கொஞ்சம் பெரிய சிறுகதைன்னு சொல்லலாம்...

கதை அழகு
கவிதை அழகு..
தமன்னா அழகோ அழகு..

said...

சந்தித்த வேளைகள் தொடரட்டும்...

said...

feel good story with cool pix:))

rock on divs:-)

said...

வழக்கம் போல் படங்கள் அருமை, கதைக்கேற்ற மாதிரி அவர்கள் (படங்கள்) முகம்பாவனையும் அமைந்து உள்ளது.

செம கலக்கல் :)

said...

கதை - எ.போ.அ. :)

said...

//தப்பிக்க முயன்றேன்..
உன்
வசீகர புன்னகையால்
வீழ்த்தி விட்டாய்!!

எழ முயன்றேன்...
காந்த பார்வையால்
கட்டி பிடித்து
சிறைவைத்துக் கொண்டாய்!!

இனி....
தப்பிக்க முயலபோவதில்லை
தயவுசெய்து..
விடுதலை மட்டும்
செய்துவிடாதே ப்ளீஸ்....!!!//

காதல் என்பது சிறைச்சாலை னு சொல்லுறீங்க...

அவங்க அவங்க தலையெழுத்த யாரால் மாத்த முடியும் சொல்லுங்க...

said...

//சந்தித்தவேளை என்ற தொடரில்.......ஒவ்வொரு பகுதியிலும், ஒரு சுவாரஸியமான சந்திப்பு வெளியிடப்படும்!!!//

சுவாரஸியமான படங்களுடன் இருந்தால் சந்தோஷப்படுவோம் (வேன்)

said...

//மீண்டும் அடுத்த சந்தித்த வேளையில் சந்திப்போம்!!!//

இடைவேளையில் ஐஸ்கீர்ம், பாப்கான், கட்லட், சாமோசா எல்லாம் கிடையாதா? ;)

இடைவேளை எவ்வளவு நேரம் (நாள்)???

said...

வணக்கம் தோழி...இன்று தான் தங்களின் வலைப்பூவில் சிறிது நேரம் வாசம் செய்தேன்....வண்ண வண்ண மத்தாப்புக்களின் ஒளியில் அழகாய் ஒரு வலைப்பூ ..

said...

வருக திவ்யா ...

said...

\இனி....
தப்பிக்க முயலபோவதில்லை
தயவுசெய்து..
விடுதலை மட்டும்
செய்துவிடாதே ப்ளீஸ்...\\

மிக(ச்) சிறப்பு திவ்யா!

said...

மிக அழகா உணர முடிந்தது கதை முழுதும்

சிறியதாக இருந்தாலும் அதனூடே பயணித்தேன் என்று சொல்வதை விட

என்னை அதனுள் இழுத்து சென்றது என்பதே நிஜம்.

வாழ்த்துகள் திவ்யா, மிகவும் இரசித்தேன்.

said...

மீண்டு(ம்) வந்ததுக்கு வாழ்த்துகள்!

தொடர்ந்து எழுதவும்...

said...

வாவ் வித்தியாசமான முயற்சி :) பாராட்டுக்கள் மாஸ்டர். சுவாரஸ்யமான சந்திப்புகளைப் படிக்க ஆர்வமாக இருக்கிறோம் !

said...

Super. SO Romantic..

said...

wowww divyaa...

வழக்கம்போல கலக்கல்ஸ்.....

தினமும் வந்து பார்த்துட்டு ஏமாந்து போயிட்டேயிருந்த எனக்கு இன்னைக்கு சந்தோஷம்....

happy to c u back with joshhhh... :)

அழகான க(வி)தை....

ரொம்ப ரசனையானவங்க நீங்க தோழி...

உங்க எழுத்துக்களை படிக்கும் போது மனசுக்கு ஒரு இதம்... பூக்களின் மனம்வீசி, மேனி சிலிர்க்கும் குளிர் தென்றலோடு, சிறு ஓடையின் சங்கீதம் கலந்தால் என்ன ஒரு மனநிலை இருக்குமோ அப்படி ஒரு நிலைதான் மனதில் தோன்றுகிறது...

தொடர்ந்து பல படைப்புகளை உருவாக்க வாழ்த்துகள் தோழி...

said...

வலையுலகிற்கு மீண்டும் வந்ததுக்கு மகிழ்ச்சி
மற்றும் வாழ்த்துகள் திவ்யா...

said...

//இனி....
தப்பிக்க முயலபோவதில்லை
தயவுசெய்து..
விடுதலை மட்டும்
செய்துவிடாதே ப்ளீஸ்....!!!//

கதையும் கவிதையுமாக திவ்யாவின் டச்...வாழ்த்துக்கள் திவ்யா...

said...

அட கலக்குறீங்க!:) வர்ணனைகள் சூப்பர்ர்ர்ர்ர்ர்!!

அருமை!
எனக்கு நடிகர் சூர்யாவ பிடிக்காது, திவ்ஸ், இருப்பினும் ரசித்து படித்தேன் கதையை.

said...

//'அப்பா ஸெலக்ஷ்ன் சூப்பர்!!' என்று நினைத்ததை மறுப்பதிற்கில்லை! //

அட்ராசக்கை, அட்ராசக்கை....:)

said...

//மனசுக்குள்ள பறந்துக்கொண்டிருந்த ஒவ்வொரு இதய வடிவ பலூனும் பட் பட்டென்று உடைந்தது போன்று ஏமாற்றம் தன்னுள் ஏற்பட்ட உணர்விற்கு என்ன பெயர்?//

சூப்ப்ப்ப்ப்பர்ர்ர்ர்ர்ர்ர்!!:) பின்றீங்க

said...

NICE ONE!
:)

said...

வெல்கம் பேக் திவ்யா:))

கதை அருமை:))

தொடரட்டும் உங்கள் எழுத்துப் பணி:))

வாழ்துக்கள்!

said...

hoi..read ur story for the first time :) nalla irunthuchungo ;)

kavidhai superb!! I loved it! :)

I liked Surya :P thuru thuru character I guess..

:))

said...

Welcome Back Divya!!

As usual picture selection is very good.

Will post comments later.

Anonymous said...

Welcome Back திவ்யா....!! :)))

said...

Welcome back.
மின்னல் வேகத்தில் ஒரு சிறுகதை.

அதிலும் சூர்யா தமன்னா படங்கள் இன்னும் அமோஹம். உங்களுக்கு மட்டும் இந்த மாதிரிப் படங்கள் எங்கிருந்து தான் கிடைக்குதோ?

said...

உங்களுக்கு ஊக்கம் நான் தந்தேனா??? கண்டிப்பாக இல்ல தோழி ஊக்கமாகவே இருக்கும் உங்களை உற்சாகப் படுத்தினேன்....

said...

hello madam welcome back...

sirukathai nalarkuda...

next post seikaram podtuda

said...

Welcome back.. :))

climax takkunu mudinjirichu.... thodar kathai paanila irunthu sirukathaikku vanthathaalaiyo antha thodarkathai touch irukku... maththapadi good...

said...

\Blogger நவீன் ப்ரகாஷ் said...

Welcome Back திவ்யா....!! :)))\\

Thanks Naveen:)

said...

\\Blogger நவீன் ப்ரகாஷ் said...

அட சிறுகதையா..? ரொம்ப நாளைக்கு அப்புறம் சிறுகதை திவ்யாகிட்டே
இருந்து...!! ரொம்ப நல்லா இருக்கு...!!\\


சிறுகதை நல்லாயிருந்துச்சா.......நன்றி கவிஞரே!!

said...

\\Blogger நவீன் ப்ரகாஷ் said...

படிக்கனும்னு இந்த பொண்ணுக்கு இவ்ளோ ஆசையா..??? என்ன திவ்யா இது..? :))))\\


என்னங்க இது.....படிக்கனும்னு ஆசை படுறது உங்களுக்கு ஏன் அவ்ளோ ஆச்சரியமா இருக்கு???

பொண்ணு மேற்படிப்பு படிக்கனும்னு ஆசை படுறது....நல்ல ஆசைதானே!!

said...

\\Blogger நவீன் ப்ரகாஷ் said...

//'என் கை தினம் கட்டித்தழுவும் மெளபைலின் எண் xxxxxxxxxx ' //


அட இப்படி ஒரு மொபைல் நம்ப‌ரை நான் என் வாழ்கைல பார்த்ததே இல்லையே திவ்யா..!!! :))))))))))))))))\\


LOL:))

said...

\\Blogger நவீன் ப்ரகாஷ் said...

//
இனி....
தப்பிக்க முயலபோவதில்லை
தயவுசெய்து..
விடுதலை மட்டும்
செய்துவிடாதே ப்ளீஸ்....!!! //

இது ரொம்ப நல்லா இருக்கு திவ்யா..!! :))))\\


நன்றி நவீன்!

said...

\\Blogger அன்புடன் அருணா said...

Welcome Back Divya!!
Nice story...
anbudan aruna\\


வருகைக்கும், வரேவேற்பிற்கும் மிக்க நன்றி அருணா!!!

said...

\\Blogger ஷாலினி said...

:))) post evening padichutu..naalaiku comment poduren kannu :))

lovely pics da.. surya kalakal ;)\\


Tk ur own time to read:))

Thanks for ur visit!!!

said...

\\Blogger நாமக்கல் சிபி said...

//
இனி....
தப்பிக்க முயலபோவதில்லை
தயவுசெய்து..
விடுதலை மட்டும்
செய்துவிடாதே ப்ளீஸ்....!!! //

இது ரொம்ப நல்லா இருக்கு திவ்யா..!! :))))

ரிப்பீட்டேய்!\\

:))

said...

\\Blogger நாமக்கல் சிபி said...

நல்ல சிறுகதை!\


மிக்க நன்றி சிபி!!

said...

\\Blogger நாமக்கல் சிபி said...

//அட இப்படி ஒரு மொபைல் நம்ப‌ரை நான் என் வாழ்கைல பார்த்ததே இல்லையே திவ்யா..!!! :))))))))))))))))//

நவீன் பிரகாஷ் அவர்களுக்கு மட்டும் அந்த தொலைபேசி எண்ணை தனி மடலில் அனுப்பிவிடவும்!\\


;)))

said...

\\Blogger தமிழன்-கறுப்பி... said...

அட தமனா...!!!\\


:)))

வாங்க தமிழன்!!

said...

\\Blogger தமிழன்-கறுப்பி... said...

சந்தித்தவேளையில்... சிந்திக்கவேயில்லை...
தந்துவிட்டேன் என்னை...

இருங்க பதிவை படிச்சுட்டு வந்திடறேன்.. :)\\


நன்றி தமிழன்!!

said...

\\Blogger வல்லிசிம்ஹன் said...

சூப்பர் ஃபாஸ்ட் ரயிலில் ஏறி சில்லென்று ஒரு பயணத்தைச் சந்தோஷமாச் செய்த உணர்வு.
வாழ்த்துகள்.\

வருகைக்கும் உங்கள் அழகான வாழ்த்துக்களுக்கும் மிக்க நன்றிங்க வல்லிசிம்ஹன்!!

said...

\\Blogger நிமல்-NiMaL said...

மீண்டும் ஒரு அழகான சிறுகதையுடன் சந்திப்பதில் மகிழ்ச்சி... !

தொடர்கதை என்றுதான் நினைத்தேன், ஆனால் வித்தியாசமாக கதைகளின் தொடராக இருக்கிறது.

வாழ்த்துகள் திவ்யா...:)\\


உங்கள் தொடர் வருகையும், பின்னூட்ட ஊக்கமும் உற்சாகமளிக்கிறது நிமல், நன்றி!!!

said...

\\Blogger தமிழன்-கறுப்பி... said...

நல்ல சந்திப்பு...\\


அப்படியா?

நன்றி!

said...

\\Blogger தமிழன்-கறுப்பி... said...

அடுத்த சந்திப்பு எப்ப நிகழும்...\\


விரைவில்.....!!

உங்கள் பின்னூட்ட ஊக்கத்திற்கு மிக்க நன்றி தமிழன்!!

said...

\\Blogger இராம்/Raam said...

நல்லாயிருக்கு திவ்யா.... :)\\


நன்றி ராம்!!!

said...

\\Blogger Surya said...

Welcome back!
//தப்பிக்க முயன்றேன்..
உன்
வசீகர புன்னகையால்
வீழ்த்தி விட்டாய்!!

எழ முயன்றேன்...
காந்த பார்வையால்
கட்டி பிடித்து
சிறைவைத்துக் கொண்டாய்!//

கவிதை அழகு! கதையும் அழகு.
வழக்கம் போல கதையும் கவிதையும்
அதற்கேற்ற "கவிதை படங்களும்"

சூப்பர்!\\


வாங்க சூர்யா!
உங்கள் வருகைக்கும் பாராட்டுக்களுக்கும் என் மனமார்ந்த நன்றி!

said...

\\Blogger ஊர் சுற்றி said...

கதை நல்லா இருந்ததுங்க.
நல்ல பொருத்தமான படங்களை போட்டு இருக்கிறீர்கள்.\\

மிக்க நன்றி ஊர் சுற்றி!!

மீண்டும் வருக!!!

said...

\\Blogger குசும்பன் said...

'என் கை தினம் கட்டித்தழுவும் மெளபைலின் எண் xxxxxxxxxx '
என்று எழுதி அபியிடம் கொடுத்தான்.//

அட புதுமாதிரி பேன்ஸி நம்பரா? அப்ப எனக்கு yyyyyyyyyyyyன்னு ஒரு நம்பர் வேண்டும்:)\\

LOL:))

வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி குசும்பன்!!!

said...

\\Blogger நாணல் said...

கதை அருமையா இருக்கு திவ்யா...
கவிதை அசத்தலோ அசத்தல்... :)))


//அவனது குறும்பு பார்வை ஒரு அதிர்வை ஏற்படுத்தியதுன்னா......
இந்த தவிப்பு பார்வை வேறுவிதமான தாக்கத்தை ஏற்படுத்துதே!!
ஒரு ஆணுக்குள் இத்தனை காந்தமா!!!//

ரொம்ப நல்லா இருக்கு... :)))\\


உங்கள் அழகான ரசிப்பை பின்னூட்டத்தில் பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி நாணல்!!!

said...

\\Blogger gils said...

ithu sirukathaia...samalikaatheenga...rendu parta poda sombal patukitu oray parta kathaiya mudichiteega \\

எக்ஸாட்லி!!!


\\:D mega serial magadevinu summava title vachirukom\\


:))))

said...

\\Blogger gils said...

nice to c the mathaapu back in action :))\\

Thanks Gils:))

said...

\\Blogger gils said...

tamannaa!!!! hamara tamanna poori ho gayi :D\\


:))

said...

\\Blogger நசரேயன் said...

Welcome back.

நல்ல சிறுகதை\\



Thanks a lot Nazareyan!!

said...

\\Blogger MayVee said...

keep rocking...
we are with u...
will comment after reading th story\\


Thanks for your visit MayVee, take ur own time to read the post:)))

said...

\\Blogger Divyapriya said...

//தன் அம்மாவிடமும் சித்தியிடமும் அழுது கெஞ்சியும், எதுவும் பலிக்கவில்லை.அவளது அப்பா முடிவு என்று ஒன்று எடுத்துவிட்டால்.....யார் சொன்னாலும் மாற்றிக்கொள்ள மாட்டார் என்பது குடும்பத்தில் அனைவரும் அறிந்திருந்தபடியால், அபியின் கெஞ்சுதல் அர்த்தமற்று போனது.//

என்ன ஒரு கொடுமை :(

வித்யாசமான தொடரா இருக்கே திவ்யா...தொடருங்க...அப்படியே சூர்யா மொபைல் நம்பர் குடுத்திருந்தீங்கன்னா நல்லா இருந்துருக்கும்...\\


வாங்க திவ்யப்ரியா!!

வருகைக்கு நன்றி!!

சூர்யா ஃபோன் நம்பர்......அபிநயாகிட்ட கேட்டு வங்கித்தரேன்:)))

said...

\\Blogger ஜோசப் பால்ராஜ் said...

கவித்துமான கதை.
காதல் கதை எழுதுறவங்க பலர் காதலர்கள கஷ்டப்படுத்திடுவாங்க. உங்க எழுத்துப் போலவே கதையும் மென்மையா இருக்கு திவ்யா.
வாழ்த்துக்கள்.
தொடர்ந்து கலக்குங்க அம்மணீ.\\


உங்கள் தொடர் வருகைக்கும், உற்சாகமளிப்பிற்கும் என் மனமார்ந்த நன்றி ஜோசஃப்!!

said...

\\Blogger Raghav said...

அட்டகாசம் திவ்யா. கொஞ்சம் பெரிய சிறுகதைன்னு சொல்லலாம்...

கதை அழகு
கவிதை அழகு..
தமன்னா அழகோ அழகு..\\


ஆமாம் ராகவ்.....சிறுகதை கொஞ்சம் பெருங்கதையா போச்சு;(((

பாராட்டிற்கு நன்றி!!

said...

\\Blogger Raghav said...

சந்தித்த வேளைகள் தொடரட்டும்...\\


நன்றி ராகவ்!!!

said...

\\Blogger Anitha said...

feel good story with cool pix:))

rock on divs:-)\\


Thanks Anitha:))

said...

\\Blogger நாகை சிவா said...

வழக்கம் போல் படங்கள் அருமை, கதைக்கேற்ற மாதிரி அவர்கள் (படங்கள்) முகம்பாவனையும் அமைந்து உள்ளது.

செம கலக்கல் :)\\


வாங்க சிவா....ரசிப்பிற்கு நன்றி!!

said...

\Blogger நாகை சிவா said...

கதை - எ.போ.அ. :)\


சிவா - எ.போ.வ.ந :)

said...

\\Blogger நாகை சிவா said...

//தப்பிக்க முயன்றேன்..
உன்
வசீகர புன்னகையால்
வீழ்த்தி விட்டாய்!!

எழ முயன்றேன்...
காந்த பார்வையால்
கட்டி பிடித்து
சிறைவைத்துக் கொண்டாய்!!

இனி....
தப்பிக்க முயலபோவதில்லை
தயவுசெய்து..
விடுதலை மட்டும்
செய்துவிடாதே ப்ளீஸ்....!!!//

காதல் என்பது சிறைச்சாலை னு சொல்லுறீங்க...

அவங்க அவங்க தலையெழுத்த யாரால் மாத்த முடியும் சொல்லுங்க...\\


அதானே......யாரால மாத்த முடியும்:))

said...

\\Blogger நாகை சிவா said...

//சந்தித்தவேளை என்ற தொடரில்.......ஒவ்வொரு பகுதியிலும், ஒரு சுவாரஸியமான சந்திப்பு வெளியிடப்படும்!!!//

சுவாரஸியமான படங்களுடன் இருந்தால் சந்தோஷப்படுவோம் (வேன்)\\


சுவாரஸியமான படங்களுடன் பதிவிட முயற்சிக்கிறேன் சிவா!

said...

\\Blogger நாகை சிவா said...

//மீண்டும் அடுத்த சந்தித்த வேளையில் சந்திப்போம்!!!//

இடைவேளையில் ஐஸ்கீர்ம், பாப்கான், கட்லட், சாமோசா எல்லாம் கிடையாதா? ;)

இடைவேளை எவ்வளவு நேரம் (நாள்)???\\\

இடைவேளை......நீங்க ஐஸ்க்ரீம், பாப்கார்ன் எல்லாம் சாப்பிட்டு முடிக்கிற ஸ்பீடை பொறுத்திருக்கு:))

said...

\\Blogger GK said...

வணக்கம் தோழி...இன்று தான் தங்களின் வலைப்பூவில் சிறிது நேரம் வாசம் செய்தேன்....வண்ண வண்ண மத்தாப்புக்களின் ஒளியில் அழகாய் ஒரு வலைப்பூ ..\\


வாங்க GK,
உங்கள் முதல் வருகைக்கும் , அழகான பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றி!!

உங்கள் வருகை தொடரட்டும் நண்பரே!!

said...

\\Blogger நட்புடன் ஜமால் said...

வருக திவ்யா ...\\


நன்றி ஜமால்!!!

said...

\\Blogger நட்புடன் ஜமால் said...

\இனி....
தப்பிக்க முயலபோவதில்லை
தயவுசெய்து..
விடுதலை மட்டும்
செய்துவிடாதே ப்ளீஸ்...\\

மிக(ச்) சிறப்பு திவ்யா!\\



பாராட்டிற்கு நன்றி ஜமால்!!!

said...

\\Blogger நட்புடன் ஜமால் said...

மிக அழகா உணர முடிந்தது கதை முழுதும்

சிறியதாக இருந்தாலும் அதனூடே பயணித்தேன் என்று சொல்வதை விட

என்னை அதனுள் இழுத்து சென்றது என்பதே நிஜம்.

வாழ்த்துகள் திவ்யா, மிகவும் இரசித்தேன்.\\


உங்கள் விரிவான விமர்சனமும் பாராட்டும் உற்சாகமளிக்கிறது ஜமால், மிக்க நன்றி!!

said...

\\Blogger வெட்டிப்பயல் said...

மீண்டு(ம்) வந்ததுக்கு வாழ்த்துகள்!

தொடர்ந்து எழுதவும்...\\


மிக்க நன்றி அண்ணா!!

said...

\\Blogger Ramya Ramani said...

வாவ் வித்தியாசமான முயற்சி :) பாராட்டுக்கள் மாஸ்டர். சுவாரஸ்யமான சந்திப்புகளைப் படிக்க ஆர்வமாக இருக்கிறோம் !\\


வருகைக்கும், ஊக்கமளிக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி ரம்யா!!!

said...

\\Blogger கணேஷ் said...

Super. SO Romantic..\\


வருகைக்கும் பாராட்டிற்கும் நன்றி கணேஷ்!!!

said...

\\Blogger Natchathraa said...

wowww divyaa...

வழக்கம்போல கலக்கல்ஸ்.....

தினமும் வந்து பார்த்துட்டு ஏமாந்து போயிட்டேயிருந்த எனக்கு இன்னைக்கு சந்தோஷம்....

happy to c u back with joshhhh... :)

அழகான க(வி)தை....

ரொம்ப ரசனையானவங்க நீங்க தோழி...

உங்க எழுத்துக்களை படிக்கும் போது மனசுக்கு ஒரு இதம்... பூக்களின் மனம்வீசி, மேனி சிலிர்க்கும் குளிர் தென்றலோடு, சிறு ஓடையின் சங்கீதம் கலந்தால் என்ன ஒரு மனநிலை இருக்குமோ அப்படி ஒரு நிலைதான் மனதில் தோன்றுகிறது...

தொடர்ந்து பல படைப்புகளை உருவாக்க வாழ்த்துகள் தோழி...\\



வாங்க நட்சத்திரா!!!

உங்கள் தொடர் வருகையும்.....விரிவான பின்னூட்ட ஊக்கமும், விமர்சனமும் மனதை மகிழ்வித்தது!!

உங்கள் வருகை தொடரட்டும்:))

நன்றி நட்சத்திரா!!!

said...

\\Blogger புதியவன் said...

வலையுலகிற்கு மீண்டும் வந்ததுக்கு மகிழ்ச்சி
மற்றும் வாழ்த்துகள் திவ்யா...\\


உங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி புதியவன்!!!

said...

\\Blogger புதியவன் said...

//இனி....
தப்பிக்க முயலபோவதில்லை
தயவுசெய்து..
விடுதலை மட்டும்
செய்துவிடாதே ப்ளீஸ்....!!!//

கதையும் கவிதையுமாக திவ்யாவின் டச்...வாழ்த்துக்கள் திவ்யா...\\


மிக்க நன்றி புதியவன்!!!

said...

\\Blogger Thamizhmaangani said...

அட கலக்குறீங்க!:) வர்ணனைகள் சூப்பர்ர்ர்ர்ர்ர்!!

அருமை!
எனக்கு நடிகர் சூர்யாவ பிடிக்காது, திவ்ஸ், இருப்பினும் ரசித்து படித்தேன் கதையை.\\


சூர்யாவை பிடிக்கலீனாலும்.....கதையை ரசித்து படிச்சதுக்கு ஒரு ஸ்பெஷல் தாங்கஸ் காயத்ரி!!

said...

\\Blogger Thamizhmaangani said...

//'அப்பா ஸெலக்ஷ்ன் சூப்பர்!!' என்று நினைத்ததை மறுப்பதிற்கில்லை! //

அட்ராசக்கை, அட்ராசக்கை....:)\\


:)))

said...

\\Blogger Thamizhmaangani said...

//மனசுக்குள்ள பறந்துக்கொண்டிருந்த ஒவ்வொரு இதய வடிவ பலூனும் பட் பட்டென்று உடைந்தது போன்று ஏமாற்றம் தன்னுள் ஏற்பட்ட உணர்விற்கு என்ன பெயர்?//

சூப்ப்ப்ப்ப்பர்ர்ர்ர்ர்ர்ர்!!:) பின்றீங்க\\


நன்றி காய்த்ரி!!!

said...

\\Blogger Karthik said...

NICE ONE!
:)\\


Thanks Karthik!!!

said...

\\Blogger Poornima Saravana kumar said...

வெல்கம் பேக் திவ்யா:))

கதை அருமை:))

தொடரட்டும் உங்கள் எழுத்துப் பணி:))

வாழ்துக்கள்!\\


உங்கள் வாழ்த்துக்களுக்கும் பாராட்டிற்கும் மிக்க நன்றிங்க பூர்ணிமா!!

said...

\\Blogger ஷாலினி said...

hoi..read ur story for the first time :) nalla irunthuchungo ;)

kavidhai superb!! I loved it! :)

I liked Surya :P thuru thuru character I guess..

:))\\


Thanks for taking time to read the post & passing on your comments:)))

said...

\\Blogger முகுந்தன் said...

Welcome Back Divya!!

As usual picture selection is very good.

Will post comments later.\\


Thanks for your visit Mukundan!!!

said...

\\Blogger மகா said...

Welcome Back திவ்யா....!! :)))\\


Thanks a lot Maha:)))

said...

\\Blogger விஜய் said...

Welcome back.
மின்னல் வேகத்தில் ஒரு சிறுகதை.

அதிலும் சூர்யா தமன்னா படங்கள் இன்னும் அமோஹம். உங்களுக்கு மட்டும் இந்த மாதிரிப் படங்கள் எங்கிருந்து தான் கிடைக்குதோ?\\


வருகைக்கும் பாராட்டிற்கும் மிக்க நன்றி விஜய்!!

said...

\\Blogger எழில்பாரதி said...

hello madam welcome back...

sirukathai nalarkuda...

next post seikaram podtuda\\


Thanks Ezhil....will try to post my next post soon:)))

said...

\\Blogger ஜி said...

Welcome back.. :))\


நன்றி ஜி!!


\\ climax takkunu mudinjirichu.... thodar kathai paanila irunthu sirukathaikku vanthathaalaiyo antha thodarkathai touch irukku... \\

கதாசிரியர் சொன்னா கரெக்ட்டாதான் இருக்கும்:))


\\maththapadi good...\\

மிக்க நன்றி!

said...

good one Divya :)

said...

//அபியின் மனதில்........
அவனது குறும்பு பார்வை ஒரு அதிர்வை ஏற்படுத்தியதுன்னா......
இந்த தவிப்பு பார்வை வேறுவிதமான தாக்கத்தை ஏற்படுத்துதே!!
ஒரு ஆணுக்குள் இத்தனை காந்தமா!!!//

soooper narration of the feel....

climax subam mudinjadhu plus...

simple ah naa story nalla narration... nalla dialogue... kavidhai in between soooper....

Hats off