June 30, 2008

நீ வேண்டும்...நீ வேண்டும்...என்றென்றும் நீ வேண்டும் - 1

" என்னங்க உங்க பையன் ' கிக் பாஸிங்' ஆரம்பிச்சுட்டான், இனிமே நான் தூங்கினாப்ல தான்!
என் தூக்கத்தை திருடுறதுல உங்களுக்கு போட்டியா இப்போ உங்க பையன், என் வயித்துக்குள்ள இருக்கிறப்போவே இப்படி ஆட்டம் போடுறானே....வெளியில வந்ததும் என்னை ஒருவழி பண்ணிடுவான் போலிருக்குங்க"

ஆறு மாதம் கர்ப்பமான நந்தினி தன்னருகில் படுத்திருக்கும் தன் காதல் கணவன் கார்த்திக்கின் உள்ளங்கையை தன் வயிற்றின் மீது வைத்து தன்னுள் வளரும் தங்கள் முதல் ஈவின் துள்ளலை உணர வைத்தாள்.

சட்டென்று தன் கைகளை விலக்கிக் கொண்ட கார்த்திக் மறுபக்கமாக திரும்பி படுத்துக்கொண்டான்.

வழக்கமாக தன் மடிமீது தலை வைத்து வயிற்றில் உள்ள குழந்தையுடன் உரையாடுவதும், கொஞ்சுவதுமாக சில்மிஷம் செய்யும் கார்த்திக் இன்று இப்படி நடந்துக்கொண்டது நந்தினிக்கு வியப்பாகவும் கஷ்டமாகவும் இருந்தது. இருப்பினும் அதனை வெளிக்காட்டிக்கொள்ளாமல்....

"என்னடா செல்லம்....என்னாச்சு இன்னிக்கு, என் மேல் ஏதும் கோபமா??" என கேட்டுக்கொண்டே தன் பக்கமாக கார்த்திக்கை திருப்ப முயன்று தோற்றாள் நந்தினி.

திருமணமான இந்த மூன்று வருடத்தில் ஒருநாள் கூட இப்படி அவன் முகம் திருப்பியது கிடையாது.

'போதும் போதும்' என்று கெஞ்சினாலும் மிஞ்சும் கொஞ்சல்களும்,
திக்கு முக்காட' வைக்கும் குறும்புகளும்
நிறைந்த கார்த்திக்கிற்கு இன்று என்னவாயிற்று??

குழம்பிப்போன நந்தினிக்கு அழுகை முட்டிக்கொண்டு வந்தது, ஆனாலும் கணவனிடம் தன் அழுமூஞ்சியை காட்டி அந்த அழகிய இரவை வீணாக்க விரும்பவில்லை நந்தினி.

"ஏங்க உடம்பு சரியில்லையா???.........ஆஃபிஸ்ல ஏதும் பிரச்சனையா????"

"இல்ல...."

"பின்ன ஏங்க ஒருமாதிரி இருக்கிறீங்க? ஹைதிரபாத்க்கு போய்ட்டு நாலு நாள் கழிச்சு இன்னிக்கு காலையில வந்ததிலிருந்து நீங்க சரியாவே இல்ல, அத்தை முன்னாடி வைச்சு கேட்க வேணாம், ஆஃபீஸ் போய்ட்டு வந்ததும் கேட்டுக்கலாம்னு இருந்தேன்..........இப்போ சொல்லுடா கார்த்தி........என்னடா கண்ணா உனக்கு ஆச்சு?"

மற்றவர்களுக்கு முன்பும், மாமியாருக்கு முன்பும் மட்டும்தான் 'ஏங்க......வாங்க....போங்க' அப்படினு கார்த்திக்கு மரியாதை எல்லாம்,
தனிமை நேரத்தில் 'கார்த்தி' என பேர் சொல்ல்வதும்,
நெருக்கமான தருணத்தில் 'என்னடா................செல்ல திருடா' இப்படி கொஞ்சுவதும் நந்தினியின் பழக்கம்.

கார்த்திக்கிடமிருந்து பதில் ஏதும் வராததால் கொஞ்சம் கோபமும் வந்தது நந்தினிக்கு இப்போது,

"என்னடா செல்லம்........நான் கேட்டுட்டே இருக்கிறேனில்ல........சொல்லேன்டா திருடா"

"ஒன்னுமில்லைன்னு சொல்றேன் இல்ல..........சீக்கிரம் தூங்கு, நாளிக்கு காலையில உன் கைனக்காலிஜிஸ்ட் கிட்ட போகனும்"

'என்னடா செல்லம்'னு நந்தினி தன் ஹஸ்கி வாய்ஸ்ல சொன்னாலே கிறங்கிப்போய்விடும் கார்த்திக் இன்று எந்த சலனமும் இல்லாததிருந்தது நந்தினிக்கு அதிர்ச்சியாக இருந்தது!!

"போன வாரம் தானே நீங்க ஊருக்கு போறதுக்கு முன்னாடி டாக்டர்கிட்ட போனோம்..........அடுத்த விசிட் க்கு இன்னும் இரண்டு வாரம் இருக்குதே , இப்போ எதுகுங்க டாக்டர் பார்க்கனும்??"

"பார்க்கனும்னா பார்க்கனும் அவ்ளோதான்............சும்மா தொண தொணக்காம தூங்கு"

கார்த்திக்கின் சுரீரென்ற பதிலில் தெரிந்த எரிச்சல் நந்தினிக்கு புதிய பயத்தை அளித்தாலும், ஆஃபீஸ்ல ஏதோ பிரச்சனை போலிருக்கு, நாமும் ஏதாவது கேள்வி கேட்டு கஷ்டபடுத்த வேண்டாம் என நினைத்தவளாய், தனக்குள் வளரும் சிசுவின் அசைவுகளின் ஸ்பரிசத்தில் லயித்தவளாய் , மறுபுறம் திரும்பி படுத்து உறங்கிப்போனாள்.

சிறிது நேரத்தில் நேராக திரும்பிப் படுத்த கார்த்திக், தன் தேவதை அருகில் உறங்கும் அழகை ஒரு கணம் ரசித்தவன்.........மனதின் இறுக்கம் அதிகமாக, மேலே விட்டத்தை வெறித்துப் பார்த்தான்.
மின் விசிறி சுழல........கார்த்திக்கின் நினைவுகளும் பின்னோக்கி நகர்ந்தன.

பொறுப்புடன் படித்து முடித்து நல்ல ஒரு பதவியில் வேலையில் அமர்ந்து, உழைப்பால் முன்னேறி, கைநிறைய சம்பாதிக்கும் 27 வயது இளைஞனுக்கே உரிய மனநிறைவும், கர்வமும் கொடுக்கும் மிடுக்குடன் கலையான முகத்துடன், பெரும்பாலான பெண்கள் விரும்பும் உயரமும், handsome ஆன உடல் தோற்றமும், காந்த பார்வையும் என அத்தனை அம்சங்களுடன் இருக்கும் கார்த்திக்,

ஏனோ பெண்களிடம் அதிக ஈடுபாடும் ஆர்வமும் காட்டுவது கிடையாது.
சிறுவயதிலேயே தன் தந்தையை இழந்த தனக்கு தந்தையும் தாயுமாய் இருந்து வளர்த்த தன் அம்மாவிடம் தனக்குள்ள பாசத்தை பறித்து விடுவாளோ தன்னுடன் வாழ்வை பகிர்ந்துக்கொள்ளும் பெண் என்ற ஒருவித பயமே கார்த்திக்கை பெண்களிடமிருந்து தன்னை தனிமைபடுத்திக்கொள்ள செய்தது.

அதனாலேயே தன்னுடன் வேலை செய்யும் பெண்களிடம் தேவையில்லாமல் ஒரு வார்த்தை கூட அதிகம் பேசாமல் தனக்கென ஒரு வேலியமைத்துக் கட்டுப்பாட்டுடன் இருந்தான் கார்த்திக்.
இதனால் அவன் வேலை செய்யும் அந்த மென்பொருள் நிறுவனத்தில் பணிபுரியும் இளம்பெண்கள் மத்தியில் ஒரு வெறுப்பும்,
சில சமயங்களில் கடுமையுடன் பதிலளிக்கும் இவன் தன்மை ஒருவித எரிச்சலையும் ஏற்படுத்தியிருந்தது.

இந்த சமயத்தில் தான் நந்தினி இவனது குழுவில் ' trainee' ஆக சேர்ந்தாள்.

நந்தினி திருநெல்வேலிக்கு அருகில் உள்ள ஒரு கிராமத்துப் பெண். +2 வில் அதிக மதிப்பெண்கள் எடுத்து , வீட்டிலும் மற்றும் சொந்தக்காரர்கள் மத்தியிலும் இருந்து வந்த எதிர்ப்புகளையும் மீறி மதுரை தியாகராய பொறியியல் கல்லூரியில் கணனிதுறையில் பட்டப்படிப்பு முடித்து, இறுதி ஆண்டு ' campus interview' வில், கூட்டத்தோடு கூட்டமாக கார்த்திக் பணிபுரியும் மென்பொருள் நிறுவனத்தால் தேர்ந்தெடுக்கப்பட்ட பொறியாளர்களில் ஒருத்தி.

இன்று கார்த்திக்கிடம் trainee ஆக பணியில் சேர்ந்திருந்தாள்.

நகர்புறத்து நவநாகரீக பெண்களின் நுனிநாக்கு ஆங்கிலமும்,
சிறிது அலட்டலும்,
சகஜமாக ஆண்களுடன் நட்புடனும் தைரியத்துடனும் பேசும்
பெண்களையே பார்த்து பழகியிருந்த கார்த்திக்கிற்கு......

மையிட்ட மான்விழிகளுக்குள் மின்னும் மிரட்சியும்,
பவுடர் பூசியிருப்பதை தவிர வேறு எந்த அதீத அலங்கரிப்புகளும் இல்லாத
பாந்தமான முகமும்,
அம்முகத்தில் மிளிரும் பொலிவும்,
காதோரம் அவளது கன்னம் தொட்டு நடனமாடும் சிறு ஜிமிக்கியும்,
பின்னலிடப்பட்ட நீண்ட கூந்தலுமாக,
ஓர் தங்க விக்கிரகமாக தெரிந்தாள் நந்தினி!!!

தன் மனம் அவள்மேல் ஈர்க்கப்படுவதையும், அலைபாயுவதையும் தடுப்பதாக நினைத்துக்கொண்டு, தேவையின்றி அவளிடம் வேலை நேரங்களில் கடுகடுப்புடன் கடுமையாக நடந்துக்கொண்டான் கார்த்திக்.

வெளித்தோற்றத்தில் அமைதியான நந்தினி, வேலையில் புத்திசாலியும் சுட்டியுமாக இருந்தது இன்னும் வெகுவாக கார்த்திக்கை கவர்ந்தது.

Day by day கார்த்திக்கின் பிரம்மச்சாரியக் கோட்டை நந்தினியால் தகர்த்தப்பட்டுக் கொண்டிருந்தது.

ஒரு கட்டத்தில் தன் மனதில் உள்ள விருப்பத்தை நந்தினியிடம் கூறிவிட முடிவு செய்தான் கார்த்திக்,

தன் காதலை நந்தினியிடம் தெரிவித்தால் , இப்படி ஒரு ரியாக்ஷன் வரும் என அவன் சற்றும் எதிர்பார்க்கவில்லை........

[தொடரும்]

பகுதி - 2

பகுதி - 3

பகுதி-4

பகுதி - 5

பகுதி - 6

145 comments:

நவீன் ப்ரகாஷ் said...

அழகான கதை
அழகான ஆரம்பத்துடன் திவ்யா...:)))

நவீன் ப்ரகாஷ் said...

அதென்னா திவ்யா இவ்ளோ நீளமான பெயர்
கதைக்கு...?? :))) ஆனா நல்லாத்தான் இருக்கு.... :)))

நவீன் ப்ரகாஷ் said...

//'போதும் போதும்' என்று கெஞ்சினாலும் மிஞ்சும் கொஞ்சல்களும்,
திக்கு முக்காட' வைக்கும் குறும்புகளும் //

வழக்கம்போல அழகான வசனங்களும்
வர்ணனைத்தோரணங்களும்....
மிக ரசித்தேன் ....:))))

நவீன் ப்ரகாஷ் said...

//"என்னடா செல்லம்........நான் கேட்டுட்டே இருக்கிறேனில்ல........சொல்லேன
்டா திருடா"//

//'என்னடா செல்லம்'னு நந்தினி தன் ஹஸ்கி வாய்ஸ்ல சொன்னாலே கிறங்கிப்போய்விடும் கார்த்திக்//

என்ன திவ்யா வழக்கத்தை விட
அதிகமான காதலான கொஞ்சல்களும்
கொஞ்சலான செல்லங்களும்...??!!!! :))))

நெருக்கமான தவ தருணங்கள் அழகோ அழகு....
:))

நவீன் ப்ரகாஷ் said...

அடுத்த பக்கத்தை புரட்டத்தூண்டும்
அழகான முதல் பாகம் திவ்யா....
வாழ்த்துக்கள்.... :))))

Sen22 said...

தொடக்கம் மிக அருமை...

போட்டோல இருக்கின்ற ரேணுகா மேனன்-Juuperuuu..

Divyapriya said...

மனிரத்னம் styla எடுத்த உடனே கல்யானம் ஆய்டுச்சா? கலக்குங்க...

Divyapriya said...

//தன்னுள் வளரும் தங்கள் முதல் ஈவின் துள்ளலை //

’ஈவின்’ னா என்ன திவ்யா?

தமிழ் said...

//’ஈவின்’ னா என்ன திவ்யா?//

திவ்யா தான் பதில் சொல்லனுமா?

ஈவின் கிடையாது. அது 'ஈவு'. ஈவு ன்னா, பிஞ்சு,சிசு, கரு அப்படின்னு அர்த்தம்.

தப்பா இருந்தா திவ்யா அக்காவே சொல்லுவாங்க.

அழகான ஆரம்பம்.... தொடரட்டும் திவ்யா.

முகில்.

J J Reegan said...

// மையிட்ட மான்விழிகளுக்குள் மின்னும் மிரட்சியும்,//

// அம்முகத்தில் மிளிரும் பொலிவும்,
காதோரம் அவளது கன்னம் தொட்டு நடனமாடும் சிறு ஜிமிக்கியும் //

// பின்னலிடப்பட்ட நீண்ட கூந்தலுமாக,
ஓர் தங்க விக்கிரகமாக //

தமிழ் சும்மா விளையாடுது....

எழில்பாரதி said...

திவ்யா அருமை!!!!

வழக்கம் போல அசத்துங்க.....

எழில்பாரதி said...

வசனங்கள் கவிதையாய் மிளிர்கிறது.... அடுத்த பதிவு எப்போ சீக்கரம் போடுங்க !!!!

Anonymous said...

:D hmmm..nadula vara antha sentamizh dialoguelam padicha black n white padam ninaivuku vauruthu :D divs..neenga mega serial writera polam...summa poonthu vilaadreenga

மங்களூர் சிவா said...

/
தன் காதலை நந்தினியிடம் தெரிவித்தால் , இப்படி ஒரு ரியாக்ஷன் வரும் என அவன் சற்றும் எதிர்பார்க்கவில்லை........
/

தொடர்சி

யூ ஆர் வெயிட்டிங் லிஸ்ட் 420 என்றாள் நந்தினி.

Syam said...

ippo thaan story take off aana maathiri irundhathu athukulla suspense....seekiram next part pls... :-)

Syam said...

//மங்களூர் சிவா said...
யூ ஆர் வெயிட்டிங் லிஸ்ட் 420 என்றாள் நந்தினி.//

ROTFL :-)

Ramya Ramani said...

\\ஆறு மாதம் கர்ப்பமான நந்தினி தன்னருகில் படுத்திருக்கும் தன் காதல் கணவன் கார்த்திக்கின் உள்ளங்கையை தன் வயிற்றின் மீது வைத்து தன்னுள் வளரும் தங்கள் முதல் ஈவின் துள்ளலை உணர வைத்தாள்.\\

அருமையான தொடக்கம் :)

\\மையிட்ட மான்விழிகளுக்குள் மின்னும் மிரட்சியும்,
பவுடர் பூசியிருப்பதை தவிர வேறு எந்த அதீத அலங்கரிப்புகளும் இல்லாத
பாந்தமான முகமும்,
அம்முகத்தில் மிளிரும் பொலிவும்,
காதோரம் அவளது கன்னம் தொட்டு நடனமாடும் சிறு ஜிமிக்கியும்,
பின்னலிடப்பட்ட நீண்ட கூந்தலுமாக,
ஓர் தங்க விக்கிரகமாக தெரிந்தாள் நந்தினி!!!\\

நல்ல வர்ணனை :)

\\
தன் காதலை நந்தினியிடம் தெரிவித்தால் , இப்படி ஒரு ரியாக்ஷன் வரும் என அவன் சற்றும் எதிர்பார்க்கவில்லை........
\\

As usual Divya's punch :)

Sen22 said...

//
மங்களூர் சிவா said...
/
தன் காதலை நந்தினியிடம் தெரிவித்தால் , இப்படி ஒரு ரியாக்ஷன் வரும் என அவன் சற்றும் எதிர்பார்க்கவில்லை........
/

தொடர்சி

யூ ஆர் வெயிட்டிங் லிஸ்ட் 420 என்றாள் நந்தினி.//

Repeattuuu...

எங்க கமெண்ட் போட்டாலும் தனியா தெரியுரீங்க Boss....!!!!

கோபிநாத் said...

அழகான தொடக்கம்...அடுத்த பகுதிக்கு வெயிட்டிங் ;)

\\தன் காதலை நந்தினியிடம் தெரிவித்தால் \\

தெரிவித்தான்..

Vijay said...

திவ்யா,
நான் இந்தக்கதையை முழுசா படிக்கலை. கடைசியில நீங்க கொடுக்கற சஸ்பென்ன்ஸ் என்னால தாங்க முடியாது. அடுத்த பகுதி வரும் வரைக்கும், இதை பற்றியே நினைத்திருந்தால், வேலை யார் செய்வது?

FunScribbler said...

படத்துல இருக்கறது ஜெய் ஆகாஷ் தானே! ரொம்ப handsome guy!! :)) அவ்வ்வ்....

வழக்கம்போல கதை கலக்கல்ஸ் தான். தொடரட்டும். ஆவலுடன் காத்திருக்கிறோம்....

இவன் said...

கலக்கல் ஆரம்பம் எப்போது அடுத்த பகுதி??

ராஜா முஹம்மது said...

please invite for this blog http://divyaastimepass.blogspot.com/

முகுந்தன் said...

//தன் காதலை நந்தினியிடம் தெரிவித்தால் , இப்படி ஒரு ரியாக்ஷன் வரும் என அவன் சற்றும் எதிர்பார்க்கவில்லை........

//

கதை நல்லா இருக்குங்க...
ஆனா ஏதோ ஒரு படத்துல வடிவேலு சொல்றாமாதிரி
தொடரும்னு(வடிவேலு ஸ்டைல்ல )போட்டுட்டீங்களே :-))

தேவகோட்டை ஹக்கீம் said...

Kadhain Aarambam Superruu....Adhi vida Renuka photo Supperoo Super.....Thodara Vaztthukkal.....

Shwetha Robert said...

Luvly cute story with a good start Divya-kka:)))

Selva Kumar said...

//Day by day கார்த்திக்கின் பிரம்மச்சாரியக் கோட்டை நந்தினியால் தகர்த்தப்பட்டுக் கொண்டிருந்தது.
//

:-))

Nimal said...

அழகான அருமையான ஆரம்பம்...!

Nimal said...

வசனங்களின் 'கெஞ்சல்களும் கொஞ்சல்களும்' மிகவும் ரசிக்கும்படி உள்ளன.

சஸ்பென்ஸ் சூப்பர்... ஆனா சீக்கிரம் அடுத்த பார்ட் போடுங்க....!

Selva Kumar said...

//தன் காதலை நந்தினியிடம் தெரிவித்தால் , இப்படி ஒரு ரியாக்ஷன் வரும் என அவன் சற்றும் எதிர்பார்க்கவில்லை........
//

எப்படி ஒரு ரியாக்சன் ????

:-))))

Selva Kumar said...

எல்லோரும் முன்னாடியே சொல்லிட்டாங்க.......

மொத்தத்தில் அழகான வரிகள்!!

You are Rocking Divya!!!

:-)))

Selva Kumar said...

எப்போ அடுத்த பகுதி ???

:-))

(விரைவில் வரனும்னு ஆசை, பார்க்கலாம் )

ரசிகன் said...

அருமை. இயல்பான வசனங்கள். கதாசிரியை திவ்யா மாஸ்டருக்கு பாராட்டுக்கள்:)

Arunkumar said...

asathalaana first part.. seekiram adutha parta edirpaakurom !!

Arunkumar said...

//மங்களூர் சிவா said...
யூ ஆர் வெயிட்டிங் லிஸ்ட் 420 என்றாள் நந்தினி.//

ROTFL :-)

//

once more....

(bored of repeate....)

Divya said...

\\ நவீன் ப்ரகாஷ் said...
அழகான கதை
அழகான ஆரம்பத்துடன் திவ்யா...:)))\\

வாங்க நவீன்,

அழகான பாராட்டிற்கு நன்றி!!!

Divya said...

\\நவீன் ப்ரகாஷ் said...
அதென்னா திவ்யா இவ்ளோ நீளமான பெயர்
கதைக்கு...?? :))) ஆனா நல்லாத்தான் இருக்கு.... :)))\\

கதையின் தலைப்பு மிக நீளமாக இருக்கிறதா????
அடுத்த முறை சரி செய்துக்கொள்கிறேன், உங்கள் கருத்தை வெளிப்படுத்தியதற்கு நன்றி நவீன்!!

Divya said...

\\நவீன் ப்ரகாஷ் said...
//'போதும் போதும்' என்று கெஞ்சினாலும் மிஞ்சும் கொஞ்சல்களும்,
திக்கு முக்காட' வைக்கும் குறும்புகளும் //

வழக்கம்போல அழகான வசனங்களும்
வர்ணனைத்தோரணங்களும்....
மிக ரசித்தேன் ....:))))\\

உங்கள் ரசிப்பிற்கு மிக்க நன்றி :)))

Divya said...

\\ நவீன் ப்ரகாஷ் said...
//"என்னடா செல்லம்........நான் கேட்டுட்டே இருக்கிறேனில்ல........சொல்லேன
்டா திருடா"//

//'என்னடா செல்லம்'னு நந்தினி தன் ஹஸ்கி வாய்ஸ்ல சொன்னாலே கிறங்கிப்போய்விடும் கார்த்திக்//

என்ன திவ்யா வழக்கத்தை விட
அதிகமான காதலான கொஞ்சல்களும்
கொஞ்சலான செல்லங்களும்...??!!!! :))))

நெருக்கமான தவ தருணங்கள் அழகோ அழகு....
:))\\

வழக்கத்தை விட அதிகமாக தோன்றுகிறதா உங்களுக்கு???

அழகான உங்கள் ரசிப்பினை பகிர்ந்துக்கொண்டமைக்கு நன்றி நவீன்!!!

Divya said...

\\நவீன் ப்ரகாஷ் said...
அடுத்த பக்கத்தை புரட்டத்தூண்டும்
அழகான முதல் பாகம் திவ்யா....
வாழ்த்துக்கள்.... :))))\

நவீன், உங்கள் மேலான வருகைக்கும், வாழ்த்துக்களுக்கும் மனமார்ந்த நன்றிகள் பல!!!!

Divya said...

\\Sen22 said...
தொடக்கம் மிக அருமை...

போட்டோல இருக்கின்ற ரேணுகா மேனன்-Juuperuuu..\\

வாங்க செந்தில்,

வருகைக்கும் தருகைக்கும் நன்றி!!

Divya said...

\Divyapriya said...
மனிரத்னம் styla எடுத்த உடனே கல்யானம் ஆய்டுச்சா? கலக்குங்க...\\

வாங்க திவ்யாப்ரியா,

உங்கள் முதல் வருகைக்கு என் மனமார்ந்த நன்றி!!!

தொடர்ந்து வாருங்கள்!!

Divya said...

\ Divyapriya said...
//தன்னுள் வளரும் தங்கள் முதல் ஈவின் துள்ளலை //

’ஈவின்’ னா என்ன திவ்யா?\\

ஈவு ன்னா, பிஞ்சு,சிசு, கரு அப்படின்னு அர்த்தம்.

முகிலரசி சரியான விளக்கம் கொடுத்திருக்காங்க திவ்யாப்ரியா உங்க கேள்விக்கு.

Divya said...

\\தமிழரசன் said...
//’ஈவின்’ னா என்ன திவ்யா?//

திவ்யா தான் பதில் சொல்லனுமா?

ஈவின் கிடையாது. அது 'ஈவு'. ஈவு ன்னா, பிஞ்சு,சிசு, கரு அப்படின்னு அர்த்தம்.

தப்பா இருந்தா திவ்யா அக்காவே சொல்லுவாங்க.

அழகான ஆரம்பம்.... தொடரட்டும் திவ்யா.

முகில்.\\

வாங்க முகிலரசி,

திவ்யாப்ரியாவின் கேள்விக்கு பதில் விளக்கம் கொடுத்ததுக்கு ஒரு பெரிய நன்றிங்க:))

Divya said...

\ J J Reegan said...
// மையிட்ட மான்விழிகளுக்குள் மின்னும் மிரட்சியும்,//

// அம்முகத்தில் மிளிரும் பொலிவும்,
காதோரம் அவளது கன்னம் தொட்டு நடனமாடும் சிறு ஜிமிக்கியும் //

// பின்னலிடப்பட்ட நீண்ட கூந்தலுமாக,
ஓர் தங்க விக்கிரகமாக //

தமிழ் சும்மா விளையாடுது....\\

ஆஹா....பகுதி பகுதியா குறிப்பிட்டு காட்டிருக்கிறீங்க பின்னூட்டத்தில், நன்றி ரீகன்!!!

Divya said...

\ எழில்பாரதி said...
திவ்யா அருமை!!!!

வழக்கம் போல அசத்துங்க.....\\

வாங்க கவியரசி எழில்பாரதி,

உங்கள் பாராட்டிற்கு நன்றி!!

Divya said...

\ எழில்பாரதி said...
வசனங்கள் கவிதையாய் மிளிர்கிறது.... அடுத்த பதிவு எப்போ சீக்கரம் போடுங்க !!!!\

கவியரசிக்கு வசனங்கள் கூட கவிதையாக தெரிகிறதோ???

அடுத்த பதிவு விரைவில் எழில்.....

Divya said...

\Anonymous said...
:D hmmm..nadula vara antha sentamizh dialoguelam padicha black n white padam ninaivuku vauruthu :D divs..neenga mega serial writera polam...summa poonthu vilaadreenga\\

வாங்க அனானி,

செந்தமிழ் டயலாக் ஆ??
அப்படியா இருக்கு டயலாக்:(((

சீரியல் எழுத கூப்பிட்டா போய்ட வேண்டியதுதான்,
பகுதி பகுதியா தொடர்கதை போட்டு பதிவர்களை கஷ்டபடுத்துறது போறாதுன்னு, டிவி சீரியல் பார்க்கிறவங்களையும் கொஞ்சம் கஷ்டபடுத்தலாம்:)))

Divya said...

\ மங்களூர் சிவா said...
/
தன் காதலை நந்தினியிடம் தெரிவித்தால் , இப்படி ஒரு ரியாக்ஷன் வரும் என அவன் சற்றும் எதிர்பார்க்கவில்லை........
/

தொடர்சி

யூ ஆர் வெயிட்டிங் லிஸ்ட் 420 என்றாள் நந்தினி.\\

வருகைக்கு நன்றி மங்களூர் சிவா!!

Divya said...

\\Syam said...
ippo thaan story take off aana maathiri irundhathu athukulla suspense....seekiram next part pls... :-)\\

வாங்க ஷ்யாம்,

உடனே சஸ்பென்ஸ் வந்துடுச்சா....டோண்ட் வொர்ரி, அடுத்த பகுதி சீக்கிரம் போடுறேன்:))

Divya said...

\\ ரம்யா ரமணி said...
\\ஆறு மாதம் கர்ப்பமான நந்தினி தன்னருகில் படுத்திருக்கும் தன் காதல் கணவன் கார்த்திக்கின் உள்ளங்கையை தன் வயிற்றின் மீது வைத்து தன்னுள் வளரும் தங்கள் முதல் ஈவின் துள்ளலை உணர வைத்தாள்.\\

அருமையான தொடக்கம் :)

\\மையிட்ட மான்விழிகளுக்குள் மின்னும் மிரட்சியும்,
பவுடர் பூசியிருப்பதை தவிர வேறு எந்த அதீத அலங்கரிப்புகளும் இல்லாத
பாந்தமான முகமும்,
அம்முகத்தில் மிளிரும் பொலிவும்,
காதோரம் அவளது கன்னம் தொட்டு நடனமாடும் சிறு ஜிமிக்கியும்,
பின்னலிடப்பட்ட நீண்ட கூந்தலுமாக,
ஓர் தங்க விக்கிரகமாக தெரிந்தாள் நந்தினி!!!\\

நல்ல வர்ணனை :)

\\
தன் காதலை நந்தினியிடம் தெரிவித்தால் , இப்படி ஒரு ரியாக்ஷன் வரும் என அவன் சற்றும் எதிர்பார்க்கவில்லை........
\\

As usual Divya's punch :)\\

வாங்க ரம்யா,

நீங்க ரசித்த பகுதிகளை பின்னூட்டத்தில் தனித்தனியாக குறிப்பிட்டிருப்பது மகிழ்ச்சியளித்தது, மிக்க நன்றி!!!

Divya said...

\\கோபிநாத் said...
அழகான தொடக்கம்...அடுத்த பகுதிக்கு வெயிட்டிங் ;)

\\தன் காதலை நந்தினியிடம் தெரிவித்தால் \\

தெரிவித்தான்..\\

வாங்க கோபிநாத்,

'காதலை சொன்னால்' என்பதை தான் 'தெரிவித்தால்' அப்படின்னு எழுதினேன்......பிழையா??

வருகைக்கும் பாராட்டிற்கும் நன்றி கோபி!!!

Divya said...

\விஜய் said...
திவ்யா,
நான் இந்தக்கதையை முழுசா படிக்கலை. கடைசியில நீங்க கொடுக்கற சஸ்பென்ன்ஸ் என்னால தாங்க முடியாது. அடுத்த பகுதி வரும் வரைக்கும், இதை பற்றியே நினைத்திருந்தால், வேலை யார் செய்வது?\\

அட என்னங்கண்ணா இப்படி சொல்லிட்டீங்க,
இது அப்படி ஏதும் விறு விறுப்பான சஸ்பென்ஸ் கதை எல்லாம் இல்லீங்க, சும்மா தைரியமா படிங்க:)))

\\இதை பற்றியே நினைத்திருந்தால், வேலை யார் செய்வது?\\

இல்லீனாமட்டும்???

Divya said...

\\Thamizhmaangani said...
படத்துல இருக்கறது ஜெய் ஆகாஷ் தானே! ரொம்ப handsome guy!! :)) அவ்வ்வ்....

வழக்கம்போல கதை கலக்கல்ஸ் தான். தொடரட்டும். ஆவலுடன் காத்திருக்கிறோம்....\\

ஜெய் ஆகாஷ் பிடுக்குமா தமிழ்மாங்கனிக்கு??

பாராட்டிற்கு நன்றி தமிழ்மாங்கனி!!!

Divya said...

\இவன் said...
கலக்கல் ஆரம்பம் எப்போது அடுத்த பகுதி??
\\

வாங்க இவன்,

உங்கள் வருகைக்கு நன்றி!!

விரைவில் அடுத்த பகுதி:))

Divya said...

\\ராஜா முஹம்மது said...
please invite for this blog http://divyaastimepass.blogspot.com/\\

So sorry sir,
its my private blog.

Divya said...

\\ முகுந்தன் said...
//தன் காதலை நந்தினியிடம் தெரிவித்தால் , இப்படி ஒரு ரியாக்ஷன் வரும் என அவன் சற்றும் எதிர்பார்க்கவில்லை........

//

கதை நல்லா இருக்குங்க...
ஆனா ஏதோ ஒரு படத்துல வடிவேலு சொல்றாமாதிரி
தொடரும்னு(வடிவேலு ஸ்டைல்ல )போட்டுட்டீங்களே :-))\\

வாங்க முகுந்தன்,

என்னங்க பண்றது......தொடர்கதைக்கு தொடரும் ன்னு போட வேண்டியிருக்குதே!!

வருக்கைக்கும் பாராட்டிற்கும் நன்றி முகுந்தன்!!

Divya said...

\hayat001 said...
Kadhain Aarambam Superruu....Adhi vida Renuka photo Supperoo Super.....Thodara Vaztthukkal.....\\

வாங்க hayat001,

உங்கள் வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி!!!

Divya said...

\\ Shwetha Robert said...
Luvly cute story with a good start Divya-kka:)))\\

நன்றி ஸ்வேதா:)))

Divya said...

\\ வழிப்போக்கன் said...
//Day by day கார்த்திக்கின் பிரம்மச்சாரியக் கோட்டை நந்தினியால் தகர்த்தப்பட்டுக் கொண்டிருந்தது.
//

:-))\\

இந்த 'smiley' க்கு என்ன அர்த்தம்னு தெரிலீங்க...ஸோ பதிலுக்கு நானும் ஒரு :-) போட்டுக்கிறேன்.

Divya said...

\ நிமல்/NiMaL said...
அழகான அருமையான ஆரம்பம்...!\\

வாங்க நிமல்,

உங்கள் வருகைக்கும் பாராட்டிற்கும் மிக்க நன்றி!!!

Divya said...

\ நிமல்/NiMaL said...
வசனங்களின் 'கெஞ்சல்களும் கொஞ்சல்களும்' மிகவும் ரசிக்கும்படி உள்ளன.

சஸ்பென்ஸ் சூப்பர்... ஆனா சீக்கிரம் அடுத்த பார்ட் போடுங்க....!\\

கண்டிப்பா அடுத்த பகுதி சீக்கிரம் போடுறேன் நிமல்!!

Divya said...

\\வழிப்போக்கன் said...
//தன் காதலை நந்தினியிடம் தெரிவித்தால் , இப்படி ஒரு ரியாக்ஷன் வரும் என அவன் சற்றும் எதிர்பார்க்கவில்லை........
//

எப்படி ஒரு ரியாக்சன் ????

:-))))\\

எப்படி ரியாக்ஷன்னு தெரிஞ்சுக்க அடுத்த பகுதி வரை வெயிட் பண்ணனும்:))

Divya said...

\\ வழிப்போக்கன் said...
எல்லோரும் முன்னாடியே சொல்லிட்டாங்க.......

மொத்தத்தில் அழகான வரிகள்!!

You are Rocking Divya!!!

:-)))\\

மிக்க நன்றி வழிபோக்கன்!!!

Divya said...

\ வழிப்போக்கன் said...
எப்போ அடுத்த பகுதி ???

:-))

(விரைவில் வரனும்னு ஆசை, பார்க்கலாம் )\\

விரைவில்.....

Divya said...

\\ ரசிகன் said...
அருமை. இயல்பான வசனங்கள். கதாசிரியை திவ்யா மாஸ்டருக்கு பாராட்டுக்கள்:)\\

வாங்க ரசிகன்,

உங்கள் பாராட்டுக்களுக்கு மிக்க நன்றி ரசிகன்!!

Divya said...

\\Arunkumar said...
asathalaana first part.. seekiram adutha parta edirpaakurom !!\\

வாங்க அருண்குமார்,

வருகைக்கு நன்றி,

சீக்கிரம் அடுத்த பகுதி போட முயற்சிக்கிறேன்!!

'நவிரன்' சதீஷ் - 'Naveran' Sathish said...

அடுத்த தொடர் ஆரம்பம் :) வழக்கம் போல் அருமையான தொடக்கம் திவ்யா

'நவிரன்' சதீஷ் - 'Naveran' Sathish said...

//இறுதி ஆண்டு ' campus interview' வில், கூட்டத்தோடு கூட்டமாக கார்த்திக் பணிபுரியும் மென்பொருள் நிறுவனத்தால் தேர்ந்தெடுக்கப்பட்ட பொறியாளர்களில் ஒருத்தி.//

:)

தமிழன்-கறுப்பி... said...

சோதனை பின்னூட்டம் 1

தமிழன்-கறுப்பி... said...

ஆகா...
அப்ப போட்டு தாக்கிட வேண்டியதுதான்...:))

தமிழன்-கறுப்பி... said...

///என்னடா செல்லம்....என்னாச்சு இன்னிக்கு, என் மேல் ஏதும் கோபமா??"///

ஆஹா ஆஹா...

///'என்னடா................செல்ல திருடா' இப்படி கொஞ்சுவதும் நந்தினியின் பழக்கம்.//

ஓ... இப்படித்தான் பழகுவாங்களோ...

தமிழன்-கறுப்பி... said...

///'போதும் போதும்' என்று கெஞ்சினாலும் மிஞ்சும் கொஞ்சல்களும்,
திக்கு முக்காட' வைக்கும் குறும்புகளும்
நிறைந்த கார்த்திக்கிற்கு இன்று என்னவாயிற்று??///

அதென்னங்க திக்கு முக்காட வைக்கும் குறும்பு...:)

நளினம்...

தமிழன்-கறுப்பி... said...

///'என்னடா செல்லம்'னு நந்தினி தன் ஹஸ்கி வாய்ஸ்ல சொன்னாலே கிறங்கிப்போய்விடும் கார்த்திக்///

ம்ம்ம்...

(இப்படித்தானே கவுக்குறது...)

:)

தமிழன்-கறுப்பி... said...

பெண்மை அன்பை வெளிப்படுத்துகிற விதமே தனிதான் இல்லையா திவ்யா...

தமிழன்-கறுப்பி... said...

ஆமா நந்தினி பாவாடை தாவணியா கட்டிக்குவா? ரேணுகா மேனன் அதுதானே போட்டிருக்காங்க நீங்கள் சொன்ன அலங்காரங்களை வச்சு பாத்தா நான் தங்க விக்கிரகம்ன உடனே பாவாடை தாவணிதான்னு நான் நினைச்சுட்டேன்:)

தமிழன்-கறுப்பி... said...

ஆமா இந்தக்கதையில ரொமான்ஸ் தூக்கல்.. ஒரு வேளை கற்பனையிலிருக்கிற வாழ்க்கையின் சாயலோ..:)

தமிழன்-கறுப்பி... said...

///தன் காதலை நந்தினியிடம் தெரிவித்தால் , இப்படி ஒரு ரியாக்ஷன் வரும் என அவன் சற்றும் எதிர்பார்க்கவில்லை........///

ஆகா ஸஸ்பென்சு...

(நானும்தான்னு சொல்லியிருப்பா...)

தமிழன்-கறுப்பி... said...

@Snn22

///மங்களூர் சிவா said...

/தன் காதலை நந்தினியிடம் தெரிவித்தால் , இப்படி ஒரு ரியாக்ஷன் வரும் என அவன் சற்றும் எதிர்பார்க்கவில்லை........
/

தொடர்சி

யூ ஆர் வெயிட்டிங் லிஸ்ட் 420 என்றாள் நந்தினி.//

Repeattuuu...///

முதல்ல இதுக்கொரு ரிப்பீட்டு

///எங்க கமெண்ட் போட்டாலும் தனியா தெரியுரீங்க Boss....!!!!///

அப்புறம் இதுக்கு பெரிசா ஒரு ரிப்பீட்டு..
தலயோடட தனித்துவமே அதான் செந்தில்...:))

தமிழன்-கறுப்பி... said...

அடுத்த பகுதி போடும்போது சொல்லி அனுப்புங்க...

(கடமையை செய்யணும்ல)

தமிழன்-கறுப்பி... said...

ரம்யா ரமணி பெயரை தமிழ்ள போட்டிருக்காங்க...
கோச்சிங் திவ்யா மாஸ்டராமே மாஸ்டர் ஒரு லெக்சருக்கு எவ்ளோ வாங்குறிங்க?? :) எனக்கும் சில உதவிகள் தேவைப்படுது....

தமிழன்-கறுப்பி... said...

ஒரு வழிப்போக்கன்- வழிப்போக்கனா மாறிட்டாரு...:)

ஜி said...

:)))

வார்த்தை வளம் பெருகிக் கொண்டே வருகிறது. நெறய தடவ ரிவைஸ் பண்ணி ஒரு ஃப்ளா கூட இல்லாம எழுதுன மாதிரி இருக்குது...

செமையா இருந்தது. வாழ்த்துக்கள்.. அடுத்த பகுதிக்காக வெயிட்டிங் :)))

Selva Kumar said...

// Divya said...
\\ வழிப்போக்கன் said...
//Day by day கார்த்திக்கின் பிரம்மச்சாரியக் கோட்டை நந்தினியால் தகர்த்தப்பட்டுக் கொண்டிருந்தது.
//

:-))\\

இந்த 'smiley' க்கு என்ன அர்த்தம்னு தெரிலீங்க...ஸோ பதிலுக்கு நானும் ஒரு :-) போட்டுக்கிறேன்.

//

காதல் கோட்டை கட்டபட்டு கொண்டிருந்ததுனு சொல்ல வந்தேன்..ஆனா டைப் பண்ணாமே விட்டுட்டேன் போலிருக்கு.....

Selva Kumar said...

//தமிழன்... said...
ஒரு வழிப்போக்கன்- வழிப்போக்கனா மாறிட்டாரு...:)
///

இதெல்லாம் வேற நோட் பண்றீங்களா ?? :-)))

எதோ நம்மாலே முடிஞ்ச மாற்றம்..

கருணாகார்த்திகேயன் said...

இந்த மாதிரியே அழகா தொடர்கதை எழுதி
எழுதி... என்னை உசுப்பு ஏத்தி... புலிய பார்த்து
சுடு போட்ட கதையாச்சு என் நெலைமை..
" மெல்ல திறந்த கதவு" பத்தி சொன்னேன்
புரியும்னு நினைக்கிறேன்...

அன்புடன்
கார்த்திகேயன்

விமல் said...

மிகவும் நன்றாக இருந்தது.
அடுத்த பகுதியை சீக்கிரம் எழுதவும்.

வாழ்த்துக்கள்,
விமல்

Prabakar said...

Very nice . I cont understand how you are characterizing each role excellent divya ,
//
மையிட்ட மான்விழிகளுக்குள் மின்னும் மிரட்சியும்,
பவுடர் பூசியிருப்பதை தவிர வேறு எந்த அதீத அலங்கரிப்புகளும் இல்லாத
பாந்தமான முகமும்
//
I had seen many gals like that… this get up will last for only 1 month after that yellam thalai kil than hehe

Very Nice Story ..

தமிழ் said...

பழைய நினைவுகளை (கல்யாணத்திற்குப்பின்) தட்டி எழுப்பியதற்கு நன்றி!

அசத்தலான ஆரம்பம்... தொடரட்டும் வெற்றிநடை...!

Divya said...

\\sathish said...
அடுத்த தொடர் ஆரம்பம் :) வழக்கம் போல் அருமையான தொடக்கம் திவ்யா\\

வாங்க சதீஷ்,

உங்கள் பாராட்டிற்கு நன்றி!!

Divya said...

\\ sathish said...
//இறுதி ஆண்டு ' campus interview' வில், கூட்டத்தோடு கூட்டமாக கார்த்திக் பணிபுரியும் மென்பொருள் நிறுவனத்தால் தேர்ந்தெடுக்கப்பட்ட பொறியாளர்களில் ஒருத்தி.//

:)\\

:))))

Divya said...

\\ தமிழன்... said...
சோதனை பின்னூட்டம் 1\\

சோதனை பின்னூட்டம் எதற்கு ....கும்மி அடிக்கவா தமிழன்?

Divya said...

\தமிழன்... said...
///'போதும் போதும்' என்று கெஞ்சினாலும் மிஞ்சும் கொஞ்சல்களும்,
திக்கு முக்காட' வைக்கும் குறும்புகளும்
நிறைந்த கார்த்திக்கிற்கு இன்று என்னவாயிற்று??///

அதென்னங்க திக்கு முக்காட வைக்கும் குறும்பு...:)

நளினம்...
\\

நன்றி தமிழன்:)

Divya said...

\\ தமிழன்... said...
பெண்மை அன்பை வெளிப்படுத்துகிற விதமே தனிதான் இல்லையா திவ்யா...\\

ஆமாம் தமிழன்:))

Divya said...

\\தமிழன்... said...
ஆமா நந்தினி பாவாடை தாவணியா கட்டிக்குவா? ரேணுகா மேனன் அதுதானே போட்டிருக்காங்க நீங்கள் சொன்ன அலங்காரங்களை வச்சு பாத்தா நான் தங்க விக்கிரகம்ன உடனே பாவாடை தாவணிதான்னு நான் நினைச்சுட்டேன்:)\\

ரேணுகா மேனனின் அந்த படம்தாங்க கிடைச்சது:)))

எந்த இந்திய கலாச்சார உடையிலும் 'பெண்' தங்க விக்கிரகம்தான்:))

Divya said...

\\தமிழன்... said...
ஆமா இந்தக்கதையில ரொமான்ஸ் தூக்கல்.. ஒரு வேளை கற்பனையிலிருக்கிற வாழ்க்கையின் சாயலோ..:)\\

பதிவை படிச்சா அனுபவிக்கனும்......ஆராயக்கூடாது!!!

இது என் 'வெட்டி' அண்ணா சொல்லி தந்தது!!!

Divya said...

\\தமிழன்... said...
///தன் காதலை நந்தினியிடம் தெரிவித்தால் , இப்படி ஒரு ரியாக்ஷன் வரும் என அவன் சற்றும் எதிர்பார்க்கவில்லை........///

ஆகா ஸஸ்பென்சு...

(நானும்தான்னு சொல்லியிருப்பா...)\\

அப்படியா சொல்லிருப்பா நந்தினி??

அடுத்த பகுதி வரைக்கும் வெயிட் பண்ணுங்க தமிழன்!!

Divya said...

\\தமிழன்... said...
அடுத்த பகுதி போடும்போது சொல்லி அனுப்புங்க...

(கடமையை செய்யணும்ல)\\

சரிங்க சார்:))

Divya said...

\\ தமிழன்... said...
ரம்யா ரமணி பெயரை தமிழ்ள போட்டிருக்காங்க...
கோச்சிங் திவ்யா மாஸ்டராமே மாஸ்டர் ஒரு லெக்சருக்கு எவ்ளோ வாங்குறிங்க?? :) எனக்கும் சில உதவிகள் தேவைப்படுது....\\

அஹா, இதையும் நோட் பண்ணிட்டீங்களா??

கோச்சிங் இலவசம், நட்பென்னும் தட்சனையை தவிர வேறு ஏதும் எதிர்பார்பதில்லை!!!

Divya said...

\\தமிழன்... said...
ஒரு வழிப்போக்கன்- வழிப்போக்கனா மாறிட்டாரு...:)\\

அட ஆமா....'ஒரு' இஸ் மிஸ்ஸிங்:)))

Divya said...

\\ ஜி said...
:)))

வார்த்தை வளம் பெருகிக் கொண்டே வருகிறது. நெறய தடவ ரிவைஸ் பண்ணி ஒரு ஃப்ளா கூட இல்லாம எழுதுன மாதிரி இருக்குது...

செமையா இருந்தது. வாழ்த்துக்கள்.. அடுத்த பகுதிக்காக வெயிட்டிங் :)))\\

ஒரு சிறந்த கதாசிரியரின் மனமார்ந்த பாராடுக்களை என் எழுத்து பெறுகிறதில் மிக்க மகிழ்ச்சி,

நன்றி ஜி!!!

Divya said...

\\ வழிப்போக்கன் said...
// Divya said...
\\ வழிப்போக்கன் said...
//Day by day கார்த்திக்கின் பிரம்மச்சாரியக் கோட்டை நந்தினியால் தகர்த்தப்பட்டுக் கொண்டிருந்தது.
//

:-))\\

இந்த 'smiley' க்கு என்ன அர்த்தம்னு தெரிலீங்க...ஸோ பதிலுக்கு நானும் ஒரு :-) போட்டுக்கிறேன்.

//

காதல் கோட்டை கட்டபட்டு கொண்டிருந்ததுனு சொல்ல வந்தேன்..ஆனா டைப் பண்ணாமே விட்டுட்டேன் போலிருக்கு.....\\

ஓஹோ....ஒகே ஒகே இப்போ புரியுதுங்க, நன்றி!!!

Divya said...

\\ கார்த்திகேயன். கருணாநிதி said...
இந்த மாதிரியே அழகா தொடர்கதை எழுதி
எழுதி... என்னை உசுப்பு ஏத்தி... புலிய பார்த்து
சுடு போட்ட கதையாச்சு என் நெலைமை..
" மெல்ல திறந்த கதவு" பத்தி சொன்னேன்
புரியும்னு நினைக்கிறேன்...

அன்புடன்
கார்த்திகேயன்\\

அட என்னங்க புலிய பார்த்து சூடு போட்ட கதையெல்லாம் சொல்றீங்க, நீங்க தான் சூப்பரா கதை எழுதிறீங்களே,
தொடர்ந்து எழுதுங்க அந்த தொடர் கதையை.

வருகைக்கு நன்றி கார்திகேயன்!!!

Divya said...

\\ ந.மு.விமல்ராஜ் said...
மிகவும் நன்றாக இருந்தது.
அடுத்த பகுதியை சீக்கிரம் எழுதவும்.

வாழ்த்துக்கள்,
விமல்\\

வாங்க விமல்,

உங்கள் மனம்திறந்த பாராட்டிற்கும் வருகைக்கும் நன்றி!!

அடுத்த பகுதி விரைவில் பதிவிடுகிறேன் விமல்!!

Divya said...

\\ Prabakar Samiyappan said...
Very nice . I cont understand how you are characterizing each role excellent divya ,
//
மையிட்ட மான்விழிகளுக்குள் மின்னும் மிரட்சியும்,
பவுடர் பூசியிருப்பதை தவிர வேறு எந்த அதீத அலங்கரிப்புகளும் இல்லாத
பாந்தமான முகமும்
//
I had seen many gals like that… this get up will last for only 1 month after that yellam thalai kil than hehe

Very Nice Story ..\\

வாங்க ப்ரபாகர்,

கதாபாத்திரங்கள் எல்லாம் கற்பனை படைப்புகளே.

வருகைக்கும் கருத்திற்கும் நன்றி ப்ரபாகர்!!

Divya said...

\\தமிழரசன் said...
பழைய நினைவுகளை (கல்யாணத்திற்குப்பின்) தட்டி எழுப்பியதற்கு நன்றி!

அசத்தலான ஆரம்பம்... தொடரட்டும் வெற்றிநடை...!\\

வாங்க தமிழரசன்,

உங்கள் மலரும் நினைவுகளை கிளறியதா கதை?? மகிழ்ச்சி:))

வருகைக்கும் பாராட்டிற்கும் நன்றி தமிழரசன்!!

தமிழன்-கறுப்பி... said...

திவ்யா மாஸ்டர் சொன்னது...

\\ தமிழன்... said...
ரம்யா ரமணி பெயரை தமிழ்ள போட்டிருக்காங்க...
கோச்சிங் திவ்யா மாஸ்டராமே மாஸ்டர் ஒரு லெக்சருக்கு எவ்ளோ வாங்குறிங்க?? :) எனக்கும் சில உதவிகள் தேவைப்படுது....\\

அஹா, இதையும் நோட் பண்ணிட்டீங்களா??
கோச்சிங் இலவசம், நட்பென்னும் தட்சனையை தவிர வேறு ஏதும் எதிர்பார்பதில்லை!!!///

அட அட அடடடடடா:)

நன்றி...நட்பே... நன்றி...!

என்னிடமும் கொடுப்பதற்கு அதை தவிர வேறொன்றும் இல்லை...

தமிழன்-கறுப்பி... said...

@ திவ்யா மாஸ்டர்

\\தமிழன்... said...
ஆமா இந்தக்கதையில ரொமான்ஸ் தூக்கல்.. ஒரு வேளை கற்பனையிலிருக்கிற வாழ்க்கையின் சாயலோ..:)\\

பதிவை படிச்சா அனுபவிக்கனும்......ஆராயக்கூடாது!!!
இது என் 'வெட்டி' அண்ணா சொல்லி தந்தது!!!///

இப்படி சொன்னா விட்டுடுவமா...:)

Syam said...

நெக்ஸ்ட் போஸ்ட் வேண்டும்....நெக்ஸ்ட் போஸ்ட் வேண்டும்....உடனே நெக்ஸ்ட் போஸ்ட் வேண்டும்... :-)

எஸ்.ஆர்.மைந்தன். said...

ஒரு தேர்ந்த கதாரிசிரியரின் கதைபோல வார்த்தைகளில் கோர்வை. வயிற்றில் வளரும் சிசுவுக்கு புதியவார்த்தை கொடுத்திருக்கிறீர்கள்.

ஜி said...

//ஒரு சிறந்த கதாசிரியரின் மனமார்ந்த பாராடுக்களை என் எழுத்து பெறுகிறதில் மிக்க மகிழ்ச்சி//

Y this nakkals of America ammani???

Divya said...

\\ தமிழன்... said...
திவ்யா மாஸ்டர் சொன்னது...

\\ தமிழன்... said...
ரம்யா ரமணி பெயரை தமிழ்ள போட்டிருக்காங்க...
கோச்சிங் திவ்யா மாஸ்டராமே மாஸ்டர் ஒரு லெக்சருக்கு எவ்ளோ வாங்குறிங்க?? :) எனக்கும் சில உதவிகள் தேவைப்படுது....\\

அஹா, இதையும் நோட் பண்ணிட்டீங்களா??
கோச்சிங் இலவசம், நட்பென்னும் தட்சனையை தவிர வேறு ஏதும் எதிர்பார்பதில்லை!!!///

அட அட அடடடடடா:)

நன்றி...நட்பே... நன்றி...!

என்னிடமும் கொடுப்பதற்கு அதை தவிர வேறொன்றும் இல்லை...\\

உங்கள் நட்பிற்கு நன்றி தமிழன்!!!

Divya said...

\\ தமிழன்... said...
@ திவ்யா மாஸ்டர்

\\தமிழன்... said...
ஆமா இந்தக்கதையில ரொமான்ஸ் தூக்கல்.. ஒரு வேளை கற்பனையிலிருக்கிற வாழ்க்கையின் சாயலோ..:)\\

பதிவை படிச்சா அனுபவிக்கனும்......ஆராயக்கூடாது!!!
இது என் 'வெட்டி' அண்ணா சொல்லி தந்தது!!!///

இப்படி சொன்னா விட்டுடுவமா...:)\\

ஆராயமல் விட்டுதான் ஆகனும்:)))

Divya said...

\\ Syam said...
நெக்ஸ்ட் போஸ்ட் வேண்டும்....நெக்ஸ்ட் போஸ்ட் வேண்டும்....உடனே நெக்ஸ்ட் போஸ்ட் வேண்டும்... :-)\\

பொறுமை வேண்டும்.....பொறுமை வேண்டும்....கொஞ்சம் பொறுமை வேண்டும்....:-)

Divya said...

\\ இரா.ஜெயபிரகாஷ் said...
ஒரு தேர்ந்த கதாரிசிரியரின் கதைபோல வார்த்தைகளில் கோர்வை. வயிற்றில் வளரும் சிசுவுக்கு புதியவார்த்தை கொடுத்திருக்கிறீர்கள்.\\

வாங்க ஜெயபிரகாஷ்,

உங்கள் பாராட்டிற்கும் கருத்திற்கும் மிக்க நன்றி!!

Divya said...

\\ ஜி said...
//ஒரு சிறந்த கதாசிரியரின் மனமார்ந்த பாராடுக்களை என் எழுத்து பெறுகிறதில் மிக்க மகிழ்ச்சி//

Y this nakkals of America ammani???\\

இது நக்கல்ஸ் இல்லீங்க 'கதாசிரியரே'........
பெரிய எழுத்தாளர் நீங்க, உங்கள் பாராட்டை பெறுவது எந்தன் பாக்கியம்:)))

நாமக்கல் சிபி said...

//இது நக்கல்ஸ் இல்லீங்க 'கதாசிரியரே'........
பெரிய எழுத்தாளர் நீங்க, உங்கள் பாராட்டை பெறுவது எந்தன் பாக்கியம்:)))//

இதை ந்ஆன் வழிமொழிகிறேன்!

நாமக்கல் சிபி said...

கதையின் ஆக்கமும், வசனங்களும் கலக்கல்!

வழக்கம்போல திவ்யா டச்!

கதையா? கவிதையா?

நாமக்கல் சிபி said...

கதைல பயன்படுத்த ஏன் உங்களுக்கு எங்க படமெல்லாம் கண்ணுல பட மாட்டேங்குது!

:(

நாமக்கல் சிபி said...

/கதைல பயன்படுத்த ஏன் உங்களுக்கு எங்க படமெல்லாம் கண்ணுல பட மாட்டேங்குது!//

அபடின்னு நவீன்பிரகாஷ் கேக்கச் சொன்னார்!

நான் கேக்கலை!

நாமக்கல் சிபி said...

//கதைல பயன்படுத்த ஏன் உங்களுக்கு எங்க படமெல்லாம் கண்ணுல பட மாட்டேங்குது!//

இதை நான் கண்மூடித்தனமாக
கன்னாபின்னாவென்று வழிமொழிகிறேன்!

aanazagan said...

டியர் திவ்யா
உங்களுடைய தொடர் கதையில் காதல் ரசம் சொட்டும் கவிதை வரிகள் மிகவும் பிரமாதம். மேலும் கதைக்கு ஏற்றபடி படங்களை சேர்ப்பதில் உங்களுக்கு நிகர் நீங்களே தான்.

சிநேகிதன்.. said...

//"என்னடா செல்லம்........நான் கேட்டுட்டே இருக்கிறேனில்ல........சொல்லேன
்டா திருடா"//

//'என்னடா செல்லம்'னு நந்தினி தன் ஹஸ்கி வாய்ஸ்ல சொன்னாலே கிறங்கிப்போய்விடும் கார்த்திக்//

ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்!!!

Divya said...

\\ நாமக்கல் சிபி said...
//இது நக்கல்ஸ் இல்லீங்க 'கதாசிரியரே'........
பெரிய எழுத்தாளர் நீங்க, உங்கள் பாராட்டை பெறுவது எந்தன் பாக்கியம்:)))//

இதை ந்ஆன் வழிமொழிகிறேன்!\\

வழிமொழிந்ததிற்கு நன்றி சிபி:))

Divya said...

\\ நாமக்கல் சிபி said...
கதையின் ஆக்கமும், வசனங்களும் கலக்கல்!

வழக்கம்போல திவ்யா டச்!

கதையா? கவிதையா?\\

உங்கள் பாராட்டிற்கு என் மனமார்ந்த நன்றி நாமக்கல் சிபி!!

\கதையா? கவிதையா?\\

கதைதான்:)))

Divya said...

\\ நாமக்கல் சிபி said...
கதைல பயன்படுத்த ஏன் உங்களுக்கு எங்க படமெல்லாம் கண்ணுல பட மாட்டேங்குது!

:(\\

அட....என்ன சிபி இப்படி கேட்டுட்டீங்க, உங்க படங்களை தாங்க, அடுத்த கதைல போட்டுடலாம்:))))

Divya said...

\\ நாமக்கல் சிபி said...
/கதைல பயன்படுத்த ஏன் உங்களுக்கு எங்க படமெல்லாம் கண்ணுல பட மாட்டேங்குது!//

அபடின்னு நவீன்பிரகாஷ் கேக்கச் சொன்னார்!

நான் கேக்கலை!\\

ஓஹோ, நவீன்ப்ரகாஷ் கேட்க சொன்னாரா, ஒகே ஒகே!!

Divya said...

\\aanazagan said...
டியர் திவ்யா
உங்களுடைய தொடர் கதையில் காதல் ரசம் சொட்டும் கவிதை வரிகள் மிகவும் பிரமாதம். மேலும் கதைக்கு ஏற்றபடி படங்களை சேர்ப்பதில் உங்களுக்கு நிகர் நீங்களே தான்.\\

உங்கள் வருகைக்கும், மனமார்ந்த பாராட்டிற்கும் மிக்க நன்றி aanazagan !!!

Divya said...

\\சிநேகிதன்.. said...
//"என்னடா செல்லம்........நான் கேட்டுட்டே இருக்கிறேனில்ல........சொல்லேன
்டா திருடா"//

//'என்னடா செல்லம்'னு நந்தினி தன் ஹஸ்கி வாய்ஸ்ல சொன்னாலே கிறங்கிப்போய்விடும் கார்த்திக்//

ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்!!!\\

உங்கள் வருகைக்கும், பின்னூட்டத்திற்கும் நன்றி சிநேகிதன்!!!

Mathu said...

Very romantic.நல்லா எழுதி இருக்கீங்க. எழுத்து நடை நன்றாக உள்ளது. அடுத்த episode எப்போது? வாழ்த்துக்கள்..

Sunny said...

nice start divya.. keep going..

sunifnb

Divya said...

\\One & Only said...
Very romantic.நல்லா எழுதி இருக்கீங்க. எழுத்து நடை நன்றாக உள்ளது. அடுத்த episode எப்போது? வாழ்த்துக்கள்..\\

உங்கள் முதல் வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் மிக்க நன்றி One & Only !!!

மீண்டும் வருக:)))

Divya said...

\Sunny said...
nice start divya.. keep going..

sunifnb\\

உங்கள் முதல் வருகைக்கும் பாராட்டிற்கும் நன்றி Sunny!!

Selva Kumar said...

அடுத்த பகுதி நாளை வருமா ???

:-))

Anonymous said...

அழகான தொடக்கம்.. வாழ்த்துகள் திவ்யா

புகழன் said...

மீண்டும் ஒரு அழகான தொடர்கதை எழுதிய திவ்யாவுக்கு நன்றிகள்.

தாமதாமாக வந்துவிட்டேன்.

பிளாக் பக்கமே போகக்கூடாது; வேலைகளெல்லாம் கெட்டு விடுகிறது; என்று இருந்து விட்டதால் பதிவிடவும் இல்லை. எதையும் படிக்கவும் இல்லை.

இன்று ஒரு தடவை மட்டும் பிளாக் படிக்கலாமே என்று நினைத்ததும் முதலில் நினைவுக்கு வந்தது உங்கள் தளமே.
எதிர்பார்த்ததுபோல் புதிய பதிவு.

அதிலும் வேலைசெய்யவிடாமல் காத்திருக்க வைக்கும் தொடர்கதை.

கதை நன்றாக இருந்தது.
இதுபோன்று சஸ்பென்ஸ் வைத்து எழுதினால்தான் தினமும் ஒருமுறையாவது வந்து எட்டிப்பார்த்துவிட்டு அடுத்த பிளாக்குகளையும் படிக்கவும் என் பிளாக்கில் பதிவிடவும் முடிகிறது.

இந்தத் தொடரில் தமிழ் வார்த்தைகளும் வாக்கியத் தோரணங்களும் மிக அருமை.
உங்களுக்கேயுரிய வசன நேர்த்தி.
கவிதையான வரிகள் வர்ணனைகள் சஸ்பென்ஸ் என்று இன்னும் சொல்லிக் கொண்டே போகலாம்.

ஒவ்வொன்றையும் தனியாகக் குறிப்பிட்டு சொல்ல வேண்டுமெனில் முழுக்கதையையுமே வரிவிடாமல் மீண்டும் காப்பி பேஸ்ட் செய்ய வேண்டியதிருக்கும்.

விரைவில் அடுத்த பகுதியை எதிர்பார்த்து
புகழன்

Divya said...

\ வழிப்போக்கன் said...
அடுத்த பகுதி நாளை வருமா ???

:-))\\

Tuesday:))

Divya said...

\\ இனியவள் புனிதா said...
அழகான தொடக்கம்.. வாழ்த்துகள் திவ்யா\\

வாங்க புனிதா,

உங்கள் வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் என் மனமார்ந்த நன்றி!!

Divya said...

\\ புகழன் said...
மீண்டும் ஒரு அழகான தொடர்கதை எழுதிய திவ்யாவுக்கு நன்றிகள்.

தாமதாமாக வந்துவிட்டேன்.\\

வாங்க புகழன்!!

\\பிளாக் பக்கமே போகக்கூடாது; வேலைகளெல்லாம் கெட்டு விடுகிறது; என்று இருந்து விட்டதால் பதிவிடவும் இல்லை. எதையும் படிக்கவும் இல்லை.\\

ஏன் இப்படி ஒரு முடிவிற்கு வந்தீங்க??

\\இன்று ஒரு தடவை மட்டும் பிளாக் படிக்கலாமே என்று நினைத்ததும் முதலில் நினைவுக்கு வந்தது உங்கள் தளமே.\\\

ஆஹா,முதலின் என் ப்ளாக் நினைவிற்கு வந்ததா???........ரொம்ப நன்றி புகழன்!!

\\எதிர்பார்த்ததுபோல் புதிய பதிவு.

அதிலும் வேலைசெய்யவிடாமல் காத்திருக்க வைக்கும் தொடர்கதை.\\

வேலைகள் முடித்து ரிலாக்ஸ்டாக இருக்கும் நேரத்தில் பதிவு படிக்கலாமே புகழன்,
அப்படி தருணங்கள் கிடைப்பதில்லையோ?

\\கதை நன்றாக இருந்தது.
இதுபோன்று சஸ்பென்ஸ் வைத்து எழுதினால்தான் தினமும் ஒருமுறையாவது வந்து எட்டிப்பார்த்துவிட்டு அடுத்த பிளாக்குகளையும் படிக்கவும் என் பிளாக்கில் பதிவிடவும் முடிகிறது.\\

நேரம் கிடைக்கையில் நிச்சயம் பதிவுலக நண்பர்களின் எழுத்துக்களை படித்து உற்சாகப்படுத்துங்கள் புகழன்!!

\\இந்தத் தொடரில் தமிழ் வார்த்தைகளும் வாக்கியத் தோரணங்களும் மிக அருமை.
உங்களுக்கேயுரிய வசன நேர்த்தி.
கவிதையான வரிகள் வர்ணனைகள் சஸ்பென்ஸ் என்று இன்னும் சொல்லிக் கொண்டே போகலாம்.

ஒவ்வொன்றையும் தனியாகக் குறிப்பிட்டு சொல்ல வேண்டுமெனில் முழுக்கதையையுமே வரிவிடாமல் மீண்டும் காப்பி பேஸ்ட் செய்ய வேண்டியதிருக்கும்.

விரைவில் அடுத்த பகுதியை எதிர்பார்த்து
புகழன்\\

உங்கள் விரிவான விமர்சனத்திற்கும், பொறுமையுடன் உங்கள் கருத்துக்களை பின்னூட்டமிட்டதிற்கும் என் மனமார்ந்த நன்றிகள் பல:))

இராம்/Raam said...

கலக்கல்... :)

Divya said...

\\ இராம்/Raam said...
கலக்கல்... :)\\

நன்றி இராம்!!

கோவை விஜய் said...

அப்பா இல்லாமல் வளரும் ஆண்களின் மன இறுக்க நிலையை அழகாக படம்பிடித்து காட்டுகிறது. அடுத்து என்ன?

தி.விஜய்
http://pugaippezhai.blogspot.com

Divya said...

\\ விஜய் said...
அப்பா இல்லாமல் வளரும் ஆண்களின் மன இறுக்க நிலையை அழகாக படம்பிடித்து காட்டுகிறது. அடுத்து என்ன?

தி.விஜய்
http://pugaippezhai.blogspot.com\\

உங்கள் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி விஜய்!!

VIKNESHWARAN ADAKKALAM said...

நல்லா இருக்கு. அடுத்த பாகத்திற்கு போறேன்...

Jaathu said...

good thivjaa top starting ....
have a look at http://sukantham.blogspot.com/ when you have time