October 14, 2007

மணமகளே! மருமகளே!! வா வா....!!!திருமணம் நிச்சயக்கப்பட்டிருக்கும் பெண்ணா நீங்கள், இந்த போஸ்ட் உங்களுக்கே உங்களுக்கு தான்......

மணவாழ்ககையில் புதிதாக அடியெடுத்து வைத்திருக்கும் பெண்ணா நீங்கள், அப்போ இந்த போஸ்ட நீங்க மணப்பாடம் செய்துக்கோங்க......

திருமணம் ஆகி பல வருடம் ஆயாச்சு, மாமியோரோடு தினமும் 'குஸ்தி'யும் போட்டாச்சுன்னு யோசிக்கிறீங்களா.......கவலையே வேண்டாம், இந்த டிப்ஸ் எல்லாம் கடைபிடிக்க கத்துக்கோங்க, ஜமாய்ச்சுடலாம்!!!!

சிறந்த மருமகள் என்று பெயர் எடுக்க இதோ சில முக்கியமான டிப்ஸ்..........

1. உங்கள் மாமியாரை உங்கள் தாயை போல நேசித்து, " அம்மா" என்று அன்போடு அழையுங்கள், 'அம்மா' என்ற மூன்றெழுத்தின் ஆழமும், ஆற்றலும் அதிகம். பாசமான ஒரு நெருக்கத்தை உங்கள் மாமியாரோடு இணைக்கும் இந்த அழகு வார்த்தை.

2.உங்கள் மாமியார் அள்ளித்தரும் அறியுரைகளை அமைதியுடன் கவனியுங்கள், எதிர்மறை கருத்துக்கள் இருக்குமாயின் அவர் அறியுரை வழங்கும் நேரத்தில் அதனை எடுத்துரைத்து தர்க்கிக்காமல், பிறகொரு சந்தர்ப்பத்தில் பணிவோடு தெரிவியுங்கள்.

3.உங்கள் கணவருக்கு பிடித்தவை எவை, பிடிக்காதவை எவை என உங்களுக்குத் தெரிந்திருந்தாலும், மாமியாரிடம் கேட்டு, அவரிடிமிருந்தும் தெரிந்துக் கொள்ளுங்கள்.
தன் ஆசை மகனின் விருப்பு, வெறுப்புகளை பட்டியலிடுவதில் தாய்மார்களுக்கு ஒரு அலாதி பிரியம்.

4.உங்கள் கணவரின் சிறு வயது குறும்புகள், சாதனைகள், மறக்க முடியாத சுவாரிஸியமான சம்பவங்கள் போன்றவற்றை, மாமியாரிடம் கேளுங்கள்.
சுவைக்க சுவைக்க 'மலரும் நினைவுகளை' பகிர்ந்துக் கொள்வார்கள். மாமியாரோடு உறவாட இது உதவிப் புரியும்.

5.குடும்பமாக வெளியில் செல்லும்போது, மாமியோரோடு சேர்ந்து நடக்கலாம். இது அவருக்கு உற்ச்சாகத்தையும், உங்கள் மீது நல்லெண்ணத்தையும் உருவாக்கும்.

6.குடும்ப விஷயங்களை விவாதிக்கும் போது, அவர் கருத்துக்களை கவனித்துக் கேளுங்கள். அவருக்கு நீங்கள் தரும் முக்கியத்துவம் உங்களை அவர் மனதில் சிங்காசனம் போட்டு உட்கார வைக்கும்.

7.மாமியாருக்கு பிடித்த உணவினை அவருக்கு அவ்வப்போது சமைத்துக் கொடுக்க மறவாதிருங்கள். அவர் சமைத்தால், சமயலை மனதார புகழுங்கள், சமயல் டிப்ஸ் கேட்டு தெரிந்துக் கொள்ள முயற்ச்சித்தால் உங்கள் மாமியார் உங்கள் அன்பில் திக்கு முக்காடி போவார்.

8.எல்லா அம்மாக்களுக்கும் தன் பையன் தனக்கு மட்டுமே சொந்தம் [ possesivness] என்ற உணர்வு அதிகம் இருக்கும், அதுவும் அவனின் வாழ்க்கையை பகிர்ந்துக் கொள்ள இன்னொரு பெண் இருக்கிறாள் என்ற எண்ணம், அந்த உணர்வை அதிகப்படுத்தும்.
இதனை மனதில் கொள்வது ஒரு மருமகளுக்கு மிக மிக முக்கியம். மாமியாரின் இந்த இயற்கையான உணர்வை மதித்து, புரிந்து நடந்துக் கொண்டால் நீங்கள் தான் மாமியார் மெச்சும் மருமகள்.

என் தோழிகள் பலர் மணவாழ்க்கையில் அடியெடுத்து வைக்க போவதாலும், சிலர் அடியெடுத்து வைத்துவிட்டு மாமியாரை எப்படி வசியப்படுத்துவது என தெரியாமல் 'பேந்த பேந்த' விழிப்பதாலும், மாமியாரான சில அம்மாக்களிடம் அவர்கள் கருத்துக்களை அறிந்து , அராய்ந்து தெரிந்துக் கொண்ட சில டிப்ஸ் தான் மேற் சொன்னவை,
இன்னும் குறிப்புகளை உங்கள் அனுபவத்தில் அறிந்திருந்தால், பின்னூட்டத்தில் பகிர்ந்துக் கொள்ளவும்.
[திருமணம் ஆன ஆண்கள், தங்கள் மனைவிக்கு இந்த டிப்ஸை சொல்லிக் கொடுத்து, உங்கள் அன்னைக்கும்-தங்கமணிக்கும் நடுவில் உங்கள் தலை உருளுவதை தவிர்க்கலாம்]

58 comments:

Anonymous said...

ஆஹா திவ்யா வந்தாச்சு :))

வந்தவுடனே நல்ல டிப்ஸா அள்ளி கொடுக்கிறீங்க.

//திருமணம் நிச்சயக்கப்பட்டிருக்கும் பெண்ணா நீங்கள்//

நான் இல்லை.இருந்தாலும் future க்கு use ஆகும்

மீண்டும் கலக்க வந்து இருக்கீங்க.வாழ்த்துக்கள்

said...

\"துர்கா|thurgah said...
ஆஹா திவ்யா வந்தாச்சு :))

வந்தவுடனே நல்ல டிப்ஸா அள்ளி கொடுக்கிறீங்க.

//திருமணம் நிச்சயக்கப்பட்டிருக்கும் பெண்ணா நீங்கள்//

நான் இல்லை.இருந்தாலும் future க்கு use ஆகும்

மீண்டும் கலக்க வந்து இருக்கீங்க.வாழ்த்துக்கள்\

துர்கா, உங்கள் வருகைக்கும், வாழ்த்துக்களுக்கும் நன்றி!

உங்களை மாதிரியான என் நண்பிகளின் வேண்டுகோளுக்கினங்கி எழுதியது தான் இந்த பதிவு,
நீங்க முதல் பின்னூட்டமிட்டது எனக்கு மிகுந்த சந்தோஷம்.

said...

welcome back divya... :)

said...

நோட் பண்ணி வெச்சுக்கறேன்.பியூச்சர்ல எனக்கும் யூஸ் ஆகும்,

said...

அப்பாடா!!!!!

தலைகாணி மந்திரம் எப்படி போடுவது என எதாவது சொல்லியிருந்தா படிச்சி தப்பிச்சிக்கலாம்னு வந்தேன் அதுக்கான அவசியம் ஏற்படலை.

said...

//
நீங்க முதல் பின்னூட்டமிட்டது எனக்கு மிகுந்த சந்தோஷம்.
//
இந்த ரெண்டாவது மூணாவது பின்னூட்டத்துக்கும் ரொம்ப சந்தோசப்படுங்க (கொஞ்சூண்டு குறைஞ்சா பரவாயில்லை)

said...

வாக்க வாங்க.. இவ்வளவு நாள் ப்ரேக் எடுத்தாலும். திரும்பி வந்துட்டிங்க.:-) வந்ட்து அடுத்த ரவுண்ட் கலக்குங்க. அட்வான்ஸ் வாழ்த்துக்கள் திவ்யா. :-)

said...

நல்ல அருமையான தகவல்.. ஆனால்,எங்கேயோ படித்த மாதிரியே இருக்கே? :-)

said...

hello
Enge poiteenga... ivalavu naala???
thirumbi vanthathuku vaazhthukal..idu pondra niraya arivuraigal eduthu veesa vaazhthukal.. enaku mamiyare illaye naan enna panrathu??

said...

ஹாய் திவ்யா,

இவ்வளவு நாளா எங்க கானாம போனீங்க?
இப்போ திரும்பி வந்ததும் கல்யாண டிப்ஸ், அதுவும் மாமியாரை கைக்குள்
போட்டுக் கொள்வது எப்படி? னு

said...

ஆஹா..வாங்க திவ்யா..எம்புட்டு நாள் ஆச்சு..வாழ்த்துக்கள் ;)))

said...

\\மாமியாரான சில அம்மாக்களிடம் அவர்கள் கருத்துக்களை அறிந்து , அராய்ந்து தெரிந்துக் கொண்ட சில டிப்ஸ் தான் மேற் சொன்னவை,\\

ம்...நல்ல தகவல்கள் தான்..;)

அந்த படத்தில் வெள்ளை நிற புடவை கட்டியிருக்காங்களே அது யாருன்னு தெரியுமா?

said...

திவ்யா திரும்ப வந்துட்டீங்களா?? :)) வருக வருக !!!

ஆமா எப்படீங்க இப்படி எல்லாம் டிப்ஸ் அள்ளிதெளிக்கறீங்க ?? :)))

said...

வருக வருக... :))

'நீயே வரட்டான்னு கேட்டுக்கிட்டு இருக்க.. இதுல மத்தவங்கள வரவேற்கிறியா?'ன்னு கேக்குறீங்களா?? அரசியல்னா இதெல்லாம் சாதரணமா எடுத்துக்கனும்...

ஒரே நாளுல ஸ்டார்ட் பண்ணிருக்கோம்.. ஆல் த பெஸ்ட்... லவ் ஸ்டோரிஸ ஸ்டார்ட் பண்ணுங்க சீக்கிரம்... :))

said...

Welcome Back...

வழக்கம் போல் அருமையான டிப்ஸ்கள் :-)

said...

Welcome Back Sister...

வழக்கமான டிப்ஸ்களுடன் வந்தாச்சா?

எல்லாம் அருமையான் டிப்ஸ்தான்... தேவையானவங்களுக்கு சொல்றேன் ;)

said...

மீள் நல்வரவு திவ்யா!
துவக்கமே துலக்கமாக வந்திருக்கீங்க!

//'அம்மா' என்ற மூன்றெழுத்தின் ஆழமும், ஆற்றலும் அதிகம்//

மிகவும் எதார்த்தமான எளிமையான சொல். ஆனா அவ்வளவு சக்தி இந்தச் சொல்லுக்கு! - நெருங்கிய நண்பர்களின் தாய் தந்தையரையே இப்படிச் சொல்லிக் கூப்பிடுகிறோம். கணவரை ஈன்றவரை இப்படி அழைப்பது எவ்வளவு பொருத்தம்!

Happiest Things in Life are Simplest! - அதில் இதுவும் ஒன்று!

//மாமியாரின் இந்த இயற்கையான உணர்வை மதித்து, புரிந்து நடந்துக் கொண்டால் நீங்கள் தான் மாமியார் மெச்சும் மருமகள்//

மாமியார் மெச்சும் மருமகள் மட்டுமா?
கணவன் மெச்சும் மனைவி!
நாளையே குழந்தைகள் மெச்சும் தாய்!

இன்னும் கொஞ்ச நாளில், இவளுக்குக் குழந்தை வந்த பின், இவளுக்கு வரப் போகும் மருமகளை கற்பனையில் கொஞ்சம் எண்ணிப் பார்த்து விட்டால், சட்டுனு புரிஞ்சிடும், இல்லையா திவ்யா? :-)

said...

சரி சரி
அடுத்து மணமகனே! மருமகனே!! வா வா....ன்னும் போடுங்க.
புது மாப்பிள்ளைக்கு உபயோகமா இருக்கும்! (யாரைச் சொல்லறேன்னு தெரிஞ்சிருக்குமே!!! :-)))

said...

\"இராம்/Raam said...
welcome back divya... :)\"

Thanks a lot Raam,
Its all bcos of encouragement from friends like you, I came back to blogging!

said...

\"நிலா said...
நோட் பண்ணி வெச்சுக்கறேன்.பியூச்சர்ல எனக்கும் யூஸ் ஆகும்\

நிலா தங்கள் வருகைக்கு நன்றி,

பியூச்சரில் இந்த குறிப்புகள் உங்களுக்கு பயனளித்தால் , எனக்கு கட்டாயம் தெரியப்படுத்துங்கள், கொஞ்சம் சந்தோஷபட்டுக் கொள்வேன்.

said...

\"மங்களூர் சிவா said...
அப்பாடா!!!!!

தலைகாணி மந்திரம் எப்படி போடுவது என எதாவது சொல்லியிருந்தா படிச்சி தப்பிச்சிக்கலாம்னு வந்தேன் அதுக்கான அவசியம் ஏற்படலை.\"

சிவா தங்கள் வருகைக்கு நன்றி.

தலைகானி மந்திரமா????
அடுத்த பதிவிற்கு ஒரு தலைப்பு கண்டுபுடிச்சு கொடுத்துட்டீங்க சிவா!!!

said...

\"மங்களூர் சிவா said...
//
நீங்க முதல் பின்னூட்டமிட்டது எனக்கு மிகுந்த சந்தோஷம்.
//
இந்த ரெண்டாவது மூணாவது பின்னூட்டத்துக்கும் ரொம்ப சந்தோசப்படுங்க (கொஞ்சூண்டு குறைஞ்சா பரவாயில்லை)\

சிவா, உங்க பின்னூட்டம் முதல் பின்னூட்டமாக இல்லாவிடினும்,
எனக்கு மிகுந்த சந்தோஷம் தந்தது!! நன்றி சிவா!

said...

\".:: மை ஃபிரண்ட் ::. said...
வாக்க வாங்க.. இவ்வளவு நாள் ப்ரேக் எடுத்தாலும். திரும்பி வந்துட்டிங்க.:-) வந்ட்து அடுத்த ரவுண்ட் கலக்குங்க. அட்வான்ஸ் வாழ்த்துக்கள் திவ்யா. :-)\

வருகைக்கும், வாழ்த்துக்களுக்கும் நன்றி மை டியர் ஃபிரண்ட்!!

said...

\".:: மை ஃபிரண்ட் ::. said...
நல்ல அருமையான தகவல்.. ஆனால்,எங்கேயோ படித்த மாதிரியே இருக்கே? :-)\

அப்படியா??

said...

\"dubukudisciple said...
hello
Enge poiteenga... ivalavu naala???
thirumbi vanthathuku vaazhthukal..idu pondra niraya arivuraigal eduthu veesa vaazhthukal.. enaku mamiyare illaye naan enna panrathu??\

வருகைக்கும் பாராட்டுக்களுக்கும் நன்றி டுபுக்கு டிஸைப்பிள்,

சில எதிர்பாராத நிகழ்வுகளால் தொடர்ந்து பதிவிட இயலாமல் போனது.

உங்களுக்கு மாமியார் இல்லையென்றால், மாமியார் உள்ள உங்கள் தோழிகளுக்கு இந்த டிப்ஸ் கொடுக்கலாமே நீங்கள்!!

said...

\"Sumathi. said...
ஹாய் திவ்யா,

இவ்வளவு நாளா எங்க கானாம போனீங்க?
இப்போ திரும்பி வந்ததும் கல்யாண டிப்ஸ், அதுவும் மாமியாரை கைக்குள்
போட்டுக் கொள்வது எப்படி? னு\

ஹாய் சுமதி,
வருகைக்கு நன்றி,

சுமதி,சில எதிர்பாராத நிகழ்வுகளால் தொடர்ந்து பதிவிட இயலாமல் போனது.

இந்த பதிவிற்கான காரணம் பதிவிலேயே சொல்லியிருக்கிறேன் சுமதி,

said...

\"கோபிநாத் said...
ஆஹா..வாங்க திவ்யா..எம்புட்டு நாள் ஆச்சு..வாழ்த்துக்கள் ;)))\/

நன்றி கோபி,
எம்புட்டு நாள் ஆச்சு நான் பதிவு போட்டு உங்ககிட்ட பின்னூட்டம் வாங்கி!!

said...

\"கோபிநாத் said...
\\மாமியாரான சில அம்மாக்களிடம் அவர்கள் கருத்துக்களை அறிந்து , அராய்ந்து தெரிந்துக் கொண்ட சில டிப்ஸ் தான் மேற் சொன்னவை,\\

ம்...நல்ல தகவல்கள் தான்..;)

அந்த படத்தில் வெள்ளை நிற புடவை கட்டியிருக்காங்களே அது யாருன்னு தெரியுமா?\"

எனக்கு தெரியாது கோபிநாத், உங்களுக்கு தெரிந்திருந்தால் சொல்லுங்களேன்!!
தெரிந்துக்கொள்கிறேன்.

said...

\"நவீன் ப்ரகாஷ் said...
திவ்யா திரும்ப வந்துட்டீங்களா?? :)) வருக வருக !!!

ஆமா எப்படீங்க இப்படி எல்லாம் டிப்ஸ் அள்ளிதெளிக்கறீங்க ?? :)))\

நன்றி நவீன் ப்ரகாஷ்,
வரவேற்பெல்லாம் பலமா இருக்குதுங்க!

said...

\"வெட்டிப்பயல் said...
Welcome Back Sister...

வழக்கமான டிப்ஸ்களுடன் வந்தாச்சா?

எல்லாம் அருமையான் டிப்ஸ்தான்... தேவையானவங்களுக்கு சொல்றேன் ;)\

ஹாய் அண்ணா!
டிப்ஸ் எல்லாம் 'தேவையானவங்கள' மனசுல வைச்சு எழுதினது , கண்டிப்பா சொல்லிடுங்க.

வருகைக்கு நன்றி வெட்டி!!!

said...

\"kannabiran, RAVI SHANKAR (KRS) said...
மீள் நல்வரவு திவ்யா!
துவக்கமே துலக்கமாக வந்திருக்கீங்க!

//'அம்மா' என்ற மூன்றெழுத்தின் ஆழமும், ஆற்றலும் அதிகம்//

மிகவும் எதார்த்தமான எளிமையான சொல். ஆனா அவ்வளவு சக்தி இந்தச் சொல்லுக்கு! - நெருங்கிய நண்பர்களின் தாய் தந்தையரையே இப்படிச் சொல்லிக் கூப்பிடுகிறோம். கணவரை ஈன்றவரை இப்படி அழைப்பது எவ்வளவு பொருத்தம்!

Happiest Things in Life are Simplest! - அதில் இதுவும் ஒன்று!

//மாமியாரின் இந்த இயற்கையான உணர்வை மதித்து, புரிந்து நடந்துக் கொண்டால் நீங்கள் தான் மாமியார் மெச்சும் மருமகள்//

மாமியார் மெச்சும் மருமகள் மட்டுமா?
கணவன் மெச்சும் மனைவி!
நாளையே குழந்தைகள் மெச்சும் தாய்!ரவி ஷங்கர், உங்கள் பின்னூட்டம் 'அம்மா' என்ற அருமையான வார்த்தையின் ஆழத்தை இன்னும் அதிகமாக எனக்கு உணர்த்தியது.

\இன்னும் கொஞ்ச நாளில், இவளுக்குக் குழந்தை வந்த பின், இவளுக்கு வரப் போகும் மருமகளை கற்பனையில் கொஞ்சம் எண்ணிப் பார்த்து விட்டால், சட்டுனு புரிஞ்சிடும், இல்லையா திவ்யா? :-)\'

ஆஹா, அருமையான கற்பனை, சத்தியமா சட்டுனுமட்டிமில்ல, தெளிவாகவும் புரிஞ்சிடும் ரவி!!

வருகைக்கும், பின்னூட்டத்திற்க்கும் மிக நன்றி!!

said...

\"kannabiran, RAVI SHANKAR (KRS) said...
சரி சரி
அடுத்து மணமகனே! மருமகனே!! வா வா....ன்னும் போடுங்க.
புது மாப்பிள்ளைக்கு உபயோகமா இருக்கும்! (யாரைச் சொல்லறேன்னு தெரிஞ்சிருக்குமே!!! :-)))\

தெளிவா புரியுது நீங்க சொல்றீங்கன்னு,
அந்த தலைப்பில் போஸ்ட் பொடுட்டா போச்சு!!

said...

\\Divya said...
\"கோபிநாத் said...
\\மாமியாரான சில அம்மாக்களிடம் அவர்கள் கருத்துக்களை அறிந்து , அராய்ந்து தெரிந்துக் கொண்ட சில டிப்ஸ் தான் மேற் சொன்னவை,\\

ம்...நல்ல தகவல்கள் தான்..;)

அந்த படத்தில் வெள்ளை நிற புடவை கட்டியிருக்காங்களே அது யாருன்னு தெரியுமா?\"

எனக்கு தெரியாது கோபிநாத், உங்களுக்கு தெரிந்திருந்தால் சொல்லுங்களேன்!!
தெரிந்துக்கொள்கிறேன்\\

நடிகர் பிரித்திவிராஜ்யோட அம்மா ;)

said...

//கோபிநாத் said...

அந்த படத்தில் வெள்ளை நிற புடவை கட்டியிருக்காங்களே அது யாருன்னு தெரியுமா?\"

எனக்கு தெரியாது கோபிநாத், உங்களுக்கு தெரிந்திருந்தால் சொல்லுங்களேன்!!
தெரிந்துக்கொள்கிறேன்\\

நடிகர் பிரித்திவிராஜ்யோட அம்மா ;) //

ஆங். அண்ணா.. இதெல்லாம் மட்டும் கரேக்ட்டா சொல்லுங்க. ஒரு பதிவு போட சொன்னால் மட்டும் ஆள் எஸ்கேப் ஆகிடுவிங்க நீங்க. :-)))))

said...

\"ஜி said...
வருக வருக... :))

'நீயே வரட்டான்னு கேட்டுக்கிட்டு இருக்க.. இதுல மத்தவங்கள வரவேற்கிறியா?'ன்னு கேக்குறீங்களா?? அரசியல்னா இதெல்லாம் சாதரணமா எடுத்துக்கனும்...

ஒரே நாளுல ஸ்டார்ட் பண்ணிருக்கோம்.. ஆல் த பெஸ்ட்... லவ் ஸ்டோரிஸ ஸ்டார்ட் பண்ணுங்க சீக்கிரம்... :))\'

ஜி, ஒரே நாள்ல ஸ்டார்ட் பண்ணின ராசி எப்படி இருக்குதுன்னு பார்க்கலாம்!
வருகைக்கு நன்றி ஜி!!

[ என்ன ஜி குறிப்பா லவ் ஸ்டோரிஸ் ன்னு கேட்க்கிறீங்க.......ஏதும் விசேஷமா???]

said...

\"கோபிநாத் said...
\\Divya said...
\"கோபிநாத் said...
\\மாமியாரான சில அம்மாக்களிடம் அவர்கள் கருத்துக்களை அறிந்து , அராய்ந்து தெரிந்துக் கொண்ட சில டிப்ஸ் தான் மேற் சொன்னவை,\\

ம்...நல்ல தகவல்கள் தான்..;)

அந்த படத்தில் வெள்ளை நிற புடவை கட்டியிருக்காங்களே அது யாருன்னு தெரியுமா?\"

எனக்கு தெரியாது கோபிநாத், உங்களுக்கு தெரிந்திருந்தால் சொல்லுங்களேன்!!
தெரிந்துக்கொள்கிறேன்\\

நடிகர் பிரித்திவிராஜ்யோட அம்மா ;)/

கோபிநாத், அந்த அம்மா ப்ரித்திவிராஜோட அம்மா வா??
தகவலுக்கு நன்றி கோபிநாத்.

said...

//ஆஹா திவ்யா வந்தாச்சு!//

ரிப்பீட்டேய்!

நல்ல டிப்ஸ்தான்! கலக்குங்க!

said...

திருமணம் நிச்சயிக்கப்பட்ட பெண்களுக்கான புதிய பதிவை எழுதியுள்ளீர்கள். தொடர்ந்து எழ்துங்கள்.

said...

enga poiteenga ivalo naala? mail/orkut/blog edhukkume response illa :(

ippo vandadhula sandosham :)

ennama tips kudukkuraangappa :P

said...

Divya, Welcome back :) We missed u all these months..

said...

எனக்காகவே போட்ட மாதிரி இருக்கே போஸ்ட் :) எனக்கு email வேற அனுப்பி சொன்னதுக்கு double thanks..

இருந்த கொஞ்ச நாள்ல முடிஞ்ச அளவு மாமியார impress பண்ண try பண்ணினேன்.. போக போக தான் தெரியும்..

said...

// தங்கள் மனைவிக்கு இந்த டிப்ஸை சொல்லிக் கொடுத்து, உங்கள் அன்னைக்கும்-.........( பேரு இன்னும் முடிவாகாத தால]-க்கும் நடுவில் உங்கள் தலை உருளுவதை தவிர்க்கலாம்] ///

ஜய்யோ..ஜய்யோ..இத இத..இதத்தான் நா தேடிக்கினுருந்தேன்.எதிர்காலத்துல எனக்கும் உதவுமே..
ஆனா இத " செயல்ல " காட்டுர பொண்ணு யாருனா ( இன்னும் கல்யாணமாகாமல் இருப்பது ரொம்ப முக்கியம்) இருந்தாக்கா ,கொஞ்சம் சொல்லுங்களேன்.

said...

ஆங்... ஒரு விசயம் சொல்ல மறந்துட்டேன்.திவ்யா வுக்கு நிச்சயமா "புரோக்கர்"கமிஷன் உண்டு.

said...

ஏனுங்க திவ்யா..வந்து ஒரு வாரம் ஆச்சி,ஒரு வேளை ,திரும்பவும் வனவாசம் போயிட்டிங்களோ?.இன்னும் புது பதிவே போடலியே...அப்ப நாங்களாம் எப்ப எல்லா டிப்ஸ்-ஜயும் கத்துகிறது?.தோழியே கடைசி சமயத்துல எங்கள கை விட்டுடாதிங்க...தொடர்ந்து கல்யாண பதிவுகள போட்டு தாக்குங்க.. எங்க ஆதரவு உங்களுக்கு எப்பவும் உண்டு
அன்புடன் நண்பன் - ரசிகன்.

said...

ஐ...எங்க மிஸ் க்கு உதவும்... அப்பாடா நாளைக்கு HomeWork பண்ண வேண்டியதில்லை...

Anonymous said...

பொண்டாட்டிய கவர்வது எப்படினு சொல்லி தர முடியுமா?

said...

\"நாமக்கல் சிபி said...
//ஆஹா திவ்யா வந்தாச்சு!//

ரிப்பீட்டேய்!

நல்ல டிப்ஸ்தான்! கலக்குங்க!\"

சிபி உங்கள் வருகைக்கும், ஊக்கத்திற்க்கும் நன்றி!

said...

\"இரா.ஜெயபிரகாஷ் said...
திருமணம் நிச்சயிக்கப்பட்ட பெண்களுக்கான புதிய பதிவை எழுதியுள்ளீர்கள். தொடர்ந்து எழ்துங்கள்.\"

ஜெயபிரகாஷ், உங்கள் அன்பு வேண்டுகோளுக்கினங்க மீண்டும் பதிவிட ஆரம்பித்திருக்கிறேன்,
உங்கள் வருக்கைக்கும் , தருகைக்கும் நன்றி.

said...

\"Arunkumar said...
enga poiteenga ivalo naala? mail/orkut/blog edhukkume response illa :(

ippo vandadhula sandosham :)

ennama tips kudukkuraangappa :P\

அருண், என் பதிவையும் என்னையும் மிஸ் பண்ணின உங்கள் அன்பு என்னை நெகிழ வைத்தது, நன்றி நண்பனே!

said...

\"Priya said...
Divya, Welcome back :) We missed u all these months..\"

நன்றி ப்ரியா!

said...

"Priya said...
எனக்காகவே போட்ட மாதிரி இருக்கே போஸ்ட் :) எனக்கு email வேற அனுப்பி சொன்னதுக்கு double thanks..

இருந்த கொஞ்ச நாள்ல முடிஞ்ச அளவு மாமியார impress பண்ண try பண்ணினேன்.. போக போக தான் தெரியும்..\"

உங்களுக்காவே போட்ட போஸ்ட் தான் ப்ரியா, அதான் ஸ்பெஷலா இ-மெயில் பண்ணினேன் உங்களுக்கு.

said...

\"ரசிகன் said...
// தங்கள் மனைவிக்கு இந்த டிப்ஸை சொல்லிக் கொடுத்து, உங்கள் அன்னைக்கும்-.........( பேரு இன்னும் முடிவாகாத தால]-க்கும் நடுவில் உங்கள் தலை உருளுவதை தவிர்க்கலாம்] ///

ஜய்யோ..ஜய்யோ..இத இத..இதத்தான் நா தேடிக்கினுருந்தேன்.எதிர்காலத்துல எனக்கும் உதவுமே..
ஆனா இத " செயல்ல " காட்டுர பொண்ணு யாருனா ( இன்னும் கல்யாணமாகாமல் இருப்பது ரொம்ப முக்கியம்) இருந்தாக்கா ,கொஞ்சம் சொல்லுங்களேன்.\"

ரசிகன் உங்கள் வருக்கைக்கு நன்றி!

said...

\"ரசிகன் said...
ஆங்... ஒரு விசயம் சொல்ல மறந்துட்டேன்.திவ்யா வுக்கு நிச்சயமா "புரோக்கர்"கமிஷன் உண்டு.|

என்னங்க ரசிகன், நான் 'திருமண தகவல் நிலையம்' நடத்துறேன்னு யாரும் தவறா தகவல் கொடுத்தாங்களா உங்ககிட்ட?? கல்யாண தரகராக்கிட்டீங்க என்னை!!!

said...

\"ரசிகன் said...
ஏனுங்க திவ்யா..வந்து ஒரு வாரம் ஆச்சி,ஒரு வேளை ,திரும்பவும் வனவாசம் போயிட்டிங்களோ?.இன்னும் புது பதிவே போடலியே...அப்ப நாங்களாம் எப்ப எல்லா டிப்ஸ்-ஜயும் கத்துகிறது?.தோழியே கடைசி சமயத்துல எங்கள கை விட்டுடாதிங்க...தொடர்ந்து கல்யாண பதிவுகள போட்டு தாக்குங்க.. எங்க ஆதரவு உங்களுக்கு எப்பவும் உண்டு
அன்புடன் நண்பன் - ரசிகன்.\

ரசிகன், என்னோட எக்ஸாம்ஸ் முடிந்ததும் அடுத்த போஸ்ட் இந்த வாரம் போடுறேன்,

உங்க வலைபதிவுக்குள்ள வரவே முடியலீங்க, என்ன ப்ராப்ளம்???

said...

Ushoooo
so many days. eppadi erukinga. romba nalla atchu no posts,no mails. good tosee u back. post innu padikkala. parthu solluran

said...

\Adiya said...
Ushoooo
so many days. eppadi erukinga. romba nalla atchu no posts,no mails. good tosee u back. post innu padikkala. parthu solluran\

Hai Adiya,
thanks for the mesg,
will mail u in detail soon.

Anonymous said...

hai akka,
na intha blog'ku new entry unga comments'laam padichaen.really intersting.akka come on keep going wit ur advices.engala mathri teenage ponnuku ungal advices theavai.SO KALLAKUNGA VAZTHUKAL