October 30, 2007

பெண் பார்க்க போலாமா??? - பகுதி 2










குமார்: எப்படி பேச்சை முதலில் ஆரம்பிப்பது என்று சொல்லு திவ்யா.


திவ்யா:முதல் எடுத்தவுடனே " என்னை உங்களுக்கு பிடிச்சிருக்கா?" அப்படின்னு அசட்டுத்தனமான கேள்வியெல்லாம் கேட்க கூடாது.
அப்படி நீ கேட்டு அதுக்கு அந்த பொண்ணு " ஆமாம்" என்று பதில் சொன்னா,

' வெளித்தோற்றம்' 'பெற்றோரின் வலியுறுத்தல்' காரணமா இருக்கலாம்.
"இல்லை" ன்னு பதில் சொன்னா,.............


குமார்: சரி , சரி.......போதும், இந்த கேள்வி நான் ஃபர்ஸ்ட் கேட்க மாட்டேன். வேற என்ன பேசுறதுன்னு சொல்லு.


திவ்யா: "உங்க 'saree' ரொம்ப அழகா , உங்களுக்கு பொறுத்தமா இருக்கு, உங்க செலக்க்ஷனா?"அப்படின்னு கேளு,
" ஆமாம்" ன்னு அவ பதில் சொன்னா, பொண்ணு சுயமா சிந்திக்கிறான்னு அர்த்தம்.
" இல்லை, என் அம்மா வாங்கித்தந்தாங்க"ன்னு சொன்னா, அம்மா பேச்சுக்கு 'உம்' கொட்டுற பொண்ணுன்னு புரிஞ்சுக்கலாம்.


குமார்: சரி அவ சுயசிந்தனை திறன் தெரிஞ்சாச்சு, அடுத்து.......


திவ்யா: அப்புறம் அவளோட ஆம்பிஷன்[ வாழ்க்கையில் லட்சியம், குறிக்கோள்] ஏதாவது இருக்கான்னு கேளு.
" ஆமாம்" ன்னு ஏதாவது ஒரு லட்ச்சியம் சொன்னா, அவளுக்கு வாழ்க்கையில் ஒரு பிடிப்பு இருக்குன்னு புரிஞ்சுக்கோ.
" அப்படி ஏதும் குறிப்பா குறிக்கோள் இல்லீங்க" ன்னு பதில் சொன்னா, ஏதோ பிறந்தோம், வளர்ந்தோம், வீட்டுல மாப்பிள்ளை பார்ட்த்துக் கட்டி வைக்கிறாங்கன்னு வாழ்க்கையை அதன் வழியில் ஏத்துக்கிற டைப்புன்னு அர்த்தம்.


குமார்: அடுத்து என்ன கேட்கலாம்?


திவ்யா: இது என்ன கேள்வி பதில் நேரமா? நீ மட்டும் தான் கேட்டுக்கிட்டேயிருப்பியா? அவளுக்கும் பேச சான்ஸ் கொடு, " உங்களுக்கு என் கிட்ட ஏதும் கேட்கனுமா?" ன்னு கேட்டுப் பாரு.


குமார்: அந்த பொண்ணு ஏதுவுமே பேசாம தலை குனிஞ்சுட்டேயிருந்துட்டான்னா??


திவ்யா:அப்படி அவ இருந்துட்டா, உன்னை பார்க்க கூட பிடிக்கலீன்னு அர்த்தம்.


குமார்: கிண்டல் அடிக்காம சொல்லு திவ்யா.


திவ்யா: அவ பேசலைன்னா, ஒன்னு ரொம்ப அடக்க ஒடுக்கமா நடிக்கிறான்னு அர்த்தம்,
இல்லீனா உண்மையிலேயே ரொம்ப வெட்கபடுகிற, ஆண்கள் கிட்ட பேச கூச்சப்படுகிற சுபாவமாயிருக்கலாம்.
அது நீ தான் கண்டுப்பிடிக்கனும்.


குமார்: அட இது வேற இருக்கா. சரி பதிலுக்கு அந்த பொண்ணு என்னை கேள்வி கேட்க ஆரம்பிச்சா?


திவ்யா: வெல் அண்ட் குட்! அவ பேசினா இன்னும் அதிகம் அவளை பற்றி தெரிஞ்சுக்கலாம் சுலபமா.
நீ கேட்ட அதே கேள்விகளை அவ திருப்பிக் கேட்டா, ஏதோ கேள்வி கேட்கனுமேன்னு கேட்கிறா.
அவளே ஏதாவது கேட்டா, உன்னை பற்றி தெரிஞ்சுக்க நினைக்கிறான்னு அர்த்தம்.


குமார்: அப்படி என்ன தான் பொண்ணுங்க கேட்பாங்க?


திவ்யா: அது பெண்ணுக்கு பெண் வேறுபடும், ஆனால், அந்த பொண்ணு " நீங்க எந்த ஊர்ல வேலை பார்க்குறீங்க, எந்த ஸ்கூல்ல படிச்சீங்க?" என்று ஒப்புக்கு கேள்வி கேட்டா, உன்னை பற்றி எதுவுமே தன் பெற்றோரிடம் கேட்டு தெரிந்துக் கொள்ளாமல், அவர்கள் விருப்பத்திற்காக இந்த பெண் பார்க்கும் சம்பவத்தில் பங்கு வகிக்கிறாள் , இல்லையென்றால் இந்த திருமண விஷயத்தில் அவளுக்கு ஈடுபாடு இல்லாததும் காரணமாக இருக்கலாம்.


குமார்: சரி , சமைக்க தெரியுமா ன்னு கேட்டுடலாமா?


திவ்யா: நீ உன் காரியத்திலேயே கண்ணாயிரு.
அப்படி டைரக்ட்டா கேட்காதே.


அவளொட ஃபேவரைட் ஃபுட் என்னன்னு கேளு, அவ ஏதாச்சும் ஒரு ஃபுட் பேரு சொல்லும் போது அவ முகத்தில் ஒரு பூரிப்பு இருந்தா, சமைக்க தெரியவில்லைன கூட , சுவையுணர்வு இருக்கிறதால சமைக்க கற்றுக் கொள்ளும் ஆர்வம் இருக்கலாம்.
வீட்டு சாப்பாடு பிடிக்குமா, இல்லை வெளில சாப்பிட பிடிக்குமா ன்னு வேணா இன்னொரு கேள்வி கேட்டு, அவ சமையல் திறனை புரிஞ்சுக்கோ.


குமார்: இவ்வளவு கேள்வி கேட்டாவே ஒரளவுக்கு அந்த பொண்ணை புரிஞ்சுக்க முடியுமா?


திவ்யா: ஹும், புரிஞ்சுக்கிறது உன் திறமை. வேணா இன்னும் ஒரே ஒரு டிப்ஸ் தரேன்,


" உங்க வீடு ரொம்ப அழகா , நீட் அண்ட் ப்ரைட்டா இருக்கு, நீங்க தான் இப்படி மெயிண்டேன் பண்றதா? நல்ல ரசனை உங்களுக்கு" அப்படின்னு சும்மா போட்டுப் பாரு,


அவ கொஞ்சம் அதிர்ச்சி ஆகி, 'பே பே' ன்னு முழிச்சா..........பெண் பார்க்க வர்ரதால தான் அவ வீட்டில் உள்ளவங்க வீட்டை இவ்வளவு நீட்டாக்கிருக்காங்க, மத்தப்படி அவளுக்கும் இதுக்கும் சம்பதேமே இல்லைன்னு அர்த்தம்.


" ரொம்ப தாங்க்ஸ்ங்க உங்க காம்பிளிமெண்ட்ஸ்க்கு, இந்த பெயிண்டிங் வொர்க் , ஆர்ட் வொர்க் எல்லாம் நானே பண்ணினது " அப்படின்னு ஆர்வமா அவ தன் கைத்திறனை காட்டினா.......
ரொம்ப பொறுப்புள்ள, கலை ரசனையுள்ள , வீட்டை சுத்தமாக பராமரிக்கும் திறனுள்ள பொண்ணுன்னு புரிஞ்சுக்கலாம்.
வீட்டை அழகா, நேர்த்தியா வைக்க பிரியப்படுகிற பெண்கள் நிறைய பேருக்கு சமைக்கவும் ஒரளவுக்கு தெரிந்திருக்கும்,
அப்படி அவர்கள் கற்றுக்கொள்ள திருமணத்திற்கு முன் சந்தர்ப்பம் கிடைக்கலீனாலும், திருமணத்திற்கு பின் ஆர்வத்துடன் கற்றுக்கொள்வார்கள்.
அதனால, "பொண்ணுக்கு சமைக்க தெரியுமா? சமைக்க தெரியுமா? "ன்னு அது பற்றி மட்டுமே யோசிச்சுட்டு இருக்காம, சகஜமா பேசி , அந்த பெண்ணை பற்றி தெரிஞ்சுக்க ட்ரை பண்ணு.


ஆல் தி பெஸ்ட் குமார்!!


குமார்: ஹே ரொம்ப தேங்க்ஸ் திவ்யா, இன்னும் டிப்ஸ் வேணும்னா அப்புறமா கேட்டுக்கிறேன்.



[முற்றும்.]

73 comments:

said...

ரொம்ப தேங்க்ஸ் திவ்யா, இன்னும் டிப்ஸ் வேணும்னா அப்புறமா கேட்டுக்கிறேன்.

said...

குமார்: எப்படி பேச்சை முதலில் ஆரம்பிப்பது என்று சொல்லு திவ்யா."

ஹாய் ஹாய் ஹாய் (அப்படின்னும் விவேக் பானியிலும் ஆரம்பிக்கலாம்)

வணக்கம் என்று ஒரு கும்பிடு போட்டுவிட்டு (சாலமன் பாப்பையா ஸ்டைலிலும் ஆரம்பிக்கலாம்)

said...

அந்த பெண்: என்னடி அவரு என்ன என்னிடம் பேசுவார்?

தோழி: நீங்க ரொம்ப அழகா இருக்கீங்க என்று சொன்னா பொய் சொல்பவர் என்று அர்த்தம், நீயும் சிரிச்சிட்டு நீங்களும் அழகாதான் இருக்கீங்க என்று சொல்லிடு..

பிறகு உங்க புடவை அழகா இருக்கு யார் எடுத்தது என்று கேட்டால் நானே தனியாக போய் எடுத்தேன் என்று உண்மையை சொல்லிடாதே, அம்மா எடுத்து கொடுத்தாங்க என்று சொல் அப்பதான் அவர் பேச்சை "உம்" கொட்டி கேட்கும் பெண் என்று நம்புவார்.


(இப்படி சொல்லி கொடுக்க அவுங்களுக்கும் ஒரு தோழி இருந்திருக்கலாம் இல்லை)

said...

திவ்யா: இது என்ன கேள்வி பதில் நேரமா? நீ மட்டும் தான் கேட்டுக்கிட்டேயிருப்பியா? ////

கல்யாணத்துக்கு முன்னாடி வரைதான் நீ கேள்வி எல்லாம் கேட்க முடியும் தம்பி குமாரு...அதன் பிறகு ஒன் வே டிராபிக் மாதிரி நீ காதல் கேட்கதான் முடியும் கேள்வி எல்லாம் கேட்கமுடியாது.

said...

குமார்: அட இது வேற இருக்கா. சரி பதிலுக்கு அந்த பொண்ணு என்னை கேள்வி கேட்க ஆரம்பிச்சா?////

இப்பபொழுதில் இருந்தே ஏழரை ஸ்டார்ட் என்று அர்த்தம்:)

said...

திருமணத்திற்கு பின் ஆர்வத்துடன் கற்றுக்கொள்வார்கள்.///

புதுசா கண்டு பிடிக்கும் மருந்தை சோதித்து பார்க Labயில் வெள்ளை எலி வளர்பது போல், உங்களுக்கு நாங்கதானா கிடைச்சோம்:((((( அவ்வ்வ்

குமாரு எஸ்கேப் ஆயிடு குமாரு...

said...

உங்களுக்கு என் கிட்ட ஏதும் கேட்கனுமா?"

அந்த பெண்: எக்ஸ் கூயுஸ் மீ உங்க கிட்ட மேட்ச் பாக்ஸ் இருக்கா?


குமார்: அவ்வ்வ்வ்வ், இல்லைங்க ஏன்?

பெண்: உங்க வீட்டுக்கு விளக்கு ஏத்த வரபோறேன் உங்கள பிடிச்சு இருக்கு என்று அர்த்தம்:)

Anonymous said...

திவ்யாவும் அந்த பெண்ணும் ஸ்கூல் மேட்ஸ், அதனால் இந்த கேள்விகளை எல்லாம் குமாரை கேட்க சொல்கிறேன், என்றும் அதுக்கு ஆன்சோரோட கொஸ்டின் பேப்பர் முன்பே ரிலிஸ் செஞ்சுட்டாங்க அதுவும் வித் ஆன்சரோட.. சோ உசார் குமார் உசார்:)))))

said...

திவ்யா இம்புட்டு விஷயம் இருக்கா !!!

கலக்குறிங்க ;))

said...

திவ்யா :))
அருமையான பதிவு !! எப்படி இப்படியெல்லாம் அழகா டிப்ஸ் கொடுக்கறீங்க?? ரசித்தேன் :))))

said...

//அவளொட ஃபேவரைட் ஃபுட் என்னன்னு கேளு, அவ ஏதாச்சும் ஒரு ஃபுட் பேரு சொல்லும் போது அவ முகத்தில் ஒரு பூரிப்பு இருந்தா, சமைக்க தெரியவில்லைன கூட , சுவையுணர்வு இருக்கிறதால சமைக்க கற்றுக் கொள்ளும் ஆர்வம் இருக்கலாம்.//

ஏணுங்க திவ்யா சுவையுணர்வு இருகரவுக எல்லாம் சமைக்க தெரிஞ்சுக்குவாங்கன்னு எப்படிங்க அவ்ளோ உறுதியா சொல்றீங்க? :)))) சுவையுணர்வு அதிகமா இருகறதால பல ஹோட்டல்களில் சாப்பிடும் ஆர்வமும் இருக்கலாம்லீங்களா? ;))))))

said...

இதுக்கெல்லாம் சான்ஸ் கிடைக்கும்னு நினைக்கறீங்களா?

குசும்பன் சொல்றது தான் கரெக்ட் :-)

said...

இதிலே இம்புட்டு விஷயமிருக்கா...... உலகத்திலே கத்துக்க வேண்டிய விஷயங்கள் நிறைய இருக்கு போலே... :)

said...

//குசும்பன் said...

திருமணத்திற்கு பின் ஆர்வத்துடன் கற்றுக்கொள்வார்கள்.///

புதுசா கண்டு பிடிக்கும் மருந்தை சோதித்து பார்க Labயில் வெள்ளை எலி வளர்பது போல், உங்களுக்கு நாங்கதானா கிடைச்சோம்:(((((//


குசும்பா,


ரொம்ப கஷ்டமா இருந்துச்சுன்னா இருக்கவே இருக்கு... நம்ம கேரளா மெஸ்.... Ghee Rice, சிக்கன் கறி.... :)

என்ன சாப்பிட்டு ஒரு பொட்டலம் பார்சல் வேற வாங்கிட்டு வரனும்.... :)

said...

:)))) pinnaala use aagalaam... papoam... :)))

said...

\\NiMaL said...
ரொம்ப தேங்க்ஸ் திவ்யா, இன்னும் டிப்ஸ் வேணும்னா அப்புறமா கேட்டுக்கிறேன்\\

டிப்ஸ் எப்போ வேணுமோ அப்போ கேளுங்க நிமல்!
வருகைக்கு நன்றி!

said...

\\குசும்பன் said...
குமார்: எப்படி பேச்சை முதலில் ஆரம்பிப்பது என்று சொல்லு திவ்யா."

ஹாய் ஹாய் ஹாய் (அப்படின்னும் விவேக் பானியிலும் ஆரம்பிக்கலாம்)

வணக்கம் என்று ஒரு கும்பிடு போட்டுவிட்டு (சாலமன் பாப்பையா ஸ்டைலிலும் ஆரம்பிக்கலாம்)\\

குசும்பன், நீங்க பேச்சை ஆரம்பிக்கிற ஸ்டைலே சூப்பர் தான்!!

said...

\\குசும்பன் said...
அந்த பெண்: என்னடி அவரு என்ன என்னிடம் பேசுவார்?

தோழி: நீங்க ரொம்ப அழகா இருக்கீங்க என்று சொன்னா பொய் சொல்பவர் என்று அர்த்தம், நீயும் சிரிச்சிட்டு நீங்களும் அழகாதான் இருக்கீங்க என்று சொல்லிடு..

பிறகு உங்க புடவை அழகா இருக்கு யார் எடுத்தது என்று கேட்டால் நானே தனியாக போய் எடுத்தேன் என்று உண்மையை சொல்லிடாதே, அம்மா எடுத்து கொடுத்தாங்க என்று சொல் அப்பதான் அவர் பேச்சை "உம்" கொட்டி கேட்கும் பெண் என்று நம்புவார்.


(இப்படி சொல்லி கொடுக்க அவுங்களுக்கும் ஒரு தோழி இருந்திருக்கலாம் இல்லை)\\

இருந்திருக்கலாம்........இல்லாமலும் இருக்கலாமில்லையா??

said...

\\குசும்பன் said...
திவ்யா: இது என்ன கேள்வி பதில் நேரமா? நீ மட்டும் தான் கேட்டுக்கிட்டேயிருப்பியா? ////

கல்யாணத்துக்கு முன்னாடி வரைதான் நீ கேள்வி எல்லாம் கேட்க முடியும் தம்பி குமாரு...அதன் பிறகு ஒன் வே டிராபிக் மாதிரி நீ காதல் கேட்கதான் முடியும் கேள்வி எல்லாம் கேட்கமுடியாது.\\

குசும்பன் மாதிரி அனுபவசாலி சொன்னா சரியாத்தான் இருக்கும்!!

said...

\\குசும்பன் said...
திருமணத்திற்கு பின் ஆர்வத்துடன் கற்றுக்கொள்வார்கள்.///

புதுசா கண்டு பிடிக்கும் மருந்தை சோதித்து பார்க Labயில் வெள்ளை எலி வளர்பது போல், உங்களுக்கு நாங்கதானா கிடைச்சோம்:((((( அவ்வ்வ்

குமாரு எஸ்கேப் ஆயிடு குமாரு...\\

இதுக்கே எஸ்கேப்பா??

said...

\\குசும்பன் said...
உங்களுக்கு என் கிட்ட ஏதும் கேட்கனுமா?"

அந்த பெண்: எக்ஸ் கூயுஸ் மீ உங்க கிட்ட மேட்ச் பாக்ஸ் இருக்கா?


குமார்: அவ்வ்வ்வ்வ், இல்லைங்க ஏன்?

பெண்: உங்க வீட்டுக்கு விளக்கு ஏத்த வரபோறேன் உங்கள பிடிச்சு இருக்கு என்று அர்த்தம்:)\\

இந்த குசும்பு ஏற்கெனவே கேட்ட மாதிரியிருந்தாலும், ரசிக்கும்படியா இருக்கு குசும்பன், நன்றி!!!

said...

\\குமார் நலம் விரும்பி said...
திவ்யாவும் அந்த பெண்ணும் ஸ்கூல் மேட்ஸ், அதனால் இந்த கேள்விகளை எல்லாம் குமாரை கேட்க சொல்கிறேன், என்றும் அதுக்கு ஆன்சோரோட கொஸ்டின் பேப்பர் முன்பே ரிலிஸ் செஞ்சுட்டாங்க அதுவும் வித் ஆன்சரோட.. சோ உசார் குமார் உசார்:)))))\\

ஹலோ குமார் நலம் விரும்பி,
அந்த பொண்ணு யாருன்னு தெரிஞ்சிருந்தா, ' எஸ்கேப் ஆகிடுமா கண்ணு' ன்னு, குமார் கிட்டயிருந்து காப்பாத்திருப்போம்!!! இப்படி ஆன்ஸர் ஷீட் கொடுத்திருக்கமாட்டோம்!!

said...

\\கோபிநாத் said...
திவ்யா இம்புட்டு விஷயம் இருக்கா !!!

கலக்குறிங்க ;))
\\

கோபிநாத், வருகைக்கு நன்றி!!
இன்னும் நிறைய விஷயம் இருக்குதுங்க, ஆனா என்னால் இவ்வளவு தான் பதிவிட முடிந்தது!!

said...

//அவளொட ஃபேவரைட் ஃபுட் என்னன்னு கேளு, அவ ஏதாச்சும் ஒரு ஃபுட் பேரு சொல்லும் போது அவ முகத்தில் ஒரு பூரிப்பு இருந்தா, சமைக்க தெரியவில்லைன கூட , சுவையுணர்வு இருக்கிறதால சமைக்க கற்றுக் கொள்ளும் ஆர்வம் இருக்கலாம்.
வீட்டு சாப்பாடு பிடிக்குமா, இல்லை வெளில சாப்பிட பிடிக்குமா ன்னு வேணா இன்னொரு கேள்வி கேட்டு, அவ சமையல் திறனை புரிஞ்சுக்கோ. //

அம்மணி, எப்படிங்க இப்படி சூப்பரா யோசிக்கிறீங்க?

said...

திவ்யா, நீங்க பையன்களுக்கு டிப்ஸ் கொடுக்குறீங்களோ இல்லைஇயோ.. ஆனால், இதுல எங்களுக்கும் பல டிப்ஸ் கொடுக்குறீங்க.. :-))))

said...

//
" உங்க வீடு ரொம்ப அழகா , நீட் அண்ட் ப்ரைட்டா இருக்கு, நீங்க தான் இப்படி மெயிண்டேன் பண்றதா? நல்ல ரசனை உங்களுக்கு" அப்படின்னு சும்மா போட்டுப் பாரு,

அவ கொஞ்சம் அதிர்ச்சி ஆகி, 'பே பே' ன்னு முழிச்சா..........பெண் பார்க்க வர்ரதால தான் அவ வீட்டில் உள்ளவங்க வீட்டை இவ்வளவு நீட்டாக்கிருக்காங்க, மத்தப்படி அவளுக்கும் இதுக்கும் சம்பதேமே இல்லைன்னு அர்த்தம்.
//
கலக்கல்

மத்தபடி
குசும்பன் போட்ட எல்லா பின்னூட்டத்துக்கும் ஒரு
பெரிய ரிப்பீட்டேய்

said...

சிரிக்கவும் சிந்திக்கவும் வச்சிட்டீங்க

Anonymous said...

கேட்(பட்)டறிவுரை :

அ. பெண் பார்க்கும்போது பெண்ணை பிடித்ததுபோல தோன்றினால், தயவுகூர்ந்து பெண்ணோடு தனியே கொஞ்சம் பேசிப்பாருங்கள். உங்கள் விருப்பு, வெறுப்புகள், எதிர்பார்ப்புகள், இத்யாதி இத்யாதிக்கள் ... (other than saree, cooking etc.)

Anonymous said...

கேட்(பட்)டறிவுரை :

ஆ. குமார், நீங்கள் கிராமத்துப்பின்னணி கொண்ட ஆடவராயிருப்பின் பெருநகர நாகரிகத்தில் பிறந்து வளர்ந்த பெண்ணை தேர்வு செய்யாதீர்.

Anonymous said...

கேட்(பட்)டறிவுரை :

இ. பெண் விருப்பத்தோடுதான் ஒத்துக்கொள்கிறாரா அல்லது நிர்ப்பந்தமா என்பதை தெளிந்துகொள்ளுங்கள்.

Anonymous said...

கேட்(பட்)டறிவுரை :

ஈ. பொருளாதாரரீதியில் உங்களோடு சமநிலையில் இருப்பவரோடு மண உறவு கொள்வதே சிறப்பு. (கொஞ்சம் மேலே கீழே இருப்பதில் தவறில்லை. ஏற்றத்தாழ்வு சீசா போலிருப்பின் கவனம்)

(இதுவரை லேசானவை. கனமான கேட்(பட்)டறிவுரைகள் நாளை - அனுமதிக்கப்பட்டால்)

said...

\\நவீன் ப்ரகாஷ் said...
திவ்யா :))
அருமையான பதிவு !! எப்படி இப்படியெல்லாம் அழகா டிப்ஸ் கொடுக்கறீங்க?? ரசித்தேன் :))))\\

நன்றி நவீன்!
இப்படி டிப்ஸ் எல்லாம் உங்களை மாதிரி ப்ரியமான நண்பர்களிடமிருந்து தான் சேகரித்தேன்!!

said...

\\ஜொள்ளுப்பாண்டி said...
//அவளொட ஃபேவரைட் ஃபுட் என்னன்னு கேளு, அவ ஏதாச்சும் ஒரு ஃபுட் பேரு சொல்லும் போது அவ முகத்தில் ஒரு பூரிப்பு இருந்தா, சமைக்க தெரியவில்லைன கூட , சுவையுணர்வு இருக்கிறதால சமைக்க கற்றுக் கொள்ளும் ஆர்வம் இருக்கலாம்.//

ஏணுங்க திவ்யா சுவையுணர்வு இருகரவுக எல்லாம் சமைக்க தெரிஞ்சுக்குவாங்கன்னு எப்படிங்க அவ்ளோ உறுதியா சொல்றீங்க? :)))) சுவையுணர்வு அதிகமா இருகறதால பல ஹோட்டல்களில் சாப்பிடும் ஆர்வமும் இருக்கலாம்லீங்களா? ;))))))\\

வருகைக்கு நன்றி பாண்டி!!

ஹோட்டல்களில் சாப்பிடும் ஆர்வமிருந்தாலும், நல்ல சுவையுணர்வு இருக்கிறவங்களுக்கு விட்டில் சமைத்துப் பார்க்கும் எண்ணம் அதிகம் இருக்கவும் வாய்ப்பிருக்கு!!
[ எதை போட்டாலும் சாப்பிடுவேன்னு சொல்றவங்களுக்கு, வீட்டு சாப்பாடு ஹொட்டால் சாப்பாடு ன்னு எந்த வித்தியாசமும் இல்ல,
நல்ல ரசனையும், சுவையுணர்வுமிருந்தா, அந்த பொண்ணுக்கு சமைக்க கற்றுக்கொள்ளும் ஆர்வம் அதிகமிருக்கலாம்]

said...

\\வெட்டிப்பயல் said...
இதுக்கெல்லாம் சான்ஸ் கிடைக்கும்னு நினைக்கறீங்களா?

குசும்பன் சொல்றது தான் கரெக்ட் :-)\\

ஏண்ணா உங்களுக்கு சான்ஸே கிடைக்கலீங்களாண்ணா??

வருகைக்கு நன்றி!!

said...

\\இராம்/Raam said...
இதிலே இம்புட்டு விஷயமிருக்கா...... உலகத்திலே கத்துக்க வேண்டிய விஷயங்கள் நிறைய இருக்கு போலே... :)\\

ராம், இன்னும் நிறைய விஷயமிருக்கு,

அதுவும் நீங்க கத்துக்க வேண்டிய விஷயம் நிறையவேயிருக்கு!!!

said...

\\ஜி said...
:)))) pinnaala use aagalaam... papoam... :)))\\

ஜி, பின்னாலே என்ன பின்னாலே,............ நடு வானத்தில் , பறக்கும் விமானத்தில், உங்களுக்கு இந்த சீன் முடிஞ்சுப்போச்சே!!

said...

\\Anonymous said...
கேட்(பட்)டறிவுரை :

ஈ. பொருளாதாரரீதியில் உங்களோடு சமநிலையில் இருப்பவரோடு மண உறவு கொள்வதே சிறப்பு. (கொஞ்சம் மேலே கீழே இருப்பதில் தவறில்லை. ஏற்றத்தாழ்வு சீசா போலிருப்பின் கவனம்)

(இதுவரை லேசானவை. கனமான கேட்(பட்)டறிவுரைகள் நாளை - அனுமதிக்கப்பட்டால்)\\

அனானி, நீங்க தாரளமாக உங்க
கேட்(பட்)டறிவுரைகளை இங்கு பகிர்ந்துக்கொள்ளலாம்!!
உங்கள் கருத்துக்கள் வரவேற்கபடுகின்றன!!

said...

nice post! :-)

said...

இம்புட்டு சுலபமா சொல்லிப்புட்டீங்க..மக்களே...இது மாதிரி ஆர அமர உக்கார விட்டு எந்த ஊருலையா பொண்ணக் காட்டுறாய்ங்க....
ஒரு சின்ன அறையிலே....சுத்தி எல்லாரும் நிக்கும் போது மின்னல் மாதிரி வந்து காட்டிட்டு போயிடுறானுங்க...அதுல அக்கவை ஐஸ் பண்ணி, அம்மாவை ஐஸ் பண்ணி பேசுறதுக்கு சந்தர்ப்பம் வாங்கி பேசுறதுக்குள்ள நிறைய பேருக்கு தாவு தீரும்...


முன் பின்ன செத்திருந்தா தானே சுடுகாடு தெரியுமின்னு சொன்னா மாதிரி....அனுபவஸ்தருங்க கிட்ட கேளுங்க அவங்க பல கதைகள் வச்சிருக்ககூடும்...


ஆனா..நல்ல பதிவுங்கோ....உங்களை பெண் பார்க்க வரவர்க்கிட்ட இதை அப்படியே பிரிண்டு போட்டு கொடுக்கலாமா....?

said...

// " என்னை உங்களுக்கு பிடிச்சிருக்கா?"அப்படின்னு அசட்டுத்தனமான கேள்வியெல்லாம் கேட்க கூடாது.//
நல்லவேளை,எல்லா சினிமாவலுயும் இத கேக்கறத பாத்து, நானும் இதத்தா கேக்கலாமுன்னுல்ல.. இருந்தேன்.

said...

// உங்க 'saree' ரொம்ப அழகா , உங்களுக்கு பொறுத்தமா இருக்கு, உங்க செலக்க்ஷனா?"அப்படின்னு கேளு,
" ஆமாம்" ன்னு அவ பதில் சொன்னா, பொண்ணு சுயமா சிந்திக்கிறான்னு அர்த்தம்.//
அருமை அருமை...

said...

// அவ பேசலைன்னா, ஒன்னு ரொம்ப அடக்க ஒடுக்கமா நடிக்கிறான்னு அர்த்தம்,// ம் அப்பிடியா சங்கதி..ஹா..ஹ..

said...

// அவளொட ஃபேவரைட் ஃபுட் என்னன்னு கேளு, அவ ஏதாச்சும் ஒரு ஃபுட் பேரு சொல்லும் போது அவ முகத்தில் ஒரு பூரிப்பு இருந்தா, சமைக்க தெரியவில்லைன கூட , சுவையுணர்வு இருக்கிறதால சமைக்க கற்றுக் கொள்ளும் ஆர்வம் இருக்கலாம்.
வீட்டு சாப்பாடு பிடிக்குமா, இல்லை வெளில சாப்பிட பிடிக்குமா ன்னு வேணா இன்னொரு கேள்வி கேட்டு, அவ சமையல் திறனை புரிஞ்சுக்கோ.// உபயோகமான குறிப்பு..

said...

/ அப்படி அவர்கள் கற்றுக்கொள்ள திருமணத்திற்கு முன் சந்தர்ப்பம் கிடைக்கலீனாலும், திருமணத்திற்கு பின் ஆர்வத்துடன் கற்றுக்கொள்வார்கள்.//
நியாயந்தானே..நாங்க கூட கல்யாணத்துக்கப்பறம் தான சமைக்க கத்துக்கிறோம்...

said...

// தேங்க்ஸ் திவ்யா, இன்னும் டிப்ஸ் வேணும்னா அப்புறமா கேட்டுக்கிறேன்.//
யோவ்... குமாரு மாமு,கவுத்துப்புட்டியேயா....அவிங்கதான் சொம்மா புரபஸர் கணக்கா ஃபுல பார்மில ஜடியாக்கள அள்ளி வீசும் போது ,கேட்ச் புடிக்காம நடுவுல பூந்து பிளிரிட்டயே.!!. கல்யாண வயசுல இதக் கேக்கறத விட ஒனக்கு வேற என்னா வேல?...நானாயிருந்தாக்கா.. ரெண்டு நாள் லீவு போட்டுட்டு கேட்டுப்பேன்.. சொம்மாவா?.. லைப்பு மச்சி.. லைப்பு...இனிமே வாய தொரக்க சொல்ல என்னிய ஒரு வார்த்த கேட்டுக்கோனும். சொல்லிப்புட்டேன்..ஆமா..

said...

// தேங்க்ஸ் திவ்யா, இன்னும் டிப்ஸ் வேணும்னா அப்புறமா கேட்டுக்கிறேன்.//
யோவ்... குமாரு மாமு,கவுத்துப்புட்டியேயா....அவிங்கதான் சொம்மா புரபஸர் கணக்கா ஃபுல பார்மில ஜடியாக்கள அள்ளி வீசும் போது ,கேட்ச் புடிக்காம நடுவுல பூந்து பிளிரிட்டயே.!!. கல்யாண வயசுல இதக் கேக்கறத விட ஒனக்கு வேற என்னா வேல?...நானாயிருந்தாக்கா.. ரெண்டு நாள் லீவு போட்டுட்டு கேட்டுப்பேன்.. சொம்மாவா?.. லைப்பு மச்சி.. லைப்பு...இனிமே வாய தொரக்க சொல்ல என்னிய ஒரு வார்த்த கேட்டுக்கோனும். சொல்லிப்புட்டேன்..ஆமா..

said...

திவ்யா உங்க ஜடியாக்கள் சும்மா விளையாட்டுக்கு அல்ல.. நெஜமாவே "மனோத்துவ ரீதி"யுல திருமணத்துக்கு முன் கெடக்கிற குறுகிய காலத்துல பெண்கள் மனச புரிஞ்சிக்க பொருத்தமானவைதான்.எப்பிடித்தா யோசிக்கிறிங்களோ?..
நாங்கூட அரைமணி நேரத்துல.. இதல்லாம் புரிஞ்சிக்க முடியாது...அப்பா அம்மா செலட் பண்றவங்க யாராயிருந்தால..நாம அன்பாயிருந்து நமகேத்த மாதிரி மாத்திப்புடலாமின்னு நெனச்சிக்கின்னு இருந்தேன்..ஆனா இப்ப உங்க ஜடியாக்கள நிச்சயமா உபயோகிக்கணுமின்னு முடிவு செஞ்சிட்டேன்..very nice .please continue..

said...

// உங்களுக்கு என் கிட்ட ஏதும் கேட்கனுமா?"
அந்த பெண்: எக்ஸ் கூயுஸ் மீ உங்க கிட்ட மேட்ச் பாக்ஸ் இருக்கா?
குமார்: அவ்வ்வ்வ்வ், இல்லைங்க ஏன்?
பெண்: உங்க வீட்டுக்கு விளக்கு ஏத்த வரபோறேன் உங்கள பிடிச்சு இருக்கு என்று அர்த்தம்://
குசும்பரே இது நல்லாயிருக்கு...ஹா..ஹா..

said...

ஆங்.. எனக்கு கூட ஒரு ஜடியா வருது..
அவிங்ககிட்ட..."உங்க தங்கச்சி..உங்கள விட சொம்மா சூப்பர் ஃபிகரா இருக்காங்களே எப்பிடி?"ன்னு கேட்டாக்கா.. அவிங்க எவ்வளவு பொறுமைசாலி இன்னுங்கூட தெரிஞ்சிக்கலாமே?எப்பிடி?....ஹிஹி..[ மாமு இதெல்லாம் ஒனக்கு ஒத்துவராது..நீ கல்யாணத்துக்கு முன்னாடியே அவிங்ககிட்ட அடி வாங்கப்போறன்னு நெனக்கிறேன்..]..

said...

அது சரிங்க..திவ்யா...
ஒரு வேளை அவிங்களும் இதே போல கேள்வி கேக்கணுமின்னு யோசிச்சி வச்சிருந்தாக்கா?...என்னன்ன கேப்பாய்ங்க..அதுக்கு எந்த பதில் எதிர் பாப்பாய்ங்கன்னு அதயும் சொல்லிட்டாக்கா..கலக்கிடலாமுல்ல...
இப்பயே தெனமும் காலையில எழுந்து கண்ணாடிய பாத்து ,உங்க கேள்விகள் பிராக்டீஸ் பண்றோமில்ல..
[நா மொத மொத வேலைக்கு போன போது கூட இவ்வளவு மெனக்கெட்டதில்லீங்கோ...]

Anonymous said...

ஏணுங்க அம்மணி
இவ்ளோ டிப்ஸ் எல்லாம் கொடுக்கறீங்களே நீங்க எப்படி ?? ;)

said...

ஓகே டிப்ஸ் எல்லாம் எங்களுக்கு சிப்ஸ் சப்பிடர மாதிரி !! நீங்க கொடுத்து இருக்குற டிப்ஸை படிச்சுப்போட்டு பொண்ணுங்க எங்க கிட்டே நம்புற மாதிரியே அச்சு அசலா பொய் சொன்னா எப்படி திவ்யா கண்டுக்கறது?? லேசா சிரிச்சாலே கவுந்துருவாகளே இந்தப் பசங்க .... ;))))))

Anonymous said...
This comment has been removed by a blog administrator.
Anonymous said...

கேட்(பட்)டறிவுரை :

ஊ. இதற்கு முன்னால் வேறு பெண்/மாப்பிள்ளை பார்த்து அது கைகூடாது போயிருப்பின் அதை மறந்து (அல்லது மனதின் அடியாழத்தில்) புதைத்துவிடல் நலம். நெருங்கிய உறவினனின் - நண்பன் மாதிரி, அதனாலே ர் இல்லாமல் ன் விகுதி - மனைவி, முதலிரவன்றே தான் வெளிநாட்டில் வேலைபார்த்தபோது பார்த்த மாப்பிள்ளை பற்றி ப்ரஸ்தாபித்திருக்கிறார். வெளிநாட்டில் இருந்த இருவரும் போனில் அடிக்கடி பேசியிருக்கிறார்கள். வயது வித்யாசம் 9 என்பதால் இந்த பெண்ணின் அம்மா, 'வயது வித்யாசம் அதிகமிருப்பின் ஆணுக்கு பெண் மீது சந்தேகம் வரும்' என்று சொல்லி தவிர்த்திருக்கிறார். ஒத்துவராமற்போகவே 'பரவாயில்லை 'நாம் நண்பர்களாயிருப்போம்' என்று இந்தப்பெண் சொன்னாராம். ஆனால் அந்த நபரோ 'if you don't want to be my wife, I don't want you to be my friend' என்றிருக்கிறாராம். அப்படி சொன்னவருடைய புகைப்படம் இன்னும் தன் mail box-ல் வைத்திருப்பதாகவும் இந்த பெண் கூறவே, சற்றே முகம் சுளித்த இவன் முதலிரவென்பதால் மௌனம் காத்திருக்கிறான், பின்னொருநாளில் மனைவி அந்த நபரின் புகைப்படத்தை காட்டியபோது, அந்த நபர், 'no problem, we can be friends' என்று அந்த mail-ல் சொல்லியிருக்கவே, உறவினன் சற்றே அழுத்தமாக, 'I don't want you to be my friend என்று சொன்னவனின் புகைப்படத்தை இன்னும் உன் mail box-ல் வைத்திருப்பது எதற்காக ? 'I don't want you to be my friend' என்று போனில் சொன்னவன் எப்படி 'we can be friends, no problem' என்று சொன்னான், எது உண்மை எது போய் ?' என்று கேட்கவும் வார்த்தை தடித்துப்போய் (அந்த பையனின் பெற்றோர் ஒரு சந்திப்பில் இந்த பெண்ணின் பெற்றோரிடம் இன்னும் உங்கள் பெண்ணின் புகைப்படம் எங்களிடம் உள்ளது என்று கூறவும், அதனாலென்ன பரவாயில்லை என்று பெண்ணின் அப்பா சொல்லியிருக்கிறாராம் (?!)) they ended up in divorce.

Anonymous said...
This comment has been removed by a blog administrator.
said...

திருமண சந்தை

said...

உங்கள் டிப்ஸ் அருமை. 20 அல்லது 25 வருடத்துக்கு முன் இப்படித்தான் பெண் பார்த்திருப்பார்கள். இப்போ எப்படி கேட்க வேண்டும் - னு சொல்லாமலேயே பதிவை முடித்து விட்டீர்கள். இருந்தாலும் நன்றி. குசும்பனின் பின்னுட்டங்கள் இந்தப் பதிவை ரசிக்க வைக்கின்றன

நன்றி

said...

உங்கள் டிப்ஸ் அருமை. 20 அல்லது 25 வருடத்துக்கு முன் இப்படித்தான் பெண் பார்த்திருப்பார்கள். இப்போ எப்படி கேட்க வேண்டும் - னு சொல்லாமலேயே பதிவை முடித்து விட்டீர்கள். இருந்தாலும் நன்றி. குசும்பனின் பின்னுட்டங்கள் இந்தப் பதிவை ரசிக்க வைக்கின்றன

நன்றி

said...

இது ஆவுறது இல்லை....

said...
This comment has been removed by a blog administrator.
said...

பெண் பார்க்கும் படலத்தைப் பற்றி நிறைய சொல்லியிருக்கீங்க நன்றி. காதலிக்கும் பெண்கிட்ட எப்படி பேச்சை ஆரம்பிப்பது என்று டிப்ஸ் கொடுங்களேன்.

said...

கரெக்ட் நாகைசிவா சொல்றமாதிரி ஆவறதே இல்லை.. பெரியவங்க முக்காவாசி பேசி முடிச்சிட்டு ஒப்புக்கு பொண்ணையும் பையனையும் பேசிக்கனும்ன்னா பேசிக்கங்க ன்னதும் ...
பாவமா ஒருத்தர் ஒருத்தர் பாத்து ..எல்லாமா முடிவு செய்துட்டாங்க சரி ஓகே லெட்ஸ் மீட் அட் மண்டபம் நடுவுல அப்பப்ப கால் பண்ணி பேசிப்பம் ஒருத்தரை ஒருத்தர் எப்படி அட்ஜஸ்ட் செய்து வாழலாம்ன்னு ,பேசிக்கிறதா கேள்வி ..
ஆமா அப்படியே பேசிக்க நேரம் குடுத்தாலும் பத்து பதினைஞ்சு வருசமாகியும் புரிஞ்சுக்கமுடியாத கலையை ஒரு நாளில் வரும்ன்னு சொல்ல்றதே ஒரு பொய் ஏன் திவ்யா இப்படி எல்லாம் ...பாவம் பசங்க..

said...

\CVR said...
nice post! :-)\\

Thanks CVR!!!

said...

\\TBCD said...
இம்புட்டு சுலபமா சொல்லிப்புட்டீங்க..மக்களே...இது மாதிரி ஆர அமர உக்கார விட்டு எந்த ஊருலையா பொண்ணக் காட்டுறாய்ங்க....
ஒரு சின்ன அறையிலே....சுத்தி எல்லாரும் நிக்கும் போது மின்னல் மாதிரி வந்து காட்டிட்டு போயிடுறானுங்க...அதுல அக்கவை ஐஸ் பண்ணி, அம்மாவை ஐஸ் பண்ணி பேசுறதுக்கு சந்தர்ப்பம் வாங்கி பேசுறதுக்குள்ள நிறைய பேருக்கு தாவு தீரும்...


முன் பின்ன செத்திருந்தா தானே சுடுகாடு தெரியுமின்னு சொன்னா மாதிரி....அனுபவஸ்தருங்க கிட்ட கேளுங்க அவங்க பல கதைகள் வச்சிருக்ககூடும்...


ஆனா..நல்ல பதிவுங்கோ....உங்களை பெண் பார்க்க வரவர்க்கிட்ட இதை அப்படியே பிரிண்டு போட்டு கொடுக்கலாமா....?\\

வருகைக்கும், பதிவை ரசித்தமைக்கும் நன்றி TBCD.
[ பிரிண்ட் போட்டு கொடுத்து என்னை வம்புல பாட்டி விட்ருவீங்க போலிருக்கு!]

said...

\\ரசிகன் said...
// " என்னை உங்களுக்கு பிடிச்சிருக்கா?"அப்படின்னு அசட்டுத்தனமான கேள்வியெல்லாம் கேட்க கூடாது.//
நல்லவேளை,எல்லா சினிமாவலுயும் இத கேக்கறத பாத்து, நானும் இதத்தா கேக்கலாமுன்னுல்ல.. இருந்தேன்.\\

இப்படி அசட்டுதனமா யாரும் கேட்கமாட்டாங்க, எதுக்கும் பதிவில அதையும் சேர்த்து எழுதுவோம்னு எழுதினேன், பாருங்க இப்போ அது உங்களுக்கு உதவியான ஒரு விஷயமா போச்சு!!

said...

\\ரசிகன் said...
// உங்க 'saree' ரொம்ப அழகா , உங்களுக்கு பொறுத்தமா இருக்கு, உங்க செலக்க்ஷனா?"அப்படின்னு கேளு,
" ஆமாம்" ன்னு அவ பதில் சொன்னா, பொண்ணு சுயமா சிந்திக்கிறான்னு அர்த்தம்.//
அருமை அருமை...\\

நன்றி நன்றி...

said...

Thankss Thivya...
nan ivvalavum pesinale athu periya visayamthan mm..mmm.. parkkalam antha neram varumpothu..

said...

pnkalai purinthu kolvathe kadinaman kalithane unkal pathivu koncham help pannu enru ninaikkiren...

said...

அட,பொண்ணு பார்க்கப்போனா இவ்வளவு கேள்விகள் வருதா..?
:(
:(
:(

நீங்களாவது இப்படி கிளாஸ் எடுக்குறீங்களே.
நன்றிங்க.. :)

said...

Good one,
சிரிக்கவும் வச்சிட்டீங்க, சிந்திக்க ?

said...

இப்பலாம் யாருங்க பெற்றோர்களால் நிச்சயிக்கப்பட்ட கல்யாணம் பண்றாங்க.....
அட போங்க... !

said...

// உங்க 'saree' ரொம்ப அழகா , உங்களுக்கு பொறுத்தமா இருக்கு, உங்க செலக்க்ஷனா?"அப்படின்னு கேளு,
" ஆமாம்" ன்னு அவ பதில் சொன்னா, பொண்ணு சுயமா சிந்திக்கிறான்னு அர்த்தம்.//

இதென்ன கொடுமைங்க..... ஏன் சுயமா சிந்திக்கிறவங்க அம்மா அப்பா டிரஸ் எடுத்துக்கொடுத்தா போட்டுக்கக்கூடாதா???? புதுசு புதுசா யோசிக்க யாருங்க சொல்லிக் கொடுக்குறா??? :)

said...

soooper chanceless....pshycology and comedy rendaium kalandhu pinniteenga....

nalla narration...

Nice one...