January 20, 2008

அறிமுகம்...

தமிழ்மணத்தில் நட்சத்திர பதிவராக ஜனவரி 21 முதல் ஜனவரி 27 வரை என்னைத் தேர்ந்தெடுத்த தமிழ்மண நிர்வாகத்திற்கு நன்றி!
நட்சத்திர பதிவுகளை தொடங்கும் முன், என்னைப் பற்றிய ஒரு சிறிய அறிமுகம்.......


கோயம்பத்தூரில் பிறந்து,வளர்ந்து, பொறியியல் பட்டப்படிப்பை முடித்தபின், அமெரிக்காவில் பட்டமேற்படிப்பை தொடர்ந்து வருகிறேன்.


அயல்நாடு பரிசளித்த தனிமையும், வெறுமையும், தமிழ்மீதிருந்த நாட்டமும் தமிழ் வலைதளங்களை படிக்க வைத்தது. என்னை வியப்படைய செய்த வலைப்பதிவர்களின் எழுத்தும், வலையுலக நண்பர்கள் தந்த ஆலோசனையும், என்னையும் ஒரு வலைதளம் தொடங்க உந்தியது.


சிறு வயதிலிருந்தே என் அப்பாவிடம் கதை கேட்கும் பழக்கம் எனது வழக்கம். கேட்ட கதைகளை பள்ளியில் தோழிகளிடம், மதிய உணவு இடைவேளையில் பகிர்ந்துக்கொள்ளும் போது, " எங்களுக்கு ஏற்கெனவே தெரிந்த கதைகளை கூட , நீ சொல்லும்போது கேட்க நல்லாயிருக்கு, ஏன் நீயே கதை எழுத கூடாது?" என்று என் நெருங்கிய தோழி கூறியபோது நகைப்பாகயிருந்தது!


ஆனால், வலைத்தளம் ஆரம்பித்தபோது, பள்ளியில் அவள் கூறிய கருத்து என்னை ' ஏன் கதை எழுத முயற்சிக்க கூடாது' என சிந்திக்க வைத்தது, அதன் விளைவே எனது வலைத்தளத்தில் கதைகள் எழுதும் சிறுமுயற்சி.


இவ்வாரத்தில் நான் பதிவிடும் பதிவுகளை அவசியம் படியுங்கள், உங்கள் கருத்துக்களையும், விமர்சனங்களையும் நிச்சயம் பின்னூட்டமிடுவீர்கள் என நம்புகிறேன்.



நட்புடன்,

திவ்யா.

106 comments:

சினேகிதி said...

வாழ்த்துக்கள் திவ்யா!

வெட்டிப்பயல் said...

வாழ்த்துக்கள்

வெட்டிப்பயல் said...

இந்த வாரம் கலக்கல் வாரம்... எத்தனை டிப்ஸ் தர போறீங்க திவ்யா?

பாச மலர் / Paasa Malar said...

வருக திவ்யா..கதை கூறும் திவ்யாவைத் தெரியும்...நட்சத்திர வாரத்தில் வேறு பதிவுகளும் உண்டா..ஆவலுடன் எதிர்பார்ப்பு..

Kannabiran, Ravi Shankar (KRS) said...

ஓ...இந்த வாரம் மத்தாப்"பூ" வாரமா? :-)
நட்சத்திர வாழ்த்துக்கள் திவ்யா!

குசும்பன் said...

ரெடி ஸ்டாட் மியுஜிக்!!!

முதலில் வாழ்த்துக்கள்!

Anonymous said...

நட்சத்திரத்திற்கு வாழ்த்துக்கள் திவ்யா ...

வாரம் முழுதும் மத்தாப்புதான் இனி....:))

நிலா said...

அட கோயம்புத்தூரா நீங்க, வெல்கம் வெல்கம், ஸ்டாருக்கு வாழ்த்துக்கள் ஆண்ட்டி,

கலக்குங்க

✨முருகு தமிழ் அறிவன்✨ said...

அல்லாரும் வாங்க,
திவ்யா நட்சத்திர வாரத்தில,அவர் பதிவுல ஒரு பின்னூட்டம் போட்டா USD 10 கொடுக்குறதா,ரகசியமா உங்க எல்லாருக்கும் சொல்லச் சொன்னாங்க,சொல்லிபுட்டேன்..

வாங்க..

தமிழ் said...

வாழ்த்துக்கள்

முத்துலெட்சுமி/muthuletchumi said...

திவ்யா நட்சத்திர வாழ்த்துக்கள்.. எழுதுங்க கண்டிப்பா படிக்கிறோம்..

MyFriend said...

நட்சத்திர வாழ்த்துக்கள் திவ்யா..

இந்த வாரம் தமிழ்மணத்துக்கு தீபாவளியாமே? மத்தாப்பு கொளுத்துவோமா? :-)

//இவ்வாரத்தில் நான் பதிவிடும் பதிவுகளை அவசியம் படியுங்கள், உங்கள் கருத்துக்களையும், விமர்சனங்களையும் நிச்சயம் பின்னூட்டமிடுவீர்கள் என நம்புகிறேன்.
//

கண்டிப்பாக. எங்கள் அனைவரின் ஆதரவும் உங்களுக்கு கண்டிப்பாக உண்டு. :-)

இராம்/Raam said...

நட்சத்திர வாழ்த்துக்கள்.. :)

மங்களூர் சிவா said...

எக்கா வாக்கா!!

தமிழ் மணத்தை தூசி தட்டி நல்லா பெருக்கி மொழுகி பளிச்சுனு ஆக்கீறனும்!

கோயமுத்தூரா இருக்கட்டும் இருக்கட்டும். வேற எதோ சொன்னாப்ல இருந்தது!!

மங்களூர் சிவா said...

நட்சத்திர வார வாழ்த்துக்கள்.

manjoorraja said...

அன்பு திவ்யா இனிய நட்சத்திர வாழ்த்துகள்.

கோவைக்கே உரித்தான குசும்புடனும், மண்வாசனையுடனும் சிறந்தப் பதிவுகளை தருவீர்கள் என்று நம்புகிறேன்.

நட்சத்திரவாரம் வெற்றியடைய மீண்டும் ஒரு முறை வாழ்த்துகள்.

http://groups.google.com/group/muththamiz

Anonymous said...

நட்சத்திர வாழ்த்துகள் திவ்யா!!!!

siva gnanamji(#18100882083107547329) said...

பின்னூட்டம் போட்டா USD 10 ஆ?
சொக்கா சொக்கா........

கோபிநாத் said...

வாழ்த்துக்கள் திவ்யா..;))

\\இவ்வாரத்தில் நான் பதிவிடும் பதிவுகளை அவசியம் படியுங்கள்,\\

அட..அதுக்கு தானே நாங்க இருக்கோம்...எழுதுங்கள் ;)

ஆயில்யன் said...

வாழ்த்துக்கள் :))

கானா பிரபா said...

போனவாரம் முழுக்க உளவியல் பதிவுகளோடு கிர்ரடிச்சிருக்கோம். ஏதோ பாத்து எங்க நிலமையை கவனத்தில் கொண்டு எழுத வேண்டுகிறேன் ;-)

நட்சத்திர வாழ்த்துக்கள்

துளசி கோபால் said...

ம்ம்ம்ம்ம்.அப்புறம்?

கதையை ஆரம்பிங்க திவ்யா.

நட்சத்திர வாழ்த்துகள்.

சுந்தர் / Sundar said...

All the Best .

மணியன் said...

நட்சத்திர வாரத்தில் மிளிர்ந்திட வாழ்த்துகள் !!

Unknown said...

வாழ்த்துகள்!!!
எழுதுங்கள்… வாசிக்கிறோம்!!!

TBCD said...

தொடர்ந்து மூன்றுப் பெண் நட்சத்திரங்கள்...!!!

நட்சத்திர வாழ்த்துக்கள்..

Unknown said...

ம்ம்ம் நட்சத்திரமாயாச்சா... வாழ்த்துக்கள்

குமரன் (Kumaran) said...

வாழ்த்துகள் திவ்யா.

வினையூக்கி said...

:) :) வாழ்த்துக்கள்

CVR said...

நட்சத்திர வாழ்த்துக்கள் திவ்யா!!!
எப்பவும் போல கலக்குங்க!! :-)

ILA (a) இளா said...

வாங்க வாங்க. வாழ்த்துக்கள்!. நம்ம ஏரியாதானா.. அங்கேயும்., இங்கேயும்

Dreamzz said...

கலக்குங்க அம்மணி.. வாழ்த்துக்கள் :)

கோவை சிபி said...

வாழ்த்துகள்.

வீ. எம் said...

வாழ்த்துக்கள் திவ்யா. தொடரட்டும் உங்கள் நட்சத்திர வாரம்...

Anonymous said...

poatu thaakiduvom...allarum sendamil talking i the engleesla damil talking.. :D

~gils

My days(Gops) said...

வாழ்த்துக்கள்.... பதிவு இதுல தானே போடுவீங்க?

Anonymous said...

Wishes.....

காட்டாறு said...

நட்சத்திர வாழ்த்துக்கள் திவ்யா! அப்போ நெறையா கதை இருக்கும் இந்த வாரத்துலன்னு சொல்லுங்க. :-)

ரசிகன் said...

ஆஹா.. மாஸ்டர் ..டிரிட் எங்கே... வாழ்த்துக்கள்..கலக்குங்க...

சேதுக்கரசி said...

நட்சத்திர வார வாழ்த்துக்கள்

Divya said...

\\ சினேகிதி said...
வாழ்த்துக்கள் திவ்யா!\\

சினேகிதி, உங்கள் வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி!

Divya said...

\\ வெட்டிப்பயல் said...
வாழ்த்துக்கள்\\

குருவே....உங்கள் வாழ்த்துக்களும் ஊக்கமும் தான், நான் நட்சத்திர பதிவராக முக்கிய காரணம்!

நன்றி வெட்டி!!

Divya said...

\\ வெட்டிப்பயல் said...
இந்த வாரம் கலக்கல் வாரம்... எத்தனை டிப்ஸ் தர போறீங்க திவ்யா?\

டிப்ஸ் தான.....கொடுத்திடுவோம்!

Divya said...

\\ பாச மலர் said...
வருக திவ்யா..கதை கூறும் திவ்யாவைத் தெரியும்...நட்சத்திர வாரத்தில் வேறு பதிவுகளும் உண்டா..ஆவலுடன் எதிர்பார்ப்பு..\\

பாசமலர் உங்கள் எதிர்பார்பிற்கு நன்றி!

[கதை கூறும் திவ்யா என்று நீங்கள் பின்னூட்டமிட்டிருப்பது...எனக்கு ரொம்ப சந்தோஷமாகயிருந்தது பாசமலர்]

Divya said...

\\ kannabiran, RAVI SHANKAR (KRS) said...
ஓ...இந்த வாரம் மத்தாப்"பூ" வாரமா? :-)
நட்சத்திர வாழ்த்துக்கள் திவ்யா!\\

ஹாய் ரவி,
வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி!
தொடர்ந்து உங்கள் ஊக்கமும், கருத்துக்களும் எனக்கு அவசியம் தேவை!

Divya said...

\\ குசும்பன் said...
ரெடி ஸ்டாட் மியுஜிக்!!!

முதலில் வாழ்த்துக்கள்!\

மியுஸிக்கோடு வரவேற்பு கொடுத்ததிற்கு ரொம்ப நன்றி குசும்பன்!

Divya said...

\\ Naveen said...
நட்சத்திரத்திற்கு வாழ்த்துக்கள் திவ்யா ...

வாரம் முழுதும் மத்தாப்புதான் இனி....:))\\

வாங்க கவிஞரே, உங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி.

Divya said...

\\ நிலா said...
அட கோயம்புத்தூரா நீங்க, வெல்கம் வெல்கம், ஸ்டாருக்கு வாழ்த்துக்கள் ஆண்ட்டி,

கலக்குங்க\\

நிலா, உன் வாழ்த்துக்களுக்கு ஒரு ஸ்பெஷல் தாங்க்ஸ்!

Divya said...

\\ அறிவன் /#11802717200764379909/ said...
அல்லாரும் வாங்க,
திவ்யா நட்சத்திர வாரத்தில,அவர் பதிவுல ஒரு பின்னூட்டம் போட்டா USD 10 கொடுக்குறதா,ரகசியமா உங்க எல்லாருக்கும் சொல்லச் சொன்னாங்க,சொல்லிபுட்டேன்..

வாங்க..\\

ஏனுங்க அறிவன்.....இப்படி வம்புல மாட்டிவிடுறீங்க???
வருகைக்கு நன்றி அறிவன்!

Divya said...

\\ திகழ்மிளிர் said...
வாழ்த்துக்கள்\\

வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி திகழ்மிளிர்!!
தொடர்ந்து உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக்கொள்ளுங்கள்!

Divya said...

\\ முத்துலெட்சுமி said...
திவ்யா நட்சத்திர வாழ்த்துக்கள்.. எழுதுங்க கண்டிப்பா படிக்கிறோம்..\

வாங்க முத்துலெட்சுமி!
நீங்க பதிவுகளை கண்டிப்பா படிக்கிறேன்னு சொன்னது எனக்கு மிகுந்த உற்ச்சாகத்தை தந்தது,

வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி!

Divya said...

\\ .:: மை ஃபிரண்ட் ::. said...
நட்சத்திர வாழ்த்துக்கள் திவ்யா..

இந்த வாரம் தமிழ்மணத்துக்கு தீபாவளியாமே? மத்தாப்பு கொளுத்துவோமா? :-)

//இவ்வாரத்தில் நான் பதிவிடும் பதிவுகளை அவசியம் படியுங்கள், உங்கள் கருத்துக்களையும், விமர்சனங்களையும் நிச்சயம் பின்னூட்டமிடுவீர்கள் என நம்புகிறேன்.
//

கண்டிப்பாக. எங்கள் அனைவரின் ஆதரவும் உங்களுக்கு கண்டிப்பாக உண்டு. :-)\

ஹலோ மை ஃபிரண்ட்,
மத்தாப்பு கொளுத்தி அசத்திபுட்டீங்க, ரொம்ப நன்றி!
உங்கள் ஆதரவு தான் எனது ஆக்கம்!

Divya said...

\\ delphine said...
Star Wishes
\\

Thanks a lot for your wishes Delphine!!

Divya said...

\\ இராம்/Raam said...
நட்சத்திர வாழ்த்துக்கள்.. :)\\

வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி இராம்!!

Divya said...

\\ மங்களூர் சிவா said...
எக்கா வாக்கா!!

தமிழ் மணத்தை தூசி தட்டி நல்லா பெருக்கி மொழுகி பளிச்சுனு ஆக்கீறனும்!

கோயமுத்தூரா இருக்கட்டும் இருக்கட்டும். வேற எதோ சொன்னாப்ல இருந்தது!!\\

சிவா, உங்கள் உற்ச்சாகமுட்டும் பின்னூட்டத்திற்கு ரொம்ப நன்றி!

Divya said...

\\ மங்களூர் சிவா said...
நட்சத்திர வார வாழ்த்துக்கள்\

சிவா, உங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றிகள் பல!!

Divya said...

\\ மஞ்சூர் ராசா said...
அன்பு திவ்யா இனிய நட்சத்திர வாழ்த்துகள்.

கோவைக்கே உரித்தான குசும்புடனும், மண்வாசனையுடனும் சிறந்தப் பதிவுகளை தருவீர்கள் என்று நம்புகிறேன்.

நட்சத்திரவாரம் வெற்றியடைய மீண்டும் ஒரு முறை வாழ்த்துகள்.

http://groups.google.com/group/muththamiz\\

வாங்க மஞ்சூர் ராசா,

உங்கள் மன்மார்ந்த வாழ்த்துக்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள்!

Divya said...

\\ veyilaan said...
நட்சத்திர வாழ்த்துகள் திவ்யா!!!!\

வெயிலன், உங்கள் வாழ்த்துக்களுக்கு ரொம்ப ரொம்ப நன்றி!

Divya said...

\\ siva gnanamji(#18100882083107547329) said...
பின்னூட்டம் போட்டா USD 10 ஆ?
சொக்கா சொக்கா........\\

ஹலோ சிவா, USD 10 ஒரு பின்னூட்டத்திற்குன்னு புரளி கிளப்பிவிட்டிருக்காங்க!

உங்கள் வருகைக்கு நன்றி சிவா!

Divya said...

\\ கோபிநாத் said...
வாழ்த்துக்கள் திவ்யா..;))

\\இவ்வாரத்தில் நான் பதிவிடும் பதிவுகளை அவசியம் படியுங்கள்,\\

அட..அதுக்கு தானே நாங்க இருக்கோம்...எழுதுங்கள் ;)\\

வாழ்த்துக்களுக்கு ரொம்ப ரொம்ப நன்றி கோபி!

Divya said...

\\ ஆயில்யன் said...
வாழ்த்துக்கள் :))\\

வாங்க ஆயில்யன்,
உங்கள் வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி!

Divya said...

\\ கானா பிரபா said...
போனவாரம் முழுக்க உளவியல் பதிவுகளோடு கிர்ரடிச்சிருக்கோம். ஏதோ பாத்து எங்க நிலமையை கவனத்தில் கொண்டு எழுத வேண்டுகிறேன் ;-)

நட்சத்திர வாழ்த்துக்கள்\\

கானா பிரபா.......வருக்கைக்கு முதல் நன்றி,
உங்கள் வாழ்த்துக்களுக்கு ஒரு சிறப்பு நன்றி!!

Divya said...

\\ துளசி கோபால் said...
ம்ம்ம்ம்ம்.அப்புறம்?

கதையை ஆரம்பிங்க திவ்யா.

நட்சத்திர வாழ்த்துகள்.\\

வாங்க! வாங்க! துளசி கோபால்,

கதை கேட்க ரெடியா இருக்கிறீங்களா??

வாழ்த்துக்களுக்கு நன்றி! நன்றி!

Divya said...

\\ சுந்தர் / Sundar said...
All the Best .
\

Thanks Sundar!

Divya said...

\\ மணியன் said...
நட்சத்திர வாரத்தில் மிளிர்ந்திட வாழ்த்துகள் !!\\

நட்சத்திரமாக மிளிர நீங்கள் அளித்த வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி மணியன்!

Divya said...

\\ அருட்பெருங்கோ said...
வாழ்த்துகள்!!!
எழுதுங்கள்… வாசிக்கிறோம்!!!\

அருட்பெருங்கோ ,உங்கள் கவிதைகளின் விசிறி நான்!
உங்கள் வருகைக்கும், வாழ்த்துக்களுக்கும் ரொம்ப ரொம்ப நன்றி!

Divya said...

\\ TBCD said...
தொடர்ந்து மூன்றுப் பெண் நட்சத்திரங்கள்...!!!

நட்சத்திர வாழ்த்துக்கள்..\\

தமிழ்மணம் பெண் பதிவர்களை ஊக்கப்படுத்துவது நல்லதொரு விஷயம்தாணே TBCD!

உங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி!

Divya said...

\\ தேவ் | Dev said...
ம்ம்ம் நட்சத்திரமாயாச்சா... வாழ்த்துக்கள்\

தேவ் அண்ணா!
நீங்கள் அள்ளித்தந்த அறிவுரைகளும், ஊக்கமும் தான் நட்சத்திரமாக்கியிருக்கிறது!

உங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி அண்ணா!

Divya said...

\\ குமரன் (Kumaran) said...
வாழ்த்துகள் திவ்யா.\\

வாங்க குமரன்,
உங்கள் வருகைக்கும், வாழ்த்துக்களுக்கும் மிக்க நன்றி!

Divya said...

\\ வினையூக்கி said...
:) :) வாழ்த்துக்கள்
\\

வாழ்த்துக்களுக்கு நன்றி வினையூக்கி!

Divya said...

\\ CVR said...
நட்சத்திர வாழ்த்துக்கள் திவ்யா!!!
எப்பவும் போல கலக்குங்க!! :-)\

எப்பவும் போல உங்கள் கருத்துக்களும், ஊக்கமும் எனக்கு அவசியம் தேவை சிவிஆர்!

உங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி!

Divya said...

\\ ILA(a)இளா said...
வாங்க வாங்க. வாழ்த்துக்கள்!. நம்ம ஏரியாதானா.. அங்கேயும்., இங்கேயும்\\

ஏனுங்க இளா,நீங்களும் கோயமுத்தூருங்களா??

ஊர்காரர் ஆகிட்டீங்க!

உங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி இளா!

Divya said...

\\ Dreamzz said...
கலக்குங்க அம்மணி.. வாழ்த்துக்கள் :)\\

வாழ்த்துக்களுக்கு நன்றி Dreamzz!

Divya said...

\\ கோவை சிபி said...
வாழ்த்துகள்.\\

வருகைக்கு,வாழ்த்துக்களுக்கும் மிக்க நன்றி கோவை சிபி!

Nimal said...

வாழ்த்துக்கள் திவ்யா!

இந்த வாரம் நிறைவாக நிறைய எழுதி கலக்குங்க... (நான் கொஞ்சம் லேட்..:))

Divya said...

\\ வீ. எம் said...
வாழ்த்துக்கள் திவ்யா. தொடரட்டும் உங்கள் நட்சத்திர வாரம்...\\

வாழ்த்துக்களுக்கு நன்றி வீ.எம்!

தொடர்ந்து வருகை தாருங்கள்!

Divya said...

\\ Anonymous said...
poatu thaakiduvom...allarum sendamil talking i the engleesla damil talking.. :D

~gils\\

வாங்க கில்ஸ்!
பின்னூட்டம் போட்டு தாக்கிடுங்க ஒகேவா??

நன்றி gils!

Divya said...

\\ My days(Gops) said...
வாழ்த்துக்கள்.... பதிவு இதுல தானே போடுவீங்க?\\

வாழ்த்துக்களுக்கு நன்றி கோப்ஸ்!

பதிவு இதே வலைத்தளத்தில் தான் வெளிவரும்!
அவசியம் வருகைத்தாருங்கள் கோப்ஸ்!

Divya said...

\\ Sabesh said...
Wishes.....

Thanks a lot for your wishes Sabesh!

Divya said...

\\ காட்டாறு said...
நட்சத்திர வாழ்த்துக்கள் திவ்யா! அப்போ நெறையா கதை இருக்கும் இந்த வாரத்துலன்னு சொல்லுங்க. :-)\

வாழ்த்துக்களுக்கு நன்றி காட்டாறு!

'கதையும்' இருக்கும் இவ்வாரத்தில்!

Divya said...

\\ ரசிகன் said...
ஆஹா.. மாஸ்டர் ..டிரிட் எங்கே... வாழ்த்துக்கள்..கலக்குங்க...\\

வாழ்த்துக்களுக்கு நன்றி 'மிஸ்டர்'ரசிகன்!

Divya said...

\\ சேதுக்கரசி said...
நட்சத்திர வார வாழ்த்துக்கள்\

வாங்க சேதுக்கரசி,

உங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி!

G.Ragavan said...

ஆகா...நீங்கதான் நச்சத்திரமா. வாழ்த்துகள். ஏற்கனவே எல்லாரும் வாழ்த்தீட்டாங்க. நாந்தான் லேட்டு. இந்த வாரம் இனிய வாரமாக அமைய வாழ்த்துகள்.

cheena (சீனா) said...

நட்சத்திரவாரத்தில் ஜொலிக்க நல் வாழ்த்துகள் திவ்யா - வருக - அள்ளித் தருக பதிவுகளை

Divya said...

\\ G.Ragavan said...
ஆகா...நீங்கதான் நச்சத்திரமா. வாழ்த்துகள். ஏற்கனவே எல்லாரும் வாழ்த்தீட்டாங்க. நாந்தான் லேட்டு. இந்த வாரம் இனிய வாரமாக அமைய வாழ்த்துகள்.\\

ஹாய் ராகவன்,

சரியான நேரத்தில்தான் வாழ்த்தியிருக்கிறிங்க!
உங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி....நன்றி..நன்றி!!

Divya said...

\\ cheena (சீனா) said...
நட்சத்திரவாரத்தில் ஜொலிக்க நல் வாழ்த்துகள் திவ்யா - வருக - அள்ளித் தருக பதிவுகளை\\

வாங்க சீனா சார்,

உங்கள் ஊக்கம் எனக்கு மட்டில்லா மகிழ்ச்சியை தந்தது!மிக்க நன்றி!

ஜொள்ளுப்பாண்டி said...

வாங்க வாங்க நட்சத்திரமே..:))
என்னடா இங்கே ஏதோ ஜொலிக்குதேன்னு பார்த்தா நம்ம அம்மணி நட்சத்திரம் ஆய்ட்டீங்களா... ஆஹா.. woww.. வாழ்த்துக்கள் திவ்யா !!!

ஆமா இந்த வாரம் முச்சூடும் மத்தாப்பு மாதிரி கதைய எழுதி தள்ளுங்கம்மணி.. டிப்ஸ்.. சிப்ஸ் ஏதுனாச்சும் உண்டா..? ;))))

'நவிரன்' சதீஷ் - 'Naveran' Sathish said...

oh I am very happy to hear this Divya :)
You have the potential. All the best. I am sure u will make the best of this.

been a little away from blog.. athukula nira visayangala :))
I will surely read all and comment. But pls stand me, I am not able to type in Tamil :(

Divya said...

\\ ஜொள்ளுப்பாண்டி said...
வாங்க வாங்க நட்சத்திரமே..:))
என்னடா இங்கே ஏதோ ஜொலிக்குதேன்னு பார்த்தா நம்ம அம்மணி நட்சத்திரம் ஆய்ட்டீங்களா... ஆஹா.. woww.. வாழ்த்துக்கள் திவ்யா !!!

ஆமா இந்த வாரம் முச்சூடும் மத்தாப்பு மாதிரி கதைய எழுதி தள்ளுங்கம்மணி.. டிப்ஸ்.. சிப்ஸ் ஏதுனாச்சும் உண்டா..? ;))))\\

வாங்க பாண்டியண்ணா!

உங்கள் வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி.....நன்றி....நன்றி!

உங்களுக்கு இல்லாத டிப்ஸா?? கண்டிப்பா உண்டு!

Divya said...

\\ sathish said...
oh I am very happy to hear this Divya :)
You have the potential. All the best. I am sure u will make the best of this.

been a little away from blog.. athukula nira visayangala :))
I will surely read all and comment. But pls stand me, I am not able to type in Tamil :(\\

ஹாய் சதீஷ், நீங்க தமிழில் தான் பின்னூட்டமிட வேண்டுமென்ற அவசியம் இல்லை!
உங்கள் ஊக்கமளிக்கும் பின்னூட்டத்திற்கு ரொம்ப நன்றி சதீஷ்!!

தினேஷ் said...

தமிழ்மண(வான)த்திலும் நட்சத்திரமாக ஜொலிக்கும் உங்களுக்கு என்னுடைய நல்வாழ்த்துக்கள்… உங்கள் கல்விலும் நட்சத்திரமாக ஜொலிக்க என்னுடைய வாழ்த்துக்கள்…

தினேஷ்

Divya said...

\\ தினேஷ் said...
தமிழ்மண(வான)த்திலும் நட்சத்திரமாக ஜொலிக்கும் உங்களுக்கு என்னுடைய நல்வாழ்த்துக்கள்… உங்கள் கல்விலும் நட்சத்திரமாக ஜொலிக்க என்னுடைய வாழ்த்துக்கள்…

தினேஷ்\\

ஹாய் தினேஷ்!
உங்கள் வாழ்த்துக்களுக்கு என் மனமார்ந்த நன்றி!

ஜி said...

வாழ்த்துக்கள். படிச்சிடுவோம் :)))

Anonymous said...

வாழ்த்துக்கள் திவ்யா,,,,,,,

எழுதுங்கள்,,,,எழுதுங்கள்,,,,,,,,

என்றும் முற்றுமே இல்லா முடிவிலியாக,,,,,,,,,,,,,

Divya said...

\\ தினேஷ் said...
தமிழ்மண(வான)த்திலும் நட்சத்திரமாக ஜொலிக்கும் உங்களுக்கு என்னுடைய நல்வாழ்த்துக்கள்… உங்கள் கல்விலும் நட்சத்திரமாக ஜொலிக்க என்னுடைய வாழ்த்துக்கள்…

தினேஷ்\

உங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி தினேஷ்

Divya said...

\\ ஜி said...
வாழ்த்துக்கள். படிச்சிடுவோம் :)))\

வாங்க ஜி....நன்றி!

Divya said...

\\ Anonymous said...
வாழ்த்துக்கள் திவ்யா,,,,,,,

எழுதுங்கள்,,,,எழுதுங்கள்,,,,,,,,

என்றும் முற்றுமே இல்லா முடிவிலியாக,,,,,,,,,,,,,\\\

வாங்க அனானி.......
ஊக்கமளித்ததிற்கு நன்றி!

Raghavan alias Saravanan M said...

திவ்யா,

முதல் முறை வருகை இங்கே தோழி! நலமாயிருப்பீர்கள் என்று பலமாய் நம்புகிறேன்.

நட்சத்திரமா? வாழ்த்துக்கள்.. கலக்குங்க..

ஏனுங்க அம்மணி.. கோயமுத்தூருங்களா? நான் அங்க தானுங்க எண்ட பொறியியல் படிப்புப் படிச்சேன்.. ஒரு மூணரை வருஷம் ஓடிப் போச்சுங்க அங்க.. சூப்பரு ஊருங்கோ... :)

கதை கேளு கதை கேளு ன்னு சொல்றீங்க. .கேட்டுட்ட்டாப் போச்சி.. நானும் ஒரு கதை எழுதுறேனுங்கோ.. பாருங்கோ... அது பாதியில நிக்குது.. தொடரணும் :)

நெறைய எழுதுங்கோ.. பிரிச்சுப் பெடல் எடுங்கோ.. வாழ்த்துறேனுங்கோ...

வரட்டுங்களா....

தோழமையுடன்,
இராகவன் என்ற சரவணன் மு.

Divya said...

\\ Raghavan alias Saravanan M said...
திவ்யா,

முதல் முறை வருகை இங்கே தோழி! நலமாயிருப்பீர்கள் என்று பலமாய் நம்புகிறேன்.

நட்சத்திரமா? வாழ்த்துக்கள்.. கலக்குங்க..

ஏனுங்க அம்மணி.. கோயமுத்தூருங்களா? நான் அங்க தானுங்க எண்ட பொறியியல் படிப்புப் படிச்சேன்.. ஒரு மூணரை வருஷம் ஓடிப் போச்சுங்க அங்க.. சூப்பரு ஊருங்கோ... :)

கதை கேளு கதை கேளு ன்னு சொல்றீங்க. .கேட்டுட்ட்டாப் போச்சி.. நானும் ஒரு கதை எழுதுறேனுங்கோ.. பாருங்கோ... அது பாதியில நிக்குது.. தொடரணும் :)

நெறைய எழுதுங்கோ.. பிரிச்சுப் பெடல் எடுங்கோ.. வாழ்த்துறேனுங்கோ...

வரட்டுங்களா....

தோழமையுடன்,
இராகவன் என்ற சரவணன் மு.\

வாங்க இராகவன்!
வருகைக்கு நன்றி,

அட நீங்க என்ற ஊருலதான் படிச்சீங்களாக்கும்....சூப்பரு ஊருமட்டுமில்லிங்கோ...நல்ல மனசுகாரங்க உள்ள ஊரும் அதுதானுங்கோவ்!

வாழ்த்தோ வாழ்துன்னு வாழ்த்தி அசத்திப்புட்டிங்க.....ரொம்ப..ரொம்ப நன்றி!!

[பொறுமையா நேரம் இருக்கிறப்போ கதைகளை படிங்க இராகவன்]

இரா.கோகிலவாணி கார்த்திகேயன் said...

99 வரை வந்தாச்சே, நாம 100 ஆக இருக்கலாமுன்னு!

நேற்று முழுவதும் உங்க கதைகள் தான்!
தொடர்கதைகள் முடித்தாச்சு. சிறு கதைகள் இன்று படித்துவிடுவேன்.

கதையின் நடை அருமையாக உள்ளது!

நாடோடி said...

101 --- நல்ல நம்பர்னு யாரோ சொல்லி ஞபாகம் (மொய் கூட ஒன்னா தானே வைப்பாங்க..) :-)

ஹாய் திவ்யா..உங்க பதிவுகள படிச்சதுக்கு அப்புறம் எங்கேயாவது கமென்ட்டலாம்னு பார்த்தா எங்க எழுதுறதுனு தெரியலை..அதான் உங்க நட்சத்திர பதிவுலையே எழுதிடறேன்..

ஆறம்பத்துல நீங்க எழுதின எல்லா பதிவுகளையும் படிச்சிருக்கேன். 2007ல அவ்வளவா எழுதாம விட்டுடீங்களே..

இப்போ கொஞ்ச நாள் முன்னாடி தான் மறுபடியும் உங்க ப்ளாக் படிக்க ஆறம்பித்து எல்லாத்தையும் படிச்சு முடிச்சிட்டேன். நடுவுல இந்த ஒன்றரை வருஷம் எப்படி விட்டேன்னே (ஓடுச்சுன்னு) தெரியலை.

இந்த வருஷம் இப்ப வரைக்கும் நீங்க எழுதின எல்லாமே ரொம்ப சூப்பருங்க. ஒரு சில பதிவகள் பத்தி சொல்லாம போறதுக்கு மனசு வரலை...

என் அப்பாவின் அன்பைத் தேடி...
நீங்க எழுதினதுல எல்லாத்தையும் விட என்னை ரொம்ப பாதிச்ச கதைனா அது இது தானுங்க. இத படிக்கும் போது "என் அப்பாவை தேடி.."னு தான் படிக்க தோனுச்சு. வேற எதையும் சொல்லி கஷ்டப்பட(படுத்த) விரும்பலை. நல்ல பதிவு!

தாய்மை - feel பண்ண வச்ச கதை இது. ரொம்ப அழகா எழுதிருக்கீங்க. esp. அநத கவிதை! கலக்கல். என்ன பொறுத்த வரைக்கும் தொடர் கதைய விட சிறுகதைக்கு ரீச் அதிகம். அதனாலயே இது அழகாக இருந்தது.

அடுத்ததா "அப்பாவின் நினைவில்".. கவிதையை எத்தன தரம் படிச்சாலும் என்னமோ செய்யுது திவ்யா! ஒன்னும் சொல்றதுக்கு தோண மாட்டேங்கிது!

ஒரு 'feel good' story சொல்லனும்னா, அது "காதலிக்கும் ஆசையில்லை கண்கள் உன்னை காணும்வரை....!" - கதாநாயகி படிச்சு முடித்தவுடனே கல்யானம் பண்ணிகிறான்ற ஒரு விஷயத்தத் தவிர (உண்மைனாலும் இப்ப கொஞ்சம் rare தானுங்களே) இது சூப்பர் கதை.. இது short and (அதனாலயே ரொம்ப) sweet.

அப்புறம் இப்போ நீங்க எழுதிட்டு இருக்கிற - "நீ வேண்டும்....நீ வேண்டும்...என்றென்றும் நீ வேண்டும்" - மிக அழகாக தொடுக்க பட்டத் தொடர் கதை..முடிவு எப்படி இருந்தாலும் இநத கதைக்கு அழகா இருக்கும்னு தான் நினைக்கிறேன்.

முன்பு 'விநய்'ங்கிற பேர்ல ப்ளாக்/கமெண்ட் எழுதிட்டு இருந்தத விட்டு ரொம்ப நாளாகுது. இப்போ தான் கமெண்ட்ஸ் போட ஆறம்பித்திருக்கேன்..

தொடர்ந்து (எழுதி) கலக்குங்க திவ்யா. வாழ்த்துக்கள்.

Divya said...

\\ கோகிலவாணி கார்த்திகேயன் said...
99 வரை வந்தாச்சே, நாம 100 ஆக இருக்கலாமுன்னு!

நேற்று முழுவதும் உங்க கதைகள் தான்!
தொடர்கதைகள் முடித்தாச்சு. சிறு கதைகள் இன்று படித்துவிடுவேன்.

கதையின் நடை அருமையாக உள்ளது!\\

வாங்க கோகிலா,

உங்கள் 100-வது பின்னூட்டத்திற்கு என் மனமார்ந்த நன்றிகள்!

பொறுமையுடன் என் பதிவுகளை படித்து உங்கள் கருத்துக்களையும், பாராட்டையும் பின்னூட்டமிட்டு ஊக்கபடுத்தியதற்கு மிக்க நன்றி!!

மீண்டும் வருக!!

Divya said...

\\ நாடோடி said...
101 --- நல்ல நம்பர்னு யாரோ சொல்லி ஞபாகம் (மொய் கூட ஒன்னா தானே வைப்பாங்க..) :-)\\


வாங்க நாடோடி[விநய்]
சவுக்கியமா?
நீண்ட இடைவெளிக்கு பின் உங்களை என் பதிவில் பார்ப்பதில் மிக்க மகிழ்ச்சி!!
101-மொய் வைச்சுட்டீங்க.......நன்றி!!

\\ஹாய் திவ்யா..உங்க பதிவுகள படிச்சதுக்கு அப்புறம் எங்கேயாவது கமென்ட்டலாம்னு பார்த்தா எங்க எழுதுறதுனு தெரியலை..அதான் உங்க நட்சத்திர பதிவுலையே எழுதிடறேன்..\\


நல்ல தேர்வு......இந்த பதிவை நீங்க தேர்ந்தெடுத்தது!!




\\ஆறம்பத்துல நீங்க எழுதின எல்லா பதிவுகளையும் படிச்சிருக்கேன். 2007ல அவ்வளவா எழுதாம விட்டுடீங்களே..\\

ஆமாம் விநய்....சில காரணங்களால் எழுத முடியாமல் போனது, பின் நண்பர்கள் கொடுத்த ஊக்கமும் உற்சாகமும் .......மீண்டும் என்னை எழுத வைத்தது!!




\இப்போ கொஞ்ச நாள் முன்னாடி தான் மறுபடியும் உங்க ப்ளாக் படிக்க ஆறம்பித்து எல்லாத்தையும் படிச்சு முடிச்சிட்டேன். நடுவுல இந்த ஒன்றரை வருஷம் எப்படி விட்டேன்னே (ஓடுச்சுன்னு) தெரியலை.

இந்த வருஷம் இப்ப வரைக்கும் நீங்க எழுதின எல்லாமே ரொம்ப சூப்பருங்க. ஒரு சில பதிவகள் பத்தி சொல்லாம போறதுக்கு மனசு வரலை...\


இத்தனை நாட்கள் கழித்து என் பதிவுகளை படித்தது மட்டுமில்லாமல்.....உங்கள் கருத்தையும் தெரிவிக்க நீங்க நினைத்ததை எண்ணி வியந்தேன்.....நன்றி!!நன்றி!!



\\என் அப்பாவின் அன்பைத் தேடி...
நீங்க எழுதினதுல எல்லாத்தையும் விட என்னை ரொம்ப பாதிச்ச கதைனா அது இது தானுங்க. இத படிக்கும் போது "என் அப்பாவை தேடி.."னு தான் படிக்க தோனுச்சு. வேற எதையும் சொல்லி கஷ்டப்பட(படுத்த) விரும்பலை. நல்ல பதிவு!\\


என் மனசு கஷ்டபடக்கூடாதுன்னு நீங்க நினைச்சது......என்னை நெகிழவைத்தது, உங்கள் புரிதலுக்கு நன்றி!


\\தாய்மை - feel பண்ண வச்ச கதை இது. ரொம்ப அழகா எழுதிருக்கீங்க. esp. அநத கவிதை! கலக்கல். என்ன பொறுத்த வரைக்கும் தொடர் கதைய விட சிறுகதைக்கு ரீச் அதிகம். அதனாலயே இது அழகாக இருந்தது.\\


நான் மிகந்த ஈடுபாட்டுடன்..........ரசித்த பதிவு இது,அதுவும் அந்த கவிதை.......தானாக என் மனதில் அந்த நொடியில் தோன்றியது, மறக்க முடியாத பதிவிது.


\\அடுத்ததா "அப்பாவின் நினைவில்".. கவிதையை எத்தன தரம் படிச்சாலும் என்னமோ செய்யுது திவ்யா! ஒன்னும் சொல்றதுக்கு தோண மாட்டேங்கிது!\\


ஹும்.....புரியுது:(



\\ஒரு 'feel good' story சொல்லனும்னா, அது "காதலிக்கும் ஆசையில்லை கண்கள் உன்னை காணும்வரை....!" - கதாநாயகி படிச்சு முடித்தவுடனே கல்யானம் பண்ணிகிறான்ற ஒரு விஷயத்தத் தவிர (உண்மைனாலும் இப்ப கொஞ்சம் rare தானுங்களே) இது சூப்பர் கதை.. இது short and (அதனாலயே ரொம்ப) sweet.\\


சும்மா....ஜாலியா ஒரு காதல் கதை ஜில்லினு எழுதனும்னு ட்ரை பண்ணினேன்.....கதையும் அழகா வந்துடுச்சு, உங்கள் ரசிப்பிற்கு நன்றி!!




\\அப்புறம் இப்போ நீங்க எழுதிட்டு இருக்கிற - "நீ வேண்டும்....நீ வேண்டும்...என்றென்றும் நீ வேண்டும்" - மிக அழகாக தொடுக்க பட்டத் தொடர் கதை..முடிவு எப்படி இருந்தாலும் இநத கதைக்கு அழகா இருக்கும்னு தான் நினைக்கிறேன்.

முன்பு 'விநய்'ங்கிற பேர்ல ப்ளாக்/கமெண்ட் எழுதிட்டு இருந்தத விட்டு ரொம்ப நாளாகுது. இப்போ தான் கமெண்ட்ஸ் போட ஆறம்பித்திருக்கேன்..

தொடர்ந்து (எழுதி) கலக்குங்க திவ்யா. வாழ்த்துக்கள்.\\


உங்கள் விரிவான பின்னூட்டம் எனக்கு அளித்த ஊக்கத்தை விவரிக்க வார்த்தைகள் என்னிடம் இல்லை விநய்!!

உங்கள் தொடர் வருகையை மிகவும் எதிர்பார்கிறேன்!!

நாடோடி said...

கண்டிப்பா.. இத விட இப்போதைக்கு வேர வேலை ஒன்னும் இல்லைங்க :)

"நீ வேண்டும்..." "மாப்ள.....நம்ம........ந......ந்தி.....னி............" கண் இருண்டது கார்த்திக்கிற்கு....

இது உங்களுக்கே நியாயமா?? இப்படி சொல்லி முடிச்சிட்டு இன்னும் அடுத்தப் பகுதி போடலைனா எப்படிங்க.. அடுத்தது எப்போ திவ்யா?

விநய்'ற பேர்ல கணேஷ்!
கமெணட்ல பேர எழுத சோம்பேறித் தனமா இருந்ததால இந்த profile create பண்ணிட்டேன் :)

Divya said...

\\ நாடோடி said...
கண்டிப்பா.. இத விட இப்போதைக்கு வேர வேலை ஒன்னும் இல்லைங்க :)

"நீ வேண்டும்..." "மாப்ள.....நம்ம........ந......ந்தி.....னி............" கண் இருண்டது கார்த்திக்கிற்கு....

இது உங்களுக்கே நியாயமா?? இப்படி சொல்லி முடிச்சிட்டு இன்னும் அடுத்தப் பகுதி போடலைனா எப்படிங்க.. அடுத்தது எப்போ திவ்யா?

விநய்'ற பேர்ல கணேஷ்!
கமெணட்ல பேர எழுத சோம்பேறித் தனமா இருந்ததால இந்த profile create பண்ணிட்டேன் :)\\



aha.....udaney commen potuteenga,
appo full time blog reader aagiteenglo??
just kidding!!


Sure Ganesh.....will post the next part of the thodar soon...sorry for keeping u all waiting:((

[athenna nadodi........like 'Nadodi mannan'......nallathan iruku peru:))]

நாடோடி said...

//aha.....udaney commen potuteenga, appo full time blog reader aagiteenglo??//
ஆமாங்க.. டைம் கிடைக்கும் போதெல்லாம் படிக்கனும்னு resolution ((mid year'ல கொஞ்சம் லேட்டா) எடுத்திருக்கேன் :D

//Sure Ganesh.....will post the next part of the thodar soon...sorry for keeping u all waiting:(( //
அய்யோ.. சாரி'லாம் எதுக்குங்க.. நேரம் கிடைக்கும் போது எழுதுங்க.. Wait பண்றோம்

//[athenna nadodi........like 'Nadodi mannan'......nallathan iruku peru:))] //
ஓ அது சும்மா.. நான் நிறைய Travel பண்ணுவேன்.. அதான் போகிற போக்கில பார்க்கிற எதாச்சும்
என்னிக்காவது எழுதனும்னு தோனுச்சுனா எழுதலாம்னு...

ஆஹா.. full time blog reader ஆகிட்டேன்னு தான் நினைக்கிறேன்.. உங்க எல்லாம் கமென்ட்டுக்கும் பதில் போட்டுடனே.. :)