January 17, 2008

அவள் வருவாளா??? - பகுதி 4



பகுதி -1 பகுதி -2 பகுதி -3


ராஹினியை நோக்கி வந்த ராஜா, அவளிடம்..

"என்னாச்சு?"

"அது.....வந்து..."-ராஹினி

"ஹும், ப்ரிபர்டா இல்லியா?" - ராஜா.

"ஹும்" - ராஹினி.

"சரி, ஆடிடோரியம் பின்னால இருக்கிற கேர்ள்ஸ் பாத்ரூம் பக்கம் வெயிட் பண்ணு, 5 மினிட்ஸ்ல வாங்கிட்டு வந்துடுறேன்" - ராஜா.


ராஹினிக்கு வியப்பாக இருந்தது, பெண்களின் 'அந்த நாட்கள்' அவள் எதிர்பாராத வேளையில் அவளை சந்திக்க, உடன் நடனமாடும் பெண்களிடம் உதவி கேட்கும் சந்தர்ப்பம் கிடைக்காமல் தினறிய தனது தவிப்பை, இவன் எப்படி கண்டுபிடித்தான்? சிந்தனையுடன் காத்திருந்தாள் ராஹினி.

பைக்கில் இருந்தபடியே ராஹினியிடம் 'பார்சலை' கொடுத்துவிட்டு சென்றான் ராஜா.

தன் 'வேலைகளை' முடித்துவிட்டு டான்ஸ் ஹாலுக்கு ராஹினி வந்தபோது, அங்கே டான்ஸ் குரூப்பில் உள்ள அனைவரும் கேன்டினிலிருந்து திரும்பி வந்திருந்தனர். ராஜாவிடம் நன்றி சொல்ல தருணம் கிடைக்கவில்லை ராஹினிக்கு.

'கரெக்ட் நேரத்துக்கு எவ்வளவு பெரிய ஹெல்ப் பண்ணியிருக்கிறான், ஒரு தாங்க்ஸ் சொல்லிடனும்' என்று நினைத்தவளாக டான்ஸ் ப்ராக்டிஸ் முடிந்ததும் ராஜாவை தேடினாள்.
பைக் ஸ்டாண்டில் அவன் மட்டும் இருந்தது வசதியாக போனது ராஹினிக்கு, தன் நன்றியை தெரிவிக்க.

பைக்கில் அமர்ந்திருந்த அவன் முன் போய் நின்றாள்,
"ராஜா.." - ராஹினி.

"ஹும்" - ராஜா.

"ரொம்ப.......தாங்க்ஸ்" - ராஹினி.

"ஹும்" - ராஜா.

ராஜா 'ஹும்' தவிர வேற எந்த ஒரு ரியாக்ஷனும் காட்டாத்து ராஹினிக்கு ஏமாற்றமாக இருந்தது. 'செய்த ஹெல்புக்கு தாங்க்ஸ் சொல்லியாச்சு, அவ்வளவுதான்'என்று தன் வீம்புக்கு திரும்பியவளாக அவ்விடம் விட்டு நகர்ந்தாள்.

"ராஹினி.......ஒரு நிமிஷம்" - ராஜா.

ராஜா அழைத்ததும், நின்று அவனைத் திரும்பி பார்த்தாள்...

" உனக்கு இன்னிக்கு ஏற்பட்ட நிலைமைதான் அன்னிக்கு ஸ்கூல்ல கல்பனாவுக்கு ஏற்பட்டது. அவ ஸ்கூல் யுனிபார்மும் ஸ்பாயில் ஆகிடுச்சு, க்ளாஸ்ல கேர்ள்ஸ் யாரும் அந்நேரம் இல்ல, அதான் என் பேண்ட் கொடுத்து ஹெல்ப் பண்ணினேன்.
உன்கிட்ட இது சொல்ல எவ்வளவோ ட்ரை பண்ணினேன், நீ கேட்கல.
இப்பவும் சொல்லிருக்க மாட்டேன், கல்பனாவை பத்தி உன் மனசுல இருக்கிற தப்பான எண்ணமாச்சும் மாறட்டும், உனக்கு வந்த நிலமை இன்னொரு பொண்ணுக்கு வந்ததை புரிஞ்சுப்பேன்னு தான் சொன்னேன்,................ குட் பை!" - ராஜா.

ராஹினியின் பதிலுக்கு காத்திராமல் மின்னலென பறந்தான் பைக்கில்.


'கண்ணால் காண்பதும் பொய்,
காதால் கேட்பதும் பொய்,
தீர விசாரிப்பதே மெய்!'


என்பது சுரீரென ராஹினிக்கு உறைத்தது. தன் அவசர முடிவினால் எவ்வளவு பெரிய தப்பு பண்ணிட்டோம் என உணர்ந்த ராஹினிக்கு " என்னை மன்னிச்சிடு ராஜா" என்று கத்த வேண்டும் போல் இருந்தது.


ராஜாவின் பைக் சென்ற திசையையே பார்த்துக்கொண்டிருந்த அவளது கண்களில் நீர் தழும்பி வழிந்தது. கண்ணிரைத் துடைத்துவிட்டு திரும்பி நடக்க ஆரம்பித்த ராஹினியை உரசிக்கொண்டு பைக்கை நிறுத்தினான் ராஜா.

சன் க்ளாஸை கழட்டிவிட்டு, தலை முடியை கோதிவிட்டபடி, ராஹினியை பார்த்தான்.
மீண்டும் கண்களில் துளிர்த்த நீரைக் கட்டுபடுத்த முடியாமல் திணறிய ராஹினியிடம்,

"ஹலோ.......நோ அழுகாச்சி ப்ளீஸ்! என் பைக் மிரரில் பார்த்தேன் நீ கண்ணீர் துடைச்சிக்கிறதை, பொண்ணு ஃபீல் பண்றான்னு தெரிஞ்சதும் உடனே U turn போட்டு வந்துட்டேன்........ராகு..........ஸாரி ராஹினி" - ராஜா.

"ஹே........ராகுனே கூப்பிடு...........ஸாரி.............ஸோ..........ஸாரி..........ப்ளீஸ் மன்னிச்சிடு" - கெஞ்சலுடன் ராஹினி.

ராஹினியின் கெஞ்சல் குரல் கிரங்கடிக்க, காதலும் குறும்பும் கலந்த அவன் பார்வையே அவளது மன்னிப்பு கோரிக்கையை ஏற்றுக்கொண்டதை உணர்த்தியது.




காற்றின் மொழியே..
ஒலியா..இசையா..
பூவின் மொழி...
நிறமா...மணமா..

கடலின் மொழி..
அலையா...நுரையா..
காதல் மொழி...
விழியா...இதழா..

இயற்க்கையின் மொழிகள் புரிந்து விடில்
மனிதரின் மொழிகள் தேவை இல்லை,
இதயத்தின் மொழிகள் புரிந்து விடில்
மனிதருக்கு மொழியே தேவை இல்லை.




கண் அசைவிலேயே தன் பைக்கின் பின் இருக்கையை ராஜா சுட்டிக்காட்ட, வெட்கப்புன்னகையுடன் அவனது பைக்கில் ஏறினாள் ராஹினி.
காதல் பயணம் ஆரம்பமானது........!!!



[முற்றும்]

46 comments:

ஜொள்ளுப்பாண்டி said...

Wow... திவ்யா
அருமையா இருக்கு... அழகான முடிவு... எப்படீங்க இப்படி சூப்பரா எழுதறீங்க !!! கலக்குங்க...

ஜொள்ளுப்பாண்டி said...

//ராஹினியின் கெஞ்சல் குரல் கிரங்கடிக்க, காதலும் குறும்பும் கலந்த அவன் பார்வையே அவளது மன்னிப்பு கோரிக்கையை ஏற்றுக்கொண்டதை உணர்த்தியது. //


திவ்யா கதையோட
இந்த finishing ரொம்ப டச் பண்ணிடுச்சு.... அதுவும் அந்த பாடல் வரி ரொம்ப பொருத்தம்.. பேசாம சினிமா எடுக்கலாம் நீங்க... அப்படியே நம்மளுக்கும் ஒரு chance கொடுபீங்கல்ல.. ;)))

வாழ்த்துக்கள் !!

CVR said...

As always another cute story!!
Kudos!! B-)

Dreamzz said...

Wow, nice finishing :) superu
D

C.N.Raj said...

Divya,

Nalla irunthuthu Story.

Pasangkalalukku ellam backgroundla nalla oru advice panniyurukeengka..
Love panratha irunthaa ella helpum pannanum,ella careum edukkanum...
Menmaiyaana unarvukalil oru nalla kathai...

Raj.

வினையூக்கி said...

::):):)

Sunny said...

As usual fantastic!! Even Story writting style also quite improved with un-expected climax and happy ending. pls do keep writing divya. All the best.

கோபிநாத் said...

திவ்யா நன்றாக முடிச்சிட்டிங்க கதையை ;) கலக்குறிங்க ;)

உங்க கதையை படிக்கும் போது NOTEBOOKன்னு ஒரு மலையாள படம் ஞாபகத்துக்கு வருது.

Nimal said...

அழகான கதைக்கு ஒரு அருமையான முடிவு கொடுத்திருக்கிறீங்க... வாழ்த்துக்கள்...

கதையில் கருவைக் காட்டிலும் உங்களின் கதைசொல்லுக் பாணி சிறப்பாக இருக்கிறது, முக்கியமாக பொருத்தமான இடங்களில் கவிதைகள் சூப்பர்... இது போன்ற காதல் கதைகளில் கலக்கிறீங்க...

தொடர்ந்து சிறப்பாக எழுத வாழ்த்துக்கள்...

kart said...

happened to visit ur blog for the first time...good story...btw...are u from CIT, Coimbatore?

Unknown said...

nice one mam..
nice story flow..
keep it up..

Arunkumar said...

nice story &
nice ending

moral of this story:

-- basically pasanga ellarum nallavanga
-- pen buthi pin buthi

:)

'நவிரன்' சதீஷ் - 'Naveran' Sathish said...

கடைசில எழுதியிருக்கும் கவிதை ரொம்ப அருமை!! எப்டி இப்டி எழுத முடியுது உங்களால :)))

உங்களின் மொழி
வரிகளா படங்களா!!

ரசிகன் said...

அப்பாடா.... இவ்வளவு பிரச்சனைகள் இருக்கே ..கதையில ரெண்டுபேரும் ஒன்னு சேர முடியுமான்னு நெனச்சேன்..
பாராட்டுக்கள் திவ்யா மாஸ்டர்.. நல்ல முடிவை மென்மையா குடுத்ததற்க்கு.. வாழ்த்துக்கள்...

குசும்பன் said...

//பொண்ணு ஃபீல் பண்றான்னு தெரிஞ்சதும் உடனே U turn போட்டு வந்துட்டேன்........ராகு..........ஸாரி ராஹினி" - ராஜா//

இங்கதாங்க எல்லா பசங்களும் சொல்லி வெச்ச மாதிரி டபுக்குன்னு விழுந்து விடுகிறார்கள்:))

அது என்ன மாயமோ மந்திரமோ தெரியவில்லை அம்புட்டு பவுர் புல் ஆய்தம் அது:)

குசும்பன் said...

///காற்றின் மொழியே..
ஒலியா..இசையா..
பூவின் மொழி...
நிறமா...மணமா..

கடலின் மொழி..
அலையா...நுரையா..
காதல் மொழி...
விழியா...இதழா..

இயற்க்கையின் மொழிகள் புரிந்து விடில்
மனிதரின் மொழிகள் தேவை இல்லை,
இதயத்தின் மொழிகள் புரிந்து விடில்
மனிதருக்கு மொழியே தேவை இல்லை. ///


அவ்வ்வ் நீங்க இவ்வளோ சூப்பரா கவிதை எழுதுவீங்களா? கதை கவிதை என்று எல்லாத்துலேயும் கலக்குறீங்க!!!

பின் குறிப்பு: நான் மொழி படம் பார்க்கவில்லை, பாட்டும் கேட்டது இல்லை:)

தினேஷ் said...

கதையின் முடிவுக்கு பேச அல்லது எழுத தயங்கும் ஒரு விஷயத்தை நாகரிகமாக சிந்தித்து எழிதி நன்றாக முடித்திருக்கிற உங்கள் தைரியத்திற்கும் எழுத்திற்கும், என்னுடைய பாரட்டுக்கள்…

தினேஷ்

My days(Gops) said...

nice story &
nice ending

moral of this story:

//-- basically pasanga ellarum nallavanga
-- pen buthi pin buthi//

ரிப்பீட்டு ஆனால் தமிழ்'ல

பொதுவா,
பசங்க எல்லாரும்(இல்லை) நல்லவங்க..
பெண் புத்தி பின் புத்தி... :)

My days(Gops) said...

அப்புறம் சொல்ல மறந்துட்டேன்...

நான் உங்க கதை டிவீ சீரியலோட ஒப்பிடல, டிவி சீரியல்'ல முக்கியமான எடத்துல தொடரும்'னு போடுற மாதிரி நீங்களும் உங்க கதைக்கு தொடரும்'னு போட்டு இருக்கீங்க'னு சொல்ல வந்தேன்... சாரி :)

Anonymous said...

சூப்பர் ஆனா சுபம் திவ்யா :)

Anonymous said...

chancela..guess only gals can write like this!! movie mathiriye picslam poatu kalaasiteenga
~gils

Divya said...

\\ ஜொள்ளுப்பாண்டி said...
Wow... திவ்யா
அருமையா இருக்கு... அழகான முடிவு... எப்படீங்க இப்படி சூப்பரா எழுதறீங்க !!! கலக்குங்க...\\

பாண்டியண்ணா, முதல் முறையா முதல் பின்னூட்டம் என்னோட பதிவிற்கு போட்டிருக்கிறீங்க,
'கொத்து பரோட்டா' பார்ஸல் வந்துட்டேயிருக்கு சென்னைக்கு !

உங்கள் ஊக்கமளிக்கும் பின்னூட்டத்திற்கு நன்றிகண்ணா!

Divya said...

\\ ஜொள்ளுப்பாண்டி said...
//ராஹினியின் கெஞ்சல் குரல் கிரங்கடிக்க, காதலும் குறும்பும் கலந்த அவன் பார்வையே அவளது மன்னிப்பு கோரிக்கையை ஏற்றுக்கொண்டதை உணர்த்தியது. //


திவ்யா கதையோட
இந்த finishing ரொம்ப டச் பண்ணிடுச்சு.... அதுவும் அந்த பாடல் வரி ரொம்ப பொருத்தம்.. பேசாம சினிமா எடுக்கலாம் நீங்க... அப்படியே நம்மளுக்கும் ஒரு chance கொடுபீங்கல்ல.. ;)))

வாழ்த்துக்கள் !!\

நீங்க தாயாரிப்பாளாரா ஒரு சினிமா படம் எடுக்கிறதா இருந்தா சொல்லுங்க பாண்டிண்ணா.......நான்
'கதை,திரைக்கதை, டைரக்ஷன்' எல்லாம் பாத்துக்கிறேன்.......எப்படிங்கண்ணா வசதி??

Divya said...

\\ CVR said...
As always another cute story!!
Kudos!! B-)\\

நன்றி.....நன்றி.....நன்றி சிவிஆர்!

Divya said...

\\ Dreamzz said...
Wow, nice finishing :) superu\

சுபமான முடிவு ரொம்ப பிடிச்சிருந்ததோ ட்ரீம்ஸ்?

நன்றி!

Divya said...

\\ Raj said...
Divya,

Nalla irunthuthu Story.

Pasangkalalukku ellam backgroundla nalla oru advice panniyurukeengka..
Love panratha irunthaa ella helpum pannanum,ella careum edukkanum...
Menmaiyaana unarvukalil oru nalla kathai...

Raj.\\

ஹாய் ராஜ்,
கதையை படித்துவிட்டு ஒவ்வொரு முறையும் நீங்கள் அளிக்கும் விளக்கமான பின்னூட்டம் எனக்கு தரும் உற்ச்சாகத்தை விவரிக்க வார்ததைகள் போதாது!

மிக்க நன்றி ராஜ்!

Divya said...

\\ வினையூக்கி said...
::):):)
\\

நன்ரி வினையூக்கி!

Divya said...

\\ Sunny said...
As usual fantastic!! Even Story writting style also quite improved with un-expected climax and happy ending. pls do keep writing divya. All the best.\\

Hi Sunny,
Thanks a ton for visiting my page and sharing ur comments!
Also thanks for encouraging my writing skill specifically, it meant a lot to me!

Again thanks for your wishes,keep visiting!

Divya said...

\\ கோபிநாத் said...
திவ்யா நன்றாக முடிச்சிட்டிங்க கதையை ;) கலக்குறிங்க ;)

உங்க கதையை படிக்கும் போது NOTEBOOKன்னு ஒரு மலையாள படம் ஞாபகத்துக்கு வருது.\\

நன்றி ....நன்றி ....கோபி!

'நோட்புக்' என்று ஒரு மலையாள படத்தின் கதை இந்த கதையை மாதிரியே இருந்ததா?? ஆஹா!

Divya said...

\\ நிமல்/NiMaL said...
அழகான கதைக்கு ஒரு அருமையான முடிவு கொடுத்திருக்கிறீங்க... வாழ்த்துக்கள்...

கதையில் கருவைக் காட்டிலும் உங்களின் கதைசொல்லுக் பாணி சிறப்பாக இருக்கிறது, முக்கியமாக பொருத்தமான இடங்களில் கவிதைகள் சூப்பர்... இது போன்ற காதல் கதைகளில் கலக்கிறீங்க...

தொடர்ந்து சிறப்பாக எழுத வாழ்த்துக்கள்...\\

வாங்க நிமல்!

உங்கள் விரிவான, அழகான பின்னூட்டமளிக்கும் சந்தோஷத்திற்கு உங்களுக்கு ஒரு ஸ்பெஷல் தாங்க்ஸ்!

தொடர்ந்து உங்கள் உற்ச்சாகமளிக்கும் வார்த்தைகள் எனக்கு மிகவும் அவசியம்!

நன்றி நிமல்!

Divya said...

\\ kart said...
happened to visit ur blog for the first time...good story...btw...are u from CIT, Coimbatore?\\

Hi Kart!
Thanks for visiting my page for the first time...glad to know that you enjoyed reading the story!

I am not from CIT coimbatore!

Again thanks for your visit,
keep visiting!

Divya said...

\\ Shahul said...
nice one mam..
nice story flow..
keep it up..\\

Hi Shahul,
Thanks for your encouraging words!

Divya said...

\\ Arunkumar said...
nice story &
nice ending

moral of this story:

-- basically pasanga ellarum nallavanga
-- pen buthi pin buthi

:)\\

Hi Arun,
School days la, composition note la, 'story writing' eluthurapo , moral of the story nu last la eluthurathu neyapagam vanthurucho??

Ippo romba avasiyamaa.......ippadi moral of the story 'kodu' potu kamikanuma??

unga comment padichchu sirichu rasiththein Arun!

நன்றி......நன்றி.....அருண்குமார்!

Divya said...

\\ sathish said...
கடைசில எழுதியிருக்கும் கவிதை ரொம்ப அருமை!! எப்டி இப்டி எழுத முடியுது உங்களால :)))

உங்களின் மொழி
வரிகளா படங்களா!!\\

ஹலோ கவிஞர் சதீஷ்,
வாங்க! வாங்க!
அந்த கவிதை..மொழி படத்தில் வரும் வரிகள்! சொந்த கவிதை இல்லீங்கோ!!

உங்கள் வருக்கைக்கும் , பின்னூட்டத்திற்கும் நன்றி சதீஷ்!

Divya said...

\\ ரசிகன் said...
அப்பாடா.... இவ்வளவு பிரச்சனைகள் இருக்கே ..கதையில ரெண்டுபேரும் ஒன்னு சேர முடியுமான்னு நெனச்சேன்..
பாராட்டுக்கள் திவ்யா மாஸ்டர்.. நல்ல முடிவை மென்மையா குடுத்ததற்க்கு.. வாழ்த்துக்கள்...\\

உங்கள் கருத்துக்களுக்கும், வாழ்த்துக்களுக்கும் நன்றி 'மிஸ்டர்' ரசிகன்!

Divya said...

\\ குசும்பன் said...
//பொண்ணு ஃபீல் பண்றான்னு தெரிஞ்சதும் உடனே U turn போட்டு வந்துட்டேன்........ராகு..........ஸாரி ராஹினி" - ராஜா//

இங்கதாங்க எல்லா பசங்களும் சொல்லி வெச்ச மாதிரி டபுக்குன்னு விழுந்து விடுகிறார்கள்:))

அது என்ன மாயமோ மந்திரமோ தெரியவில்லை அம்புட்டு பவுர் புல் ஆய்தம் அது:)\\

பொண்ணு ஃபீல் பண்றதே பெரிய விஷயம்...அதையும் மிஸ் பண்ணிட்டா என்னவாகிறது, அதான் டபுக்குன்னு விழுந்துடுறாங்க!

Divya said...

\\ குசும்பன் said...
///காற்றின் மொழியே..
ஒலியா..இசையா..
பூவின் மொழி...
நிறமா...மணமா..

கடலின் மொழி..
அலையா...நுரையா..
காதல் மொழி...
விழியா...இதழா..

இயற்க்கையின் மொழிகள் புரிந்து விடில்
மனிதரின் மொழிகள் தேவை இல்லை,
இதயத்தின் மொழிகள் புரிந்து விடில்
மனிதருக்கு மொழியே தேவை இல்லை. ///


அவ்வ்வ் நீங்க இவ்வளோ சூப்பரா கவிதை எழுதுவீங்களா? கதை கவிதை என்று எல்லாத்துலேயும் கலக்குறீங்க!!!

பின் குறிப்பு: நான் மொழி படம் பார்க்கவில்லை, பாட்டும் கேட்டது இல்லை:)\

மொழி படத்தின் வரிகள் தான் அந்த கவிதை!

உங்கள் பாராட்டுக்களுக்கு மிக்க நன்றி குசும்பன்!

Divya said...

\\ தினேஷ் said...
கதையின் முடிவுக்கு பேச அல்லது எழுத தயங்கும் ஒரு விஷயத்தை நாகரிகமாக சிந்தித்து எழிதி நன்றாக முடித்திருக்கிற உங்கள் தைரியத்திற்கும் எழுத்திற்கும், என்னுடைய பாரட்டுக்கள்…

தினேஷ்\\

உங்கள் கருத்துக்களுக்கும், பாராட்டிற்கும்.....நன்றி.....நன்றி சதீஷ்!

Divya said...

\\ My days(Gops) said...
nice story &
nice ending

moral of this story:

//-- basically pasanga ellarum nallavanga
-- pen buthi pin buthi//

ரிப்பீட்டு ஆனால் தமிழ்'ல

பொதுவா,
பசங்க எல்லாரும்(இல்லை) நல்லவங்க..
பெண் புத்தி பின் புத்தி... :)\\

ஹாய் கோப்ஸ்,
நீங்க தமிழில் 'Moral of the Story 'ன்னு கோடு போட்டு காட்டிரீங்களா??

நன்றி கோப்ஸ்!

Divya said...

\\ Gayathri said...
சூப்பர் ஆனா சுபம் திவ்யா :)\

நன்றி....நன்றி....Gayathri!

Divya said...

\\ Anonymous said...
chancela..guess only gals can write like this!! movie mathiriye picslam poatu kalaasiteenga
~gils\\

வாங்க கில்ஸ்,
கதையில் வரும் படங்களையும் குறிப்பிட்டு பாராட்டியதற்கு மிக்க நன்றி!

'நவிரன்' சதீஷ் - 'Naveran' Sathish said...

//
ஹலோ கவிஞர் சதீஷ்,
வாங்க! வாங்க!
அந்த கவிதை..மொழி படத்தில் வரும் வரிகள்! சொந்த கவிதை இல்லீங்கோ!!

உங்கள் வருக்கைக்கும் , பின்னூட்டத்திற்கும் நன்றி சதீஷ்!
//
திவ்யா! மோழி படத்தில் வரும் பாடல் என்று அறிவேன் :)) just kalachifying :))

'நவிரன்' சதீஷ் - 'Naveran' Sathish said...

Sorry Divya I am not able to type in Tamil now! so pls stand this....

Actually I just finished reading the last three parts completely. kaala thamathaththirkku mannikavum...

'கண்ணால் காண்பதும் பொய்,
காதால் கேட்பதும் பொய்,
தீர விசாரிப்பதே மெய்!'

You have taken this point and have created a story based on a thing which normally people will shy away from discussing. You have handled it in a smart way..

makizhchiyaaga ullathu...
paaraattukkal... :)

Sorry... I am facing problem in typing in Tamil!

ஜி said...

:))).... பொதுவாக எடுத்தாள தயங்கும் விசயத்தை எடுத்திருக்கீங்க. ஒரு ஹர்ட்ஸ் ஆஃப்... நல்ல சுபமான முடிவு. :))

Prabakar said...

Great.. Very Nice story.. Very good finising ..

Rajesh V said...

I think this is your finest work i have read ..
keep writing :)