January 22, 2008

மதுமிதா - 2

மதுமிதா -1

ஃபோனில் 'பாட்டியிடம்' தான் இந்தியா வர இருப்பதை தெரிவித்தான் அருண்.

"யப்பா ராசா, இப்பத்தான் உனக்கு இந்தியாவுக்கு வரணும்னு தோனிச்சா? உன் அக்கா குழந்தையை கூட நீ இன்னும் பார்க்கவேயில்லை, தாய்மாமன் நீ வந்துதான் பிள்ளைக்கு காது குத்தனும்னு உன் அக்கா இம்புட்டு நாளா பிள்ளைக்கு காது குத்தாம உனக்காக காத்துக்கிட்டு இருக்கு, சீக்கிரம் பத்திரமா வந்து சேரப்பா ராசா"



[நீ இந்தியாவுக்கு வா, 'பாட்டி' நான் உனக்கு காது குத்துறேன் என்று மனதிற்குள் நினைத்துக்கொண்டாள் மது]

"சரிங்க பாட்டி, நீங்க அக்காவுக்கு பண்ற உதவி எல்லாம் அக்கா சொன்னா, அக்காவையும் குழந்தையையும் நல்லா பார்த்துக்கோங்க.
பாட்டி, அமெரிக்காவிலிருந்து உங்களுக்கு என்ன வேணும்னு சொல்லுங்க, நான் வாங்கிட்டு வரேன் உங்களுக்கு"

"பல் போன வயசுல நான் என்னத்த கேட்க போறேன்ப்பா, நீ என்ன வேணும்னு கேட்டதே போதும்பா ராசா, கடவுள் புண்ணியத்துல நீ பத்திரமா வந்து சேரு , அது போதும் எனக்கு"
என்று 'சென்டி டச்' போட்டாள் மது.


அருண் இந்தியா வரும் நாளும் வந்தது!
அருணை வரவேற்க அவன் பெற்றோர் திருச்சியிலிருந்து சென்னைக்கு சுபாவின் வீட்டிற்கு வந்திருந்தனர்.

சனிக்கிழமை மாலை மீனம்பாக்கம் வந்திறங்குகிறான் அருண். மதுவுக்கு வீட்டில் இருப்புக்கொள்ளவில்லை. அண்ணியின் வீட்டிற்கு சனிக்கிழமை காலையிலேயே புறப்பட தயாரான மதுவை அவள் அம்மா தடுத்தாள்,

" அங்கே சுரேஷோட மாமனார், மாமியார் மத்த சொந்தக்காரங்க எல்லாம் வந்திருக்காங்க, நீ இன்னிக்கு அங்கே போய் 'ஈ'ன்னு பல்லு காட்டிக்கிட்டு நிக்காதே, ஒழுங்கா வீட்டிலிருந்து திங்கட்கிழமை எக்ஸாமுக்கு படி"


அம்மா போட்ட 'தடா' மதுவுக்கு பெரும் அதிர்ச்சியாக இருந்தது. அம்மாவிடம் கத்தி ஆர்ப்பாட்டம் செய்து பார்த்தாள், கெஞ்சிக் கூத்தாடியும் பார்த்தாள், ஆனால் ஏனோ அம்மா அன்று தன் பிடியிலிருந்து இறங்கவேயில்லை.அப்பாவிடம் போட்ட கொஞ்சல் ஜாலங்களும் அன்று பலனற்றுப் போனது.

கோபத்தில் தன் அறைக்கு வந்து கதவை சாத்திக்கொண்டு பாட புஸ்தகத்துடன் தன் படுக்கையில் சாய்ந்தாள் மது. கையிலிருந்த பென்சிலால் புக்கில் 'மதுமிதா அருண்குமார்' என்று எழுதி ரசித்த மதுவிற்க்கு அழுகை முட்டிக்கொண்டு வந்தது.

கண்ணீரால் தன் தலையணையை ஈரமாக்கி விசும்பிக் கொண்டிருந்த மதுவின் செல் ஃபோன் சிணுங்கியது..........

தன் செல்ஃபோனை எடுத்தாள் மது, அண்ணி சுபாவின் எண்கள் பளிச்சிட்டது.

"ஹலோ அண்ணி"

"ஹே லூசு, ஏன் வீட்டுப் பக்கமே வரல"

"சும்மா தான் அண்ணி"

" ஏன்டி குரல் என்னவோ மாதிரி இருக்கு, தூங்கு மூஞ்சி, இப்பத்தான் தூங்கி எழுந்தியா? என்ன பண்ணிட்டு இருக்கிற வீட்டுல, சீக்கிரம் இங்க வா"

சுபா தன் தம்பி 3 வருஷம் கழித்து இந்தியா வரும் சந்தோஷத்தில் உற்ச்சாகத்துடன் பேசினாள்.
அவளிடம் எப்படி தன் அம்மா போட்ட 'தடா'வை சொல்வது என்று தடுமாறிய மது..

" அண்ணி எனக்கு மன்டே எக்ஸாம் இருக்கு, படிச்சுட்டு இருக்கிறேன், நாளிக்கு வரேனே..."

"சரிடா படி"

"அண்.....ணி...."

"என்னடா மது "

" உங்க ....தம்பி.....உங்க வீட்டூக்கு வந்ததும்,வீட்டுல வேலை செய்ற பாட்டி எங்கன்னு கேட்டா, அவங்க 3 நாள் லீவு போடுட்டு சொந்த கிராமத்துக்கு போய்ட்டாங்கன்னு சொல்லி சமாளிச்சிடுங்க....ப்ளீஸ்"

"ஹா..ஹா...அடிப்பாவி, நீ சொல்ற பொய்க்கெல்லாம் என்னையும் உடந்தை ஆக்குறியா, அதெப்படி மது உனக்கு மட்டும் இப்படி ஐடியா எல்லாம் வருது?
சான்ஸே இல்ல, கலக்குறே போ"


அண்ணியின் கிண்டலை ரசிக்க முடியாமல் மதுவின் தொண்டையில் ஏதோ அடைத்தது. சனிக்கிழமை இரவு சென்னை வரும் அருண், ஞாயிற்றுக்கிழமை இரவு திருச்சிக்கு ரயில் ஏறிடுவான், அதுக்கு முன் அவனை சந்திக்க முடியாமல் போய்விடுமே என்று ஒரு ஏக்கம், தவிப்பு மதுவுக்கு.

ஒவ்வொரு மணித்துளியும் யுகமாக செல்ல,
தவிப்புடனும், ஏக்கத்துடனும் அந்த நாள் நகர்ந்துக் கொண்டிருந்தது.


இரவு சாப்பிடும் வேளையில், தட்டிலிருந்த ஒரே ஒரு சப்பாத்தியில் தன் விரல் நுனியால் கோலம் போட்டுக் கொண்டே , சாப்பிட மனமில்லாமல் இருந்த மதுவின் காதுகளில், அவள் அப்பா அம்மாவின் உரையாடல் மூலம் , அருண் பத்திரமாக இந்தியா வந்துவிட்டான் என்ற வார்த்தைகள் தேன் போல் இனித்தது.


பல்லாயிரம் மைல்களுக்கு அப்பாலிருந்த
தன் உயிர் - இன்று
இரண்டு தெரு தள்ளி தவமிருப்பதாய்
தோன்றியது மதுவிற்கு,

மறுநாள் ஞாயிற்றுக்கிழமை, இன்று ஒரு நாள் தான் இருக்கிறது அருணை நேரில் பார்க்க,
வாய்ப்பு கிடைக்குமா?
அம்மா இன்னிக்கும் 'தடா' போட்டா?
அப்பா என் கெஞ்சலுக்கு மசியலீனா?
என்று ஆயிரம் கேள்விகளுடன் தன் எண்ணெய் குளியலை முடித்துவிட்டு வந்தவளிடம் அவள் அம்மா,

" நல்லதா டிரஸ் பன்ணிட்டு வா, நாளிக்கு உனக்கு பரீட்ச்சை இருக்கு, அதனால உன் பேர்ல அர்ச்சனை பண்ண போறேன் கோயிலுக்கு, நீயும் என் கூட வா" என்று கட்டளை போட்டு விட்டு இவள் பதிலுக்கு காத்திராமல் அம்மா மாடி படி இறங்கினாள்.

என்னிக்கும் இல்லாம இன்னிக்கு மட்டும் என்ன ஸ்பெஷலா எனக்காக அர்ச்சனை, நான் அண்ணி வீட்டிற்க்கு போக கூடாதுன்னு வேணும்னே அம்மா இப்படி பண்றாங்களோ? என்று அம்மாவின் மேல் செம கோபம் வந்தது மதுவிற்கு.

வேண்டா வெறுப்பாக தன் ஃபேவரைட் லாவண்டர் நிற சுடிதாரை அணிந்துக்கொண்டு, துப்பட்டாவை மாலையாக கழுத்தில் அணிந்துக் கொண்டு , [ அம்மாவுடன் வெளியில் செல்லும் போது துப்பட்டாவை ஒழுங்கா போடலீன்னா, திட்டு விழுமே!] அம்மா தன் அறையில் வைத்து விட்ட சென்ற மல்லிகைப் பூவை சூடிக்கொள்ள கண்ணாடி முன் வந்த மதுவிற்க்கு , பின்னலிடாத தன் நீண்ட கூந்தல் காற்றில் அசைய, லாவண்டர் கலர் அவளது சிவந்த மேனிக்கு இன்னும் கொஞ்சம் மெருகூட்ட, சோகத்தின் மத்தியிலும் ஏதோ ஒரு கூடுதல் அழகு தன்னிடம் இருப்பதாக தோன்றியது.

தன் அழகை தானே ரசித்துக்கொண்டிருந்த மதுவுக்கு தன் அப்பா அழைக்கும் சத்தம் கேட்டது,

" மது கொஞ்சம் கீழே வாம்மா"

அப்பாவின் அன்பான குரல் கூட அன்று மதுவிற்க்கு ஏனோ எரிச்சலாக எரிந்தது.

அருணை பார்க்கவிடாமல் எல்லாரும் சதி செய்வதாக அவளுக்கு ஒரு பிரம்மை.

தன் துள்ளல் நடையை மறந்தவளாக, சுரத்தியற்ற நடையுடன் தன் அறையிலிருந்து மாடி படி இறங்கினாள் மது.

மாடிப்படியின் திருப்பத்தில் நொடி பொழுது கவனக்குறைவால், கால் தடுமாற........மது..........

['பாட்டி' மதுவிற்கு என்னவாயிற்று??
அருணை மது சந்தித்தாளா?? .........அடுத்த பகுதியில்]



மதுமிதா - 3

53 comments:

நவீன் ப்ரகாஷ் said...

அருமையா போகுது கதை திவ்யா :)))

அடுத்த பாகம் எப்போ..?

Divya said...

\\ நவீன் ப்ரகாஷ் said...
அருமையா போகுது கதை திவ்யா :)))

அடுத்த பாகம் எப்போ..?\\

ஹலோ கவிஞர் நவீன்,
முதல் பின்னூட்டதிற்கு ஸ்பெஷல் நன்றி!

அடுத்த பாகம் விரைவில்!!

நவீன் ப்ரகாஷ் said...

//மல்லிகைப் பூவை சூடிக்கொள்ள கண்ணாடி முன் வந்த மதுவிற்க்கு , பின்னலிடாத தன் நீண்ட கூந்தல் காற்றில் அசைய, லாவண்டர் கலர் அவளது சிவந்த மேனிக்கு இன்னும் கொஞ்சம் மெருகூட்ட, சோகத்தின் மத்தியிலும் ஏதோ ஒரு கூடுதல் அழகு தன்னிடம் இருப்பதாக தோன்றியது.//

கவிதையான வர்ணனை திவ்யா :))
மிகவும் ரசித்தேன்...

கிண்டலான உரையாடல்கள் அருமை.. எதிர்பார்ப்பை அதிகப்படுத்துகிறது.... :)))

cheena (சீனா) said...

திவ்யா, கதை அட்டகாசமாகச் செல்கிறது. மதுவின் மனநிலை அருமையாகச் சித்தரிக்கப்பட்டுள்ளது. படங்கள் கதையின் ஓட்டத்தோடு இணைந்து செல்கின்றன. திருப்பம் ...... காத்திருக்கிறோம் அடுத்த பகுதிக்கு.....

அடுத்த பகுதியின் ஆரம்பத்திலெயே மது அருண் சந்திப்பு நேரும் என எதிர் பார்க்கிறேன்.

Dreamzz said...

வாவ்! நெக்ஸ்ட் பார்ட் வந்திடுச்சா :)
சூப்பரு :)

Dreamzz said...

//நீ இந்தியாவுக்கு வா, 'பாட்டி' நான் உனக்கு காது குத்துறேன் என்று மனதிற்குள் நினைத்துக்கொண்டாள் மது//
காது குத்தாம இருந்தா சரி.. வந்த பின்ன :P

Dreamzz said...

//தட்டிலிருந்த ஒரே ஒரு சப்பாத்தியில் தன் விரல் நுனியால் கோலம் போட்டுக் கொண்டே//
இது வேறயா.. சப்பாத்தி பாவம்.. :)

Dreamzz said...

//பல்லாயிரம் மைல்களுக்கு அப்பாலிருந்த
தன் உயிர் - இன்று
இரண்டு தெரு தள்ளி தவமிருப்பதாய்
தோன்றியது மதுவிற்கு//
அடடா... என்ன சொல்ல ;) இருந்து என்ன பன்ன? நேர்ல பாக்கலயேனு சொல்லனுமா.. இல்ல, இவ்ளோ பக்கத்துல வந்தாச்சு.. சீக்கீரம் மது பாத்திர்ருவாளா... மேலும் படிக்கிறேன்..

Dreamzz said...

//தன் அழகை தானே ரசித்துக்கொண்டிருந்த மதுவுக்கு தன் அப்பா அழைக்கும் சத்தம் கேட்டது, " மது கொஞ்சம் கீழே வாம்மா"//
மாடியில இருந்தா கீழ தான வர முடியும்... அப்படினு மொக்கை போடாம.. நவீன் சொன்னாப்ல, இதற்கு முந்தன பேரா.. கவித்துவமா இருந்ட்த்துனு சொல்லிகிறேன்..

Dreamzz said...

கதை நல்லா இருக்குங்க திவ்யா... சீக்கிரம் நெக்ஸ்ட் ப்ளீஸ்....

Divya said...

\\ நவீன் ப்ரகாஷ் said...
//மல்லிகைப் பூவை சூடிக்கொள்ள கண்ணாடி முன் வந்த மதுவிற்க்கு , பின்னலிடாத தன் நீண்ட கூந்தல் காற்றில் அசைய, லாவண்டர் கலர் அவளது சிவந்த மேனிக்கு இன்னும் கொஞ்சம் மெருகூட்ட, சோகத்தின் மத்தியிலும் ஏதோ ஒரு கூடுதல் அழகு தன்னிடம் இருப்பதாக தோன்றியது.//

கவிதையான வர்ணனை திவ்யா :))
மிகவும் ரசித்தேன்...

கிண்டலான உரையாடல்கள் அருமை.. எதிர்பார்ப்பை அதிகப்படுத்துகிறது.... :)))\\

கவிஞருக்கே பிடித்துப்போனதோ அவ்வரிகள்?? ஆஹா!
ரசிப்பிற்கு நன்றி நவீன்!

எதிர்பார்புடன் அடுத்த பகுதிக்காக காத்திருங்கள்!

Divya said...

\\ cheena (சீனா) said...
திவ்யா, கதை அட்டகாசமாகச் செல்கிறது. மதுவின் மனநிலை அருமையாகச் சித்தரிக்கப்பட்டுள்ளது. படங்கள் கதையின் ஓட்டத்தோடு இணைந்து செல்கின்றன. திருப்பம் ...... காத்திருக்கிறோம் அடுத்த பகுதிக்கு.....

அடுத்த பகுதியின் ஆரம்பத்திலெயே மது அருண் சந்திப்பு நேரும் என எதிர் பார்க்கிறேன்.\

வாங்க சீனா சார்,
கதையின் ஓட்டத்திற்கேற்ப படங்கள் இருப்பதாக குறிப்பிட்டு பாராட்டியதற்கு நன்றி!

அடுத்த பகுதியில் உங்கள் யூகம் சரியா? தவறா ? என தெரிந்துக்கொள்ள வெயிட் பண்ணுங்க சீனா சார்.

Divya said...

\\ Dreamzz said...
கதை நல்லா இருக்குங்க திவ்யா... சீக்கிரம் நெக்ஸ்ட் ப்ளீஸ்....\

ஹாய் Dreamzz,
உங்கள் பின்னூட்டங்களுக்கு நன்றி,

கதையின் வரிகளை நக்கலுடன் விமர்சித்திருப்பதை ரசித்தேன்.

அடுத்த பகுதி விரைவில்....

ஜி said...

அய்யய்யோ... மதுக்கு என்ன ஆச்சு???


வர்ணனையும் வசனங்களும் நல்லா இருந்துச்சு. :)))

Anonymous said...

என்னடா ஆச்சுன்னு இப்படி தவிக்க விட்டு போயிட்டீங்களே..அவ்வ்வ்

ஆனா கதை விருவிருப்பாக இருந்தது/அடுத்த பகுதி அடுத்த புதனா?

Anonymous said...

அடுத்த பாகம் எப்போ..?

குசும்பன் said...

சூப்பரா போகுது!

குசும்பன் said...

//பல்லாயிரம் மைல்களுக்கு அப்பாலிருந்த
தன் உயிர் - இன்று
இரண்டு தெரு தள்ளி தவமிருப்பதாய்
தோன்றியது மதுவிற்கு//

அவ்வ்வ்!!! தவத்தை கலைக்க ரம்பா ஊர்வசி யாரையும் அனுப்பனுமா!

Anonymous said...

" மது கொஞ்சம் கீழே வாம்மா"
i think கீழே அருண் நிக்கிறாரெண்டு....

Arunkumar said...

aiyayo en madhu-ku ennachu? ;-)

Anonymous said...

கதை நல்லா போயிட்டு இருக்கு. மதுமிதாவோட படங்களை இணைத்திருக்கும் விதம் அருமை. அடுத்து எப்படி போகும்னு ஒரு மாதிரி ஊகிச்சிருக்கேன்...பார்ப்போம்..

-பிரபு

கோபிநாத் said...

\\\அதெப்படி மது உனக்கு மட்டும் இப்படி ஐடியா எல்லாம் வருது?
சான்ஸே இல்ல, கலக்குறே போ"\\

இதை தான் நானும் கேட்கிறேன் அதெப்படி திவ்யா இப்படி எல்லாம் எழுதி கலக்குறிங்க..சூப்பர் ;)

\\'பாட்டி' மதுவிற்கு என்னவாயிற்று??\\\

ஆஹா பேரன் வந்து பிடிச்சிட்டாரா!?

எப்படியும் அருணோட அக்கா இந்த பாட்டி மேட்டரை சொல்லியிருப்பாங்கன்னு நினைக்கிறேன்...பார்ப்போம் ;))

Anonymous said...

When Madhu slipped in the steps immediatly the Arun waiting in the hall came and took her in both his hands. Than thana tham than thana tham -now the song starts. Sorry Divya I could not tolerate the suspense and hence continued the story. I could not send feed back for Episode 1 in my name hence written in the name of anony. The next episode 3 should be the final one otherwise we can not stop for heart attack in suspense.- Padippavan

CVR said...

// Arunkumar said...

aiyayo en madhu-ku ennachu? ;-)////

ஆஹா!!!
அண்ணாச்சி!!
உங்க கதை தானா இது???
சொல்லவே இல்ல!!

சூப்பரு!! :-D
என் மனமார்ந்த வாழ்த்துக்கள்!! B-)

வல்லிசிம்ஹன் said...

கதை பிரமாதமா போகுது. ஏன்பா அதுக்குள்ள மதுவை தடுக்கி விழ வைக்கறீங்க:((

Aruna said...

ஆவலுடன் அடுத்த பகுதிக்காகக் காத்திருக்கும்,
அன்புடன் அருணா

Nimal said...

இந்த பாகமும் அருமையா வந்திருக்கு...

//நீ இந்தியாவுக்கு வா, 'பாட்டி' நான் உனக்கு காது குத்துறேன் என்று மனதிற்குள் நினைத்துக்கொண்டாள் மது//
எல்லா பெண்களும் பசங்களுக்கு காதுகுத்துறதில கரெக்டா இருக்காங்களே ;)


//'பாட்டி' மதுவிற்கு என்னவாயிற்று??
அருணை மது சந்தித்தாளா?? //
அவர்கள் சந்திக்கட்டும்...!

கதை சுவாரசியமாக வளரட்டும்...
அடுத்த பகுதியில் சந்திப்போம்...!

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//பல் போன வயசுல நான் என்னத்த கேட்க போறேன்ப்பா, நீ என்ன வேணும்னு கேட்டதே போதும்பா ராசா//

ச்சே...இந்த மதுப்பாட்டி இன்னா இப்பதி இருக்காக?
நீ என்ன வேணும்னு கேட்டதே போதும்பா ராசா...முடிஞ்சா உனக்குப் பிடிச்ச பாட்டெல்லாம் டவுன்லோடு செஞ்சி, ஒரு ஐ-பாட்ல போட்டுக் கொண்டாந்து கொடுத்தா உன் பேரைச் சொல்லி கேட்டுக்கினே இருப்பேன் ராசா-ன்னு எல்லாம் சொல்ல மாட்டாங்களா? :-)))

//தட்டிலிருந்த ஒரே ஒரு சப்பாத்தியில் தன் விரல் நுனியால் கோலம் போட்டுக் கொண்டே , சாப்பிட மனமில்லாமல்//

உரையாடல்கள் நல்லா "இயல்பா" இருக்கு திவ்யா!
ஒரே வரியில் அத்தனையும் சொல்லிட்டீங்க...
தட்டில் "ஒரே ஒரு" சப்பாத்தி
அதுலயும் "கோலம்"
சாப்படவும் "மனசு இல்ல"

இந்த டயலாக் உத்தியை அப்படியே மெயின்டையின் பண்ணிக்குங்க! :-)

Arunkumar said...

//
ஆஹா!!!
அண்ணாச்சி!!
உங்க கதை தானா இது???
சொல்லவே இல்ல!!

சூப்பரு!! :-D
என் மனமார்ந்த வாழ்த்துக்கள்!! B-)
//

yov kadhailayaavadhu irundhuttu potume.. enna ippo :)

Divya said...

\\ ஜி said...
அய்யய்யோ... மதுக்கு என்ன ஆச்சு???


வர்ணனையும் வசனங்களும் நல்லா இருந்துச்சு. :)))\

வர்ணனையையும், வசனங்களையும் ரசித்தமைக்கு நன்றி ஜி!!

Divya said...

\\ துர்கா said...
என்னடா ஆச்சுன்னு இப்படி தவிக்க விட்டு போயிட்டீங்களே..அவ்வ்வ்

ஆனா கதை விருவிருப்பாக இருந்தது/அடுத்த பகுதி அடுத்த புதனா?\

வாங்க துர்கா!
அடுத்த பகுதிக்காக அவ்வளவு நாள் வெயிட் பண்ண வைக்க மாட்டேன்!

Divya said...

\\ Shali said...
அடுத்த பாகம் எப்போ..?\\

வாங்க shali!

அடுத்த பகுதி விரைவில்...

வருகைக்கு நன்றி!

Divya said...

\\ குசும்பன் said...
சூப்பரா போகுது!\

நன்றி...நன்றி...குசும்பன்!!

Divya said...

\\ குசும்பன் said...
//பல்லாயிரம் மைல்களுக்கு அப்பாலிருந்த
தன் உயிர் - இன்று
இரண்டு தெரு தள்ளி தவமிருப்பதாய்
தோன்றியது மதுவிற்கு//

அவ்வ்வ்!!! தவத்தை கலைக்க ரம்பா ஊர்வசி யாரையும் அனுப்பனுமா!\

யாரையும் அனுப்ப வேணாம் குசும்பன்!!

Divya said...

\\ Arunkumar said...
aiyayo en madhu-ku ennachu? ;-)\

ஹாய் அருண்,

உங்க 'மது'விற்கு என்னாச்சுன்னு தெரிஞ்சுக்க கொஞ்சம் வெயின் பண்ணுங்க, அடுத்த பகுதி விரைவில் போடுகிறேன்!!

Divya said...

\\ Anonymous said...
கதை நல்லா போயிட்டு இருக்கு. மதுமிதாவோட படங்களை இணைத்திருக்கும் விதம் அருமை. அடுத்து எப்படி போகும்னு ஒரு மாதிரி ஊகிச்சிருக்கேன்...பார்ப்போம்..

-பிரபு\

வாங்க பிரபு,
வருகைக்கு நன்றி!

உங்கள் யூகம் சரியா என அடுத்த பகுதியில் தெரிந்துக்கொள்ளுங்கள்.

படங்களையும் குறிப்பிட்டு நீங்கள் பாராட்டியது மகிழ்ச்சியை தந்தது.

மிக்க நன்றி பிரபு!!

Divya said...

\\ கோபிநாத் said...
\\\அதெப்படி மது உனக்கு மட்டும் இப்படி ஐடியா எல்லாம் வருது?
சான்ஸே இல்ல, கலக்குறே போ"\\

இதை தான் நானும் கேட்கிறேன் அதெப்படி திவ்யா இப்படி எல்லாம் எழுதி கலக்குறிங்க..சூப்பர் ;)

\\'பாட்டி' மதுவிற்கு என்னவாயிற்று??\\\

ஆஹா பேரன் வந்து பிடிச்சிட்டாரா!?

எப்படியும் அருணோட அக்கா இந்த பாட்டி மேட்டரை சொல்லியிருப்பாங்கன்னு நினைக்கிறேன்...பார்ப்போம் ;))\\

வாங்க கோபி,
உங்க யூகம் சரியான்னு அடுத்த பகுதியில் தெரிஞ்சுக்கலாம்.

வருகைக்கும், தருகைக்கும் நன்றி கோபி!

Divya said...

\\ padippavan said...
When Madhu slipped in the steps immediatly the Arun waiting in the hall came and took her in both his hands. Than thana tham than thana tham -now the song starts. Sorry Divya I could not tolerate the suspense and hence continued the story. I could not send feed back for Episode 1 in my name hence written in the name of anony. The next episode 3 should be the final one otherwise we can not stop for heart attack in suspense.- Padippavan\

ஹாய் படிப்பவன்,
விட்டா நீங்களே அடுத்த பகுதி எழுதிடுவீங்க போலிருக்கு??

வெயிட் பண்ணுங்க அடுத்த பகுதிக்காக, விரைவில் அடுத்த பகுதி வெளியிடுகிறேன்!!

Divya said...

\\

வல்லிசிம்ஹன் said...
கதை பிரமாதமா போகுது. ஏன்பா அதுக்குள்ள மதுவை தடுக்கி விழ வைக்கறீங்க:((\\

வாங்க வல்லிசிம்ஹன்!

பொண்ணு சோகத்துல தடுமாறுது....என்ன பண்றது!

பாராட்டிற்கு நன்றி வல்லி சிம்ஹன்!!

Divya said...

\\ aruna said...
ஆவலுடன் அடுத்த பகுதிக்காகக் காத்திருக்கும்,
அன்புடன் அருணா\

வாங்க அருணா,

உங்கள் ஆவலுக்கும் காத்திருப்பிற்கும் நன்றி!!

Divya said...

\\ நிமல்/NiMaL said...
இந்த பாகமும் அருமையா வந்திருக்கு...

//நீ இந்தியாவுக்கு வா, 'பாட்டி' நான் உனக்கு காது குத்துறேன் என்று மனதிற்குள் நினைத்துக்கொண்டாள் மது//
எல்லா பெண்களும் பசங்களுக்கு காதுகுத்துறதில கரெக்டா இருக்காங்களே ;)


//'பாட்டி' மதுவிற்கு என்னவாயிற்று??
அருணை மது சந்தித்தாளா?? //
அவர்கள் சந்திக்கட்டும்...!

கதை சுவாரசியமாக வளரட்டும்...
அடுத்த பகுதியில் சந்திப்போம்...!\

வாங்க நிமல்,

'காது குத்துற' வரிகளை ரொம்ப ரசிச்சிருக்க்கிறீங்க போலிருக்கு,
நன்றி நிமல்,

அடுத்த பகுதியில் சந்திப்போம்!!

Divya said...

\\ kannabiran, RAVI SHANKAR (KRS) said...
//பல் போன வயசுல நான் என்னத்த கேட்க போறேன்ப்பா, நீ என்ன வேணும்னு கேட்டதே போதும்பா ராசா//

ச்சே...இந்த மதுப்பாட்டி இன்னா இப்பதி இருக்காக?
நீ என்ன வேணும்னு கேட்டதே போதும்பா ராசா...முடிஞ்சா உனக்குப் பிடிச்ச பாட்டெல்லாம் டவுன்லோடு செஞ்சி, ஒரு ஐ-பாட்ல போட்டுக் கொண்டாந்து கொடுத்தா உன் பேரைச் சொல்லி கேட்டுக்கினே இருப்பேன் ராசா-ன்னு எல்லாம் சொல்ல மாட்டாங்களா? :-)))

//தட்டிலிருந்த ஒரே ஒரு சப்பாத்தியில் தன் விரல் நுனியால் கோலம் போட்டுக் கொண்டே , சாப்பிட மனமில்லாமல்//

உரையாடல்கள் நல்லா "இயல்பா" இருக்கு திவ்யா!
ஒரே வரியில் அத்தனையும் சொல்லிட்டீங்க...
தட்டில் "ஒரே ஒரு" சப்பாத்தி
அதுலயும் "கோலம்"
சாப்படவும் "மனசு இல்ல"

இந்த டயலாக் உத்தியை அப்படியே மெயின்டையின் பண்ணிக்குங்க! :-)\\

ஹாய் ரவி,

'மது பாட்டி' அருணையே தனது விலைமதிப்பற்ற பொருளாக நினைக்கும் போது......ஐ-பாட் எல்லாம் ஜுஜிபி!!

டயலாகின் இயல்பை நிச்சயம் தொடர முயற்ச்சிக்கிறேன் ரவி!

உணர்வுகளை வெளிப்படுத்தும் ஒவ்வொரு வார்த்தைகளையும் நீங்க தனி தனியாக குறிப்பிட்டு பாராட்டியிருப்பது....எனக்கு ரொம்ப ரொம்ப சந்தோஷமாகவும், உற்சாகமாகவும் இருந்தது.நன்றி ரவி!!!

G.Ragavan said...

உள்ளத்துல இருந்து சொல்றேன். ரொம்பப் பிரமாதமா எழுதுறீங்க. அருமையான நடை.

பெரிய பிரச்சனையக் கொண்டு வந்தோ.. புதுமையப் பண்ணியோன்னு எழுதலைன்னாலும்....ஒரு காதல் கதையை இவ்வளவு அழகா எழுதுறீங்க. உங்க எழுத்துல கத்துக்க நெறைய இருக்கு. என்னுடைய பாராட்டுகள்.

Divya said...

\\ G.Ragavan said...
உள்ளத்துல இருந்து சொல்றேன். ரொம்பப் பிரமாதமா எழுதுறீங்க. அருமையான நடை.

பெரிய பிரச்சனையக் கொண்டு வந்தோ.. புதுமையப் பண்ணியோன்னு எழுதலைன்னாலும்....ஒரு காதல் கதையை இவ்வளவு அழகா எழுதுறீங்க. உங்க எழுத்துல கத்துக்க நெறைய இருக்கு. என்னுடைய பாராட்டுகள்.\\

ராகவன்,
உங்கள் எழுத்திற்கும், கதைகளுக்கும் பரம விசிறி நான்!!
உங்களிடமிருந்து இப்படி ஒரு பாராட்டை பெற்றதை பெருமையாக கருதுகிறேன்.
உள்ளதிலிருந்து பாராட்டிய உங்கள் வார்த்தைகள் எனக்கு தந்த சந்தோஷத்தை விவரிக்க வார்த்தைகள் போதவில்லை......நன்றி ராகவன்!!!

Unknown said...

Hi Divya,
Kathai romba nalla irruku.. சூப்பரா போகுது! அடுத்த பாகம் எப்போ..? ,

Unknown said...

//பல்லாயிரம் மைல்களுக்கு அப்பாலிருந்த
தன் உயிர் - இன்று
இரண்டு தெரு தள்ளி தவமிருப்பதாய்
தோன்றியது மதுவிற்கு,//

:-)

Divya said...

\\ suganthy said...
Hi Divya,
Kathai romba nalla irruku.. சூப்பரா போகுது! அடுத்த பாகம் எப்போ..? ,\\

வாங்க சுமதி,

கதையை ரசித்து படித்ததிற்கு நன்றி,

அடுத்த பகுதி விரைவில்!!

Divya said...

\\ தேவ் | Dev said...
//பல்லாயிரம் மைல்களுக்கு அப்பாலிருந்த
தன் உயிர் - இன்று
இரண்டு தெரு தள்ளி தவமிருப்பதாய்
தோன்றியது மதுவிற்கு,//

:-)\\

நன்றி தேவ் அண்ணா!!

தினேஷ் said...

//[நீ இந்தியாவுக்கு வா, 'பாட்டி' நான் உனக்கு காது குத்துறேன் என்று மனதிற்குள் நினைத்துக்கொண்டாள் மது]//
// நீ இன்னிக்கு அங்கே போய் 'ஈ'ன்னு பல்லு காட்டிக்கிட்டு நிக்காதே, ஒழுங்கா வீட்டிலிருந்து திங்கட்கிழமை எக்ஸாமுக்கு படி//
//தட்டிலிருந்த ஒரே ஒரு சப்பாத்தியில் தன் விரல் நுனியால் கோலம் போட்டுக் கொண்டே...//
//தன் துள்ளல் நடையை மறந்தவளாக, சுரத்தியற்ற நடையுடன் தன் அறையிலிருந்து மாடி படி இறங்கினாள்//

ஒரு சினிமா திரைக்கதைப் போல் இருக்கிறது இந்த கதை. ஏன்னென்றால் படிக்கும் போது மணதிரையில் காட்சியை உண்டாக்கி படிக்க வைக்கிறது உங்கள் எழுத்து…

வாழ்த்துக்களுடன்,
தினேஷ்

பினாத்தல் சுரேஷ் said...

அவன் முழுப்பேரு அருண் சுரேஷ்தானே?

Divya said...

\\ தினேஷ் said...
//[நீ இந்தியாவுக்கு வா, 'பாட்டி' நான் உனக்கு காது குத்துறேன் என்று மனதிற்குள் நினைத்துக்கொண்டாள் மது]//
// நீ இன்னிக்கு அங்கே போய் 'ஈ'ன்னு பல்லு காட்டிக்கிட்டு நிக்காதே, ஒழுங்கா வீட்டிலிருந்து திங்கட்கிழமை எக்ஸாமுக்கு படி//
//தட்டிலிருந்த ஒரே ஒரு சப்பாத்தியில் தன் விரல் நுனியால் கோலம் போட்டுக் கொண்டே...//
//தன் துள்ளல் நடையை மறந்தவளாக, சுரத்தியற்ற நடையுடன் தன் அறையிலிருந்து மாடி படி இறங்கினாள்//

ஒரு சினிமா திரைக்கதைப் போல் இருக்கிறது இந்த கதை. ஏன்னென்றால் படிக்கும் போது மணதிரையில் காட்சியை உண்டாக்கி படிக்க வைக்கிறது உங்கள் எழுத்து…

வாழ்த்துக்களுடன்,
தினேஷ்\\

சினிமா பார்ப்பது போன்ற உணர்வை இவ்வரிகள் உங்களுக்கு ஏற்படுத்தியதா தினேஷ்???
உங்கள் ரசனையை பகிர்ந்துக்கொண்டதிற்கு மிக்க நன்றி தினேஷ்!!

Divya said...

\\ பினாத்தல் சுரேஷ் said...
அவன் முழுப்பேரு அருண் சுரேஷ்தானே?\

வாங்க சுரேஷ்,

என் வலைத்தளம் வந்ததிற்கு என் மனமார்ந்த நன்றி!

புது பெயர் எல்லாம் வைச்சுட்டீங்க 'அருண்'னுக்கு???

கதாப்பாத்திரத்தின் முழுப்பெயர் 'அருண்குமார்'மட்டும் தான் சுரேஷ்!!

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//\\ பினாத்தல் சுரேஷ் said...
அவன் முழுப்பேரு அருண் சுரேஷ்தானே?\
புது பெயர் எல்லாம் வைச்சுட்டீங்க 'அருண்'னுக்கு???//

திவ்யா
அண்ணன் பெனாத்தலார் தான் அடுத்த ஆம்பல் ஆம்பல் போடப் போறாரு!
எல்லா சுரேஷையும் ஒன்னா ஒரே எடத்துல சேர்த்து பெனாத்தல் சுரேஷ் கிட்ட கொடுத்தேன்-ல...
அப்ப பிடிச்சிது தான் அவருக்கு இந்த சுரேஷ் மேனியா! :-))
அருணையும் சுரேஷ் ஆக்கிட்டாரு பாருங்க!

ஆனா கதையை மட்டும் இன்னும் போடலை! :-(