November 01, 2009

இதழால் 'கவி' எழுது...........!!


யார் யாரோ
என் கவிதையை
பாராட்டிய போதெல்லாம்
சும்மாதான் இருந்தது மனசு
நீ பாராட்டாய் தந்த
முதல் முத்தம் பெறும் வரை!







பிடிவாதம் உனக்கு மட்டுமல்ல
உன் முத்தத்திற்கும் தான்
பார் எத்தனை
மெதுவாக உன் உதடுகள்
என்னைவிட்டு
விலகுகிறது!







உனக்காக
ஏதாவது எழுத
ஆரம்பித்தால் மட்டுமே
கவிதை வரைகிறது பேனா...
காதல் 'மை' நிரம்பினால் தானே
கவிதை பிறப்பிக்கும்
என் பேனாவும்!!








உனக்கொன்று தெரியுமா..?
நான் கவிதை எழுதுவது
என் வீட்டிலுள்ளவர்களுக்கு
புதுமை...
ஆனால் நான்
உனக்கே உனக்கான கவிதை
என்பதில்தான்
எனக்கு 'நிரம்ப' பெருமை!!







உன்னை எதுவும் கேட்காமலே
உன் கவிதைகளை விரும்ப ஆரம்பித்தேன்
எனை எதுவும் கேட்காமலே
நீ என்னையே விரும்புகிறாய்
என்பதை சற்றேனும்
உணராமல்!!!








உனக்காய் எழுதிய
கவிதைகளை
உன் நெஞ்சில்
இதழால் அச்சடிக்கப் போகிறேன்
'முத்த'புத்தகம் வெளியிட
நீ தயாரா???







உனக்காக எழுதிய
கவிதை எனத்தெரிந்தும்
"எனக்கா??' என
கேட்டு புன்னைக்கும்
உன் சிரிப்பிற்கு முன்
என் கோபம் செயலிழந்து
போகின்றதடா போக்கிரி!








முதன்முறையாக
மிக அருகாமையில் நீ...!
இயங்க இயலவில்லை
என் இதயத்திற்கு,
திணறித்தான் போனேனடா...
என்னை உன் இதழ்கள்
இயக்கும்வரை!!!

24 comments:

FunScribbler said...

back to form! superrrb

//உனக்காய் எழுதிய
கவிதைகளை
உன் நெஞ்சில்
இதழால் அச்சடிக்கப் போகிறேன்
'முத்த'புத்தகம் வெளியிட
நீ தயாரா???//

ஆஹா...சூப்ப்ப்ப்ப்ப்ர்!!

Vijay said...

சூப்பர்ப் :)

GHOST said...

[[உனக்கொன்று தெரியுமா..?
நான் கவிதை எழுதுவது
என் வீட்டிலுள்ளவர்களுக்கு
புதுமை...
ஆனால் நான்
உனக்கே உனக்கான கவிதை
என்பதில்தான்
எனக்கு 'நிரம்ப' பெருமை!!]]

[[பிடிவாதம் உனக்கு மட்டுமல்ல
உன் முத்தத்திற்கும் தான்
பார் எத்தனை
மெதுவாக உன் உதடுகள்
என்னைவிட்டு
விலகுகிறது!]]

சூப்பர்ப்

sri said...

Lovely lovely lovely!! back to your poems aftr so loongg!!!

sri said...

Loved everything , more so this

//பிடிவாதம் உனக்கு மட்டுமல்ல
உன் முத்தத்திற்கும் தான்
பார் எத்தனை
மெதுவாக உன் உதடுகள்
என்னைவிட்டு
விலகுகிறது//

Nimal said...

nice...

Divyapriya said...

//உனக்கொன்று தெரியுமா..?
நான் கவிதை எழுதுவது
என் வீட்டிலுள்ளவர்களுக்கு
புதுமை...
ஆனால் நான்
உனக்கே உனக்கான கவிதை
என்பதில்தான்
எனக்கு 'நிரம்ப' பெருமை!!//

எங்களுக்கும் ரொம்ப பெருமையா இருக்கு திவ்யா :P

இதழிலில் கவிதை எழுதும் நேரமிதுன்னு பாட்ட மாத்தி போடுங்கப்பா :)

மணி said...

//பிடிவாதம் உனக்கு மட்டுமல்ல
உன் முத்தத்திற்கும் தான்
பார் எத்தனை
மெதுவாக உன் உதடுகள்
என்னைவிட்டு
விலகுகிறது!//

நல்ல வரிகள் சும்மா நச்சுனு இருக்கு

GK said...

உங்கள் எழுத்துக்களில் கவிதையும் வெக்கம் கொண்டு,அழகாய் தோற்றமளிக்கிறது ...வாழ்த்துக்கள் தோழி... :)))))))

நட்புடன் ஜமால் said...

எல்லாம் அருமை

மிக நீநீநீண்ட நாட்களுக்கு பிறகு

அருமை திவ்யா

அடிக்கடி வாங்க ...

'நவிரன்' சதீஷ் - 'Naveran' Sathish said...

இதுபோல் கவிதைகள் படித்து நாட்கள் பல ஆகிவிட்டன! மீண்டும் ஓர் வாய்ப்பு கிடைத்ததில் மகிழ்ச்சி :)

கவிதைகள் அழகு master :)

புகழன் said...

ஹய் திவ்யா
எப்பவாச்சும் மட்டுமே எழுதுறீங்க
ஆனால் எப்பவுமே மனசுல நிக்கிறமாதிரி எழுதிட்டு போய்டுறீங்க
கவிதைகள் அனைத்தும் சூப்பர்
தொடர்ந்து எழுதுங்கள்

JSTHEONE said...

/முதன்முறையாக
மிக அருகாமையில் நீ...!
இயங்க இயலவில்லை
என் இதயத்திற்கு,
திணறித்தான் போனேனடா...
என்னை உன் இதழ்கள்
இயக்கும்வரை!!!
//

aachcham, madam ponra gunangalai mika arumaiyaaga vivarithulleer... miga arumai...

vaazhthukkal..

sooooooper

Saras said...

Very good post. Arumaiyana padivu.

- இரவீ - said...

இனிய ஆங்கில புதுவருட வாழ்த்துக்கள்..

கமலேஷ் said...

மிகவும் நன்றாக இருக்கிறது....வாழ்த்துக்கள்..

மே. இசக்கிமுத்து said...

நீண்ட நாட்களுக்கு பிறகு படிக்கிறேன், நல்ல கருத்துகள்!
தோழிக்கு எனது புத்தாண்டு மற்றும் பொங்கல் நல்வாழ்த்துக்கள்!!!

அன்போடு,
இசக்கிமுத்து..

தினேஷ் said...

இதழ்களைப்பற்றி இக்கவிதைகள் இனிமையாக இருக்கிறது...

இயற்றியவருக்கு இனியவாழ்த்துக்கள்...

தினேஷ்

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) said...

இந்த மாதிரி சிறந்த ரொமாண்டிக் காதல் கவிதைகள் காலேஜ் நாட்களுக்கு அப்புறம் இப்ப தான் படிக்கிறேன். உங்க ப்ளாக் இப்ப தான் கார்த்தி ப்ளாக் லின்க்ல இருந்து பிடிச்சேன். தொடர்ந்து படிக்கும் ஆர்வத்தை ஏற்படுத்தியது இந்த கவிதை. ரெம்ப நல்லா இருக்கு. வாழ்த்துக்கள் திவ்யா

சசிகுமார் said...

நல்ல பதிவு உங்கள் புகழ் மென்மேலும் வளர என் மனமார்ந்த வாழ்த்துக்கள்

அப்பாதுரை said...

சுவையான வரிகள்.

ரசிகன் said...

தாமதமாய் அறிந்தாலும்,மிக்க மகிழ்ச்சிகள். தங்கைக்கு திருமண வாழ்த்துக்களையும்,அவரது கவிதைக்கு பாராட்டுக்களையும் பதிவு செய்துக்கொள்கிறேன்.

மணமக்கள் வாழ்வின் எல்லா நலங்களையும் பெற்று சீரும் சிறப்புமாக வாழ வாழ்த்துகிறேன்.

ரசிகன் said...

திருமணத்திற்காக லீவு எடுத்தது போதும்ப்பா... தயவு செய்து மீண்டும் எழுத்தை தொடருங்கள்.பிளிஸ்.

கவிதன் said...

கவிதைகள் அத்தனையும் அருமை.....!!!
காதல் ரசம் சொட்டுகிறது....!!!

வாழ்த்துக்கள் திவ்யா!!!