March 13, 2009

கவிஞருக்கு...... ஒரு கவிமாலை!!!




கவிஞரின் பிறந்த நாளன்று
பரிசுடன் வாழ்த்துவதா?
இல்லை கவிமாலை சூட்டி
வாழ்த்துவதா??

கவிஞருக்கு இல்லாத
கவிதையா??
என எனைப் பார்த்து
கண்சிமிட்டி சிரித்தது
கவிதை!!!

என் இதயமே
எழுதிவிட்டால்....
கவிதையும் பரிசுதானே??



பல்லாண்டு பல்லாண்டு
பலகோடி நூற்றாண்டு
நல்லோர்கள் புடைசூழ
எத்திசையும் உன்
கவிதை மணம் வீசட்டும்!!

மொழியில்லை சொல்லில்லை
என்
நெஞ்சத்தின் வாழ்த்தினை சொல்ல.. .
உள்ளத்தின் உணர்வுகளை
ஒருமுகமாய்க் குவிக்கின்றேன் ...!

நோயற்ற வாழ்வோடும்
நொடிதவறா புன்னகையோடும்
ஓவியமாய்க் காவியமாய்
நல்லதமிழ் மகனாக
வற்றாத புகழோடு
எந்நாளும் வாழ்கவாழ்கவென...
வாழ்த்துகிறேன் கவிஞரே!!!


மனபூர்வமான பிறந்தநாள் வாழ்த்துக்கள் நவீன் ப்ரகாஷ்!!

11 comments:

நவீன் ப்ரகாஷ் said...

மிக மிக அழகான கவிதை வரிகளில் வாழ்த்தியமைக்கு மிக்க நன்றி திவ்யா..! :)))

Nimal said...

பிறந்தநாள் வாழ்த்துகள் நவீன் ப்ரகாஷ்...!

நாணல் said...

பிறந்தநாள் வாழ்த்துகள் நவீன் ப்ரகாஷ்...!

மேவி... said...

bday wishes naveen prakash

Raghav said...

உங்க கவிதை வரிகளையே திரும்ப சொல்லி நானும் நவினுக்கு பிறந்த நாள் வாழ்த்துகளை சொல்லிக் கொள்கிறேன்..

அழகான பிறந்த நாள் வாழ்த்துகள் நவீன் !!

- இரவீ - said...

இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் நவீன் ப்ரகாஷ்..

நாகை சிவா said...

மீண்டும் ஒரு தபா பிறந்தநாள் வாழ்த்துக்கள் சொல்லிக்குறேன் நவீன் :)

நட்புடன் ஜமால் said...

\\என் இதயமே
எழுதிவிட்டால்....
கவிதையும் பரிசுதானே??\\

சிறப்பாக இருக்கு

வாழ்த்துகள்

புதியவன் said...

இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் நவீன் ...

Poornima Saravana kumar said...

பிறந்தநாள் வாழ்த்துகள் நவீன் ப்ரகாஷ்...!

Natchathraa said...

Happy Birthday Naveen Prakash...

Nice Poem Divya...