November 23, 2008

உயிரே!....உறவாக வா??? - 3

உயிரே!....உறவாக வா??? - 1


உயிரே!....உறவாக வா??? - 2


கண்ணீர் மல்க ஆம்புலன்ஸில் பானுமதியின் படுக்கைக்கு அருகில் அமர்ந்தபடி சென்ற இளமாறன், பானு கண் விழித்ததும் அருகில் அமர்ந்திருந்த நர்ஸிடம் சொல்வத்ற்குள் பானு மீண்டும் மயக்கமானாள்.

விரைந்து சென்று ஆஸ்பத்திரியை சேர்ந்தபோது அங்கு டாக்டரின் முடிவு அதிர்ச்சியளித்தது.

ஆழமாக வெட்டப்பட்டிருந்த பானுவின் வலது கரம் முழங்கைக்கு கீழாக முழுவதுமாக அறுவை சிகிச்சை செய்து நீக்கப்பட வேண்டும் என மருத்துவர்கள் கூறியதுடன், உடனடியாக பானு ஆபிரேஷன் தியேட்டருக்குள் கொண்டு செல்லப்பட்டாள்.

சொந்த ஊருக்கு சென்றிருந்த தன் பெற்றோருக்கு ஃபோன் மூலம் தகவல் கூறினான் ரமேஷ்.

ஆபிரேஷன் தியேட்டருக்கு வெளியில் கனமான மனதுடன் நண்பர்கள் இருவரும் நிற்கையில் , இளா ரமேஷிடம்....

" ரமேஷ்........நானும்.....பானுவும்....."

எனக்கு எல்லாம் புரிந்தது என்பதுபோல் கண்களால் பதிலளித்து விட்டு, இளாவின் தோளில் தோழமையுடன் தட்டிக் கொடுத்தான் ரமேஷ்.

மயக்கம் தெளிந்து கண் விழித்த பானுவிற்கு , தன் தாயாரின் விசும்பல் மிக அருகில் கேட்டது.

"பொம்பள புள்ள இப்படி கதை எழுதாட்டி என்ன......இப்ப கையை ஒடைச்சுட்டு போய்ட்டானே படுபாவி.......இனிமே இவளை வைச்சுட்டு......."

அம்மாவின் புலம்பல் கேட்டதும் தன் வலது கரத்தை தேடினாள் பானு..........அழுகை பீறிக்கொண்டு வந்தது அவளுக்கு.

தன் வலது கரம் துண்டிக்கப்பட்டிருப்பதை காண பொறுக்காமல் தன் கண்களை அழுந்த மூடிக்கொண்டவளின் தலையை ஆதரவாக ஒரு கரம் தடவியது.
கண்திறந்து பார்த்தாள் பானு.......ஊமையாய் தனக்குள்ளே அழுதபடி பாசமுள்ள அப்பா!!!

"அ....ப்......பா" என்ற பானுவின் குரல் உடைந்து போயிருந்தது.

அந்தக் குரலைக் கேட்டதும்...
அத்தனை கண்களும் ஆச்சரியத்தில்....

சட்டென்று அவள் கைகளைப்பற்றிக் கொண்டு
கண்களில் நீர் நிறைந்து வழிந்தோட..
வார்த்தைகள் தட்டுத்தடுமாறிட...

தாய்மையின் கனிவோடு தழுவி
அணைத்துக்கொண்டது அந்தத் தந்தை உள்ளம்!

பானுவை தான் கவனித்துக்கொள்வதாக உறுதியளித்து தன் பெற்றோரை வற்புறுத்தி ஹாஸ்பிட்டல் கேன்டினிற்கு உணவருந்த அனுப்பி வைத்தான் ரமேஷ்.

அவர்கள் அறையிலிருந்து வெளியேறியதும், ரமேஷ் பானுவின் அருகில் குனிந்து.......

"இளா வெளியில வெயிட் பண்றான்........உள்ளே அனுப்புறேன்" என்றான் குறும்பு புன்னகையுடன்

"அண்ணா.........!"

"எனக்கு எல்லாம் தெரியும்மா......." கண் சிமிட்டினான் ரமேஷ்.

அவன் வெளியேற கதவின் அருகில் செல்ல, பானு.....

"அண்ணா......"

"என்னமா?.......?"

"அவரை......நான் பார்க்க விரும்பலண்ணா"

"என்ன.......என்னடா சொல்ற?????"

"ஆமாம்ணா.......அவரை இனிமே என்னை பார்க்க வர வேண்டாம்னு சொல்லிடு"

"உணர்ச்சிவசப்படாதே பானுமா........அவன் உன்மேல...."

"தெரியும்ணா.......அதுனாலத்தான் சொல்றேன்.....ஒரு கை இல்லாத இந்த பானு அவருக்கு வேணாம்ணா.....போகச்சொல்லிடுண்ணா......"
விசும்பலுடன் வார்த்தைகள் வெளிவந்தன பானுவிடமிருந்து.

ரமேஷ் தன் கைகளினால் அறையின் கதவை சிறிது திறந்தபடி பானுவிடம் பேசிக்கொண்டிருந்ததால் , அறையின் வெளியில் இருந்த இளா, பானு தன் அண்ணனிடம் கூறியது அனைத்தையும் கேட்டான்.

விழியோரம் துளிர்த்த கண்ணீரை தன் விரலால் சுண்டி விட்டபடி அவ்விடம் விட்டு அவன் நகர......ரமேஷ் அவனை நிறுத்தினான்.


"மனதளவில் உடைந்து, குழம்பி போயிருக்கிற இந்நேரத்தில் பானுவிடம் எது பேசினாலும் அவள் தன் பிடிவாதத்தை தளர்த்த போறதில்லை, மாறாக அவளது இறுக்கம் தான் அதிகரிக்கும்.........சுயபட்சாதபத்தில் இருந்து அவள் வெளிவற சிலகாலம் ஆகும் இப்போ அவளுக்கு தேவை மன அமைதி , எவ்வளவு நாள் ஆனாலும் அவளுக்காக நான் காத்திட்டிருப்பேன் ரமேஷ்." நா தழுதழுத்தது இளாவிற்கு.





நீ என்னை வேண்டாம் வேண்டாம்
என்று சொல்லும் ஒவ்வொரு முறையும்
இறந்து இறந்து பிழைக்கிறேன்!

எனக்கு தெரியும் நீ
ஒரு ரோஷக்காரி என...
உன்பக்கமிருந்து உன்னை
வேதனை படுத்துவதை விட
உன்னை பிரிந்து நான் வேதனையடைந்தாலும்
பரவாயில்லை என்று உன்னை
சிறிது பிரிகிறேன் கண்ணே…

என் செல்லமே..
கொஞ்ச நாள் பொறுத்துக்
கொள்கிறேன்..
உன்னைக்
கொஞ்சும் நாள் தூரத்தில்
இல்லையென்ற
நம்பிக்கையுடன்...

போகுமுன் எந்தன்
காதல் இதயத்தை உந்தன்
காலடியில் விட்டு செல்கிறேன்…
ஏனெனில் உன் அருகாமை நீங்கினால்
தனது துடிப்பை நிறுத்திவிடும் என்பதால்!



பானுவின் உடல்நிலை தேறியதும் அவளை வீட்டிற்கு அழைத்து வந்தனர்.
பாணுமதி ....கெட்டிகாரப் பெண், கோபமும் அன்பும் சற்றென்று வரும்.
'அவளது பெயருக்கு தகுந்தபடி.........
பாணு என்றால் சூரியன், சூரியனைப் போலக் கோபச் சூடு;
மதி என்றால் நிலவு, நிலவைப்போல குளிர்ச்சியான அன்பு;

ஆனால் இன்றோ......யாரிடமும் பேசாமல் மெளனம் காத்தாள்.
கண்களில் எப்போதும் ஒருவித மிரட்சி.

தன் அறையின் பால்கனியில் அமர்ந்து நீல வானத்தையே பார்த்துக்கொண்டு இருந்தாள் பானு. நட்சத்திரங்களின் சிமிட்டலையோ, நிலவின் ஒளி வீச்சையோ இப்போது அவளால் ரசிக்க முடியவில்லை. அவளது பீரிட்ட சோகம் அவள் கண்களில் நீரை பொழிந்தது.
இளாவின் நினைவுகள் மனதில் நெருஞ்சி முள்ளாக குத்தியது.....

இளாவை சந்தித்த நாட்களும், காதலை வெளிப்படுத்திய வேளையும் பானுவிற்கு கண்முன் காட்சியாய் விரிந்தது.......!!!

பானு தஞ்சாவூரில் கல்லூரி படிப்பை முடித்துவிட்டு, சென்னையில் வேலை கிடைத்து அண்ணாவுடனே தனியாக வீடு எடுத்து தங்க ஆரம்பித்து சில மாதங்களுக்கு பின் அவளது பெற்றோரும் சென்னைக்கே குடிபெயர்ந்தனர்.

தன் அண்ணாவின் நண்பனாக இளா பானுமதிக்கு அறிமுகம் ஆனான். அரசியல், சினிமா, விளையாட்டு, இலக்கியம், கவிதை என்று எந்த தலைப்பில் பேசினாலும், ஈடு கொடுத்து சுவாரஸ்யமாக பேசும் பானுவின் பேச்சு, அவள் முகத்துல் இருந்த ஒரு விதமானக் குழந்தைத்தனம்...என அனைத்தும் இளாவை கொள்ளையிட்டது.

ஒரு நாள் மாலையில், இளாவும் பானுவும் பேசிக்கொண்டிருக்கையில், இளா பானுவிடம்......




"உன்னை பர்ஸ்ட்டு எங்கே பார்த்தேன்னு ஞாபகம் இருக்கா?"

"இருக்கு......ஆட்டோல நான் வீட்டுக்கு வந்து இறங்கினப்போ, ஆட்டோக்காரருக்கு கொடுக்க சில்லறை இல்லாம தேடிட்டு இருந்தேன் , அப்போ என் அண்ணாவை பார்க்க வீட்டுக்கு வந்த நீங்க சில்லறை கொடுத்தீங்க............... அதை நான் இன்னும் திருப்பிக் கொடுக்கவே இல்லை.......ஹி ஹி ஹி"

"ஹும். ....!"

"ம்ம்... விளையாட்டா ஆறுமாசம் ஓடிட்டுச்ச இல்ல??"

"உனக்கு விஜய் பிடிக்குமா? அஜித் பிடிக்குமா?"

"ஏன் சம்பந்தா சம்பந்தமில்லாம பேசிக்கிட்டிருக்கீங்க?"

"ம்ம்ம்.. கொஞ்சம் கன்ஃப்யூஷன்லே இருக்கேன்!"

"என்ன கன்ஃப்யூஷன்"

"எப்படி சொல்லுறதுன்னு கன்ஃப்யூஷன்?"

"யாருகிட்டே எதை எப்படி சொல்லுறதுன்னு கன்ஃப்யூஷன்?"

"உன்கிட்டே தான்"

"என்கிட்டவா??........சரி சொல்லுங்க"

"சொன்னா நீ என்னை தப்பா நினைச்சுக்க மாட்டியா?"

"பரவாயில்லை. சொல்லுங்க.........நான், தப்பா நெனைச்சிக்க மாட்டேன்"

"ப்ராமிஸ்........."

"காட் ப்ராமிஸ்"

"என்னை கல்யாணம் பண்ணிக்கிறீயா?"

" ............................."

"உனக்கு இஷ்டம் இல்லியா பானு?"

" கம்னு இருந்தா இஷ்டம் இல்லேன்னு அர்த்தமா?......"



"அம்மா தாயே.....வாய் திறந்து பேசினாலே.....பொண்ணோட மனசை புரிஞ்சுக்க முடியாது......இதுல நீ இப்படி அமைதியா இருந்தா.....நான் என்னன்னு நினைக்கிறது??? நம்மளையும் ஒருத்தன் கல்யாணம் கட்டிக்கிறியான்னு கேட்குறானேன்னு .....நீ சந்தோஷப்படுவேன்னு பார்த்தா, இப்படி உம்னு உக்காந்துட்டு பந்தா காட்டுறே??"

தனது பேச்சு.... அவளுக்கு கோபத்தை வரவழைக்கிறது என்பதை அவளது முகசிவப்பும்.. மூக்கு விடைப்பும்.. இதழின் நடுக்கமும், வேக மூச்சில் ஏறி இறங்கிய நெஞ்சும் உணர்த்தியதும்,

"என்னடா செல்லகுட்டி.......கோபமா??"

" ஹலோ உடனே 'செல்ல்குட்டி'ன்னு கொஞ்சினா......கூல் ஆகிடுவேன்னு நினைப்பா??"

"அப்போ என்ன பண்ணினா.......கூல் ஆவா என் பானு??"என்றபடி........


கோபத்தில் இருப்பவளின் பின்னால் சென்று...செவிமடலை இதழால் மென்மையாய் உரசி... அதில் சிலிர்த்து அவள் எழுவதற்குள்...அப்படியே அணைத்து....நெற்றியில் இதழ் பதித்தான்!!

அந்த முதல் முத்தத்தை இப்போது நினைக்கையிலும் உடல் சிலிர்த்தது பானுவிற்கு!


என்னவனே!
உன்னை காதலிக்க ஆரம்பித்த
நிமிடம் முதல் - என்னை சுற்றி
சகலமும் நீயாக இருக்கவேண்டும்
என்று எண்ணினேன்.. எந்தன்
உயிராகவும் கூடத்தான்..!
அந்த உயிர் பிரியும் வலியை விட
நீ என்னை விட்டு பிரியவேண்டும்
என்ற நினைவே கொடுமையாக உள்ளதடா!
மரணத்தை கூட தைரியமாக எதிர்கொள்ளும்
எந்தன் இதயம்.. உந்தன் பிரிவை
தாங்கமாட்டாமல் தவிக்கிறது!



துணிச்சலுடன் திகில் தொடர் எழுதிய 'மதிமாறன்' அவளிடமிருந்து கொஞ்சம் கொஞ்சமாக மறைந்துக் கொண்டிருந்தார்.

இரண்டு மாதங்களில் பானுவிற்கு செயற்கை கை பொறுத்தப்பட்டது. இளமாறன் தான் இதற்கான முழு பொறுப்பையும் எடுத்துக்கொண்டான் என்பதை பின்னொரு நாளில் அவளது அம்மா சொல்ல அறிந்துக்கொண்டாள் பானு.

நாட்களும் உருண்டோடின.......பானுவின் பிறந்தநாள் வந்தது..........அன்று பானு........

[தொடரும்]


உயிரே!......உறவாக வா??? - 4

96 comments:

நவீன் ப்ரகாஷ் said...

சோகமும் காதலும் இரண்டரக்கலந்து மிக‌
அழகான நடையில் செல்கிறது இந்த பகுதி திவ்யா..:))

நவீன் ப்ரகாஷ் said...

//நீ என்னை வேண்டாம் வேண்டாம்
என்று சொல்லும் ஒவ்வொரு முறையும்
இறந்து இறந்து பிழைக்கிறேன்! //


கதையுடன் கலந்த கவிதை
மேலும் மெருகேற்றுகிறது அழகாக...
ரசித்தேன் திவ்யா..

நவீன் ப்ரகாஷ் said...

//"அம்மா தாயே.....வாய் திறந்து பேசினாலே.....பொண்ணோட மனசை புரிஞ்சுக்க முடியாது......இதுல நீ இப்படி அமைதியா இருந்தா.....நான் என்னன்னு நினைக்கிறது??? நம்மளையும் ஒருத்தன் கல்யாணம் கட்டிக்கிறியான்னு கேட்குறானேன்னு .....நீ சந்தோஷப்படுவேன்னு பார்த்தா, இப்படி உம்னு உக்காந்துட்டு பந்தா காட்டுறே??" //

:)))))

குறும்பான டயலாக்ஸ்...
உங்க ஹீரோயின் எல்லாம்
எப்பவுமே லொட லொடன்னு தானே
பேசுவாங்க..? :))))
போனா போகுதுன்னு ஹீரோவுக்கும்
ஹீரோயினை கேலிபண்ண சந்தர்ப்பம்
கொடுத்திருக்கிங்க... :)))

நவீன் ப்ரகாஷ் said...

//"என்னடா செல்லகுட்டி.......கோபமா??"

" ஹலோ உடனே 'செல்ல்குட்டி'ன்னு கொஞ்சினா......கூல் ஆகிடுவேன்னு நினைப்பா??"

"அப்போ என்ன பண்ணினா.......கூல் ஆவா என் பானு??" //

அட அட அட.....
எப்படி இப்படியெல்லாம்..??
Simply Superb....திவ்யா...

நவீன் ப்ரகாஷ் said...

//உயிர் பிரியும் வலியை விட
நீ என்னை விட்டு பிரியவேண்டும்
என்ற நினைவே கொடுமையாக உள்ளதடா! //

அருமை...:))

மழைநேரத்து ரயில் பயணம் போல‌
கவிதைகளோடு பயணிக்கும்
அழகான இந்த பாகம்... மிகவும்
அழகு திவ்யா... :)))

பயணங்கள் சீக்கிரம்
தொடரட்டும்... :))

வாழ்த்துக்கள் திவ்யா...!!!

அருள் said...

எளிமையான..எழுது நடை.
கவிதையாய் கவி கதை.
காதலோடு கலந்த சோகம்.
அழகு.
கலக்குறிங்க திவ்யா

நசரேயன் said...

அருமையான நடை, தொடரட்டும் உங்கள் எழுத்து பயணம்

anbudan vaalu said...

naduve varum kavidhaigal arumai.....

MSK / Saravana said...

ஒரே கலக்கல்..

ஆனா அநியாயமா பானுவோட கையா வெட்டிட்டீங்களே.. So Sad.. :(

MSK / Saravana said...

//"என்னை கல்யாணம் பண்ணிக்கிறீயா?"

" ............................."

"உனக்கு இஷ்டம் இல்லியா பானு?"

" கம்னு இருந்தா இஷ்டம் இல்லேன்னு அர்த்தமா?......"


"அம்மா தாயே.....வாய் திறந்து பேசினாலே.....பொண்ணோட மனசை புரிஞ்சுக்க முடியாது......இதுல நீ இப்படி அமைதியா இருந்தா.....நான் என்னன்னு நினைக்கிறது??? நம்மளையும் ஒருத்தன் கல்யாணம் கட்டிக்கிறியான்னு கேட்குறானேன்னு .....நீ சந்தோஷப்படுவேன்னு பார்த்தா, இப்படி உம்னு உக்காந்துட்டு பந்தா காட்டுறே??"//

என்னே அருமையான டயலாக்ஸ்..

MSK / Saravana said...

//நாட்களும் உருண்டோடின.......பானுவின் பிறந்தநாள் வந்தது..........அன்று பானு........//

சரி அப்பறம்..

என்னது அடுத்த வாரமா??

சரி.. எனக்கு மட்டும் கதையை சுருக்கமாக மெயில் அனுப்பி விடவும். ;)

MSK / Saravana said...

கவிதைகள் ரெண்டும் சான்ஸே இல்லை.. :)

Vijay said...

கையை எடுக்கறதெல்லாம் ரொம்ப அக்கிரமம். விக்கிரமன் படம் மாதிரி போய்க்கொண்டிருந்ததில் ஏன் இவ்வளவு வன்முறை?
\\காதல் இதயத்தை உந்தன்
காலடியில் விட்டு செல்கிறேன்…
ஏனெனில் உன் அருகாமை நீங்கினால்
தனது துடிப்பை நிறுத்திவிடும் என்பதால்!\\

ரொம்ப டச்சிங்க் வரிகள். வைரமுத்து வாலியெல்லாம் டியூஷன் எடுத்துக்கணும் :-)

\\"அம்மா தாயே.....வாய் திறந்து பேசினாலே.....பொண்ணோட மனசை புரிஞ்சுக்க முடியாது......\\
ஆரம்பிச்சுட்டாங்கய்யா பொண்ணோட மனசைப் பற்றி லெக்சர் அடிக்க. நல்ல வேளை, “ஒரு பெண்ணோட மனசை இன்னொரு பொண்ணு தான் புரிஞ்சுக்க முடியும்’ங்கற வசனம் போடாம இருந்தீங்களே :-)

\\இரண்டு மாதங்களில் பானுவிற்கு செயற்கை கை பொறுத்தப்பட்டது. \\
செயற்கை கால் கேள்விப் பட்டிருக்கேன். செயற்கை கையும் வந்தாச்சா. Technology has developed very much!!

ஆவலுடன் அடுத்த பகுதியை எதிர்பார்க்கிறேன்!!

புதியவன் said...

//போகுமுன் எந்தன்
காதல் இதயத்தை உந்தன்
காலடியில் விட்டு செல்கிறேன்…
ஏனெனில் உன் அருகாமை நீங்கினால்
தனது துடிப்பை நிறுத்திவிடும் என்பதால்!//

அழகான கவிதைகளோடு பயணிக்கிறது கதை. தொலைவைப் பற்றி கவலையில்லை பயணம் இனிமையாக இருக்கிறது. தொடரட்டும் உங்கள் க(வி)தைப் பயணம். வாழ்த்துக்கள் திவ்யா...

Anonymous said...

//தாய்மையின் கனிவோடு தழுவி
அணைத்துக்கொண்டது அந்தத் தந்தை உள்ளம்!
Sema Sentencenga..

//அந்தக் குரலைக் கேட்டதும்...
அத்தனை கண்களும் ஆச்சரியத்தில்....
அப்பா னு கூப்பிட்டதற்கு ஏன் ஆச்சர்யம்? என் மரமண்டைக்கு புரியல!!

சூப்பரா இருந்துச்சுங்க! அடுத்த பாகத்துக்கு ரொம்ப நாள் வெயிட் பண்ண வைக்காதீங்க!!

Divyapriya said...

ம்ம்ம் flashback பதிவு அருமை…பானுமதி பேர் விளக்கமும் சூப்பர்…பானு பிறந்தநாளுக்காக வைட்டிங் :)

Mathu said...

Awesome flow divya!
கவிதை எல்லாமே கலக்கல்! Every single line! உங்களோட வழமையான ஸ்டைல் ல!

Mathu said...

கதைல உங்கள யாரும் அடிக்க முடியாது! :) and you are keep proving it in every story!
வாழ்த்துக்கள்!

Prabakar said...

கவிதை , படங்கள் மற்றும் கதையின் போக்கு மிக அருமைங்க

வாழ்த்துக்கள்

gils said...

!!!trisha kita callsheet vangi pose ketu boto pudicheengala??!! unga kathaikagvay still edutha mari iruku..nachhu story..aana intha part flashbacka ila present tenseanu puriala..solpa confusionga unthi

Nimal said...

என்ன கதை சோகமாக...

ஆனாலும் காதல் சோகம், அழகான கவிதைகளுடன் அருமையாக இருக்கிறது...

அடுத்த பகுதிக்காக காத்திருக்கிறேன்... சிறப்பாக எழுத வாழ்த்துக்கள்...!

Unknown said...

Superb .. :) gng well

நாணல் said...

kavithai rendum kalakkal... padichu kanla irundhu kanner etti paarthathdu... kadhai as usual kalakareenga..adhutha paguthikku waitings... :)

முகுந்தன் said...

என்ன திவ்யா இப்படி சோகத்தை பிழிந்து விட்டீர்கள்?

//கோபத்தில் இருப்பவளின் பின்னால் சென்று...செவிமடலை இதழால் மென்மையாய் உரசி... அதில் சிலிர்த்து அவள் எழுவதற்குள்...அப்படியே அணைத்து....நெற்றியில் இதழ் பதித்தான்!!
//

ஏதோ ரொமான்ஸ் படம் பார்த்தா மாதிரி இருக்கு....

Karthik said...

//ஆனா அநியாயமா பானுவோட கையா வெட்டிட்டீங்களே.. So Sad.. :(

:(

சங்கீதா said...

மிக அருமையான கதை. கவிதையோடு கலந்த உங்கள் எழுத்து நடை அருமை!!

Sanjai Gandhi said...

எப்டித் தான் இப்படி கேப்பே விடாம கதை எழுத முடியுதோ.. என் கண்ணே பட்றும் எங்க ஊர்ஸ்க்கு.. கலக்குமா நீ.. :)

எழில்பாரதி said...

திவ்யா அருமையான நடை கதை கவிதை இரண்டுமே அருமை!!!!!

அடுத்த பகுதியை ஆவலோடு எதிர்பார்க்கிறேன்!!!!

gayathri said...

unga kathaiyoa hero name nalla iruku pa இளா

gayathri said...

என்னவனே!
உன்னை காதலிக்க ஆரம்பித்த
நிமிடம் முதல் - என்னை சுற்றி
சகலமும் நீயாக இருக்கவேண்டும்
என்று எண்ணினேன்.. எந்தன்
உயிராகவும் கூடத்தான்..!
அந்த உயிர் பிரியும் வலியை விட
நீ என்னை விட்டு பிரியவேண்டும்
என்ற நினைவே கொடுமையாக உள்ளதடா!
மரணத்தை கூட தைரியமாக எதிர்கொள்ளும்
எந்தன் இதயம்.. உந்தன் பிரிவை
தாங்கமாட்டாமல் தவிக்கிறது

intha lines nalla iruku pa

நாகை சிவா said...

த்ரிஷா(பானு) வ சோகமாக பாக்க நல்லா இல்ல... சந்தோஷ மூடுக்கு சீக்கிரம் மாத்துங்க...

"உன்னை நினைக்கையில்
சோகம் கூட சுகம் தான்" னு

கவுஜு எல்லாம் பாடமா சீக்கிரம் வேறு மூடு சேஞ் பண்ணுங்க...

Unknown said...

அக்கா சூப்பர் கலக்கறீங்க... :))))) இதே தான் போன பதிவுக்கும் சொன்னேனா?? சரி பரவால்ல.. திரும்ப சொன்னா தப்பில்ல.. ஏன்னா நீங்களுன் திரும்ப திரும்ப நல்லா எழுதறீங்களே.. :)))))))

ஜியா said...

:))

No comments now...

Anonymous said...

hey divs chance illa sema interestinga poguthu.......

சுபானு said...

அழகான காதல் ததும்பும் சோகக் கதை.. அருமை.. :)

பாச மலர் / Paasa Malar said...

எப்டியும் நல்ல சந்தோஷப்படும்படியான முடிவுதானே திவ்யா..

கோபிநாத் said...

அடுத்த பதிவுக்கு வெயிட்டிங் ;))

Anonymous said...

அடுத்த பகுதிக்காக ஆவலுடன் காத்திருக்கிறேன்...

கலாட்டா அம்மணி said...

\\ கொஞ்ச நாள் பொறுத்துக்
கொள்கிறேன்..
உன்னைக்
கொஞ்சும் நாள் தூரத்தில்
இல்லையென்ற
நம்பிக்கையுடன்... \\

ரசிக்கவைக்கும் வரிகள்,
சோகத்திலும் ஆழமான காதல், என மிகவும் அழகாக செல்கிறது கதை.

ஜோசப் பால்ராஜ் said...

// கம்னு இருந்தா இஷ்டம் இல்லேன்னு அர்த்தமா?......"//

மிக அருமையான வரிகள்.

அநியாயமா பானுவோட கைய வெட்டுனதத்தான் தாங்கிக்க முடியல.

நட்புடன் ஜமால் said...

\\போகுமுன் எந்தன்
காதல் இதயத்தை உந்தன்
காலடியில் விட்டு செல்கிறேன்…
ஏனெனில் உன் அருகாமை நீங்கினால்
தனது துடிப்பை நிறுத்திவிடும் என்பதால்!\\

வாவ் என்னமா சிந்திக்கிறீங்க.

தூள். வாழ்த்துக்கள்

Poornima Saravana kumar said...

ஹல்லோ அடுத்த பகுதிய கொஞ்ச சீக்கிரமா போடரீங்களா?

Anonymous said...

அடுத்த பதிவு சீக்கிரம் ப்ளீஸ்!
என்ன ஆகும் என்ன ஆகும்னு நினைச்சு நினைச்சு நானே அதுத்த பாகம் எழுதிருவேன் போல இருக்கு!!

சரவணா JK said...

கதையோட்டம் மிக அருமை... ஊட்டி சாலையில் பயணம் செல்வது போல
எத்தனை எத்தனை திருப்பங்கள்... ஒவ்வொரு திருப்பத்திலும் ரசிக்க கூடிய நிகழ்வுகள்...

அருமை... நான்காம் பாகத்திற்காக ஆவலுடன் காத்து இருக்கிறேன்...

ஸ்ரீ said...

Attagaasagama iruku divya kadha. Vithiyaasama aarambichu azhaga poitu iruku. Super. Vaazthukkal

Karthik Krishna said...
This comment has been removed by the author.
கண்ணண் said...

Divya,

Nenaga Eppa tha next part post pannuvenga. Daily na Emanthu porathu tha mecham....
Every 3 hr na check pannuren...
Please next part Bloge la post pannunga illa
Enakku matumavathu mail pannunga

Puthu rasigan
Kannan

Divya said...

\\Blogger நவீன் ப்ரகாஷ் said...

சோகமும் காதலும் இரண்டரக்கலந்து மிக‌
அழகான நடையில் செல்கிறது இந்த பகுதி திவ்யா..:))\


வாங்க நவீன்,

பாராட்டிற்கு மிக்க நன்றி!

Divya said...

\Blogger நவீன் ப்ரகாஷ் said...

//நீ என்னை வேண்டாம் வேண்டாம்
என்று சொல்லும் ஒவ்வொரு முறையும்
இறந்து இறந்து பிழைக்கிறேன்! //


கதையுடன் கலந்த கவிதை
மேலும் மெருகேற்றுகிறது அழகாக...
ரசித்தேன் திவ்யா..\\



கவிஞரின் அழகான ரசிப்பிற்கு என் மனமார்ந்த நன்றி!!!

Divya said...

\\Blogger நவீன் ப்ரகாஷ் said...

//"அம்மா தாயே.....வாய் திறந்து பேசினாலே.....பொண்ணோட மனசை புரிஞ்சுக்க முடியாது......இதுல நீ இப்படி அமைதியா இருந்தா.....நான் என்னன்னு நினைக்கிறது??? நம்மளையும் ஒருத்தன் கல்யாணம் கட்டிக்கிறியான்னு கேட்குறானேன்னு .....நீ சந்தோஷப்படுவேன்னு பார்த்தா, இப்படி உம்னு உக்காந்துட்டு பந்தா காட்டுறே??" //

:)))))

குறும்பான டயலாக்ஸ்...
உங்க ஹீரோயின் எல்லாம்
எப்பவுமே லொட லொடன்னு தானே
பேசுவாங்க..? :))))
போனா போகுதுன்னு ஹீரோவுக்கும்
ஹீரோயினை கேலிபண்ண சந்தர்ப்பம்
கொடுத்திருக்கிங்க... :)))\\


ஆஹா.......என் கதையில் வரும் ஹீரோயின் எல்லாருமே லொட லொடன்னு பேசுறாங்களா??
ரொம்ப கூர்ந்து 'ஹீரோயின்' கதாபாத்திரங்களை கவனிக்கிறீங்க போலிருக்குதே கவிஞரே:)))



\\போனா போகுதுன்னு ஹீரோவுக்கும்
ஹீரோயினை கேலிபண்ண சந்தர்ப்பம்
கொடுத்திருக்கிங்க... :)))\\\\


அதே அதே......கரெக்ட்டா கண்டுபிடிச்சிட்டீங்களே, பலே பலே!!!

Divya said...

\\Blogger நவீன் ப்ரகாஷ் said...

//"என்னடா செல்லகுட்டி.......கோபமா??"

" ஹலோ உடனே 'செல்ல்குட்டி'ன்னு கொஞ்சினா......கூல் ஆகிடுவேன்னு நினைப்பா??"

"அப்போ என்ன பண்ணினா.......கூல் ஆவா என் பானு??" //

அட அட அட.....
எப்படி இப்படியெல்லாம்..??
Simply Superb....திவ்யா...\\


உங்கள் மனம்திறந்த பாராட்டு உவகை அளிக்கிறது நவீன்......நன்றி!!

Divya said...

\\Blogger நவீன் ப்ரகாஷ் said...

//உயிர் பிரியும் வலியை விட
நீ என்னை விட்டு பிரியவேண்டும்
என்ற நினைவே கொடுமையாக உள்ளதடா! //

அருமை...:))

மழைநேரத்து ரயில் பயணம் போல‌
கவிதைகளோடு பயணிக்கும்
அழகான இந்த பாகம்... மிகவும்
அழகு திவ்யா... :)))

பயணங்கள் சீக்கிரம்
தொடரட்டும்... :))

வாழ்த்துக்கள் திவ்யா...!!!\\



உங்கள் வாழ்த்துக்களுக்கும் விரிவான விமர்சனங்களுக்கும் நன்றி!!

Divya said...

\\Blogger அருள் said...

எளிமையான..எழுது நடை.
கவிதையாய் கவி கதை.
காதலோடு கலந்த சோகம்.
அழகு.
கலக்குறிங்க திவ்யா\\


வாங்க அருள்,

உங்கள் பாராட்டிற்கு என் மனமார்ந்த நன்றிகள்!!

Divya said...

\\Blogger நசரேயன் said...

அருமையான நடை, தொடரட்டும் உங்கள் எழுத்து பயணம்\\


வாங்க நசரேயன்,

உங்கள் தொடர் வருகைக்கும், உற்சாகமளிக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி!

Divya said...

\\Blogger anbudan vaalu said...

naduve varum kavidhaigal arumai.....\\


மிக்க நன்றி அன்புடன்......வாலு!!!

Divya said...

\\Blogger Saravana Kumar MSK said...

ஒரே கலக்கல்..

ஆனா அநியாயமா பானுவோட கையா வெட்டிட்டீங்களே.. So Sad.. :(\\


பானுவுக்காக ரொம்ப கவலை படுறீங்க போலிருக்கு சரவணன்?

Divya said...

\\Blogger Saravana Kumar MSK said...

//"என்னை கல்யாணம் பண்ணிக்கிறீயா?"

" ............................."

"உனக்கு இஷ்டம் இல்லியா பானு?"

" கம்னு இருந்தா இஷ்டம் இல்லேன்னு அர்த்தமா?......"


"அம்மா தாயே.....வாய் திறந்து பேசினாலே.....பொண்ணோட மனசை புரிஞ்சுக்க முடியாது......இதுல நீ இப்படி அமைதியா இருந்தா.....நான் என்னன்னு நினைக்கிறது??? நம்மளையும் ஒருத்தன் கல்யாணம் கட்டிக்கிறியான்னு கேட்குறானேன்னு .....நீ சந்தோஷப்படுவேன்னு பார்த்தா, இப்படி உம்னு உக்காந்துட்டு பந்தா காட்டுறே??"//

என்னே அருமையான டயலாக்ஸ்..\\


நன்றி சரவணன்!!

Divya said...

\\Blogger Saravana Kumar MSK said...

//நாட்களும் உருண்டோடின.......பானுவின் பிறந்தநாள் வந்தது..........அன்று பானு........//

சரி அப்பறம்..

என்னது அடுத்த வாரமா??

சரி.. எனக்கு மட்டும் கதையை சுருக்கமாக மெயில் அனுப்பி விடவும். ;)\\


அப்புறம்.......நாளைக்கு அடுத்த பாகத்தில்!!

Divya said...

\\Blogger Saravana Kumar MSK said...

கவிதைகள் ரெண்டும் சான்ஸே இல்லை.. :)\\



கவிஞரின் பாராட்டிற்கு மிக்க நன்றி!!!!

Divya said...

\\Blogger விஜய் said...

கையை எடுக்கறதெல்லாம் ரொம்ப அக்கிரமம். விக்கிரமன் படம் மாதிரி போய்க்கொண்டிருந்ததில் ஏன் இவ்வளவு வன்முறை?\\



த்ரீல்லர் கதை முயற்சி பண்றப்போ, இந்த மாதிரி வன்முறை, சோகம் எல்லாம் கண்டுக்க கூடாது விஜய்!



\\காதல் இதயத்தை உந்தன்
காலடியில் விட்டு செல்கிறேன்…
ஏனெனில் உன் அருகாமை நீங்கினால்
தனது துடிப்பை நிறுத்திவிடும் என்பதால்!\\

ரொம்ப டச்சிங்க் வரிகள். வைரமுத்து வாலியெல்லாம் டியூஷன் எடுத்துக்கணும் :-)\\


நன்றி, நன்றி!!!



\\"அம்மா தாயே.....வாய் திறந்து பேசினாலே.....பொண்ணோட மனசை புரிஞ்சுக்க முடியாது......\\
ஆரம்பிச்சுட்டாங்கய்யா பொண்ணோட மனசைப் பற்றி லெக்சர் அடிக்க. நல்ல வேளை, “ஒரு பெண்ணோட மனசை இன்னொரு பொண்ணு தான் புரிஞ்சுக்க முடியும்’ங்கற வசனம் போடாம இருந்தீங்களே :-)\\



ஹா!!ஹா!! லெக்சர் பார்த்து ரொம்பதான் சலிச்சிக்கிறீங்க விஜய்:(


\\இரண்டு மாதங்களில் பானுவிற்கு செயற்கை கை பொறுத்தப்பட்டது. \\
செயற்கை கால் கேள்விப் பட்டிருக்கேன். செயற்கை கையும் வந்தாச்சா. Technology has developed very much!!\\

:)))


\\ ஆவலுடன் அடுத்த பகுதியை எதிர்பார்க்கிறேன்!!\\


உங்கள் விரிவான விமர்சனத்திற்கு என் மனமார்ந்த நன்றிகள் விஜய்!!

Divya said...

\\Blogger புதியவன் said...

//போகுமுன் எந்தன்
காதல் இதயத்தை உந்தன்
காலடியில் விட்டு செல்கிறேன்…
ஏனெனில் உன் அருகாமை நீங்கினால்
தனது துடிப்பை நிறுத்திவிடும் என்பதால்!//

அழகான கவிதைகளோடு பயணிக்கிறது கதை. தொலைவைப் பற்றி கவலையில்லை பயணம் இனிமையாக இருக்கிறது. தொடரட்டும் உங்கள் க(வி)தைப் பயணம். வாழ்த்துக்கள் திவ்யா...\\


வாங்க புதியவன்,

தொடர் கதை எத்தனை பாகம் போட்டாலும்.......படிப்பீங்க போலிருக்குதே:)))

உங்கள் வருகைக்கும் , வாழ்த்துக்களுக்கும் மிக்க நன்றி புதியவன்!!

Divya said...

\\OpenID suttapalam said...

//தாய்மையின் கனிவோடு தழுவி
அணைத்துக்கொண்டது அந்தத் தந்தை உள்ளம்!
Sema Sentencenga..\\\

குறிப்பிட்டு பாராட்டியதிற்கு மிக்க நன்றி!!

நான் மிகவும் உணர்ந்து எழுதிய இந்த வரியை நீங்க குறிப்பிட்டிருந்தது பார்க்கிறப்போ.......சந்தோஷமா இருந்தது.


//அந்தக் குரலைக் கேட்டதும்...
அத்தனை கண்களும் ஆச்சரியத்தில்....
அப்பா னு கூப்பிட்டதற்கு ஏன் ஆச்சர்யம்? என் மரமண்டைக்கு புரியல!!\\


ஹா ஹா!!
மயக்கம் தெளிந்து பானு எழுந்ததும், ....அங்கே எல்லாரும் சந்தோஷம் கலந்த ஆச்சரியத்தில் இருந்ததை அப்படி எழுதினேன்.



\\ சூப்பரா இருந்துச்சுங்க! அடுத்த பாகத்துக்கு ரொம்ப நாள் வெயிட் பண்ண வைக்காதீங்க!!\\


ரொம்ப ரொம்ப ஸாரி ......அடுத்த பாகம் எழுத வெகுநாட்கள் எடுத்துக்கிட்டேன்:(

நாளைக்கு கண்டிப்பா பப்ளீஷ் பண்ண முயற்சி பண்றேன்...அவசியம் படிச்சுட்டு கருத்து சொல்லுங்க.

Divya said...

\\Blogger Divyapriya said...

ம்ம்ம் flashback பதிவு அருமை…பானுமதி பேர் விளக்கமும் சூப்பர்…பானு பிறந்தநாளுக்காக வைட்டிங் :)\\


பானுவின் பிறந்தநாளை நாளைக்கு கொண்டாடிடலாம் திவ்யப்ரியா:))

உங்கள் பாராட்டிற்கு நன்றி!!

Divya said...

\\Blogger Mathu said...

Awesome flow divya!
கவிதை எல்லாமே கலக்கல்! Every single line! உங்களோட வழமையான ஸ்டைல் ல!\\


வாங்க மது,

தொடர்ந்து நீங்க எனக்கு அளித்து வரும் உறசாக பின்னூட்டங்களுக்கு என் மனமார்ந்த நன்றி மது!!

Divya said...

\\Blogger Mathu said...

கதைல உங்கள யாரும் அடிக்க முடியாது! :) and you are keep proving it in every story!
வாழ்த்துக்கள்!\\



வாழ்த்துக்களுக்கு நன்றி மது!!

Divya said...

\\Blogger பிரபாகர் சாமியப்பன் said...

கவிதை , படங்கள் மற்றும் கதையின் போக்கு மிக அருமைங்க

வாழ்த்துக்கள்\


வாங்க பிரபாகர்,

உங்கள் மனம்திறந்த பாராட்டிற்கும், வாழ்த்துக்களுக்கும் நன்றி!!

Divya said...

\\Blogger gils said...

!!!trisha kita callsheet vangi pose ketu boto pudicheengala??!! unga kathaikagvay still edutha mari iruku..nachhu story..aana intha part flashbacka ila present tenseanu puriala..solpa confusionga unthi\\


வாங்க கில்ஸ்,

'falsh back'....dialogues direct speech layey eluthitein,
so present tense la irukku,
flash back scene aa athai imagine panikonga,
ippo kulappam theernthuchcha?

உங்கள் பாராட்டிற்கு என் மனமார்ந்த நன்றிகள் கில்ஸ்!!

Divya said...

\\Blogger நிமல்-NiMaL said...

என்ன கதை சோகமாக...

ஆனாலும் காதல் சோகம், அழகான கவிதைகளுடன் அருமையாக இருக்கிறது...

அடுத்த பகுதிக்காக காத்திருக்கிறேன்... சிறப்பாக எழுத வாழ்த்துக்கள்...!\\


வாங்க நிமல்,

உங்கள் பாராட்டிற்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி!!

அடுத்த பகுதி நாளை பதிவிட முயற்சிக்கிறேன்.

Divya said...

\\Blogger shalini said...

Superb .. :) gng well\\


நன்றி ஷாலினி!!

Divya said...

\\Blogger நாணல் said...

kavithai rendum kalakkal... padichu kanla irundhu kanner etti paarthathdu... kadhai as usual kalakareenga..adhutha paguthikku waitings... :)\


கண்ணீர் வந்துச்சா??
கவிதையோட ஒன்றி போகிட்டீங்க போலிருக்கு நாணல்:)))

பாராட்டிற்கு மிக்க நன்றி நாணல்!!

Divya said...

\\Blogger முகுந்தன் said...

என்ன திவ்யா இப்படி சோகத்தை பிழிந்து விட்டீர்கள்?

//கோபத்தில் இருப்பவளின் பின்னால் சென்று...செவிமடலை இதழால் மென்மையாய் உரசி... அதில் சிலிர்த்து அவள் எழுவதற்குள்...அப்படியே அணைத்து....நெற்றியில் இதழ் பதித்தான்!!
//

ஏதோ ரொமான்ஸ் படம் பார்த்தா மாதிரி இருக்கு....\\


உங்கள் ரசிப்பினை பின்னூட்டத்தில் பகிர்ந்துக் கொண்டதிற்கு நன்றி முகுந்தன்!!!

Divya said...

\\Blogger Karthik said...

//ஆனா அநியாயமா பானுவோட கையா வெட்டிட்டீங்களே.. So Sad.. :(

:(\\


வாங்க கார்த்திக்,

பானுவிற்காக ரொம்பவே ஃபீல் பண்றீங்க:(

வருகைக்கு நன்றி!

Divya said...

\\Blogger தெக்கத்தி பொண்ணு said...

மிக அருமையான கதை. கவிதையோடு கலந்த உங்கள் எழுத்து நடை அருமை!!\\\


உங்கள் முதல் வருகைக்கும் பாராட்டிற்கும் மிக்க நன்றி தெக்கத்தி பொண்ணு!!!!

Divya said...

\\Blogger பொடியன்-|-SanJai said...

எப்டித் தான் இப்படி கேப்பே விடாம கதை எழுத முடியுதோ.. என் கண்ணே பட்றும் எங்க ஊர்ஸ்க்கு.. கலக்குமா நீ.. :)\\


வாங்க ஊர்ஸ்,

பொறுமையா தொடர்கதை எல்லாம் எப்போதிலிருந்து படிக்க ஆரம்பிச்சீங்க??

உங்கள் உற்சாகமளிக்கும் பின்னூட்டத்திற்கு நன்றி சஞ்சய்!!

Divya said...

\\Blogger எழில்பாரதி said...

திவ்யா அருமையான நடை கதை கவிதை இரண்டுமே அருமை!!!!!

அடுத்த பகுதியை ஆவலோடு எதிர்பார்க்கிறேன்!!!!\\


உங்கள் பாராட்டிற்கு மிக்க நன்றி எழில்பாரதி!!!

Divya said...

\\Blogger gayathri said...

unga kathaiyoa hero name nalla iruku pa இளா\\


ஹீரோ பெயர் நல்லாயிருக்கா காயத்ரீ??

நன்றி!!!

Divya said...

\\Blogger gayathri said...

என்னவனே!
உன்னை காதலிக்க ஆரம்பித்த
நிமிடம் முதல் - என்னை சுற்றி
சகலமும் நீயாக இருக்கவேண்டும்
என்று எண்ணினேன்.. எந்தன்
உயிராகவும் கூடத்தான்..!
அந்த உயிர் பிரியும் வலியை விட
நீ என்னை விட்டு பிரியவேண்டும்
என்ற நினைவே கொடுமையாக உள்ளதடா!
மரணத்தை கூட தைரியமாக எதிர்கொள்ளும்
எந்தன் இதயம்.. உந்தன் பிரிவை
தாங்கமாட்டாமல் தவிக்கிறது

intha lines nalla iruku pa\\


நன்றி 'பா'....:)))

Divya said...

\\Blogger நாகை சிவா said...

த்ரிஷா(பானு) வ சோகமாக பாக்க நல்லா இல்ல... சந்தோஷ மூடுக்கு சீக்கிரம் மாத்துங்க...

"உன்னை நினைக்கையில்
சோகம் கூட சுகம் தான்" னு

கவுஜு எல்லாம் பாடமா சீக்கிரம் வேறு மூடு சேஞ் பண்ணுங்க...\\


அட....இந்த கவுஜ நல்லாயிருக்குதே:)))


ரொம்ப ஃபீல் பண்ணாதீங்க சிவா......கதை தானே, சோகமா த்ரீஷா[பானு] இருந்துட்டு போட்டுமே!

Divya said...

\\Blogger ஸ்ரீமதி said...

அக்கா சூப்பர் கலக்கறீங்க... :))))) இதே தான் போன பதிவுக்கும் சொன்னேனா?? சரி பரவால்ல.. திரும்ப சொன்னா தப்பில்ல.. ஏன்னா நீங்களுன் திரும்ப திரும்ப நல்லா எழுதறீங்களே.. :)))))))\\


வாங்க ஸ்ரீமதி,

உங்கள் தொடர் வருகைக்கும், உறசாகமளிக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி!!!
[அதே பின்னூட்டம்னாலும் நோ ப்ராப்ளம் ஸ்ரீ]

Divya said...

\\Blogger ஜி said...

:))

No comments now...\\\


உங்கள் வரவே.....போதும் கதாசிரியரே:)))

கருத்துக்களை பொறுமையா சொல்லுங்க,Tk ur time!

Divya said...

\\Anonymous Anonymous said...

hey divs chance illa sema interestinga poguthu.......\\


வாங்க அனானி,

பாராட்டிற்கு நன்றி!!
உங்க பெயர் சொல்லிருந்தா இன்னும் ரொம்ப சந்தோஷப்பட்டிருப்பேன்.......:)))

Divya said...

\\Blogger சுபானு said...

அழகான காதல் ததும்பும் சோகக் கதை.. அருமை.. :)\\



வாங்க சுபானு,

உங்கள் வருகைக்கும் பாராட்டிற்கும் மிக்க நன்றி!!

Divya said...

\\Blogger பாச மலர் said...

எப்டியும் நல்ல சந்தோஷப்படும்படியான முடிவுதானே திவ்யா..\\


வாங்க பாச மலர்,

உங்கள் தொடர் வருகை எனக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது, நன்றி!!

முடிவு ......என்னன்னு பொறுத்திருந்து பாருங்களேன்:)))

Divya said...

\\Blogger கோபிநாத் said...

அடுத்த பதிவுக்கு வெயிட்டிங் ;))\\


ரொம்ப நாள் வெயிட் பண்ண வைச்சுட்டேன்.....ஸாரி:(

Divya said...

\\Blogger MavericK said...

அடுத்த பகுதிக்காக ஆவலுடன் காத்திருக்கிறேன்...\\


வாங்க MavericK,

உங்கள் ஆவல்...ஊக்கமளுக்கிறது!!

வருகைக்கு நன்றி!!

Divya said...

\\Blogger கலாட்டா அம்மனி said...

\\ கொஞ்ச நாள் பொறுத்துக்
கொள்கிறேன்..
உன்னைக்
கொஞ்சும் நாள் தூரத்தில்
இல்லையென்ற
நம்பிக்கையுடன்... \\

ரசிக்கவைக்கும் வரிகள்,
சோகத்திலும் ஆழமான காதல், என மிகவும் அழகாக செல்கிறது கதை.\\


கவிதை வரிகளை குறிப்பிட்டு பாராட்டியதிற்கு மிக்க நன்றி அம்மனி........ கலாட்டா அம்மனி!!

Divya said...

\\Blogger ஜோசப் பால்ராஜ் said...

// கம்னு இருந்தா இஷ்டம் இல்லேன்னு அர்த்தமா?......"//

மிக அருமையான வரிகள்.

அநியாயமா பானுவோட கைய வெட்டுனதத்தான் தாங்கிக்க முடியல.\\


ரசிப்பிற்கு நன்றி ஜோசஃப்!1

Divya said...

\\Blogger அதிரை ஜமால் said...

\\போகுமுன் எந்தன்
காதல் இதயத்தை உந்தன்
காலடியில் விட்டு செல்கிறேன்…
ஏனெனில் உன் அருகாமை நீங்கினால்
தனது துடிப்பை நிறுத்திவிடும் என்பதால்!\\

வாவ் என்னமா சிந்திக்கிறீங்க.

தூள். வாழ்த்துக்கள்\\



வாங்க ஜமால்!!


உங்கள் வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி!!

Divya said...

\\Blogger PoornimaSaran said...

ஹல்லோ அடுத்த பகுதிய கொஞ்ச சீக்கிரமா போடரீங்களா?\\


அச்சோ.....மிரட்டாதீங்க பூர்ணிமா:(

கண்டிப்பா இந்த வாரத்தில் அடுத்த பாகம் போடுறேன்.

உங்கள் ஆவலான எதிர்பார்ப்பு ஊக்கமளிக்கிறது, நன்றி பூர்ணிமா!!

Divya said...

\\OpenID suttapalam said...

அடுத்த பதிவு சீக்கிரம் ப்ளீஸ்!
என்ன ஆகும் என்ன ஆகும்னு நினைச்சு நினைச்சு நானே அதுத்த பாகம் எழுதிருவேன் போல இருக்கு!!\\


ஹா ஹா!!

நீங்களே அடுத்த பாகம் எழுதிடுறீங்களா??? இது நல்ல ஐடியாவா இருக்குதே!

சீக்கிரம் அடுத்த பாகம் போடுறேன்...ரொம்ப ஸாரி வெகு நாட்கள் காக்க வைச்சதுக்கு:(

Divya said...

\\Blogger Saravana Blogs said...

கதையோட்டம் மிக அருமை... ஊட்டி சாலையில் பயணம் செல்வது போல
எத்தனை எத்தனை திருப்பங்கள்... ஒவ்வொரு திருப்பத்திலும் ரசிக்க கூடிய நிகழ்வுகள்...

அருமை... நான்காம் பாகத்திற்காக ஆவலுடன் காத்து இருக்கிறேன்...\\


வாங்க சரவணன்,

உங்கள் முதல் வருகைக்கும், விரிவான விமர்சனத்திற்கும் மிக்க நன்றி!!

Divya said...

\\Blogger ஸ்ரீ said...

Attagaasagama iruku divya kadha. Vithiyaasama aarambichu azhaga poitu iruku. Super. Vaazthukka\\\


வாங்க கவிஞரே!!

உங்கள் பாராட்டிற்கும் மிக்க நன்றி!!

Divya said...

\\Blogger கண்ணண் said...

Divya,

Nenaga Eppa tha next part post pannuvenga. Daily na Emanthu porathu tha mecham....
Every 3 hr na check pannuren...
Please next part Bloge la post pannunga illa
Enakku matumavathu mail pannunga

Puthu rasigan
Kannan\\


வாங்க கண்ணன்,

உங்கள் எதிர்பார்ப்பும் ஆவலும்.....ஊக்கமளித்தது.

கண்டிப்பா அடுத்த பாகம் இந்த வாரத்தில் பதிவிடுகிறேன்.

பொறுமையுடன் காத்திருந்ததிற்கு நன்றி!!

KC! said...

late-a vandhu latest-a therinjinten :D Crime thriller-nu ennai namba vachu emathitteengale ;-)

Divya said...

\Blogger usha said...

late-a vandhu latest-a therinjinten :D Crime thriller-nu ennai namba vachu emathitteengale ;-)\


So sorry for disappointing you Usha:(

Its my first attempt to pen a thriller/luv story,
will try to do my best in my upcoming effects!!

thanks a lot for ur comment!!

Keep visiting!!

தமிழன்-கறுப்பி... said...

\\
நீ என்னை வேண்டாம் வேண்டாம்
என்று சொல்லும் ஒவ்வொரு முறையும்
இறந்து இறந்து பிழைக்கிறேன்!
\\

இந்தப்பொண்ணுங்களே இப்படித்தான் தாங்களா ஏதாவது கற்பனை பண்ணிக்கிட்டு ஆம்பளைங்களை கஷ்டப்படுத்த வேண்டியது...:)