August 14, 2008

காதல் எனப்படுவது ....யாதெனில்!!

காதல் எனப்படுவது யாதெனில்....என்ற தலைப்பில் தொடர் பதிவோட்டத்தில் என்னை[யும்] இணைத்த பதிவர் 'ஜோசஃப் பால்ராஜ்' க்கு என் நன்றி.

கற்பனை கதைகளில் காதலை மையமாக வைத்து கதாபாத்திரங்களை உருவாக்குவதை விட, 'காதலை' பற்றி தனிப்பதிவு எழுதுவது..........எத்தனை கடினமென்பதை இத்தொடர் ஓட்டத்தில் இணைத்தப்பின் தான் தெரிந்தது:((

காதலை பற்றிய என் கண்ணோட்டத்தை ஒரே வரியில் கூறவேண்டுமானால்,
காதல் எனப்படுவது.........

காமத்தை தாண்டி, பிரதிபலனை தாண்டி குடிகொண்டிருக்கும் அன்பு!!!

காதல் குறித்து யோசித்தால், மனதில் எழும் கேள்விகள்....

உண்மைக் காதல் என்பது ஒருவரை ஒருவர் பார்த்தவுடன் உண்டாகுமா?
அல்லது
கொஞ்ச நாளாவது பழகியவுடன் உண்டாகுமா??

இந்த முதல் கேள்விக்கான பதிலை ஆராய்ந்தால் அது பெரும்பாலும் 'இனக்கவர்ச்சி' தான் மூலக்காரணமாக இருக்கும்.

சரி.......தீடிரென ஏற்பட்ட இந்த ' வயிற்றில் பட்டாம்பூச்சி பறக்கும்' உணர்வு காதலா?? Infactuation எனப்படும் இனக்கவர்ச்சியா??

வித்தியாசம் தெரிஞ்சுக்கனுமா.........??

உங்களுக்கு ஏற்பட்டிருக்கும் உணர்வு இனக்கவர்ச்சியா இருந்தா......

* உங்கள் மனதில் ஒரு தற்காலிக விருப்பத்தை மட்டுமே உருவாக்கும்.
* ஒருவித குற்றயுணர்வும் 'ஈர்ப்புடன்' சேர்ந்தே வரும்.
* அதில் கிடைக்கும் மகிழ்ச்சியும் சிறிது நேரம் மட்டுமே நீடிக்கும்.
* பார்வை பரிமாறுதலில், சந்திப்பில்.........பதற்றமான மனநிலையே அதிகம் இருக்கும்.

ஒ.கே infactuation னா எப்படி இருக்கும்னு தெரிஞ்சாச்சா..........அடுத்து கொஞ்ச நாள் நட்புடன் பழகிய ஒருவர் மீது உண்டாகும் நேசம் .........காதலா??.......அது காதல்னா எவ்விதமாக உணர்வீங்க.......??

*குணநலன்களில் வித்தியாசம் இருந்தாலும் ஒருவித புரிதல் இருவருக்குள்ளும் இருக்கும்.
*காதல், காமம், ஆசை விட..........ஆழமான நட்புணர்வே முதன்மையானதாக மேலோங்கி நிற்கும்.
*உங்களவர் உங்களுக்கே உங்களுக்குதான் என்ற வலிமையான உள் உணர்வு எப்போதும் இருக்கும்.
*பொறுமையாய் காத்திருந்து எதிர்காலத்தை திட்டமிட்டு காதலித்தவரை கைப்பிடிக்க வேண்டும் என்ற மனோநிலையை உருவாக்கும்.
*பண்பட்ட நட்புணர்வும், ஒருவர் மேல் இருவருக்கு மரியாதையும் இருக்கும்.
*அதீத மேக்கப், வெளித்தோற்றத்திற்கான முக்கியத்துவம், நல்லெண்ணத்தை ஏற்படுத்தும் முகமூடி என எதுவும் இன்றி.......தான் தானாகவே இருப்பதையே மனம் விரும்பும்.
*சந்திக்கும் வேளைகளில் படப்படப்பின்றி......மனதில் ஒருவித இதமான தென்றல் வீசும்.

இப்போ உண்மையான காதல் உணர்வுதான் உங்களது என அறிந்து, இருவரும் காதலை பரிமாறிக்கொண்டு காதலிக்க ஆரம்பித்து விட்டீர்கள் .........இனி........???

காதல் கொள்ளும் போது காதலர்கள் நிலமை, மனப்பான்மை, பக்குவம், லட்சியம் ஆகியவைகள் ஒரு மாதிரியாக இருக்கலாம். பிறகு கொஞ்ச காலம் கழிந்த பின் இயற்கையாகவே பக்குவம், நிலைமை, லட்சியம் மாறலாம். இந்த மாதிரிச் சந்தர்ப்பங்களில் காதலுக்காக ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்துக் கொண்டு, அனுசரித்துப் போவது காதல் வெற்றி பெற மிக மிக அசசியம்!

தேடி வந்து
என் இதய
வாசலை தட்டிய
உன்மேலான
என் நேசத்தை
அன்பு, பாசம்.....என்ற
வரையறைக்குள் அடைக்கவா?
நட்பு,காதல்....என்ற
எல்லைக்குள் நிறுத்தவா??
ம்ம்ம்....
இல்லை
இல்லவே இல்லை...
அதற்கும் மேலாய்
பலபடி உயர்வாய்
ஒரு பெயர் இருந்தால்
சொல்லேன்........
உன்பெயரோடு சேர்த்து
அதனையும்
என் இதய சிறையில்
சிறை வைக்க!!

இத்தொடர் ஓட்டத்திற்கு நான் விரும்பி அழைப்பது
என் அன்பு தோழி......
'கவி'இளவரசி தமிழ்மாங்கனி காயத்ரி.

72 comments:

said...

:))

egjamla answer ezuthara mathiri paththi pirichu,bullets pottu unga definition, tips, kavuja-nu moththama round katti adichurukeenga :))

said...

kalakkunga divyaaaaa :))

Anonymous said...

அட இதுவும் நல்லாத்தான் இருக்கு...ஆனா கேள்விக்கு பதில் அளிப்பதுதான் ரொம்ப கஷ்டம்!

said...

நூற்றுக்கு நூறு ம்திப்பெண்கள் :))

said...

கலக்கிட்டீங்க திவ்யா.
இப்படி ஒரு நல்ல பதிவுக்காக இத்தனை நாளு பொறுத்திருந்தது தப்பேயில்லை.

இனக்கவர்சியை காதல்னு அதுல விழரவங்க சொல்வாங்க,
உண்மையாண காதலை கூட இனகவர்ச்சினு மத்தவங்க சொல்வாங்க.

ஆனா நீங்க இரண்டுக்கும் இடையில இருக்க வேறுபாடுகளை மிகத்துல்லியமாக சொல்லியிருக்கீங்க. ஒரு ஆணுக்கு ஒரு பெண்ணின் மீது இனக்கவர்சி வரும் போது அந்த பெண்ணை திரும்பத் திரும்ப பார்க்கனும்னு தோணும். ஆனா பார்த்தபின்னாடி என்ன செய்யிறதுன்னு புரியாது. ஒன்னு ரொம்ப அதிகமா அலட்டி காரியத்தை கெடுப்பாய்ங்க, இல்லன்னா சத்தம் போடாமா வந்துருவாங்க. கூட போற காதலை காக்க சபதம் எடுத்த நண்பர்கள் நிலைமை இருக்கே அது ரொம்ப மோசம், அடச்சீ, இதுக்குத்தான் நீ இவ்ளோ தூரம் ஓடிவந்தியான்னு கேட்க தோணும்.

//தான் தானாகவே இருப்பதையே மனம் விரும்பும்// இதைவிட உண்மையான காதலுக்கு ஒரு சிறந்த விளக்கம் கொடுக்க முடியாது.
தான் தானாகவே இருப்பதையே விரும்பும் மனம் தான் அடுத்தவர்களது தனித்தன்மையையும் பாதுகாக்கும். எனக்காக உன்னைய நீ இப்டி மாத்திக்கணும், அப்டி மாத்திக்கணும்னு எல்லாம் எதிர்பார்காது. அப்படி எதிர்பார்ப்பு வந்தால் அதற்குபேர் காதலே இல்லை. உண்மையான காதல் காதலிக்கப்படுபவர் மீது எந்த கட்டுபாடுகளையும் விதிக்காது.

உங்களோட தனித்தன்மையான அந்த கவிதை இன்னும் அருமை.

ஒரு சிறந்த நபரிடம் இத்தொடரை தொடரும் பொறுப்பை கொடுத்தேன் என்ற மனநிறைவை எனக்களித்த பதிவு. வாழ்த்துக்கள் தோழி.

said...

" Love + Love = Life "
நல்ல சமன்பாடு திவ்யா. சில கேள்விகளுக்கு பதில் அளிப்பது கடினம். இருவருக்குமே காதல் இருந்தால் தான் வாழ்க்கை நன்றாக இருக்கும். இல்லை என்றால்

"Life - Love" காதலாக முடியாது.. ??
சே சமன்பாட்டு சரியா வர மாட்டேங்குதே..

நமக்கு கணக்கும் வர மாட்டேங்குது.. கணக்கு பண்ணவும் தெரியலை..

said...

அருமை அருமை ..
காதல் நட்பு அனைத்தையும்
அழகாக அலசி இருக்குறீர்கள் ..
நல்ல ஒரு பதிவு ..
கண்டிப்பாக படிக்க வேண்டியது ...

வாழ்த்துக்கள் திவ்யா

என்றும்
இனிய தோழன் ,..
விஷ்ணு

said...

Akka kadhal paththina definition+ kavithai super..!! :-))

(sorry tamil font illa, so taminglish)

said...

/egjamla answer ezuthara mathiri paththi pirichu,bullets pottu unga definition, tips, kavuja-nu moththama round katti adichurukeenga :))//

Repeatye... :))

said...

செம விளக்கம் திவ்யா...பிச்சிட்டீங்க...நட்பு+காதல் உணர்வ பத்தி சொல்லி இருக்குறது அருமையிலும், அருமை...கவிதைய பத்தி சொல்லவே வேண்டாம் :) kudos to you...

said...

//தேடி வந்து
என் இதய
வாசலை தட்டிய
உன்மேலான
என் நேசத்தை//

//உன்பெயரோடு சேர்த்து
அதனையும்
என் இதய சிறையில்
சிறை வைக்க!!//

அட..அழகான கவிதை திவ்யா..

காதலுக்கான விளக்கமும் நன்றாகவே இருந்தது..

said...

அது கவிதையா ?

இல்ல ஆறிவுரையா ?

அருமையாக உள்ளது..

:))

said...

பின்னிட்டேள் போங்கோ :-)

வந்துட்டோம்ல ....

said...

Just now am referred (second time)ur blogs to my frineds.Ungal pulamaiku valthukkal.

said...

//"காதல் எனப்படுவது ....யாதெனில்!//

'ithu than da kaadhal' nu yaaralayum adichu solla mudiyaatha oru puriyaatha azhagiya kavidhai,purinthum solve panna mudiyaatha oru puzzle :)

said...

//காதல் குறித்து யோசித்தால், மனதில் எழும் கேள்விகள்....//

vidai alithaalum vilangidaathu.. :P

said...

//தேடி வந்து
என் இதய
வாசலை தட்டிய
உன்மேலான
என் நேசத்தை
அன்பு, பாசம்.....என்ற
வரையறைக்குள் அடைக்கவா?//

apdiye adaichaalum jannal vazhiya es ayiruvaanga.. :P

said...

//நட்பு,காதல்....என்ற
எல்லைக்குள் நிறுத்தவா??//

ellai la niruthina vere yaarayum ulla vara vidaama vuyira edupaanga ;)

said...

//அதற்கும் மேலாய்
பலபடி உயர்வாய்
ஒரு பெயர் இருந்தால்
சொல்லேன்........
உன்பெயரோடு சேர்த்து
அதனையும்
என் இதய சிறையில்
சிறை வைக்க!!//

idhaya kadhaivai thedi vanthu thatrvanuku thaney peru venum...mmm...ducalty nu vai..apt ta irukum :P

said...

//காமத்தை தாண்டி, பிரதிபலனை தாண்டி குடிகொண்டிருக்கும் அன்பு!!!//

egjactly Divvy.. :)

super post!!! kalakita po :)

said...

//காமத்தை தாண்டி, பிரதிபலனை தாண்டி குடிகொண்டிருக்கும் அன்பு!!!//

நல்ல definition திவ்யா... :))

உண்மைக் காதல் என்பது ஒருவரை ஒருவர் பார்த்தவுடன் உண்டாகுமா?
அல்லது
கொஞ்ச நாளாவது பழகியவுடன் உண்டாகுமா??

சபாஷ் சரியான கேள்வி .. ;)

said...

//பார்வை பரிமாறுதலில், சந்திப்பில்.........பதற்றமான மனநிலையே அதிகம் இருக்கும்.//

ஆஹா இதுக்கு பேரு தான் 'இனக்கவர்ச்சி' என்கிற infactuation அ?

said...

//காதல், காமம், ஆசை விட..........ஆழமான நட்புணர்வே முதன்மையானதாக மேலோங்கி நிற்கும்//

காதலுக்கு இடையேயும் நட்பு இருக்குமா திவ்யா? வித்தியாசமா இருக்கு ..

//அதீத மேக்கப், வெளித்தோற்றத்திற்கான முக்கியத்துவம், நல்லெண்ணத்தை ஏற்படுத்தும் முகமூடி என எதுவும் இன்றி.......தான் தானாகவே இருப்பதையே மனம் விரும்பும்.//

ரொம்ப யதார்த்தாம சொல்லி இருக்கீங்க...

ஆனால் நம்ம தமிழ் படத்துல இந்த formula வை மாத்தி சொல்லி நம்மள ஏமாத்தறாங்களோ .. ?

said...

//என் நேசத்தை
அன்பு, பாசம்.....என்ற
வரையறைக்குள் அடைக்கவா?

நட்பு,காதல்....என்ற
எல்லைக்குள் நிறுத்தவா??

ஒரு பெயர் இருந்தால்
சொல்லேன்........
உன்பெயரோடு சேர்த்து
அதனையும்
என் இதய சிறையில்
சிறை வைக்க!!//

கவிதை அருமை திவ்யா..

said...

http://divyaastimepass.blogspot.com/

என்னால் இந்த வலைதளத்திற்குள் போக முடியவில்லை. எனக்கும் அனுமதி கொடுங்கள்

said...

இதெல்லாம் ஒண்ணுமே இல்லை. ஒருவரைப் பார்க்கையிலே Oestrogren, Eestrogen, Lactogen என்ற பற்பல ஹார்மோன்கள் நிறைய சுரந்ததுன்னா அது தான் காதல்ன்னு சுஜாதா ஒரு பிளாக் எழுதியிருந்தால் சொல்லியிருப்பார் :-)

காதல் என்பது தனி உடமை
கஷ்டம் மட்டும் தானே பொது உடமை :)

said...

மிக அருமையான விளக்கங்கள்.
காதல் பற்றி பல அறிஞர்கள் கருத்துக்களைப் படித்திருக்கின்றேன்.
எனினும் வித்தியாசமாக புதிய முறையில் விளக்கியிருக்கின்றீர்கள்.

அறிவுரைகளும் சூப்பர்.

செல்லவே தேவையில்லை
கவிதை ரெம்ப சூப்பர்.
//
ம்ம்ம்....
இல்லை
இல்லவே இல்லை...
அதற்கும் மேலாய்
பலபடி உயர்வாய்
ஒரு பெயர் இருந்தால்
சொல்லேன்........
உன்பெயரோடு சேர்த்து
அதனையும்
என் இதய சிறையில்
சிறை வைக்க!!
//

ரெம்பவே ஈர்த்த வரிகள்.

இவ்வளவு அழகாக கவிதை எழுதுகின்றீர்களே

நீங்களும் காதலிக்கின்றீர்களோ?

எனக்குத் தெரிந்து
காதலின்றி
இவ்வளவு உயர்வான
கவிகள் வருவது
கடினமே!

said...

//தான் தானாகவே இருப்பதையே மனம் விரும்பும்

100pc உண்மை. ரொம்ப நல்ல பதிவு.

said...

//காமத்தை தாண்டி, பிரதிபலனை தாண்டி குடிகொண்டிருக்கும் அன்பு!!!//

அட்றா.. அட்றா.. கலக்கல்..
அந்த கவுஜயும் நல்லா இருக்கு ஊர்ஸ்.. :)

said...

\\ கப்பி | Kappi said...
:))

egjamla answer ezuthara mathiri paththi pirichu,bullets pottu unga definition, tips, kavuja-nu moththama round katti adichurukeenga :))\\

வாங்க கப்பி,

வருகைக்கு நன்றி!!

ஆக்சுவலா......நான் இப்படிதான் நோட்ஸ் எடுப்பேன் எக்ஸாமுக்கு படிக்கிறப்போ, பாயிண்ட் பாயிண்ட் ஆ எழுதி படிச்சாதான் மனசுல பதியும் நல்லா....

பழக்கதோஷம்......அப்படியே பதிவு எழுதறப்போவும் வந்துடுச்சு, நீங்க கரெக்ட்டா கண்டுபிடிச்சிட்டீங்க:))

said...

\\ Ramya Ramani said...
kalakkunga divyaaaaa :))\\

நன்றி ரம்யா:))

said...

\\ இனியவள் புனிதா said...
அட இதுவும் நல்லாத்தான் இருக்கு...ஆனா கேள்விக்கு பதில் அளிப்பதுதான் ரொம்ப கஷ்டம்!\\

வாங்க புனிதா,

ஆமாம்.....விடையளிக்க கஷ்டமான கேள்விதான்:(

வருகைக்கு நன்றி!!

said...

\\ sathish said...
நூற்றுக்கு நூறு ம்திப்பெண்கள் :))\\

நன்றி வாத்தியாரே:))

said...

\\ ஜோசப் பால்ராஜ் said...
கலக்கிட்டீங்க திவ்யா.
இப்படி ஒரு நல்ல பதிவுக்காக இத்தனை நாளு பொறுத்திருந்தது தப்பேயில்லை.

இனக்கவர்சியை காதல்னு அதுல விழரவங்க சொல்வாங்க,
உண்மையாண காதலை கூட இனகவர்ச்சினு மத்தவங்க சொல்வாங்க.

ஆனா நீங்க இரண்டுக்கும் இடையில இருக்க வேறுபாடுகளை மிகத்துல்லியமாக சொல்லியிருக்கீங்க. ஒரு ஆணுக்கு ஒரு பெண்ணின் மீது இனக்கவர்சி வரும் போது அந்த பெண்ணை திரும்பத் திரும்ப பார்க்கனும்னு தோணும். ஆனா பார்த்தபின்னாடி என்ன செய்யிறதுன்னு புரியாது. ஒன்னு ரொம்ப அதிகமா அலட்டி காரியத்தை கெடுப்பாய்ங்க, இல்லன்னா சத்தம் போடாமா வந்துருவாங்க. கூட போற காதலை காக்க சபதம் எடுத்த நண்பர்கள் நிலைமை இருக்கே அது ரொம்ப மோசம், அடச்சீ, இதுக்குத்தான் நீ இவ்ளோ தூரம் ஓடிவந்தியான்னு கேட்க தோணும். \\

வாங்க ஜோசஃப்,

தொடர் பதிவில் இணைத்தோடு நிறுத்திவிடாமல், பதிவு எழுதவும் உற்சாகப்படுத்தியதிற்கு நன்றி!

//தான் தானாகவே இருப்பதையே மனம் விரும்பும்// இதைவிட உண்மையான காதலுக்கு ஒரு சிறந்த விளக்கம் கொடுக்க முடியாது.
தான் தானாகவே இருப்பதையே விரும்பும் மனம் தான் அடுத்தவர்களது தனித்தன்மையையும் பாதுகாக்கும். எனக்காக உன்னைய நீ இப்டி மாத்திக்கணும், அப்டி மாத்திக்கணும்னு எல்லாம் எதிர்பார்காது. அப்படி எதிர்பார்ப்பு வந்தால் அதற்குபேர் காதலே இல்லை. உண்மையான காதல் காதலிக்கப்படுபவர் மீது எந்த கட்டுபாடுகளையும் விதிக்காது. \\

மிக மிக சரியாக சொல்லியிருக்கிறீங்க ஜோசஃப்,
அதீத கட்டுபாடு காதலை கசக்க செய்துவிடுகிறது:(

உங்கள் விரிவான கருத்து பரிமாறுதலுக்கு மிக்க நன்றி!!

\\உங்களோட தனித்தன்மையான அந்த கவிதை இன்னும் அருமை.

ஒரு சிறந்த நபரிடம் இத்தொடரை தொடரும் பொறுப்பை கொடுத்தேன் என்ற மனநிறைவை எனக்களித்த பதிவு. வாழ்த்துக்கள் தோழி.\\

வாழ்த்துக்களுக்கு நன்றி நண்பரே!!

said...

\\ Raghav said...
" Love + Love = Life "
நல்ல சமன்பாடு திவ்யா. சில கேள்விகளுக்கு பதில் அளிப்பது கடினம். இருவருக்குமே காதல் இருந்தால் தான் வாழ்க்கை நன்றாக இருக்கும். இல்லை என்றால்\\

வாங்க ராகவ்,

வருகைக்கும் பாராட்டிற்கும் நன்றி!

\\"Life - Love" காதலாக முடியாது.. ??
சே சமன்பாட்டு சரியா வர மாட்டேங்குதே..

நமக்கு கணக்கும் வர மாட்டேங்குது.. கணக்கு பண்ணவும் தெரியலை..\\

ROTFL:))
முதல்ல equation கரெக்ட்டா போட ட்ரை பண்ணுங்க.......அப்புறம் தானா கணக்கு பண்ணிடலாம்:))

said...

\\ Vishnu... said...
அருமை அருமை ..
காதல் நட்பு அனைத்தையும்
அழகாக அலசி இருக்குறீர்கள் ..
நல்ல ஒரு பதிவு ..
கண்டிப்பாக படிக்க வேண்டியது ...

வாழ்த்துக்கள் திவ்யா

என்றும்
இனிய தோழன் ,..
விஷ்ணு
\\

வாங்க விஷ்ணு,

உங்கள் மனம்திறந்த பாராட்டிற்கும் வாழ்த்துக்களுக்கும் மிக்க நன்றி!!

மீண்டும் வருக!

said...

\\ Sri said...
Akka kadhal paththina definition+ kavithai super..!! :-))\\

வாங்க ஸ்ரீ,
வருகைக்கும் பாராட்டிற்கும் நன்றி!

\\(sorry tamil font illa, so taminglish)\\

தங்கிலீஷ் பின்னூட்டம் போட்டா ஸாரி எல்லாம் கேட்க வேணாம் ஸ்ரீ.....:)))

said...

\\ ஜி said...
/egjamla answer ezuthara mathiri paththi pirichu,bullets pottu unga definition, tips, kavuja-nu moththama round katti adichurukeenga :))//

Repeatye... :))\\

:))

said...

\ Divyapriya said...
செம விளக்கம் திவ்யா...பிச்சிட்டீங்க...நட்பு+காதல் உணர்வ பத்தி சொல்லி இருக்குறது அருமையிலும், அருமை...கவிதைய பத்தி சொல்லவே வேண்டாம் :) kudos to you...\\

மனம்திறந்த பாராட்டிற்கு ரொம்ப நன்றி திவ்யப்ரியா:)))

said...

\\ M.Saravana Kumar said...
//தேடி வந்து
என் இதய
வாசலை தட்டிய
உன்மேலான
என் நேசத்தை//

//உன்பெயரோடு சேர்த்து
அதனையும்
என் இதய சிறையில்
சிறை வைக்க!!//

அட..அழகான கவிதை திவ்யா..

காதலுக்கான விளக்கமும் நன்றாகவே இருந்தது..
\\

நன்றி கவிஞர் சரவணகுமார்:)

said...

\\ வழிப்போக்கன் said...
அது கவிதையா ?

இல்ல ஆறிவுரையா ?

அருமையாக உள்ளது..

:))\\

நன்றி வழிபோக்கன்:))

said...

\\ முகுந்தன் said...
பின்னிட்டேள் போங்கோ :-)

வந்துட்டோம்ல ....\\

தாயகம் திரும்பிய 'சென்னை தமிழனே' வருக!!

பாராட்டிற்கு நன்றி!!

said...

\ kavidhai Piriyan said...
Just now am referred (second time)ur blogs to my frineds.Ungal pulamaiku valthukkal.\\

ரொம்ப நன்றி ப்ரவீன் உங்கள் வாழ்த்துக்களுக்கு:))

மீண்டும் வருக!!

said...

\\ ஷாலினி said...
//"காதல் எனப்படுவது ....யாதெனில்!//

'ithu than da kaadhal' nu yaaralayum adichu solla mudiyaatha oru puriyaatha azhagiya kavidhai,purinthum solve panna mudiyaatha oru puzzle :)\\

வாங்க ஷாலினி,

'காதல்'.....ஒரு புரியாத புதிராக உங்களுக்கு தோன்றுகிறதா?

கருத்திற்கு நன்றி!

said...

ஷாலினி said...
//காதல் குறித்து யோசித்தால், மனதில் எழும் கேள்விகள்....//

vidai alithaalum vilangidaathu.. :P

//தேடி வந்து
என் இதய
வாசலை தட்டிய
உன்மேலான
என் நேசத்தை
அன்பு, பாசம்.....என்ற
வரையறைக்குள் அடைக்கவா?//

apdiye adaichaalum jannal vazhiya es ayiruvaanga.. :P

//நட்பு,காதல்....என்ற
எல்லைக்குள் நிறுத்தவா??//

ellai la niruthina vere yaarayum ulla vara vidaama vuyira edupaanga ;)

//அதற்கும் மேலாய்
பலபடி உயர்வாய்
ஒரு பெயர் இருந்தால்
சொல்லேன்........
உன்பெயரோடு சேர்த்து
அதனையும்
என் இதய சிறையில்
சிறை வைக்க!!//

idhaya kadhaivai thedi vanthu thatrvanuku thaney peru venum...mmm...ducalty nu vai..apt ta irukum :P

//காமத்தை தாண்டி, பிரதிபலனை தாண்டி குடிகொண்டிருக்கும் அன்பு!!!//

egjactly Divvy.. :)

super post!!! kalakita po :)\\

உங்கள் விரிவான பின்னூட்டங்களுக்கும், பாராட்டிற்கும்......வருகைக்கும் நன்றி ஷாலினி:)))

said...

\\ naanal said...
//காமத்தை தாண்டி, பிரதிபலனை தாண்டி குடிகொண்டிருக்கும் அன்பு!!!//

நல்ல definition திவ்யா... :))\\

நன்றி naanal!!

\\உண்மைக் காதல் என்பது ஒருவரை ஒருவர் பார்த்தவுடன் உண்டாகுமா?
அல்லது
கொஞ்ச நாளாவது பழகியவுடன் உண்டாகுமா??

சபாஷ் சரியான கேள்வி .. ;)\\

அப்படியா?

said...

\ naanal said...
//பார்வை பரிமாறுதலில், சந்திப்பில்.........பதற்றமான மனநிலையே அதிகம் இருக்கும்.//

ஆஹா இதுக்கு பேரு தான் 'இனக்கவர்ச்சி' என்கிற infactuation அ?
\\

:))

said...

\\ naanal said...
//காதல், காமம், ஆசை விட..........ஆழமான நட்புணர்வே முதன்மையானதாக மேலோங்கி நிற்கும்//

காதலுக்கு இடையேயும் நட்பு இருக்குமா திவ்யா? வித்தியாசமா இருக்கு .. \\

நட்பில் காதல் வர வேண்டிய அவசியம் இல்லை....ஆனால்,
காதலில் நிச்சயம் 'நட்பு' இருக்க வேண்டும்:))

காதலர்களுக்கு இடையில் நட்புணர்வு இருப்பது நல்லதொரு புரிதலை கொடுக்கும், அன்பையும் ஆழமாக்கும்.

//அதீத மேக்கப், வெளித்தோற்றத்திற்கான முக்கியத்துவம், நல்லெண்ணத்தை ஏற்படுத்தும் முகமூடி என எதுவும் இன்றி.......தான் தானாகவே இருப்பதையே மனம் விரும்பும்.//

ரொம்ப யதார்த்தாம சொல்லி இருக்கீங்க...

ஆனால் நம்ம தமிழ் படத்துல இந்த formula வை மாத்தி சொல்லி நம்மள ஏமாத்தறாங்களோ .. ?\\

சினிமா ஃபார்முலா வேற....நிஜ வாழ்ககை வேற, சரிதானே naanal?

said...

\\ naanal said...
//என் நேசத்தை
அன்பு, பாசம்.....என்ற
வரையறைக்குள் அடைக்கவா?

நட்பு,காதல்....என்ற
எல்லைக்குள் நிறுத்தவா??

ஒரு பெயர் இருந்தால்
சொல்லேன்........
உன்பெயரோடு சேர்த்து
அதனையும்
என் இதய சிறையில்
சிறை வைக்க!!//

கவிதை அருமை திவ்யா..\

பின்னூட்டங்களுக்கு மிக்க நன்றி naanal:))

said...

\\ ராஜா முஹம்மது said...
http://divyaastimepass.blogspot.com/

என்னால் இந்த வலைதளத்திற்குள் போக முடியவில்லை. எனக்கும் அனுமதி கொடுங்கள்\\

Its my private blog Raja, sorry:(

said...

\\ விஜய் said...
இதெல்லாம் ஒண்ணுமே இல்லை. ஒருவரைப் பார்க்கையிலே Oestrogren, Eestrogen, Lactogen என்ற பற்பல ஹார்மோன்கள் நிறைய சுரந்ததுன்னா அது தான் காதல்ன்னு சுஜாதா ஒரு பிளாக் எழுதியிருந்தால் சொல்லியிருப்பார் :-)

காதல் என்பது தனி உடமை
கஷ்டம் மட்டும் தானே பொது உடமை :)\\

வாங்க விஜய்,

வருகைக்கும், கருத்துக்களுக்கும் ரொம்ப நன்றி!!

said...

\\ புகழன் said...
மிக அருமையான விளக்கங்கள்.
காதல் பற்றி பல அறிஞர்கள் கருத்துக்களைப் படித்திருக்கின்றேன்.
எனினும் வித்தியாசமாக புதிய முறையில் விளக்கியிருக்கின்றீர்கள்.

அறிவுரைகளும் சூப்பர்.

செல்லவே தேவையில்லை
கவிதை ரெம்ப சூப்பர்.
//
ம்ம்ம்....
இல்லை
இல்லவே இல்லை...
அதற்கும் மேலாய்
பலபடி உயர்வாய்
ஒரு பெயர் இருந்தால்
சொல்லேன்........
உன்பெயரோடு சேர்த்து
அதனையும்
என் இதய சிறையில்
சிறை வைக்க!!
//

ரெம்பவே ஈர்த்த வரிகள்.

இவ்வளவு அழகாக கவிதை எழுதுகின்றீர்களே

நீங்களும் காதலிக்கின்றீர்களோ?

எனக்குத் தெரிந்து
காதலின்றி
இவ்வளவு உயர்வான
கவிகள் வருவது
கடினமே!\\

வாங்க புகழன்,

உங்கள் மனம்திறந்த பாராட்டிற்கும், விரிவான உற்சாகமளிக்கும் பின்னூட்டத்திற்கும் ரொம்ப நன்றி!!

said...

\\ Karthik said...
//தான் தானாகவே இருப்பதையே மனம் விரும்பும்

100pc உண்மை. ரொம்ப நல்ல பதிவு.\\

வாங்க கார்த்திக்,

வருகைக்கும் பாராட்டிற்கும் மிக்க நன்றி!!

மீண்டும் வருக......

said...

\\ SanJai said...
//காமத்தை தாண்டி, பிரதிபலனை தாண்டி குடிகொண்டிருக்கும் அன்பு!!!//

அட்றா.. அட்றா.. கலக்கல்..
அந்த கவுஜயும் நல்லா இருக்கு ஊர்ஸ்.. :)\\

ரொம்ப நாட்களுக்கு பின்பு என் பதிவுகள் பக்கம் வந்திருக்கிறீங்க சஞ்சய், நன்றி, நன்றி!!

மீண்டும் வருக:)

said...

நேனு பானே உன்னானு, உங்க‌ள் க‌விதை போல‌வே. :)

ரொம்ப‌ ய‌தார்த்த‌மான‌ விள‌க்க‌ம். நிறைய‌ பேரால் உண‌ர‌ முடியாத‌ ஒன்றை எழுத்துக்க‌ளில் கொடுத்த‌த‌ற்கு ந‌ன்றி. :)

said...

\\ Murugs said...
நேனு பானே உன்னானு, உங்க‌ள் க‌விதை போல‌வே. :)

ரொம்ப‌ ய‌தார்த்த‌மான‌ விள‌க்க‌ம். நிறைய‌ பேரால் உண‌ர‌ முடியாத‌ ஒன்றை எழுத்துக்க‌ளில் கொடுத்த‌த‌ற்கு ந‌ன்றி. :)\\

hai murugs garu bagunara :))
Neevu postku enduku aalasyamga vachaaru?

வருகைக்கும்,கருத்திற்கும் மிக்க நன்றி!!

மீண்டும் வருக!!

said...

//hai murugs garu bagunara :))
Neevu postku enduku aalasyamga vachaaru?//

நேனு ஊருக்கு வெல்லேனு. அந்துக்கே லேட்கா ஒச்சானு. :)

தெலுங்கில் கூட‌ க‌ல‌க்க‌றீங்க‌ :)

said...

//காதலை பற்றிய என் கண்ணோட்டத்தை ஒரே வரியில் கூறவேண்டுமானால்,
காதல் எனப்படுவது.........

காமத்தை தாண்டி, பிரதிபலனை தாண்டி குடிகொண்டிருக்கும் அன்பு!!!//

காதல் என்பது காமத்தின் துல்லியமான கட்டம். காதலிப்பது என்பது பிற்காலத்தில் வைத்து வேடிக்கைப் பார்க்க அல்ல, எனவே இது பிரதிபலன் பாராதது என்பது உணமையல்ல,

ஒளவையார் எழிதிய நல்வழி இங்கு கீழே அளித்துள்ளேன்.

கல்லானே ஆனாலும் கைப்பொருள் ஒன் றுண்டாயின்
எல்லாரும் சென்றங் கெதிர்கொள்வர் - இல்லானை
இல்லாளும் வேண்டாள்(;) மற் றீன்றெடுத்த தாய்வேண்டாள்
செல்லா(து) அவன்வாயிற் சொல். 34

(பொருள்: கல்வி அறிவு இல்லையென்றாலும் கையில் காசு இருந்தால் எல்லோரும் எதிர்கொண்டு அழைப்பர், இல்லாதவனை மனைவியும் வேண்டாம் என்பாள், மற்றும் ஈன்றெடுத்த தாயும் வேண்டாம் என்பாள், அவன் சொல்லும் வார்த்தைகள் ஏற்கப்படாது)

http://www.tamilnation.org/literature/auvaiyar/nalvazhi.htm

காசு இருந்தால் தான் காதல்கூட இனிக்கும்,

காதல் பற்றிய பார்வை வயதுக்கு ஏற்றவாறு மாறுகிறது.

உங்கள் வயதில் உங்களுக்கு தோன்றியதை எழுதி இருக்கிறீர்கள்.

மகிழ்ச்சி............

நாயாய் பேயாய் இருந்தாலும் அவளுக்கு நானழகு ...........

அழகியல் பற்றிய பார்வை கூட ஒவ்வொருவருக்கும் மாறுபடுகிறது. வாழ்நிலை, வயது, சூழல் ஆகியவையெல்லாம் மனிதனின் கருத்துக்களின் மீது அமர்ந்து ஆதிக்கம் செலுத்துகிறது.

said...

\\ Murugs said...
//hai murugs garu bagunara :))
Neevu postku enduku aalasyamga vachaaru?//

நேனு ஊருக்கு வெல்லேனு. அந்துக்கே லேட்கா ஒச்சானு. :)

தெலுங்கில் கூட‌ க‌ல‌க்க‌றீங்க‌ :)\\

golti gaaru va ஆகிட்டீங்கன்னு உங்க தெலுகு செப்புது murugs:))
telugu teacher மைதனாத்துல நல்லா தெலுகு கத்து தர்றார் போலிருக்கு;Good!!!

said...

\\ இரா.சுகுமாரன் said...
//காதலை பற்றிய என் கண்ணோட்டத்தை ஒரே வரியில் கூறவேண்டுமானால்,
காதல் எனப்படுவது.........

காமத்தை தாண்டி, பிரதிபலனை தாண்டி குடிகொண்டிருக்கும் அன்பு!!!//

காதல் என்பது காமத்தின் துல்லியமான கட்டம். காதலிப்பது என்பது பிற்காலத்தில் வைத்து வேடிக்கைப் பார்க்க அல்ல, எனவே இது பிரதிபலன் பாராதது என்பது உணமையல்ல,

ஒளவையார் எழிதிய நல்வழி இங்கு கீழே அளித்துள்ளேன்.

கல்லானே ஆனாலும் கைப்பொருள் ஒன் றுண்டாயின்
எல்லாரும் சென்றங் கெதிர்கொள்வர் - இல்லானை
இல்லாளும் வேண்டாள்(;) மற் றீன்றெடுத்த தாய்வேண்டாள்
செல்லா(து) அவன்வாயிற் சொல். 34

(பொருள்: கல்வி அறிவு இல்லையென்றாலும் கையில் காசு இருந்தால் எல்லோரும் எதிர்கொண்டு அழைப்பர், இல்லாதவனை மனைவியும் வேண்டாம் என்பாள், மற்றும் ஈன்றெடுத்த தாயும் வேண்டாம் என்பாள், அவன் சொல்லும் வார்த்தைகள் ஏற்கப்படாது)

http://www.tamilnation.org/literature/auvaiyar/nalvazhi.htm

காசு இருந்தால் தான் காதல்கூட இனிக்கும்,

காதல் பற்றிய பார்வை வயதுக்கு ஏற்றவாறு மாறுகிறது.

உங்கள் வயதில் உங்களுக்கு தோன்றியதை எழுதி இருக்கிறீர்கள்.

மகிழ்ச்சி............

நாயாய் பேயாய் இருந்தாலும் அவளுக்கு நானழகு ...........

அழகியல் பற்றிய பார்வை கூட ஒவ்வொருவருக்கும் மாறுபடுகிறது. வாழ்நிலை, வயது, சூழல் ஆகியவையெல்லாம் மனிதனின் கருத்துக்களின் மீது அமர்ந்து ஆதிக்கம் செலுத்துகிறது.\\

வாங்க சுகுமாரன்,

உங்கள் முதல் வருகைக்கும்,
விரிவான கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த நன்றி!

மீண்டும் வருக!!

said...

நான் வேறமாதிரி எதிர்பாத்தேன் மேடம்...:)

said...

\
காதல் கொள்ளும் போது காதலர்கள் நிலமை, மனப்பான்மை, பக்குவம், லட்சியம் ஆகியவைகள் ஒரு மாதிரியாக இருக்கலாம். பிறகு கொஞ்ச காலம் கழிந்த பின் இயற்கையாகவே பக்குவம், நிலைமை, லட்சியம் மாறலாம். இந்த மாதிரிச் சந்தர்ப்பங்களில் காதலுக்காக ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்துக் கொண்டு, அனுசரித்துப் போவது காதல் வெற்றி பெற மிக மிக அசசியம்!
\

ஆமா ஆமா...:)

Anonymous said...

Oru vazhiya latea pottalum padhivu azhaga irundhadhunga :)

said...

kalakkal post:)

said...

\\ தமிழன்... said...
நான் வேறமாதிரி எதிர்பாத்தேன் மேடம்...:)\\

அப்படியா....வேற மாதிரினா எந்த மாதிரி??

இந்த தலைப்பு பற்றி எனக்கு தெரிந்த மாதிரி தான் பதிவிட்டேன் தமிழன்:))

நீங்க என்ன எதிர்பார்த்தீங்கன்னு புரியல, சொன்னா தெரிஞ்சுப்பேன்.

said...

\\ தமிழன்... said...
\
காதல் கொள்ளும் போது காதலர்கள் நிலமை, மனப்பான்மை, பக்குவம், லட்சியம் ஆகியவைகள் ஒரு மாதிரியாக இருக்கலாம். பிறகு கொஞ்ச காலம் கழிந்த பின் இயற்கையாகவே பக்குவம், நிலைமை, லட்சியம் மாறலாம். இந்த மாதிரிச் சந்தர்ப்பங்களில் காதலுக்காக ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்துக் கொண்டு, அனுசரித்துப் போவது காதல் வெற்றி பெற மிக மிக அசசியம்!
\

ஆமா ஆமா...:)\\

உங்கள் ஆமோதிப்பிற்கு நன்றி தமிழன்!!

said...

\\ ஸ்ரீ said...
Oru vazhiya latea pottalum padhivu azhaga irundhadhunga :)\\

ரொம்ப நன்றிங்க ஸ்ரீ!!

said...

\\ Shwetha Robert said...
kalakkal post:)\\

நன்றி ஷ்வேதா!!

Anonymous said...

Hi,

Well said Divya!

I was waiting for a long time to comment in this post, today only got some free time.

Execuse me!

said...

\ ஜொள்ளுப்பாண்டி said...
Hi,

Well said Divya!

I was waiting for a long time to comment in this post, today only got some free time.

Execuse me!\\

Thanks for taking time to comment in my old post:)))

said...

http://ithyadhi.blogspot.com/2008/01/blog-post_7685.html
என்ன சொல்றிங்க?!!

said...

காதலின் வரையறை யாரும் கண்டதில்லை !
புவியீர்ப்பு விதியறிந்தா விழுகின்றன ஆப்பிள்கள் இங்கே?