பகுதி-1
பகுதி-2
பகுதி-3
அலுவலக விஷயமாக ஹைதிராபாத் சென்ற கார்த்திக், நான்கு நாட்கள் தன் குழுவிலுள்ள நண்பர்களுடன் முக்கியமான ப்ராஜக்ட் வேலையில் மூழ்கியிருந்தான், கடின உழைப்பிற்கு பிரதிபலனாக இவர்களது வேலையும் வெற்றிகரமாக முடிந்தது.
அதனை கொண்டாட இவனது குழுவினர் தீர்மானித்தனர். கார்த்திக்கும் அவர்களுடன் இரவு பார்ட்டிக்குச் சென்றான். வெற்றி களிப்பு, நண்பர்களின் தூண்டுதல், தன் அடிமனதிலுள்ள தனிமையின் தவிப்பு எல்லாமுமாக சேர்ந்து சற்று அளவுக்கு அதிகமாகவே மது அருந்தினான் கார்த்திக்.
Occasional alcohol taker ஆன கார்த்திக்கிற்கு இந்த திடீர் போதை தன் தனிமை உணர்விற்கு ஒரு வடிகாலாக தோன்றியது.
அருந்திய மது அவன் மதியை மந்தமாக்க, நண்பர்களின் உந்துதலினால் 'மாது'வையும் தேட வைத்தது.
மறுநாள் தன் ஹோட்டல் அறையில் சுயபுத்திக்கு வந்த கார்த்திக், நந்தினிக்கு தான் செய்த துரோகத்தை உணர்ந்து , குற்ற உணர்வில் குறுகிப்போனான்.
நந்தினியிடம் உண்மையை கூறவா, வேணடாமா என்று மனதில் தடுமாற்றம்,
'நேருக்கு நேர்' படத்தில் ரகுவரனுக்கு வந்த நிலைமையை நினைத்துக்கொண்டான்.
சென்னைக்கு திரும்பிய பின்பும், செய்த தவறு கார்த்தின் மனதை அழுத்திக்கொண்டே இருந்தது,
நந்தினியிடம் பக்குவமாக , சந்தர்ப்பம் பார்த்து மனம்விட்டு சொல்லிவிட வேண்டும் என முடிவு பண்ணினான் கார்த்திக்.
மூன்று வாரங்களில் நந்தினியும் சென்னைக்குத் திரும்பி வந்தாள்.
குறு குறுக்கும் மனதுடன் நந்தினியிடம் முன்பு போல் பழக முடியாமல் தடுமாறிக்கொண்டிருந்தான் கார்த்திக்.
தன் தந்தையின் திடீர் மாரடைப்பு, தாய்மை அடைய தடையாக தன் உடல்நிலை என கவலைகள் சூழ்ந்துக்கொள்ள நந்தினியும் சோர்வாகவே காணப்பட்டாள். எதிலும் அதிக ஈடுபாடு இல்லாமல் மனதில் வெறுமை, இறுக்கமான முகத்தோடு வலம்வந்தாள்.
கணவன் மனைவிக்குள் முன்பிருந்த ஒட்டுதல் இல்லை என புரிந்துக் கொண்ட கார்த்திக்கின் அம்மா, அவர்கள் இருவரையும் ஒரு வாரம் ஊட்டிக்கு சென்றுவர வற்புறுத்தி அனுப்பி வைத்தார்.
புதிய சூழல், இதமான குளிர்ந்த சீதோஷன நிலை, இருவருக்குமேயான நீடிய தனிமை தருணங்கள் கணவன் மனைவிக்குள் மீண்டும் நேச அனலை புதுப்பித்தது.
கணவனின் அன்பான அரவணைப்பால் நந்தினியின் முகத்தில் புன்னகை பரவ ஆரம்பித்திருந்தாலும், அவளது அடிமனதில்....
அம்மி மிதித்து
அருந்ததி பார்த்து
ஆண்டு இங்கு
இரண்டாச்சு...!!
எப்போ நீ பிறப்பாய்
என்று தான்
இங்கு ஒரே பேச்சு...!!
இதயத்து அறைகளிலே
இளம்பிஞ்சே
உன்முகம் தான்...
என் கந்தகக்
கருப்பையில்
ஃபீனிக்ஸாய் எழுவாயா???
விரதமும் வேண்டுதலும் -
உன் வரவைச் சொல்லலையே...!!
உன் பிஞ்சுவிரல் ஸ்பரிசத்துக்காய்
என்உயிரே தவிக்குதிங்கே...!!
நஞ்சுரைக்கும் உறவினர்களால் -
என்நெஞ்சு மருகி விம்முதிங்கே...!!
நாட்கள்பல போனாலும் -
உன் வரவு
கனவில் தான் நிஜமாச்சு...!!'
'ம்மா'-னு நீ சொல்ல
தவமிருக்கும் இந்த
தரிசுத்தாய் நானாச்சு..!!
பிரம்மன் வரையா ஓவியமே..!!
சிற்பி செதுக்கா சீர் சிலையே..!! -
என்வயிற்றில்
வளராவளர் பிறையே...!!
என்று வந்து
என் வயிற்றில்
உயிர்த்து என்னை
உயிர்ப்பிப்பாய்..???
மாதங்களும் கடந்தன....நந்தினியின் மனதிலிருந்த வேண்டுதல் நிறைவேறியது.
நந்தினி கர்ப்பமாக இருக்கிறாள் என மருத்துவர் உறுதி செய்ததும் குடும்பமே சந்தோஷ களிப்பில் திளைத்தது.
நீண்ட பயணம் கூடாது என மருத்துவர்கள் அறிவுறுத்தியும் கருவுற்றிருக்கும் தன் ஆசை மகளைக் காண நந்தினியின் அப்பா சென்னை வந்தது நந்தினிக்கு இரட்டிப்பு சந்தோஷமாக இருந்தது.
புதிய உறவு உதித்த மகிழ்ச்சியில் கார்த்திக் முழுவதுமாய் தன் ஹைதிரபாத் 'நிகழ்வை' மறந்தே போயிருந்தான்.
கர்ப்பமாக இருக்கும் தன் மருமகளை கண்ணும் கருத்துமாய் கவனித்துக் கொண்டார் கார்த்திக்கின் அம்மா.
இப்படியாக நாட்கள் உருண்டோட , கார்த்திக் மீண்டும் அலுவலக விஷயமாக ஹைதிரபாத் செல்ல நேர்ந்தது.
ஒரு நாள் அலுவல் முடிந்து கார்த்திக்கும் அவனது குழுவினரும் டாக்ஸியில் தங்கள் ஹோட்டல் அறைக்கு திரும்பிக்கொண்டிருக்கையில், வழியில் சாலை விபத்தொன்றில் அடிபட்டு உயிருக்கு போராடும் முதியவரை தங்கள் டாக்ஸியில் அருகிலிருந்த மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.
அம்முதியவரின் மருத்துவ சிகிச்சைக்காக ரத்தம் தேவைப்பட, கார்த்திக்கும் அவனது குழுவிலிருந்த இருவரும் ரத்த தானம் செய்ய முன்வந்தனர்.
இரத்த பரிசோதனை நிலையத்திலிருந்து ரிப்போர்ட் வந்ததும், மருத்துவர் கார்த்திக்கை மட்டும் தனியாக தன் அறைக்கு அழைத்தார்.
பேச தொடங்கவே தயங்கிய மருத்துவரிடம் கார்த்திக்,
"Whats the matter Doctor.......please open up"
"Mr.Karthik.....I am very sorry to say ....that......you are infected with HIV"
அதிர்ச்சியில் கார்த்திக்கின் முகத்தில் ரத்தம் சுண்டிப் போனது,
மார்பு வெகு வேகமாக அடித்துக் கொள்ள,
யோசனைத் திறன் சற்று நேரத்திற்கு விலகிக் கொண்டது,
தன்னை சமாளித்துக் கொள்ள கார்த்திக்கிற்கு சில வினாடிகள் பிடித்தன.
கார்த்திக் அதிர்விலிருந்து தன்னை சுதாரித்துக் கொள்ள தடுமாறிய அதே வேளையில், மருத்துவரின் அறைக்குள் வந்த நர்ஸ் , விபத்தில் அடிபட்டு அனுமதிக்கபட்ட முதியவர் ரத்தம் கொடுப்பதற்கு முன்பே, சிகிச்சை பலனின்றி இறந்துவிட்டதாக தெரிவித்தார்.
நிலையற்ற மனித வாழ்க்கையில் யதார்த்தம்,
சாவை நோக்கி பயணிக்கும் தன் நிலைமை,
என அனைத்தும் ஒரே தருணத்தில் தாக்க
ஸ்தம்பித்து போனான் கார்த்திக்.
ஹோட்டல் அறைக்கு வந்து மறுநாள் அதிகாலை விமானத்தில் சென்னைக்கு திரும்புவதற்காக தன் உடைமைகளை எடுத்து வைத்துக்கொண்டிருந்த போதுதான், தன்னை தாக்கியுள்ள உயிர்கொல்லி தன் மனைவி...........வயிற்றில் உள்ள குழந்தை இருவரையும் தாக்கியிருக்க கூடுமோ என்ற சந்தேகம் எழுந்தது.
ஊருக்குச் சென்றதும் நந்தினியை கைனக்காலஜிஸ்டிடம் அழைத்துச் சென்று, மருத்துவரிடம் ஏதாவது ஒரு காரணம் கூறி, நந்தினிக்கு முழுவதுமாய் ரத்த பரிசோதனை செய்துவிட வேண்டும் என்ற முடிவுடன், உடனே ஃபோனில் அப்பாயின்மெண்டும் வாங்கிவிட்டான்.
நினைவுகளிலிருந்து வெளிவந்த கார்த்திக், தன்னருகில் படுத்திருக்கும் தன் அன்பு மனைவியை மீண்டும் நோக்கினான்.
அவன் கண்களில் நீர் ததும்பி கசிய காத்திருந்தது.
இறப்பு யாருக்கோ என்ற
கேள்வி படுகையில்
செய்தியாக தோன்றுகிறது
அது தன்னையே நெருங்கும் போது
பயமும் வேதனையும்
முட்டி மோதுகின்றது;
கார்த்திக் படுக்கையிலிருந்து எழுந்து, அருகிலிருந்த மேஜையின் மேலிருந்த விளக்கை ஏற்றிவிட்டு, தன் டைரியில் எழுத ஆரம்பித்தான்...
ஓசை இல்லாமல்
ஒரு அழுகுரல்
ரத்தம் இல்லாமல்
ஒரு காயம்
மருந்தில்லா ஒரு நோய்
ஒரு நிமிட உறவால்
முறை தவறிய என்னால்
உறவுகளைதொலைத்து - என்னுள்
தொலைந்துக் கொண்டிருக்கிறேன்...
உன்னையும் தான்...
டைரியை பீரோவில் பத்திரப்படுத்திவிட்டு கார்த்திக் படுக்கச் சென்றான்.
மறுநாள் காலையில் மருத்துவமனைக்குச் செல்ல நந்தினி தயாராகிவிட்டாளா என அறிய தங்கள் அறைக்குச் சென்ற கார்த்திக்............அங்கு...நந்தினி....
[தொடரும்]
பகுதி - 5
பகுதி-6
July 23, 2008
Subscribe to:
Post Comments (Atom)
155 comments:
சான்ஸே இல்லை திவ்யா...
எப்படி இப்படி எல்லாம்...??
ஊடு பயிர் போல கதையினூடே
கவிதைகள்... சுகமான வரப்பு...
கண்ணாரப் படித்தேன் ..... :))))
//பிரம்மன் வரையா ஓவியமே..!!
சிற்பி செதுக்கா சீர் சிலையே..!! -
என்வயிற்றில்
வளராவளர் பிறையே...!!
என்று வந்து
என் வயிற்றில்
உயிர்த்து என்னை
உயிர்ப்பிப்பாய்..??? //
என்ன சொல்ல...?? தாய்மையின்
தவிப்பு மிக அழகான
மண் மணத்துடன் ....
மிக ரசித்தேன்... :)))
3. //ஓசை இல்லாமல்
ஒரு அழுகுரல்
ரத்தம் இல்லாமல்
ஒரு காயம்
மருந்தில்லா ஒரு .... //
திவ்யா எப்படி இப்படி கதைக்குக்
கதை அதனுடன் ஒன்றும்படி
கவிதை ..??!!! கதைக்கு
மேலும் வலுசேர்க்கிறது...
:))
ம்ம்ம்ம்.... ஒரு சாதாரண பழக்கம்
சதா-ரணத்திற்கு வித்தா..??
சொல்லிய விதம் மிக அருமை
திவ்யா.... :))
இப்படி ஒரு எதிர்பாரா திருப்பம்...
எதிர்பாராமல்... எதிர்பார்பை
அதிகமாக்குகிறது திவ்யா....
சீக்கிரம் கதையை
சொல்லிவிடேன்...
;)))
வந்துட்டேன்...
ஆனா பதிவின்னும் படிக்கல...;)
என்னங்க.. கதையோட போக்க இப்படியாக்கிட்டீங்க..
பக்குன்னு இருக்கு...
எதிர்பார்க்கவேயில்லை..
:(
கொஞ்சம் இருங்கப்பா படிச்சுட்டு வந்துடறேன்...:)
கவிதை ரொம்ப நல்லா இருந்துச்சு..
:-))
என்னங்க கதை இப்படி ஆயிடுச்சு...!
இது கொஞ்சம் பெரிய கதையா இருக்குமோன்னு மூணாவது பாகத்திலயே நினைச்சேன்...
///Occasional alcohol taker///
அப்படின்னா...;)
நந்தினி அடிமனதில் வந்த கவிதை நல்லாருக்கு...!
பாக்கலாம் முடிவு என்னான்னு...
ஆனா சோகமா முடிக்கப்படாது...!
சொல்ல வார்த்தைகள் இல்லை!!!!
கவிதைகள் அனைத்தும் அருமை!!!
கதை நன்றாக பயணிக்கிறது புது திருப்பங்களோடு வாழ்த்துகள் திவ்யா!!!
//பிரம்மன் வரையா ஓவியமே..!!
சிற்பி செதுக்கா சீர் சிலையே..!! -
என்வயிற்றில்
வளராவளர் பிறையே...!!
//
மேற்கண்ட கவிதை வரிகள் அழகாக இருந்தது.
இப்படி ஒரு திருப்பத்தை எதிர்பார்க்கவில்லை :(
ஹிம்ம்ம்ம் இப்படி போயிடுச்சே கதை...ஒரு நாள் செய்த தவறு இப்படி ஒரு வம்சத்துக்கே கேடு..Self Control எவ்வளவு முக்கியம் இல்லியா!
எப்பொழுதும் போல் கவிதை வரிகள் அருமை :) அதுவும் இம்முறை நீங்கள் பயன்படுத்திய சொற்கள் உங்கள் வாசிப்பின் அளவை காட்டுகிறது..வாழ்த்துக்கள்
\\இதயத்து அறைகளிலே
இளம்பிஞ்சே
உன்முகம் தான்...
என் கந்தகக்
கருப்பையில்
ஃபீனிக்ஸாய் எழுவாயா???
\\
அருமை :))
உங்க கவிதை நடை படிக்கும்போது ஒரு பாட்டு மெட்டு போட தோணுது..:))
அடுத்த பகுதியை ஆவலுடன் தேடுகிறது மனது. அருமையான நடை. தொடருங்கள் திவ்யா !
திவ்யா,
கதை-ல இப்பிடி ஒரு ட்விஸ்ட் வரும்னு எதிர்பார்கவே இல்ல....
//
விரதமும் வேண்டுதலும் -
உன் வரவைச் சொல்லலையே...!!
உன் பிஞ்சுவிரல் ஸ்பரிசத்துக்காய்
என்உயிரே தவிக்குதிங்கே...!!
//
//
ஓசை இல்லாமல்
ஒரு அழுகுரல்
ரத்தம் இல்லாமல்
ஒரு காயம்
மருந்தில்லா ஒரு நோய்
//
கவிதைகள் அருமை அருமை அருமை..
unga story-narration skills exponentiala increase aagudhu... hats off !! kalakkunga divya :)
waiting very eagerly for the next part...
//
ஒரு சாதாரண பழக்கம்
சதா-ரணத்திற்கு வித்தா..??
//
சான்ஸே இல்லை Navin...
எப்படி இப்படி எல்லாம்...??
என்ன திவ்யா சந்தோசமா போய்ட்டிருந்த கதைக்கு இப்படி ஒரு ட்விஸ்ட் போட்டுட்டீங்க?? :((
//அம்மி மிதித்து
அருந்ததி பார்த்து
ஆண்டு இங்கு
இரண்டாச்சு...!!
எப்போ நீ பிறப்பாய்
என்று தான்
இங்கு ஒரே பேச்சு...!!
//
ஆச்சு ..பேச்சு
ரைமிங் நல்லாயிருக்கு :))
//நாட்கள்பல போனாலும் -
உன் வரவு
கனவில் தான் நிஜமாச்சு...!!'
'ம்மா'-னு நீ சொல்ல
தவமிருக்கும் இந்த
தரிசுத்தாய் நானாச்சு..!!
//
தரிசுத்தாய் - நல்ல உவமை..
//நாட்கள்பல போனாலும் -
உன் வரவு
கனவில் தான் நிஜமாச்சு...!!'
'ம்மா'-னு நீ சொல்ல
தவமிருக்கும் இந்த
தரிசுத்தாய் நானாச்சு..!!
//
தரிசுத்தாய் - நல்ல உவமை..
//மறுநாள் காலையில் மருத்துவமனைக்குச் செல்ல நந்தினி தயாராகிவிட்டாளா என அறிய தங்கள் அறைக்குச் சென்ற கார்த்திக்............அங்கு...நந்தினி....
//
ஏதாச்சும் ரொம்ப சோகமா முடிச்சுராதீங்க ப்ளீஸ்..இப்பவே கொஞ்சம் கஷ்டமா இருக்கு.
:))) நல்லா எழுதிருக்கீங்க திவ்யா...
:((( எயிட்ஸா??? ரொம்ப பாவம் :((((
கதை வித்தியாசமாக இருக்கு...
எதிர்பாராத திருப்பம்...
excellent divya .. Unexpected twist ... but again suspense
"
ஓசை இல்லாமல்
ஒரு அழுகுரல்
ரத்தம் இல்லாமல்
ஒரு காயம்
மருந்தில்லா ஒரு நோய்
"
Excellent words .. Hats off ..
அப்ப்ப்ப்பா, எப்டிங்க உங்களால மட்டும் தாங்க இப்படி எல்லாம் எழுத முடியும்...
ஆனா, உங்க கதைய படிக்கவே எனக்கு ரொம்ப ப்ப்ப்பபபய்ய்ய்யம்ம்ம்மாமாமாமாஆஆஆ இருக்கு!!!!
ச்ச்ச, அப்டியே சிலிர்த்துப் போயிடுச்சுங்க.... எனக்கு மத்தாப்பூ ன்னாவே பயம்... இதுல, இந்த மாதிரி எல்லாம் எழுதுனா, நாங்கள்ல்லாம் பாவம் சின்னப்பய புள்ளங்க...
-முகிலரசி தமிழரசன்.
திவ்யா,
உங்க கதை விகடனில் ஏற்கனவே வந்த "கண்மணி சுகமா" தொடர் கதையின் தழுவல் ரொம்பவே இருக்கு. முதல் பாகத்திலேயே, கர்பமாக இருக்கும் காதல் மனைவியிடம் 'ஹைதராபாத்' போயிட்டு வந்து கார்திக் ஒழுங்கா பேசாத போதே பொறி தட்டித்து :)
விகடனில் எழுதியது நீங்க தானா?
கவிதை வரிகளெல்லாம் சூப்பரோ சூப்பர்.
//என்னங்க.. கதையோட போக்க இப்படியாக்கிட்டீங்க..
பக்குன்னு இருக்கு...
எதிர்பார்க்கவேயில்லை..//
ripeettu....
வார்த்தை வளம் பெருகிருக்கு... இன்னும் கலக்குங்க...
kadhaila ippidi oru thirupatha edhirpakkave illa divya...
oru dhadava thappu pannalum adhoda vilaivugal epdi ellam irukumnu romba nachunu sollirkeenga...
aana dhayavu senju kadhaya sogamaa mudichudadheenga :)
unga kavidhai onnunnum romba aazhamaana karutha solradha irukku...adhuvum romba azhagaana poruthamaana vaarthaigalaala ezhudhareenga...romba romba arumai...
adutha pagudhi adutha vaaram dhaana...adhulayum oru thirupam koduthu indha vaarame pottuta nalla irukkum :)
//'நேருக்கு நேர்' படத்தில் ரகுவரனுக்கு வந்த நிலைமையை நினைத்துக்கொண்டான்.//
நல்ல யாதார்த்தம்!!!
//இதயத்து அறைகளிலே
இளம்பிஞ்சே
உன்முகம் தான்...
என் கந்தகக்
கருப்பையில்
ஃபீனிக்ஸாய் எழுவாயா???//
சொல்வதற்க்கு ஏதும் வார்த்தளே இல்லை!!! இதை விட அழகான, மனதை அழுத்துகிற வார்த்தைகளை இது வரை படித்ததில்லை…
கதை இப்படி போகும்ன்னு சத்தியமா எதிர்பாக்கல…ஒரு steep turn எடுத்து தட தடவென பயனிக்குது கதை…வாழ்த்துக்கள் திவ்யா…
avvvvvvvvv...enanga ipdi oru mega serial twist adichiteenga..kathai ground floorlenthu directa 5th floor poidichi...adutha parta seekrama poadunga
//உயிர்த்து என்னை
உயிர்ப்பிப்பாய்..???//
//நஞ்சுரைக்கும் உறவினர்களால் -
என்நெஞ்சு மருகி விம்முதிங்கே...!!//
//ரத்தம் இல்லாமல்
ஒரு காயம்
மருந்தில்லா ஒரு நோய்
//
vaira varigal...kathaiku kathai oru kavithaiya poatu..iayal isai nadagamnu muthamizhlayum poonthaadreenga..divs..nerla paatha kandipa unga autograph venum :)
அட கவிதையிலேயே பாதி கதையைச் சொல்லி விடுறீங்க...:) ம்ம் அடுத்த பாகம் எப்போது? மனம் ஏங்கத் தொடங்கி விட்டது!
அழகான மூன்றாம் பாகம். குறிப்பாக கவிதை வரிகள். குழந்தையின் அழுகுரலுக்காக தவமிருக்கும் எந்த பெண் படித்தாலும் கண்களில் நிச்சயம் நீர் வரும்.
"'ம்மா'-னு நீ சொல்ல
தவமிருக்கும் இந்த
தரிசுத்தாய் நானாச்சு.."
தரிசுத்தாய் என்ன ஒரு அழகான உவமை
பாராட்டுக்கள் திவ்யா
கதையின் நாயகன் தவறான முறையில் உறவு கொண்டான் என்ற போதே கொஞ்சம் சந்தேகம் வந்துச்சு... அடுத்து எப்படி இருக்கும்ன் ஆவல இருக்கு...
கவிதையை தனியாக படிப்பதை விட இப்படி கதையுடன் சேர்த்து படிக்கும் பொழுது மிக அருமையாக இருக்கு... அருமை... கதையால் கவிதைக்கு அழகா இல்லை கவிதையால் கதைக்கு அழகா புரியவில்லை... ஆனால் புரிய அவசியமில்லை மனம் ரசிக்கும் பொழுது... :)...
வாழ்த்துகள் திவ்யா... நல்ல படைப்பு...
நல்லாருக்கு கதை and கவிதை :)
Romba natkaluku pirugu vandhu ungal blog i padithathu santhosam ..aduvum ..seeme intresting story..waiting for next part.Great Divya !!
Pravin
கவிதைகள் அனைத்தும் ரொம்ம்பப அருமையா வந்துருக்கு!
கதை பயங்கர twistல போய்கிட்டு இருக்கு...பெரும் ஆவலை தூண்டியுள்ளது.
late பண்ணாதே babes! அடுத்த பகுதிய சீக்கிரம் போடுங்க..
//இதயத்து அறைகளிலே
இளம்பிஞ்சே
உன்முகம் தான்...
என் கந்தகக்
கருப்பையில்
ஃபீனிக்ஸாய் எழுவாயா???
'ம்மா'-னு நீ சொல்ல
தவமிருக்கும் இந்த
தரிசுத்தாய் நானாச்சு..!!
//
குழந்தை இல்லாத வேதனையை,
வலியை
இதை விட சிறப்பாக சொல்ல முடியுமா என்று தெரியவில்லை.
அற்புதம்....
நான்காம் பகுதி ரெம்ப சூப்பர்
அதைவிட கவிதைகள் சூப்பர்
//அம்முதியவரின் மருத்துவ சிகிச்சைக்காக ரத்தம் தேவைப்பட, கார்த்திக்கும் அவனது குழுவிலிருந்த இருவரும் ரத்த தானம் செய்ய முன்வந்தனர்.
//
இந்த வரிகளைப் படித்ததுமே கார்த்திக்குக்கு HIV என்று சொல்லப்போகின்றீர்கள் என்பது தெரிந்து விட்டது.
//மறுநாள் காலையில் மருத்துவமனைக்குச் செல்ல நந்தினி தயாராகிவிட்டாளா என அறிய தங்கள் அறைக்குச் சென்ற கார்த்திக்............அங்கு...நந்தினி....
//
கார்த்திக்கின் டைரியை எடுத்துப் படித்துக் கொண்டிருந்தாள் என்று எழுதப் போகின்றீர்கள் என்று நாங்கள் நினைத்துக் கொண்டிருக்கின்றோம்.
ஆனால் நீங்கள் எழுதப்போவது கண்டிப்பாக வேறு ஒன்றாகத்தான் இருக்கும்.
நந்தினி மயங்கி விழுந்தாள் என்று ஏதாவது எழுதலாம்.
அல்லது வேறு ஏதாவதாவது எழுதுவீர்கள்.
யூகிக்க முடிந்த சஸ்பென்ஸ் போலிருந்தாலும் கொஞ்சம் யூகிக்க முடியவில்லை அடுத்து என்ன நடக்கும் என்பதை
விரைவில் அடுத்த பகுதியை எதிர்பார்த்து
புகழன்.
Woww...என்ன சூப்பெரா எழுதி இருக்கீங்க. எனக்கு எல்லாவற்றிலும் பிடித்தது நீங்கள் கதையை கவிதையோடு கலந்து தரும் சுவை தான். விறுவிறுப்பாக கொண்டு செல்கிறீர்கள் கதையை. Waiting for the next part...
//நஞ்சுரைக்கும் உறவினர்களால் -
என்நெஞ்சு மருகி விம்முதிங்கே...!!
Really touching lines!
""ஓசை இல்லாமல்
ஒரு அழுகுரல்
ரத்தம் இல்லாமல்
ஒரு காயம்
மருந்தில்லா ஒரு நோய்""
நல்ல கவிதை! Keep up :))
இதே கதைய ரொம்ப நாள் முன்னாடி ஆனந்த விகடன்ல தொடர் கதையா படிச்சதா ஞாபகம். அந்த கதையில வந்த முதல் ட்விஸ்ட் இங்கயும் வந்துடுச்சி. கடைசீ ட்விஸ்ட்-உம் வந்தா நான் நெனைச்சது சரியாகிடும். :0)
மற்றபடி உங்கள் நடை எளிமையாகவும், படிப்பதற்கு நன்றாகவும் உள்ளது. பாராட்டுகள்.
--முத்து
\\
நவீன் ப்ரகாஷ் said...
சான்ஸே இல்லை திவ்யா...
எப்படி இப்படி எல்லாம்...??
ஊடு பயிர் போல கதையினூடே
கவிதைகள்... சுகமான வரப்பு...
கண்ணாரப் படித்தேன் ..... :))))\\
வாங்க நவீன் ப்ரகாஷ்,
கண்ணாரப் படித்து ரசித்த உங்கள் ரசிப்பிற்கும் பாராட்டிற்கும் நன்றி!!
\\ நவீன் ப்ரகாஷ் said...
//பிரம்மன் வரையா ஓவியமே..!!
சிற்பி செதுக்கா சீர் சிலையே..!! -
என்வயிற்றில்
வளராவளர் பிறையே...!!
என்று வந்து
என் வயிற்றில்
உயிர்த்து என்னை
உயிர்ப்பிப்பாய்..??? //
என்ன சொல்ல...?? தாய்மையின்
தவிப்பு மிக அழகான
மண் மணத்துடன் ....
மிக ரசித்தேன்... :)))\\
கவிஞரின் ரசிப்பினை பகிர்ந்துக்கொண்டதிற்கு நன்றி!!
\\ நவீன் ப்ரகாஷ் said...
3. //ஓசை இல்லாமல்
ஒரு அழுகுரல்
ரத்தம் இல்லாமல்
ஒரு காயம்
மருந்தில்லா ஒரு .... //
திவ்யா எப்படி இப்படி கதைக்குக்
கதை அதனுடன் ஒன்றும்படி
கவிதை ..??!!! கதைக்கு
மேலும் வலுசேர்க்கிறது...
:))\\
கதைக்கு வலுசேர்கிறதா கவிதை?
கவிஞர் சொன்னா சரியாகத்தான் இருக்கும்!!
\\ நவீன் ப்ரகாஷ் said...
ம்ம்ம்ம்.... ஒரு சாதாரண பழக்கம்
சதா-ரணத்திற்கு வித்தா..??
சொல்லிய விதம் மிக அருமை
திவ்யா.... :))\\
கதையில் சொல்ல வந்த கருத்தை.....துல்லியமாக உங்கள் எழுத்துக்கள் பின்னூட்டத்தில் வலியுறுத்தியிருப்பது நன்று:))
\\ நவீன் ப்ரகாஷ் said...
இப்படி ஒரு எதிர்பாரா திருப்பம்...
எதிர்பாராமல்... எதிர்பார்பை
அதிகமாக்குகிறது திவ்யா....
சீக்கிரம் கதையை
சொல்லிவிடேன்...
;)))
\\
பொறுமை கவிஞரே...அடுத்த பகுதி வெளிவரும்வரை காத்திருங்கள்!!
\\ தமிழன்... said...
வந்துட்டேன்...\
வாங்க வாங்க!!
இருகரம் கூப்பி வரவேற்கிறேன்!!
\\ தமிழன்... said...
ஆனா பதிவின்னும் படிக்கல...;)\\
:))
\\ M.Saravana Kumar said...
என்னங்க.. கதையோட போக்க இப்படியாக்கிட்டீங்க..
பக்குன்னு இருக்கு...
எதிர்பார்க்கவேயில்லை..
:(\\
வாங்க சரவணகுமார்,
உங்கள் கருத்தினை பின்னூட்டத்தில் பகிர்ந்துக்கொண்டதிற்கு நன்றி!!
\\ தமிழன்... said...
கொஞ்சம் இருங்கப்பா படிச்சுட்டு வந்துடறேன்...:)\\
பொறுமையா....நிதானமா....படிச்சுட்டு வாங்க தமிழன்!!
\\ M.Saravana Kumar said...
கவிதை ரொம்ப நல்லா இருந்துச்சு..\\
கவிஞரின் பாராட்டிற்கு நன்றி!!
\\ வெட்டிப்பயல் said...
:-))\\
:-))
நன்றி அண்ணா!!
அது ஏன் எல்லாரும் அமீர், பாலா மாதிரியே கதையை கொண்டு போறீங்க?
வாழ்க்கையில தான் இப்படி நடக்குதுனு கதை படிக்க வந்தா இங்கயும் இந்த கொடுமையா?
அக்கா! கொஞ்சம் சுகமா கதையை முடிங்க. :)
\\ஜி said...
வார்த்தை வளம் பெருகிருக்கு... இன்னும் கலக்குங்க...
10:16 PM
\\
ரீப்பிட்டே ;)
//பேச தொடங்கவே தயங்கிய மருத்துவரிடம் கார்த்திக்,
"Whats the matter Doctor.......please open up"
"Mr.Karthik.....I am very sorry to say ....that......you are infected with HIV"//
மாஸ்டர் இந்த சோக அத்யாயாம் அவசியம்தானா?
கதையமைப்பு கற்பனை வழக்கம் போல அருமை. நம்ம இமாஜினேஷன் கெப்பாசிட்டி உங்களுக்கு.
அப்புறம். இந்த முறை இரண்டு வார எப்பிசோட் ஒன்னா சேந்து உரைநடையாகவே வேகமா போயிருச்சே. இப்படிப்பட்ட ஷாக் திருப்பு முனையை உங்க பாணியிலேயே வசனங்களோடு கதாநாயகனின் மனோதத்துவ சலனங்களோடு கொடுத்திருக்கலாமே.
//
மறுநாள் காலையில் மருத்துவமனைக்குச் செல்ல நந்தினி தயாராகிவிட்டாளா என அறிய தங்கள் அறைக்குச் சென்ற கார்த்திக்............அங்கு...நந்தினி....//
ஒவ்வொரு முறையும் ஏதாவது சஸ்பென்ஸ் வந்து ,அடுத்து என்னன்னு எதிர்பார்க்க வைக்குது. அருமை திவ்யா மாஸ்டர்.
\\ தமிழன்... said...
என்னங்க கதை இப்படி ஆயிடுச்சு...!\\
கதைதானங்க.......ஏன் இவ்வளவு ஃபீல் பண்றீங்க தமிழன்!!
\ தமிழன்... said...
இது கொஞ்சம் பெரிய கதையா இருக்குமோன்னு மூணாவது பாகத்திலயே நினைச்சேன்...
\\
அட....அப்படியா??
எப்படிங்க க்ரெக்ட்டா guess பண்ணினீங்க:))
\\ தமிழன்... said...
///Occasional alcohol taker///
அப்படின்னா...;)\\
டெய்லி குடிக்காம....பார்ட்டீஸ் போனா, இல்ல எப்பவாச்சும் மட்டும் குடிக்கிறவங்க.
[தெரிஞ்சுண்டே தானே வேணும்னு கேட்கிறீங்க???]
\\ தமிழன்... said...
நந்தினி அடிமனதில் வந்த கவிதை நல்லாருக்கு...!\\
நன்றி தமிழன்!!
\\ தமிழன்... said...
பாக்கலாம் முடிவு என்னான்னு...
\\
:))
\\ தமிழன்... said...
ஆனா சோகமா முடிக்கப்படாது...!\\
ஆஹா.....இதென்ன கண்டீஷன்??
பார்க்கலாம்!!
\\ எழில்பாரதி said...
சொல்ல வார்த்தைகள் இல்லை!!!!
கவிதைகள் அனைத்தும் அருமை!!!
கதை நன்றாக பயணிக்கிறது புது திருப்பங்களோடு வாழ்த்துகள் திவ்யா!!!\\
வாங்க கவியரசி!!!
உங்கள் தொடர் வருகைக்கும், வாழ்த்துக்களுக்கும் நன்றி!!
\\ கயல்விழி said...
//பிரம்மன் வரையா ஓவியமே..!!
சிற்பி செதுக்கா சீர் சிலையே..!! -
என்வயிற்றில்
வளராவளர் பிறையே...!!
//
மேற்கண்ட கவிதை வரிகள் அழகாக இருந்தது.
இப்படி ஒரு திருப்பத்தை எதிர்பார்க்கவில்லை :(\\
வாங்க கயல்விழி!!
கவிதை வரிகளை ரசித்ததிற்கு நன்றி!!
எதிர்பாரா திருப்பமா??
வருகைக்கு நன்றி!!
\\ Ramya Ramani said...
ஹிம்ம்ம்ம் இப்படி போயிடுச்சே கதை...ஒரு நாள் செய்த தவறு இப்படி ஒரு வம்சத்துக்கே கேடு..Self Control எவ்வளவு முக்கியம் இல்லியா!\\
வாங்க ரம்யா,
உங்கள் கருத்துக்களை பகிர்ந்தமைக்கு நன்றி!!
\\ Ramya Ramani said...
எப்பொழுதும் போல் கவிதை வரிகள் அருமை :) அதுவும் இம்முறை நீங்கள் பயன்படுத்திய சொற்கள் உங்கள் வாசிப்பின் அளவை காட்டுகிறது..வாழ்த்துக்கள்\\
பயன்படுத்திய சொற்களை வைச்சு.......கரெக்ட்டா கண்டுபிடிச்சிட்டீங்க ரம்யா!!
வாசிப்பின் அளவிற்கு காரணம் நீங்க தான் ரம்யா!!! அதற்கு என் ஸ்பெஷல் தாங்கஸ் உங்களூக்கு!!
\\ Ramya Ramani said...
\\இதயத்து அறைகளிலே
இளம்பிஞ்சே
உன்முகம் தான்...
என் கந்தகக்
கருப்பையில்
ஃபீனிக்ஸாய் எழுவாயா???
\\
அருமை :))\\
நன்றி!
\\ Ramya Ramani said...
உங்க கவிதை நடை படிக்கும்போது ஒரு பாட்டு மெட்டு போட தோணுது..:))
\\
அட....மெட்டு போட்டு பாட்டாவே படிச்சீட்டீங்களா:))
\\ எம்.ரிஷான் ஷெரீப் said...
அடுத்த பகுதியை ஆவலுடன் தேடுகிறது மனது. அருமையான நடை. தொடருங்கள் திவ்யா !\\
வாங்க ரிஷான்,
உங்கள் தொடர் வருகைக்கும் வாழ்த்துக்களும் மிக்க நன்றி!!
\\ Arunkumar said...
திவ்யா,
கதை-ல இப்பிடி ஒரு ட்விஸ்ட் வரும்னு எதிர்பார்கவே இல்ல....
எதிர்பாரா திருப்பம் இருந்தாதானே தொடர் கதை படிக்க ஒரு த்ரில் இருக்கும்!
//
விரதமும் வேண்டுதலும் -
உன் வரவைச் சொல்லலையே...!!
உன் பிஞ்சுவிரல் ஸ்பரிசத்துக்காய்
என்உயிரே தவிக்குதிங்கே...!!
//
//
ஓசை இல்லாமல்
ஒரு அழுகுரல்
ரத்தம் இல்லாமல்
ஒரு காயம்
மருந்தில்லா ஒரு நோய்
//
கவிதைகள் அருமை அருமை அருமை..
நன்றி......நன்றி.....நன்றி!!
\\unga story-narration skills exponentiala increase aagudhu... hats off !! kalakkunga divya :)
waiting very eagerly for the next part...\\
அருண்,
உங்கள் உற்சாகமளிக்கும் பாராட்டிற்கும் விமர்சனத்திற்கும் என் மனமார்ந்த நன்றி!!
\\ வழிப்போக்கன் said...
என்ன திவ்யா சந்தோசமா போய்ட்டிருந்த கதைக்கு இப்படி ஒரு ட்விஸ்ட் போட்டுட்டீங்க?? :((\\
சந்தோஷம் மட்டும்தான் வாழ்க்கையின் அங்கமா என்ன??
ட்விஸ்ட் அண்ட் டர்ன்ஸ் இருக்கதானே செய்யும் வாழ்க்கையில்!!
ஆனா.....இது கற்பனை கதைதாங்க.....ஸோ ரொம்ப ஃபீல் பண்ணாதீங்க,சரியா!!
\\ வழிப்போக்கன் said...
//அம்மி மிதித்து
அருந்ததி பார்த்து
ஆண்டு இங்கு
இரண்டாச்சு...!!
எப்போ நீ பிறப்பாய்
என்று தான்
இங்கு ஒரே பேச்சு...!!
//
ஆச்சு ..பேச்சு
ரைமிங் நல்லாயிருக்கு :))\\
நன்றி!!
\\ வழிப்போக்கன் said...
//நாட்கள்பல போனாலும் -
உன் வரவு
கனவில் தான் நிஜமாச்சு...!!'
'ம்மா'-னு நீ சொல்ல
தவமிருக்கும் இந்த
தரிசுத்தாய் நானாச்சு..!!
//
தரிசுத்தாய் - நல்ல உவமை..\\
:))
\\ வழிப்போக்கன் said...
//மறுநாள் காலையில் மருத்துவமனைக்குச் செல்ல நந்தினி தயாராகிவிட்டாளா என அறிய தங்கள் அறைக்குச் சென்ற கார்த்திக்............அங்கு...நந்தினி....
//
ஏதாச்சும் ரொம்ப சோகமா முடிச்சுராதீங்க ப்ளீஸ்..இப்பவே கொஞ்சம் கஷ்டமா இருக்கு.\\
அச்சோ.....என்ன வழிபோக்கன் இவ்வளவு ஃபீல் பண்றீங்க?
கூல்...டவுன்!
\\ ஜி said...
:))) நல்லா எழுதிருக்கீங்க திவ்யா...
:((( எயிட்ஸா??? ரொம்ப பாவம் :((((\\
வாங்க கதாசிரியரே!!
பாராட்டிற்கு நன்றி!!
\ Sen22 said...
கதை வித்தியாசமாக இருக்கு...
எதிர்பாராத திருப்பம்...\\
கருத்திற்கு நன்றி செந்தில்!!
\\ Prabakar said...
excellent divya .. Unexpected twist ... but again suspense\\
வாங்க ப்ரபாஹர்!!
ஊக்கமளிக்கும் உங்கள் பாராட்டிற்கு என் மனமார்ந்த நன்றி!!
\\ Prabakar said...
"
ஓசை இல்லாமல்
ஒரு அழுகுரல்
ரத்தம் இல்லாமல்
ஒரு காயம்
மருந்தில்லா ஒரு நோய்
"
Excellent words .. Hats off ..\\
நன்றி...நன்றி!!
\\ Mukilarasi said...
அப்ப்ப்ப்பா, எப்டிங்க உங்களால மட்டும் தாங்க இப்படி எல்லாம் எழுத முடியும்...
ஆனா, உங்க கதைய படிக்கவே எனக்கு ரொம்ப ப்ப்ப்பபபய்ய்ய்யம்ம்ம்மாமாமாமாஆஆஆ இருக்கு!!!!
ச்ச்ச, அப்டியே சிலிர்த்துப் போயிடுச்சுங்க.... எனக்கு மத்தாப்பூ ன்னாவே பயம்... இதுல, இந்த மாதிரி எல்லாம் எழுதுனா, நாங்கள்ல்லாம் பாவம் சின்னப்பய புள்ளங்க...
-முகிலரசி தமிழரசன்.\\
வாங்க முகிலரசி!!
உங்கள் விரிவான விமர்சனத்திற்கு மிக்க நன்றி!!
[ரொம்ப பயமா இருந்தா....கண்ணை மூடிட்டு படிங்க முகில்:)))]
ஒஹ்...அந்த தொடர் கதை பேரு "கண்மணி சுகமாவா?" ...அம்மணிதான் அந்த கதையோட தழுவலான்னு கேட்டதுக்கு பதில் யோசிச்சுகிட்டு இருக்காங்கனு நெனைக்கிறேன்...
:0) Just kidding
\\ Anonymous said...
ஒஹ்...அந்த தொடர் கதை பேரு "கண்மணி சுகமாவா?" ...அம்மணிதான் அந்த கதையோட தழுவலான்னு கேட்டதுக்கு பதில் யோசிச்சுகிட்டு இருக்காங்கனு நெனைக்கிறேன்...
:0) Just kidding
\\
வாங்க அனானி,
வேறொரு கதையின் தழுவலுடன் கதையை எழுத ...நேரம் செலவழிக்க வேண்டிய அவசியம் எனக்கில்லை,
அது தொட்ர்பாக வந்த பின்னூட்டத்திற்கு பதில் அளிக்கவும்.....யோசிக்கவும் ,தயங்கவும் வேண்டிய அவசியமும் எனக்கில்லை.
நீங்கள் குறிப்பிட்டிருக்கும் கதையின் தழுவலில் இந்த தொடர் கதை பயணிப்பதே.....இந்த பகுதிக்கு பின்னூட்டங்கள் வந்த பின்புதான் எனக்கு தெரியும்.
என்ன கொடும இது மாஸ்டர்!! இப்படி பெரிய குண்ட தூக்கிப்போட்டுடீங்களே!! எதயோ யூகிச்சா இப்படி ஆகிப்போச்சே :(
ரெம்ப ஃபீலிங்கா இருக்கு, மெடிக்கல் டிப்போர்ட் மாறிப்போச்சுனு தீர்ப்ப மாத்தி சொல்லுங்க மாஸ்டர்:))
பதிவ போட்ட அன்னிக்கே படிச்சாச்சு கமேண்டுரதுக்குதான் கொஞ்சம் லேட் ஆகிடுச்சு....
முதல் பத்து பாரா உங்களோட வரிகள் எப்பவும் போல எளிமையான நடை...
// என் கந்தகக்
கருப்பையில்
ஃபீனிக்ஸாய் எழுவாயா??? //
//'ம்மா'-னு நீ சொல்ல
தவமிருக்கும் இந்த
தரிசுத்தாய் நானாச்சு..!! //
// பிரம்மன் வரையா ஓவியமே..!!
சிற்பி செதுக்கா சீர் சிலையே..!! -
என்வயிற்றில்
வளராவளர் பிறையே...!! //
இதுல முதல் வரிகள் சும்மா சொல்லக்கூடாது
ரொம்ப அருமையான வரிகள்...
// அதிர்ச்சியில் கார்த்திக்கின் முகத்தில் ரத்தம் சுண்டிப் போனது,
மார்பு வெகு வேகமாக அடித்துக் கொள்ள,
யோசனைத் திறன் சற்று நேரத்திற்கு விலகிக் கொண்டது,
தன்னை சமாளித்துக் கொள்ள கார்த்திக்கிற்கு சில வினாடிகள் பிடித்தன. //
சூழ்நிலைகளில் மிகத் தேர்ச்சிபெற்ற கதை ஆசிரியர்களைப் போல் எழுதியுள்ளீர்கள் ....
// ஓசை இல்லாமல்
ஒரு அழுகுரல்
ரத்தம் இல்லாமல்
ஒரு காயம்
மருந்தில்லா ஒரு நோய் //
Excellent Creative word...
ஹலோ திவ்யா,
இந்த " காதல் எனப்படுவது யாதெனில் " ஞாபகம் இருக்கா...
உங்களோட சிந்தனை எப்படியிருக்கும்னு எதிபார்த்துகொண்டு இருக்கிறேன்.
\\ விஜய் said...
திவ்யா,
உங்க கதை விகடனில் ஏற்கனவே வந்த "கண்மணி சுகமா" தொடர் கதையின் தழுவல் ரொம்பவே இருக்கு. முதல் பாகத்திலேயே, கர்பமாக இருக்கும் காதல் மனைவியிடம் 'ஹைதராபாத்' போயிட்டு வந்து கார்திக் ஒழுங்கா பேசாத போதே பொறி தட்டித்து :)
விகடனில் எழுதியது நீங்க தானா?
கவிதை வரிகளெல்லாம் சூப்பரோ சூப்பர்.\\
வாங்க விஜய்,
விகடனில் எழுதியது நானில்லை...பிரபலமான பத்திரிக்கையில் எழுதும் அளவிற்கெல்லாம் இன்னும் வளர்ந்துவிடவில்லை,
விகடனில் இதே தழுவலில் கதை வெளியாகிருந்த விஷயமே எனக்கு இப்போதுதான் தெரியும்.
\ Syam said...
//என்னங்க.. கதையோட போக்க இப்படியாக்கிட்டீங்க..
பக்குன்னு இருக்கு...
எதிர்பார்க்கவேயில்லை..//
ripeettu....\
ரைட்டு....
\\ ஜி said...
வார்த்தை வளம் பெருகிருக்கு... இன்னும் கலக்குங்க...\\
நன்றி, கதாசிரியரின்.....ஊக்கமளிக்கும் பாராட்டிற்கு!!!
\\ Janani said...
kadhaila ippidi oru thirupatha edhirpakkave illa divya...
oru dhadava thappu pannalum adhoda vilaivugal epdi ellam irukumnu romba nachunu sollirkeenga...
aana dhayavu senju kadhaya sogamaa mudichudadheenga :)\\
வாங்க ஜனனி,
உங்கள் கருத்திற்கும் பாராட்டிற்கும் நன்றி!!
\\ Janani said...
unga kavidhai onnunnum romba aazhamaana karutha solradha irukku...adhuvum romba azhagaana poruthamaana vaarthaigalaala ezhudhareenga...romba romba arumai...\\
உங்கள் மனம்திறந்த பாராட்டிற்கு நன்றி ஜனனி!!
\\ Janani said...
adutha pagudhi adutha vaaram dhaana...adhulayum oru thirupam koduthu indha vaarame pottuta nalla irukkum :)
\\
இத்தனை ஆர்வமா......அடுத்த பகுதி படிக்க??
சீக்கிரம் பதிவிடுகிறேன் ஜனனி!!
\\ Divyapriya said...
//'நேருக்கு நேர்' படத்தில் ரகுவரனுக்கு வந்த நிலைமையை நினைத்துக்கொண்டான்.//
நல்ல யாதார்த்தம்!!!\\
குறிப்பிட்டதிற்கு நன்றி திவ்யப்ரியா!!
\\ Divyapriya said...
//இதயத்து அறைகளிலே
இளம்பிஞ்சே
உன்முகம் தான்...
என் கந்தகக்
கருப்பையில்
ஃபீனிக்ஸாய் எழுவாயா???//
சொல்வதற்க்கு ஏதும் வார்த்தளே இல்லை!!! இதை விட அழகான, மனதை அழுத்துகிற வார்த்தைகளை இது வரை படித்ததில்லை…\\\
மனம்திறந்த பின்னூட்டத்திற்கு நன்றி!!
\\ Divyapriya said...
கதை இப்படி போகும்ன்னு சத்தியமா எதிர்பாக்கல…ஒரு steep turn எடுத்து தட தடவென பயனிக்குது கதை…வாழ்த்துக்கள் திவ்யா…\\
உங்கள் தொடர் வருகைக்கும் , வாழ்த்துக்களுக்கும் மிக்க நன்றி திவ்யப்ரியா!!
\\ gils said...
avvvvvvvvv...enanga ipdi oru mega serial twist adichiteenga..kathai ground floorlenthu directa 5th floor poidichi...adutha parta seekrama poadunga\\
வாங்க கில்ஸ்,
வருகைக்கு நன்றி,
அடுத்த பகுதி விரைவில்......
\\ gils said...
//உயிர்த்து என்னை
உயிர்ப்பிப்பாய்..???//
//நஞ்சுரைக்கும் உறவினர்களால் -
என்நெஞ்சு மருகி விம்முதிங்கே...!!//
//ரத்தம் இல்லாமல்
ஒரு காயம்
மருந்தில்லா ஒரு நோய்
//
vaira varigal...kathaiku kathai oru kavithaiya poatu..iayal isai nadagamnu muthamizhlayum poonthaadreenga..divs..nerla paatha kandipa unga autograph venum :)\\
ஆஹா......ஆட்டோகிராஃப் வேணுமா??
கில்ஸ் இதெல்லாம் ரொம்ப ஓவரு கிண்டல்ஸ்:(((
\\ இனியவள் புனிதா said...
அட கவிதையிலேயே பாதி கதையைச் சொல்லி விடுறீங்க...:) ம்ம் அடுத்த பாகம் எப்போது? மனம் ஏங்கத் தொடங்கி விட்டது!\
மனதில் ஏக்கத்துடன் கொஞ்சம் காத்திருங்க புனிதா.....விரைவில் அடுத்த பகுதி பதிவிடுகிறேன்,
வருகைக்கு நன்றி!!
\\ தாரணி பிரியா said...
அழகான மூன்றாம் பாகம். குறிப்பாக கவிதை வரிகள். குழந்தையின் அழுகுரலுக்காக தவமிருக்கும் எந்த பெண் படித்தாலும் கண்களில் நிச்சயம் நீர் வரும்.
"'ம்மா'-னு நீ சொல்ல
தவமிருக்கும் இந்த
தரிசுத்தாய் நானாச்சு.."
தரிசுத்தாய் என்ன ஒரு அழகான உவமை
பாராட்டுக்கள் திவ்யா\\
வாங்க தாரணி ப்ரியா,
உங்கள் வருகைக்கும் பாராட்டுக்களுக்கும் மிக்க நன்றி!!!
\ priyamanaval said...
கதையின் நாயகன் தவறான முறையில் உறவு கொண்டான் என்ற போதே கொஞ்சம் சந்தேகம் வந்துச்சு... அடுத்து எப்படி இருக்கும்ன் ஆவல இருக்கு...
கவிதையை தனியாக படிப்பதை விட இப்படி கதையுடன் சேர்த்து படிக்கும் பொழுது மிக அருமையாக இருக்கு... அருமை... கதையால் கவிதைக்கு அழகா இல்லை கவிதையால் கதைக்கு அழகா புரியவில்லை... ஆனால் புரிய அவசியமில்லை மனம் ரசிக்கும் பொழுது... :)...
வாழ்த்துகள் திவ்யா... நல்ல படைப்பு...\\
உங்கள் அழகான ரசிப்பிற்கும், கருத்துக்களுக்கும் நன்றி ப்ரியமானவள்!!
\ Kumiththa said...
நல்லாருக்கு கதை and கவிதை :)\\
மிக்க நன்றி குமித்தா!!
\\ kavidhai Piriyan said...
Romba natkaluku pirugu vandhu ungal blog i padithathu santhosam ..aduvum ..seeme intresting story..waiting for next part.Great Divya !!
Pravin\\
வாங்க ப்ரவீன்,
நீண்ட இடைவெளிக்குப்பின் உங்கள் பின்னூட்டம்.......வருகைக்கும் பாராட்டிற்கும் மிக்க நன்றி!!
மீண்டும் வருக!!!
\\ Thamizhmaangani said...
கவிதைகள் அனைத்தும் ரொம்ம்பப அருமையா வந்துருக்கு!
கதை பயங்கர twistல போய்கிட்டு இருக்கு...பெரும் ஆவலை தூண்டியுள்ளது.
late பண்ணாதே babes! அடுத்த பகுதிய சீக்கிரம் போடுங்க..\\
வாங்க தமிழ்மாங்கனி.....அடுத்த பகுதி சீக்கிரம் பதிவிடுறேனுங்கோ அம்மனி:))
பாராட்டிற்கு நன்றி!!
\\ முகுந்தன் said...
super\\
மிக்க நன்றி முகுந்தன்!!
\\ முகுந்தன் said...
//இதயத்து அறைகளிலே
இளம்பிஞ்சே
உன்முகம் தான்...
என் கந்தகக்
கருப்பையில்
ஃபீனிக்ஸாய் எழுவாயா???
'ம்மா'-னு நீ சொல்ல
தவமிருக்கும் இந்த
தரிசுத்தாய் நானாச்சு..!!
//
குழந்தை இல்லாத வேதனையை,
வலியை
இதை விட சிறப்பாக சொல்ல முடியுமா என்று தெரியவில்லை.
அற்புதம்....\\
உங்கள் கருத்துக்களுக்கு நன்றி முகுந்தன்!!
\\ புகழன் said...
நான்காம் பகுதி ரெம்ப சூப்பர்
அதைவிட கவிதைகள் சூப்பர்\\
வாங்க புகழன்,
உங்கள் பாராட்டிற்கு நன்றி!!
\ புகழன் said...
//அம்முதியவரின் மருத்துவ சிகிச்சைக்காக ரத்தம் தேவைப்பட, கார்த்திக்கும் அவனது குழுவிலிருந்த இருவரும் ரத்த தானம் செய்ய முன்வந்தனர்.
//
இந்த வரிகளைப் படித்ததுமே கார்த்திக்குக்கு HIV என்று சொல்லப்போகின்றீர்கள் என்பது தெரிந்து விட்டது.\
அப்படியா:)))
\\ புகழன் said...
//மறுநாள் காலையில் மருத்துவமனைக்குச் செல்ல நந்தினி தயாராகிவிட்டாளா என அறிய தங்கள் அறைக்குச் சென்ற கார்த்திக்............அங்கு...நந்தினி....
//
கார்த்திக்கின் டைரியை எடுத்துப் படித்துக் கொண்டிருந்தாள் என்று எழுதப் போகின்றீர்கள் என்று நாங்கள் நினைத்துக் கொண்டிருக்கின்றோம்.
ஆனால் நீங்கள் எழுதப்போவது கண்டிப்பாக வேறு ஒன்றாகத்தான் இருக்கும்.
நந்தினி மயங்கி விழுந்தாள் என்று ஏதாவது எழுதலாம்.
அல்லது வேறு ஏதாவதாவது எழுதுவீர்கள்.\
அட....ஒரு த்ரீலுக்காக சஸ்பென்ஸோடு முடிச்சா......நீங்க அடுத்த பகுதி கதையையும் சொல்லிடுவீங்க போலிருக்குதே:)))
அடுத்த பகுதி எப்படி போகுதுன்னு பொறுத்திருந்துப் பார்க்கலாம்!
\\ Mathu said...
Woww...என்ன சூப்பெரா எழுதி இருக்கீங்க. எனக்கு எல்லாவற்றிலும் பிடித்தது நீங்கள் கதையை கவிதையோடு கலந்து தரும் சுவை தான். விறுவிறுப்பாக கொண்டு செல்கிறீர்கள் கதையை. Waiting for the next part...\\
வாங்க மது,
உங்கள் தொடர் வருகைக்கும்,
அழகான ரசிப்பிற்கும் நன்றி!!
\\ Mathu said...
//நஞ்சுரைக்கும் உறவினர்களால் -
என்நெஞ்சு மருகி விம்முதிங்கே...!!
Really touching lines!\\
:(((
\\ Mathu said...
""ஓசை இல்லாமல்
ஒரு அழுகுரல்
ரத்தம் இல்லாமல்
ஒரு காயம்
மருந்தில்லா ஒரு நோய்""
நல்ல கவிதை! Keep up :))\\
கவிதாயினியின் பாராட்டிற்கு நன்றி,நன்றி, நன்றி!!!!
\\ Anonymous said...
இதே கதைய ரொம்ப நாள் முன்னாடி ஆனந்த விகடன்ல தொடர் கதையா படிச்சதா ஞாபகம். அந்த கதையில வந்த முதல் ட்விஸ்ட் இங்கயும் வந்துடுச்சி. கடைசீ ட்விஸ்ட்-உம் வந்தா நான் நெனைச்சது சரியாகிடும். :0)
மற்றபடி உங்கள் நடை எளிமையாகவும், படிப்பதற்கு நன்றாகவும் உள்ளது. பாராட்டுகள்.
--முத்து\\
வாங்க முத்து,
நீங்கள் கூறியிருப்பதை போன்று சிலர் பின்னூட்டத்தில் கூறிய பிறகே, இதே தழுவலில் விகடனில் கதை வெளியாகியிருந்த விஷயம் எனக்குத் தெரியும்.
\\மற்றபடி உங்கள் நடை எளிமையாகவும், படிப்பதற்கு நன்றாகவும் உள்ளது. பாராட்டுகள்.\\
உங்கள் பாராட்டுக்களுக்கு மிக்க நன்றி!!
\\ Murugs said...
அது ஏன் எல்லாரும் அமீர், பாலா மாதிரியே கதையை கொண்டு போறீங்க?
வாழ்க்கையில தான் இப்படி நடக்குதுனு கதை படிக்க வந்தா இங்கயும் இந்த கொடுமையா?
அக்கா! கொஞ்சம் சுகமா கதையை முடிங்க. :)\\
உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக்கொண்டதிற்கு நன்றி murugs.
மீண்டும் வருக!!
\\ கோபிநாத் said...
\\ஜி said...
வார்த்தை வளம் பெருகிருக்கு... இன்னும் கலக்குங்க...
10:16 PM
\\
ரீப்பிட்டே ;)\\
அட....நிஜம்மாவா????
இரு பெரும் எழுத்தாளர்களின் பாராட்டை பெற்றதில் மகிழ்ச்சி!!
நன்றி கோபிநாத்!!!
\\ ரசிகன் said...
//பேச தொடங்கவே தயங்கிய மருத்துவரிடம் கார்த்திக்,
"Whats the matter Doctor.......please open up"
"Mr.Karthik.....I am very sorry to say ....that......you are infected with HIV"//
மாஸ்டர் இந்த சோக அத்யாயாம் அவசியம்தானா?\\
கதைக்கு அவசியம் தேவை.....:(((
\\ ரசிகன் said...
கதையமைப்பு கற்பனை வழக்கம் போல அருமை. நம்ம இமாஜினேஷன் கெப்பாசிட்டி உங்களுக்கு.
அப்புறம். இந்த முறை இரண்டு வார எப்பிசோட் ஒன்னா சேந்து உரைநடையாகவே வேகமா போயிருச்சே. இப்படிப்பட்ட ஷாக் திருப்பு முனையை உங்க பாணியிலேயே வசனங்களோடு கதாநாயகனின் மனோதத்துவ சலனங்களோடு கொடுத்திருக்கலாமே.\\
உரையாடல்கள் இப்பகுதி அதிகமில்லை என்பதையும் நோட் பண்ணிட்டீங்களா ரசிகன்.....:)))
திருப்புமுனையை வசனங்களில் கொடுத்திருக்கலாம்தான்....அடுத்த முறை நினைவில் கொள்கிறேன் ரசிகன்,
உங்கள் கருத்திற்கு நன்றி!!
\\ ரசிகன் said...
//
மறுநாள் காலையில் மருத்துவமனைக்குச் செல்ல நந்தினி தயாராகிவிட்டாளா என அறிய தங்கள் அறைக்குச் சென்ற கார்த்திக்............அங்கு...நந்தினி....//
ஒவ்வொரு முறையும் ஏதாவது சஸ்பென்ஸ் வந்து ,அடுத்து என்னன்னு எதிர்பார்க்க வைக்குது. அருமை திவ்யா மாஸ்டர்.\\
நன்றி ரசிகன்!!!
\\ sathish said...
என்ன கொடும இது மாஸ்டர்!! இப்படி பெரிய குண்ட தூக்கிப்போட்டுடீங்களே!! எதயோ யூகிச்சா இப்படி ஆகிப்போச்சே :(\\
அட...இவ்வளவு ஃபீல் பண்றீங்க சதீஷ்:))
வருகைக்கு நன்றி!
\\ ரசிகன் said...
ரெம்ப ஃபீலிங்கா இருக்கு, மெடிக்கல் டிப்போர்ட் மாறிப்போச்சுனு தீர்ப்ப மாத்தி சொல்லுங்க மாஸ்டர்:))\\
அடடா......இது கதைதானே ரசிகன், இவ்வளவு ஃபீல் பண்ணினா எப்படி?
அடுத்த பகுதி வரும்வரை வெயிட் பண்ணுங்க!
\\ J J Reegan said...
பதிவ போட்ட அன்னிக்கே படிச்சாச்சு கமேண்டுரதுக்குதான் கொஞ்சம் லேட் ஆகிடுச்சு....\\
பதிவை படிச்சு நாளானாலும்....பின்னூட்டம் போட தனிப்பட்ட நேரம் எடுத்து வந்ததிற்கு நன்றி ரீகன்!!!
\\ J J Reegan said...
முதல் பத்து பாரா உங்களோட வரிகள் எப்பவும் போல எளிமையான நடை...\\
விமர்சனத்திற்கு நன்றி!!
\\ J J Reegan said...
// என் கந்தகக்
கருப்பையில்
ஃபீனிக்ஸாய் எழுவாயா??? //
//'ம்மா'-னு நீ சொல்ல
தவமிருக்கும் இந்த
தரிசுத்தாய் நானாச்சு..!! //
// பிரம்மன் வரையா ஓவியமே..!!
சிற்பி செதுக்கா சீர் சிலையே..!! -
என்வயிற்றில்
வளராவளர் பிறையே...!! //
இதுல முதல் வரிகள் சும்மா சொல்லக்கூடாது\\
நன்றி....நன்றி!!
\\ J J Reegan said...
// அதிர்ச்சியில் கார்த்திக்கின் முகத்தில் ரத்தம் சுண்டிப் போனது,
மார்பு வெகு வேகமாக அடித்துக் கொள்ள,
யோசனைத் திறன் சற்று நேரத்திற்கு விலகிக் கொண்டது,
தன்னை சமாளித்துக் கொள்ள கார்த்திக்கிற்கு சில வினாடிகள் பிடித்தன. //
சூழ்நிலைகளில் மிகத் தேர்ச்சிபெற்ற கதை ஆசிரியர்களைப் போல் எழுதியுள்ளீர்கள் ....\\
இந்த வரிகளை எழுதும் போது....உணர்வுகளை வார்த்தைகளில் கொண்டு வர நேரம் எடுத்து , யோசித்து எழுதினேன்,
இதனை குறிப்பிட்டு நீங்க பாராட்டியிருப்பது.......உற்சாகமளித்த து ரீகன்!!!
\\ J J Reegan said...
// ஓசை இல்லாமல்
ஒரு அழுகுரல்
ரத்தம் இல்லாமல்
ஒரு காயம்
மருந்தில்லா ஒரு நோய் //
Excellent Creative word...\\
நன்றி!!
\ J J Reegan said...
ஹலோ திவ்யா,
இந்த " காதல் எனப்படுவது யாதெனில் " ஞாபகம் இருக்கா...
உங்களோட சிந்தனை எப்படியிருக்கும்னு எதிபார்த்துகொண்டு இருக்கிறேன்.\\
ஹாய் ரீகன்,
ஜோசஃப் மறந்தாலும்...நீங்க மறக்க மாட்டீங்க போலிருக்கு,
நிஜம்மா அந்த தொடர் பதிவை நான் மறந்தே போய்ட்டேன்,
சீக்கிரம் எழுத ட்ரை பண்றேன்:(
கதை யதார்த்தம் அடுத்த பாகம் எப்போ??
திவ்யா,
அடுத்த பாகம் போடுவீங்களா மாட்டீங்களா. பொறுமைக்கும் ஒரு அளவிருக்கு :)
//விஜய் said...
திவ்யா,
அடுத்த பாகம் போடுவீங்களா மாட்டீங்களா. பொறுமைக்கும் ஒரு அளவிருக்கு :) //
ஆமாம் திவ்யா அடுத்த பாகம் எப்போ?
\\ இவன் said...
கதை யதார்த்தம் அடுத்த பாகம் எப்போ??\\
வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி இவன்!!
அடுத்த பாகம் விரைவில்.....
\\ விஜய் said...
திவ்யா,
அடுத்த பாகம் போடுவீங்களா மாட்டீங்களா. பொறுமைக்கும் ஒரு அளவிருக்கு :)\\
விஜய்....பொறுமை....பொறுமை!!
next part almost completed...seekiram publish panidurein:)))
\\ தாரணி பிரியா said...
//விஜய் said...
திவ்யா,
அடுத்த பாகம் போடுவீங்களா மாட்டீங்களா. பொறுமைக்கும் ஒரு அளவிருக்கு :) //
ஆமாம் திவ்யா அடுத்த பாகம் எப்போ?\\
seekiram publish panidurein dharani priya......konjam wait panunga,
thanks for anxiously waiting for the next part.....!!!
Post a Comment