பகுதி - 1
பகுதி - 2
கார்த்திக் தன் மேஜை மீதிருந்த கவரை மெதுவாக பிரித்தான்.
அதே சமயம் தனக்கு பின்னாலிருந்து
'க்ஹும்.."
என தொண்டையை செருமும் குரல் கேட்டு திரும்பினான்.
அங்கு..
அன்றலர்ந்த மலராய்,
உதட்டில் புன்னகை மின்னிட,
கண்களில் துள்ளலோடு.......
நந்தினி !!!!
ஒரு வாரம் கழித்து அவளை பாப்பதின் பரவசத்தையும், அவள் பிரிவு ஏற்படுத்திய தவிப்பையும் வெளிக் காட்டிக்கொள்ளாமல், சிடு சிடு முகத்துடன்....
தன் கையிலிருந்த கவரை பிரித்தபடியே,
" என்ன இது?...." என்றான்.
இப்போது ஒரு வெட்க புன்னகை நந்தினியின் முகத்தில்,
நொடிக்கொருமுறை மாறும் பெண்ணின் புன்னகை மொழியை உணர முடியவில்லை கார்த்திக்கால்,
கவரினுள் நான்காக மடித்து வைக்கப்பட்டிருந்த பேப்பரை எடுத்தான் கார்த்திக்,
" என்ன பேப்பர் இது?"
"பிரிச்சுப் பாருங்க"
மெதுவாக பிரித்துப் பார்த்தான் கார்த்திக்.
உள்ளே குண்டு குண்டு கையெழுத்தில்...
க.குமரேசன்
முன்னாள் பேரூராட்சி தலைவர்,
சாத்தான்குளம்,
திருநெல்வேலி மாவட்டம்.
என்ற முகவரியும், அதன் கீழ் பஸ் ரூட், ரெயில் ரூட், கார் ரூட் என எல்லா வழிதளங்களிலும் எவ்வாறு அந்த முகவரிக்கு சென்றடையலாம் என்று விளக்கமாக எழுதியிருந்தது.
' யார் அட்ரஸ் இது......எதுக்கு என்கிட்ட கொடுக்கிறா' என்ற குழப்பத்துடன்.......
"இது.....யார் அட்ரஸ்?" என்றான் கார்த்திக்.
" இது உங்க மாமனார் வீட்டு அட்ரஸ்"
" மாமனாரா???"
இப்போது நந்தினியின் முகம் முழுவதுமாக சிவந்தது.........கார்த்திக்கிற்கு எல்லாம் புரிந்தது.
ஆயிரம் காதல் அர்த்தங்கள் கொண்ட புன்னகையை மட்டுமே இருவராலும் அப்போது பரிமாற கொள்ள முடிந்தது.
மகள் ஆசைப்பட்ட கல்லூரி படிப்பை படிக்க வைத்து வேலைக்கும் அனுப்பிய நந்தினியின் அப்பா, காதலை வெளிப்படுத்தியவரின் விபரங்களை தன் மகள் மறைக்காமல் தன்னிடம் கூறியதும், 'காதல்' என்ற ஒற்றைச் சொல்லிற்கே எதிரி என்ற தொணியில் எதிர்க்காமல், மகள் கூறிய விபரங்களுடன் பையனை பற்றிய தகவல்களை விசாரித்து தெரிந்துக்கொண்டு, தன் சம்மதத்தை மகளிடம் கூறி, முறைப்படி பெண்கேட்டு வரச்சொல்லியிருந்தார்.
இருவீட்டாரின் முழு விருப்பத்துடன் கார்த்திக் - நந்தினி திருமணம் விமரிசையாக நடந்தேறியது.
தன்னை விரும்பியவர், தனக்கும் பிடித்திருந்தவரையே தன் வாழ்க்கை துணையாக தேர்ந்தெடுத்த தன் அப்பாவின் பாசமழையில் திளைத்துப் போனாள் நந்தினி.
கண்ணுக்குள் வைத்து காக்கும் கணவன்,
கையில் வைத்து தாங்கும் மாமியார்
என நந்தினியின் மணவாழ்க்கை இனிதே தொடர்ந்தது.
ஆஃபீஸிலிருந்து கார்த்திக்கும் நந்தினியும் வீட்டுக்கு வந்ததும், நாள் முழுவதும் அலுவலகத்தில் நடந்ததை அபிநயத்துடன் நந்தினி தன் மாமியாரிடம் கூறுவாள், அவரும் தான் நாள் முழுக்க பார்த்த டீவி சீரியலிலிருந்து, பக்கத்து வீட்டு கதை வரைக்கும் அடுக்கடுக்காக மருமகளிடம் ஓப்பிப்பார்,இருவரும கலகலப்புடன் பேசிக்கொண்டே அடுப்படியில் இரவு உணவு தயாரிப்பதை மன நிறைவுடன் ரசித்தபடியே ஹாலில் டீவி பார்த்துக்கொண்டிருப்பான் கார்த்திக்.
இந்த மாமியார் மருமகள் அரட்டை சில சமயங்களில் இரவு வெகுநேரம் வரை நீளும், முக்கியமாக சனிக்கிழமை இரவுகளில், மறுநாள் விடுமுறை என்ற காரணத்தால் வெகு நேரம் இரவில் ஊர் கதை பேசிக்கொண்டே இருப்பார்கள் இருவரும்,
"அம்மா, நைட் ரொம்ப லேட் ஆச்சும்மா......இவ்வளவு நேரம் முழிச்சுட்டு இருந்தா உங்க உடம்புக்கு என்ன ஆகிறது, சீக்கிரம் படுத்துக்கோங்கமா" என்று கார்த்திக் அவர்களின் அரட்டையை முடிக்க தருணம் பார்ப்பான்.
" ப்ரவாயில்லபா கார்த்தி....நாளைக்கு ஞாயிற்றுக் கிழமை தானே.........லேட்டா எழுந்திருச்சா போகுது.....!" என்பார் அவன் அம்மா.
இவன் நந்தினியை பரிதாபமாகப் பார்ப்பான்.
கண்கள் தேவையிலும், காதலிலும் கெஞ்சும்.
"நந்தினி நீ தான் வாயைத் திறந்து அம்மாக்கு எடுத்து சொல்லக் கூடாதா? ராத்திரி பதினொரு மணி வரைக்கும் முழிச்சிட்டிருந்தா உடம்புக்கு ஆகாதுன்னு எடுத்துச் சொல்ல மாட்டியா?"
"நான் என்னங்க சொல்றது.......நாளிக்கு லீவுன்னுதானே நாங்க பேசிட்டிருக்கிறோம்...அதான் அத்தையே சொல்லிட்டாங்களே, லேட்டா எழுந்தா போகுதுன்னு.....அத்தை நீங்க சொல்லிடிருந்த கதையை சொல்லுங்க , அப்புறம் என்னாச்சு??"
வேண்டுமென்றே நந்தினி தூண்டி விடுவாள். அவனுள் எரியும் நெருப்பை விசிறி வேடிக்கை பார்ப்பாள்.தலையைச் சாய்த்து, கண்களை மிருதுவாக அகற்றி அழகான சிரிப்பில் இவனது மனதை இன்னமும் கொள்ளை கொள்வாள்.
" சீக்கிரம் படுத்தா வயசான காலத்துல உடம்புக்கு நல்லதுன்னு சொன்னா.....உங்களுக்கு விளையாட்டா இருக்கா?" உள் தகிப்பில் கார்த்திக்கின் குரலில் லேசாய் எரிச்சல் எட்டிப் பார்க்கும்.
இப்படி குறும்பும் கறும்புமாக கார்த்திக்- நந்தினியின் இல்வாழ்க்கை இனிதே நகர்ந்தது.
தன் அன்னையை தாயைப் போல் நேசிக்கும் மனைவி, தன் விளையாட்டுத்தனமான வெகுளிப் பேச்சால் மனதை குளிர்விக்க, கார்த்திக் தன் வாழ்வே பூரணமானதாக உணர்ந்தான்.
நாட்கள் வேகமாக நகர
மாதங்கள் புரண்டோட
வருடமும் விரைந்து......
கார்த்திக்-நந்தினி தம்பதிகளுக்கு திருமணமாகி இரண்டு வருடங்கள் ஆகியது.
இந்த இரண்டு வருட மணவாழ்க்கை கார்த்திக்கை பொதுவாழ்விலும் பெரிதும் மாற்றி இருந்தது.
தனக்கென ஒரு வட்டம் அமைத்து மற்றவரிடம் சகஜமாக பேசிப் பழக மறுக்கும் கார்த்திக்கிற்கு இப்போது நட்பு வட்டாரங்கள் அதிகமாயின.
திருப்திகரமான இல்லறம் கொடுக்கும் உத்வேகம் அவனது வேலை செய்யும் திறனையும் மேம்பட வைத்தது, பதவியில் பல உயர்வுகள், உயர்மட்ட நட்புகள், அடிக்கடி கம்பெனி விஷயமாக வெளியூர் பிரயாணங்கள், என்று கார்த்திக்கின் வாழ்க்கை புதிய கோணத்தில் பயணித்தது.
பொருளாதார நிலையிலும் பெரிதான முன்னேற்றம் அவன் வாழ்வில்.
"எல்லாம் என் மருமகள் வந்த நேரம்தான் என் புள்ள இவ்வளவும் சாதிச்சிருக்கிறான்" என்று நந்தினியின் மாமியார் தன் மருமகளை உச்சி முகர்ந்தார்.
எல்லாம் சீராக சென்றுக்கொண்டிருக்கும் தங்கள் வாழ்வில், திருமணமாகி இரண்டு வருடங்கள் ஆகியும் குழந்தை பாக்கியம் இல்லை என்பதை கார்த்திக்-நந்தினி உணர ஆரம்பித்தனர்.
வீட்டிலும், உறவுக்காரர்களிடமும் கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாமல் திணறிய போதுதான், மருத்துவரை அணுகி பரசோதத்தில், நந்தினி தாய்மை அடைய சில பிரச்சனைகள் இருப்பது கண்டறியப்பட்டது.
நந்தினியால் இந்த குறைவை தாங்கிக்கொள்ள முடியாமல் , தன்னுள் சுக்கு நூறாக உடைந்துப்போனாள்.
மாமியாரும், கணவனும் எவ்வளவோ ஆறுதலும், உற்சாகமும் கொடுத்தும் , தன் வேலையை ராஜினாமா செய்து விட்டு, மருத்துவ சிகிச்சையை மனமுடைந்த நிலையில் தான் மேற்கொண்டாள் நந்தினி.
இந்த சமயத்தில் நந்தினியின் அப்பா ஹார்ட் அட்டாக்கில் சீரியஸான நிலையில் ஹாஸ்பிடலில் அனுமதிக்க பட, ஊருக்குச் சென்ற நந்தினி, அப்பாவின் உடல் நிலை சிறிது சிறிதாக தேறின பின்பும், தன் அம்மாவிற்கு துணையாக அங்கேயே சிறிது காலம் தங்கிவிட ஆசைபட்டாள்.
அவளது மனநிலைக்கு இந்த இடமாறுதலும் நல்லது என கார்த்திக்கின் அம்மாவும் மருமகளுக்கு சப்போர்ட் செய்தாலும், கார்த்திக்கிற்கு ஏனோ சம்மதிக்க மனமேயில்லை.
உயிர் மீண்டு வந்திருக்கும் தன் அப்பாவுடன் இன்னும் சிறிது நாட்கள் தான் இருக்க கார்த்திக்கிற்கு விருப்பமில்லை என்பதை அறிந்த நந்தினியின் மனம் தவித்தது.... .
மணமா? நிறமா?
என்றால்,
மலர் எதுவென்று சொல்லும்?
உரமா? நீரா?
என்றால்
நிலம் எதுவென்று சொல்லும்?
உயிரா? உணர்வா?
என்றால்
மனம் எதுவென்று சொல்லும்?
அவரோ,
உயிர் தந்தார்,
உடல் தந்தார்,
கண் என காத்தார்,
கலைகள் பல தந்தார்,
கடமையில் சிறந்தார்-உறவானார்!
அவனோ,
உணர்வுக்கு உயிரளித்தான்,
நினைவுக்கு கவி கொடுத்தான்,
கனவுக்கு சுவை கொடுத்தான்,
காதலில் உயிர் கலந்தான்-உணர்வானான்.
உணர்வு உறவினை மறுத்தால்,
உயிர் எதை ஏற்க்கும்?
எதை மறுக்கும்?
தன் அம்மாவின் வற்புறுத்தல், ஆசை மனைவியின் முகத்தில் கவலைகளின் ரேகை........கார்த்திக் அரைமனதாக நந்தினி அங்கு தங்கிட சம்மதித்தான்.
நந்தினியின் பிரிவு ஒருவித தனிமையுணர்வை கார்த்திக்கிடம் அதிகரித்தது.
நீண்ட இடைவெளிக்குப் பின் இந்த வெறுமை அவனுக்குள் பெரும் பாதிப்பை ஏற்படுத்திக்கொண்டிருந்தது.
இந்த புதுவித மனநிலை அவனுள் செல்லரித்துக்கொண்டிருக்க, அலுவலக விஷயமாக கார்த்திக் ஹைதிரபாத் செல்ல வேண்டியிருந்தது.
ஹைதிரபாத்தில்..............கார்த்திக்..........
[தொடரும்]
பகுதி - 4
பகுதி - 5
பகுதி - 6
July 15, 2008
Subscribe to:
Post Comments (Atom)
143 comments:
ஹேய் திவ்யா...
அடுத்த பாகம் ரெடி ஆகிடுச்சா..?
கலக்குமா நீ... :)))
//நொடிக்கொருமுறை
மாறும் பெண்ணின் புன்னகை மொழியை உணர முடியவில்லை கார்த்திக்கால்//
அட புன்னகை மொழியை மட்டுமா..?? பெண்ணின் மனதை யார் அறிவார்...?? :)))
//அவனோ,
உணர்வுக்கு உயிரளித்தான்,
நினைவுக்கு கவி கொடுத்தான்,
கனவுக்கு சுவை கொடுத்தான்,
காதலில் உயிர் கலந்தான்-உணர்வானான்//
கவிதை எல்லாம் எப்படிம்மா திவ்யா கலக்கலா எழுதறே...?? அழகு....
//இவன் நந்தினியை பரிதாபமாகப் பார்ப்பான்.
கண்கள்
தேவையிலும், காதலிலும் கெஞ்சும். //
திவ்யா ரொம்ப ரசிச்சி எழுதி இருக்கீங்க....;))))
மிகவும் ரசிக்கவைத்த குறும்பு... :))))
திவ்யா... அழகான மூன்றாம் பாகம்...
விவரித்த சம்பவங்களால் மிக அழகாக
இருக்கின்றது...
இந்த முறையும் காதலுக்கு
பஞ்சமே இல்லை... அருமை திவ்யா.. :))
அடுத்த பாகம் எப்போ..??
திவ்யா அருமையா இருக்கும்...
நீங்க இப்போலாம் கதை கவிதையா இருக்கு!!!!!
சீக்கரம் அடுத்த பகுதி போடுங்க!!!!
என்னடா இது பதிவு போட்டதும் தெரியல அதுக்குள்ள நவீன் சார் கமன்டும் போட்டுட்டாரு இருங்க படிச்சுட்டு வந்துடறேன்...:)
//என்னடா இது பதிவு போட்டதும் தெரியல அதுக்குள்ள நவீன் சார் கமன்டும் போட்டுட்டாரு இருங்க படிச்சுட்டு வந்துடறேன்...:)
//
திவ்யா நீங்க நவீனுக்கு சொல்லிட்டுதான் பதிவு போடறீங்களா ??
எப்படி எப்பவுமே பர்ஸ்ட்டா வர்றார் ??
//மெதுவாக பிரித்துப் பார்த்தான் கார்த்திக்.
உள்ளே குண்டு குண்டு கையெழுத்தில்...
//
சூப்பர் ட்விஸ்ட்டுங்க....:))யூகிக்க முடியல..
கதை நல்லா போயிட்டு இருக்கு :-)
ஃஃஃமகள் கூறிய விபரங்களுடன் பையனை பற்றிய தகவல்களை விசாரித்து தெரிந்துக்கொண்டு, தன் சம்மதத்தை மகளிடம் கூறி, முறைப்படி பெண்கேட்டு வரச்சொல்லியிருந்தார்.
ஃஃஃ
ரொம்ப நல்ல அப்பா...எல்லா பொண்ணுகளோட அப்பாவும் இப்படி இருந்தா நல்லாயிருக்கும்..
//மணமா? நிறமா?
என்றால்,
மலர் எதுவென்று சொல்லும்?
.....
உணர்வு உறவினை மறுத்தால்,
உயிர் எதை ஏற்க்கும்?
எதை மறுக்கும்?//
அனைத்து வரிகளும் அருமை. இந்த கவிதையெல்லாம் தனியா கூட நீங்க போடலாம்..அழகா இருக்கு..
Nice:)
//மணமா? நிறமா?
என்றால்,
மலர் எதுவென்று சொல்லும்?
//
தேன் என்று!! :)
//அங்கு..
அன்றலர்ந்த மலராய்,
உதட்டில் புன்னகை மின்னிட,
கண்களில் துள்ளலோடு.......
நந்தினி !!!!//
வர்ணனை..வர்ணனை:))
//உரமா? நீரா?
என்றால்
நிலம் எதுவென்று சொல்லும்?
//
விதை என்று! :P
//உணர்வு உறவினை மறுத்தால்,
உயிர் எதை ஏற்க்கும்?
எதை மறுக்கும்?//
அடடா.. என்னா தத்துவம்..என்னா தத்துவம்:))
//இந்த வெறுமை அவனுக்குள் பெரும் பாதிப்பை ஏற்படுத்திக்கொண்டிருந்தது.
இந்த புதுவித மனநிலை அவனுள் செல்லரித்துக்கொண்டிருக்க, அலுவலக விஷயமாக கார்த்திக் ஹைதிரபாத் செல்ல வேண்டியிருந்தது.
ஹைதிரபாத்தில்..............கார்த்திக்..........//
டுவிஸ்ட்டு ஆரம்பிச்சிருச்சு... கலக்குங்க மாஸ்டர்:)
//உயிரா? உணர்வா?
என்றால்
மனம் எதுவென்று சொல்லும்?//
நிம்மதி என்று! :)
enna maari athigaprasangi kita itha maari kelvi keta ipadi than pathil varum :P
//உணர்வு உறவினை மறுத்தால்,
உயிர் எதை ஏற்க்கும்?
எதை மறுக்கும்?//
excellento!!! :)
சாத்தான்குளம்,
திருநெல்வேலி மாவட்டமா? எப்போதுல இருந்து?? :)))
கதை நச்சுன்னு போய்கிட்டு இருக்குது... ஹைதராபாத்லதான் அவள மீட் பண்றானா?? ;)))
வாவ் சூப்பர்...திவ்யா...அடுத்த பாகத்திற்கு தயாராகிவிட்டோம்
அசத்துங்க திவ்யா..நீங்க உபயோகிக்கும் வார்த்தைகள் எல்லாம் அருமை :))கவிதைகள் எப்பொழுதும் போல் தூள் :))
very nice , kavithai varigal miga arumai ..
அருமையாக எழுதுகின்றீர்கள், கதைக்கு ஏற்றவாறு படங்கள்.
சூப்பருங்ங்ங்ங்ங்ங்ங்கோ,
வாழ்த்துக்கள்
// அங்கு..
அன்றலர்ந்த மலராய்,
உதட்டில் புன்னகை மின்னிட,
கண்களில் துள்ளலோடு.......
நந்தினி !!!! //
மிக அழகாக இருக்கின்றது...
// இப்போது ஒரு வெட்க புன்னகை நந்தினியின் முகத்தில்,
நொடிக்கொருமுறை மாறும் பெண்ணின் புன்னகை மொழியை உணர முடியவில்லை கார்த்திக்கால் //
கார்த்திக் மட்டும் இல்ல அந்த கடவுள் கார்த்திகேயனே வந்தாக்கூட உணர முடியாது...
// இப்போது நந்தினியின் முகம் முழுவதுமாக சிவந்தது.........கார்த்திக்கிற்கு எல்லாம் புரிந்தது.
ஆயிரம் காதல் அர்த்தங்கள் கொண்ட புன்னகையை மட்டுமே இருவராலும் அப்போது பரிமாற கொள்ள முடிந்தது.//
ஒரே வாரத்தில பாப்பா விவரமாயிடுச்சு...
அந்த காய்ச்சல் வந்தாலே இப்படிதாம்பா.. விவரம் ஆட்டோமேடிக்கா வந்திடுது...
// இந்த மாமியார் மருமகள் அரட்டை சில சமயங்களில் இரவு வெகுநேரம் வரை நீளும், முக்கியமாக சனிக்கிழமை இரவுகளில், மறுநாள் விடுமுறை என்ற காரணத்தால் வெகு நேரம் இரவில் ஊர் கதை பேசிக்கொண்டே இருப்பார்கள் இருவரும் //
கதைல டிப்ஸ் எல்லாம் கொடுக்கிறீங்க...
கதைல கவிதை போட்டு கலக்கிறீங்க திவ்யா...
// மணமா? நிறமா?
என்றால்,
மலர் எதுவென்று சொல்லும்? //
//உணர்வு உறவினை மறுத்தால்,
உயிர் எதை ஏற்க்கும்?
எதை மறுக்கும்? //
divs..!!! awesome writeup..especially antha kavithailam..top..athuku "shalini" potrukara reply atha vida top :D katha adultery based mari poguthunu thonuthu..but semma screenplay...relished that mamiar marumagal teasing hero portion..eagerly awaiting next part...
// ஹைதிரபாத்தில்..............கார்த்திக்......... //
முதல் இரண்டு பகுதிகளைவிட இந்த பகுதி .....ச்சும்மா கில்லி மாதிரி வேகம்... ரொம்ப நல்லா எழுதுறீங்க...
அடுத்த பாகம் எப்போ ரிலீஸ் பண்றீங்க....
கதையும், நடையும் மிக நன்றாக உள்ளது. அடுத்த பாகத்தை ஆவலுடன் எதிர்பார்க்கின்றேன்.
kadhaiya romba nalla kondu poreenga divya...epo enga twist vekka poreengane therila :-)
kavidhaiya pathi sollave venaam...thirumanamaana pennin mananilayai rombavum arumaya vivarichurkeenga...
adutha paguthikaaga waiting...seekiram pottudunga :-)
\\உள்ளே குண்டு குண்டு கையெழுத்தில்...
க.குமரேசன்
முன்னாள் பேரூராட்சி தலைவர்,
சாத்தான்குளம்,
திருநெல்வேலி மாவட்டம்.\\
அட்ரா சக்கை அட்ரா சக்கை
\\இப்படி குறும்பும் கறும்புமாக கார்த்திக்- நந்தினியின் இல்வாழ்க்கை இனிதே நகர்ந்தது.\\
வார்த்தைகள் விளையாடுது
\\உணர்வு உறவினை மறுத்தால்,
உயிர் எதை ஏற்க்கும்?
எதை மறுக்கும்?\\
Simply Suupperrbbb
படங்கள் எல்லாம் கொள்ளை அழகு!!!
//" இது உங்க மாமனார் வீட்டு அட்ரஸ்"//
இது கலக்கலான டெக்னிக் :))
//அவனோ,
உணர்வுக்கு உயிரளித்தான்,
நினைவுக்கு கவி கொடுத்தான்,
கனவுக்கு சுவை கொடுத்தான்,
காதலில் உயிர் கலந்தான்-உணர்வானான்.
உணர்வு உறவினை மறுத்தால்,
உயிர் எதை ஏற்க்கும்?
எதை மறுக்கும்?//
கவிதைல உங்கள அடிச்சிக்க ஆளில்லை…chance less!!!
ரொம்ப அழகான வரிகள்...
//தலையைச் சாய்த்து, கண்களை மிருதுவாக அகற்றி அழகான சிரிப்பில் இவனது மனதை இன்னமும் கொள்ளை கொள்வாள்.//
அழகான வர்ணனை…அப்டியே கண் முன்னால் விரிகிறது காட்சி…
அடுத்த பகுதிய சீக்கிரம் போடுங்க திவ்ஸ்...கதை ரொம்ப சூடு பிடிக்குது..
//இவன் நந்தினியை பரிதாபமாகப் பார்ப்பான்.
கண்கள் தேவையிலும், காதலிலும் கெஞ்சும்.//
ம்ம்.. ஏங்கயோ போயீட்டுங்க திவ்ஸ்!!:)
\\வழிப்போக்கன் said...
//என்னடா இது பதிவு போட்டதும் தெரியல அதுக்குள்ள நவீன் சார் கமன்டும் போட்டுட்டாரு இருங்க படிச்சுட்டு வந்துடறேன்...:)
//
திவ்யா நீங்க நவீனுக்கு சொல்லிட்டுதான் பதிவு போடறீங்களா ??
எப்படி எப்பவுமே பர்ஸ்ட்டா வர்றார் ??
--\\
இதே கேள்வியை நானும் கேக்கனும்னு நினைச்சிருந்தேன். நீங்க கேட்டுட்டீங்க
//தலையைச் சாய்த்து, கண்களை மிருதுவாக அகற்றி அழகான சிரிப்பில் இவனது மனதை இன்னமும் கொள்ளை கொள்வாள்.
//
அழகான வர்னணைகள்
///திருப்திகரமான இல்லறம் கொடுக்கும் உத்வேகம் அவனது வேலை செய்யும் திறனையும் மேம்பட வைத்தது,
///
வாழ்வில் வெற்றியின் ரகசியம் இதில்தான் உள்ளது. இதனைப் புரிந்து கொண்டவர்கள் தோற்றதில்லை.
//மணமா? நிறமா?
என்றால்,
மலர் எதுவென்று சொல்லும்?
உரமா? நீரா?
என்றால்
நிலம் எதுவென்று சொல்லும்?
உயிரா? உணர்வா?
என்றால்
மனம் எதுவென்று சொல்லும்?
//
அழகான கவிதை வரிகள்
வாழ்த்துகள் திவ்யா
விரைவில் அடுத்தபாகத்தை எழுதுங்கள் என்று நான் சொல்லப்போவதி்ல்லை.
நல்லாவே சஸ்பென்ஸா இருக்கு இது கொஞ்ச நாளைக்கு நீடிக்கட்டும்
கதை அருமையா போகுது...!!
கவிதை மிக நன்றாக இருக்கிறது.
super super super..
kadhai supera pogudhu divya.. kalakkuringa...
kavidhai romba supera irundadhu... Hats off !!!
ரேணுகா மேனன் நல்லாருக்காங்க...;)
கதை ரொம்ப நல்லாருக்கு...! :)
///ஒரு வாரம் கழித்து அவளை பாப்பதின் பரவசத்தையும், அவள் பிரிவு ஏற்படுத்திய தவிப்பையும் வெளிக் காட்டிக்கொள்ளாமல், சிடு சிடு முகத்துடன்....///
நம்ம கெத்து...!
மெயின்டெய்ன் பண்ணியே ஆகணும்ல...;)
////இது.....யார் அட்ரஸ்?" என்றான் கார்த்திக்.
" இது உங்க மாமனார் வீட்டு அட்ரஸ்"
" மாமனாரா???"///
அடடா..! வொர்க்கவுட் அயிடுச்சா நம்மளுக்கு இப்படி அமைய மாட்டேங்குதே...:(
///
வேண்டுமென்றே நந்தினி தூண்டி விடுவாள். அவனுள் எரியும் நெருப்பை விசிறி வேடிக்கை பார்ப்பாள்.தலையைச் சாய்த்து, கண்களை மிருதுவாக அகற்றி அழகான சிரிப்பில் இவனது மனதை இன்னமும் கொள்ளை கொள்வாள்.///
ரசனையான தருணம்...!
இவைகள் இல்லாம என்னங்க வாழக்கை...
///மாமியாரும், கணவனும் எவ்வளவோ ஆறுதலும், உற்சாகமும் கொடுத்தும் , தன் வேலையை ராஜினாமா செய்து விட்டு, மருத்துவ சிகிச்சையை மனமுடைந்த நிலையில் தான் மேற்கொண்டாள் நந்தினி.///
ஆமா...கட்டாயமா வேலையை விட்டுத்தான் ஆகணுமா...?
//////ஹைதிரபாத்தில்..............கார்த்திக்........../////
ஹைதராபாத்தில என்ன நடந்திச்சு கார்த்தி இப்படி இருக்கிறதுக்க என்ன காரணம்னு எனக்கு தெரிஞ்சிடுச்சு...!
ஆனா சொல்லப்போறதில்லை...;)
கலக்கல் மாஸ்டர் அடுத்த பகுதிக்கு வெயிட்டிங்ஸ்...:)
\\ நவீன் ப்ரகாஷ் said...
ஹேய் திவ்யா...
அடுத்த பாகம் ரெடி ஆகிடுச்சா..?
கலக்குமா நீ... :)))\\
வாங்க நவீன்,
தொடர்ந்து நீங்கள் அளித்து வரும் உற்சாகதிற்கு, நன்றி!!
\\ நவீன் ப்ரகாஷ் said...
//நொடிக்கொருமுறை
மாறும் பெண்ணின் புன்னகை மொழியை உணர முடியவில்லை கார்த்திக்கால்//
அட புன்னகை மொழியை மட்டுமா..?? பெண்ணின் மனதை யார் அறிவார்...?? :)))\
கடலின் ஆழம் கண்டுபிடிக்கலாம்,
பூகம்பத்தின் அளவும் கண்டுபிடிக்கலாம்,
எரிமலையின் வேகமும் கண்டுபிடிக்கலாம்
ஆனால்.......
பெண்ணின் உள்ளத்தை கண்டுபிடிக்கும்
கருவியை இனிதான் கண்டுபிடிக்க வேண்டும்!!!!
\\ நவீன் ப்ரகாஷ் said...
//அவனோ,
உணர்வுக்கு உயிரளித்தான்,
நினைவுக்கு கவி கொடுத்தான்,
கனவுக்கு சுவை கொடுத்தான்,
காதலில் உயிர் கலந்தான்-உணர்வானான்//
கவிதை எல்லாம் எப்படிம்மா திவ்யா கலக்கலா எழுதறே...?? அழகு....\\
படித்ததில் பிடித்திருந்த ஒரு கவிதையின் பாதிப்புதான் இக்கவிதை வரிகள்!
கவிஞரின் பாராட்டிற்கு என் நன்றிகள்!!
\\ நவீன் ப்ரகாஷ் said...
//இவன் நந்தினியை பரிதாபமாகப் பார்ப்பான்.
கண்கள்
தேவையிலும், காதலிலும் கெஞ்சும். //
திவ்யா ரொம்ப ரசிச்சி எழுதி இருக்கீங்க....;))))
மிகவும் ரசிக்கவைத்த குறும்பு... :))))\\
ரசிப்பிற்கு நன்றி நவீன்!!
\\ நவீன் ப்ரகாஷ் said...
திவ்யா... அழகான மூன்றாம் பாகம்...
விவரித்த சம்பவங்களால் மிக அழகாக
இருக்கின்றது...\\
விமர்சனத்திற்கு நன்றி நவீன்!
\\ நவீன் ப்ரகாஷ் said...
இந்த முறையும் காதலுக்கு
பஞ்சமே இல்லை... அருமை திவ்யா.. :))
அடுத்த பாகம் எப்போ..??\\
அடுத்த பாகம் விரைவில் பதிவிடுகிறேன் :))
வருகைக்கும் பின்னூட்டங்களுக்கும் நன்றி!!
\\ எழில்பாரதி said...
திவ்யா அருமையா இருக்கும்...
நீங்க இப்போலாம் கதை கவிதையா இருக்கு!!!!!
சீக்கரம் அடுத்த பகுதி போடுங்க!!!!\\
வாங்க எழில் பாரதி!!
கவியரசி எழில் பாரதியின்
மனம்திறந்த பாராட்டிற்கு நன்றி....நன்றி!!
\\ தமிழன்... said...
என்னடா இது பதிவு போட்டதும் தெரியல அதுக்குள்ள நவீன் சார் கமன்டும் போட்டுட்டாரு இருங்க படிச்சுட்டு வந்துடறேன்...:)\\
நேரம் கிடைக்கையில் பதிவினை படித்துவிட்டு கருத்துக் கூறுங்கள் தமிழன், வருகைக்கு நன்றி!!
\\ வழிப்போக்கன் said...
//மெதுவாக பிரித்துப் பார்த்தான் கார்த்திக்.
உள்ளே குண்டு குண்டு கையெழுத்தில்...
//
சூப்பர் ட்விஸ்ட்டுங்க....:))யூகிக்க முடியல..\\
நன்றிங்க வழிபோக்கன்!!
\\ வெட்டிப்பயல் said...
கதை நல்லா போயிட்டு இருக்கு :-)\\
உங்கள் வருகைக்கும் , பாராட்டிற்கும் நன்றி அண்ணா:))
\\ வழிப்போக்கன் said...
ஃஃஃமகள் கூறிய விபரங்களுடன் பையனை பற்றிய தகவல்களை விசாரித்து தெரிந்துக்கொண்டு, தன் சம்மதத்தை மகளிடம் கூறி, முறைப்படி பெண்கேட்டு வரச்சொல்லியிருந்தார்.
ஃஃஃ
ரொம்ப நல்ல அப்பா...எல்லா பொண்ணுகளோட அப்பாவும் இப்படி இருந்தா நல்லாயிருக்கும்..\\
உண்மைதான்.....
கருத்துக்களுக்கு நன்றி!
\\ வழிப்போக்கன் said...
//மணமா? நிறமா?
என்றால்,
மலர் எதுவென்று சொல்லும்?
.....
உணர்வு உறவினை மறுத்தால்,
உயிர் எதை ஏற்க்கும்?
எதை மறுக்கும்?//
அனைத்து வரிகளும் அருமை. இந்த கவிதையெல்லாம் தனியா கூட நீங்க போடலாம்..அழகா இருக்கு..\\
உற்சாகமளிக்கும் உங்கள் பாராட்டிற்கு என் மனமார்ந்த நன்றி!!
என்னவென்று சொல்வது திவ்யா !! உங்கள் கதை அமைப்பு, வார்த்தை செறிவு முக்கியமாக அழகு தமிழ், ஒவ்வொரு பதிவுக்காகவும் என்னைப் போன்ற வாசகர்களை ஏங்க வைத்து விடுகிறீர்கள்.
தமிழுக்கு அமுதென்று பேர்...
உங்கள் பதிவுக்கோ தேனமுதென்று பேர்.
தமிழுக்கு நிலவென்று பேர்..
உன் கவிதைக்கு முழு நிலவென்று பேர்.
தமிழ் எங்கள் உயிருக்கு நேர்..
உன் தமிழ் நம் தாய் தமிழுக்கு தேர்..
வற்றாத செல்வமே வாழ்க நீ வாழ்க..
நீங்காத தமிழ் செல்வம் நிறைந்து வாழ என் அழகிய வாழ்த்துக்கள்
இராகவன்
திவ்ய நேத்தே படிச்சுட்டேன், அதுக்குள்ள ஒரு வேலை வந்தது அப்புறம் கமென்ட் போடலாம்னு போனேன் மறந்தே போச்சு :-)
மறுபடி ஒரு சஸ்பென்சா தங்காது...அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் :-)
ரொம்ப நல்லா இருக்கு இந்த பகுதியும் -வழமை போலவே திவ்யா! கலக்குறிங்க!
கவிதை இன்னும் சூப்பரா இருக்கு! நல்லா கதைக்கு ஏற்ற மாதிரி ரொம்ப உணர்வுபூர்வமாக இருக்கிறது. தொடர்ந்து கலக்குங்க :))
good!
ஏதோ யூகிக்ககூடியதா படுதே :)
pics எல்லாம் ரொம்ப superungoooo :))
Arumaiyana Kadhal Kathai...
//உயிரா? உணர்வா?
என்றால்
மனம் எதுவென்று சொல்லும்?
அவரோ,
உயிர் தந்தார்,
உடல் தந்தார்,
கண் என காத்தார்,
கலைகள் பல தந்தார்,
கடமையில் சிறந்தார்-உறவானார்!
அவனோ,
உணர்வுக்கு உயிரளித்தான்,
நினைவுக்கு கவி கொடுத்தான்,
கனவுக்கு சுவை கொடுத்தான்,
காதலில் உயிர் கலந்தான்-உணர்வானான்.
உணர்வு உறவினை மறுத்தால்,
உயிர் எதை ஏற்க்கும்?
எதை மறுக்கும்?//
மிக அருமையான வரிகள்.அர்த்தம் ஆயிரம் சொல்லும் வார்தைகளின் அணிவகுப்பு.
தி.விஜய்
pugaippezhai.blogspot.com
உயிரா? உணர்வா?
என்றால்
மனம் எதுவென்று சொல்லும்?
வாங்கோணா வாங்கோ கோவையின் ரேஸ் திருவிழாவை பார்க்க வாங்கோணா..! 14 மறுமொழிகள் | விஜய்
\\ ஷாலினி said...
//மணமா? நிறமா?
என்றால்,
மலர் எதுவென்று சொல்லும்?
//
தேன் என்று!! :)\\
வாங்க ஷாலினி,
ஆரம்பிச்சிட்டீங்களா உங்கள் குறும்பு பதிலை:))
\ ரசிகன் said...
//அங்கு..
அன்றலர்ந்த மலராய்,
உதட்டில் புன்னகை மின்னிட,
கண்களில் துள்ளலோடு.......
நந்தினி !!!!//
வர்ணனை..வர்ணனை:))\\
அதே.....அதே!!!
\\ ஷாலினி said...
//உரமா? நீரா?
என்றால்
நிலம் எதுவென்று சொல்லும்?
//
விதை என்று! :P\\
:))
\\ ரசிகன் said...
//உணர்வு உறவினை மறுத்தால்,
உயிர் எதை ஏற்க்கும்?
எதை மறுக்கும்?//
அடடா.. என்னா தத்துவம்..என்னா தத்துவம்:))\\
நன்றி ... நன்றி!!
\\ ரசிகன் said...
//இந்த வெறுமை அவனுக்குள் பெரும் பாதிப்பை ஏற்படுத்திக்கொண்டிருந்தது.
இந்த புதுவித மனநிலை அவனுள் செல்லரித்துக்கொண்டிருக்க, அலுவலக விஷயமாக கார்த்திக் ஹைதிரபாத் செல்ல வேண்டியிருந்தது.
ஹைதிரபாத்தில்..............கார்த்திக்..........//
டுவிஸ்ட்டு ஆரம்பிச்சிருச்சு... கலக்குங்க மாஸ்டர்:)\\
உங்கள் வருகைக்கும் பின்னூட்டங்களுக்கும் நன்றி ரசிகன்!!
\\ ஷாலினி said...
//உயிரா? உணர்வா?
என்றால்
மனம் எதுவென்று சொல்லும்?//
நிம்மதி என்று! :)
enna maari athigaprasangi kita itha maari kelvi keta ipadi than pathil varum :P\\
ரசிக்கும்படியான அழகான பதில்கள், அருமை ஷாலினி!!
நன்றி!!
\ ஷாலினி said...
//உணர்வு உறவினை மறுத்தால்,
உயிர் எதை ஏற்க்கும்?
எதை மறுக்கும்?//
excellento!!! :)\
gracias !!!:)
\\ ஜி said...
சாத்தான்குளம்,
திருநெல்வேலி மாவட்டமா? எப்போதுல இருந்து?? :)))
கதை நச்சுன்னு போய்கிட்டு இருக்குது... ஹைதராபாத்லதான் அவள மீட் பண்றானா?? ;)))\\
வாங்க ஜி:))
பாராட்டிற்கு நன்றி!!
ஹைதிரபாத்ல எவள மீட் பண்ண போறான்...???
எனக்கும் தெரிலியே:(
பொறுத்திருந்து பார்ப்போம் அடுத்த பகுதியில் ஒகே வா!
\\ இனியவள் புனிதா said...
வாவ் சூப்பர்...திவ்யா...அடுத்த பாகத்திற்கு தயாராகிவிட்டோம்\\
தாயாரா இருங்க புனிதா....சீக்கரம் அடுத்த பகுதி போடுறேன்!!
\ Ramya Ramani said...
அசத்துங்க திவ்யா..நீங்க உபயோகிக்கும் வார்த்தைகள் எல்லாம் அருமை :))கவிதைகள் எப்பொழுதும் போல் தூள் :))\\
எல்லாம் உங்களை போன்ற நண்பர்கள் அளிக்கும் உற்சாகம்தான் காரணம் ரம்யா, வருகைக்கும் பாராட்டிற்கும் நன்றி !!!
\ Prabakar Samiyappan said...
very nice , kavithai varigal miga arumai ..\\
மிக்க நன்றி ப்ரபாஹர் சாமியப்பன்!!
\\ Kailashi said...
அருமையாக எழுதுகின்றீர்கள், கதைக்கு ஏற்றவாறு படங்கள்.
சூப்பருங்ங்ங்ங்ங்ங்ங்கோ,
வாழ்த்துக்கள்\\
வாங்க கைலாஷி,
உங்கள் வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் மிக்க நன்றி!!
\\ J J Reegan said...
// அங்கு..
அன்றலர்ந்த மலராய்,
உதட்டில் புன்னகை மின்னிட,
கண்களில் துள்ளலோடு.......
நந்தினி !!!! //
மிக அழகாக இருக்கின்றது...\\
அழகான உங்கள் ரசிப்பிற்கு நன்றி ரீகன்!!
\\ J J Reegan said...
// இப்போது ஒரு வெட்க புன்னகை நந்தினியின் முகத்தில்,
நொடிக்கொருமுறை மாறும் பெண்ணின் புன்னகை மொழியை உணர முடியவில்லை கார்த்திக்கால் //
கார்த்திக் மட்டும் இல்ல அந்த கடவுள் கார்த்திகேயனே வந்தாக்கூட உணர முடியாது...\\
அதுவும் சரிதான்:))
\\ J J Reegan said...
// இப்போது நந்தினியின் முகம் முழுவதுமாக சிவந்தது.........கார்த்திக்கிற்கு எல்லாம் புரிந்தது.
ஆயிரம் காதல் அர்த்தங்கள் கொண்ட புன்னகையை மட்டுமே இருவராலும் அப்போது பரிமாற கொள்ள முடிந்தது.//
ஒரே வாரத்தில பாப்பா விவரமாயிடுச்சு...
அந்த காய்ச்சல் வந்தாலே இப்படிதாம்பா.. விவரம் ஆட்டோமேடிக்கா வந்திடுது...\\
காய்ச்சலா???
இதென்னங்க புது விஷயமா இருக்கு:))
\\ J J Reegan said...
// இந்த மாமியார் மருமகள் அரட்டை சில சமயங்களில் இரவு வெகுநேரம் வரை நீளும், முக்கியமாக சனிக்கிழமை இரவுகளில், மறுநாள் விடுமுறை என்ற காரணத்தால் வெகு நேரம் இரவில் ஊர் கதை பேசிக்கொண்டே இருப்பார்கள் இருவரும் //
கதைல டிப்ஸ் எல்லாம் கொடுக்கிறீங்க...\\
அஹா....கரெக்ட்டா இதெல்லாம் நோட் பண்றீங்களா???
சான்ஸ் கிடைக்கிறப்போ இப்படி டிப்ஸ் சொல்லிட வேண்டியதுதான்:))
\\ J J Reegan said...
கதைல கவிதை போட்டு கலக்கிறீங்க திவ்யா...
// மணமா? நிறமா?
என்றால்,
மலர் எதுவென்று சொல்லும்? //
//உணர்வு உறவினை மறுத்தால்,
உயிர் எதை ஏற்க்கும்?
எதை மறுக்கும்? //\\
ரீகன்,
உங்கள் வருகைக்கும், விரிவான பின்னூட்ட விமர்சனங்களுக்கும் நன்றி!!
\\
gils said...
divs..!!! awesome writeup..especially antha kavithailam..top..athuku "shalini" potrukara reply atha vida top :D katha adultery based mari poguthunu thonuthu..but semma screenplay...relished that mamiar marumagal teasing hero portion..eagerly awaiting next part...\\
உங்கள் மனமார்ந்த பாராட்டிற்கும், கருத்திற்கும் மிக்க நன்றி கில்ஸ்!!
\\ J J Reegan said...
// ஹைதிரபாத்தில்..............கார்த்திக்......... //
முதல் இரண்டு பகுதிகளைவிட இந்த பகுதி .....ச்சும்மா கில்லி மாதிரி வேகம்... ரொம்ப நல்லா எழுதுறீங்க...
அடுத்த பாகம் எப்போ ரிலீஸ் பண்றீங்க....\\
இந்த பகுதி அதி வேகமோ??
இந்த வேகம் இல்லீனா.....கதையின் நீளம் ஜாஸ்தி ஆகிடும்.
அடுத்த பாகம் அடுத்த வாரத்தில் ரீகன்:)
\\ ஜோசப் பால்ராஜ் said...
கதையும், நடையும் மிக நன்றாக உள்ளது. அடுத்த பாகத்தை ஆவலுடன் எதிர்பார்க்கின்றேன்.\\
வாங்க ஜோசப் பால்ராஜ்,
உங்கள் வருகைக்கும் பாராட்டிற்கும் மிக்க நன்றி!!
மீண்டும் வருக!!
\ Janani said...
kadhaiya romba nalla kondu poreenga divya...epo enga twist vekka poreengane therila :-)
kavidhaiya pathi sollave venaam...thirumanamaana pennin mananilayai rombavum arumaya vivarichurkeenga...
adutha paguthikaaga waiting...seekiram pottudunga :-)\\
வாங்க ஜனனி,
உங்கள் முதல் வருகைக்கும்,
விரிவான கருத்திற்கும் மிக்க நன்றி!!
அடுத்த பகுதி அடுத்த வாரத்தில், அவசியம் படித்துக் கருத்து கூறுங்கள் ஜனனி!!
\\ விஜய் said...
\\உள்ளே குண்டு குண்டு கையெழுத்தில்...
க.குமரேசன்
முன்னாள் பேரூராட்சி தலைவர்,
சாத்தான்குளம்,
திருநெல்வேலி மாவட்டம்.\\
அட்ரா சக்கை அட்ரா சக்கை\\
ஊர் பாசமோ!!!
\\இப்படி குறும்பும் கறும்புமாக கார்த்திக்- நந்தினியின் இல்வாழ்க்கை இனிதே நகர்ந்தது.\\
வார்த்தைகள் விளையாடுது\\
ரசிப்பிற்கு நன்றி!!
\\உணர்வு உறவினை மறுத்தால்,
உயிர் எதை ஏற்க்கும்?
எதை மறுக்கும்?\\
Simply Suupperrbbb\\
வருகைக்கும் பாராட்டிற்கும் நன்றி விஜய்!!
\\ Divyapriya said...
படங்கள் எல்லாம் கொள்ளை அழகு!!!\\
நன்றி திவ்யப்ரியா:))
\\ Divyapriya said...
//" இது உங்க மாமனார் வீட்டு அட்ரஸ்"//
இது கலக்கலான டெக்னிக் :))\\
அப்படியா டெக்னிக் சூப்பரா??
நீங்க சொன்ன சரிதான் திவ்யப்ரியா!!
\\ Divyapriya said...
//அவனோ,
உணர்வுக்கு உயிரளித்தான்,
நினைவுக்கு கவி கொடுத்தான்,
கனவுக்கு சுவை கொடுத்தான்,
காதலில் உயிர் கலந்தான்-உணர்வானான்.
உணர்வு உறவினை மறுத்தால்,
உயிர் எதை ஏற்க்கும்?
எதை மறுக்கும்?//
கவிதைல உங்கள அடிச்சிக்க ஆளில்லை…chance less!!!
ரொம்ப அழகான வரிகள்...\\
உங்கள் மனமார்ந்த பாராட்டிற்கு நன்றி :))
\\ Divyapriya said...
//தலையைச் சாய்த்து, கண்களை மிருதுவாக அகற்றி அழகான சிரிப்பில் இவனது மனதை இன்னமும் கொள்ளை கொள்வாள்.//
அழகான வர்ணனை…அப்டியே கண் முன்னால் விரிகிறது காட்சி…\\
உங்கள் அழகான ரசிப்பிற்கு நன்றி திவ்யப்ரியா!!
\\ Thamizhmaangani said...
அடுத்த பகுதிய சீக்கிரம் போடுங்க திவ்ஸ்...கதை ரொம்ப சூடு பிடிக்குது..
//இவன் நந்தினியை பரிதாபமாகப் பார்ப்பான்.
கண்கள் தேவையிலும், காதலிலும் கெஞ்சும்.//
ம்ம்.. ஏங்கயோ போயீட்டுங்க திவ்ஸ்!!:)\\
வாங்க தமிழ்மாங்கனி!!
அடுத்த பகுதி அடுத்த வாரத்தில் நிச்சயம் பதிவிடுகிறேன்!!
உங்கள் பாராட்டிற்கு நன்றி தமிழ்!!
\\ புகழன் said...
//தலையைச் சாய்த்து, கண்களை மிருதுவாக அகற்றி அழகான சிரிப்பில் இவனது மனதை இன்னமும் கொள்ளை கொள்வாள்.
//
அழகான வர்னணைகள்\\
உங்கள் ரசிப்பிற்கு நன்றி புகழன்!!
\\ புகழன் said...
///திருப்திகரமான இல்லறம் கொடுக்கும் உத்வேகம் அவனது வேலை செய்யும் திறனையும் மேம்பட வைத்தது,
///
வாழ்வில் வெற்றியின் ரகசியம் இதில்தான் உள்ளது. இதனைப் புரிந்து கொண்டவர்கள் தோற்றதில்லை.\\
உங்கள் கருத்தினை பகிர்ந்துக்கொண்டதிற்கு நன்றி !!
106 - அடுத்து ;))
waiting for the next post :) Nalla poitruku
you remind me of one of my college classmates Divya, who was very interested in Literature...avalum ippadidhan kadhai kavidhai ellam ezhuduva, I think her mom was a tamil teacher or a poetess. Good going dudette!
திவ்யா... கதை நல்லா இருக்கு... அடுத்து என்ன நடக்கும்ன்னு ஆவலா இருக்கு... கவிதைகள் எப்பொழுதும் போல மிக அழகு...
"அழகு" என்ற வார்த்தை சாதரணமாக கூறவில்லை... உங்க கவிதை நயம் மிக்க சொற்கள் என்னும் ஆபரணங்களை கொண்டு உங்கள கதைக்கும் கற்பனைக்கும் மிகுந்த அழகு சேர்த்து உள்ளீர்கள்...
\\ புகழன் said...
//மணமா? நிறமா?
என்றால்,
மலர் எதுவென்று சொல்லும்?
உரமா? நீரா?
என்றால்
நிலம் எதுவென்று சொல்லும்?
உயிரா? உணர்வா?
என்றால்
மனம் எதுவென்று சொல்லும்?
//
அழகான கவிதை வரிகள்
வாழ்த்துகள் திவ்யா
விரைவில் அடுத்தபாகத்தை எழுதுங்கள் என்று நான் சொல்லப்போவதி்ல்லை.
நல்லாவே சஸ்பென்ஸா இருக்கு இது கொஞ்ச நாளைக்கு நீடிக்கட்டும்
\\
என்ன ஒரு ஆச்சரியம் புகழன்.......இந்த முறை மட்டும் அடுத்த பாகம் விரைவில் பதிவிட வேண்டும்னு சொல்லாம, சஸ்பென்ஸ் கொஞ்ச நாள் இருக்கட்டும்னு சொல்லிடீங்க???
\\ நிமல்/NiMaL said...
கதை அருமையா போகுது...!!
கவிதை மிக நன்றாக இருக்கிறது.\
வாங்க நிமல்,
உங்கள் வருகைகும் பாராட்டிற்கும் ரொம்ப நன்றி நிமல்!!
\\ Arunkumar said...
super super super..
kadhai supera pogudhu divya.. kalakkuringa...\\
வாங்க அருண்,
பதிவை படித்ததிற்கு ஒரு நன்றி.......பின்னூட்டத்தில் பாராட்டியதற்கு ஒரு நன்றி!!
\\ Arunkumar said...
kavidhai romba supera irundadhu... Hats off !!!\\
நன்றி......நன்றி....நன்றி!!!
\\ தமிழன்... said...
ரேணுகா மேனன் நல்லாருக்காங்க...;)\\
:)))
\\ தமிழன்... said...
கதை ரொம்ப நல்லாருக்கு...! :)\\
ரொம்ப நன்றி தமிழன்!!
\\ தமிழன்... said...
///ஒரு வாரம் கழித்து அவளை பாப்பதின் பரவசத்தையும், அவள் பிரிவு ஏற்படுத்திய தவிப்பையும் வெளிக் காட்டிக்கொள்ளாமல், சிடு சிடு முகத்துடன்....///
நம்ம கெத்து...!
மெயின்டெய்ன் பண்ணியே ஆகணும்ல...;)\\
அட.....நீங்களும் இப்படிதான் கெத்து காட்டுவீங்களா:))
\ தமிழன்... said...
////இது.....யார் அட்ரஸ்?" என்றான் கார்த்திக்.
" இது உங்க மாமனார் வீட்டு அட்ரஸ்"
" மாமனாரா???"///
அடடா..! வொர்க்கவுட் அயிடுச்சா நம்மளுக்கு இப்படி அமைய மாட்டேங்குதே...:(\\\
அமையும் தமிழன் ....மிக விரைவில் அமையும்!!!
\\ தமிழன்... said...
///
வேண்டுமென்றே நந்தினி தூண்டி விடுவாள். அவனுள் எரியும் நெருப்பை விசிறி வேடிக்கை பார்ப்பாள்.தலையைச் சாய்த்து, கண்களை மிருதுவாக அகற்றி அழகான சிரிப்பில் இவனது மனதை இன்னமும் கொள்ளை கொள்வாள்.///
ரசனையான தருணம்...!
இவைகள் இல்லாம என்னங்க வாழக்கை...\\
உங்கள் ரசிப்பினை பகிர்ந்துக்கொண்டமைக்கு நன்றி தமிழன்!!
\\ தமிழன்... said...
///மாமியாரும், கணவனும் எவ்வளவோ ஆறுதலும், உற்சாகமும் கொடுத்தும் , தன் வேலையை ராஜினாமா செய்து விட்டு, மருத்துவ சிகிச்சையை மனமுடைந்த நிலையில் தான் மேற்கொண்டாள் நந்தினி.///
ஆமா...கட்டாயமா வேலையை விட்டுத்தான் ஆகணுமா...?\\
கட்டாயமா இல்லியன்னு எல்லாம் தெரிலீங்க......கதையில் கதாநாயகி வேலையை ராஜினாமா செய்திட அதை ஒரு காரணமா எழுதினேன், அவ்ளோதானுங்க:)))
\\ தமிழன்... said...
//////ஹைதிரபாத்தில்..............கார்த்திக்........../////
ஹைதராபாத்தில என்ன நடந்திச்சு கார்த்தி இப்படி இருக்கிறதுக்க என்ன காரணம்னு எனக்கு தெரிஞ்சிடுச்சு...!
ஆனா சொல்லப்போறதில்லை...;)\\
அடடா....உங்களுக்கு தெரிஞ்சுடுச்சா???
எனக்கு மட்டும் சொல்லுங்களேன் தமிழன்.......அடுத்த பகுதி எழுத வசதியா இருக்கும்:)))
\\ தமிழன்... said...
கலக்கல் மாஸ்டர் அடுத்த பகுதிக்கு வெயிட்டிங்ஸ்...:)\\
நன்றி மிஸ்டர்,
விரைவில் அடுத்த பகுதி வெளியாகும்:)))
\\ Raghav said...
என்னவென்று சொல்வது திவ்யா !! உங்கள் கதை அமைப்பு, வார்த்தை செறிவு முக்கியமாக அழகு தமிழ், ஒவ்வொரு பதிவுக்காகவும் என்னைப் போன்ற வாசகர்களை ஏங்க வைத்து விடுகிறீர்கள்.
தமிழுக்கு அமுதென்று பேர்...
உங்கள் பதிவுக்கோ தேனமுதென்று பேர்.
தமிழுக்கு நிலவென்று பேர்..
உன் கவிதைக்கு முழு நிலவென்று பேர்.
தமிழ் எங்கள் உயிருக்கு நேர்..
உன் தமிழ் நம் தாய் தமிழுக்கு தேர்..
வற்றாத செல்வமே வாழ்க நீ வாழ்க..
நீங்காத தமிழ் செல்வம் நிறைந்து வாழ என் அழகிய வாழ்த்துக்கள்
இராகவன்\\
வாங்க இராகவன்,
உங்கள் பாராட்டிற்கும் விமர்சனத்திற்கும் நன்றி சொல்ல வார்த்தைகள் பிடிபடவில்லை,
விரிவான உங்கள் பின்னூட்டமளித்த ஊக்கத்தை வார்த்தைகளில் விவரிக்க இயலவில்லை,
மிக்க நன்றி இராகவன்!!!
\\நீங்காத தமிழ் செல்வம் நிறைந்து வாழ என் அழகிய வாழ்த்துக்கள்\\
உங்களை போன்ற நண்பர்களின் வாழ்த்துக்கள் தான் என் எழுத்துக்களுக்கு காரணம், நெஞ்சார்ந்த நன்றிகள்!!
\\ Syam said...
திவ்ய நேத்தே படிச்சுட்டேன், அதுக்குள்ள ஒரு வேலை வந்தது அப்புறம் கமென்ட் போடலாம்னு போனேன் மறந்தே போச்சு :-)\\
வாங்க ஷ்யாம்,
பதிவை படிச்சதுக்கப்புறமும், பின்னூட்டம் போட ஞாபகமா வந்ததிற்கு ரொம்ப ரொம்ப நன்றி!!
\\ Syam said...
மறுபடி ஒரு சஸ்பென்சா தங்காது...அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் :-)\
தொடர்கதைன்னா அப்படிதானுங்கோ....:)))
\\ Mathu said...
ரொம்ப நல்லா இருக்கு இந்த பகுதியும் -வழமை போலவே திவ்யா! கலக்குறிங்க!\\
வாங்க மது,
உங்கள் தொடர்வருகைக்கும்,
பாராட்டிற்கும் என் மனமார்ந்த நன்றி!!
\ Mathu said...
கவிதை இன்னும் சூப்பரா இருக்கு! நல்லா கதைக்கு ஏற்ற மாதிரி ரொம்ப உணர்வுபூர்வமாக இருக்கிறது. தொடர்ந்து கலக்குங்க :))\\
'கவிதாயினி மதுவின் பாராட்டிற்கு நன்றி!!
\\ sathish said...
good!
ஏதோ யூகிக்ககூடியதா படுதே :)\\
யூகிச்சுட்டீங்களா??
உங்கள் யூகம் சரியான்னு அடுத்த பாகத்தில் படிச்சுட்டு சொல்லுங்க சதீஷ்!!
\\ sathish said...
pics எல்லாம் ரொம்ப superungoooo :))\\
ரொம்ப நன்றிங்கோ:))
\\ Sen22 said...
Arumaiyana Kadhal Kathai...\\
நன்றி செந்தில்!!
@விஜய்
\\மிக அருமையான வரிகள்.அர்த்தம் ஆயிரம் சொல்லும் வார்தைகளின் அணிவகுப்பு.\\
உங்கள் வருகைக்கும் பாராட்டிற்கும் மிக்க நன்றி !!!
I particularly like your hero's name.
What happend ?...
4 th Part...
We are waiting....
\\ கோபிநாத் said...
106 - அடுத்து ;))\\
வாங்க கோபி,
வருகைக்கு நன்றி!!
106 வது மொய்க்கும் ஒரு நன்றி!!
அடுத்து.......????
\\ Usha said...
waiting for the next post :) Nalla poitruku\\
வாங்க உஷா,
உங்க பாராட்டிற்கு நன்றி,
அடுத்த பார்ட் சீக்கிரம் பதிவு போடுறேன் ,சரியா!!
\\ Usha said...
you remind me of one of my college classmates Divya, who was very interested in Literature...avalum ippadidhan kadhai kavidhai ellam ezhuduva, I think her mom was a tamil teacher or a poetess. Good going dudette!\\
அட அப்படியா??
உங்க க்ளாஸ் மேட் திவ்யா மாதிரி எனக்கு இலக்கியத்துல எல்லாம் அவ்வளவு ஆர்வம் இல்லீங்க,
ஆனா.......கதைகள் படிப்பதற்கும், எழுதுவதற்கும் ரொம்ப பிடிக்கும்:))
இப்ப கொஞ்சம்... கொஞ்சம் கவிதை எழுதுவதிலும் இண்ட்ரஸ்ட் வந்திருக்கு, அவ்வளவுதான்:)
உங்கள் தொடர் வருகைக்கு ரொம்ப தாங்க்ஸ் உஷா!!
\\ priyamanaval said...
திவ்யா... கதை நல்லா இருக்கு... அடுத்து என்ன நடக்கும்ன்னு ஆவலா இருக்கு... கவிதைகள் எப்பொழுதும் போல மிக அழகு...
"அழகு" என்ற வார்த்தை சாதரணமாக கூறவில்லை... உங்க கவிதை நயம் மிக்க சொற்கள் என்னும் ஆபரணங்களை கொண்டு உங்கள கதைக்கும் கற்பனைக்கும் மிகுந்த அழகு சேர்த்து உள்ளீர்கள்...\
வாங்க ப்ரியமானவள்,
ரொம்ப நாள் கழித்து என் பதிவு பக்கம் வந்திருக்கிறீங்க.....நலமா???
வருகைக்கும் விரிவான விமர்சனத்திற்கும் மனமார்ந்த நன்றி!!
\\ Karthik said...
I particularly like your hero's name.\\
வாங்க கார்த்திக்,
உங்கள் பேரும் கதையின் 'ஹீரோ' வின் பேரும் ஒரே பேர் என்பதால்....ரொம்ப பிடிச்சுப்போச்சோ??
வருகைக்கு நன்றி!!
\\ J J Reegan said...
What happend ?...
4 th Part...
We are waiting....\\
அச்சோ .....ஸாரி ரீகன்,
இந்த முறை பதிவு வெளியிட கொஞ்சம் தாமதமாகிடுச்சு....புதன்கிழமை பதிவிட முயற்சி பண்றேன் , சரியா?
திவ்யா...எப்போ அடுத்த பகுதி? அநியாயத்துக்கு காக்க வக்கறீங்களே...
btw, உங்க புது blog template செம சூபர்...என் கன்ணே பட்டுடுச்சு :-))
\\ Divyapriya said...
திவ்யா...எப்போ அடுத்த பகுதி? அநியாயத்துக்கு காக்க வக்கறீங்களே...
btw, உங்க புது blog template செம சூபர்...என் கன்ணே பட்டுடுச்சு :-))\\
Divyapriya, next part inikku kandipa post pana try panrein ok va.
huh.....thanks for visitng the kavithai page, glad u liked the template:))
Kavithai & template Super Divya..
by the way, There is some change in your profile. Congrats !!
adutha part eppo ?
Tamil font problem :((
\\ வழிப்போக்கன் said...
Kavithai & template Super Divya..\\
hi....
glad u liked the new kavithai page too.
\\by the way, There is some change in your profile. Congrats !!\\
THANKS
\\\adutha part eppo ?
Tamil font problem :((\\
no problemo,you can type comments in English too.......I can understand:)))
Post a Comment