
பகுதி -1
பகுதி - 2
மீரா எங்கே .....என தவிப்புடன் தேடினேன்!
கட்டிலுக்கு அருகில் மயங்கி விழுந்திருந்ததை கவனித்து பதற்றமானேன்!
மீண்டும் பத்து நாள் ஆஸ்பத்திரி வாசம்....இந்த முறை டாக்டர் ஸ்ட்ரிக்ட்டாக மீரா complete rest எடுக்கவேண்டுமென சொல்லிவிட்டார்.
மீராவிற்கு சிறிது உடல்நிலை சரி ஆனதும், ரகு கொடுத்த ஆலோசனையைப் பற்றி நானே அவளிடம் சென்று பேசினேன். என் கண்களை சந்திக்கும் துணிவில்லாமல் தலை கவிழ்ந்தபடி படுக்கையில் அமர்ந்திருந்தாள் மீரா.
அவளது காதலனின் விபரங்களை கேட்டுத் தெரிந்துக் கொண்டேன். ஃபோன் நம்பர், மற்றும் அவனது அப்பா கோயம்பத்தூரில் ஒரு பிரபல Textile Showroom யின் அதிபர் என்ற விபரம் தவிர, மற்ற விபரங்கள் எதுவும் அவளுக்கு தெரிந்திருக்கவில்லை.
கோயம்பத்தூர் சென்று அவனை தேடி விபரம் அறிந்து வருவதாக மீராவிடம் கூறினேன்.
நன்றியுடன் கண்கலங்கினாள் மீரா!!
அலுவலக விஷயமாக பெங்களூர் செல்வதாக வீட்டில் கூறிவிட்டு கோவைக்குச் சென்றேன். என் கல்லூரி கால நண்பனின் உதவியுடன் மீராவின் காதலன் ஸ்ரீதரை தேடிவிடலாம் என திட்டம்.

இவள் கூறிய விபரங்கள உண்மையாகயிருக்குமாயின், பணக்கார பையன்.................பந்தாவுக்காக MBA படித்துவிட்டு,
பொழுது போக்கிற்காக பெண்களிடம் பழகுபவனாக இருக்க வாய்ப்பிருக்கிறது!!
Anyway, அவன் யார் என விசாரிக்கலாம் என்று நானும் என் கோயமுத்தூர் நண்பனும் முயன்றோம்.
ஸ்ரீதருடன் சென்னையில் பழக்கம் , அவனது நண்பர்கள் நாங்கள் என கூறியதால் அவனை பற்றி தகவல் சேகரிக்க எளிதாக இருந்தது.
கிடைத்த தகவல் மிகுந்த அதிர்ச்சியானது!!!
3 மாதங்களுக்கு முன் ஊட்டியிலிருந்து கோவை திரும்பும் வழியில் கார் விபத்தில் தலையில் பலத்த அடிகளுடன் இன்றுவரை சுயநினைவில்லாமல் கோமா நிலையில் ஆஸ்பத்திரியில் இருப்பதாக அறிந்து அங்குச் சென்றோம்.
கண்ணீர் வடிந்த கண்களுடன் ஸ்ரீதரின் தாயார், அருகில் அவருக்கு ஆறுதல் கூறியபடி ஒரு பெண்.
வசதி படைத்த குடும்பம் என்பதால், டாக்டர்கள் நம்பிக்கை தரும் பதில் ஏதும் கொடுக்காத போதிலும், சுயநினைவு திரும்பும், உயிர் பிழைத்துவிடுவான் தன் ஒரே மகன் என்று நம்பிக்கையுடன் முழுக்குடும்பமும் காத்திருப்பது தெரிந்தது!!
ஒரே வாரிசான
உங்கள் மகன்
தன் வாரிசை அங்கு
விதைத்துவிட்டு இங்கு
சலனமின்றி துயில்கிறான்!!
- ஸ்ரீதரின் தாயிடம் இதை கூறுவது எப்படி??

நீ
தாயானதை உணராமல்,
திருமதி ஆனதையும் அறியாமல்
தன் நினைவின்றி
எமனோடு நித்தம் போராடுகிறான்
உன் காதலன்!!
-மீராவிடம் கூறுவதெப்படி???
குழப்பமான மனதுடன், கணத்த இதயத்துடன் வீட்டிற்கு திரும்பினேன்.
என் வருகைக்காக ஆவலுடன் காத்திருந்தாள் மீரா, ஸ்ரீதரை பற்றின விபரம் தானாக என்னிடம் கேட்க துணிவில்லாமல், நானாக கூறவேண்டும் என என்னையே நோக்கினாள் மீரா.
தவிக்கும் அவள் கண்களின் தவிப்பு என்னை ஏதோ செய்தது, மனதை பிசைந்தது!!
மீராவிடம் கரகரத்த குரலில் அனைத்தையும் மெதுவாக கூறிமுடித்தேன்.
எனக்கும் மீராவிற்கும் திருமணமாகி 2 வாரமும் மீராவை கண்ணீருடன் தான் பார்த்திருக்கிறேன், ஆனால் அவள் இப்போது கதறிய கதறல் என் இதயத்தை உடைத்தது!!
மீண்டும் அவளது உடல் நிலை பாதிக்க படுமோ என்ற கவலை வேறு, அவளை எப்படி தேற்றுவது என்ற வழியும் அறியாமல் திணறினேன்.

தன் கண்ணீருக்கு நடுவினில் மீரா என்னிடம், விவாகரத்திற்கு தான் சம்மதிப்பதாகவும், ஸ்ரீதரின் குடும்ப வாரிசை பெற்றுக்கொடுக்கும் வரை தான் தங்கிக் கொள்ள ஒரு இடத்தையும், வேலையையும் பார்த்து தருமாறு கெஞ்சினாள்.
என் நண்பன் ரகுதான் இப்போதும் ஆலோசனை தந்தான்.அவனது யோசனைப்படி....
என் வேலையை புனேவிற்கு மாற்றிக்கொண்டு, புனேவிற்கு மீராவுடன் தனிக்குடித்தனம் சென்றேன்.
டைவர்ஸ் ஆகும் வரை என்னுடன் இருக்கலாம், குழந்தையையும் நல்ல முறையில் பெற்று ஸ்ரீதரின் குடும்பத்துக்கு கொடுத்து விடலாம் என்ற முடிவுடன் மீராவும் என்னுடன் புனேவிற்கு வந்தாள்.
புனேவில் நானும் மீராவும் ஒரே வீட்டில் வசிக்கும் நண்பர்கள் என்ற அளவில் கூட இல்லாமல், தனித்தே இருந்தோம்.
அதிர்ச்சி, கவலை, குழப்பம் என மீரா எப்போதும் எதையோ பறி கொடுத்தது போலவே இருந்தாள்.

பக்கத்து அப்பார்ட்மென்ட் சுமதியுடன் நட்பு ஏற்பட்டது மீராவிற்கு.
சுமதி கலகலப்பாக பேசிப்பழகும் தமிழ் பெண்.
கணவன் ஆஃபீஸிற்கும், குழந்தைகள் பள்ளிக்கும் சென்றபின மீராவுடன் அரட்டை அடிக்க வருவாள் சுமதி.
சுமதியின் நட்பு மீராவை சகஜ நிலைக்கு சீக்கிரமாகவே வரவைத்தது.
புது இடம், புது நட்பு, மீராவின் தாய்மை தந்த பொலிவு....மீராவிடம் ஒரு புத்துணர்ச்சியை அளித்தது.
புனேவிற்கு வரும்முன் என் அம்மாவிடம் எனக்கு என்ன என்ன பிடிக்கும் என கேட்டு தெரிந்துக் கொண்டிருப்பாள் போலிருக்கிறது.....என் டேஸ்டிற்கு ஏற்றபடி நன்றாக சமைத்தாள்,
இந்த கவனிப்பும், உபசரனையும்.....
அவளுக்கும் வயிற்றில் வளரும் குழந்தைக்கும்
நான் பாதுகாப்பாக இருப்பதாலா???
ஒரு வருடத்தில் முறியப்போகும் உறவிற்கு
இப்போதே சேர்த்து வைத்து நன்றியுணர்வை வெளிப்படுத்துகிறாளா????
ஏதோ ஒன்று....மீரா சந்தோஷமாக இருந்தாள்!!

எங்களுக்குள்ளான உரையாடல்கள்....
"காஃபி ...."
"டின்னர் டேபிள்ல இருக்கு..."
"பாத்ரூம்ல water heater work பண்ணல..."
"gorcery & vegetables வாங்கனும்..."
இவ்வளவுதான்!!!
ஆனால் மீராவின் அன்றாட வாழ்க்கை முறை எனக்கு மனதில் பதிய ஆரம்பித்தது.
காலையில் எழுந்ததும் பக்தி பாடல்களை முனங்கியபடி ஃபில்டர் காஃபி போடுவது........சினிமா பாடல்கள் முனுமுனுத்தபடி காலை டிபன் செய்வது.......நான் ஹாலில் இல்லை எனத்தெரிந்தால் சற்று சத்தமாகவே பாட்டு பாடுவது.......பால்கனியில் இருக்கும் ரோஜா செடியுடன் பேசுவது........ஜன்னல் கம்பிகள் வழியே கரம் நீட்டி மழைதுளிகளை தன் முகத்தில் தெரித்து சிலிர்த்துக்கொள்வது.......இப்படி அவளது நடவடிக்கைகள் எனக்குள் சேமிக்க ஆரம்பித்தன!!
அவள் இப்போது 6 மாதம் கர்ப்பம், எனினும் அவ்வளவாக அவளது வயிறு அதனை வெளிக்காட்டவில்லை.
இந்த நேரத்தில், கர்ப்பமாக இருக்கும் தன் மருமகளை பார்த்தே ஆகவேண்டும் என என் அப்பாவும் அம்மாவும் புனேவிற்கு வந்தனர்.
இன்முகத்துடன் அவர்களை வரவேற்று அவர்களுக்கு வேண்டியதை பார்த்து பார்த்து செய்தாள் மீரா.
இங்கு வந்த இடத்தில் என் அம்மாவிற்கு உடல்நிலை சரியில்லாமல் போகவே, மீரா முழு அக்கரையுடன் கவனித்துக்கொண்டாள்.
என் பெற்றோர் மட்டுமில்லாமல் நானும் பெரிதும் நெகிழ்ந்து போனேன்......மீராவின் அன்பான கவனிப்பால்!!
உடலநிலை சரியானதும் என் பெற்றோர் சென்னைக்கு புறப்பட்டார்கள். போகும் முன் அம்மா என்னிடம் தனியாக........
"டேய் விஷ்வா! உனக்கும் மீராவுக்கு என்னடா பிரச்சனை?? அவகிட்ட முகம் கொடுத்து கூட பேச மாட்டன்ர, பாவம்டா மீரா! புள்ளத்தாச்சி பொண்ணு, நல்லா பார்த்துக்கோடா, அவ தெரியாம என்ன தப்பு பண்ணிருந்தாலும் பக்குவமா எடுத்துச் சொல்லு, இப்படி பட்டும் படாமலும் இருந்தா என்னடா அர்த்தம்??? இந்த நேரத்துல அவ மனசு சந்தோஷமா இருக்கனும்டா விஷ்வா....பத்திரமா பார்த்துக்கோ மீராவை"
உண்மையை அறியாமல் அம்மா பேசினாலும்......அதில் இருந்த அர்த்தம் மனதில் பதிந்தது!!
அம்மா , அப்பா ஊருக்கு சென்றபின, எனக்கும் மீராவுக்கும் நடுவில் பேச்சுவார்த்தைகள் சற்றே அதிகமானது, பொதுவான .....சினிமா, அரசியல், சீதோஷன நிலை பற்றியாவது பேசிக்கொண்டோம்.
மாதங்களும் உருண்டோடின....

ஒரு நாள் சாயங்காலம் நான் ஆபீஸிலிருந்து வீட்டுக்கு வந்ததும், அவள் எனக்கு காஃபி கொடுக்கும் போது, தவறுதலாக என் கையில் வடிந்துவிட,
"அச்சோ" என்று பதறியபடி என் கைகளை அவள் பிடித்து காஃபியை துடைத்துவிட,
"சீ.....கை எடு" என டக்கென்று கத்திவிட்டேன்.
என் முகத்தின் கடுகடுப்பும், வார்த்தையில் தெரிந்த வெறுப்பும் அவளை வேதனைபடுத்தியிருக்க கூடும், அழுதபடி தன் அறைக்குள் சென்று தாளிட்டுக்கொண்டவள் இரவு முழுவதும் வெளியில் வரவேயில்லை.
நானும் கண்டுக்கொள்ளாமல் டேபிளில் இருந்த டின்னரை சாப்பிட்டுவிட்டு உறங்கிப்போனேன்.
காலையில் எப்போதும் கேட்கும் அவள் பாடல் சத்தம் சமயலறையில் இல்லை, அவள் அறையின் கதவு பூட்டியே இருந்தது......இன்னும் அழுது கொண்டிருக்கிறாள் போலிருக்கிறது என நினைத்து டிஸ்டர்ப் செய்யாமல் அலுவலகம் சென்று விட்டேன்.
அன்று வேலை நேரத்தில் மீட்டிங் இருந்ததால் அதில் மூழ்கி போனேன்.
வழக்கத்தைவிட அன்று சற்று தாமதமாக வீட்டிற்கு வந்தேன், அப்போதுதான் மீரா அழுது கொண்டிருந்தது ஞாபகம் வந்தது, 'ஸாரி' கேட்க வேண்டும் மீராவிடம் என்ற முடிவுடன் வீட்டிற்குள் என்னிடம் இருந்த சாவியை வைத்து திறந்து உள் நுழைந்தேன்.
Light போடாமல்.....வீடு கும் இருட்டாக இருந்தது.
மீரா எங்கே?? என தேடினேன்......அவள் அறையில் அவள் இல்லை.....வழக்கம் போல் என்கேயும் மயங்கி விழுந்து கிடக்கிறாளோ என எல்லா இடமும் தேடினேன், எங்கும் மீரா இல்லை....ஒரு வித பயம் எடுத்தது மனதில்.
பக்கத்துவீட்டு சுமதியிடம் கேட்கலாம் என அவர்கள் வீட்டிற்கு சென்றேன், அவர்கள் வீட்டு கதவு மூடப்பட்டு பூட்டு தொங்கியது.
அப்போதுதான், மீட்டிங்கிலிருந்ததால் ஃபோனை silent mode ல் வைத்திருந்தது நினைவிற்கு வர, என் மொபைல் எடுத்துப் பார்த்தேன், 5 missed call....... எல்லாமே மீராவின் மொபைலில் இருந்து......
மீராவின் நம்பருக்கு டயல் செய்தேன்.......சுமதிதான் ஃபோன் எடுத்தாள், மீராவிற்கு பிரசவ வலி ஏற்பட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்திருப்பதாகவும், உடனே வரும்படியாகவும் கூறினாள்.
சே, மொபைல் சைல்ட்ன் மோட் ல வைச்சது எவ்வளவு பெரிய தப்புன்னு நொந்த படி, ஆஸ்பத்திரிக்கு புறப்பட்டேன்.
இவ்வளவு பதற்றதுடன் நான் என் காரை இதுவரை ஓட்டினதில்லை.
ஏன் இந்த பரபரப்பு.......ஏன் எனக்கு இப்படி டென்ஷன் ஆகிறது....விடையளிக்க முடியாத கேள்விகளுடன் ஆஸ்பத்திரியை அடைந்தேன்.
பிரசவத்தில் சிக்கல் இருப்பதால் சிசேரியன் செய்ய வேண்டும் என் என்னிடம் கையெழுத்து வாங்கினார்கள்.
தவிப்புடன் ஆபரேஷன் தியேட்டர் வெளியில் காத்திருந்தேன். நல்லபடியாக ஆண்குழந்தை பிறந்தது மீராவிற்கு.
மீராவும் குழந்தையும் தனி அறைக்கு கொண்டுவரப்பட்டதும், என்னிடம் குழந்தையை கொடுத்துவிட்டு சென்றார் நர்ஸ்.
பிறந்து சில மணிதுளிகளே ஆன குழந்தை என் கையில், ஸ்பரிசத்தில் மனது குளிர்ந்தது.

கையில் குழந்தையை ஏந்தியபடி, பாதி மயங்கிய நிலையிலிருந்த மீராவை நோக்கினேன்.....
கண்களில் நீர் ததும்ப என்னை நன்றியோடு பார்த்து பேச முயன்றாள்....தன் இரு கரங்களையும் கூப்பி
"ந.....ன்....றி....."
என்று கூறி முடிப்பதற்குள் மூச்சு திணற ஆரம்பித்தது மீராவிற்கு,
'டா.....க்...டர்.........ந...ர்....ஸ்......டா...க்...டர்......."
என அலறினேன் உதவிக்காக,
மீராவின் மூச்சு.........மெது......மெதுவாக........??????
[தொடரும்..]
பகுதி - 4