பகுதி -2
பகுதி -3
கணேசன் மாமாவிற்கு மூச்சு திணறல் அதிகமாகி மீண்டும் ICU வில் அனுமதிக்கப்பட்டார். ரவியின் குடும்பம் மிகவும் கலங்கிப்போனது.
ராஜிக்கு மாமாவின் உடல் நிலை மோசமடைவதுப்பார்த்து மிகவும் கவலையாக இருந்தது. மாமா கடைசியாக பேசிக்கொண்டிருந்தது ஞாபகம் வந்தது.
'மாமா எவ்வளவு பெருந்தன்மையா தன் விருப்பத்தைவிட்டுட்டு, எனக்கு மாப்பிள்ளை பார்க்கிறேன் என்று சொனார், இவரைப் போய் எவ்வளவு எதிர்த்து பேசியிருக்கிறேன்'
"சாமி, என் மாமா பாவம், நான் நிறைய சண்டை போட்டிருக்கேன் மாமாகிட்ட, ஆனா மாமாவ எனக்கு ரொம்ப பிடிக்கும்.என் மாமாவுக்கு உயிர் பிச்சை கொடுங்க ப்ளீஸ்" ராஜி கண்ணிரோடு இறைவனிடம் மன்றாடினாள்.
ரவிக்கு உறுதுணையாக அவனது உறவுக்கார நண்பன் வரதன் உடன் இருந்தான். கடவுளின் அருளால் மாமாவின் உடல்நிலை முன்னேற்றமடைந்தது. நாலு தினங்களில் மாமா ரூமிற்கு கொண்டு வரப்பட்டார். மெதுமெதுவாக அவரது உடல் நிலை முற்றிலும் குணமானது. இனி கவலையில்லை , வீட்டிற்கு அழைத்துச் செல்லலாம் என டாக்டர் கூறிவிட, மாமாவை ஆலந்துறைக்கு அழைத்துச் செல்ல சந்தோஷத்துடன் முழுக்குடும்பமும் தயாரனது.
ஆலந்துறைக்கு போவதற்கு முன், ஆஸ்பத்திரியிலிருந்து நேராக ராஜியின் வீட்டிற்கு மதிய உணவிற்கு சென்றுவிட்டு, அதன்பின் ஆலந்துறைக்கு செல்வதாக முடிவெடுத்தனர்.
ரவியின் முகத்தில் ஒரு வித குழப்பத்தையும், சோகத்தையும் கவனிக்க தவறவில்லை வரதன்.
"ஏண்டா மாப்ள, இரண்டு நாளா உன் மூஞ்சி ஒரு தினுசா இருக்கு, என்னாச்சுடா?"
"ஒன்னுமில்லடா வரதா"
"இத நான் நம்பனுமாக்கும், நேரா மேட்டருக்கு வாடே"
ரவி சுருக்கமாக 'பெங்களுர் பைங்கிளி' பற்றியும், ராஜியின் மேல் உருவான 'பனி மலை' பற்றியும் வரதனிடம் கூறினான்.
"அடங்கொக்கா மக்கா! இப்படியாடே ஒரு சொம்பு கஞ்சிக்கு கவுறுவீங்க??? அந்த புள்ள ராஜி அவ தங்கச்சி கூட சேர்ந்துட்டு என்னைய எம்புட்டு பாடுபடுத்துச்சு , அப்போவெல்லாம் எனக்கு சப்போர்ட் பண்ணினேயேடா மச்சான், இப்போ...............இப்படி கவுந்துட்டியேடா"
"அதான்டா எனக்கும் புரியல.................இதுக்கு பேருதான்........"
"அய்ய.......ஹே நிறுத்துடா, சும்மா ஃபீலீங்க்ஸ் வுட்டுகிட்டு, 'இதன் பேரு தான் காதலா? அதன் பேரு தான் காதலோ" அப்படின்னு டயலாக் பேசினேன்னு வை.....மவனே கடிச்சே கொன்னுடுவேன்டா உன்ன"
"டேய் மச்சி, டென்ஷன் ஆகாதேடா.....எப்படி ராஜிகிட்ட என் மனசுல இருக்கிறதை சொல்றதுன்னு ஒரு ஐடியா கொடுடா ப்ளீஸ்"
"என்னய பார்த்தா உனக்கு எப்படி தெரியுது??...........உன் டப்பா காதலே வேணாம்னு நான் கத்திட்டு இருக்கிறேன், நீ என்கிட்டவே ஐடியா கேக்கிறியா??, இங்க பாரு மாப்ளே, எல்லாரும் லவ் பண்ணிட்டு தான் வீட்ல சொல்லி பெர்மிஷன் வாங்குவாங்க கல்யாணம் கட்டிக்க, ஆனா.........உனக்கு மச்சம்டி மாப்ளே, வீட்டு பெர்மிஷனோட பொண்ணு தேடி லவ் பண்ணபோற, சோக்கா ஒரு புள்ளைய பெங்களுர்ல லவ் பண்ணி, என் அண்ணிய ஆலந்துறைக்கு கூட்டிட்டு வர்ர வழிய பாருடே"
"என்னடா நீயும் கால வாருர, சரி நடக்கிறது நட்க்கட்டும், ஃபிரியா விடுடா"
"இப்படி சோக மூஞ்சி வைச்சுட்டு பேசினாலும் வேலைக்கு ஆகாதுடி"
அதன் பின் ரவி வரதனிடம் தன் காதலை பற்றி பேசவில்லை.
கணேசன் மாமாவை டிஸ்சார்ஜ் செய்து காரில் ராஜியின் வீட்டிற்கு அழைத்து வந்தனர்.
ராஜியின் அம்மா மரகதம், ஆரத்தி எடுத்து உயிர் பிழைத்து வந்த தன் அண்ணனை ஆனந்த கண்ணீரோடு வரவேற்றார்.
மாமாவின் குடும்பத்தாரையும், மற்ற உறவினர்களையும் ராஜியும் அவள் குடும்பமும் அன்புடன் உபசரித்தனர்.
ராஜியிடம் தனியாக பேச சந்தர்ப்பமே கிடைக்கவில்லை ரவிக்கு. நேரம் செல்ல செல்ல ரவிக்கு டென்ஷன் அதிகமானது. ராஜியிடம் தன் மனதில் உள்ளதை சொல்லிவிட துடித்தான்.
'வாயாடி தன் புரோபோசலை கிண்டலடித்து ஏதும் பதிலடி கொடுத்து விடுவாளோ' என்ற தயக்கம் கொஞ்சம் கொஞ்சமாக விலக தொடங்கியது ரவிக்கு.
'எத்தனைதான் துடுக்கத்தனமும் குறும்பும் உள்ளவளாக இருந்தாலும், தனக்கு காதலில் சம்மதமில்லை என்றாலும் கூட , நிச்சயம் கிண்டலுடன் மனதை புண்படுத்தும் வண்ணம்' ராஜி பதில் சொல்ல மாட்டாள் என நம்பினான் ரவி.
மதிய உணவும் முடிந்து ரவியின் குடும்பம் ஆலந்துறைக்கு புறப்பட ஆயத்தமானது.
அனைவரும் காரில் ஏறிவிட, ரவியின் கண்கள் ராஜியை தேடின...........வாசலுக்கு வெளியே ராஜியின் அப்பா அம்மா மட்டுமே நின்றிருந்தனர், 'எங்கே போய்ட்டா இவ..............அப்போ.......இப்போ.......வீட்ல அவ மட்டும் தான்............நைசா இப்போ உள்ள போய் பேசி பார்த்துரலாமா' என யோசித்தவனாய்,
தன் செல் ஃபோன் யை ஹாலில் மறந்து வைத்துவிட்டதாக கூறி , ரவி மட்டும் ராஜியின் வீட்டிற்குள் சென்றான்.
வீட்டிற்குள் டேபிளில் உணவு பரிமாறிய பாத்திரங்களை ஒழுங்கு படுத்திக் கொண்டிருந்தாள் ராஜி.
"ராஜி........."
"என்ன சார்! வாங்க.........எதை மறந்து வைச்சுட்டு போய்ட்டீங்க"
"இல்ல..........எதையும் மறக்கல......"
"நிஜம்மாவா????"
"ஹும்...."
"அப்போ........தண்ணி குடிக்க வந்தீங்களா??"
[டைம்மிங் தெரியாம 'லொட லொட'க்கிறாளே!!]
"இல்ல ராஜி..............உன்கிட்ட கொஞ்சம் பேசனும்"
"அப்படியா.??"
"ஆமாம்"
"பேசுங்க..."
"அந்த பெங்களுர் பைங்கிளி............உண்மையில்ல........அப்படி யாரும் இல்ல"
"ஓ.........அதான் தெரியுமே"
"தெரி...யு......மா............எப்படி ..........எப்படி"
"ஹா ஹா.........லவ் பண்ற மூஞ்சிய பார்த்தாலே தெரியாதா எங்களுக்கு"
"ஹே........எப்படி கண்டுபிடிச்ச??"
"அதெல்லாம் டாப் சீக்ரெட்......சரி அத சொல்லத்தான் இப்ப வந்தீங்களா??'
"அது மட்டுமில்ல.............எனக்கு ராஜி ன்னு ஒரு பைங்கிளியை பிடிச்சிறுக்கு"
ராஜியின் பதிலுக்காக ரவி காத்திருக்க, கரெக்ட்டாக அந்த நேரம், ரவியின் அக்கா ருக்மணியின் மகள் அஞ்சலி வீட்டிற்குள் ஓடி வந்தாள்.
"ராஜி அத்த.........நீங்க எனக்கு வாங்கி கொடுத்தா barbie பொம்மைய மறந்துட்டேன், எடுத்துக் கொடுங்க"
பொம்மையை அஞ்சலியிடம் ராஜி கொடுக்க, அஞ்சலி " நீங்க தான் குட் அத்தை, நான் கேட்டதும் Barbie பொம்மை எல்லாம் வாங்கி கொடுத்தீங்க, என் அம்மாகிட்ட தம்பி பாப்பா கேட்டுட்டே இருக்கிறேன், தரவேயில்ல"
"அஞ்சலி செல்லம், டோண்ட் வொர்ரிடா, உனக்கு தம்பி பாப்பா தர அத்தைக்கு டபுள் ஓ.கே..........ரவி மாமாவுக்கு ஒகேவான்னு கேளு"
அஞ்சலிக்கு அர்த்தம் புரியாமல் தன் Barbie பொம்மை கிடைத்த சந்தோஷத்தில் மறுபடியும் காருக்கு ஓடிவிட்டாள்.
அர்த்தம் புரிந்தவனாய் ரவி குறும்புடன் ராஜியை பார்க்க,
"ராஜி.....'
"ஹும்.."
"எனக்கு ட்ரீபிள் ஓகே"
"........"
"என்ன பேச்சே காணோம்........"
"சீ........"
வீட்டிற்கு வெளியிலுருந்து வரதன் ரவியை அழைக்க,
"எல்லாரும் உங்களுக்காகத்தான் வெயிட் பண்றாங்க, கிளம்புங்க"
" என்ன அதுக்குள்ள விரட்டுற, ........இப்போதானே லவ் ஸ்டார்ட்டே ஆகிருக்கு"
"அய்யோ ரவி............கிளம்புங்க, போய் நம்ம கல்யாண வேலையை ஆரம்பிங்க"
"உன்னைவிட்டு எனக்கு.......போகவே மனசில்ல ராஜி"
"ஆஹா.........விட்டா வீட்டோட மாப்பிள்ளையா இப்போவே டேரா போட்டுறீவீங்க போலிருக்கு"
ரவி-ராஜியின் காதல் டூயட்.........கவிதையாக!!!
என்னவளே
இதழ் அசைத்து
முத்தம் தரவேண்டாம்
என்னை நேசிப்பதாய்
சப்தம் செய் போதும்
எந்தன் ஆயுள் நீளும்!!!
என்னவனே
விழி அசைவில்
அன்பை தெரிவித்தேன்
இத்தனை நாளாய்
உணராதது
உன் தவறா?
சப்தம் செய்யாதது
என் தவறா??
என்னவளே
மொழியில்லா காதல்
புரிய வைக்க
என்
இதயம் தொட்டு செல்ல
தயக்கமென்ன
தடுமாற்றமென்ன??
என்னவனே
என் மொழி கேட்காத
உன் இதய்த்தை
என் விழி
நினைக்காத நாட்கள்
இல்லை...
என்னவளே
எந்தன் இதயம்
தொட்ட
உந்தன் விழிகள்
என்னைக் கேட்காமலே
எப்பொழுது
களவாடின...?
என் கோபத்தையும்...
என் இதயத்தையும்...?
நானும் உன்னைத்
திருடிக்கொள்ளவா...?
என்னவனே
என்னைத் திருடிய
திருட்டிற்கு
என் இதயச்சிறையில்
ஆயுள் தண்டனையுடன்
ஆயிரம் முத்த அடிகள்..
சம்மதமா????
என்னவளே
ஆயுள் தண்டனையுடன்
முத்த அடிகளும்
கிடைக்குமெனில்...
தினமும் உன்னைத்
திருடிக்கொள்வேனடி !!!
143 comments:
திவ்யா..:)))
மிக அழகான கவிதையான முடிவு..... :)))
//என்னவனே
என்னைத் திருடிய
திருட்டிற்கு
என் இதயச்சிறையில்
ஆயுள் தண்டனையுடன்
ஆயிரம் முத்த அடிகள்..
சம்மதமா???? //
முத்த அடிகளா..??? :)))
இப்படி இருந்தால் எப்படி
சம்மதிக்காமல் இருக்க முடியுமா..??
:)))
//என்னவளே
ஆயுள் தண்டனையுடன்
முத்த அடிகளும்
கிடைக்குமெனில்...
தினமும் உன்னைத்
திருடிக்கொள்வேனடி !!! //
wowwww... இந்த பதில்
ரொம்ப அழகுங்க....
எப்படிங்க திவ்யா இவ்ளோ அழகா
கவிதை எழுத ஆரம்பிச்சீங்க..?? :)))
மிகவும் ரசித்தேன்...
திவ்யா
யாரோ யாரோட
இதயத்தை திருடினாங்களோ
இல்லையோ
கதை மனசை திருடிருச்சு போங்க...:)))
அழகான கதைக்கு
அற்புதமான கவிதையுடன்
அசத்தலாக முடிவு...!
வாழ்த்துக்கள்...!
//
என்னவளே
ஆயுள் தண்டனையுடன்
முத்த அடிகளும்
கிடைக்குமெனில்...
தினமும் உன்னைத்
திருடிக்கொள்வேனடி !!!
//
வன்முறை அதிகமாக இருக்கிறது...
;)))
ஏங்க திவ்ஸ், மனச இப்படி அலைபாய வச்சுட்டீங்க!! கதை simply superrbb!!
நண்பன் வரதன் அடிக்கும் நையாண்டி பேச்சு ரொம்ப நல்லா இருந்துச்சு! ரசித்து படித்தேன்.
பகுதி 2, 3 ரொம்பவே நல்லா இருந்துச்சு. பகுதி நான்கில் சுவாரஸ்சியம் அதிகமாய் எதிர்பார்த்தேன். சற்று சீக்கிரமாகவே கதை முடிந்ததுபோல இருந்துச்சு.
அப்ப ராஜிக்கும் ரவி மீது காதல் முதலே இருந்துச்சா? எப்போ?
//அஞ்சலி செல்லம், டோண்ட் வொர்ரிடா, உனக்கு தம்பி பாப்பா தர அத்தைக்கு டபுள் ஓ.கே..........ரவி மாமாவுக்கு ஒகேவான்னு கேளு//
ஹாஹாஹா.... இதுக்காகவே உங்களுக்கு பட்டம் கொடுக்கலாம்!!ஹிஹிஹி..
//என்ன பேச்சே காணோம்........"
"சீ........"//
ஹாஹா.. கதையிலே எனக்கு ரொம்ப பிடிச்ச வரிகள்!! ம்ம்.. கலக்குங்க திவ்ஸ்!!
//தன் செல் ஃபோன் யை ஹாலில் மறந்து வைத்துவிட்டதாக கூறி , ரவி மட்டும் ராஜியின் வீட்டிற்குள் சென்றான்.//
என்ன அனுபவமா திவ்ஸ், அடிக்கடி இந்த technique பயன்படுத்துவீங்க போல தெரியுது.. ஹாஹா..
மொத்தத்தில் கதை ஓட்டம் சூப்பர்! நல்லா ஒரு village காதல் கதை பார்த்த மாதிரி தெரியுது. ஆனா இந்த கேள்விக்கு நீங்க பதில் சொல்லியே ஆக வேண்டும்? இந்த படங்களை எப்படிங்க புடிச்சீங்க? கதைக்காக படமா இல்ல படங்களுக்காக கதையானு தெரியுல..அவ்வளவு அழகா இருக்கு. ஆனா.. கதை-படங்கள் இரண்டுமே இந்த 'தமிழ்மாங்கனியின் மனசுல' ஆழமா பதிந்துவிட்டது!! :)))
Another really cute story!!
wonderfully narrated all through!!!
கதை நெடுகிலும் பாவ்னாவின் படங்கள் சூப்பரு என்பதை இந்த தருணத்தில் ஜொள்ளியே ஆக வேண்டும்!! :P
வாழ்த்துக்கள் திவ்யா!! B-)
muzhichirunthu login panathu nalatha poachu :D athukula 7 comments :D tamizhmaangani sona mathiri padamlaam semma apta scenuk suit aguthu..kadisila vara kavithai toppppppp...envaley envanay..soooper..aayiram adi athu april maathathil song from vaali simran remind panuthu :) baaavna padam poatu unga blog azhagu paniteenga.. :) aana ending enamo romba abrupta irntha mathiri iruku..rajiku epdi blore matter theriyum? ethachum part nadula miss panitena?
indha kadhaiku mattum adikkadi scroll bar use panna vendi irukku :)
avalo azhago-azhagu enga bhavana :P
//கதை நெடுகிலும் பாவ்னாவின் படங்கள் சூப்பரு என்பதை இந்த தருணத்தில் ஜொள்ளியே ஆக வேண்டும்!! :P
//
idhai naan pala murai vazhimozhigiren :)
//உனக்கு தம்பி பாப்பா தர அத்தைக்கு டபுள் ஓ.கே..........ரவி மாமாவுக்கு ஒகேவான்னு கேளு//
whistle sound blogla keka matenguthunga :) ilati record pani potruven
saga gapla tenth place thatiikitu poiteeray
//
baaavna padam poatu unga blog azhagu paniteenga.. :)
//
saga, ungalukku lucka paarunga.. bhavana padam paathutu thoonga poringa.. sweet dreams :)
//
rajiku epdi blore matter theriyum? ethachum part nadula miss panitena?
//
konjam text-ayum padinga saga :)
puriyum ;)
alandurai...
pazhaya CBE life nyabaga paduthirchu... ennoda friend veedu anga thaan irukku...
ella semesterukkum odiruvom.
padikkirongra perla tent kottaila padam paatha kaalam adhellam...
kadhai nalla irukku.. aana unga standard-ku konjam kammiyonu thonudhu..
kavidhai super...
neraya vela irukku.. ippo appitu !!
:))
ஜாலியான நடை..செம கலக்கல்ஸ் :))
//கதை நெடுகிலும் பாவ்னாவின் படங்கள் சூப்பரு என்பதை இந்த தருணத்தில் ஜொள்ளியே ஆக வேண்டும்!! :P//
கன்னாபின்னாவென கண்மூடித்தனமாக வழிமொழிகிறேன்!! :)))
yekkov,
emmaadi , oru vazhiya unga thodarai mudichuteengla Divyakka:)
ungalukunnu bavana photokku pose koduthapala iruku, engey irunthu kedaikkuthu ipdi apt aa fotos??
kadaisy kavithai thaan toppu...nice effort:)
Dialogues, asusuall 'divya'style, but inum konjam romance chethirukalamo :)
natpodu
Nivisha
\\ Thamizhmaagani said...
ஏங்க திவ்ஸ், மனச இப்படி அலைபாய வச்சுட்டீங்க!! கதை simply superrbb!!\\
alo tamilakka, unga commentu....divyakka posta vida neelama irukum polirukungaakka,-:)
திவ்யா :)
கவிதைகளில் முடிவு அழகு!
//என்னவனே
என்னைத் திருடிய
திருட்டிற்கு
என் இதயச்சிறையில்
ஆயுள் தண்டனையுடன்
ஆயிரம் முத்த அடிகள்..
சம்மதமா????
என்னவளே
ஆயுள் தண்டனையுடன்
முத்த அடிகளும்
கிடைக்குமெனில்...
தினமும் உன்னைத்
திருடிக்கொள்வேனடி !!!
//
அட!
இதைவிட வேறென்ன வேண்டும் உங்கள் கவித்திறனை காட்ட!! இன்னும் முயலுங்கள் திவ்யா.
//Dialogues, asusuall 'divya'style, but inum konjam romance chethirukalamo :)
//
Divya... Epdi Romantic'a ezhuthuranthungrathula ethenum doubt iruntha Natpu kitta kettu therinchikoonga!
:))))
ம்ம்ம்.. கவிதைதான் கொஞ்சம் புரியல... ரொம்ப மண்டாயிட்டேன்ல.. :(((
கதை டையலாக்ஸ் அருமை... முடிவு முந்தைய கதைய லைட்டா ஞாபக படுத்துது...
A feel good story.. :))))
//
//கதை நெடுகிலும் பாவ்னாவின் படங்கள் சூப்பரு என்பதை இந்த தருணத்தில் ஜொள்ளியே ஆக வேண்டும்!! :P//
கன்னாபின்னாவென கண்மூடித்தனமாக வழிமொழிகிறேன்!! :)))//
இதுக்கு நான் மட்டும் விடிவிலக்கா என்ன??? வழிமொழியாமலேயே புரிந்து கொள்ள வேண்டிய விசயம்... :)))
என்ன திவ்யா, நான் கன்னித்தீவு மாதிரி இருக்குனு விளையாட்டுக்குதான் சொன்னேன். அதுக்காக இப்படியா பொசுக்குனு முடிச்சிடுறது!!!???
என்னமோ முடிவு இன்னும் கொஞ்சம் smoothஆக இருந்திருக்கலாம் என தோனுது!
திவ்யா சூப்பரு!!!!!!
கதையின் முடிவும் அழகா இருக்கு!!!!
கவிதை வரிகள் அனைத்தும் ரொம்ப சூப்பர்!!!!
தனித்தனியாக பிரித்து சொன்னால் வரிகள் கோவிச்சுக்கும்
so, எல்லா வரிகளும் மிக அழகு!!!!!!
தொடருங்கள்!!!
வாழ்த்துகள்!!!!
//என்னவளே
ஆயுள் தண்டனையுடன்
முத்த அடிகளும்
கிடைக்குமெனில்...
தினமும் உன்னைத்
திருடிக்கொள்வேனடி !!!//
kalakal varigal and the way raji expressed her love is very nice and cute . kavithai is very nice last para is very nice .. Great work ..
As usual foto’s are very nice .
காதல் கதையில அடிச்சு ஆடுறிங்க திவ்யா ;))
வசனம் எல்லாம் சூப்பரு ;)
ஒரு கஞ்சி, ஒரு பர்பி இந்த அயிட்டத்தை காட்டியே எங்க ரவி மாமாவை மடக்கிட்டிங்க..;)
//alo tamilakka, unga commentu....divyakka posta vida neelama irukum polirukungaakka,-:)//
ஹாஹா.. பாராட்டுவதில் பஞ்சமே வைக்க கூடாது நிவி!! இது என்ன.. காசா பணமா.. அப்படியே கொட்டிட வேண்டியது தான்!!
இந்த முடிவு ரொம்ப சூப்பர். இதை தான் எதிர்பார்த்தேன். மூஞ்சிய பாத்தே காதலிக்கறத கண்டுபிடிக்கிறீங்களா? :O
கொஞ்சம் எங்களுக்கும் கத்துகுடுத்தா ஈசியா இருக்கும்ல :D
//என்னவளே
ஆயுள் தண்டனையுடன்
முத்த அடிகளும்
கிடைக்குமெனில்...
தினமும் உன்னைத்
திருடிக்கொள்வேனடி !!! //
இது அழகு. ரொம்ப ரசித்தேன்
Photos vachi thanne kathai ezuthininga. Any way very good.
Cheers
Christo
\\
நவீன் ப்ரகாஷ் said...
திவ்யா..:)))
மிக அழகான கவிதையான முடிவு..... :)))\\
வாங்க நவீன்,
கவிஞரே கவிதையான முடிவை பாராட்டியது சந்தோஷம் தந்தது,
மிக்க நன்றி !!
\\ நவீன் ப்ரகாஷ் said...
//என்னவனே
என்னைத் திருடிய
திருட்டிற்கு
என் இதயச்சிறையில்
ஆயுள் தண்டனையுடன்
ஆயிரம் முத்த அடிகள்..
சம்மதமா???? //
முத்த அடிகளா..??? :)))
இப்படி இருந்தால் எப்படி
சம்மதிக்காமல் இருக்க முடியுமா..??
:)))\\
//என்னவளே
ஆயுள் தண்டனையுடன்
முத்த அடிகளும்
கிடைக்குமெனில்...
தினமும் உன்னைத்
திருடிக்கொள்வேனடி !!! //
wowwww... இந்த பதில்
ரொம்ப அழகுங்க....
எப்படிங்க திவ்யா இவ்ளோ அழகா
கவிதை எழுத ஆரம்பிச்சீங்க..?? :)))
மிகவும் ரசித்தேன்...\\
கவிதை எழுத ஆரம்பித்தது , உங்களை மாதிரி கவிஞர்களில் ஆசிதாங்க, ........என் சிறு முயற்சியையும் மனதார பாராட்டி ஊக்கப்படுத்தியதற்கு நன்றி நவீன்!!
\\ நவீன் ப்ரகாஷ் said...
திவ்யா
யாரோ யாரோட
இதயத்தை திருடினாங்களோ
இல்லையோ
கதை மனசை திருடிருச்சு போங்க...:)))\\
மனசை எல்லாம் அவ்வளவு எளிதில் திருடு போக விடக் கூடாதுங்க, கவணம்!!!
\\ நிமல்/NiMaL said...
அழகான கதைக்கு
அற்புதமான கவிதையுடன்
அசத்தலாக முடிவு...!
வாழ்த்துக்கள்...!\\
அழகான உங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி நிமல்!!
\\ நிமல்/NiMaL said...
//
என்னவளே
ஆயுள் தண்டனையுடன்
முத்த அடிகளும்
கிடைக்குமெனில்...
தினமும் உன்னைத்
திருடிக்கொள்வேனடி !!!
//
வன்முறை அதிகமாக இருக்கிறது...
;)))\
காதலில் வன்முறை சகஜமப்பா!!!
\\ Thamizhmaagani said...
ஏங்க திவ்ஸ், மனச இப்படி அலைபாய வச்சுட்டீங்க!! கதை simply superrbb!!\\
அலைபாயும் உங்கள் ரசிப்பிற்கு, நன்றி தமிழ்!!
\\நண்பன் வரதன் அடிக்கும் நையாண்டி பேச்சு ரொம்ப நல்லா இருந்துச்சு! ரசித்து படித்தேன்.\\
வரதன் அடிக்கும் நையாண்டி, முதல் முயற்சி......அந்த பேச்சு தமிழ் முயன்று பார்த்தேன், நீங்க குறிப்பிட்டு பாராட்டியது , ஊக்கமளித்தது தமிழ், மிக்க நன்றி!!
\\\பகுதி 2, 3 ரொம்பவே நல்லா இருந்துச்சு. பகுதி நான்கில் சுவாரஸ்சியம் அதிகமாய் எதிர்பார்த்தேன். சற்று சீக்கிரமாகவே கதை முடிந்ததுபோல இருந்துச்சு.\\
இதுக்கும் மேல் கதையில் இழுவை போட வேண்டாமேன்னு சுபமாக முடிச்சாசு தமிழ்!!
\\அப்ப ராஜிக்கும் ரவி மீது காதல் முதலே இருந்துச்சா? எப்போ?\\
எப்போ.......எங்கே....எப்படி ...
அப்படி கேள்வியெல்லாம் 'காதலில்' கேட்ககூடாது தமிழு.......புரிந்ததோ?????
//அஞ்சலி செல்லம், டோண்ட் வொர்ரிடா, உனக்கு தம்பி பாப்பா தர அத்தைக்கு டபுள் ஓ.கே..........ரவி மாமாவுக்கு ஒகேவான்னு கேளு//
ஹாஹாஹா.... இதுக்காகவே உங்களுக்கு பட்டம் கொடுக்கலாம்!!ஹிஹிஹி..\\
தமிழ் நீங்க 'பட்டம்' கொடுக்கிறதுலேயே இருக்கிறீங்க, உங்கள் குறும்பான ரசிப்பு அழகு!!
//என்ன பேச்சே காணோம்........"
"சீ........"//
ஹாஹா.. கதையிலே எனக்கு ரொம்ப பிடிச்ச வரிகள்!! ம்ம்.. கலக்குங்க திவ்ஸ்!!\\
ரொம்ப ஒன்றிபோய்ட்டீங்களா தமிழ்......இந்த டலாக்கில்??
//தன் செல் ஃபோன் யை ஹாலில் மறந்து வைத்துவிட்டதாக கூறி , ரவி மட்டும் ராஜியின் வீட்டிற்குள் சென்றான்.//
என்ன அனுபவமா திவ்ஸ், அடிக்கடி இந்த technique பயன்படுத்துவீங்க போல தெரியுது.. ஹாஹா..\\
இப்படி பப்ளிக் ஆக டெக்னிகெல்லாம் போட்டு ஒடைக்க கூடாதுமா.......தமிழ்!!
\\மொத்தத்தில் கதை ஓட்டம் சூப்பர்! நல்லா ஒரு village காதல் கதை பார்த்த மாதிரி தெரியுது. ஆனா இந்த கேள்விக்கு நீங்க பதில் சொல்லியே ஆக வேண்டும்? இந்த படங்களை எப்படிங்க புடிச்சீங்க? கதைக்காக படமா இல்ல படங்களுக்காக கதையானு தெரியுல..அவ்வளவு அழகா இருக்கு. ஆனா.. கதை-படங்கள் இரண்டுமே இந்த 'தமிழ்மாங்கனியின் மனசுல' ஆழமா பதிந்துவிட்டது!! :)))\\
தமிழ்மாங்கனியின் மனசுல படம்-கதை ஆழமாக பதிந்தது அறிந்து மகிழ்ந்தேன்!!
தமிழ், நிஜம்மா கதை எழுதிவிட்டு தான், எந்த பொண்ணு படம் போடலாம் என்றே யோசித்தேன், பாவனா படம் இதுவரை என் பதிவுகளில் போட்டதில்லை, ஸோ.....பாவனா படங்களைத் தேடினேன்......மிக பொறுத்தமாக அமைந்துவிட்டது, விளக்கம் போதுமா மேடம்!!
\\ CVR said...
Another really cute story!!
wonderfully narrated all through!!!
கதை நெடுகிலும் பாவ்னாவின் படங்கள் சூப்பரு என்பதை இந்த தருணத்தில் ஜொள்ளியே ஆக வேண்டும்!! :P
வாழ்த்துக்கள் திவ்யா!! B-)\\
வாங்க சிவிஆர்,
பாவனாவின் படங்களுடன் கதையையும் ரசித்து பாராட்டியதற்கு மிக்க நன்றி!!
\\ gils said...
muzhichirunthu login panathu nalatha poachu :D athukula 7 comments :D tamizhmaangani sona mathiri padamlaam semma apta scenuk suit aguthu..kadisila vara kavithai toppppppp...envaley envanay..soooper..\\
லேட் நைட் விழித்திருந்து பதிவினை படித்து பின்னூட்டமிட்டு பாராட்டியதற்கு மிக்க நன்றி கில்ஸ்!
\aayiram adi athu april maathathil song from vaali simran remind panuthu :) baaavna padam poatu unga blog azhagu paniteenga.. :) \\
கதையை படிச்சவுடனே உங்களுக்கு ஏதாவது ஒரு திரைப்படம் தான் ஒப்பிட்டு பார்க்க தோனுமோ??
\aana ending enamo romba abrupta irntha mathiri iruku..rajiku epdi blore matter theriyum? ethachum part nadula miss panitena?\\\\
நடுவில் எந்த பகுதிகளையும் மிஸ் பண்ணல கில்ஸ்.......படங்களை பார்த்து ரசித்த ரசிப்பில், கதையை படிக்காம விட்டுடீங்க, அவ்வளவே!!
\\ Arunkumar said...
indha kadhaiku mattum adikkadi scroll bar use panna vendi irukku :)
avalo azhago-azhagu enga bhavana :P\\
வாங்க அருண்குமார்,
நன்றி:)
\\ gils said...
//உனக்கு தம்பி பாப்பா தர அத்தைக்கு டபுள் ஓ.கே..........ரவி மாமாவுக்கு ஒகேவான்னு கேளு//
whistle sound blogla keka matenguthunga :) ilati record pani potruven\\
ஹா ஹா!!!!
உற்ச்சாகமான பின்னூட்டத்திற்கு நன்றி கில்ஸ்!!
\\ Arunkumar said...
//கதை நெடுகிலும் பாவ்னாவின் படங்கள் சூப்பரு என்பதை இந்த தருணத்தில் ஜொள்ளியே ஆக வேண்டும்!! :P
//
idhai naan pala murai vazhimozhigiren :)\
:)
\\ Arunkumar said...
alandurai...
pazhaya CBE life nyabaga paduthirchu... ennoda friend veedu anga thaan irukku...
ella semesterukkum odiruvom.
padikkirongra perla tent kottaila padam paatha kaalam adhellam...\\
மலரும் நினைவுகளா???
ஆலந்துறை ஒரு அழகான ஊர்!!
[அந்த தியேட்டர் பார்த்தா டெண்ட் கொட்டாய் மாதிரியா இருக்கு உங்களுக்கு......இதெல்லாம் ரொம்ப ஓவரு சீன்னு!!]
\ Arunkumar said...
kadhai nalla irukku.. aana unga standard-ku konjam kammiyonu thonudhu..
kavidhai super...\\
ஹலோ அருண்,
ஸ்டாண்டர்ட் ன்னு சொல்லி ஏத்தி விட்டு வேடிக்கை பார்க்காதீங்க.....அப்படியெல்லாம் எந்த ஒரு நிலையையும் நான் இன்னும் அடையவில்லை!!
கவிதையை பாராட்டியதற்கு மிக்க நன்றி அருண்!!
\ Arunkumar said...
neraya vela irukku.. ippo appitu !!\
அதிக வேலைகளுக்கு நடுவிலும் , பின்னூட்டமிட்டு ஊக்கப்படுத்தியதற்கு நன்றி அருண்!!
\\ கப்பி பய said...
:))
ஜாலியான நடை..செம கலக்கல்ஸ் :))
//கதை நெடுகிலும் பாவ்னாவின் படங்கள் சூப்பரு என்பதை இந்த தருணத்தில் ஜொள்ளியே ஆக வேண்டும்!! :P//
கன்னாபின்னாவென கண்மூடித்தனமாக வழிமொழிகிறேன்!! :)))\\
வருகைக்கும், பின்னூட்ட ஊக்கத்திற்கும் நன்றி கப்பி!!
\\ நிவிஷா..... said...
yekkov,
emmaadi , oru vazhiya unga thodarai mudichuteengla Divyakka:)
ungalukunnu bavana photokku pose koduthapala iruku, engey irunthu kedaikkuthu ipdi apt aa fotos??
kadaisy kavithai thaan toppu...nice effort:)
Dialogues, asusuall 'divya'style, but inum konjam romance chethirukalamo :)
natpodu
Nivisha\\
வாங்க நிவிஷா,
இதுக்கு மேல் ரோமன்ஸ் சேர்க்கனுமா??? ஹா ஹா....அடுத்த கதையில் முயற்சிக்கிறேன் நிவிஷா.
படங்களையும் பாராட்டியதற்கு நன்றி நிவிஷா!
\\ நிவிஷா..... said...
\\ Thamizhmaagani said...
ஏங்க திவ்ஸ், மனச இப்படி அலைபாய வச்சுட்டீங்க!! கதை simply superrbb!!\\
alo tamilakka, unga commentu....divyakka posta vida neelama irukum polirukungaakka,-:)\
விரிவாக ஒருத்தர் பின்னூட்ட விமர்சனம் பண்ணின உங்களுக்கு ஏங்க காதுல புகை......??
\ sathish said...
திவ்யா :)
கவிதைகளில் முடிவு அழகு!\\
கவிஞரின் பாராட்டிற்கு நன்றி!!
\\ sathish said...
//என்னவனே
என்னைத் திருடிய
திருட்டிற்கு
என் இதயச்சிறையில்
ஆயுள் தண்டனையுடன்
ஆயிரம் முத்த அடிகள்..
சம்மதமா????
என்னவளே
ஆயுள் தண்டனையுடன்
முத்த அடிகளும்
கிடைக்குமெனில்...
தினமும் உன்னைத்
திருடிக்கொள்வேனடி !!!
//
அட!
இதைவிட வேறென்ன வேண்டும் உங்கள் கவித்திறனை காட்ட!! இன்னும் முயலுங்கள் திவ்யா.\\
கவிதை முயற்சியை பாராட்டியதற்கு நன்றி சதீஷ்,
நிச்சயம் மேலும் எழுதிட முயற்சிக்கிறேன்!
\\ sathish said...
//Dialogues, asusuall 'divya'style, but inum konjam romance chethirukalamo :)
//
Divya... Epdi Romantic'a ezhuthuranthungrathula ethenum doubt iruntha Natpu kitta kettu therinchikoonga!\\
அப்படியா சதீஷ்.....நிவிஷாகிட்ட டியூஷன் எடுத்துக்கலாமோ??
\\ ஜி said...
:))))
ம்ம்ம்.. கவிதைதான் கொஞ்சம் புரியல... ரொம்ப மண்டாயிட்டேன்ல.. :(((
கதை டையலாக்ஸ் அருமை... முடிவு முந்தைய கதைய லைட்டா ஞாபக படுத்துது...
A feel good story.. :))))\\
கவிதை புரியும் அளவுக்கு 'வயதில்லையா?' .....இல்ல 'வயசாகிடுச்சா?'
பாராட்டிற்கு நன்றி ஜி!!
\ ஜி said...
//
//கதை நெடுகிலும் பாவ்னாவின் படங்கள் சூப்பரு என்பதை இந்த தருணத்தில் ஜொள்ளியே ஆக வேண்டும்!! :P//
கன்னாபின்னாவென கண்மூடித்தனமாக வழிமொழிகிறேன்!! :)))//
இதுக்கு நான் மட்டும் விடிவிலக்கா என்ன??? வழிமொழியாமலேயே புரிந்து கொள்ள வேண்டிய விசயம்... :)))\\
புரிந்தது!
திவ்யா:))
கவிதையுடன் தொடரை சுபமாக முடித்துவிட்டீர்கள், தொடர்ந்து அத்தனை பகுதிகளிலும் பொருத்தமான படங்கள் கதையின் சுவாரஸ்யத்தை அதிகரித்தது,
முடிவு பகுதியின் ,அழகான 'காதல் கவிதை அல்டிமேட்!!!
அதிலும் குறிப்பாக இவ்வரிகள்.....
\\என்னவளே
எந்தன் இதயம்
தொட்ட
உந்தன் விழிகள்
என்னைக் கேட்காமலே
எப்பொழுது
களவாடின...?
என் கோபத்தையும்...
என் இதயத்தையும்...?
நானும் உன்னைத்
திருடிக்கொள்ளவா...?\\
இவ்வரிகளுக்கு அளித்திருக்கும் பின்வரும் வரிகளின் பதிலில் கவர்ச்சியும், குறும்பும் கலந்து அசத்துகிறது!!!
வாழ்த்துக்கள் திவ்யா:))
கவிதைகள் அழகு. வாழ்த்துக்கள் ஊர்ஸ்..:)
\\ Praveena Jennifer Jacob said...
திவ்யா:))
கவிதையுடன் தொடரை சுபமாக முடித்துவிட்டீர்கள், தொடர்ந்து அத்தனை பகுதிகளிலும் பொருத்தமான படங்கள் கதையின் சுவாரஸ்யத்தை அதிகரித்தது,
முடிவு பகுதியின் ,அழகான 'காதல் கவிதை அல்டிமேட்!!!
அதிலும் குறிப்பாக இவ்வரிகள்.....
\\என்னவளே
எந்தன் இதயம்
தொட்ட
உந்தன் விழிகள்
என்னைக் கேட்காமலே
எப்பொழுது
களவாடின...?
என் கோபத்தையும்...
என் இதயத்தையும்...?
நானும் உன்னைத்
திருடிக்கொள்ளவா...?\\
இவ்வரிகளுக்கு அளித்திருக்கும் பின்வரும் வரிகளின் பதிலில் கவர்ச்சியும், குறும்பும் கலந்து அசத்துகிறது!!!
வாழ்த்துக்கள் திவ்யா:))\\
வாங்க ப்ரவீனா,
விரிவான பின்னூட்டத்திற்கும் வாழ்த்துக்களுக்கும் மிக்க நன்றி!!
\\ SanJai said...
கவிதைகள் அழகு. வாழ்த்துக்கள் ஊர்ஸ்..:)\\
வாழ்த்துக்களுக்கு நன்றிங்க ஊர்ஸ்!!!
kadhai nalla thaan irukku.. :)
happy ending :) and kavidhai was nice....
: )
உங்க கதைய படிக்கலைங்க அதுக்கு ஒரு excuse கேட்டுக்கிறேன்...
//என்னவளே
இதழ் அசைத்து
முத்தம் தரவேண்டாம்
என்னை நேசிப்பதாய்
சப்தம் செய் போதும்
எந்தன் ஆயுள் நீளும்!!!
//
அப்பவும் இதழ் அசையுமே???
//என்னவனே
விழி அசைவில்
அன்பை தெரிவித்தேன்//
கண்'ல தூசி தான் விழுந்துட்டது'னு நினைச்சி இருபாங்களோ என்னவோ...
ஹி ஹி ஹி
//சப்தம் செய்யாதது
என் தவறா??//
ஏன் அவ்வளவு வேகமா வண்டி ஓட்டிட்டு போவாங்களா?
//என்னவளே
மொழியில்லா காதல்
புரிய வைக்க
என்
இதயம் தொட்டு செல்ல
தயக்கமென்ன
தடுமாற்றமென்ன??
//
எல்லாம் starting trouble தான்..:)
//என்னவனே
என் மொழி கேட்காத
உன் இதய்த்தை
என் விழி
நினைக்காத நாட்கள்
இல்லை...
//
டாப்பு :)
//ஆயுள் தண்டனையுடன்
முத்த அடிகளும்
கிடைக்குமெனில்...
தினமும் உன்னைத்
திருடிக்கொள்வேனடி !!!//
ஒவர் தண்டனை உடம்புக்கு ஆகாது..சொல்லிப்புட்டேன்....:)
//கதையை படிச்சவுடனே உங்களுக்கு ஏதாவது ஒரு திரைப்படம் தான் ஒப்பிட்டு பார்க்க தோனுமோ??//
hehee...edhirneechal sowkar janaki rangeku ileenga..oh! ithulayum cinema eggjample vanthiruchay :)
//
//உனக்கு தம்பி பாப்பா தர அத்தைக்கு டபுள் ஓ.கே..........ரவி மாமாவுக்கு ஒகேவான்னு கேளு//
whistle sound blogla keka matenguthunga :) ilati record pani potruven
//
ரிப்பீட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்டேய்
பாவனா படம் எல்லாம் சூப்பர்ப்
அடடே கதை முடிஞ்சிடுச்சா...
அப்ப வேற பாவனா படம் இல்லியா:))))
//கதை நெடுகிலும் பாவ்னாவின் படங்கள் சூப்பரு என்பதை இந்த தருணத்தில் ஜொள்ளியே ஆக வேண்டும்!! :P//
கன்னாபின்னாவென கண்மூடித்தனமாக வழிமொழிகிறேன்!! :)))
நானும் நானும்!
வன்முறை அதிகமாக இருக்கிறது...
;)))\
//காதலில் வன்முறை சகஜமப்பா!!!//
கொன்னுராதிங்கப்பா...
வர வர உங்க ரொமான்ஸ் ரொம்ப நல்லாயிருக்கு எப்பிடி திவ்யா ...கலக்குறிங்க...
நிஜமாகவே மறக்க நினை;க்கும் விடயங்களை தொடர்முழுவதும் ஞாபகப்படுத்தி இருந்தீர்கள் காதல் அழகான விடயம் என்றால் வெகு இயல்பாக நீங்கள் எழுதும் வரிகள் மனதிற்கு பிடித்தவளின் நளினம் போல அழகு... அந்த அத்தை மகள்களுக்கே உரிய அழகு பொங்கி நிறைகிறது...வரிகளில்...
(ஏதாவது உளறிட்டமோ...)
\\ Dreamzz said...
kadhai nalla thaan irukku.. :)
happy ending :) and kavidhai was nice....\\
நன்றி ட்ரீம்ஸ்.
\\ R2K said...
: )
\\
நன்றி R2K.
\\\ My days(Gops) said...
உங்க கதைய படிக்கலைங்க அதுக்கு ஒரு excuse கேட்டுக்கிறேன்...\\
பாவனா படம் பார்க்கத்தான் பதிவு பக்கம் வரீங்கன்னு தெரியாதா???
\\ My days(Gops) said...
//என்னவளே
இதழ் அசைத்து
முத்தம் தரவேண்டாம்
என்னை நேசிப்பதாய்
சப்தம் செய் போதும்
எந்தன் ஆயுள் நீளும்!!!
//
அப்பவும் இதழ் அசையுமே???\\
ஹலோ இப்படி குறுக்கு கேள்வி எல்லாம் கேட்க கூடாது, எம்புட்டு கஷ்டபட்டு கவிதை எழுத முயற்சி பண்ணியிருக்கிறேன்.......
\\ My days(Gops) said...
//என்னவளே
மொழியில்லா காதல்
புரிய வைக்க
என்
இதயம் தொட்டு செல்ல
தயக்கமென்ன
தடுமாற்றமென்ன??
//
எல்லாம் starting trouble தான்..:)\
அனுபவமோ??
\\ My days(Gops) said...
//என்னவனே
என் மொழி கேட்காத
உன் இதய்த்தை
என் விழி
நினைக்காத நாட்கள்
இல்லை...
//
டாப்பு :)\\
நன்றி....நன்றி!!
\\ My days(Gops) said...
//ஆயுள் தண்டனையுடன்
முத்த அடிகளும்
கிடைக்குமெனில்...
தினமும் உன்னைத்
திருடிக்கொள்வேனடி !!!//
ஒவர் தண்டனை உடம்புக்கு ஆகாது..சொல்லிப்புட்டேன்....:)\\
ஒவரு தண்டனை 'காதலு'க்கு அழகு......புரிந்ததோ !!
\\ gils said...
//கதையை படிச்சவுடனே உங்களுக்கு ஏதாவது ஒரு திரைப்படம் தான் ஒப்பிட்டு பார்க்க தோனுமோ??//
hehee...edhirneechal sowkar janaki rangeku ileenga..oh! ithulayum cinema eggjample vanthiruchay :)\\
ஹா ஹா,
B/W படம் கம்பேரிஸனுக்கு போய்ட்டீங்க கில்ஸ்!!
டக்கு டக்குன்னு இப்படி உதாரணம் சொல்றதுக்காக, உங்களுக்கு ஒரு அவார்ட் கொடுக்கலாம்!!
\\ மங்களூர் சிவா said...
//
//உனக்கு தம்பி பாப்பா தர அத்தைக்கு டபுள் ஓ.கே..........ரவி மாமாவுக்கு ஒகேவான்னு கேளு//
whistle sound blogla keka matenguthunga :) ilati record pani potruven
//
ரிப்பீட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்டேய்\\
நன்றி மங்களூர் சிவா!
\\ மங்களூர் சிவா said...
பாவனா படம் எல்லாம் சூப்பர்ப்\\
:))
\\ தமிழன்... said...
அடடே கதை முடிஞ்சிடுச்சா...
அப்ப வேற பாவனா படம் இல்லியா:))))\\
ஹா ஹா, தமிழன் 'கூகிள்' ல தேடினீங்கன்னா.......இன்னும் நிறைய பாவனா படம் கிடைக்கும்!!
\\ தமிழன்... said...
//கதை நெடுகிலும் பாவ்னாவின் படங்கள் சூப்பரு என்பதை இந்த தருணத்தில் ஜொள்ளியே ஆக வேண்டும்!! :P//
கன்னாபின்னாவென கண்மூடித்தனமாக வழிமொழிகிறேன்!! :)))
நானும் நானும்!\
:)))
\\ தமிழன்... said...
வன்முறை அதிகமாக இருக்கிறது...
;)))\
//காதலில் வன்முறை சகஜமப்பா!!!//
கொன்னுராதிங்கப்பா...\\
சரிங்கப்பா:)))
\\ தமிழன்... said...
வர வர உங்க ரொமான்ஸ் ரொம்ப நல்லாயிருக்கு எப்பிடி திவ்யா ...கலக்குறிங்க...\\
அப்படீங்களா....??
குறிப்பிட்ட காரணம் எதுவும் இல்லீங்க தமிழன்.
நன்றி!!
\\ தமிழன்... said...
நிஜமாகவே மறக்க நினை;க்கும் விடயங்களை தொடர்முழுவதும் ஞாபகப்படுத்தி இருந்தீர்கள் காதல் அழகான விடயம் என்றால் வெகு இயல்பாக நீங்கள் எழுதும் வரிகள் மனதிற்கு பிடித்தவளின் நளினம் போல அழகு... அந்த அத்தை மகள்களுக்கே உரிய அழகு பொங்கி நிறைகிறது...வரிகளில்...
(ஏதாவது உளறிட்டமோ...)\\
ஏதாவது இல்லீங்க.......எல்லாத்தையும் உளறிட்டீங்க,
யாரு அந்த 'அத்தை மகள்???
வாழ்த்துக்கள் தமிழன்!!
//பாவனா படம் பார்க்கத்தான் பதிவு பக்கம் வரீங்கன்னு தெரியாதா???
//
rotfl..
chancey ila... enakku bhavana va pudikadhey :)
//எம்புட்டு கஷ்டபட்டு கவிதை எழுத முயற்சி பண்ணியிருக்கிறேன்///
adada, ungala discourage pannalanga... :)...
ippadi sonnah naan kelvi ketkaaadha padi melum nalla eludhuveeeenganu oru nalla ennam thaaango :D
//அனுபவமோ??//
unmaiah sonnen....
batcha dadadataaaaan..
(idhu BGM )
//ஒவரு தண்டனை 'காதலு'க்கு அழகு......புரிந்ததோ //
rotfl..... adhelam enakku theriaaadhu nga......
btw, eppadi irukeeeenga?
saaaaptacha?
\\ My days(Gops) said...
//பாவனா படம் பார்க்கத்தான் பதிவு பக்கம் வரீங்கன்னு தெரியாதா???
//
rotfl..
chancey ila... enakku bhavana va pudikadhey :)\\
azhagai rasika ariyatha........theriyatha.....oru jeevan undo?????
100 aapaaaaada indha varusathuku mudhal century inga thaaaan... so treat seeekiram thaaango :)
\\ My days(Gops) said...
saaaaptacha?
\\
hey Gops.......ithu orkut illa,
mera comments page,
ingayuma unga trade mark 'sapitacha'question??
100 miss aaagi , but still 101 moi vachikiren.... edhukunu theriumaah? mundhanethu oru invitation mail anupuneeenga la adhuku thaaaan h e he hehe he...
eppadinga ukkaandhu yosipeeengalo? :P
\\ My days(Gops) said...
100 aapaaaaada indha varusathuku mudhal century inga thaaaan... so treat seeekiram thaaango :)\\
ungaluku ilatha treat aa gops.....koduthita pochu:))
century potathuku oru spl thanks!!
//azhagai rasika ariyatha........theriyatha.....oru jeevan undo?????//
azhagaai irukiradhey rasikiradhuku thaaaaney ... adhelem nallavey naaanga rasipom :P
aaanah bhavana .mmmmmmmmmm ok ok :)
//century potathuku oru spl thanks!!//
ada century potadhu neeenga..... jst a miss la poitu :P
\\ My days(Gops) said...
100 miss aaagi , but still 101 moi vachikiren.... edhukunu theriumaah? mundhanethu oru invitation mail anupuneeenga la adhuku thaaaan h e he hehe he...
eppadinga ukkaandhu yosipeeengalo? :P\\
nadanthutey than yosichein gops!
101 moi, enoda arupathavathu kalyanathuku eluthi piravi payan adainthu vittai maanidaney:))
//ithu orkut illa,
mera comments page, //
oops sorry'nga egooosme :P
//ingayuma unga trade mark 'sapitacha'question??//
manufactured defect nga..... so
unga DP la irukira paaapa hair style maaadhiri looosla vuttudunga :D
\\ My days(Gops) said...
//azhagai rasika ariyatha........theriyatha.....oru jeevan undo?????//
azhagaai irukiradhey rasikiradhuku thaaaaney ... adhelem nallavey naaanga rasipom :P
aaanah bhavana .mmmmmmmmmm ok ok :)\\
halo.....ennamo, bhavana vai pudichirukunu sonna avanga appa avalai ungaluku kati koduthudura mathry overu bhandha panreenga,
bhavana nu yein apdi oru mmmmm iluvai??
pudikumna , velipadaiya solalam, pudikalana.....athai sola koodathu,avasiyamum illai,
purinjatho???
periyavanga sonna purinjukanum, seriya!!
\\ My days(Gops) said...
//ithu orkut illa,
mera comments page, //
oops sorry'nga egooosme :P
//ingayuma unga trade mark 'sapitacha'question??//
manufactured defect nga..... so
unga DP la irukira paaapa hair style maaadhiri looosla vuttudunga :D\\
defect seri panidalam......:))
//nadanthutey than yosichein gops!//
gud gud, appoh remba dhoooram nadapeeenga pola :)
//101 moi, enoda arupathavathu kalyanathuku eluthi piravi payan adainthu vittai maanidaney:))//
rotfl.... aaanalum ungalukku over thanadakkam nga? enna kodumai divya idhu....
irudhaalum sollikiren vaaaltha vayadhillai vanagkiren :P
\\ My days(Gops) said...
btw, eppadi irukeeeenga?\\
very fine Gops,
how abt u??
romba naal aa aley kanoam, remba bz oh??
//ennamo, bhavana vai pudichirukunu sonna avanga appa avalai ungaluku kati koduthudura mathry overu bhandha panreenga,//
ha ha ha ha ha... no dension.....
enakku bhavana venaaam nga :)
//pudikumna , velipadaiya solalam, pudikalana.....athai sola koodathu,avasiyamum illai,
purinjatho???///
neeeenga bhavana sondha kaaaranganu theriaaamah pochinga....
azhaga irukira ellaaa ponnungalaium enaku pudikum nga.. ok va... smile plz... ippadi :d
\\ My days(Gops) said...
//nadanthutey than yosichein gops!//
gud gud, appoh remba dhoooram nadapeeenga pola :)
//101 moi, enoda arupathavathu kalyanathuku eluthi piravi payan adainthu vittai maanidaney:))//
rotfl.... aaanalum ungalukku over thanadakkam nga? enna kodumai divya idhu....
irudhaalum sollikiren vaaaltha vayadhillai vanagkiren :P\\
periyavargalidam......vanangi aasi perum un narpanbinai mechchukirein, ......needooli vaazhha!!!
\\neeeenga bhavana sondha kaaaranganu theriaaamah pochinga....
azhaga irukira ellaaa ponnungalaium enaku pudikum nga.. ok va... smile plz... ippadi :d\\
thats gud.....:d:))
//defect seri panidalam......:))//
try try :)
am fine nga..
busy elaaaam illainga... mokkai poda aaal illai adhu thaaan :)
\\ My days(Gops) said...
//எம்புட்டு கஷ்டபட்டு கவிதை எழுத முயற்சி பண்ணியிருக்கிறேன்///
adada, ungala discourage pannalanga... :)...
ippadi sonnah naan kelvi ketkaaadha padi melum nalla eludhuveeeenganu oru nalla ennam thaaango :D\\
உங்கள் ஊக்கப்படுத்தும் விதம் உணராமல் , நான் தான் தவறாக புரிந்துக்கொண்டேன், மன்னிக்கவும்!!
\\ My days(Gops) said...
//defect seri panidalam......:))//
try try :)
am fine nga..
busy elaaaam illainga... mokkai poda aaal illai adhu thaaan :)\\
தனி ஆளாவே நீங்க 'மொக்கை' போடுவீங்கன்னு எங்களுக்கு தெரியாதா???
\\ My days(Gops) said...
//ஒவரு தண்டனை 'காதலு'க்கு அழகு......புரிந்ததோ //
rotfl..... adhelam enakku theriaaadhu nga......\\
இதெல்லாம் தெரியாம ......என்ன கோப்ஸ், வாழ்க்கை வேஸ்ட் பண்ணிட்டீங்க:))
//vanangi aasi perum un narpanbinai mechchukirein, ......needooli vaazhha!!!
//
ha ha ha ha.... dabaaalnu thuravi aaagiteeeenga.... en kitta pesurathuku munaadi ippadi ah> ila pesunathuku appuram ippadi ah? rotfl...
//thats gud.....:d:))//
repeatu
//உங்கள் ஊக்கப்படுத்தும் விதம் உணராமல் , நான் தான் தவறாக புரிந்துக்கொண்டேன், மன்னிக்கவும்!!//
aah ah :O ... ippadi thoooya tamil la pottu thaaakureeengaley ....
//தனி ஆளாவே நீங்க 'மொக்கை' போடுவீங்கன்னு எங்களுக்கு தெரியாதா???//
rotfl andha alavuku naaan innum complan kudikalainga.. he he he he
\\ My days(Gops) said...
//vanangi aasi perum un narpanbinai mechchukirein, ......needooli vaazhha!!!
//
ha ha ha ha.... dabaaalnu thuravi aaagiteeeenga.... en kitta pesurathuku munaadi ippadi ah> ila pesunathuku appuram ippadi ah? rotfl...
//thats gud.....:d:))//
repeatu\\
உங்களை மாதிரி பத்து பேரு மொக்கை போட்டாலும்......தாக்கு பிடிப்போம்ல:))
இதுக்கெல்லாம் துறவி ஆகிட்டா என்ன ஆகுறது கோப்ஸ்!!
//இதெல்லாம் தெரியாம ......என்ன கோப்ஸ், வாழ்க்கை வேஸ்ட் பண்ணிட்டீங்க:))//
பரந்து கிடக்கிறது உலகம், இன்னமும் இருக்கிறது வாழ்க்கை.. ஹி ஹி ஹி ஹி....
டுமாரோ நெவர் டைஸ்
(எனக்கு jamesbond கொஞ்சம் புடிக்கும் :P )
\\ My days(Gops) said...
//உங்கள் ஊக்கப்படுத்தும் விதம் உணராமல் , நான் தான் தவறாக புரிந்துக்கொண்டேன், மன்னிக்கவும்!!//
aah ah :O ... ippadi thoooya tamil la pottu thaaakureeengaley ....
//தனி ஆளாவே நீங்க 'மொக்கை' போடுவீங்கன்னு எங்களுக்கு தெரியாதா???//
rotfl andha alavuku naaan innum complan kudikalainga.. he he he he\\
kudikkra mineral water key ipdi mokkai thakuthal na.........appo......appo complan kudichu , valanthuta???
paavum ellarum:))
so u no drinking complan, okies??
\\ My days(Gops) said...
//இதெல்லாம் தெரியாம ......என்ன கோப்ஸ், வாழ்க்கை வேஸ்ட் பண்ணிட்டீங்க:))//
பரந்து கிடக்கிறது உலகம், இன்னமும் இருக்கிறது வாழ்க்கை.. ஹி ஹி ஹி ஹி....
டுமாரோ நெவர் டைஸ்
(எனக்கு jamesbond கொஞ்சம் புடிக்கும் :P )\\
thats a nice movie isnt it?
me too a big fan of him!!
tomorow vachum waste panama , ellam kathukonga, seringala!!
//உங்களை மாதிரி பத்து பேரு மொக்கை போட்டாலும்......தாக்கு பிடிப்போம்ல:))
இதுக்கெல்லாம் துறவி ஆகிட்டா என்ன ஆகுறது கோப்ஸ்!!//
ஓ இன்னும் 9 பேரு இருக்காங்களா..அத சொல்லுங்க..... பேசுறதை விட அருமையான விஷயம் இந்த உலகத்துல இருக்கானு தெரிஞ்சிக்கல, தெரிஞ்சிக்கவும் விரும்பல.. ஹி ஹி ஹி எங்கையோ கேட்ட குரலா இருக்குமே??
ஆனாலும் ஓவர் தமிழ் மொக்கை'க்கு ஆகாதுங்க சொல்லிப்புட்டேன்... ஹி ஹிஹி
\\ My days(Gops) said...
//உங்களை மாதிரி பத்து பேரு மொக்கை போட்டாலும்......தாக்கு பிடிப்போம்ல:))
இதுக்கெல்லாம் துறவி ஆகிட்டா என்ன ஆகுறது கோப்ஸ்!!//
ஓ இன்னும் 9 பேரு இருக்காங்களா..அத சொல்லுங்க..... பேசுறதை விட அருமையான விஷயம் இந்த உலகத்துல இருக்கானு தெரிஞ்சிக்கல, தெரிஞ்சிக்கவும் விரும்பல.. ஹி ஹி ஹி எங்கையோ கேட்ட குரலா இருக்குமே??
ஆனாலும் ஓவர் தமிழ் மொக்கை'க்கு ஆகாதுங்க சொல்லிப்புட்டேன்... ஹி ஹிஹி\\
தாய் மொழியில், மொக்கையும் தெவிட்டாத அழகுதான்!!
இதெப்படி இருக்கு??
//kudikkra mineral water key ipdi mokkai thakuthal na.........appo......appo complan kudichu , valanthuta??? //
:O நான் மினரல் வாட்டர் தான் குடிக்கிறேனு எப்படிங்க தெரியும் உங்களுக்கு ஹி ஹி ஹி ஹி.. காம்ப்ளேன் எனக்கு புடிக்காது..
சோ டோன் த வொர்ரி... :P
//tomorow vachum waste panama , ellam kathukonga, seringala!!//
ஹி ஹி ஹி ஹி கண்டிப்பா....நன்றியை...
\\ My days(Gops) said...
//kudikkra mineral water key ipdi mokkai thakuthal na.........appo......appo complan kudichu , valanthuta??? //
:O நான் மினரல் வாட்டர் தான் குடிக்கிறேனு எப்படிங்க தெரியும் உங்களுக்கு ஹி ஹி ஹி ஹி.. காம்ப்ளேன் எனக்கு புடிக்காது..
சோ டோன் த வொர்ரி... :P
//tomorow vachum waste panama , ellam kathukonga, seringala!!//
ஹி ஹி ஹி ஹி கண்டிப்பா....நன்றியை...\\
நீங்க எல்லாம்,' டப்பு' பார்ட்டி......குழாய் அடி தண்ணியா குடிப்பீங்க, மினிரல் வாட்டர் தான் குடிப்பீங்கன்னு தெரியாதா??
//தாய் மொழியில், மொக்கையும் தெவிட்டாத அழகுதான்!!
இதெப்படி இருக்கு??//
சூப்பரா சொன்னீங்க.. ஹி ஹி ஹி
//நீங்க எல்லாம்,' டப்பு' பார்ட்டி......குழாய் அடி தண்ணியா குடிப்பீங்க, மினிரல் வாட்டர் தான் குடிப்பீங்கன்னு தெரியாதா??//
ஹா ஹா ஹா......டப்பு பார்ட்டி மட்டும் தான் குடிக்கனும்னு இல்லைங்க.. இங்க நார்மல் வாட்டர் உடம்புக்கு நல்லது இல்லை னு சொல்லுவாங்க......
ஆனாலும் அம்சம் இருக்கும் போதே அனுபவிச்சா தானே.. சோ... ஆல் இன் த கேம்.. ஹி ஹிஹி
//Divya said...
தாய் மொழியில், மொக்கையும் தெவிட்டாத அழகுதான்!!
இதெப்படி இருக்கு??
//
எனக்கு கண்ணுல கண்ணீர் வருது!!!!!!!!
ரொம்ப நல்லாயிருக்கு திவ்யா.
வாழ்த்துகள் திவ்யா..கவிதையுடன் முடித்தது நன்றாக இருக்கிறது.
தாமதமாக படித்தாலும் தரமான ஒரு கதையை படித்த திருப்தி. நன்றி திவ்யா.
superb with tragedy,comedy,love oru cinema screenplay padicha effect... :-)
\\sathish said...
//Divya said...
தாய் மொழியில், மொக்கையும் தெவிட்டாத அழகுதான்!!
இதெப்படி இருக்கு??
//
எனக்கு கண்ணுல கண்ணீர் வருது!!!!!!!!\
தொடச்சுக்கோங்க சதீஷ்.....
\\ Thangam said...
ரொம்ப நல்லாயிருக்கு திவ்யா.\\
வாங்க தங்கம்,
பாராட்டிற்கு மிக்க நன்றி!
\\பாச மலர் said...
வாழ்த்துகள் திவ்யா..கவிதையுடன் முடித்தது நன்றாக இருக்கிறது.\\
வாங்க பாச மலர்,
வாழ்த்துக்களுக்கு நன்றி!!!
\\ Jey said...
தாமதமாக படித்தாலும் தரமான ஒரு கதையை படித்த திருப்தி. நன்றி திவ்யா.\
உங்களுக்கு திருப்தியாக இருந்ததா, நன்று!!
வருகைக்கு மிக்க நன்றி ஜெ!!!
\\Syam said...
superb with tragedy,comedy,love oru cinema screenplay padicha effect... :-)\
பாராட்டிற்கு நன்றி ஷ்யாம்!!
என்னவளே
ஆயுள் தண்டனையுடன்
முத்த அடிகளும்
கிடைக்குமெனில்...
தினமும் உன்னைத்
திருடிக்கொள்வேனடி !!!
soooper o soooper.... nalla flow... expected endong but nall twist appo appo.... as usaul kalakals...
hats off
அக்கா
முதல் முதலாய் நான் ஆழாமல் படிச்ச உங்கட சிறுகதை...
எல்லாமே அருமை...
மற்றொரு கதையில் நான் என்னை கண்டேன் அக்கா.... (Sister & Brother)
Post a Comment