March 06, 2008

மாமாவின் மனசுல ..... பகுதி -2



மாமாவின் மனசுல - பகுதி 1

கணேசனுக்கு மாரடைப்பு ஏற்பட்டு கே.ஜி ஹாஸ்பிட்டலில் ICU வில் அனுமதிக்கப்பட்டார். Bypass surgery செய்ய வேண்டும் என மருத்துவர்கள் சொல்லிவிட்டனர். ஹாஸ்பிடல் வராண்டாவில் கண்ணீருடன் ரவியின் தாய் கல்யாணி ஒரு புறம், விசும்பலுடன் ராஜியின் தாய் மரகத்ம் ஒரு பக்கம். குழப்பமும் கவலையுமாய் நின்ற ரவியை ராஜியின் அப்பா ஆறுதல் படுத்தி, அடுத்து என்ன செய்வது, தன் நெருங்கிய நண்பன் சிறந்த Cardiologist, அவருக்கு தகவல் அனுப்பி வரவழைக்கிறேன் என்று தைரியம் கொடுத்துக் கொண்டிருந்தார்.

மதியம் கணேசன் ஹாஸ்பிடலில் அட்மிட் ஆனதிலிருந்து அங்கு யாரும் எதுவும் சாப்பிடாமல் இருந்தனர், அனைவருக்கும் ஹாஸ்பிடல் கேன்டினில் டீயும் டிபனும் வாங்கி வந்தாள் ராஜி,
டீ கூட குடிக்க மறுத்த ரவியிடம்,

"இப்படி எவ்வளவு நேரம் சாப்பிடாம இருக்க போறீங்க, டீயாச்சும் குடிங்க ப்ளீஸ்.....டீ கரெக்ட் சூடுலதான் இருக்கு.......நிஜம்மா!"

"ஹும்.....ப்ரவாயில்லை, எனக்கு வேணாம்"

"சும்மா முறுக்கிக்காதீங்க, டீ யை குடிங்க இப்போ"

அவளது வற்புறுத்தலை தட்ட முடியாமல் ரவி டீ பருகினான்.

ராஜி டீ குடிக்கச் சொல்லி தன் மகனை கட்டாயப்படுத்துவதையும், அவனும் பேச்சை மறுக்காமல் டீ குடித்ததையும், தன் கண்ணீருக்கு நடுவிலும் ஓரக்கண்ணால் பார்க்க தவறவில்லை கல்யாணி.

சென்னையிலிருக்கும் ரவியின் அக்கா ருக்மணிக்கு தகவல் சொன்னதால், அவளும் கணவன், குழந்தை அஞ்சலியுடன் காரில் நேராக கேஜி ஹாஸ்பிடலுக்கு வந்து சேர்ந்தாள்.

மகளை கண்டதும் ரவியின் அம்மா, மகளை கட்டிக்கொண்டு கதறி அழுதார்.

'இரவில் குழந்தை அஞ்சலி என்னுடன் இருக்கட்டும்' என சொல்லி ராஜி குழந்தையை எடுத்துக்கொண்டு தன் அப்பாவுடன் , அருகில் இருக்கும் தன் வீட்டீற்கு சென்றாள்.

Surgery க்கு முன் மாமாவை ICU வில் பார்த்த ராஜிக்கு ஏனோ மனம் மிகவும் பாரமாக இருந்தது.

மாமாவிடம் தான் எதிர்த்து பேசியதால்தான், அவருக்கு இப்படி ஆகிவிட்டது என கலங்கினாள்.

'தன் மகள் ராஜிக்கு, ரவிக்கும் திருமணம் முடிக்க ரொம்ப ஆசைப்பட்டாரே அண்ணன், ஏங்கி ஏங்கியே இப்படி ஆகிட்டாரே' என்று தன் மனதுக்குள் புலம்பித் தள்ளினாள் ராஜியின் தாய் மரகதம்.

'நான் சும்மா இருந்திருக்க கூடாதா? இவனை Bangalore லிருந்து வரவைச்சது தப்பா போச்சே, இவன் இப்படி ஒரு அதிர்ச்சி கொடுப்பான்னு நினைக்கவேயில்லையே, நான் கொஞ்சம் பொறுமையாயிருந்து பக்குவமா எடுத்து சொல்லியிருக்கலாமோ' என தன்னைத்தானே திட்டிக் கொண்டிருந்தாள் ரவியின் தாய் கல்யாணி.

'எல்லாம் என்னால தான், ராஜியுடன் கலயாணம் வேணாம்னு மறுத்துச் சொல்ல இப்படி ஒரு புருடா விட்டா , அது வினையா போச்சே, அப்பா இப்படி ஆகிட்டாரே' என குற்றவுணர்வில் கூனிகுறுகி போயிருந்தான் ரவி.

Surgery முடிந்து டாக்டர் இன்னும் 24 மணிநேரம் கழித்துதான் எதுவும் சொல்ல முடியும் என சொல்லிவிட, ரவியின் குடும்பம் மிகவும் கலங்கிப்போனது.

அழுதுகதறும் மரகதத்தையும்,கல்யாணியையும், ராஜியும் ருக்மணியும் ராஜியின் வீட்டிற்கு அழைத்துச் சென்றனர். ரவிக்கு உறுதுணையாக ராஜியின் தந்தையும் , அவனது நண்பன் வரதனும் ஹாஸ்பிடலில் இருந்தனர்.

வீட்டில் நான்கு பெண்களும் தெய்வத்தை வேண்டியபடி டாக்டரின் பதிலுக்காக காத்திருந்தனர், அப்போழுது ரவியின் அக்கா ருக்மணி தன் தாயிடம்,

"ஏன்மா அப்பா நல்லாத்தானே இருந்தார், திடீருன்னு அவருக்கு என்னாச்சும்மா,தோட்டத்துல வேலை பார்க்குறவங்ககிட்ட ஏதும் கோபப்பட்டாரா, எதுக்கும் டென்ஷன் ஆனாராம்மா?"

ருக்கு காரணம் கேட்க, ராஜியும் மரகதமும் கல்யாணியின் முகத்தை நோக்க, கல்யாணி பேந்த பேந்த விழித்தாள்,

" சொல்லும்மா, என்னம்மா நடந்துச்சு?"

"ஆமாம் அண்ணி சொல்லுங்க, எங்க வீட்டுல இருந்து போறப்போ அண்ணன் நல்லாத்தானே புறப்பட்டுப் போனார், தீடிருன்னு என்ன ஆச்சு அண்ணி" மரகதம் தன் அண்ணனின் மனைவி கல்யாணியை நோக்கினாள்.

கல்யாணி அத்தையின் பார்வையே சரியில்லை, அவளது பார்வை தன் மீது பட்டு பட்டு திரும்புவதும் குழப்பமாக இருக்கவே, ராஜி ' இதில் ஏதோ மேட்டர் இருக்கு, நாம சம்பந்த பட்டதா இருக்குமோ' என சுதாரித்துக் கொண்டு அத்தையின் மேலிருந்து கண்களை விலக்கி, வேறு எங்கோ பார்ப்பது போல் திரும்பிக்கொண்டாள்.

மகள் ருக்கு மறுபடியும் வற்புறுத்தி கேட்க, கல்யாணி பேச ஆரம்பித்தாள்,

" அவன்.....நம்ம........ரவி Bangalore ல ஒரு பொண்ணை காதலிக்கிறானாம், அவன் இதை சொன்னதும்தான் அப்பா அதிர்ச்சியில் நெஞ்சை பிடிச்சுட்டு விழுந்துட்டாரு ருக்கு" விசும்பினாள் அத்தை.

' ஆஹா! பையன் ' பெங்களுர் பைங்கிளி'யை டாவடிக்கிறானா? ஹப்பாட, ஒரு வழியா நான் தப்பிச்சேன், இந்த நெட்டையன்கிட்ட இருந்து !!
ஆனா அத்தை தான் பாவம், பையனுக்கு H1 விசா கிடைச்சிடுச்சு, சீக்கிரம் US க்கு போய்டுவான், பொண்ணு வீட்டுக்காரங்க கியூ ல நிப்பாங்கன்னு கனவு கண்டாங்க. அமெரிக்க மாப்பிள்ளை கட்டிக்க இப்போ பொண்ணுங்க விருபுறதில்லைன்னு அத்தைக்கு தெரில போலிருக்கு. கல்யாணமாகி அமெரிக்கா போய் சமையல் வேலையிலிருந்து பாத்ரூம் கழுவுற வேலை வரைக்கும் நாமளே தான் பண்ணனும், அதே இந்தியாவில இருந்தா, ஒவ்வொரு வேலைக்கும் ஒரு வேலை ஆளு வைச்சுட்டு, சோஃபாவில் கால் நீட்டிட்டு ஹாயா டிவி பார்க்கலாம், இத விட்டுப்புட்டு எவளாச்சும் அமெரிக்கா போய் கஷ்டபடுவாளா'
எப்படியோ ' பெங்களுர்காரிக்கு' ஒரு பெரிய தாங்க்ஸ் என்னைய காப்பாத்திட்டா'
என மனதுக்குள் புன்னகைத்துக் கொண்டாள் ராஜி!!

ராஜியின் அம்மா முகம் ஏமாற்றத்தில் வாடியதை ருக்குவும், கல்யாணியும் கவனிக்க தவறவில்லை.

Surgery successfull ஆக நடந்திருந்தது,இரண்டு நாட்களில் மாமா சகஜநிலைக்கு வர ஆரம்பித்தார்.

ஹாஸ்பிடலில் இருக்கும் மாமா குடும்பத்துக்கு ராஜி தன் வீட்டிலிருந்து உணவு சமைத்து எடுத்து வந்தாள் தினமும், அஞ்சலி பாப்பாவையும் பார்த்துக்கொண்டாள்.

ஒரு நாள், ராஜியின் வீட்டிலிருந்த தன் அக்கா ருக்குவை ஹாஸ்பிடலுக்கு அழைத்துச்செல்ல தன் பைக்கில் ராஜியின் வீட்டிற்கு வந்தான் ரவி.

'நான் உன் வீட்டுக்கு இனிமே வரமாட்டேன், நீயும் எங்க வீட்டுக்கு இனிமே வரவே வராதே' என ராஜியுடன் 2 வருஷத்துக்கு முன் சவால் விட்ட ரோஷத்தால் , ராஜியின் வீட்டிற்குள் செல்லாமல் பைக்கிலிருந்த படியே ' ஹார்ன்' அடித்தான் ரவி.


ஹார்ன் சத்தம் கேட்டு வீட்டுக்கு வெளியில் வந்த ராஜி, புன்னகையுடன் ,

"உள்ளே வாங்க" என்றாள்.

"இல்ல..........அக்காவை கூப்பிட்டுட்டு போகனும்"

"அக்கா குளிச்சுட்டு இருக்காங்க, இப்ப கிளம்பிருவாங்க, நீங்க உள்ளே வாங்க"

"ப்ரவாயில்ல.......நான் இங்கேயே வெயிட் பண்றேன்"

"எவ்வளவு நேரம் இப்படி வெயில்ல வெயிட் பண்ணுவீங்க, ப்ளீஸ் வீட்டுக்குள்ள வாங்க"

கெஞ்சலுடன் ராஜி வற்புறுத்த, அவளது வெகுளிதனமான பார்வையும், அவளது குடும்பம் இவனது குடும்பத்துக்கு செய்து வரும் உதவிகளும் அவனுக்குள் ஒரு நன்றிவுணர்வை ஏற்படுத்த, தன் பிடிவாதத்தை தளரவிட்டு வீட்டிற்குள் வந்தான்.

ஹாலில் ராஜியும்..........ரவியும் மட்டும்......அப்போது,


[தொடரும்]

பகுதி - 3

51 comments:

கருப்பன் (A) Sundar said...

ஓ, அப்ப மாமாவின் மனசுல, இருக்கிற "மாமா" மாமனாரா??? ஒருவழியா மனசை பைபாஸ் பண்ணிட்டீங்க!!

கருப்பன் (A) Sundar said...

//
அமெரிக்க மாப்பிள்ளை கட்டிக்க இப்போ பொண்ணுங்க விருபுறதில்லைன்னு அத்தைக்கு தெரில போலிருக்கு.
//
இது எப்போ இருந்து... பொண்ணுகளுக்கு ஐரோப்பா செட்டில்ட் மாப்பிள்ளைகளை புடிக்குமா??? நடுவூர் மாப்பிள்ளைகள் தான் பொண்ணுகளுக்கு புடிக்கலைனு ஐரோப்பா போனா இப்படி ஒரு பிரச்சனை இருக்கா??

//
ஹாலில் ராஜியும்..........ரவியும் மட்டும்......அப்போது,
//
சண்டை போட்டுக்கிட்டாங்க/பேசிக்கிட்டாங்கனு சொல்லுறதுக்கு இவ்வளவு பில்டப்பா??

கதை நல்ல ஸ்பீட்ல ஓடிக்கிட்டிருக்கு கண்டினியூபண்ணுங்க!!

ஜொள்ளுப்பாண்டி said...

சூப்பர் சூப்பரா பாவனா படத்தைப் போட்டு இப்படி படுத்தி எடுக்கறேளே திவ்யா.... கதையைப் படிக்குறதா இல்லை ஹீரோயின் பாவனாவை ohhhh sorry ராஜியைப் படிக்கிறாதானே தெரியலையே... :))))))

ஜொள்ளுப்பாண்டி said...

//நம்ம........ரவி Bangalore ல ஒரு பொண்ணை காதலிக்கிறானாம், அவன் இதை சொன்னதும்தான் அப்பா அதிர்ச்சியில் நெஞ்சை பிடிச்சுட்டு விழுந்துட்டாரு ருக்கு" விசும்பினாள் அத்தை. //

அட என்னாங்க இது அட்டீழியமா இருக்கு... பொண்ணைத்தானே காதலிச்சான் அதுக்கு இம்ம்பூட்டு ரியாக்சனா..??

மொத்தத்துல இந்தக் காதல் இதயத்தை பாதிச்சுருச்சு..... ரெண்டு பேருக்குமே... என்னே ஒரு விந்தை !!!! ;)))))))

ஜொள்ளுப்பாண்டி said...

//கல்யாணமாகி அமெரிக்கா போய் சமையல் வேலையிலிருந்து பாத்ரூம் கழுவுற வேலை வரைக்கும் நாமளே தான் பண்ணனும், அதே இந்தியாவில இருந்தா, ஒவ்வொரு வேலைக்கும் ஒரு வேலை ஆளு வைச்சுட்டு, சோஃபாவில் கால் நீட்டிட்டு ஹாயா டிவி பார்க்கலாம், இத விட்டுப்புட்டு எவளாச்சும் அமெரிக்கா போய் கஷ்டபடுவாளா'//

Is it sooooooo....???? :)))) இப்படியெல்லாம் நெனைகறாவளா என்ன...? அம்மணிக ஆரும் அப்படி நெனக்கற மாதிரி தெரியலையே.... ம்ம்ம்ம்ம்ம்ம்.....???? ;)))))))

கதை வழக்கம் போல வழுக்கிகிட்டு ஓடுதுங்க திவ்யா.... சீக்கிரம் அடுத்த பார்ட் போட்டுத்தாக்குங்க... ;)))))

Anonymous said...

Hey divya cool way of narrating the story..waiting for the next part
kavitha

Nimal said...

//எல்லாம் என்னால தான், ராஜியுடன் கலயாணம் வேணாம்னு மறுத்துச் சொல்ல இப்படி ஒரு புருடா விட்டா//
அப்போ 'கதவு' திறந்து தான் இருக்கு...!

//ஹாலில் ராஜியும்..........ரவியும் மட்டும்......அப்போது,//
அப்போது, மழை பெய்தது!!! :)))

நல்லாத்தான் போடுறீங்க தொடரும்... ;)
வாழ்த்துக்கள்... தொடர்க...!

gils said...

:) chellathoda foto fresha poatrukeengala..kathaiyae azhaga theriyuthu :D at times Hey nee romba azhaga iruka moviea resmble panra mathiri poguthu..sneha character name kuda athula raji than nenakren...nalla flow continue madi..

FunScribbler said...

கதைக்காக படங்களா. இல்லை படங்களை வைத்து கதை எழுதினீங்களானு தெரியல. இரண்டுமே படு சூப்பர்!! ரொம்ப நல்லா கதை போகுது.அடுத்த பாகத்த போடுங்க.. by the way..i have finished my story. here is the link for the last part

http://enpoems.blogspot.com/2008/03/part-3.html

i didn't have ur mail. that's y sending u like this.
உங்க கதைய படிக்க ஆர்வத்துடன் இருக்கேன்..

'நவிரன்' சதீஷ் - 'Naveran' Sathish said...

//அமெரிக்க மாப்பிள்ளை கட்டிக்க இப்போ பொண்ணுங்க விருபுறதில்லைன்னு //

என்னங்க இப்படி திடீர்னு குண்ட தூக்கிபோடுரீங்க!!!

கோபிநாத் said...

கதை நல்லா சுவராஸ்யமாக போகுது..;)))

Prabakar said...

meeha arumai arumai

vazththukaL

ஸ்ரீ said...

மாமாவின் மனசுலன்னா மாமனார் இல்லையா. ரவி தானா? கன்ஃப்யூசன். கதை அழகா நகருது அதுக்கு ஒரு தனி சபாஷ்.

ஜி said...

:)))

ஜி said...

//அமெரிக்க மாப்பிள்ளை கட்டிக்க இப்போ பொண்ணுங்க விருபுறதில்லைன்னு அத்தைக்கு தெரில போலிருக்கு.//

:((((

appadiyaa??

as per the explanation, americala settle aaga pora/aana maapillaiyathaan virumburathilla... Not America return maappillai... Am I right??

Dreamzz said...

////அமெரிக்க மாப்பிள்ளை கட்டிக்க இப்போ பொண்ணுங்க விருபுறதில்லைன்னு அத்தைக்கு தெரில போலிருக்கு.//

:((((

appadiyaa?? //
ரிப்பீட்டு :((((((

Dreamzz said...

கதை சுவாரஸ்யமாக போகுதுங்க மாஸ்டர்! சீக்கிரம் அடுத்த பகுதியும் போடுங்க..

Dreamzz said...

//அவளது குடும்பம் இவனது குடும்பத்துக்கு செய்து வரும் உதவிகளும் அவனுக்குள் ஒரு நன்றிவுணர்வை ஏற்படுத்த, தன் பிடிவாதத்தை தளரவிட்டு வீட்டிற்குள் வந்தான்.//

மோதல், இப்போ இதற்கு வந்தாச்சா.. அப்ப கண்டிப்பா அடுத்து கல்யாணம் தான்!

தமிழன்-கறுப்பி... said...

ஆஹா.. ஆஹா...நல்லாருக்கு
ஏது கதையா
நான் பாவனாவ சொன்னேனுங்கோ....

தமிழன்-கறுப்பி... said...

"கதை சுவாரஸ்யமாக போகுதுங்க மாஸ்டர்! சீக்கிரம் அடுத்த பகுதியும் போடுங்க"

))))பாவனா படமும் போடுங்க....

தமிழன்-கறுப்பி... said...

உங்க பதிவுகள்ல எனக்கு ரொம்பப் பிடிச்ச பதிவு இந்த தொடர்தானுங்கோ...
(மறக்காம பாவனா படம் போடுங்க...)

எழில்பாரதி said...

திவ்யா தொடர் சூப்பரா போகுது!!!!

அடுத்த பகுதியை சீக்கரம் போடுங்க!!!!

Arunkumar said...

//
as per the explanation, americala settle aaga pora/aana maapillaiyathaan virumburathilla... Not America return maappillai... Am I right??
//

un kashtam enakku puriyudhu Ji...
enakku puriyudhu !!!

aandavan america vaasingala sodhippan aana kaivida maataan...
(nammale sollika vendiyadhu thaan.... :P)

Arunkumar said...

aaha aaha
bhavana super..

kanna text-ku kondu poga mudiyala :)

Divya said...

\\ கருப்பன்/Karuppan said...
ஓ, அப்ப மாமாவின் மனசுல, இருக்கிற "மாமா" மாமனாரா??? ஒருவழியா மனசை பைபாஸ் பண்ணிட்டீங்க!!\\

வாங்க கருப்பன்,
எந்த 'மாமா'வா இருந்தா என்ன சார்...மனசுல இருந்தா போறாதா!!

Divya said...

\\ கருப்பன்/Karuppan said...
//
அமெரிக்க மாப்பிள்ளை கட்டிக்க இப்போ பொண்ணுங்க விருபுறதில்லைன்னு அத்தைக்கு தெரில போலிருக்கு.
//
இது எப்போ இருந்து... பொண்ணுகளுக்கு ஐரோப்பா செட்டில்ட் மாப்பிள்ளைகளை புடிக்குமா??? நடுவூர் மாப்பிள்ளைகள் தான் பொண்ணுகளுக்கு புடிக்கலைனு ஐரோப்பா போனா இப்படி ஒரு பிரச்சனை இருக்கா??\\


ஐரோப்பா மாப்பிள்ளைக்கு மவுசு இருக்கா, குறைஞ்சிடுச்சான்னு தெரியலீங்க, விசாரிச்சு சொல்றேங்க கருப்பன்!!

//
ஹாலில் ராஜியும்..........ரவியும் மட்டும்......அப்போது,
//
சண்டை போட்டுக்கிட்டாங்க/பேசிக்கிட்டாங்கனு சொல்லுறதுக்கு இவ்வளவு பில்டப்பா??

கதை நல்ல ஸ்பீட்ல ஓடிக்கிட்டிருக்கு கண்டினியூபண்ணுங்க!!\
\

ஏங்க கொஞ்சம் பில்ட் அப் கொடுத்தா பொருக்காதே உங்களுக்கு!!

வருகைகும், விரிவான பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றி கருப்பன்!!

Divya said...

\\ ஜொள்ளுப்பாண்டி said...
சூப்பர் சூப்பரா பாவனா படத்தைப் போட்டு இப்படி படுத்தி எடுக்கறேளே திவ்யா.... கதையைப் படிக்குறதா இல்லை ஹீரோயின் பாவனாவை ohhhh sorry ராஜியைப் படிக்கிறாதானே தெரியலையே... :))))))\

வாங்க பாண்டியண்ணே,
உங்க புத்திய காண்பிசிட்டீக பார்த்தியளா???? கதையை படிக்காம 'பாவனா'வின் பாவனைகளை ஜொள்ளுவிட்டிருக்கிறீங்க........

Divya said...

\\ ஜொள்ளுப்பாண்டி said...
//நம்ம........ரவி Bangalore ல ஒரு பொண்ணை காதலிக்கிறானாம், அவன் இதை சொன்னதும்தான் அப்பா அதிர்ச்சியில் நெஞ்சை பிடிச்சுட்டு விழுந்துட்டாரு ருக்கு" விசும்பினாள் அத்தை. //

அட என்னாங்க இது அட்டீழியமா இருக்கு... பொண்ணைத்தானே காதலிச்சான் அதுக்கு இம்ம்பூட்டு ரியாக்சனா..??

மொத்தத்துல இந்தக் காதல் இதயத்தை பாதிச்சுருச்சு..... ரெண்டு பேருக்குமே... என்னே ஒரு விந்தை !!!! ;)))))))\\

அடேங்கப்பா.........காதல் 'இதயத்தை' பாதிக்கும் னு மெசேஜ் எல்லாம் சொல்லுறிக பாண்டியண்ணே, இது எப்போதிலிருந்து??

Divya said...

\\ ஜொள்ளுப்பாண்டி said...
//கல்யாணமாகி அமெரிக்கா போய் சமையல் வேலையிலிருந்து பாத்ரூம் கழுவுற வேலை வரைக்கும் நாமளே தான் பண்ணனும், அதே இந்தியாவில இருந்தா, ஒவ்வொரு வேலைக்கும் ஒரு வேலை ஆளு வைச்சுட்டு, சோஃபாவில் கால் நீட்டிட்டு ஹாயா டிவி பார்க்கலாம், இத விட்டுப்புட்டு எவளாச்சும் அமெரிக்கா போய் கஷ்டபடுவாளா'//

Is it sooooooo....???? :)))) இப்படியெல்லாம் நெனைகறாவளா என்ன...? அம்மணிக ஆரும் அப்படி நெனக்கற மாதிரி தெரியலையே.... ம்ம்ம்ம்ம்ம்ம்.....???? ;)))))))

கதை வழக்கம் போல வழுக்கிகிட்டு ஓடுதுங்க திவ்யா.... சீக்கிரம் அடுத்த பார்ட் போட்டுத்தாக்குங்க... ;)))))\\

அம்மனிக என்ன நினைக்கிறாக ன்னு உங்களுக்குத்தேன் நல்லா தெரியும்....நீங்க சொல்லுங்க, இது கரெக்ட்டா இல்லியான்னு!!

வருகைக்கு நன்றி பாண்டியண்ணே!

Divya said...

\\ Anonymous said...
Hey divya cool way of narrating the story..waiting for the next part
kavitha\\

ஹாய் கவிதா,
வாங்கோ வாங்கோ!!

கதை தொடர்ந்து படிப்பதற்காக ஒரு ஸ்பெஷல் தாங்க்ஸ் கவிதா!

Divya said...

\\ நிமல்/NiMaL said...
//எல்லாம் என்னால தான், ராஜியுடன் கலயாணம் வேணாம்னு மறுத்துச் சொல்ல இப்படி ஒரு புருடா விட்டா//
அப்போ 'கதவு' திறந்து தான் இருக்கு...!

//ஹாலில் ராஜியும்..........ரவியும் மட்டும்......அப்போது,//
அப்போது, மழை பெய்தது!!! :)))

நல்லாத்தான் போடுறீங்க தொடரும்... ;)
வாழ்த்துக்கள்... தொடர்க...!\\

என்ன நிமல் இது, தொடரும் ன்னு போடுறதுக்கு முன் ஒரு சின்ன பில்ட் அப் கூட கொடுக்க விட மாட்டென்றீங்க??

வருகைக்கு நன்றி நிமல்!!

Divya said...

\\ gils said...
:) chellathoda foto fresha poatrukeengala..kathaiyae azhaga theriyuthu :D at times Hey nee romba azhaga iruka moviea resmble panra mathiri poguthu..sneha character name kuda athula raji than nenakren...nalla flow continue madi..\\

பாவனா உங்க 'செல்லமா'??? ஹா ஹா!

பாவனாவிற்காக தொடரை தொடர்ந்து படிக்கும் கில்ஸ் க்கு ஒரு ஸ்பெஷல் தாங்க்ஸ்!!

Divya said...

\\ Thamizhmaagani said...
கதைக்காக படங்களா. இல்லை படங்களை வைத்து கதை எழுதினீங்களானு தெரியல. இரண்டுமே படு சூப்பர்!! ரொம்ப நல்லா கதை போகுது.அடுத்த பாகத்த போடுங்க.. by the way..i have finished my story. here is the link for the last part

http://enpoems.blogspot.com/2008/03/part-3.html

i didn't have ur mail. that's y sending u like this.
உங்க கதைய படிக்க ஆர்வத்துடன் இருக்கேன்..\\

வாங்க தமிழ்,

கதைக்காக தான் படங்களை தேர்வு செய்தேன், குறிப்பிட்டு பாராட்டியமைக்கு நன்றி தமிழ்!

அடுத்த பாகம் போட்டதும் இ-மெயில் பண்றேன் தமிழ்!!

Divya said...

\\ sathish said...
//அமெரிக்க மாப்பிள்ளை கட்டிக்க இப்போ பொண்ணுங்க விருபுறதில்லைன்னு //

என்னங்க இப்படி திடீர்னு குண்ட தூக்கிபோடுரீங்க!!!\\

என்ன பண்றது சதீஷ்,

அமெரிக்கா போய் சமையல் வேலை செய்து, பாத்திரம் கழுவனுமா??
இல்ல
இந்தியாவுல 'சுகபோகமா' இருக்கனுமா?

அப்படின்னு தமிழ் பொண்ணுங்க எல்லாம் யோசிக்க ஆரம்பிச்சுட்டாங்களாம்,

ஸோ....அவங்க ரொம்ப யோசிச்சு ஒரு முடிவுக்கு வர்ரதுக்குள்ள , நீங்க சுதாரிச்சுக்கிட்டு, சீக்கிரம் 'டும் டும் டும் ' பண்ற வழியப்பாருங்க!!

Divya said...

\\ கோபிநாத் said...
கதை நல்லா சுவராஸ்யமாக போகுது..;)))\

மிக்க நன்றி கோபிநாத்!!

Divya said...

\ Prabakar Samiyappan said...
meeha arumai arumai

vazththukaL\\

வாழ்த்துக்களுக்கு நன்றி ப்ரபாஹர்!!

Divya said...

\\ ஸ்ரீ said...
மாமாவின் மனசுலன்னா மாமனார் இல்லையா. ரவி தானா? கன்ஃப்யூசன். கதை அழகா நகருது அதுக்கு ஒரு தனி சபாஷ்.\\

'மாமா' யாருன்னு ரொம்ப குழம்பிக்காதீங்க, சும்மா ஜாலியா கதையை தொடர்ந்து படிங்க, சரிங்களா??

'தனி சபாஷ்'க்கு ஒரு ஸ்பெஷல் தாங்க்ஸ்!

Divya said...

\\ ஜி said...
:)))
\\

:(((

Divya said...

\\ ஜி said...
//அமெரிக்க மாப்பிள்ளை கட்டிக்க இப்போ பொண்ணுங்க விருபுறதில்லைன்னு அத்தைக்கு தெரில போலிருக்கு.//

:((((

appadiyaa??

as per the explanation, americala settle aaga pora/aana maapillaiyathaan virumburathilla... Not America return maappillai... Am I right??\\

ரொம்ப கவலை படாதீங்க ஜி,

அமெரிக்கா ரிடெர்ன் மாப்பிள்ளைக்குன்னு ஒரு தனி மவுசு எல்லாம் கிடையாது,

ஆனா இருந்த/இருக்கிற மவுசு இன்னும் குறையலன்னு தான் சொல்லிக்கிறாங்க!!

Divya said...

\\ Dreamzz said...
கதை சுவாரஸ்யமாக போகுதுங்க மாஸ்டர்! சீக்கிரம் அடுத்த பகுதியும் போடுங்க..\\

வாங்க ட்ரீம்ஸ்,

சீக்கிரம் அடுத்த பகுதி போடுறேன்.
வருகைக்கும் பாராட்டிற்கும் நன்றி!

Divya said...

\ Dreamzz said...
//அவளது குடும்பம் இவனது குடும்பத்துக்கு செய்து வரும் உதவிகளும் அவனுக்குள் ஒரு நன்றிவுணர்வை ஏற்படுத்த, தன் பிடிவாதத்தை தளரவிட்டு வீட்டிற்குள் வந்தான்.//

மோதல், இப்போ இதற்கு வந்தாச்சா.. அப்ப கண்டிப்பா அடுத்து கல்யாணம் தான்!\\

உங்கள் யூகங்களுடன் அடுத்து வரும் பகுதிக்காக காத்திருங்கள்!!

Divya said...

\\ தமிழன்... said...
ஆஹா.. ஆஹா...நல்லாருக்கு
ஏது கதையா
நான் பாவனாவ சொன்னேனுங்கோ....\\

பாவனாவை ரொம்ப ரசிச்சீங்க போலிருக்கு தமிழன்.......!!

Divya said...

\ தமிழன்... said...
"கதை சுவாரஸ்யமாக போகுதுங்க மாஸ்டர்! சீக்கிரம் அடுத்த பகுதியும் போடுங்க"

))))பாவனா படமும் போடுங்க....\\

சரிங்க போட்டுறுவோம்!!

Divya said...

\\ தமிழன்... said...
உங்க பதிவுகள்ல எனக்கு ரொம்பப் பிடிச்ச பதிவு இந்த தொடர்தானுங்கோ...
(மறக்காம பாவனா படம் போடுங்க...)\\


பாவனாவுக்காக தொடரே பிடிச்சு போச்சா??
நன்றி தமிழன்!

Divya said...

\ எழில் said...
திவ்யா தொடர் சூப்பரா போகுது!!!!

அடுத்த பகுதியை சீக்கரம் போடுங்க!!!!\\

ரொம்ப நன்றி எழில்,

வரும் வாரத்தில் அடுத்த பகுதி போட முயல்கிறேன்!

Divya said...

\\ Arunkumar said...
//
as per the explanation, americala settle aaga pora/aana maapillaiyathaan virumburathilla... Not America return maappillai... Am I right??
//

un kashtam enakku puriyudhu Ji...
enakku puriyudhu !!!

aandavan america vaasingala sodhippan aana kaivida maataan...
(nammale sollika vendiyadhu thaan.... :P)\\

நம்பிக்கையுடன் இருங்க அருண்!!

Divya said...

\\ Arunkumar said...
aaha aaha
bhavana super..

kanna text-ku kondu poga mudiyala :)\\

அப்போ கதையை இன்னும் படிக்கல நீங்க.......அப்படித்தானே??

Prabakar said...

helloooo,,,

where is next part .... next week had started akkaoo publish it soon..

Divya said...

\\ Prabakar Samiyappan said...
helloooo,,,

where is next part .... next week had started akkaoo publish it soon..
\\

Helloooo Prabakar,

next part intha week kandipa potudurein,
konjam 'bz bird ' aaha irunthutein, type pana time ileengo,will try to post it in a day or two,

BTW thx for dropping by to look for the next part :))

ரசிகன் said...

திவ்யா அக்கா..மறுபடியும் கலக்கல்.... அருமையா இருக்கு கதை போகும் விதம்.. ரேட்டிங் ஏறிக்கிட்டே போகுது.தொடருங்க..:)

தினேஷ் said...

படிக்கும் போது மனதில் மகிழ்ச்சியை ஏற்ப்படுத்துகிற ஒரு எழத்து நடையுடன் கதைநடை...

வாழ்த்துக்களுடன்,
தினேஷ்