October 23, 2007

பெண் பார்க்க போலாமா??? - பகுதி 1

என் கல்லூரி சீனியர், என் நண்பர் குமாரின் தங்கையின் திருமணத்திற்கு சென்றிருந்தேன், அங்கும் இங்கும் ஓடியாடி கலயாணவேலைகளைக் கவனித்துக் கொண்டிருந்தான் குமார். 'பரவாயில்லையே! தன் வீட்டுக் கலயாண வேலை எல்லாம் இழுத்துப் போட்டுக்கொண்டு செய்கிறானே என்று பாராட்டினேன், அதற்கு அவன் சொன்ன பதில், அதன் பின்னான எங்கள் உரையாடல்..........
குமார்: நீவேற திவ்ஸு, நானாவது வேலை எல்லாம் செய்றதாவது. என் தங்கைக்கு கல்யாணம் ஆனா என் 'லைன் க்ளியர்' ஆச்சு இல்ல, அடுத்து எனக்குத்தான் கல்யாணம், ஸோ இப்படி அங்கயும் இங்கயுமா ஓடியாடி வேலை செய்தா நாலு பேர் கண்ணுல படுவேன், அதுக்கு தான் இந்த ஸீன்.......
நான்: அடப்பாவி! சரி அப்படி நாலு பேர் கண்ணுல நீ ஏன் படனும்??
குமார்: இதுக்கூடவா புரில, அப்போதான் பொண்ணு வைச்சிருக்கவங்க நாலு பேர் கண்ணுல படுவேன், என்னை மாப்பிள்ளை கேட்டு வருவாங்க.
நான்: அடச்சீ வெட்கமா இல்ல, தங்கை கல்யாணதுக்கு நல்லா வேலை செய்றியேன்னு பார்த்தா, நீ இப்படி என்னத்துல அலையுறியா??
குமார்: ஓய் இதுல வெட்க்கப்பட என்ன இருக்கு, எவ்வளவு நாள் தான் நான் McD லயும்[ Mc Donalds], BK லேயும் [Burger King] சாப்பிடுட்டு இருக்கிறது.
தங்கச்சிக்கு கல்யாணம் முடிந்ததும் உனக்கு பொண்ணு பார்த்திடலாம்டா ன்னு அம்மா சொன்னாங்க.
ஆனா பாரு, நான் மூன்று வருஷம் தொடர்ந்து அமெரிக்கா ல ஆணி புடுங்கிட்டு இருந்துட்டேனா, இங்க இருக்கிற சொந்த பந்தத்துக்கெல்லாம் என்னை ஞாபகம் இருக்காது, அதான் ஒரு விளம்பரத்திற்க்காக இங்க ஆக்ட் விட்டுட்டு இருக்கிறேன், இது பொறுக்காதே உனக்கு???
நான்: ஹேய் குமார், நீ சொல்றது பார்த்தா, சமையலுக்கு ஆள் தேடுறாப்ல இருக்கு?
குமார்: இங்க பாரு திவ்ஸு, உண்மை கொஞ்சம் கசக்கதான் செய்யும், ஆனாலும் கேட்டுக்கோ, கல்யாணம் பண்ணிக்க நினைக்கிற முக்கால்வாசி பேச்சுலர் பசங்க ஆசைபடுற முக்கிய தேவைகளில் இந்த சமையல் தான் ஃபர்ஸ்ட்.
நான்: ஓஹோ அப்படியா! சரி, நானும் ஒரு உண்மை சொல்றேன் நீ கேட்டுக்கோ. இந்த காலத்து பொண்ணுங்க முக்கால்வாசி பேருக்கு சமைக்கவே தெரியாது.
'சமைக்க தெரியாது' ன்னு சொல்றது ஒரு ஸ்டையில் + ஃபேஷன், தெரியுமா உனக்கு????
குமார்: அடிப்பாவிங்களா, ஹே திவ்ஸு நிஜம்மாதான் சொல்றியா??
நான்: இதுல ஏன் நான் பொய் சொல்றேன், நீ வேனா பாரு, உன கல்யாணத்துக்கு அப்புறமும் நீ McD லேயும், BK லேயும் இரண்டு பார்சல் [togo] வாங்கிட்டு போய் உன் சம்சாரியோடு வீட்டுல சேர்ந்து சாப்பிட போற.
குமார்: என்ன நீ இப்படி பயமுறுத்துற,
ஏதோ ஒரு வரன் வந்திருக்கு, இன்னும் இரண்டு நாள்ல போய் பெண் பார்க்கனும்னு அம்மா சொன்னாங்க.
திவ்ஸு, நான் பெண் பார்க்க போறப்போ, அந்த பொண்ணு கிட்ட என்ன பேசலாம், எப்படி அவளை பத்தி தெரிஞ்சுக்கலாம் ன்னு கொஞ்சம் சொல்லிக் கொடேன்.
நான்: நீ சமையலுக்கு தான ஆள் தேட போற, ஸோ நேரா பொண்ணுக்கிட்ட " இந்த பஜ்ஜி , சொஜ்ஜி எல்லாம் நீ செய்ததா?" ன்னு கேளு,
அதுக்கு அவ " இல்ல தெருமுனையில இருக்கிற பலகார கடையில வாங்கினதுங்க" அப்படின்னு பதில் சொன்னா, உன் அம்மா கிட்ட அடுத்த வரன் பார்க்க சொல்லு,
" நானே தான் இந்த பஜ்ஜி , சொஜ்ஜி எல்லாம் செய்தேன்" னு அவ சொன்னா, "இவளே என் சமையல் காரி.............ஊப்ஸ் ஸாரி, இவ தான் என் சம்சாரி " அப்ப்டின்னு முடிவு பண்ணிடு.
குமார்: என்ன கிண்டலாயிருக்கா என்ன பார்த்தா? வெறுப்பேத்தாம ஏதாவது ஐடியா கொடு திவ்யா.
நான்: உன்ன பார்த்தா பாவமாதான் இருக்கு, திவ்யா னு மரியாதையா வேற கேட்குற, ஸோ ஐடியா தரேன், ஆனா.........
பத்து வருஷம் காதலிச்சு கல்யாணம் கட்டிக்கிட்டவனுக்கே தன் மனைவியின் மனதை புரிஞ்சுக்க முடில, நீ 10 நிமிஷம் அந்த பொண்ணு கிட்ட பேசி அவளை பத்தி எப்படி தெரிஞ்சுப்பே?
சரி உனக்கு என்னவெல்லாம் அந்த பொண்ணு பத்தி தெரிஞ்சுக்கனும்னு சொல்லு,
நீ என்ன கேள்விகள் கேட்டா? அதற்கு அவ எப்படி பதில் சொன்னா அவளை பத்தி தெரிஞ்சுக்கலாம்னு நான் சொல்லித் தரேன்..........

[தொடரும்....]

32 comments:

said...

"குமார்: இங்க பாரு திவ்ஸு, உண்மை கொஞ்சம் கசக்கதான் செய்யும், ஆனாலும் கேட்டுக்கோ, கல்யாணம் பண்ணிக்க நினைக்கிற முக்கால்வாசி பேச்சுலர் பசங்க ஆசைபடுற முக்கிய தேவைகளில் இந்த சமையல் தான் ஃபர்ஸ்ட்."

இத படிச்சதும் குமாரும் என்னை போல என்று நினைத்தேன், ஆனா அடுத்த வரியில் இப்படி ஒரு குண்டை தூக்கி போட்டுவிட்டீங்களே!!!

கொஞ்சம் யோசிக்கனும் போல இருக்கே!:)
(ரொம்ப கஷ்ட பட்டு குசும்பு இல்லாம ஒரு கமெண்ட் போட்டு இருக்கேன்)

said...

அப்பாடி! அந்த குமார் நான் இல்லை.
என் மனைவி சமையலுக்கு நான் தான் பரிசோதனை எலி!!அப்படியே கற்றுக்கொண்டார்களாம்.இது கல்யாணம் ஆகி 10 வருடங்கள் கழித்து அவர்களே சொன்னது.

said...

ஆஹா...ஆஹா...எல மக்கா டீச்சர் பாடத்தை ஆரம்பிச்சிட்டிங்க சீக்கிரம் ஒடிவாங்கப்பா...:))

said...

//
சரி, நானும் ஒரு உண்மை சொல்றேன் நீ கேட்டுக்கோ. இந்த காலத்து பொண்ணுங்க முக்கால்வாசி பேருக்கு சமைக்கவே தெரியாது.
'சமைக்க தெரியாது' ன்னு சொல்றது ஒரு ஸ்டையில் + fashion, தெரியுமா உனக்கு????
//
இப்பல்லாம் பசங்களும் உஷார்தான்.

said...

//
இந்த பஜ்ஜி , சொஜ்ஜி எல்லாம் நீ செய்ததா?" ன்னு கேளு,
அதுக்கு அவ " இல்ல தெருமுனையில இருக்கிற பலகார கடையில வாங்கினதுங்க" அப்படின்னு பதில் சொன்னா, உன் அம்மா கிட்ட அடுத்த வரன் பார்க்க சொல்லு,
//
இது நல்ல ஐடியாவா இருக்கு

'மைண்ட்'ல வெச்சிருக்கேன்

யூஸ் பண்ணிக்கிறேன்.

:-))))

said...

//
நீ என்ன கேள்விகள் கேட்டா? அதற்கு அவ எப்படி பதில் சொன்னா அவளை பத்தி தெரிஞ்சுக்கலாம்னு நான் சொல்லித் தரேன்..........
//
சீக்கிரம் சொல்லிக்குடுங்க அம்மிணி

said...

// அப்போதான் பொண்ணு வைச்சிருக்கவங்க நாலு பேர் கண்ணுல படுவேன், என்னை மாப்பிள்ளை கேட்டு வருவாங்க.//
நீங்க மறைமுகமா(?) சொன்னாலும் ,புத்திசாலித்தனமா ஜடியாவ புரிஞ்சிகிடேனுங்க... ஊருல உள்ள எல்லா பிரிண்டிங் பிரசுக்கும் சொல்லியாச்சு.. எந்த கல்யாணத்துக்கு பத்திரிக்க அடிச்சாலும் ,நமக்கும் ஒன்னு நிச்சயம். பின்ன என்ன ,எந்த கல்யாணமானாலும் ஒடனே போயி பொதுசேவைதா....

// நீ என்ன கேள்விகள் கேட்டா? அதற்கு அவ எப்படி பதில் சொன்னா அவளை பத்தி தெரிஞ்சுக்கலாம்னு நான் சொல்லித் தரேன் //
சிக்கிரம் சொல்லுங்க.. சிக்கிரம் சொல்லுங்க..

said...

நீ சமையலுக்கு தான ஆள் தேட போற, ஸோ நேரா பொண்ணுக்கிட்ட " இந்த பஜ்ஜி , சொஜ்ஜி எல்லாம் நீ செய்ததா?" ன்னு கேளு,
அதுக்கு அவ " இல்ல தெருமுனையில இருக்கிற பலகார கடையில வாங்கினதுங்க" அப்படின்னு பதில் சொன்னா, உன் அம்மா கிட்ட அடுத்த வரன் பார்க்க சொல்லு,

ஏனுங்க திவ்யா .. இப்புடி உள்ளத உள்ள படியே உண்மைய சொல்லர அந்த பொண்ணு யாருங்க..
இப்பிடி பொண்ணுங்க உண்மைய நேரடியா சொல்லிட்டா.. நாங்க ஏங்க "கடல விட ஆழம்,மலையை விட உயரமுண்னு"மண்டைய ஒடச்சிக்கிறம்.சும்ம ஒரு பேச்சுக்கு தான சொன்னிங்க.. காமடி கீமடி பண்ணிலியே..

said...

மூணு வருஷம் இங்க இருந்துட்டு சமைக்கத் தெரியலைன்னு சொன்னா நம்பும்படியாக இல்லையே! சரி சரி உங்க மனைவிக்காக நீங்க சமைக்கப்போகும் நிலையை தவிர்க்கும் உத்தி இதுன்னு நினைக்கிறேன்!

said...

//நீவேற திவ்ஸு, நானாவது வேலை எல்லாம் செய்றதாவது. என் தங்கைக்கு கல்யாணம் ஆனா என் 'லைன் க்ளியர்' ஆச்சு இல்ல, அடுத்து எனக்குத்தான் கல்யாணம், ஸோ இப்படி அங்கயும் இங்கயுமா ஓடியாடி வேலை செய்தா நாலு பேர் கண்ணுல படுவேன், அதுக்கு தான் இந்த ஸீன்.......//

அவ்வ்வ்வ்வ்... இப்பிடியெல்லாம் செய்யனுமா என்ன???

செஞ்சுற வேண்டியதுதான்.... :))

said...

WELCOME BACK!!

Idhukku peru thaan back with the bang-nu solradhu!!

great topic!!
I am sure you are gonna rock again!
engala ellam marandhuraadheenga!! :-)

said...

\"குசும்பன் said...
"குமார்: இங்க பாரு திவ்ஸு, உண்மை கொஞ்சம் கசக்கதான் செய்யும், ஆனாலும் கேட்டுக்கோ, கல்யாணம் பண்ணிக்க நினைக்கிற முக்கால்வாசி பேச்சுலர் பசங்க ஆசைபடுற முக்கிய தேவைகளில் இந்த சமையல் தான் ஃபர்ஸ்ட்."

இத படிச்சதும் குமாரும் என்னை போல என்று நினைத்தேன், ஆனா அடுத்த வரியில் இப்படி ஒரு குண்டை தூக்கி போட்டுவிட்டீங்களே!!!

கொஞ்சம் யோசிக்கனும் போல இருக்கே!:)
(ரொம்ப கஷ்ட பட்டு குசும்பு இல்லாம ஒரு கமெண்ட் போட்டு இருக்கேன்)\"

வருகைக்கு நன்றி குசும்பன்!!
கொஞ்சம் இல்ல ......நல்லாவே யோசீங்க.
[குசும்பான கமெண்ட் போட்டா இனி சண்டை போட மாட்டேன் குசும்பன், சும்மா தையிரியமா உங்க குசும்பான கமண்ட் போடுங்க........]

said...

\"வடுவூர் குமார் said...
அப்பாடி! அந்த குமார் நான் இல்லை.
என் மனைவி சமையலுக்கு நான் தான் பரிசோதனை எலி!!அப்படியே கற்றுக்கொண்டார்களாம்.இது கல்யாணம் ஆகி 10 வருடங்கள் கழித்து அவர்களே சொன்னது.\"

குமார் உங்கள் வருகைக்கு நன்றி!

said...

\"கோபிநாத் said...
ஆஹா...ஆஹா...எல மக்கா டீச்சர் பாடத்தை ஆரம்பிச்சிட்டிங்க சீக்கிரம் ஒடிவாங்கப்பா...:))\"

வாங்க !கோபி வாங்க!!
என்னை டீச்சர் ஆக்கிட்டீங்க??
நன்றி!

said...

\"மங்களூர் சிவா said...
//
சரி, நானும் ஒரு உண்மை சொல்றேன் நீ கேட்டுக்கோ. இந்த காலத்து பொண்ணுங்க முக்கால்வாசி பேருக்கு சமைக்கவே தெரியாது.
'சமைக்க தெரியாது' ன்னு சொல்றது ஒரு ஸ்டையில் + fashion, தெரியுமா உனக்கு????
//
இப்பல்லாம் பசங்களும் உஷார்தான்.\"

பசங்களும் உஷாராயிருக்கிறது நல்லது தான், வேற வழியில்லை....

தருகைக்கு நன்றி சிவா!

said...

\மங்களூர் சிவா said...
//
இந்த பஜ்ஜி , சொஜ்ஜி எல்லாம் நீ செய்ததா?" ன்னு கேளு,
அதுக்கு அவ " இல்ல தெருமுனையில இருக்கிற பலகார கடையில வாங்கினதுங்க" அப்படின்னு பதில் சொன்னா, உன் அம்மா கிட்ட அடுத்த வரன் பார்க்க சொல்லு,
//
இது நல்ல ஐடியாவா இருக்கு

'மைண்ட்'ல வெச்சிருக்கேன்

யூஸ் பண்ணிக்கிறேன்.

:-))))

"\"

ஐடியாவை கண்டிப்பா உபயோகிச்சுப் பாருங்க சிவா.....வாழ்த்துக்கள்!

said...

\"மங்களூர் சிவா said...
//
நீ என்ன கேள்விகள் கேட்டா? அதற்கு அவ எப்படி பதில் சொன்னா அவளை பத்தி தெரிஞ்சுக்கலாம்னு நான் சொல்லித் தரேன்..........
//
சீக்கிரம் சொல்லிக்குடுங்க அம்மிணி\"

சீக்கிரம் சொல்லிடுறேனுங்க .....

said...

\"ரசிகன் said...
// அப்போதான் பொண்ணு வைச்சிருக்கவங்க நாலு பேர் கண்ணுல படுவேன், என்னை மாப்பிள்ளை கேட்டு வருவாங்க.//
நீங்க மறைமுகமா(?) சொன்னாலும் ,புத்திசாலித்தனமா ஜடியாவ புரிஞ்சிகிடேனுங்க... ஊருல உள்ள எல்லா பிரிண்டிங் பிரசுக்கும் சொல்லியாச்சு.. எந்த கல்யாணத்துக்கு பத்திரிக்க அடிச்சாலும் ,நமக்கும் ஒன்னு நிச்சயம். பின்ன என்ன ,எந்த கல்யாணமானாலும் ஒடனே போயி பொதுசேவைதா....\"

ரசிகன் உங்கள் பொதுசேவை பிரிதிபலனளிக்கட்டும்!! வாழ்த்துக்கள்!

வருக்கைக்கு நன்றி ரசிகன்!

said...

\"ரசிகன் said...
நீ சமையலுக்கு தான ஆள் தேட போற, ஸோ நேரா பொண்ணுக்கிட்ட " இந்த பஜ்ஜி , சொஜ்ஜி எல்லாம் நீ செய்ததா?" ன்னு கேளு,
அதுக்கு அவ " இல்ல தெருமுனையில இருக்கிற பலகார கடையில வாங்கினதுங்க" அப்படின்னு பதில் சொன்னா, உன் அம்மா கிட்ட அடுத்த வரன் பார்க்க சொல்லு,

ஏனுங்க திவ்யா .. இப்புடி உள்ளத உள்ள படியே உண்மைய சொல்லர அந்த பொண்ணு யாருங்க..\\

அப்படி பொண்ணு உங்களுக்கு பார்க்கனுமா???

\\இப்பிடி பொண்ணுங்க உண்மைய நேரடியா சொல்லிட்டா.. நாங்க ஏங்க "கடல விட ஆழம்,மலையை விட உயரமுண்னு"மண்டைய ஒடச்சிக்கிறம்.சும்ம ஒரு பேச்சுக்கு தான சொன்னிங்க.. காமடி கீமடி பண்ணிலியே..\"\

காமடி எல்லாம் பண்ணலீங்கோ!!

said...

\"Balaji said...
மூணு வருஷம் இங்க இருந்துட்டு சமைக்கத் தெரியலைன்னு சொன்னா நம்பும்படியாக இல்லையே! சரி சரி உங்க மனைவிக்காக நீங்க சமைக்கப்போகும் நிலையை தவிர்க்கும் உத்தி இதுன்னு நினைக்கிறேன்!\"

யுக்தி எல்லாம் நல்லாதான் தெரிஞ்சு வைச்சிருக்கிறீங்க வெட்டி!!

said...

\"இராம்/Raam said...
//நீவேற திவ்ஸு, நானாவது வேலை எல்லாம் செய்றதாவது. என் தங்கைக்கு கல்யாணம் ஆனா என் 'லைன் க்ளியர்' ஆச்சு இல்ல, அடுத்து எனக்குத்தான் கல்யாணம், ஸோ இப்படி அங்கயும் இங்கயுமா ஓடியாடி வேலை செய்தா நாலு பேர் கண்ணுல படுவேன், அதுக்கு தான் இந்த ஸீன்.......//

அவ்வ்வ்வ்வ்... இப்பிடியெல்லாம் செய்யனுமா என்ன???

செஞ்சுற வேண்டியதுதான்.... :))\\

வருகைக்கு நன்றி ராம்.

[ ராம், இனிமேதான் புதுசா சீன் போட போறீங்களா???......நம்பிட்டேன்!!!]

said...

\"CVR said...
WELCOME BACK!!

Idhukku peru thaan back with the bang-nu solradhu!!

great topic!!
I am sure you are gonna rock again!
engala ellam marandhuraadheenga!! :-)\\

வருக்கைக்கும், வாழ்த்துக்கும் நன்றி சிவிஆர்!

உங்களை எல்லாம் அவ்வளவு ஈஸியா மறப்பேனா????

said...

திவ்யா வாங்க வாங்க
அட பொண்ணுங்கலையெல்லாம் இப்படி வாரிவிடறீங்களே!! நெசமாதேன் சொல்லுறியளா? எனக்கு தெரிஞ்ச பொண்ணுங்க எல்லாம் ரெஸ்டாரெண்ட் வைக்கிற அளவுக்கு சமையல் குயின்ஸா இருகாகளே என்ன சொல்லுறீய?? ;)))))))))

said...

\"ஜொள்ளுப்பாண்டி said...
திவ்யா வாங்க வாங்க
அட பொண்ணுங்கலையெல்லாம் இப்படி வாரிவிடறீங்களே!! நெசமாதேன் சொல்லுறியளா? எனக்கு தெரிஞ்ச பொண்ணுங்க எல்லாம் ரெஸ்டாரெண்ட் வைக்கிற அளவுக்கு சமையல் குயின்ஸா இருகாகளே என்ன சொல்லுறீய?? ;)))))))))|

வாங்க !பாண்டி வாங்க!!
வருகைக்கு நன்றி!

ரெஸ்டாரெண்ட வைக்கிற அளவுக்கு சமையல் தெரிஞ்ச அந்த குயின் கிட்ட " ஆயிரத்தில் ஒருத்தியம்மா நீ!!!" அப்படின்னு பாடிடுங்க பாண்டி!!

said...

காமடி கீமடி பண்ணிலியே..\"\

//காமடி எல்லாம் பண்ணலீங்கோ!! //
இப்புடி சொல்லி நல்லா காமடி பண்ணறிங்களே..ஹிஹி..

said...

sari sari seekkiram aduththa pakuthikku vanga ethukkintha vilamparamellam visayaththukku varuvinkala athai viddiddu...

said...

ada.. ippathaan intha thodara paakuren.. waitees.. poi second partaiyum paathuttu vanthiduren :))))

said...

\\ரசிகன் said...
காமடி கீமடி பண்ணிலியே..\"\

//காமடி எல்லாம் பண்ணலீங்கோ!! //
இப்புடி சொல்லி நல்லா காமடி பண்ணறிங்களே..ஹிஹி..\\

ரசிகன், எப்படி கரெக்டா கண்டுபுடிச்சீங்க????...ஹி ஹி!!

said...

\\Thamilan... said...
sari sari seekkiram aduththa pakuthikku vanga ethukkintha vilamparamellam visayaththukku varuvinkala athai viddiddu...\\\

தமிழன் உங்கள் வருகைக்கு நன்றி!!

அடுத்த பகுதி போட்டாச்சுங்க!

said...

\\ஜி said...
ada.. ippathaan intha thodara paakuren.. waitees.. poi second partaiyum paathuttu vanthiduren :))))\\

உங்க பயணக் கனவுகளுக்கு நடுவிலும் என் பதிவிற்கு வந்தமைக்கு நன்றி ஐயா!!

said...

//பத்து வருஷம் காதலிச்சு கல்யாணம் கட்டிக்கிட்டவனுக்கே தன் மனைவியின் மனதை புரிஞ்சுக்க முடில//

இது என்ன புது கதையா இருக்கு... அரை சதம் அடிச்சவங்களே முடியலையாம்...

said...

mikavum nanraaga ulladhu... will read the part 2 also...